ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

4.1
(17)

 ஆரல் – 03

சிட்டிக்கு நடுவே மிக பிரம்மாண்டமாக வீற்றிருந்தது அந்த மிகப்பெரிய மால். இன்று வார விடுமுறை என்பதால் அந்த நாள் முழுவதும் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதின.

கூட்டத்தில் ஒரு பெண் தன்னுடைய தோழியின் வரவை எதிர்பார்த்து ஒற்றைக் கையில் போனுடன் அந்த மாலின் நுழைவு வாயிலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய எதிர்பார்ப்பை பொய்யாக்காது அவளுடைய தோழியோ அங்கே வந்து சேர்ந்தாள்.

தன் முகத்தை முழுவதுமாக மூடியவாறே அவளுடையத் தோழி அவள் அருகில் வர அதைப் பார்த்தவள்,

“என்னடி இப்படி முகமூடி கொள்ளைக்காரி மாதிரி ஃபுல்லா மூடிட்டு வந்து இருக்க..” என்று கேட்க,

அதற்கு அவளோ “இல்ல மாயா வண்டிய நிப்பாட்டுனதும் ஹெல்மெட்ட கழட்டிட்டு ஷால கழட்டினேன்.. ஆனா பின்னு ஷால்ல நல்லா மாட்டிக்கிச்சுடி கிழிஞ்சிடுமோன்னு பயமா இருந்துச்சு.. இந்த ஷால் என்னோட ஃபேவரிட்டுனு உனக்கு நல்லா தெரியும்ல.. அதனால தான் நான் எடுக்காம அப்படியே வந்துட்டேன்.. சரி சரி வா பார்த்துக்கிட்டே இருக்காம ஷால் கிழியாம அந்த பின்னை எடுத்து விடுடி.. மூச்சு முட்டுது….” என்று சொன்னாள் யாரா.

ஆம் அவள் பெயர் யாரா.

பாலில் விழுந்த வெண்ணெய் கட்டி போல் இருப்பாள்.

“ஓ அப்படியா சரி வா பர்ஸ்ட் இங்க வந்து உட்காரு.. நான் உனக்கு அதை எடுத்து விடுறேன்..” என்று சொன்னாள் மாயா.

யாராவை தனக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்த்தி விட்டு அவள் முகத்தை மூடி இருந்த அவளுடைய ஷாலை மிக மெதுவாகப் பின்னைக் கழற்றி அகற்றினாள்.

இவ்வளவு நேரமும் அவளுடைய கண்கள் மட்டுமே தெரிந்தது. இப்பொழுது அவள் முகம் முழுவதும் தெரிய வானுலகத்து தேவதை பூமியில் இறங்கி வந்தது போல இருந்தாள் யாரா.

“என்னை கேட்டா நீ உன் முகத்தை எப்பவுமே மூடியே வச்சிருக்கிறது ரொம்ப நல்லதுடி.. யாராவது பார்த்தாங்கன்னா உன்ன அப்படியே தூக்கிட்டு போய்டுவாங்க.. அவ்வளவு அழகு தெரியுமா நீ.. நான் மட்டும் பையனா பிறந்திருந்தா.. நானே உன்னைத் தூக்கிட்டுப் போயிருப்பேன்.. ச்சை.. மிஸ் ஆயிட்டு..” என்றாள் மாயா.

அவள் கூறுவதைக் கேட்டு செல்லமாக அவளை முறைத்தவள் சிறுப் புன்னகையை உதிர்த்தவாறே, “இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போகல மாயா ஒரே ஒரு ஆபரேஷன் பண்ணிக்கோ நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்..” என்றாள்‌ யாரா.

தோழிகள் இருவரும் இவ்வாறு சிரித்து பேசிக்கொண்டிருக்க அதே மாலுக்கு ஆரோனும், ஷாமும் வந்தார்கள்.

ஆரோனுக்கோ ரீனாவை அங்கு பார்த்ததே நினைவில் தோன்ற எப்படி அவளை மிஸ் பண்ணினோம் என்று யோசித்தவாறே வந்தவன், அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

ஷாமோ அவனுடன் அமர்ந்தவன், “டேய் இங்க பாரு.. ரீனா இறந்து போயி அஞ்சு வருஷத்துக்கு மேல ஆகுது.. இப்ப வந்து ரீனா உயிரோட இருக்கான்னு சொல்லிட்டு இருக்க.. அதெல்லாம் எதுவும் கிடையாது.. வந்த வேலைய மட்டும் பாரு.. என்னைக்காவது ஒரு நாள் தான் நம்ம ரெண்டு பேரும் ஜாலியா வர்றது இன்னைக்கும் உன் மூஞ்சிய இப்படி வச்சுக்கிட்டு இருக்காதடா..” என்று அவனை இயல்பாக்க கூறினான் ஷாம்.

அப்பொழுது மாயாவும் யாராவும் தங்களுக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீமை வாங்கிக்கொண்டு ஆரோன் இருக்கும் டேபிளைத் தாண்டிச் செல்ல, அப்பொழுது யாராவின் ஷால் ஆரோனின் வாட்ச்சில் சிக்கியது.

சட்டென அவனைக் கடந்து சென்றவள், பிரேக் போட்டாற்ப் போல நிற்க ஆரோனுடையக் கையோ அவளுடைய ஷாலினால் இழுபட்டது.

என்ன என்று திரும்பி பார்த்தவன், அவனுடைய வாட்சில் ஏதோ ஒரு துணி மாட்டி இருக்க சற்று நிமிர்ந்து பார்த்தான். அது ஒரு பெண்ணினுடைய ஷால்.

அதைப் பார்த்ததும் அவனுடைய முகமோ அஷ்ட கோணலாக மாறியது. யாராவோ தன் கையில் உள்ள ஐஸ்கிரீமை மாயாவின் கையில் கொடுத்தவள்,

“சாரி சார் தெரியாம இழுத்துருச்சு.. இருங்க நான் எடுத்துடுறேன்ஏஏஏ..” என்று ஆரோனிடம் சொல்லியவாறே தன்னுடைய ஷாலை அவனுடைய வாட்சில் இருந்து எடுக்கப் போக அதற்குள் அவளை முந்திக் கொண்ட ஆரோனோ தன்னுடைய இடது கையால் அவளுடைய ஷாலை தன்னுடைய வாட்சில் இருந்து சட்டென எடுத்தான்.

அந்தோ பரிதாபம் அவளுடைய பேவரிட்டான அந்த ஷாலோ சர்ரென கிழிந்து விட்டது.

“முதல்ல டிரஸ் எப்படி ஒழுங்கா போடணும்னு கத்துக்கிட்டு அதுக்கப்புறம் போட்டு வாங்க..” என்று ஆரோன் சிடுசிடுக்க அவளுக்கோ கண்கள் கலங்கியது.

ஏனென்றால் அவளுக்கு மிகவும் பிடித்தமான அந்த ஷால் கிழிந்ததால்.

அதில் சட்டென அவளுக்கு கோபம் வர, ஆரோன் முன்னே கையை உயர்த்தியவள்,

“ஏன் சார் இப்படி நடந்துக்கிறீங்க.. ஏதோ தெரியாம பட்டுருச்சு.. நான் தான் எடுக்கிறேன்னு சொன்னேன்ல. அதுக்குள்ள இப்படி கிழிச்சிட்டீங்க.. இது என்னோட பேவரிட் தெரியுமா..?” என்று அவள் கோபத்தோடுக் கேட்க,

அவனோ ஏற்கனவே ரீனாவை மிஸ் செய்த ஆத்திரத்தில் இருந்தவன், இவள் இவ்வாறு பேசவும் சட்டென இருக்கையை விட்டு எழுந்தவன், அவளை அடிக்கப் பாய்ந்து விட்டான்.

அவன் அப்படி எழுந்திருக்கவும் சுதாரித்துக் கொண்ட ஷாமோ அவனை பின்பக்கமாகப் பிடித்தவன்,

“டேய் டேய் அமைதியா இருடா.. ஏன்டா இப்படி பண்ற..”

“ இவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா.. என் முன்னாடி கையை நீட்டி குரலை உயர்த்தி பேசுவா..” என்று கேட்டான் ஆரோன்.

“என்ன சார் ஷாலை கிழிச்சதும் இல்லாம அடிக்க வேற வாரிங்க..”என்று யாராவும் சண்டைக்கு வர,

இவனோ தன்னைப் பிடித்திருந்த ஷாமிடமிருந்து விடுபட்டு அவளை நெருங்க, ஷாமோ இனியும் விட்டால் இவனைத் தடுக்க முடியாது என்று நினைத்தவன்,

“ஹலோ சிஸ்டர் ஏதோ தெரியாம பண்ணிட்டான்.. அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். தயவுசெஞ்சு இதை பெரிசு படுத்தாம இங்க இருந்து கிளம்புங்க ப்ளீஸ் எனக்காக.‌” என்று கெஞ்சினான்.

“ சார் இந்த மாதிரி பைத்தியத்தை வெளிய கூட்டிட்டு வராதீங்க.. பைத்தியம்…” என்று ஆரோனைப் பார்த்துத் திட்டியவள், அங்கிருந்து வேகமாகத் தன்னுடையத் தோழியை கூட்டிக்கொண்டு சென்று விட்டாள்‌.

ஆரோனுக்கோ ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தன்னைப் பார்த்து அவள் ‘பைத்தியம்’ என்று சொன்னது அவனுக்குக் கோபத்தை மேலும் மேலும் அதிகமாக்கியது.

“என்னப் பார்த்தா பைத்தியம்னு சொல்ற..ஷிட் இருடி.. என் கையில சிக்குன மவளே இருக்குடி உனக்கு..” என்றவன் மீண்டும் ஷாமிடமிருந்து விடுபட போராட, அவனோ அவனை கிடுக்கப் பிடி போட்டவாறே இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.

“டேய் விட்டுத் தொலைடா.. இவன் வேற இம்ஸை பண்ணிக்கிட்டு..” என்று அவன் பிடியில் இருந்து விடுபட்டவனுக்கோ ரீனாவின் நினைவு மறந்து இப்போது அவனது பீபியை ஏற்றி விட்ட யாராவை மனதில் வறுத்துக் கொண்டிருந்தான்.

வெளியே தன் தோழியை அழைத்துக்கொண்டு வந்த யாராவோ அந்த கிழிந்த ஷாலை பார்த்துக் கொண்டே ஆரோனைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

“லூசு பைய என்னோட ஃபேவரிட் ஷாலை இப்படி கிழிச்சிட்டானே..ச்சை.. நானே எப்படி பார்த்து பார்த்து வைச்சிருந்தேன்.. கடவுளே இவனை இன்னொரு தடவை நான் பார்க்கவே கூடாது.. என் கண்ணு முன்னால அவனை கொண்டு வராதீங்க.. அப்புறம் இருக்கிற ஆத்திரத்துக்கு அவனை குத்தி கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போனாலும் போயிருவேன்..” என்று முணுமுணுத்துக் கொண்டு வந்தாள்.

மாயாவோ தன் தோழியைத் தேற்றிக் கொண்டிருந்தாள்‌.

“சரி யாரா அழாத உனக்கு இது ரொம்ப பிடிச்ச ஷாலுதான் அதுக்காக என்ன பண்ண முடியும் அதான் கிழிஞ்சு போச்சே.. நம்ம இதே மாதிரி தேடி கண்டுபிடிச்சி வாங்கலாம்..” என்றாள் .

யாராவோ “இல்ல மாயா இது என்னோட ரொம்ப ஃபேவரிட் அதுவும் எனக்கு புடிச்ச ப்ளூ கலர்ல நான் ஆசைப்பட்டு வாங்குனது.. இது கிழிஞ்சதும் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி..” என்று வருத்தப்பட்டு கூற, “சரிடி இன்னைக்கு நேரம் சரியில்லை வா நாம கிளம்பலாம்..”என்று மாயா சொல்ல, பின் இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

**

இரண்டு நாட்கள் கழித்து ஆரோன் ஒரு பை நிறைய சாக்லேட்களை வாங்கிக் கொண்டு ரீனாவின் வீட்டிற்குச் சென்றான்.  ஆம் இன்று அவள் நினைவு நாள்.

வருஷா வருஷாம் அவளுடைய நினைவு நாள் அன்று அவளுடைய வீட்டிற்குச் சென்று அவளுடைய அறையில் சிறிது நேரம் இருந்து விட்டு வருவான்.

அதே போல இன்றும் அவளுடைய நினைவு நாளன்று அவளுக்கு பிடித்தச் சாக்லேட்டுகளை நிறைய வாங்கியவன், அவளுடைய வீட்டிற்குச் சென்றான்.

அவன் வருவதைப் பார்த்த ரீனாவின் தங்கை சந்தியா அவனைப் பார்த்ததும்,

“ஹாய் அண்ணா வாங்க வாங்க என்ன இன்னைக்கு இவ்வளவு நேரம் எப்போதும் சீக்கிரம் வருவிங்க தானே.. இன்னைக்கு ஏன் லேட்டு..? சரி வாங்க வாங்க.. எங்க என்னோட சாக்லேட்டு அண்ணா..?” என்று சிறு குழந்தைப் போல அவள் கை நீட்ட,

அவனோ புன்னகைத்தவாறே அவளுக்கு என்று வாங்கி வந்த சாக்லேட்டுகளை அவள் கையில் கொடுத்து விட்டு ரீனாவுக்காக வாங்கிய சாக்லேட்டுகளை எடுத்துக்கொண்டு நேராக அவளுடைய அறைக்குள் சென்று அவள் போட்டோவின் முன்னே அதை வைத்தான். வைத்தவன் அவளுடைய போட்டோவை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

என்ன ஒரு அழகான முகம் அவளுடையது.

அவனைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது. தன்னுடைய கையை உயர்த்தி அவளுடைய முகத்தை வருடியவன், அவளுடைய கண்களை ஆழ்ந்துப் பார்க்க, இரண்டு முறை சிக்னலில் பார்த்த அந்தப் பெண்ணின் கண்கள் அவனுக்குத் தோன்றியது.

“ரீனா எனக்கு ஏன் இப்படி தோணுதுன்னு தெரியல.? ஆனா எனக்கு நீ உயிரோட இருக்கன்னே தோணுது.. இந்த கண்களை என்னால எப்படி மறக்க முடியும். அது இதே கண்கள் தான் ப்ளீஸ்..ரீனா என்ன இப்படி ஏங்க வைக்காத.. அது நீதான் நீ மறுபடியும் என் கண்ணு முன்னால வா.. நீ இல்லாத வாழ்க்கை நரகமா இருக்குடி..” என்று புலம்பியவாறே அந்த அறையைச் சுற்றிவர அப்பொழுது அந்த அறையில் உள்ள குளியலறைப் பக்கத்தில் தண்ணீர் சிந்தி இருக்க,

இவனோ அதில் தெரியாமல் காலை வைக்க அது சட்டென வழுக்கி விட, நிலை தடுமாறி குளியலறையின் கதவைப் பிடிக்க, அதுவோ சட்டென திறந்து கொண்டது.

வழுக்கியவாறே குளியலறைக்குள் விழப்போனவன் ஒரு பெண்ணின் மீது விழுந்தான். சட்டெனத் தலையை உயர்த்திப் பார்க்க அதே கண்கள் அவனுக்கு காட்சி அளித்தன.

“ரீனா..” என்றான் ஆரோன்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.1 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!