- ஆரல் -07
ஆரோன் யாராவின் கையைப் பிடித்து காருக்குள் ஏற்றிவிட்டு தானும் டிரைவர் சீட்டில் அமர்ந்தவன், காரை செலுத்தத் தொடங்கினான்.
இவ்வளவு நேரமும் அவன் செய்து கொண்டிருந்த எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஷாமோ யாராவை அவன் கைப்பிடித்து உள்ளே ஏத்தவும் சற்று ஆடித்தான் போனான்.
‘இவன் எதற்காக அவளிடம் இப்படி ரூடாக நடந்து கொள்கிறான்..?’ என்று நினைத்தவன், ஆரோனையும் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் யாராவையும் திரும்பி திரும்பிப் பார்த்தான்.
ஆனால், தற்சமயம் அவனிடம் எதுவும் கேட்கவில்லை ஷாம். பின்னால் அமர்ந்திருந்த யாராவோ தன்னுடைய நகத்தைக் கடித்தவாறே ஆரோணை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ இவனுக்கு எவ்வளவு தைரியம்.. நான் வரமாட்டேன்னு சொல்லியும் என வம்படியா கூட்டிட்டு போறான் உனக்கு இருக்குடா ஒரு நாள்.. இந்த யாரா யாருன்னு அப்ப பார்ப்பே..” என்று மனதிற்குள் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
ஆரோனோ கண்ணாடியில் அவளுடைய முகத்தைத் தான் பார்த்துக் கொண்டு வந்தான்.
அதை எதிர்ச்சியாக கவனித்த யாராவோ,
‘இவன் எதுக்காக இப்படி நம்மளை முழுங்கற மாதிரியே பார்க்கிறான்.. ச்சை.. இந்த பார்வை நம்மளை என்னமோ பண்ணுது அவனை பார்க்காத யாரா..’ என்று நினைத்தவள், தன்னுடைய பார்வையை விலக்கினாள்.
எக்காரணம் கொண்டும் அவனைப் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தாள்.
ஆனால் அவளுள் இருப்பது ரீனாவின் கண்களாயிற்றே. அவளுடைய அனுமதி இன்றியே ஆரோனைப் பார்த்துக் கொண்டிருந்தது.
கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்த ஆரோனோ அவளுடைய கண்கள் தன்னை பார்த்து சிரிப்பது போன்று தோன்ற இவனுடைய பார்வையும் ரசனை பார்வையாக மாறத் தோன்றியது.
யாராவின் ஆசிரமம் எங்கே இருக்கிறது என்று கேட்டு அறிந்தவன் அவளை அங்கு இறக்கி விட்டு, சந்தியாவை அவளுடைய வீட்டில் சென்று இறக்கிவிட்டு நண்பர்கள் இருவரும் கிளம்பினார்கள்.
அதன் பின் அவன் எப்பொழுது செல்லும் அந்த பப்பிற்கு சென்றான்.
பகலில் அவளுடைய அலுவலக வேலைகளைப் பார்ப்பான்.
இரவில் அவன் வழக்கமாக செல்லும் கேளிக்கை விடுதி.
யாராவும் தன்னுடைய காலேஜ் பின்பு தோழிகள் என அவளும் இருந்தாள்.
இவ்வாறு நாட்கள் சென்று கொண்டிருக்க, இந்த இடைப்பட்ட காலத்தில் அவனாக சென்று யாராவை பார்க்கவில்லை.
யாராவை பார்க்கும் போதெல்லாம் ரீனாவே அவன் கண்களுக்கு தெரிய அவளைப் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தாலும் என்னதான் அது ரீனாவின் கண்களாக இருந்தாலும் அவள் வேறொரு பெண் என்ற நினைவு வர அவளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தகர்த்தினான்.
இவ்வாறு இருக்க ஒரு நாள் ஆரோன் தான் எப்பொழுதும் செல்லும் அந்த கேளிக்கை விடுதிக்குச் சென்றான். வழக்கம்போல அவன் வந்ததும் அவன் மேல் விழும் பெண்கள் வரிசையாக விழ அவனோ அவனுக்கு ஏற்றார் போல ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து அன்றைய இரவைக் கழிக்க நினைத்தான்.
ஆனால் அவன் நினைத்தது அன்று நடக்கவில்லை.
ஏன் என்று தெரியாமல் திடீரென அவனுக்கு ரீனாவின் நினைவு அதிகமாக தோன்ற அந்தப் பெண்ணுடன் இணைய முடியாமல் தவித்தான்.
பின்பு சட்டென அங்கிருந்து கிளம்பியவன், தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் சென்று கொண்டிருந்தான் ஆரோன்.
அந்த காரிருள் நிறைந்த இரவு வேளையில் அந்த வழியே தன்னுடைய காதலியை நினைத்துக் கொண்டே காரை ஓட்டிக்கொண்டு வந்தான் ஆரோன்.
அவனுடைய எண்ணங்களில் அவளுடன் அவன் இருந்த அந்த அழகான தருணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வர அவன் இதழ்களில் புன்னகை அரும்பின.
அதோடு அவன் கண்களும் கலங்கின.
இப்படி அவன் அவளை நினைத்துக் கொண்டே வந்து கொண்டிருக்க, அங்கு தூரத்தில் அந்த மலை உச்சியில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.
இவனோ பார்த்தும் பார்க்காதது போல் தன்னுடைய விழிகளை திருப்ப நினைக்க, அந்த நேரத்தில் அந்தப் பெண்ணோ தன்னுடைய கைகளால் தன்னுடைய கண்களை துடைப்பது அவனுக்குத் தெரிந்தது.
உடனே அவனுக்கோ ஏதோ தவறு என்று தோன்ற தன்னுடைய காரின் வேகத்தை அதிகப்படுத்தினான்.
அந்த இரவு நேர தென்றல் காற்றில் அந்தப் பெண்ணின் கார்குழலோ அவள் முகத்தை மறைக்க அதை தன் கைகளால் அவள் காதோரம் ஒதுக்கிவிட, அப்பொழுது அவளுடைய அந்த அழகான முகம் அவனுக்கு காட்சி அளித்தது.
அதைப் பார்த்ததும் இவனுக்கோ பேரதிர்ச்சி.
ஆம் அங்கு நின்றது யாராதான். ‘இவளா இவ எதுக்காக இங்க நிற்கிறாள்..’ என்று நினைத்தவன் அவள் அருகே காரை நிறுத்தி விட்டு வேகமாக ஓடினான்.
அதற்குள் அவளோ அந்த பாறையில் இருந்து குதிக்க எத்தனிக்க இவனோ,
“ஏய்இஇ..” என்று கத்தியவாறே அவளுடைய கரத்தைப் பிடித்தவன், சட்டென தன்னை நோக்கி சுண்டி இழுக்க, அவளோ அவன் இழுத்த வேகத்தில் அவன் மேல் வந்து மோத, இவனோ நிலை தடுமாறி கீழே விழ, இருவரும் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து அந்த தரையில் புரண்டார்கள்.
பின்பு தங்களை சமப்படுத்திக் கொண்டு இருவரும் எழுந்து நின்றனர்.
ஆரோனோ எழுந்து நின்றதும் எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் முன்னே நின்ற யாராவின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டான்.
அதில் பொறிகலங்கி நின்றவளோ தன்னுடைய கன்னத்தை ஒற்றைக் கையால் தாங்கியவாறே அவனை நிமிர்ந்து பார்த்தவள், அழுகையினூடே,
“என்னை எதுக்காக தடுத்தீங்க… நான் சாகனும்..” என விசும்பினாள்.
அவள் அப்படி கூறவும் அவனுக்கோ மேலும் அதிர்ச்சி தான்.
தன் கைமுஷ்டிகளை இறுக்கியவன் அடக்கப்பட்ட கோபத்துடன் அவளைப் பார்த்து,
“உனக்கு என்ன பைத்தியமா சாகப் போறேன்னு சொல்லிட்டு இருக்க.. நீ உயிரோட இரு இல்ல செத்துப் போ எனக்கு எந்தக் கவலையும் கிடையாது. ஆனா எப்போ என் ரீனாவோட கண்களும் இதயமும் உனக்குள்ள வந்துச்சோ.. இதுக்கு அப்புறம் நீ சாகுறதுக்கான உரிமை உனக்கு கிடையாது..
ஏன்னா உனக்குள்ள இருக்கிறது என்னோட ரீனா..
திரும்ப ஒரு தடவ அவளை இழக்குறதுக்கு நான் தயாரா இல்ல.. இப்ப என்ன கெட்டுப் போச்சுன்னு நீ சாகறதுக்கு துணிஞ்ச..?” என்று அவளைப் பார்த்து சரமாரியாக அவன் கேள்விகளைக் கேட்க,
“இங்க பாருங்க சார் எனக்குள்ள இருக்கிறது உங்க ரீனாவோட கண்களும் இதயமுமா இருக்கலாம். ஆனா, அதுக்கான உணர்வுகள் எனக்கானது.. எனக்குன்னு ஒரு மனசு இருக்கு… நான் என்ன பண்ணனும் பண்ணக்கூடாதுன்னு நீங்க ஒன்னும் சொல்லத் தேவையில்லை..” என்றாள் யாரா.
அவனுக்கோ மேலும் மேலும் ஆத்திரமாக வந்தது.
தன்னுடைய பற்களை கடித்துக் கொண்டு தன்னுடைய கைகளை மடக்கி தொடையில் குத்திக் கொண்டு வேறு பக்கமாக திரும்பினான்.
அவளோ அவனுடைய செய்கைகளை பார்த்துவிட்டு,
“இங்க பாருங்க சார் இதுக்கப்புறம் சத்தியமா என்னால உயிரோடு இருக்க முடியாது.. ஒரு பொண்ணுக்கு தன் உயிரை விட மானம்தான் ரொம்ப முக்கியம்.. நான் பிறந்தது வேணா வெளி நாடா இருக்கலாம். ஆனா, எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து இந்த இந்தியால அதுவும் தமிழ்நாட்டில இருக்கேன்.. இங்கே உள்ளே கலாச்சார பிரகாரம்தான் நான் வளர்ந்து வந்து இருக்கேன்.
அதனால ஒரு பொண்ணுக்கு உயிரை விட மானம் தான் ரொம்ப பெருசுன்னு நினைக்கிறேன்.
நாலு பேர் முன்ன என் மானம் போறதுக்கு முன்னாடி என் உயிர் போயிடட்டும்னு ஆசைப்படுறேன். அதனாலதான் நான் சாகப் போறேன் தயவு செஞ்சு என்னை தடுக்காம இங்க இருந்து போங்க..” என்றாள்.
சட்டென அவள் புறம் திரும்பியவன் “உனக்கு அறிவு இருக்கா இல்லையா..? திரும்பத் திரும்ப சாகப் போறேன்னு சொல்லிட்டு இருக்க இங்க பாரு என்னால நீ சாகிறத பார்த்துட்டு இருக்க முடியாது. அதுக்கு நான் விடவும் மாட்டேன்.. நீ சாகுற அளவுக்கு அப்படி என்னதான் பிரச்சினை உனக்கு..?” எனக் கேட்டான் ஆரோன்.
“சார் என் பிரச்சனை என்னோடையே போகட்டும் அது எதுக்கு உங்களுக்கு..” என்றாள்.
அவனுக்கோ இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் காற்றோடு கலந்துப் போக தன்னுடைய இரும்பு கரத்தால் அவளுடைய கழுத்தை நெறித்தவன், “இங்க பாரு ஒழுங்கு மரியாதையா சொல்லு என்ன பிரச்சனைன்னு.. அதுக்கான தீர்வை நான் பார்த்துக்கிறேன். சும்மா சாகப் போறேன் சாகப் போறேன்னு சொல்லிட்டு இருக்காத..” என்று அவன் கத்த, அவனுடைய பிடியின் அழுத்தம் தாங்காமல் அவள் நேத்திரங்களில் இருந்து கண்ணீர் வர அதைப் பார்த்தவன், சட்டென தன்னுடைய கையை அவள் கழுத்தில் இருந்து எடுத்துக்கொண்டு அவளுடைய கண்ணீரைத் துடைத்துவிட்டு,
“இங்க பாரு இந்த கண்ணுல இருந்து இதுக்கப்புறம் தண்ணி வந்துச்சு அப்படின்னா உன்ன நானே கொன்னுடுவேன்..” என்றான்.
அவளோ சரி என்று தன் தலையை மேலும் கீழும் ஆட்டியவள் தன்னுடைய பிரச்சனையை அவனிடம் சொன்னாள்.
அதைக் கேட்டவனோ வெறிகொண்ட வேங்கையாக மாறிப் போனான்.
யாராவுக்கு எதனால், யாரால் என்ன ஆபத்து நேர்ந்திருக்கும்..? அதிலிருந்து அவளை எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் மீட்பானா ஆரோன்..?
ஆரல்- 08
ஆரோன் எப்பொழுதும் போல பெண்களுடன் உல்லாசமாக இருக்க எண்ணி அந்த கேளிக்கை விடுதிக்கு சென்றான்.
பின்பு தனக்காக ஒரு பெண்ணை தேர்வு அறைக்கு அழைத்துச் சென்றான்.
ஆனால் அவனால் அன்று அந்த பெண்ணிடம் இணைய முடியவில்லை.
ஏனோ இன்று ரீனாவின் நினைவு அவனை அதிகமாக வாட்ட அங்கிருந்து தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். காரில் வந்தவன் நினைவு முழுவதுமே ரீனா தான் ஆக்கிரமித்து இருந்தாள்.
அப்பொழுது அங்கு ஒரு பெண் தற்கொலை செய்வதற்காக நின்றாள்.
பின்பு அது யாரா என்று தெரியவும் வேகமாக அவள் அருகில் சென்றவன் அவளை காப்பாற்றி அவளிடம் என்ன விடயம் என்று கேட்க, அதற்கு அவள் கூறிய விடயங்களை கேட்டு அதிர்ந்தான் அவன்.
ஒரு நாள் அவளுடைய மொபைலுக்கு புதிய எண்ணில் இருந்து ஒரு சில போட்டோக்கள் வந்தது.
அது என்ன என்று பார்த்தவளுக்கோ சொல்ல முடியாத அதிர்ச்சி.
அந்த ஃபோட்டோவில் அப்படி என்ன இருந்தது என்றால் ஒரு பெண்ணின் உடலில் எந்த ஒரு ஆடையும் இல்லாமல் இருக்க, அதில் யாராவின் முகம் இருக்குமாறு மார்பிங் செய்யப்பட்டிருந்தது.
அதை பார்த்து தான் அவள் அவ்வளவு அதிர்ந்தாள்.
அந்த போட்டோக்களை பார்த்து அதிர்ந்து நின்றவளை மேலும் நோகடிக்க ஒரு வீடியோ வந்தது.
ஏற்கனவே அந்த போட்டோக்களை பார்த்து அதிர்ந்திருந்தவளோ கைகள் நடுங்க அந்த வீடியோவை டவுன்லோட் செய்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த வீடியோவை ஆன் செய்தாள்.
அந்த வீடியோவை ஆன் செய்த சில நொடிகளில் அவள் கையில் இருந்த அவளுடைய மொபைலோ கீழே விழுந்தது.
நடுங்கிய தன்னுடைய கைகளால் முகத்தை மூடியவாறு சிறிது நேரம் அழுது கொண்டிருந்தாள்.
அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
அவளுடைய முகத்தை வெறும் ஃபோட்டோவில் மட்டும் மார்பின் செய்யப்பட்டு அனுப்பவில்லை. அதை ஒரு வீடியோவாகவே அனுப்பியிருந்தார்கள்.
வேறொரு ஆணுடன் உடை இல்லாமல் இருப்பது போன்ற வீடியோ அது.
சிறிது நேரம் அழுது முடித்தவள் ஒரு முடிவு செய்தவளாக அந்த போனை கையில் எடுத்துக் கொண்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று விட்டாள்.
அங்கு சென்று அந்த போட்டோஷையும் வீடியோவையும் காட்டி அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தன்னை யாரோ மார்பின் செய்து தனக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்று காண்பிக்க, அந்த போலிஷ் அதிகாரியோ அவளிடம் கம்ப்ளைன்ட் வாங்கிக் கொண்டு ஆக்சன் எடுப்பதாக கூறிவிட்டு அனுப்பினார்கள்.
போலீஸ் ஸ்டேஷனை விட்டு கிளம்பிய சில மணி நேரங்களிலேயே அவளுக்கு இன்னொரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது அழைப்பை ஏற்று யார் என்று கேட்க, அந்தப் பக்கத்தில் இருந்த ஒரு நபரோ,
“ஏய் உனக்கு அவ்வளவு திமிரா நேரா போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் கொடுக்கிற.. போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தா நாங்க பயந்துருவோமா..” என்று அந்த மர்ம நபர் எக்காலமாக கேட்க, அதில் நடுங்கியவளோ,
“நீங்க யாரு எதுக்காக என்னோட போட்டோவை இப்படி அசிங்கமா எடுத்து எனக்கு அனுப்புனீங்க..” என்று கேட்டாள்.
“இப்போதைக்கு உன்னை இன்னொரு உடம்போட மார்பிங் தான் பண்ணி இருக்கோம்.. நீ சத்தம் இல்லாம நாங்க சொல்றபடி கேட்டா யாருக்குமே தெரியாம நமக்குள்ளேயே முடிச்சுக்கலாம்.. இல்லன்னா மார்பிங் இல்லாம டைரக்டா உன்னோட உடம்ப முழுசா வீடியோ எடுத்து நெட்ல அப்லோடு பண்ணிருவோம் என்ன சொல்ற..” என்று அந்த மர்ம நபர் கேட்க,
அவளோ, “வாய மூடுடா நீ சொல்ற மாதிரி எதுவும் நடக்காது..” என்றவள் அந்த அழைப்பை துண்டித்து விட்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றாள். அங்கே இருந்த அந்த இன்ஸ்பெக்டரோ அவளை ஏற இறங்க பார்த்தவர்,
“இங்க பாருமா அது ரொம்ப பெரிய இடம் நீ ஏன் அவங்க சொல்றபடி கேட்க கூடாது..” என்று கேட்க, இவளுக்கோ உடல் ஆட்டம் கண்டது.
‘அப்போ இவர்களும் இந்த தவறுக்கு துணை போகிறார்களா..?’ என்று நினைத்தவள்,
“என்ன பேசுறீங்க அவங்க என்ன பிளாக்மெயில் பண்றாங்கன்னு உங்ககிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தா நீங்களே அவங்க சொல்றபடி கேட்க சொல்றீங்க..” என்று கேட்க,
“உன் நல்லதுக்குத் தான்ம்மா சொன்னேன்.. அவங்களை எதிர்த்து நீங்க எதுவும் பண்ண முடியாது.. பேசாம அவங்க சொல்றபடி கேளு..” என்றார் அவர்.
அவளுக்கோ கோபம் கோபமாக வந்தது.
“இங்க பாருங்க சார் முறைப்படி நீங்க கம்ப்ளைன்ட் எடுத்துக்கலைன்னா மேல் இடத்துக்கு போக வேண்டி வரும்..”
“இங்க பாருமா நீ எங்க வேணா போய் சொல்லிக்கோ ஆனா நீ அவங்கள எதிர்த்து ஒன்னும் பண்ண முடியாது முதல்ல இங்க இருந்து போமா..”
அங்கிருந்து கிளம்பியவள் நேராக தன்னுடைய ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள்.
அவள் அங்கிருந்து சென்றதும் அந்த இன்ஸ்பெக்டரோ அந்த மர்ம நபருக்கு அழைப்பு எடுத்தவர்,
“சார் இந்த பொண்ணு கொஞ்சம் டேஞ்சர்னு தோணுது நான் கம்ப்ளைன்ட் எடுக்காததுனால மேல் இடத்துக்கு போவேன்னு என்கிட்ட சொல்றா எப்படியோ பேசி அவளை டைவர்ட் பண்ணி அனுப்பி வச்சிருக்கேன் இதுக்கு மேல நீங்க பாத்துக்கோங்க என்னால எதுவும் பண்ண முடியாது..”
“சரி ஓகே நான் பாத்துக்குறேன் நீ உன் வேலைய பாரு..” என்று சொல்ல, இன்ஸ்பெக்டரோ சரி என்று போனை வைத்து விட்டார்.
இங்கு ஆசிரமத்திற்கு வந்த யாராவோ தன்னுடைய அறைக்கு வந்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அன்றிலிருந்து ஒரு வாரம் அவளுக்கு எந்த அழைப்பும் வரவில்லை அந்த மர்ம நபர்களிடமிருந்து.
ஆனால் அவள் முகத்தில் பழைய சந்தோஷம் இல்லாமல் எதையோ பறிகொடுத்தது போலவே இருந்தாள்.
சந்தியாவும் மாயாவும் அவளிடம் எதுவும் பிரச்சனையா என்று கேட்டாலும் கூட, என்னதான் அவர்கள் தோழிகள் என்றாலும் கூட அவர்களிடம் அந்த விடயத்தை பற்றி கூற முடியவில்லை அவளாள். இதழில் சிறிய புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு அவர்களை கடந்து விடுவாள்.
அவர்களும் இவளிடம் கேட்டு கேட்டு பதில் வராது போக அவளே சரியாகிவிடுவாள் என்று இயல்பாக இருந்தார்கள்.
வழக்கம் போல் அன்று கல்லூரி சென்று இருக்க மதிய உணவுக்கு பிறகு அவளை பிரின்ஸ்பல் அழைப்பதாக கூற அவளும் அங்கு சென்றாள்.
“சார் நான் உள்ள வரலாமா..?”
“எஸ் கமின் உள்ள வாம்மா..” என்றார் ஐம்பது வயது மதிக்கத்தக்க அந்த காலேஜில் பிரின்ஸ்பல். அவளே உள்ளே வந்தவள்,
“சார் நீங்க என்ன கூப்பிட்டதா சொன்னாங்க சொல்லுங்க சார்..” என்று பவ்யமாக யாரா கேட்க, அவரோ, “முதல்ல உட்காருமா அப்புறம் சொல்றேன்..” என்றார்.
அவளோ சிறு புன்னகையை உதிர்த்தவாறு அவருக்கு எதிரில் இருந்த சேரில் ஒன்றை இழுத்து போட்டு அமர்ந்தவள் அவர் சொல்வதைக் கேட்க தயாரானாள்.
அவரோ, உங்க பேரு யாராதான..?”
“ஆமா சார் என் பேரு யாராதான்”
“ஒரு வாரத்துக்கு முன்னாடி உங்க போனுக்கு யாராவது தெரியாத ஆளுங்க கிட்ட இருந்து மெசேஜ் இல்ல போன் வந்ததா..!” என்று கேட்டார்.
அவர் கேட்ட கேள்வியில் சற்று அதிர்ந்தவள்,
“சார் நீங்க என்ன கேட்குறீங்கன்னு எனக்கு புரியல..?’ என்றாள். “இல்லம்மா உங்க நம்பருக்கு ஏதாவது போட்டோஸ் வீடியோஸ் அனுப்பி உங்களை மிரட்டுற மாதிரி ஏதாவது வந்ததா..?”
“ஆமா சார் வந்தது அசிங்கமான வீடியோவிலும் போட்டோலையும் என்னுடைய முகத்தை மார்ஃபிங் பண்ணி எனக்கு அனுப்பி பிளாக் மெயில் பண்ணாங்க.. நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தேன் பட் அவங்களும் ஆக்ஷன் எடுக்கல.. ஆனா என்னனு தெரியல இந்த ஒரு வாரமும் எனக்கு அவங்க கிட்ட இருந்து எந்த ஒரு போனும் வரல மெசேஜ் வரல..” என்றாள்.
“எப்படிமா வரும் முதல்ல உனக்கு அனுப்பி செக் பண்ணுவாங்க உன்னோட ரியாக்சன் எப்படி இருக்குன்னு பாப்பாங்க அதுக்கப்புறம் தான் அவங்க முழுமையா இறங்குவாங்க..” என்றார் அவர்.
அதைக் கேட்டு அவளுக்கோ தூக்கி வாரி போட்டது.
சட்டென்று அந்த இருக்கையில் இருந்து எழுந்தவள்,
“சார் நீங்க என்ன சொல்றீங்க..” என்றாள்.
அதற்கு அவரோ தன்னுடைய கண்ணாடியை சரி செய்தவாறு இருக்கையில் இருந்து எழுந்தவர், “இங்க பாருமா யாரா ரைட்..” அவளுடைய தலை ஆம் என்று மேலும் கீழும் ஆடியது.
“ஓகே இங்க பாரு யாரா நீ நல்ல படிக்கிற பொண்ணு உனக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிருக்கும்.. உன்னால அவங்க கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது ஒரு தடவை அவங்க கிட்ட சிக்கினா சிக்கினதுதான் திரும்பி போக வழியே கிடையாது.. அதனால நீ என்ன பண்றன்னா இன்னைக்கு நைட்டு உனக்கு ஒரு போன் வரும் அதை அட்டென்ட் பண்ணி அவங்க என்ன சொல்றாங்களோ அது படி கேட்டு நடந்துக்கோ அதுதான் உனக்கு ரொம்ப நல்லது.. அப்புறம் இத கேட்டு நீ வெளியே சொல்லலாம்னு நெனச்சேன்னா உன்ன உயிரோடையே விட மாட்டாங்க.. அதுக்கு அவங்க சொல்றபடி கேட்டேன்னா உனக்கு பணமும் கிடைக்கும் அதுவும் போக நீ நல்லா வாழலாம்..” என்றார். அவளுக்கோ அவர் கூறியதைக் கேட்டு ச்சை என்று ஆகி போக,
“சார் நான் போறேன்..” என்றவள் அங்கிருந்து வேக வேகமாக கிளம்பி கிளாசுக்கு கூட செல்லாமல் நேராக தான் தங்கி இருக்கும் ஆசிரமத்திற்கு சென்று அவள் தன்னுடைய அறைக்குள் அடைந்து கொண்டாள்.
அவளுக்கோ இதயம் வேக வேகமாக துடித்தது.
இந்த பிரச்சினையில் இருந்து எப்படி தப்பிப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை.
யாரிடம் சொல்ல என்றும் அவளுக்குத் தெரியவில்லை. போலீசிடம் சென்றால் அவர்களும் அவர்களுக்குத் துணை போகிறார்கள்.
எங்கு செல்வது என்று தெரியாமல் திண்டாடிப் போனாள் யாரா.
வெகு நேரமாக அவள் அப்படியே அமர்ந்திருந்தாள்.
இரவு ஒரு ஏழு மணி போல அவளுடைய தொலைபேசி அதிர்ந்தது.
அந்த சத்தத்தில் தன்னிலை அடைந்தவள் தன்னுடைய அலைபேசியை பார்க்க ‘பிரைவேட் நம்பர்’ என்று காட்டியது.
அதை பார்த்தவள் கைகள் நடுங்க அதை எடுத்து காதில் வைத்தவள் அமைதியாக இருந்தாள்.
ஆனால் மறுமுனையில் இருந்த அந்த மர்ம நபரோ,
“என்ன யாரா மேடம் இத்தனை நாள் கழிச்சு இன்னைக்கு ஏன் கால் பண்றான்னு யோசனையில இருக்கியா.. எனக்கு ஒரு சின்ன ஹேபிட் இருக்கு எதிராளிக்கு ஒரு சான்ஸ் கொடுத்து பாப்பேன் என் வழிக்கு வந்தா ஓகே.. இல்லைன்னா அடுத்து நான் போடுற வலை இரும்பு வலையா இருக்கும்.. அதிலிருந்து அவங்களால தப்பவே முடியாது.. அது மாதிரி தான் இப்ப நீயும் என்னோட இரும்பு வளையில மாட்டிக்கிட்ட.. இனி உனக்குத் தப்பிச்சு போக வாய்ப்பே இல்லை உனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன்.. நீயா திரும்ப எனக்கு கால் பண்ணுவேன்னு பட் நீ அதை மிஸ் பண்ணிட்ட.. இப்ப நீ என்ன பண்ற அப்படின்னா கீழே என்னோட ஆளுங்க கார்ல வெயிட் பண்ணுவாங்க அந்த கார்ல போய் அமைதியா ஏறி உட்கார்ந்துக்கிற சரியா..” என்று சொல்ல,
அவளோ “முடியாது..” என்றாள்.
“ஹேய் ஹேய் பேபி இங்க முடியாதுன்னு சொல்றதுக்கு உனக்கு எந்த உரிமையும் கிடையாது.. நீயா போகலைன்னா உன்னைத் தூக்கிட்டு வருவதற்கும் என் ஆளுங்களுக்குத் தெரியும் சரியா.. அதனால அடம் பிடிக்காம நீயா போய் ஏறிக்க ஓகே..” என்று சொன்ன அந்த மர்ம நபர் போனை வைத்துவிட, இவளுக்கோ கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.
சிறிது நேரத்தில் அவள் இருக்கும் அறையின் கதவு பலமாக தட்டப்பட்டது.
Ayyayyo