ஆரல் 30
சில மாதங்களுக்கு பிறகு..
அந்த மிகப்பெரிய மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் யாராவின் அலறல் சத்தம் அதிகமாக கேட்டது.
அவளுக்கு அருகில் அவளுடைய கையை பற்றியவாறு இன்னொரு கையால் அவளுடையத் தலையை அன்பாக வருடி கொண்டு அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான் ஆரோன்.
சில மணி நேரத்திற்கு முன்பு.
அன்று இரவு தன் எதிர்கால சந்ததியை வயிற்றில் சுமக்கும் வளைகாப்பு எனும் சடங்கு நல்லபடியாக நடந்து முடிந்த பூரிப்பிலும் சிறு களைப்புடனும் கை நிறைய அடுக்கி இருந்த வளையல்கள் கலகலக்க தன் மனம் நேசிக்கும் மன்னவன் ஆன ஆரோனைத் தேடிச் சென்றாள் யாரா.
இத்தனை மாதங்களாக அவன் காட்டும் அன்பு அவளை மகிழ்ச்சியில் திளைக்க வைத்திருந்தாலும் கூட ஏதோ ஒரு வெறுமையை அவள் உணர்வதை அவளால் தடுக்க இயலாமல் போனது.
இன்று கூட வளைகாப்பு விழாவில் தன்னருகே நெருங்கி நின்ற கணவனை காதல் பொங்க பார்த்தவள் அதே காதல் அவனிடம் இருந்து கிடைக்கிறதா என்ற கேள்விக்கு விடை அறியாது தவித்து தான் போனாள்.
இன்று எப்படியாவது அவனுடைய சொல்லாத காதலை கேட்டு அறிந்து விட வேண்டும் என்ற முனைப்பில் விழா முடிவடைந்த அடுத்த நொடியே அவனைத் தேடி தோட்டத்திற்கு வந்திருந்தாள் அவள்.
அங்கே தோட்டத்தில் நின்றவாறு யாருடனோ அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த ஆரோனின் பின்புறத் தோற்றத்தை கண்டதும் அவளுடைய வாடி இருந்த முகமோ சட்டென மலர்ந்தது.
வேகமாக நடக்க முயன்று பின் தன்னிலை உணர்ந்து மெல்ல மெல்ல அடியெடுத்து அவனை நெருங்கிச் செல்ல அவளுடைய மேனியில் இருந்து கிழற்ந்த நறுமணத்திலேயே அலைபேசியை அணைத்து விட்டு யாராவைத் திரும்பிப் பார்த்தான் ஆரோன்.
அவனோ என்ன என்பதைப் போல புருவம் உயர்த்தி விழி அசைவிலேயே அவளிடம் வினாவ அந்த விழிகளில் தனக்கான காதல் சிறு கடுகலவாவது தென்படுகிறதா என ஆராய்ச்சியாக அவனுடைய விழிகளுக்குள் இவளுடைய விழிகள் கலந்தன.
அவளுடைய தேடுதல் பார்வையை உணர்ந்து ஒரு கணம் தன் விழிகளை மூடித் திறந்தவன் “என்னடி..?” என மென்மையான குரலில் கேட்க,
“உங்களுக்கு என்னை பிடிக்குமா..?” என சற்றே நடுங்கும் குரலில் கேட்டாள் யாரா.
“என்ன கேள்வி இது உன்னை பிடிக்காமல் இருக்குமா..” என உடனடியாக பதில் கொடுத்தான் ஆரோன்.
“அந்தப் பிடித்தம் காதல் தானா..?” என அளவு கடந்த எதிர்பார்ப்போடும் அவன் ஆம் என்று சொல்லிவிட மாட்டானா என்ற ஏக்கத்தோடும் அவனுடைய விழிகளை பார்த்தவாறு அவள் அசையாது நிற்க அவனுக்கோ ஒரு கணம் என்ன பேசுவதென்றே புரியவில்லை.
அவன் பதில் கூற தாமதித்த அந்த சில நொடிகளில் மனமுடைந்து போனாள் யாரா.
அவனுடைய தயக்கமும் அமைதியுமே அவளுக்கு எதிர்மறையான பதிலை உணர்த்தி விட அவளுடைய ஏக்கம் நிறைந்த விழிகளில் இருந்தும் நில்லாது வலியத் தொடங்கியது கண்ணீர்.
பொங்கி வழிந்த கண்ணீர் துளிகள் அவளுடைய பட்டு கன்னங்களை நனைக்க அவளுடைய அடிவயிற்றில் சுரீர் என்ற ஒரு வலி தோன்றி மறைந்தது.
அந்த வலியை விட அவன் அமைதியாக நின்ற வலியே அவளுக்குப் பெரிதாக தெரிய அசைய மறுத்த கால்களை வேதனையோடு அசைத்தவள் அவனுக்கு முதுகு காட்டி நடக்கத் தொடங்கினாள்.
என் மீது காதல் வரவே இல்லையா என கத்தி கேட்க வேண்டும் போல இருந்த உணர்வை அடக்கியவளுக்கோ மீண்டும் அடிவயிற்றில் வலி தோன்றிய வேகத்திலேயே மறைந்து போக திடுக்கிட்டு திகைத்து நின்றவள் ஒரு கணம் தன்னவனைத் திரும்பி பார்த்தாள்.
அதேநேரம் அவளுடைய முகத்தைப் பார்த்த ஆரோனுக்கோ உள்ளம் உருகிப் போனது.
சட்டென அவளை நிறுத்தும் நோக்கத்தோடு அவன் அடுத்த அடியை எடுத்து வைக்க முயன்ற கணம், அவனுடைய கருவைத் தாங்கிய மங்கையவளோ வலியை தாங்க முடியாது சுருண்டு தரையை நோக்கி சரியத் தொடங்கினாள்.
அவளின் அருகே நெருங்கி வந்தவனுக்கோ யாராவின் நிலை பதற்றத்தைக் கொடுத்தது.
“யாராஆஆ ஏய் என்ன ஆச்சு..” என்று கத்தியபடி அவளைத் தன் கரங்களில் தாங்கினான் ஆரோன்.
அவளோ மித மிஞ்சிய வலியில் துடித்தாள்.
அவனுடைய நெஞ்சில் முகம் புதைத்தவள் பேச முடியாமல் தினர மேலும் பயம் தொற்றிக் கொண்டது ஆரோனுக்கு.
நொடியும் தாமதிக்காமல் அவளை கையில் ஏந்தியவன் அந்த கார்டனில் இருந்தே ஷாமை கத்தி அழைத்தான்.
ஷாமோ யாராவை தன் தங்கையாக ஏற்று கொண்டு அண்ணன் ஸ்தானத்தில் பிறந்த வீட்டு சார்பாக வளைகாப்பு நடத்தி திருப்தி கொண்டவன் அனைத்து செட்டில்மென்ட் முடித்து வந்து காலையில் இருந்து சாப்பிடமால் அப்போது தான் உணவில் ஒரு கவளம் எடுத்து வாயில் வைக்க ஆரோன் கத்திய கத்தலில் பதறியவனுக்கோ புறை ஏறியது.
பின் தண்ணீரை குடித்து தன்னை நிதானித்தவன் சத்தம் வரும் திசை நோக்கி எழுந்து வர ஆரோன் யாராவை கையில் தூக்கிக்கொண்டு காரை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
உடனே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஷாமோ கார் சாவியை எடுத்துக்கொண்டு அவனுக்கு முன்பாக வேகமாக காரை எடுக்க ஆரம்பித்தான்.
ஆரோன் கத்திய கத்தலில் ஷாம் மட்டுமல்ல குடும்பத்தில் இருந்த அனைவருமே பதற்றமாக கீழே வந்து பார்க்க நிலைமை புரிந்து அனைவருமே அவனை பின் தொடர்ந்தார்கள்.
ஷாம் காரை எடுக்க ஆரோன் யாராவைத் தன்னுடைய மடியில் வைத்துக் கொண்டு பின் இருக்கையில் அமர்ந்தவன் ஷாமை வேகமாக செல்லும் படி துரிதப்படுத்தினான்.
அரை மணி நேரம் கடக்க வேண்டிய தொலைவை பத்து நிமிடத்தில் அடைந்தான்.
ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்ததும் மருத்துவக் குழு அவர்களுக்காக தயாராக இருந்தது.
ஆரோன் வரும் வழியிலேயே தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்து விட்டான்.
அவளை தன்னுடைய கைகளில் தூக்கியவன் அங்கு உள்ள ஸ்ட்ரக்சரில் கூட கிடத்தாமல் தன் கையிலையே வேகமாக உள்ளே தூக்கிச் சென்றான்.
உள்ளே அவளுக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பமாக இங்கு அறையின் வெளியே கைகளை பிசைந்தவாறு அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தான் ஆரோன்.
சிறிது நிமிட இடைவெளியில் அவனுடைய குடும்பத்தினர் அனைவரும் அங்கு வந்து சேர அவனோ யாரையும் கணக்கில் கொள்ளும் நிலையில் இல்லை. உள்ளே தன்னுடைய உயிரில் ஜனித்த குழந்தையும் தன்னுடைய உயிருக்கும் மேலானவளும் எந்த ஒரு பாதிப்பும் இன்றி தன்னுடைய கரங்களில் சேர வேண்டும் என்று பதட்டமாக இருந்தான் ஆரோன். அவனுடைய குடும்பமும் தங்களுடைய குடும்ப வாரிசும் தங்களுடைய மருமகளும் நல்ல படியாக வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அவளுக்கு ஒன்பதாவது மாதம் ஆரம்பித்து ஒரு வாரம் தான் இருக்கும். இன்னும் அவளுக்குப் பிரசவ நாள் வரவில்லை.
அதற்கு முன்னரே அவளுக்கு வலி வந்ததால் அனைவருக்குமே பதற்றம் குடி கொண்டது.
இவர்களின் பதற்றத்தை மேலும் கூட்டம் வகையில் அந்த பிரசவ அறைக்குள் டாக்டரும் நர்சும் மாறி மாறி உள்ளேயும் வெளியேயும் வந்து கொண்டே இருந்தார்கள்.
ஒவ்வொரு முறை வெளியே வரும் போதும் அவர்களை மறைத்து என்ன என்று கேட்க அவர்களோ பதில் சொல்லவே இல்லை.
பொறுமை இழந்தவர்கள் மீண்டும் ஒரு டாக்டர் அவசரமாக உள்ளே நுழைய போக அவரை தடுத்த ஆரோன்,
“டாக்டர் என்ன ஆச்சு நாங்களும் அப்பவே இருந்து உங்ககிட்ட கேட்டுகிட்டே இருக்கும் எந்த பதிலுமே சொல்ல மாட்டேங்கறீங்க உள்ள போறீங்க வர்றீங்க என்னதான் நடக்குது ஏதாவது சொல்லுங்க..” என்று படபடப்பாக கேட்க அவனுடைய தோளில் கை வைத்து அமைதியாக இருக்கும் படி ஷாம் ஆறுதல் படுத்த அவனோ அதை பொருட்டாக எடுக்காமல் மீண்டும் டாக்டரிடம் கேட்டான். அவரோ,
“சார் நிலைமை புரியாம பேசாதீங்க உங்களுக்குப் பதில் சொல்ல நேரம் எனக்கு இல்ல எனக்கு இப்ப என்னோட பேஷண்ட பார்த்து ஆகணும் கொஞ்சம் வழி விடுங்க..” என்று அந்த அறையின் வாயிலை மரித்து நிற்கும் ஆரோனிடம் அவர் வாக்குவாதம் செய்ய அவனோ, “என்ன சார் உள்ள இருக்கிறது என் பொண்டாட்டியும் குழந்தையும் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க எனக்கு உரிமை இல்லையா இப்ப நீங்க சொல்லாம உங்களை நான் உள்ள விடமாட்டேன்..” என்று சண்டைக்குப் போக அவரோ,
“சார் உள்ள ஏற்கனவே அவங்க சீரியஸ் கண்டிஷன்ல இருக்காங்க அவங்களோட பிபி ரொம்ப ஹையா இருக்கு நாங்க கொடுக்கிற ட்ரீட்மென்ட்க்கு அவங்க உடம்பு ரியாக் பண்ண மாட்டேங்குது நாங்களே என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கோம் இதுல நீங்க வேற இப்படி டார்ச்சர் பண்ணாதீங்க வழய விடுங்க..” என்று சொல்லிவிட அதைக்கேட்ட ஆரோன் மட்டுமல்ல மொத்த குடும்பமுமே அதிர்ச்சி அடைந்தன. தானாக அவனுடைய கால்கள் நகர்ந்து டாக்டருக்கு வழி விட்டன. பித்து பிடித்தவன் போல் நின்று கொண்டிருந்தான் ஆரோன்.
ஷாமோ அவனுக்கு எவ்வளவோ ஆறுதல் சொல்ல அவனோ அதை காதில் கூட வாங்கவில்லை.
உள்ளே யாராவிற்க்கு ட்ரீட்மென்ட் கொடுத்துக் கொண்டிருந்த டாக்டர்கள் தங்களுக்குள் விவாதிக்க தொடங்கினார்கள்.
“என்ன டாக்டர் இந்த பொண்ணுக்கு நம்ம எவ்வளவு ட்ரீட்மென்ட் கொடுத்தாலும் இதை அவ உடம்பு ஏத்துக்கவே மாட்டேங்குது அந்த பொண்ணு நம்மளுடைய ட்ரீட்மென்ட்க்கு கோவாப்ரேட் பண்ண மாட்டேங்குறாள்.. பிபி ரொம்ப ஹையா இருக்கு அவளுக்கு வாழணும்ங்கற ஆசையே இல்ல போல இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணா குழந்தை வெளிய வந்துரும் ஆனா இந்த பொண்ணு இப்படி இருக்கிறதுனால குழந்தையோட உயிருக்கும் இந்த பொண்ணோட உயிருக்கும் தான் ஆபத்து இப்ப நாம என்ன பண்றது..” என்று பேசிக் கொண்டிருந்தார்கள். யாராவின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையோ வெளி உலகைக் காண ஆவலாக அவளுடைய வயிற்றை புட்பால் போல் உதைக்க அந்த உயிர் போகும் வலியை கூட அவளால் ஏற்க முடியும் போல ஆனால் அவளுடைய காதல் கணவனுடைய மனதில் தான் ஒரு சிறு இடத்தைக் கூட பிடிக்கவில்லையா என்று நினைக்கும் பொழுது அந்த வலியை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
ஏன் எதற்காக தான் உயிரோடு இருக்க வேண்டும் என்று இருந்தாள் யாரா.
அந்த நால்வர் கூட்டணிகள் இருந்த ஒரு பெண் மருத்துவர்,
“சிஸ்டர் வெளியே அவங்க ஹஸ்பண்ட் இருந்தா வர சொல்லுங்க ஒருவேளை அவங்கள பார்த்தா இவங்க ஏதாவது ரியாக் பண்ணலாம் சோ நல்லது நடக்க வாய்ப்பு இருக்குனு நினைக்கிறேன் நீங்க உடனே போங்க..” என்று சொல்ல அந்த நர்சும் வேகமாக வெளியே வந்தவர்,
“இங்க பேஷண்ட் ஓட ஹஸ்பண்ட் யாரு..?” என்று கேட்க அவ்வளவு நேரமும் ஜடம் போல நின்றிருந்த ஆரோனோ வெடிக்கென்று நிமிர்ந்து அந்த நர்ஸின் அருகில் வந்தவன் நான்தான் என்றான்.
“சார் உங்களை டாக்டர் உடனே வர சொல்றாங்க..” என்று சொல்ல அவ்வளவுதான் அந்த நர்ஸை தன்னுடை வழியில் இருந்து தள்ளிவிட்டு விரைவாக உள்ளே நுழைந்தான்.
அவனுக்கோ எப்போதடா அவளை பார்ப்போம் என்று இருந்தது.
“சார் நீங்க அவங்க கிட்ட ஏதாவது பேச்சு குடுங்க அவங்க இப்படியே இருந்தாங்கன்னா ரொம்ப கஷ்டம் கொஞ்சம் நிலைமையை அவங்களுக்குப் புரிய வைங்க..” என்று சொல்ல அவனும் சரி என கூறியவன் யாராவின் அருகே வந்து அவளுடைய வலது கரத்தை தன்னுடைய கரத்தினுள் கோர்த்துக் கொண்டவன் இன்னொரு கையால் அவளுடைய உச்சந்தலையை வருடி கொடுத்து அவளிடம் பேச ஆரம்பித்தான்.
அவளோ அவன் பக்கம் திரும்பி கூட பார்க்கவில்லை.
சுவற்றையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
இவனுக்கோ உள்ளம் கனத்தது. யாராவின் முகத்தை தன்னை நோக்கி பார்க்க வைத்தவன் அவளுடைய விழிகளில் தன்னுடைய விழிகளை கலக்க விட்டான்.
“யாரா ஏன் இப்படி இருக்க கொஞ்சம் முயற்சி பண்ணு யாரா..” என்று சொல்ல அவளோ அவனை வெறுமையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
இவனோ அவளுடைய பார்வையின் அர்த்தத்தைப் புரிந்தவன்,
“என்ன யாரா நீயும் என்னை விட்டு போகணும்னு நினைக்கிறியா..?” என்று கலக்கமான குரலில் கேட்க அவளோ தன்னுடைய பார்வையை வேறு பக்கம் திருப்பப் போனாள். “இங்கு பாரு என் கண்ணை மட்டும் பாரு வேறு எங்கேயும் பார்க்காத நான் சொல்ல வர்றத கொஞ்சம் கேழுடி என் மனசுல எப்பவும் ரீனா தான் இருப்பா..” என்று அவன் சொல்ல அந்த ஒரு வார்த்தை அவளை மேலும் உடைத்தது. கண்களில் இருந்து கண்ணீர் வலிய அதைப் பார்த்தவன் தன்னுடைய கரங்கள் கொண்டு அவளுடைய கண்ணீரை துடைத்தவன்,
“இங்கு பாரு யாரா என் மனசுல ரீனா இருக்கா ஆனா நீ என் உயிர்ல கலந்தவள் டி..” என்று உயிர் உருக கூற அவளுடைய கலங்கிய கண்களோ பளிச்சிட்டது.
அந்த ஒரு வார்த்தையே அவளுக்கு ஆயிரம் பலம் கூட்டியது போல. அவளுடைய பிபி சற்று நார்மலுக்கு வர டாக்டர்களோ நிம்மதி உற்றனர். பக்கத்தில் இருந்த அந்த பெண் மருத்துவர் ஆரோனிடம்,
“சார் பேசுங்க இப்படியே பேசுங்க..” என்று அவனை ஊக்கப்படுத்த அவனோ மீண்டும் பேச ஆரம்பித்தான்.
“ரீனா என்ன விட்டு போகும்போது நான் உண்மையிலேயே செத்துட்டேன் ஆனா என்னால உயிர் வாழ முடிஞ்சது இந்த அஞ்சு வருஷமா அவ இல்லாம என்னோட வாழ்க்கை கடந்தது ஆனால் எப்போ என் வாழ்க்கையில நீ வந்தியோ கொஞ்சம் கொஞ்சமா என்னோட வாழ்க்கை மாற ஆரம்பிச்சுது.. இப்போ மறுபடியும் என்ன தனிமையில தவிக்க விட்டு போகணும்னு மட்டும் நினைக்காத யாரா சத்தியமா நான் செத்தே போவேண்டி, நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பாக்க முடியாது. நீ எப்பவோ எனக்குள்ள கலந்துட்டடி ஆனா அப்பப்போ ரினோவோட ஞாபகம் வரும் நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன் அந்த சமயம் நீ என்ன புரிஞ்சிக்கணும்.. எனக்கு நீ வேணும்டி.. என் குழந்தையும் நீயும் எனக்கு கண்டிப்பா வேணும் என்னை ஏமாத்தாம என்கிட்ட வந்துடுடி கண்ணம்மா..” என்றவன் அவளுடைய இதழில் முத்தம் வைக்க அந்த நேரம் அவர்கள் இருவருடைய புதல்வியோ இதற்கு மேலும் என்னை உள்ளே அடைத்து வைக்க முடியாது என்றவாறு தன்னுடைய தாயின் கருவறையில் இருந்து வெளிவர அந்த வலியில் யாரா ஆரோனின் கைகளை இறுகப் பிடித்தவாறு பெருங்குரலெடுத்து கத்தினாள்.
அந்த சத்தம் அவனுடைய இதழ்களுக்குள் அடங்கிப் போக அவளுடைய வலியை உணர்ந்தாற் போல அந்த ஆறடி ஆடவனின் உடலும் கிடுகிடுவென ஆடியது.
குழந்தையின் அழுகை சத்தத்தில் வெளியே இருந்த அவனுடைய குடும்பத்தார்கள் சந்தோஷம் அடைந்தார்கள்.
டாக்டர் அவனுடைய புதல்வியை தூக்கி அவனுடைய கையில் கொடுக்க கைகள் நடுங்க குழந்தையை வாங்கியவன் அதனுடைய பிஞ்சு பாதத்தில் முத்தம் வைத்து யாராவின் வெற்று நெஞ்சத்தில் அந்த பூக்குவிகளை கிடத்தியதன் தன் நெஞ்சோடு தாயையும் சேயையையும் அணைத்துக் கொண்டான் அந்த காதல் காரன்.
அவள் எதிர்பார்த்த அந்த வார்த்தை அவனுடைய உள்ளத்தில் இருந்து வெளிவர யாராவோ மிகுந்த சந்தோஷம் அடைந்தாள்.
இனி இருவரும் தங்கள் வாழ்க்கை அழகான காதலோடு வாழ்வார்கள். இந்த பூமியில் காதலித்தவர்கள் அனைவரும் சேர்ந்ததில்லை.
சேர்ந்த அனைத்து காதலுமே கடைசிவரை நிலைத்ததும் இல்லை. அப்படி இருக்கையில் ஒரு பொருள் தன்னிடம் நிலைக்கவில்லை என்று தன்னுடைய வாழ்க்கையை அழிப்பதை விட அந்த பொருளை விட தனக்கு மிகவும் பொக்கிஷமான ஒரு பொருள் கிடைக்கும் என்று அர்த்தம். அதை நோக்கி பயணிக்கலாம்.
காதலர்களுக்கு அழிவு இருக்கலாம். ஆனால் காதலுக்கு என்றுமே அழிவு இருந்ததில்லை.
இருவர் காதலிக்கும் பொழுது ஒருவர் இல்லை எனும் நிலை வந்தால் மற்றும் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை வீணாக்க வேண்டுமா என்ன..? உனக்கான பொக்கிஷம் உன் கையில் வந்து சேரும். இழந்ததை நினைத்து வருந்தாதே அதைவிட அழகான ஒன்று உன்னை வந்து சரணடையும்.
காதல் அனைத்தையும் மாற்றும் அழகான ஒன்று.
நன்றி.
ஆதி.
Super and happy ending sis 💞
Semma
Fantastic story siss superb epiiiiii ❤️❤️❤️❤️ lovlyyyyyyyyyy