இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 16

4.7
(14)

Episode – 16

 

அவன் காட்டிய இடத்தில், அவளுக்கு பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் வரிசையாக அமர்ந்து இருந்தனர்.

 

அவர்களை விழி விரிய பார்த்து விட்டு, ஆதியைப் பார்த்தவள், 

 

“என்ன இதெல்லாம்?” என கேட்க,

அவனோ, “சிம்பிள். இனி மேல் உனக்கு அவங்க இங்க வந்து கிளாஸ் எடுப்பாங்க. நீ ஸ்கூல் போக தேவை இல்லை. நம்ம வீட்டில இருந்தே படிக்கலாம். உனக்காக என்னோட ஸ்பெஷல் ஏற்பாடு இது.” என கூற,

 

அவளோ, “என்னது….” என அதிர்ந்தவள், 

 

அதிர்ச்சியில் மாடிப் படியில் இருந்து கீழே விழாது நின்றது அதிசயம் தான்.

 

“உங்களுக்கு மூளை ஏதும் குழம்பிப் போச்சா?, நான் என்ன சின்னக் குழந்தையா…. வீட்டில வைச்சு பாடம் சொல்லிக் கொடுக்க, வெளில, யாரும் இந்த விஷயத்த கேட்டா சிரிப்பாங்க. ப்ளீஸ், இது மட்டும் வேணாம்.” என  அவனின் புறம் திரும்பி, அபர்ணா அழுத்தமாக கூற,

 

“ஹ்ம்ம்ம்…. ஒரு வேள நீ ஒழுங்கா நடந்து இருந்தா…., நானும் அமைதியா என் வேலையப் பார்த்து இருப்பன். நீயும் ஜாலியா ஸ்கூல்ற்கு போய் வந்து இருக்கலாம். ஆனா, நீ செய்த குளறு படியால, இரண்டு பேரும் ஜஸ்ட் எமன் கிட்ட போய் நலம் விசாரிச்சிட்டு திரும்ப  வந்து இருக்கம். இனியும் உன்ன நம்பி எப்படி ஸ்கூல் ற்கு அனுப்ப முடியும்?, ஒழுங்கா இங்க இருந்தே படி, உனக்கு தேவையானத சொல்லு எல்லாம் நான் வாங்கித் தரேன்.” என கூற,

 

அவன் அமைதியாக, இருந்ததன் காரணம் இப்போது அவளுக்கு புரிந்தது.

 

“இதுக்காக தான் என்னைத் திட்டாம அமைதியா இருந்தீங்களா?, இங்க பாருங்க. நீங்க எவ்வளவு பெரிய டீச்சர்ஸ்ச கொண்டு வந்து எனக்கு படிப்பிக்க வைச்சாலும் என்னால ஒழுங்கா படிக்கவே முடியாது. பாடசாலை சூழல் வேற, இது வேற. அத விட நான் என்னோட பிரென்ட்ஸ் எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுவன் ப்ளீஸ்.” என அவள் கெஞ்ச,

 

“அப்போ உனக்கு இப்போ உன்னோட பிரண்ட்ஸ் தான் பிரச்சனை அப்போ அவங்களையு ம் இங்க வந்து படிக்க சொல்லுவமா?” என அவன் தாடையைத் தடவியபடி கேலியாக கேட்க,

 

“எத….” என வாயைப் பிளந்தவள், 

 

“சத்தியமா என்னால முடியல. ப்ளீஸ். இனி மேல் நீங்க சொல்றத தாண்டி, எங்கயும் போக மாட்டன், சமத்தா ஸ்கூல் போய் திரும்பி வந்துடுவன். அங்க எந்த வாலுத் தனமும் செய்ய மாட்டன், உங்க காவல மீறி எங்கயும் போக மாட்டன்.” என சிறு பிள்ளை போல முகத்தை வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக கூற,

 

அவள் கூறும் அழகில் அவனுக்கு, உதட்டோரம் சிரிப்பில் துடித்தது.

 

இருவரும் மாடிப் படியில் நின்று, மெதுவாக பேசியதனால், இருவரின் உரையாடலும், கீழே இருக்கும் நபர்களின் காதை சென்றயவே இல்லை 

அவளின் சிறு பிள்ளைத் தனம் அவனுக்கு அத்துணை தூரம் பிடித்துப் போனது.

 

அவனும், அதற்கு மேல் அவளிடம் மறுத்துப் பேச முடியாது, அவளுக்காக இறங்கி வந்தான்.

 

யாருக்காகவும் தான் எடுத்த முடிவுகளை மாற்றிக் கொள்ளாதவன், அவளின் பேச்சுக்கு செவி சாய்த்து அவளுக்காக எடுத்த முடிவை மாற்றிக் கொள்ள விரும்பியே முன் வந்தான்.

 

அவளோ, அவனின் முக மாற்றத்தையே பார்த்துக் கொண்டு இருக்க,

 

“சரி, இப்போ உனக்கு இந்த ஏற்பாடு வேண்டாம் அப்படித்தானே….” என கேட்க,

 

புன்னகை உடன், “ஆமாம்.” என எல்லாப் பக்கமும் தலையாட்டி வைத்தாள் அவள்.

 

“அப்போ, நான் சொன்னது போல, எல்லாக் கண்டிஷனுக்கும் ஓகே தானே. ஒவ்வொரு நாளும் என் கூடத் தான் ஸ்கூலுக்கு வரணும், திரும்பவும் என் கூடத் தான் வீட்டுக்கும் வரணும்….”என ஆரம்பித்து அவன் அடுத்தடுத்த கண்டிஷன்ஸ் அடுக்கிக் கொண்டே செல்ல,

 

அவளோ, எல்லாத்துக்கும் தலையை ஆட்டியவள், அவன் தொடர்ந்து கூறிக் கொண்டு செல்லவும்,

 

“அச்சோ…. போதும் ஆதி, ஆளை விடுங்க.” என அவனின் பெயரை முதன் முறை அவளே அறியாது கூறி இருக்க,

 

அவளின் அழைப்பில் உள்ளுக்குள் காதல் பொங்கிப் பிரவாகம் எடுக்க, பேச்சை நிறுத்தியவன், 

 

“ஓகே, அப்போ நீ  இனி மேல் உன் விருப்பத்தின் படி ஸ்கூலுக்கே போய் படிச்சுக்கலாம்.” என கூறவும்,

சந்தோச மிகுதியில் என்ன செய்கிறோம் என உணராது,

 

அவனை இறுக அணைத்து “ரொம்ப ரொம்ப நன்றி ஆதி.” என சத்தமாக கூறினாள்.

 

அவளின் அணைப்பில் சிலிர்த்துப் போய் நின்று கொண்டு இருந்தான் அவன்.

 

முதன் முறை அவளின் செயல்கள் ஒவ்வொன்றிலும், அவன் புதிதாகப் பிறந்தான்.

 

அவனின் உடல் முழுவதும் புது இரத்தம் பாய, 

 

அவளை தனக்குள்ளே பொத்தி வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வு அவனுக்குள் அதிகமாக, அதே நிலையில் நின்றால், தன்னையே தன்னால் கட்டுப் படுத்த முடியாது என எண்ணிக் கொண்டவன்,

அவளை விலக்கி நிறுத்தினான்.

 

அவளின் கத்தலும், செய்கையும், அங்கிருந்த வர்களின் கவனத்தை ஈர்க்க,

 

அவர்கள் அனைவருமே, மாடியை நோக்கி பார்வையை செலுத்தினர்.

 

இருவரின் நெருக்கத்தையும் பார்த்து அவர்களின் உதடுகளில் சிறு புன்னகையும் பூத்தது.

 

அவன் விலக்கி நிறுத்தவும்,  தன்னை மீட்டுக் கொண்டவள்,

 

அவனை விட்டு தள்ளி நின்று, அனைவரையும் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு,

 

“நான் ஸ்கூல் போக ரெடி ஆகிறேன்.” என கூறி விட்டு, தமது ரூம் நோக்கி ஓடிச் சென்றாள்.

 

போகும் அவளை உதட்டுக்குள் அடங்கிய புன்னகை உடன் பார்த்தவன், தலையைக் கோதிக் கொண்டு கீழே இறங்கி வந்தான்.

 

தன் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து வந்திருந்தவர்களை பேசி அனுப்பி வைத்து விட்டு,

 

அபர்ணாவை தானே அழைத்து சென்று பாடசாலையில் விட்டவன், 

 

அவளுக்கு ஆயிரம் முறை புத்திமதி சொல்லி விட்டு கிளம்பி சென்றான்.

************************************************************************************************

தீரனுக்கு அடுத்து வந்த இரு நாட்களும், இரு யுகம் போலத் தோன்றியது.

 

அவன் எதற்காகவும் இத்தனை தூரம் பதட்டம் கொண்டதும் இல்லை, டென்ஷன் ஆனதும் இல்லை. 

 

தான் செய்வது அனைத்தும் சரி என்ற முடிவுடன் இறங்கி வேலை செய்பவன் அவன். 

 

ஆனால் இப்போது அவனின் மனம், “நீ  தவறு செய்து விட்டாய், தமயந்தி விடயத்தில் நீ எடுத்த முடிவு தவறு.”என மீண்டும் மீண்டும் இடித்துரைக்க,

 

அந்த இரு நாட்களில் போனைப் போட்டு, பார்கவை ஒரு வழி பண்ணி விட்டான்.

 

“டேய், என் வேலைக்கு டென்ஷன் ஆகாம இருக்கிறது முக்கியம்டா. எனக்கு கொஞ்சம் டைம் தாடா நல்லவனே.” என அவன் கெஞ்சியும், விடாது அவனை ஒரு வழி பண்ணி விட்டான் தீரன்.

 

பார்கவோ, “கடைசியாக உன்ன இப்படி நான் பார்த்ததே இல்லடா. ஏன்டா இப்படிப் பண்றாய்?, கொஞ்சம் பொறுமையா இருடா. எல்லாத்தையும் பிங்கர் டிப்ல கொண்டு வரேன்.” என கூறியவன்,

 

இறுதியில் தமயந்தி பற்றி அனைத்து விடயங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக கண்டு பிடித்து இருந்தான். 

 

அவன் கண்டு பிடித்த அடுத்த நொடி அழைத்தது என்னவோ, தீரனுக்கு தான்.

 

இரண்டு நாட்களும் தூக்கம் இன்றி ஆபீஸ்லயே தங்கி இருந்தவன் நண்பனின்  அழைப்பு என்றதும், அந்த நடு நிசி இரவிலும் போனை எடுத்தவன், மறுபுறம் இருந்தவனை பேசவே விடாது, 

 

“எல்லாம் ஓகே தானே. ஒரு சின்ன டீடெய்ல்ஸ் கூட விடாம எல்லாம் கண்டு பிடிச்சிட்டாய் தானேடா….” என கேட்க,

 

“டேய், உனக்கு கொஞ்சமாச்சும் மன சாட்சி இருக்காடா?, நடு ராத்திரி, பேய் அலையுற நேரத்தில அலைஞ்சு திரிஞ்சு விஷயத்த கண்டு பிடிச்சு இருக்கேன். எடுத்ததும் என்னைப் பற்றி ஒரு வார்த்தை கேட்பாய்னு பார்த்தா…. நீ அந்த டீடெயில்ஸ்ச  தெரிஞ்சு கொள்றதுலயே குறியா இருக்கீயேடா…., நீ எல்லாம் நண்பனாடா?” என அங்கலாய்க்க,

 

“டேய், ஏன்டா ஏன்…. இருக்கிற கடுப்பில, நான் ஏதாவது சொல்லிடப் போறன். ஒழுங்கா நீ துப்பு துலக்கினத, ஒண்ணு கூட விடாம துப்பித் துலைடா.” என தீரன் கத்த,

 

“கூல்டா மச்சி….” என கூறிய பார்கவ், அவன் கண்டு பிடித்த அனைத்து விடயங்களையும் ஒன்று கூட விடாது கடகடவென கூறி முடிக்க,

 

அவன் கூறி முடிக்கும் வரைக்கும், அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தான்.

 

பார்கவ் கடைசியில், “அந்தப் பொண்ணு மேல தப்பு இல்லடா. அவ ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணுடா. இது தான் என் ரிப்போர்ட்டோட இறுதி முடிவு.” என அவன் கூற,

 

“ஓகேடா மச்சி. ரைட்.” என ஒரு வித யோசனை உடன் கூறினான் தீரன்.

 

பார்கவ்வோ, “என்னடா உனக்கு 

இன்னும் குழப்பம் தீரலயா?” என கேட்க,

 

“சே…. சே…. அதெல்லாம் இல்லடா. கண்ணால பார்க்கிறது எல்லாம் உண்மை இல்ல…. எதையும் தீர ஆராயணும்னு இதுக்கு தான் சொல்றது போலடா.”

 

“ஆமாடா, நீ எல்லா விஷயத்திலயும் ரொம்ப அமைதியா, பொறுமையா யோசிச்சுத் தானே முடிவு எடுப்பாய்?, இந்த விஷயத்தில மட்டும் ஏன்டா அதிரடியா முடிவு எடுத்து இருந்தாய்?”

 

“ஹ்ம்ம்…. காரணம் இருக்குடா. எல்லாத்துக்கும் பின்னாடி பெரிய காரணம் இருக்கு. அத பத்தி உனக்கு நான் நேர்ல சொல்றேன். நாளைக்கு உன்ன வந்து சந்திக்கிறன். ஓகேவாடா?”

 

“ஹ்ம்ம்…. ஓகேடா. இனியாவது அந்தப் பொண்ண நீ உன் கஸ்டடில இருந்து ரிலீஸ் பண்ணலாம் தானே. பாவம்டா அவ.”

 

“ம்க்கும்….டேய் நண்பா…. இனி தான் முக்கிய வேலையே இருக்கு. நீ வேற குட்டைய குழப்பாத, இனி தான் என் ஆட்டமே ஆரம்பமாக இருக்குடா.”

 

“டேய், அப்போ அந்தப் பொண்ணு மேல உனக்கு இன்னும் கோபம் தீரலயாடா?”

 

“டேய், நான் எங்கடா அப்படி சொன்னன், அவள வைச்சுத் தான் இனி நான் காய் நகர்த்தணும். முக்கிய முடிவுகள் எடுக்கணும், கணக்குகள் சிலது முடிக்கணும்.” என சீரியஸ்சாக சொன்னவன்,

 

இறுதியில், குரல் மென்மையாக, 

 

“ஆனா ஒன்னுடா, இனி அவள நான் பத்திரமா பார்த்துப்பன். என் கைக்குள்ள வைச்சுப் பார்த்துப்பன், அவ இன்னுமே சில விஷயங்கள்ல ரொம்ப கஷ்டப் பட வேண்டி இருக்கும். அவ என்னை நம்ப முடியாத  சூழ்நிலைகள் நிறைய வரும்டா. என்ன வெறுக்கிற சூழ்நிலை கூட வரும். ஆனா எந்த சூழ்நிலை வந்தாலும், நான் அவள விட்டுக் கொடுக்கப் போறது இல்லை. ஏன் அவளுக்காக கூட அவளை விட்டுக் கொடுக்கா மாட்டன்….” என பேசிக் கொண்டே போக,

 

“டேய் நல்லவனே, ப்ளீஸ் கொஞ்சம் நிறுத்துடா. எனக்கு நீ பேசுறது கொஞ்சம் கூட புரியலடா.” என கூறியவனின் பேச்சில் பெரு மூச்சு ஒன்றை வெளியேற்றியவன், 

 

“நாளைக்கு நேர்ல பார்க்கும் போது விளக்கமா சொல்றேன்டா.” என கூறி விட்டு, 

 

“டேய் மச்சான் ரொம்ப நன்றிடா, எனக்கு ரொம்ப பெரிய ஹெல்ப் பண்ணி இருக்காய்டா, நீ மட்டும் உதவி செய்யலன்னா…. நான் என் தமயந்திய இன்னுமே தண்டிச்சுக் கொண்டு தான் இருந்து இருப்பன். அவ ஒரு அப்பாவிடா.” என முதன் முறை மனம் உணர்ந்து சொன்னான்.

 

அவனின் குரலில் உள்ள நெகிழ்வு பார்கவ்ற்கும் புரிய,

 

“சார்….. நீங்க இப்போ என் தமயந்தின்னு ஒரு வார்த்தை சொன்னீங்க…. உங்களுக்கு அது புரிஞ்சுதா?” என கேட்டான்.

 

அப்போது தான், அவன் சொன்னதை அவனே உணர்ந்து கொண்டான் தீரன்.

 

உதட்டைக் கடித்து தலையைக் கோதிக் கொண்டவன், அமைதியாக இருக்க,

 

பார்கவ், “மச்சி அவங்கள நீ லவ் பண்றீயா?” என கேட்டே விட்டான்.

 

அதற்கும், அமைதி காத்த தீரன், 

“மச்சி நாம நாளைக்கு பேசலாம். நீ இனிப் போய் நிம்மதியா தூங்குடா. என்னால உனக்கு இனி தொல்லை இருக்காது. அண்ட் உன்னோட பீஸ் உன் அக்கௌன்ட்ற்கு வந்து சேரும்.” என கூற,

 

“டேய்…. இது எனக்கு நீ தந்த வாழ்க்கைடா. எனக்கு கலியாணம் பண்ணி வைச்சது தொடக்கம், என் வேலை, என் வீடு எல்லாமே நீ கொடுத்தது மச்சி. அப்புறம் எதுக்குடா எனக்கு பீஸ். உதை வாங்காம சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பு. நீ இரண்டு நாளா வீட்டுப் பக்கம் போகலன்னு எனக்கு தெரியும்.” என கூறியவனின் அக்கறையில் மென் புன்னகை சிந்தியவன்,

 

“ஓகேடா மச்சி. நீயும் வீட்டுக்கு கிளம்பு.” எனக் கூறி விட்டு, 

 

போனை வைத்தவனுக்கு, மனம் முழுவதும் தமயந்தியின் எண்ணமே.

 

“இப்போ அவ தூங்கி இருப்பாள் தானே.” என எண்ணியவனுக்கு, அவளை உடனே காண வேண்டும் என்ற ஆவல்.

 

நினைத்த உடனே, கார் கீயை எடுத்துக் கொண்டு கீழே வந்தவன், 

 

காரை அவசரமாக வீடு நோக்கி செலுத்தினான். 

 

போகும் வழியில் நீண்ட நெடு நாளைக்கு பிறகு, எம். எம்மில் பாடல் கேட்க வேண்டும் போல இருக்க,

 

அதனை ஆன் பண்ணியவனின் செவிகளைத் தீண்டியது.

 

“தேடிடும் கண்களில் தேவதையா….

 

வாடிடும் பூமியில் வான் மழையா….

 

வாசனைப் பூக்களின் காதலியா….

 

இவள் என் கனவா….

 

பேசிடும் மொழிகள் சிம்பனியா….” என்ற வரிகள்.

 

உடனே காரை நிறுத்தி விட்டு அந்த வரிகளை ரசித்துக் கேட்க ஆரம்பித்தான் அவன்.

 

இறுதியில், “யாரும் பார்க்காத ஓர் தங்கமான தேவதை….

தோளில் சாய்ந்து உயிர் போனா கூட தேவல….” என்ற வரிகளில் முற்றிலும் லயித்துப் போனவன்,

 

கண்களுக்குள் தோன்றிய தமயந்தியின் விம்பத்தில் தன்னையே மறந்து போய் உட்கார்ந்து இருந்தான்.

 

அவனின் மனமோ, “நீ தமயந்தியை நேசிக்க ஆரம்பித்து விட்டாயா தீரா?, அவளைக் காதலிக்கிறாயா?” என கேள்வி கேட்க,

 

பட்டென்று கண்களைத் திறந்தவன், 

“தெரியலயே…. இன்னுமே குழப்பமாத் தான் இருக்கு.” என தனக்குத் தானே சப்பைக் கட்டு கட்டிக் கொண்டு, 

 

அடுத்து வந்த பாடல்களை ரசித்துக் கேட்டபடி வீட்டை அடைந்தான்.

 

காரில் இருந்து இறங்கி கடிகாரத்தைப் பார்த்தவனுக்கு அதுவோ, அதிகாலை ஒரு மணி என காட்ட,

 

தமயந்தி தங்கி இருந்த வீட்டை ஒரு பார்வை பார்த்து விட்டு, தன் வீடு நோக்கி சென்றவனுக்கு, கால்கள் பின்ன,

 

ஒரு முடிவுடன், அவள் தங்கி இருக்கும் வீட்டுக்கு சென்று, கதவைத் தட்டினான்.

 

வாழ்க்கையில் இந்த அனுபவமும் அவனுக்கு முதல் அனுபவம் தான்.

 

இப்படி நடு இரவில் ஒரு பெண்ணின் வீட்டின் கதவை  அவன் தட்டக் கூடும் என  ஒரு காலத்தில் சொன்னால் நம்பி இருக்க மாட்டான். 

 

ஆனால் இப்போது அதையே செய்து கொண்டு இருந்தான்.

 

இரு முறைகள் தட்டிய பிறகு, உள்ளிருந்து, 

 

“யாரது?” என்ற ஒரு மெல்லிய குரல் பதட்டத்துடன் கேட்டது.

 

“ஓஹ் …. பயந்திட்டா போல….” என எண்ணியவன், 

 

“நான் தான் தீரன்.” என கம்பீரமாக கூற,

 

அடுத்த இரு நொடிகளில் கதவைத் திறந்து கொண்டு குழப்பமான முகத்துடன் வெளியே வந்தாள் தமயந்தி.

 

அவளின் கண்களில் ஒரு வித பயம் வெளிப்பட, கையைப் பிசைந்து கொண்டு, 

 

“என்னாச்சு நீ….ங்….க…. என்ன இந்த நேரத்துல….” என அவள் திக்க,

அவனோ, “ஏன் என் வீட்டுக்கு நான் வர்றதுக்கு டைம் இருக்கா என்ன?” என அவன் கேலியாக வினவ,

 

அவளோ, மலங்க மலங்க விழித்தாள்.

 

வழமையாக அவனுக்கு மகிழ்வைத் தரும், அவளின் பயப் பார்வை, இன்று ஏனோ எரிச்சலையே கொடுத்தது.

 

(இப்படி கதவத் தட்டி அந்தப் புள்ள தூக்கத்த கெடுத்தா …. அந்தப் புள்ள பயப்பிடமா, பாயாசமா கொடுக்கும்.)

 

அவளையே பார்த்து இருந்தவன்,

“என்ன இரண்டு நாள் என்னைக் காணாம ரொம்ப சந்தோஷமா இருந்தாய் போல. இனி, 

அதெல்லாம் கிடையாது. நாளைக்கு காலைல சரியா ஐஞ்சு மணிக்கு வரணும்.” என உறுமியவன்,

 

அவள் எல்லாப் பக்கமும் தலையை ஆட்டவும்,

 

“என்ன வாயைத் திறந்தா முத்து கொட்டிடுமா?, ஒழுங்கா குட் நைட் சொல்லு.” என மேலும் அதட்ட,

 

அவளும், “இது என்ன கொடுமை கடவுளே…. தூங்குறவங்கள எழுப்பி குட் நைட் சொல்ல சொல்றார்.” என எண்ணி நொந்து போனவள்,

 

திக்கித் திணறி, “குட் நைட்.” என கூற,

 

அவளை, ஒரு தடவை மேலிருந்து கீழாக பார்த்து கண்களில் நிரப்பிக் கொண்டு, 

 

“போய்த் தூங்கு.” என விறைப்பாக கூறியவன்,

 

அவள், “இப்போ எதுக்கு வந்தார்?, எதுக்கு கூப்பிட்டார்?” என குழம்பிப் போய் நிற்கவும், 

 

“ம்க்கும்…. போய் தூங்க சொன்னேன்.” என மறுபடியும் அழுத்திக் கூற,

 

“ஆஹ்…. ஓகே.” என்றவள், 

அவசரமாக கதவை மூடிக் கொண்டு உள்ளே செல்ல,

 

தீரன், அவளைக் கண்ட நிம்மதி உடன் உறங்கச் சென்றான்.

 

அவனின் மனதில் உள்ள காதலை அவன் முற்று முழுதாய் உணர்வானா?

 

இருவரின் வாழ்வின் மர்மங்கள் துலங்கும் நாள் வருமா?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

கண்டிப்பா உங்க லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ்..

 

கதையில் இனி வரும் எபிகளில் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ ஆரம்பிக்கும்.

 

அடுத்த எபி நாளைக்கு வரும்.

 

பெரிய எபி போட்டு இருக்கேன்.. லைக்ஸ் ப்ளீஸ் 😍😍

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!