இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 19

4.6
(20)

Episode – 19

 

மறு நாள் பொழுது விடிந்ததும், வழக்கம் போல அவள் ரெடியாகி வெளியே வர,

 

அங்கு அவளுக்கு முன்பாக ரெடியாகி வந்து,

 

அவள் அமர்ந்து இருக்கும் கல்லில் அமர்ந்தபடி, அவளின் வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டு இருந்தான் தீரன்.

 

தமயந்தியோ, அவனைப் பார்த்து விட்டு,வீட்டில் இருந்த கடிகாரத்தை ஒரு முறை திரும்பி சந்தேகமாக பார்க்க,

 

“ம்க்கும்….” என குரலை செருமியவன், 

 

“நீ சரியான நேரத்துக்கு தான் வந்து இருக்காய். நான் தான் கொஞ்சம் ஏர்லியா வந்துட்டன்.” என அவளின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவன்,

 

அவள் அருகில் வரவும், அவளை நோக்கி கையை நீட்டினான். 

 

அவளோ, வழக்கம் போல அவனைப் பார்த்து மலங்க விழிக்க,

 

அவளின் கையைப் பற்றி தானே குலுக்கியவன், “இன்னைக்கு என்னோட பர்த்டே.” என கூறவும்,

அவள் அப்போதும் அப்படியே நின்று கொண்டு இருக்க,

 

“ஏன் மேடம் விஷ் பண்ண மாட்டீங்களோ….” என ஒரு விதமான குரலில் கேட்டான் அவன்.

 

அவளோ, “அப்படி…. எல்லாம்…. இல்ல….” என திக்கித் திணறியவள்,

 

ஒருவாறு, தன்னை சமாளித்துக் கொண்டு, “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.” எனவும் கூறி விட்டாள்.

 

( நம்ம தீரன் மாதிரி யாரும் விஷ் வாங்க முடியுமா மக்காஸ்?, எப்படி தமயந்திய  விஷ் பண்ண வைச்சான்னு பாருங்க.)

 

அவளோ, இன்னும் அவளது கைகள் அவனது கைகளுக்குள் இருப்பதை உணர்ந்து, அதனை மெதுவாக இழுக்கப் பார்க்க,

 

அவனும் அதனை உணர்ந்தது போல, அவளின் கையை ஒரு முறை அழுத்தி விடுவித்தவன்,

 

அவள் அமைதியாக நிற்கவும், “நான் இங்க வந்த இத்தனை வருஷத்தில, ஒரு நாள் கூட பிறந்தநாள் கொண்டாடினது இல்ல. என்னோட மனசில இருக்கிற ரணம் அப்படி. ஆனா இப்போ முதன் முறையா கொண்டாடனும்னு தோணுது.” என உணர்ந்து சொன்னவன்,

 

மனதிற்குள், “அதுவும் உன்னால தான்.” என சொல்லிக் கொண்டான்.

 

அவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவன் சொல்வதை அவளைக் கேட்க வைத்தது.

 

அவள் அமைதியாக நிற்கவும், “சரி நான் ஜோக்கிங் பண்ண ஆரம்பிக்கிறன்.” என கூறியவன் தன் பாட்டில் ஓட ஆரம்பிக்க,

 

அவன் கூறிய அனைத்தையும் கேட்டு மொத்தமும் குழம்பிப் போய் நின்றவளின் பார்வை, இம்மியளவு கூட அவனை விட்டு விலகவில்லை.

 

அவனும், அவளின் மீது ஒரு கண்ணை வைத்துக் கொண்டே ஓடி முடித்தான்.

 

அவனும், அதன் பிறகு எதுவும் பேசவில்லை. அவளும் எதுவும் பேசவில்லை.

 

அவன் கிளம்ப சொன்னதும் அவளும் சென்று விட, அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன், ஒரு பெரு மூச்சுடன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டான்.

 

அன்று தீரனின் வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது.

 

தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த தமயந்திக்கு, அங்கு வந்தவர்களைப் பார்த்து, உண்மையில் பிரமிப்பு தான் உண்டானது.

 

அந்த இடத்தின் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் ஏன், போலீஸ் அதிகாரிகள், நடிகர்கள்…. என வி.ஐ. பிகளின் பட்டாளமே அங்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர்.

 

அதே நேரம், வெள்ளை நிற வேட்டி, சட்டையுடன் ராஜா போல ரெடியாகி, 

வந்தவர்கள் அனைவரையும் ஒரு புன்னகை உடன் வரவேற்று பேசி அவர்களுக்கு பரிசில்கள் கொடுத்து அனுப்பிக் கொண்டிருந்தான் தீரன்.

 

ஆம், இங்கு வழக்கத்திற்கு மாறாக வாழ்த்த வந்தவர்களுக்கு வாரி வழங்கிக் கொண்டு இருந்தான் அவன்.

 

அப்போது தான், அங்கு வந்திருந்த சிலரின் பேச்சுகள் தமயந்தியின் காதில் விழுந்தது.

 

அதன் மூலம் தான், அவனது படிப்பு, தொழில், பண பலம், ஆளுமை, அவனது உயரம் எல்லாவற்றையும் அவள் அறிந்து  கொண்டாள்.

 

கேட்டவளுக்கு, அவன் முதல் நாள் சொன்னதின் அர்த்தமும் புரிந்தது.

 

“ஓஹ்…. அப்போ நம்ம ஹிட்லர் சார் சாதாரண ஆள் இல்ல. ரொம்ப பெரிய ஆள் தான் போல. இவ்வளவு படிச்சு இருக்கார், பட்டம் வாங்கி இருக்கார்  பணம் கோடிக் கணக்கில வைச்சு இருக்கார்.” என அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் போதே, 

 

அவனைத் தேடி வந்து சேர்ந்தார்கள், டிரஸ்ட் மற்றும் சிறுவர் இல்லங்களை சார்ந்த உறுப்பினர்கள்.

 

வந்தவர்கள் அனைவரும், அவனைப் புகழ்ந்ததோடு, அவனின் தாராள குணத்தையும், அவனின் நல்ல குணத்தையும் பற்றி பக்கம் பக்கமாக பேசித் தள்ளி விட்டனர்.

 

ஒருவர் இருவர் அல்ல. வந்தவர்களில் அநேகமானோர் அவனைப் பற்றி பெருமையாக பேச,

 

தமயந்தி, “இவ்வளவு நல்லவரா இருக்கார். அப்புறம் ஏன் அந்த கொலைகள்…. என்கிட்ட மட்டும் ஏன் இத்தனை கோபம்….” என எண்ணிக் கொண்டே தனது வேலைகளில் ஈடுபட்டாள்.

 

அவளைப் பொறுத்த வரைக்கும், அவன் புரியாத புதிர் தானே.

 

அவளுக்கே தெரியாது, அவளின் முகத்தில் தோன்றும் உணர்வுகளை கவனித்துக் கொண்டு இருந்தான் தீரன்.

 

அடுத்தடுத்த ஆட்கள் வருவதும் போவதுமாக இருக்க, நேரமும் கடந்து கொண்டு இருந்தது.

 

இறுதியாக பதினொரு மணி அளவில், அவனைத் தேடி வரும் நபர்களின் அளவு குறைய,

 

அவன், அடுத்த கட்டமாக வேலையாட்கள் யாவருக்கும், ஒரு மாத சம்பளமும், இரண்டு செட் ட்ரெஸ்களும் இலவசமாக கொடுக்க ஆரம்பித்தான்.

 

அதற்காக எல்லா வேலையாட்களும் அழைக்கப் பட்டு இருந்தனர்.

 

தமயந்திக்கு, நடப்பது அனைத்தும் தெரிந்த போதும், அவள் அந்த இடத்திற்கு செல்லவும் இல்லை, அவனிடம் இருந்து எதனையும் வாங்க விரும்பவும் இல்லை.

 

ஆனால் அவளுக்கு நல்ல ஆடைகள் வழங்குவதற்காகவே ஏற்பாடு செய்த நிகழ்வில், அவளை அழைக்காது விட்டு விடுவானா அவன்?

 

சிவகாமி அம்மாவை அனுப்பி அவளை அழைத்து வர சொன்னான் அவன்.

 

அவரும், “சரிங்க தம்பி.” என கூறி விட்டு,

 

அவளிடம் சென்று, “அம்மாடி தமயந்தி, இங்க வாம்மா. தீரன் தம்பி கூப்பிடுறார்.” என கூறவும்,

 

உடல் இறுகிப் போனவள், 

“இல்லம்மா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் வரல.” என கூறவும், 

 

அவரோ, “சும்மா அடம் பண்ணாம வா தமயந்தி.” என மீண்டும் அழைத்தார். 

 

அவள் அன்று காப்பாற்றிய குழந்தை, அவளின் அன்னை என அனைவரும் அவளை வரும்படி நச்சரிக்க ஆரம்பிக்க,

 

அவர்களின் அன்பான வேண்டுகோளை மறுக்க முடியாது, அவளும் அவர்களுடன் சென்றாள்.

 

அவனோ, அவள் வருவதையே கை கட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தவன்,

 

அவள் அருகில் வரவும், அவளுக்கென பிரத்தியேகமாக எடுத்து வைத்து இருந்த பையையும், பணத்தையும் அவளின் கண்களைப் பார்த்துக் கொண்டே நீட்ட, 

 

அவளுக்கு தான், இப்படி ஒரு இழி நிலை தனக்கு வந்து விட்டதே என்ற எண்ணத்தில் கண் கலங்கி கண்ணீர் எட்டிப் பார்த்தது.

 

அவளும், வேலை செய்து சம்பளம் வாங்கி இருக்கிறாள் தான்.

 

ஆனால் அவை எல்லாமே, அவளின் தகுதிக்கு ஏற்ற வேலைகள், மற்றும் சம்பளம், இப்போது அவள் வாங்குவது தோட்ட வேலையும், பாத்ரூம் கழுவும் வேலையும் செய்ததற்கான சம்பளம் அல்லவா. 

 

அதோடு, அவள் இங்கு ஒரு அடிமை வாழ்க்கை அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

 

பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் எனும் எண்ணம் கொண்ட அவளுக்கு, இப்படி ஒரு நிலை அல்லவா கிடைத்து இருக்கிறது.

 

அவற்றை எல்லாம் ஒரு நொடி எண்ணிப் பார்த்தவளுக்கு, கைகள் நடுங்க ஆரம்பித்தது. 

 

“இப்படி ஒரு பிச்சைப் பணம் வேண்டுமா?” என எண்ணியவளின் கண்களில் இருந்து கட்டுப் பாட்டையும் மீறி கண்ணீர் வழிந்தது.

 

அவளின் ஒவ்வொரு உணர்வுகளையும், அவளது முகம் எனும் கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டு இருந்த தீரனின் மனதும் கசங்கிப் போனது. 

 

அவள் மனம் படும் பாடு அவன் அறியாததா?

 

அவளைப் பட்டென அணைத்து ஆறுதல் கூற வேண்டும் என அவனின் மனம் பர பரத்தாலும், அடக்கிக் கொண்டு, அவளின் கையில் திணிக்கும் வகையில் பையால் கையில் தட்ட,

 

கண்ணீரை உள் இழுத்துக் கொண்டு, ஆடைகள் அடங்கிய பையை மாத்திரம் வாங்கியவள்,

 

பணத்தை வாங்காது, “நீங்கள் ஆசைப்படுறது எல்லாம் வாழ்க்கையில கிடைச்சு வாழ வாழ்த்துக்கள் சார்.” என மென் புன்னகை உடன் மனதார கூறியவள், அங்கிருந்து நகர ஆரம்பிக்க,

 

“ஒரு நிமிஷம் தமயந்தி.” என அவளைத் தடுத்து நிறுத்தியவன்,

அவள் “என்ன?” என்பது போல பார்க்கவும்,

 

“உன்னோட அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. இந்தப் பணத்தையும் வாங்கிக் கொண்டு போ. இதுவும் உனக்குத் தான்.” என கூறவும்,

 

அவனை ஒரு கணம் கூர்ந்து பார்த்து விட்டு, 

 

ஒரு உதட்டு வளைவுடன், ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தமாக,

“உழைக்காத பணம் உடம்பில ஒட்டாது சார்.” என கூறி, விட்டு அங்கிருந்து விரைந்து செல்ல,

 

அவளின் வார்த்தைகளிலும், தன்மான பேச்சிலும், அவன் புருவங்கள் ஒரு முறை உயர்ந்து பின்பு தாழ்ந்தது.

 

அவளின் அந்த செய்கை மூலம், அவனின் மனதின் உச்சத்தில் இடம் பிடித்து இருந்தாள் தமயந்தி.

 

அன்றைய நாள் பொழுது விரைவாக ஓடி முடிய,

 

நட்சத்திரங்கள் கண் சிமிட்ட, நிலா மகள் அவற்றுடன் சேர்ந்து  மகிழ்ந்து குலாவும் அழகான இராப் பொழுதும் வந்து சேர்ந்தது.

 

அந்த இராப் பொழுதில், அனைவருக்குமாக, தீரன் ஒரு டின்னர் பார்ட்டி ஏற்பாடு செய்து இருந்தான்.

 

அவனுக்கு குடி, சிகரெட் என்பவை அறவே பிடிக்காது என்பதால், அவற்றை விடுத்து உணவு வகைகளின் ஒட்டு மொத்த அணி வகுப்பாய் அமைந்து இருந்தது அந்த டின்னெர் பார்ட்டி.

 

அப்படியும் யாரும் மது விருந்து கேட்டால், அவர்களுக்கு அதனை வழங்கும் வகையில், குறித்த பாருடன் சேர்ந்த ஹோட்டல் ஒன்றையும் ஏற்பாடு செய்து இருந்தவன், டின்னர் முடிந்த பின்பு, குடிக்க செல்லலாம் எனவும், அதன் பிறகு,  அங்கேயே தங்கி விட்டு, காலை வேலைக்கு வந்தால் போதும் எனவும் கட்டளை இட்டு இருந்தான்.

 

அவன் சொன்னபடியே தான் அனைத்தும் ஒழுங்கு செய்யப்பட்டும் இருந்தது.

 

தமயந்தி, முதலில் போவது இல்லை என்ற முடிவுடன் தான் இருந்தாள். 

அவளின் எண்ணம் புரிந்தவன் போல,

 

மாலை தீரனே நேரடியாக வந்து அவளை அழைத்து இருந்தான்.

 

 கண்டிப்பாக அவன் வாங்கிக் கொடுத்த உடைகளில் உள்ள ப்ளூ கலர் சேலையை அவள் அணிந்து வர வேண்டும் எனவும் அழுத்தமாக கூறி விட்டு சென்று இருந்தான் அவன்.

 

அவனின் அந்தக் குரலுக்கு மறு பேச்சு ஏது?, ஆகவே, அவளும் அமைதியாக ரெடியாகி பார்ட்டிக்கு சென்றாள்.

 

மயில் வண்ண மெல்லிய வாயில் புடைவையில், ஒப்பனைகள் இன்றி தேவதை போல ரெடியானவள் மனதில், 

 

“எல்லாருக்கும் இப்படி காஸ்ட்லி புடவை தான் வாங்கிக் கொடுத்து இருப்பாரோ நம்ம தாராள பிரபு.” என்ற ஒரு எண்ணம் வந்து போனது.

 

ஒரு நொடி யோசித்தவள், அதனை ஒதுக்கி வைத்து விட்டு, பெரு மூச்சுடன் வெளியே வந்தாள்.

 

அவளுக்காக தான் செலக்ட் செய்த சேலையில் அவள் எப்படி இருப்பாள் என காண ஆவலாக காத்து இருந்த தீரனின் உதடுகள், அவளைக் கண்டதும், 

 

“வாவ்….” என ரகசியமாக உரைத்தது.

 

அந்த நொடி அவனின் மனதில், 

“என்னைத் தவிர ஆண்கள் எல்லாம் பெண்களாகிப் போனால் கூட உன்னைத் தவிர வேறொரு பெண்ணை உச்சி முகர்ந்து பார்ப்பதும் இல்லை….” என்ற வரிகள் ஒலித்தது.

 

அவளோ, தோட்டத்தில் இருந்த அலங்காரங்களை இயல்பான ரசனை உடன் பார்த்தவள் சிவகாமி அம்மாவுடன் சேர்ந்து அங்கிருப்பவற்றை ஒழுங்கு படுத்த ஆரம்பித்தாள்.

 

தீரன் தான், “அவளின் கடைக் கண் பார்வை தனக்கு கிடைக்காதா?” என ஏங்கிப் போனான்.

 

இறுதியில், அவள் தனது பக்கம் திரும்பப் போவது இல்லை என உணர்ந்தவன்,

 

“சரி, பிறகு பார்த்துக் கொள்ளலாம்.” என எண்ணியபடி, அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தான்

.

ஆனாலும் அவனது ஒரு கண் எப்போதும் தமயந்தி மீது தான் இருந்தது.

 

பார்ட்டி முடியும் தருவாயில், தீரனின் மனம், 

 

“ஏதோ தப்பு நடக்கப் போகின்றது.” என அடித்துக் கூற,

 

அவனின் கண்கள் உடனே தேடியது என்னவோ, தமயந்தியைத் தான்.

 

பொதுவாக அனைத்து இடங்களிலும் அவளைத் தேடியவனுக்கு அவள் எங்கும் இல்லை என கண்டு கொண்டதும்,

“சம்திங் ரோங்.” என பல்லைக் கடித்தவன்,

 

சிவகாமி அம்மாவைக் கூப்பிட்டு விசாரிக்க,

 

அவரோ, “இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான், நம்ம குட்டி பாப்பா வந்து தமயந்தியை யாரோ கூப்பிடுறாங்கன்னு சொல்லி கூட்டிக் கிட்டுப் போனா தம்பி.” என கூறினார்.

 

தீரனோ, “என்னம்மா சொல்றீங்க?, எந்தப் பாப்பாம்மா?” என பதட்டமாக கேட்க,

 

அவரோ, “அது தான் அன்னைக்கு நம்ம தமயந்தி காப்பாத்திச்சே…. அந்தக் குழந்தை தான்.” என அவர் கூறவும்,

 

அவனும், “சரி அம்மா. ஆனா ஏதோ தப்பா இருக்கிற மாதிரி மனசு சொல்லுது. இப்போ அந்தப் பாப்பா எங்கம்மா?” என கேட்டான்.

 

அவரும், பதறிப் போய் குறித்த குழந்தையைத் தேட ஆரம்பித்தார்.

தீரனும் இன்னொரு புறம் தேட ஆரம்பித்தான்.

 

இறுதியில், வாயில் அருகே விளையாடிக் கொண்டு இருந்த குழந்தையைக் கண்டு பிடித்தவன்,

வேகமாக சென்று குழந்தையிடம் விசாரிக்க,

 

குழந்தையோ, “இப்போ தான் வெளில ஒரு அங்கிள் கூட பேசப் போனாங்க தமயந்தி அக்கா. அக்காவ, அந்த அங்கிள் கூட்டிக் கொண்டு வர சொன்னாரு.” என கூற,

 

ஓடிப் போய் வெளியில் பார்த்தவனின் கண்களுக்கு எதுவுமே, யாருமே மாட்டவில்லை. 

 

இன்னும் சற்று தள்ளி நடந்தவனின் கால்களுக்கு அடியில், அவளின் புடவையின் கிழிந்த துண்டு ஒன்று பறந்து வந்து விழுந்தது.

 

அதனைக் கண்டவன், முற்றிலும் தலை சுற்றிப் போனான்.

 

அந்த நொடி, “தன்னவளுக்கு ஏதும் ஆகி விடுமோ….” என அவன் துடித்த துடிப்பிலும், கண்களில் இருந்து உருண்டு விழுந்த இரண்டு துளிக் கண்ணீரிலும், அவனின் மனம் உணர்ந்தது, தமயந்தி மீது தான் கொண்ட தீராக் காதலை.

 

அவன் காதலை உணர்ந்து கொண்டான் தான்.

 

ஆனால் உணர்ந்த காதலை உரைக்க அவள் வேணுமே. 

 

உடனே, மீண்டும் குழந்தையிடம் ஓடி வந்தவன், “ஓஹ் மை கோட்…. யாரும்மா அந்த அங்கிள்?” என கேட்டான்.

 

தீரன் தன்னவளைக் காப்பானா?

அவனின் காதல் தமயந்திக்கு புரியுமா?

 

இருவரும் இணை சேரும் நாள் வருமா?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

கண்டிப்பா உங்க லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ்..

 

கதையில் இனி வரும் எபிகளில் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ ஆரம்பிக்கும்.

 

இந்த எபில தீரனைப் பத்தி முழுக்க சொல்லியாச்சு,  அடுத்தடுத்த எபிகள் அதிரடியா வரும்..

 

 அடுத்த எபி வந்தாச்சு மக்காஸ்.

 

பெரிய எபி போட்டு இருக்கேன்.. லைக்ஸ் ப்ளீஸ் 😍😍

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!