இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 14

5
(6)

Episode – 14

 

ஆதியோ, வேகமாக கன்னை தூக்கிப் பிடித்தபடி பாய்ந்தவன்,

 

அபர்ணா நோக்கி முன்னேறி வந்து கொண்டு இருந்த காரின் டயர்களுக்கு குறி வைத்து சுட, அந்தக் கார் தடுமாறி சரிய ஆரம்பிக்க,

 

அதில் இருந்த ரௌடிகள் முடிந்த வரையில் குதித்து வெளியில் வந்து, கோபத்துடன் அபர்ணா நோக்கி படை எடுத்தனர்.

 

அதற்குள் வேகமாக பாய்ந்து ஓடி, அவளின் அருகில் சென்ற ஆதி, அவளையும் இழுத்துக் கொண்டு, வேகமாக நின்று இருந்த தனது கார் நோக்கி ஓடியவன்,

 

அதற்குள் தங்களை நெருங்கிய, அடுத்தடுத்த கார்களின் டயரை நோக்கி, சரியாக சுட்டவன்,

 

தம்மை நெருங்கி வந்த ரௌடிகளையும் பந்தாடினான்.

 

எந்த சந்தர்ப்பத்திலும், அபர்ணாவின் கையை அவன் விடவே இல்லை.

 

அவனிற்கு காயங்கள் ஏற்ப் பட்ட போதும், அவனின் காயங்களில் இருந்து குருதி வெளியேறிய போதும், அவளை காரில் பத்திரமாக ஏற்றும் வரையில் அவளின் கரங்கள் அவனது கைகளுக்குள் பத்திரமாக சிறைப் பிடிக்கப் பட்டு இருந்தது.

 

முடிந்த வரையில் போராடி, வண்டிக்குள் தானும் ஏறியவன், 

 

வேகமாக கிளப்ப,

டயர் பஞ்சர் ஆகாது மீதம் இருந்த கார்களில், அவனைத் துரத்தியவர்கள் யாவரும் பட்டென்று ஏறிக் கொள்ள, அந்த ரௌடி கும்பல்களை சுமந்தபடி கார்கள், 

 

ஆதியின் காரை விரட்ட ஆரம்பித்தது.

 

கிடைத்த வாய்ப்பை அவர்கள் நழுவ விட ரெடியாக இல்லை எனப் புரிந்து கொண்ட,

 

ஆதியோ, “ஓஹ்…. ஷிட்….” என ஸ்டியரிங்கில் அடித்துக் கொண்டவன்,

 

காரை வேகமாக ஓட்டிக் கொண்டே, தனது ஆட்களுக்கு கால் பண்ண,

அவர்களும், அலேர்ட் ஆகி உடனடியாக அந்த இடத்தை நோக்கி படை எடுக்க ஆரம்பித்தனர்.

 

நல்ல வேளையாக அவன் பாதுகாப்புக்கு என நியமித்த ஆட்கள் அனைவரும் அருகிலேயே இருந்தனர். 

 

அவன் ஒரு வார்த்தை சொன்னால் உயிரைக் கொடுக்கும் கூட்டம் அது.

 

அவனுக்கு ஒரு ஆபத்து என்றால் சும்மா விடுவார்களா?, அடுத்த கணம் அனைவரும் அவனின் 

பாதுகாப்புக்கு என படை எடுத்து வர,

 

அவனின் படையைக் கண்ட, ரௌடி கும்பல், உயிர்ப் பயம் கொண்டு தப்பி ஓடி விட்டார்கள்.

 

அந்த கும்பல் வந்த நொடி தொடக்கம், அங்கு நடந்த அடுத்தடுத்த நிகழ்வுகளின் தாக்கத்தில் உயிர் உறைந்து போகும் அளவுக்கு பயம் கொண்டு அமர்ந்து இருந்த அபர்ணா,

 

தானாகவே ஆதியின் கையை இறுகப் பற்றிக் கொண்டு,

அவனின் தோள் வளைவில் சாய்ந்து கொண்டாள்.

 

அவளின் பயத்தை அவளின் கை நடுக்கம் மூலம் அறிந்து கொண்டவன்,

 

அந்த நிலையிலும், அவளின் தலையை வருடி விட்டு,

 

“எனக்கு என்ன ஆனாலும், உனக்கு எதுவும் ஆக விட மாட்டன்டி பயப்பிடாத.”  என கூறினான்.

 

அவனின் வார்த்தைகள் பயந்து போய் இருந்த அபர்ணாவின் காதில் விழுந்தாலும், மனதிற்குள்ளோ, 

மூளையிலோ கொஞ்சம் கூட பதியாது போனது தான் விதியின் சதியாகிப் போனது.

 

அடுத்த சில நிமிடங்கள் மட்டுமே,

 அங்கு பதட்ட சூழ்நிலை நிலவியது.

 

அதன் பிறகு, நிலைமை, ஆதியின் ஆட்களால் கட்டுக்குள் கொண்டு வரப்பட,

 

தன்னை அட்டாக் பண்ண வந்த கும்பல் பற்றிய முழு தகவல்களையும் எடுக்க சொன்னவன்,

 

அபர்ணாவுடன் வீடு நோக்கி புறப்பட்டான.

.

வீடு வந்தது கூடத் தெரியாது, அவள் அப்படியே கண்கள் மூடி அவனின் மீது சாய்ந்து இருக்க,

 

ஒரு பெரு மூச்சுடன், அவளை தட்டியவன், 

 

“அபர்ணா வீடு வந்தாச்சு, இனி எந்த பயமும் இல்லை. எழும்பு.” என கூற,

 

அவளோ, “ஹ்ம்ம்….” என்றவள், 

 

அப்போதும் எழாது, அவனிடம் மீண்டும் ஒட்டிக் கொள்ள,

 

அவளின் மன நிலை புரிந்தவன் போல, 

 

மென் குரலில், “ஒண்ணும் இல்லடா, எல்லாம் ஓகே ஆகிடிச்சு, முதல்ல வீட்டுக்குள்ள போகலாம் எழும்பும்மா.” என கூறினான்.

 

வழமையாக, அவளின் மனதை தொடாத அவனது குரல், இன்று ஏனோ, மனதை இதமாக வருட,

 

அவளும் அமைதியாக, அவனை விட்டு விலகி எழுந்து அமர்ந்தவள் அவனை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்து, 

 

“சாரி.”  என கூறி விட்டு, காரில் இருந்து கட கடவென இறங்கி தமது அறைக்குள் புகுந்து கொள்ள,

 

போகும் அவளையே சற்று நேரம் பார்த்துக் கொண்டு இருந்தவன்,

 

தானும் இறங்கி, அவளின் பின்னாக சென்றான்.

 

அவன் அறைக்குள் நுழையும் போது, வாஷ் ரூமிற்குள் நீர் விழும் ஓசை கேட்டது.

 

அவனும், அமைதியாக அங்கிருந்த சோபாவில் அமர்ந்தவனுக்கு அப்போது தான் வலது முழங்கையில் உள்ள வலி புரிந்தது.

 

“சே….” என கையை உதறிக் கொண்டவனின் கைகளில் இருந்து இரத்தம் தெறிக்க,

 

“ஓஹ்…. காயம் கொஞ்சம் பெரிசு போல.” என முணு முணுத்தவன், 

 

பெர்ஸ்ட் எய்ட் பாக்சைத் தூக்க எழ,

அதற்குள், வாஷ் ரூமில் இருந்து பிரெஷ் ஆகி வெளியே வந்த அபர்ணா, 

 

நிலத்தில் தெளி பட்டு இருந்த குருதித் துளிகளைக் கண்டு, புருவம் சுருக்கியவள்,

 

அங்கு நின்று கொண்டு இருந்த ஆதியை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தாள்.

 

அவளின் பார்வை ஒரு வித தவிப்புடனேயே அவனை ஆராய்ந்தது.

 

அவனும் அதனை உணர்ந்து கொண்டான்.

 

அவன் வேறு, காயத்தை  ஆராயவென, ஷேர்ட்டை கழட்டி இருந்தான்.

 

அவன் ஷேர்ட்டை கழட்டி விட்டு நிற்கும் போது எல்லாம், அவனை முறைத்துப் பார்த்து விட்டு, ஏதும் பேசி விட்டு செல்பவள், இன்று, தவிப்புடன் கண்கள் கலங்க, பேச வார்த்தைகள் எதுவும்  இல்லை என்பது போல நின்று கொண்டு இருந்தாள்.

 

அவளின் செய்கைகள் மற்றும் உணர்வுகள் ஒவ்வொன்றையும் ஆதியின் கண்கள் மிகத் துல்லியமாக படம் பிடித்துக் கொண்டு இருந்தது.

 

அவளோ, அவனின் கையில் இருந்த காயத்தைக் கண்டு, 

 

“அச்சோ…. எவ்வளவு பெரிய காயம்? இவ்வளவு இரத்தம் வெளில போய் இருக்கே…. இப்போ என்ன செய்றது?, உங்களுக்கு எப்படி வலிக்கும் இல்ல….” என பதட்டத்துடன் கேட்டவாறு,

 

ஓடிச் சென்று, பெர்ஸ்ட் எய்ட் பாக்சை தூக்கிக் கொண்டு வந்தவள், 

 

தானே அவனுக்கு அருகில் அமர்ந்து மருந்து போட்டு விட்டாள்.

 

ஒவ்வொரு முறையும், சிறு குழந்தை போல ஊதி ஊதி அவள் மருந்து இட, அவளையே கண் இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தான் ஆதி.

 

அவளோ, தனது வேலையில் கவனமாக இருந்தவள்,

 

காயத்திற்கு கட்டுப் போட்டுக் கொண்டே,

 

“எதுக்கும் நாங்க ஒரு தடவை, டாக்டர் கிட்ட போய்ட்டு வருவமா?, ஏதும் துருப் பிடிச்ச கத்தியால வந்த பாதிப்புன்னா…. கண்டிப்பா இன்ஜெக்ஷன் போடணும்.” என கேட்டவள், அவனை நிமிர்ந்து பார்க்க, 

 

அவன் அப்போதும் அவள் மீதான தன் பார்வையை கொஞ்சமும் மாற்றிக் கொள்ளவில்லை.

 

அவனின் பார்வையில், அவள் தான் கடைசியில் தன் பார்வையை வேறு புறம் மாற்றிக் கொள்ள வேண்டியதாகிப் போனது.

 

அவனின் அருகில் இருந்து எழுந்தவள், பாக்சை வைத்து விட்டு, 

“சொல்லுங்க போவமா?”, என திரும்பவும் கேட்க,

 

அவளைப் பார்த்து இல்லை என்பது போல தலை அசைத்தவன், 

 

“இத விட பெரிய காயம் எல்லாம் என் உடம்பு தாங்கி இருக்கு.”

 

“ஆனா…. இந்த வலியோட எப்படி வேலை செய்வீங்க?, அட்லீஸ்ட் பெயின் கில்லராவது போடலாமே.”

 

“ஹ்ம்ம்…. வலியா?…. எவ்வளவு பெரிய வலிகள் எல்லாம் நான் தாங்கி வந்து இருக்கேன் தெரியுமா?, என் மனசில என்ன நடந்தாலும் தாங்குற சக்தி இருக்கு. சோ, என்னைப் பத்தி கவலைப்படுறத விட்டுட்டு போய் உன் வேலையப் பாரு.” என அவன் கூற,

 

அவனின் குரலில் இருந்த விரக்தியில் அவள் மனம் ஒரு கணம் அப்படி என்ன வலி இவருக்குள்ள இருக்கும்? என எண்ணம் கொண்டது.

 

ஆனால் மறு நொடி அந்த எண்ணத்தை தள்ளி வைத்தவள்,

 

“நல்லதுக்கு காலம் இல்லப்பா.” என முணு முணுத்து விட்டு செல்ல,

அவனோ, “ஓஹ்…. நல்லது பத்தி நீ சொல்றீயா?, உன்னால தான் எனக்கு இந்த நிலைமை வாயாடி.” என சத்தமாக கூற,

 

ஒரு கணம் அவனைத் திரும்பிப் பார்த்தவள், தன் மீது பிழை என்பதால், வெறும் உதட்டு வளைவுடன் வெளியே சென்று விட்டாள்.

 

சற்று நேரம் கழித்து, அவனுக்கு காபியை கொண்டு வந்து நீட்டியவளை, அவன் புருவம் சுருக்கிப் பார்க்க,

 

அவளோ, “உதவி செய்தவருக்கு கார காபி எல்லாம் கொடுக்க மாட்டன், நம்பி குடிங்க.”  என அவனது பார்வையின் அர்த்தம் புரிந்து கூற,

 

அவனும் அடக்கப் பட்ட புன்னகை உடன், அதனை வாங்கிப் பருகினான்.

 

இரவும் அவனுக்கான உணவை கொண்டு வந்தவள், அவனுக்கு ஊட்ட முனைய, 

 

அவனோ, திகைத்துப் போய், “ஒரு நாளுல இவ்வளவு பேர்போர்ம் பண்ணாத, என்னால தாங்க முடியாதுடி, இருந்தாலும் இவ்வளவு நல்லவளா இருக்க கூடாது நீ.” என சீண்ட,

 

அவனை முறைத்துப் பார்த்து விட்டு, அவனின் வாயில் உணவைத் திணித்தவள்,

 

“நான் நல்ல பொண்ணு தான். எனக்கு கெட்டது செய்தா மட்டும் தான் எனக்கு கோபம் வரும், நான் வில்லியா மாறுவன்.” என அவனுடன் சரிக்குச் சரி பேசி, அவள் உணவை ஊட்ட, 

 

அவளுக்கு எப்படியோ…. அவனுக்கு சொர்க்கம் மிக அருகில் இருக்கும் நிலை தான். 

 

அவன் கடந்து வந்த கடும் வலிகள் நிறைந்த பாதையில், இப்போது அபர்ணா வந்த பிறகு தான், சற்று ஆசுவாசம் கிடைத்தது போல ஒரு உணர்வு அவனுக்கு.

 

 பாறையைக் காட்டிலும், அவனின் மனம் இறுக்கமாக இருந்தது. 

 

அவனின் லட்சியம் தவிர, வேறு எதிலும் அவனுக்கு நாட்டம் இருந்தே இல்லை. 

 

ஆனால் இப்போது பாறை இடையில் சிறு வேர் விட்ட அறுகாய் அவள் அவனின் மனதில் நுழைந்து விட்டாள்.

 

அறுகு சிறு புல் தான், ஆனால் அதன் வேரின் ஊடுறுவல் அத்துணை ஆழமானதாக இருக்கும். 

 

அதே போல தான் அவனின் மனதும், இனி வரும் காலங்களில் அவளின் எண்ணங்களை மட்டும் தான் சுமக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

 

உணவை ஊட்டி முடித்தவள் சிறு பிள்ளை போல, அவனின் வாயையும் துடைத்து விட்டாள்.

 

அதோடு மட்டும் நிறுத்தாது, அவனைக் கட்டாயப் படுத்தி, பெயின் கில்லர் மருந்தும் கொடுத்தவள்,

 

அவன் உறங்கும் வரையும் அவனின் அருகிலேயே அமர்ந்து இருக்க,

அவனோ, அவளின் கையை தன் மார்போடு பொத்தி வைத்துக் கொண்டு, நிம்மதியாக உறங்கிப் போனான்.

 

அவளும் அப்படியே அவனின் அடிபடாத மார்பின் புறம் படுத்து உறங்கி விட்டாள்.

 

இருவரின் இணைந்த கைகளும் உறக்கத்திலும் அப்படியே இருந்தது.

காலையில் முதலில் கண் விழித்தவன், தனது மார்பில் துயில் கொள்பவளைக் கண்டு மனதார புன்னகைத்துக் கொண்டு, எழுந்து பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்.

 

தனது வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்தவன், 

 

அங்கு எழுந்து அவனையே முறைத்துக் கொண்டு இருந்தவளைக் கண்டு,

 

“என்னாச்சு உனக்கு?, எதுக்கு காலையிலயே என்ன இவ்வளவு பாசமா பார்த்து வைக்கிறாய்?” என கேட்க,

 

“ஏன் என்ன எழுப்பாம தனியா வாஷ் ரூம் போய்ட்டு வர்றீங்க?, என்ன எழுப்பி இருந்தா…. நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணி இருப்பேன்ல?”  என கேட்க,

 

அவனோ, “எத?” என விழி விரித்துக் கேட்டவன்,

 

குரலை செருமிக் கொண்டு, “அந்தளவுக்கு எனக்கு அடி ஒன்னும் பெரிசா இல்ல, என்னால எனக்குரிய வேலைகளைப் பார்த்துக் கொள்ள முடியும்.” என கூறினான்.

அவளும்”, ஓஹ்…. ஓகே. நீங்க பால்கனில வெயிட் பண்ணுங்க. நான் பிரெஷ் ஆகிட்டுப் போய் உங்களுக்கு காபி எடுத்துக் கொண்டு வர்றேன்.” என கூறி விட்டு துள்ளி நடந்தபடி வாஷ் ரூமிற்குள் புகுந்து கொள்ள,

 

அவளையே புன்னகை உடன் பார்த்துக் கொண்டு பால்கனிற்கு சென்றவன், 

 

“சே…. இவள தவிர மனசு வேற எங்கயும் போக மாட்டேங்குது.” என தலையைக் கோதிக் கொண்டவனின் காதில்,

 

“உத்தரவே இன்றி உள்ளே வா….

 

நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்….

 

அந்த நொடி அன்பே என் ஜீவன்….

 

வேறெங்கு போனது பாரடி உன்னில்….

 

உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன்….

 

மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்…. 

 

என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் ஞாபகம்….” என்ற எங்கோ ஒலித்த பாடல் வரிகள் விழ,

 

கண்கள் மூடி அந்த வரிகளை ஆழ உள்வாங்கியவனின், மனதில் அபர்ணாவின் பூ முகம் தோன்றி மறைய,

 

அவனின் முகத்தில் புன்னகையுடன் கூடிய தேஜஸ் ஒன்று உருவாகி மறைந்தது.

 

இந்த ஜோடியின் நிலை இவ்வாறு இருக்க,

 

மறு புறம், தீரன் மனதில் தமயந்தி பற்றி உருவான சலனம் அப்படியே இருக்க,

 

அவன் வழக்கம் போல, அவளைக் கடிவதும், அவள் அதனை காதில் வாங்காது அமைதியாக செல்வதும் என நாட்கள் கடக்க,

 

அடுத்து நடந்த ஒரு சம்பவத்தின் விளைவாய், அவளின் மீது தான் கொண்ட கருத்து தவறோ…. என்ற ஒரு எண்ணம் உறுதியாக தீரனின் மனதில் உருவானதுடன், தமயந்தி மீது நல்ல அபிப்பிராயம் ஒன்றும் உருவானது.

 

அப்படி என்ன சம்பவம் நிகழ்ந்து இருக்கும்?

 

ஆதியின் காதல் கை கூடுமா?

 

அபர்ணாக்கு ஆதி தன் காதலை புரிய வைப்பானா?

 

அடுத்த எபி வந்தாச்சு மக்காஸ்.. 💖💖

 

கண்டிப்பா படிச்சிட்டு கருத்து சொல்லுங்க மக்காஸ் ❤❤

 

ஆதி ❤ அபர்ணா வந்தாச்சு ❤

 

அடுத்த எபில தீரன் ❤ தமயந்தி வருவாங்க.

 

அடுத்த எபி நாளைக்கு வரும் 😍😍

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!