Episode – 20.
குழந்தையும், சற்று நேரம் யோசித்து விட்டு, “அவரு…. கருப்பு…. , குண்டு…. இல்ல…. இல்ல…. கொஞ்சம் இப்படி இருப்பார். இல்ல…. இல்ல…. அப்படி இருப்பார்.” என குழப்பிப் பேச,
ஒரு நிமிடம், தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டவன்,
அடுத்த நொடி, பாப்பாவை தூக்கிக் கொண்டு,
விறு விறுவென, தனது அலுவலக அறைக்குள் நுழைந்து கொண்டான்.
நுழைந்தவன் முதல் வேலையாக அங்கிருந்த அனைத்து பைல்களையும் தூக்கி மேசையில் போட்டான்.
அவனைத் தொடர்ந்து, வேலையாட்கள் அனைவரும் ஓடி வந்து அறை வாசலில் கூடி நின்றனர்.
அவர்களுக்கு அவனின் அறையின் உள்ளே செல்ல அனுமதி இல்லை அல்லவா.
அவனோ, அந்த பைல்களை எல்லாம் புரட்டிப் போட்டு,
அதிலே உள்ள தனது வீட்டுக் காவலாளிகளின் டீடெயில்ஸ்ற்கான பைலை எடுத்து அதில் உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக அந்தக் குழந்தையிடம் காட்ட,
அந்தக் குழந்தையும், தலையை ஆட்டி ஒவ்வொன்றாகப் பார்த்து, மீண்டும் மேலேயும், கீழேயும் பார்த்து, பக்கத்தை திருப்பி பார்த்து என எல்லாம் செய்து, இல்லை என தலையை ஆட்டிக் கொண்டது.
அவனுக்கோ, ஒவ்வொரு பக்கத்தையும் திருப்பும் போது, அவ்வளவு பதட்டம்,
“சே…. என்னது இது?, நேரம் வேற போய்க் கொண்டு இருக்கு?, தமயந்திய தூக்கினது யாருன்னு தெரியலயே.” என அவன் மனதிற்குள் புலம்பிக் கொண்டு அடுத்த பக்கத்தை திருப்ப,
அந்தக் குழந்தையோ, அதில் இருந்த நபரின் போட்டோவை கழுத்தைத் திருப்பி அங்கும் இங்கும் பார்த்து விட்டு,
சட்டென விழி விரித்துப் பார்த்தவாறு , அவசரமாக தீரனின் கையைப் பற்றி,
“இந்த…. அங்கிள் தான்…. இவரு தான் சாக்லேட் கொடுத்து, தமயந்தி ஆன்ட்டிய, தன்கிட்ட கூட்டிக் கொண்டு வர சொன்னாரு.” என மழலை மொழியில் கூற,
ஒரு கணம் உள்ளங் கைகளை மூடித் திறந்தவன், “ நம்பிக்கைத் துரோகி இவனை….” என மனதிற்குள் எண்ணிக் கொண்டு,
குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியில் வந்தவன்,
குழந்தையின் கன்னத்தில் முத்தம் இட்டு,
“நீங்க போய் விளையாடுங்க செல்லம்.” என கூறி சிவகாமி அம்மாவிடம் கொடுக்க,
அவரோ, “தம்பி…. தமயந்திக்கு?” என சற்று கவலையாக கேட்க,
“ஒன்னும் ஆகாதும்மா, எதுவும் ஆகவும் நான் விட மாட்டன்.” என அழுத்தமாக கூறியவன்,
தனது ஆட்களை வெளியில் வருமாறு கண் காட்டி விட்டு, தோட்டத்தில் சென்று உடல் இறுக நின்றான்.
அவர்களும், அவனின் பின்னாகவே வந்து “சொல்லுங்க அண்ணா….” என கூற,
அங்கிருக்கும் அனைவரையும் கூர்ந்து பார்த்தவன்,
“உங்க ஒவ்வொருத்தர் மேலயும் நான் அசைக்க முடியாத நம்பிக்கை வைச்சு இருந்தேன். ஆனா உங்கள்ல ஒருத்தன், அந்த நம்பிக்கைய கேள்விக் குறியாக்கிட்டுப் போய்ட்டான். நீங்களே யோசிச்சுச் சொல்லுங்க அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கணும்னு.” என கூறியவன் அந்த துரோகியின் பெயரையும் கூறி விட்டு,
அவர்கள் அனைவரையும் மீண்டும் ஒரு பார்வை பார்த்து விட்டு,
தமயந்தியைக் காக்க புறப்பட,
“அண்ணா நாங்களும் வர்றோம்.” என அவனுடன் கிளம்ப எத்தனித்தனர் அவனது விசுவாசிகள்.
அவர்களை கை நீட்டித் தடுத்தவன், “இது என்னோட சொந்த பிரச்சனை.
இத நானே நேரடியா டீல் பண்ணிக்கிறன்.” என கூறியவனின் மனது அடித்துக் கூறியதுமே,
தமயந்தி அவனுக்கு மட்டுமே சொந்தம் என அவன் முடிவு எடுத்து பல விநாடிகள் கடந்து விட்டது என்று.
அடுத்த நொடி, தான் புக் பண்ணிய அந்த பாருக்கு, புயல் என கிளம்பிச் சென்றவனின் மனதில், போகும் பாதை முழுவதும், தமயந்தியின் எண்ணமே வியாபித்து இருந்தது.
“சே…. கொஞ்சமாவது யோசிக்க வேண்டாம். யாராவது ஏதும் சொன்னா…. உடனே நம்பி போறதா…. என்கிட்ட மட்டும் எகிறி எகிறிப் பேசுவா. மத்தவங்க ஏதும் சொன்னா மட்டும் மூளைய அடகு வைச்சிடுவா போல இருக்கட்டும். முதல்ல உன்ன காப்பாத்திட்டு, அப்புறம் வைச்சுக்கிறன் பொண்டாட்டி.” என இயல்பாக, அவளை பொண்டாட்டி என தன் வாயாலேயே முதல் முறை கூறி இருந்தான் தீரன்.
குறித்த ஹோட்டலை அடைந்தவன், அவசரமாக காரை அந்த ஹோட்டலின் வாசலில் நிறுத்த,
காவலாளி, ஒருவன் ஓடி வந்து,
“சார், இங்க எல்லாம் கார நிறுத்தக் கூடாது.” என அவசரமாக கூற,
அவனோ, அந்தக் காவலாளியை நோக்கி ஒரு பார்வையை செலுத்தியவன், “கால் யுவர் மேனேஜர் இம்மிடீயட்லி.” என கர்ஜித்தான்.
அவனோ, தீரனின் தோரணையில் பயந்து போய்,
“சார், ஒரு நிமிஷம்.” என பவ்வியமாக கூறி விட்டு, மேனேஜரைத் தேடி ஓடினான்.
மனேஜர் வரும் வரைக்கும் பொறுமை இல்லாது, அவன் ஹோட்டலின் உட்புறம் செல்ல,
அதற்குள், “யாரு அது என்ன வர சொன்னது?” என சற்று எரிச்சலாக கேட்டபடி வந்த மேனேஜர் அங்கு ரௌத்திரமாக நின்று கொண்டு இருந்த தீரனைக் கண்டதும்,
அப்படியே ஆப் ஆனதோடு,
“சார்…. நீங்க எங்க இங்க…. பார்ட்டி எல்லாம் நல்லாப் போகுது சார். எந்தப் பிரச்சனையும் இல்ல.” என புன்னகை உடன் கூற,
“இப்போ நான் அத பத்திக் கேட்க வரல. என்னோட ஆட்கள்ல எத்தனை பேர் இங்க ரூம் புக் பண்ணி இருக்காங்க. அவங்க நேம்ஸ், ரூம் நம்பர்ஸ்…. எல்லா டீடெயில்ஸ்சும் எனக்கு உடனே வேணும்.” என அவன் கேட்கவும்,
அவன் அவசியம் இல்லாது எதுவும் கேட்க மாட்டான் என்பதைப் புரிந்து கொண்டவரும்,
“நீங்களே நேர்ல வந்து இருக்கீங்கன்னா கண்டிப்பா ஏதும் முக்கியமான விஷயமாத் தான் இருக்கும். நீங்க கேட்ட மொத்த தகவலும் தர சொல்றேன் சார். ஆனா, எங்க ஹோட்டல் பத்தி….” என அவர் இழுக்க,
“ம்ப்ச்…. துளி அளவு விஷயம் கூட வெளில போகாது. உங்க ஹோட்டல் நேமும் வெளில போகாது. சரியா?, இப்போ எனக்கு தேவையான தகவல கொடுங்க சீக்கிரம்.” என அவன் பல்லைக் கடிக்க,
உடனே, அவன் கேட்ட தகவல்களை கொண்டு வந்து கொடுத்தனர்.
அதிலே இருந்த அந்தக் கயவனின் பெயரையும், அவனின் ரூம் நம்பரையும் பார்த்தவன்,
“இவனோட ரூம் கீ எங்க?” என கேட்க,
ரீசப்சனில் இருந்த பெண்ணோ,
“இவரு இங்க வரும் போது ஒரு பொண்னோட வந்தாரு. அவங்க மயக்கமா இருந்தாங்க. அவங்க மேல மது வாடை வீசிச்சு. அவர் அவங்கள தன்னோட கேர்ள் பிரண்ட்ன்னும், பார்ட்டில கொஞ்சம் ஓவரா குடிச்சிட்டாங்க, அதனால அவங்கள ரூமில படுக்கவைக்கணும் அப்படின்னும் சொல்லி, கீ கேட்டாங்க. எனக்கு சந்தேகமா இருந்துது. ஆனா நேரடியா கஸ்டமர பகைக்க முடியாது. சோ, நானும் அவங்க கூட போய், அந்தப் பொண்ண படுக்க வைச்சிட்டு வந்தன்.”
“அவங்க ரொம்ப அழகா, ஹோம்லியா இருந்தாங்க, ஆனா அவங்க ரொம்ப குடிச்சு இருந்தாங்க போல, அவங்க மேல ஒரே மது வாடை வீசிச்சு சார்.” என முகத்தை சற்று சுளித்தபடி சொல்ல, கை முஷ்டிகள் இறுகி, முகம் கறுத்துப் போனவன், தனது போனில் இருந்த தமயந்தியின் படத்தைக் காட்டி,
“இது தான் நீங்க சொன்ன பொண்ணா?” என கேட்டான்.
அவன் இன்று தான் நைட் பார்ட்டியில் அவளுக்கு தெரியாது அவளை ஒரு போட்டோ எடுத்து இருந்தான்.
முதன் முதலாக தனக்கும் ஒரு பெண் மீது ஆசை வந்து சேலை வாங்கி கொடுத்து இருக்கிறோம். அந்த நினைவை பொக்கிஷமாக சேமித்து வைக்க வேண்டும் என எண்ணி அவன் அவளை போட்டோ எடுத்திருந்தான்.
இப்போது அந்த போட்டோவைத் தான் அவன் காண்பித்தான்.
அந்தப் பெண்ணும், “ஆமா சார். இந்தப் பொண்ணு தான். இதே சேலையோட தான் இங்கயும் வந்தாங்க.” என கொஞ்சம் இளப்பம் நிறைந்த குரலில் கூற,
குறித்த பெண்ணைக் கூர்ந்து பார்த்தவன்,
“எத வைச்சு நீங்க அவங்க குடிச்சு இருந்தாங்கன்னு முடிவு பண்ணீங்க மிஸ்?” என கேட்க,
அவனின் தோரணையில் பயந்து போனாலும்,குரலை செருமிக் கொண்டு,
“அவங்க…. மேல…. மது வாசனை….” என மீண்டும் அந்தப் பெண் ஆரம்பிக்கவும்,
“ம்ப்ச்….உங்க மேல மதுவ சும்மா தெளிச்சா கூட தான் மது வாடை வீசும். அப்போ நீங்க என்ன குடிகாரியா மிஸ்?” என அவன் அமர்த்தலாக கேட்கவும்,
குறித்த பெண் வாயடைத்துப் போக,
அந்தப் பெண்ணை நோக்கி ஒற்றை விரலை நீட்டியவன்,
“நான் அந்தப் பொண்ண கூட்டிக் கொண்டு வரும் வரைக்கும், இந்த இடத்திலேயே நிற்கணும். அப்புறம் தெரியும் யார் சரி?, யார் தப்புன்னு. என் தமயந்தி தப்பானவ இல்லன்னு நான் நிரூபிக்கும் வரைக்கும், இந்த இடத்தை விட்டு யாரும் அசையக் கூடாது ரைட்.” என அழுத்தமாக கூறியவன்,
“அந்தக ஆள், மறுபடியும் அந்த ரூமுக்குள்ள போனானா?, அப்புறம் என்ன ஆச்சு?” என கேட்டான்.
அவன் என் தமயந்தி என சொன்னதிலேயே, அந்தப் பெண்ணுக்கு, தமயந்தி அவனுக்கு எவ்வளவு முக்கியமானவள் என்பது புரிந்து போக,
“இல்ல, சார், அவங்கள கட்டில்ல படுக்க வைச்சிட்டு, அவரும் வெளில வந்துட்டார்.”
“நைட்டுக்கு திரும்ப கீ வேணும். அதுவரைக்கும் பத்திரமா வைச்சு இருக்கும் படி சொல்லிட்டுப் போனார்.” என அந்தப் பெண் கூறி முடித்து விட்டு,
“ஆனா இன்னும் அவர் திரும்ப வந்து கீயைக் கேட்கல. ரூமுல அந்தப் பொண்ணு மட்டும் தான் தனியா இருக்காங்க.” என கூறவும்,
“ஓஹ்…. ஓகே.” என ஒரு பெரு மூச்சுடன் கூறியவன், ஒரு வித நிம்மதி உடன், உடனடியாக கீயை வாங்கிக் கொண்டு அந்த அறை நோக்கி விரைந்தான்.
அதே நேரம், அறைக்குள் மயக்கம் தெளிந்து எழுந்த தமயந்தி,
சற்று நேரம் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
அவளுக்கு, அப்போது தான், தான் இருக்கும் இடம் புரிய, தலையைத் தட்டி நடந்தவற்றை யோசித்துப் பார்த்தாள்.
தன்னை யாரோ ஒருவர் அழைப்பதாக கூறவும், வெளியில் வந்தவள்,
சுற்றும் முற்றும் தேடிப் பார்த்ததும், அப்போது, தீரனிடம் வேலை செய்யும் ஒருத்தன் வந்து,
“நான் தான் உன்னைக் கூப்பிட்டேன் பேபி.” என ஒரு மாதிரிக் குரலில் கூறியதும்,
அவனின் செய்கையில் அருவெறுத்துப் போய், தான் அவனிடம் இருந்து விலகி வந்ததும், அவனும் விடாது துரத்தியதும், அவனிடம் முந்தானை சிக்கி கிழிந்ததும், அப்போதும் விடாது பலவந்தப் படுத்தி, மூக்கில் ஒரு துணியை வைத்து அழுத்தி காரில் ஏற்றியதும் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வர
பதறிப் போனவள்,
தன்னைத் தானே செக் பண்ணிப் பார்த்து விட்டு, எதுவும் ஆகவில்லை என்றதும்,
ஒரு பெரு மூச்சுடன், தலை வலி, தலை சுற்றல் என எதையும் பொருட் படுத்தாது, மெதுவாக எழுந்து
தனது மன தைரியத்தை மீட்டு எடுத்துக் கொண்டு,
“அந்தப் பொறுக்கி வர முதல் இங்க இருந்து தப்பியாகணும்.” என எண்ணிக் கொண்டு, ஒத்துழைக்க மறுத்த கால்களை, சமாளித்து எடுத்து வைத்து, ஒருவாறு வாஷ் ரூமுக்குள் சென்று நீரினால் முகத்தை அடித்துக் கழுவினாள்.
அப்போது தான் சற்று தெளிவாக இருப்பதைப் போல உணர்ந்தவள்,
முகத்தை சேலை முந்தானையால் துடைக்க எண்ணி முகத்தின் அருகே கொண்டு வரும் போது தான், சேலையில் வீசும் மது வாடையைக் கண்டு கொண்டாள்.
அந்த நாற்றம் அவளின் குடலைப் பிரட்ட, வேறு வழி இல்லாது,
தன்னை சமாளித்துக் கொண்டு,
முதல்ல இங்க இருந்து போகணும் என எண்ணி, வேகமாக வந்து கதவின் தாழை பல முறை இழுத்துப் பார்த்து விட்டு,
முடியாது போகவே, “ஹெல்ப்…. ஹெல்ப்….” என கத்தியவள்,
முடியாது சோர்ந்து போகும் போது தான், சரியாக, அவளின் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் தீரன்.
கதவு திறக்கும் ஓசையில், அந்தக் கயவன் தான் மறுபடியும் வருகிறானோ என எண்ணிப் பயந்து போனவள்,
அவனை அடிக்கும் நோக்குடன், அலங்காரத்திற்காக வைக்கப்பட்டு இருந்த பூச்சாடியை கையில் எடுத்து வைத்து இருந்தாள்.
அவளுக்கு முன்ன பின்னே, அடித்துப் பழக்கம் இருந்தால் தானே.
மனதிற்குள், “கடவுளே, ஒரே அடி தான், அவன் மண்டை பிளக்கணும். என்ன நீ தான் காப்பாத்தணும்.” என வேண்டிக் கொண்டு கண்ணை மூடியபடி, சாடியை ஓங்கி இருந்தாள்.
தீரனோ, உள்ளே போகும் போதே,
“ஒரு வேள கண் விழிச்சு இருந்தான்னா. கண்டிப்பா, அடிக்க ரெடியாத் தான் இருப்பா.” என எண்ணியபடி கொஞ்சம் அலேர்ட் மோடில் சென்றதால், அவனின் தலை, கை கால்களில் அடி படாது தப்பி விட்டான்.
அவள் ஓங்கும் போது, அதனை எதிர் பார்த்தவன் போல பிடித்து தடுத்தவன்,
“ஹே…. ரிலாக்ஸ் மதி, இது நான் தீரன்.” எனவும் கூறியிருந்தான்.
(இந்த ரணகளத்திலயும், சாருக்கு ஒரு கிளு கிளுப்பு மக்காஸ். தமயந்திய சுருக்கி மதி ஆக்கிட்டார்.)
அவளோ, அவனது குரலில் கண்களைத் திறந்தவள், அவனைக் கண்டதும், தெய்வத்தைக் கண்டது போல,
கைகளில் இருந்த சாடியை கீழே போட்டு விட்டு, அவனைப் பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.
அவளின் செய்கையில் ஒரு கணம் உடல் இறுகிப் பின்பு தளர்ந்தவனுக்கு, அவளின் உணர்வுகள் நன்றாகவே புரிந்தது.
அவளோ, அவனின் மார்பில் சாய்ந்து கொண்டு, அழ, அவளை சற்று நேரம் அழ விட்டவன், அவளின் அழுகை மேலும் அதிகரிக்கவும்,
“ஸ்ஸ்ஸ்…. போதும் மதி நீ அழுதது. இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே அழுது கொண்டு இருக்கப் போறாய்?” என கேட்கவும்,
அவள் தன் அழுகையை அடக்கிக் கொண்டு, மெதுவாக அவனிடம் இருந்து விலகி நின்றாள்.
தீரனோ, அவளின் தலையை மென்மையாக வருடி விட்டு, அவளின் நெற்றியில் புரண்ட கூந்தலை எடுத்து விட்டவன்,
“இப்போ சொல்லு மதி, என்ன நடந்தது?” என கேட்க,
ஒரு கேவலுடன், நடந்த அனைத்தையும் கூறி முடித்தவள்,
“ஆனா இந்த மது வாடை…. என் மேல…. எப்படின்னு தெரியல.” என கண் கலங்கிக் கூற,
அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன்,
“அது எப்படி வந்துதுன்னு எனக்கு தெரியும் மதி, உன்ன இந்த ரூமில கொண்டு வந்து ஈஸியா சேர்க்க, நீ குடிச்சிருக்காய்னு சொல்றதுக்காக அந்தப் பொறுக்கி, நீ மயங்கின உடனே, உன் மேல மதுவை ஊத்தி இருக்கான். இது தான் நடந்து இருக்கு.” என கூற,
அவனை அதிர்ந்தபடி நிமிர்ந்து பார்த்தவள்,
“அப்போ என்ன பத்தி எல்லாரும்…. என்ன நினைச்சு இருப்பாங்க. நான் குடிகாரி…. கெட்டவ…. ஒழுக்கம் இல்லாதவ….” என அவள் மீண்டும் கைகளில் முகம் புதைத்து அழ,
“என்ன மதி இது?, இதுக்கெல்லாம் போய் அழுறதா?, உன்ன யாரும் தப்பா பேச நான் விட்டுடுவனா?, என்ன மீறி எவனும் உன்ன ஒரு வார்த்த தப்பா பேச முடியுமாடி?” என அவளை இறுக அணைத்துக் கொள்ள,
அவளுக்கு அந்த நேரம், அவன் தன்னைக் கடத்தியவன், தன்னை வருத்தியவன், கேவலப் படுத்தியவன், அடிமை போல நடத்தியவன்…. என்பது எல்லாம் மறந்து போனது.
தன்னைக் காக்க வந்தவன், தன் துயர் துடைக்க வந்தவன், தனது மானம் காக்க வந்த ஆபத்பாந்தவன் என்ற எண்ணங்கள் தான் மேலோங்கி நின்றது.
அவள் இருந்த மன நிலைக்கு, அவனின் மதி என்ற அழைப்பும் அவளது கருத்தில் பதியவில்லை.
அவனின் அணைப்பும் கருத்தில் படவில்லை.
அவனோ, “எல்லாம் நான் பார்த்துகிறன் மதி. இன்னைக்கு மட்டும் இல்ல. இனி உனக்கு வரப் போற எல்லாக் கஷ்டத்திற்கும் முற்றுப்புள்ளி நான் தான் வைப்பன். உன்ன விட இந்த உலகத்தில எனக்கு எதுவுமே முக்கியம் இல்லடி.” என முணு முணுத்தவன்,
அவளை அழைத்துக் கொண்டு, வெளியே வந்தான்.
அவளோ, “பயமா இருக்கு தீரன்.” என கூற,
அவளை ஆழ்ந்து பார்த்தவன், “என் கண்ணைப் பாரு மதி.” என அழுத்திக் கூற,
அவளும் கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
அவளின் முகத்தை இரு கைகளிலும் தாங்கிக் கொண்டவன்,
“நாம தப்பு செய்யலன்னா எந்தக் கொம்பன் வந்தாலும் எதிர்த்து நிற்கப் பழகணும், தைரியமா நிற்கப் பழகணும். மத்தவங்க முன்னாடி தலை நிமிர்ந்து நிற்கணும். உன் கூட நான் இருக்கேன். எது வந்தாலும் பார்த்துக்கலாம் ஓகேவா?” என கூற,
அவனின் வார்த்தைகளும், கண்களும் சொன்ன செய்தியில் அவளுக்குள் புதுத் தைரியம் உருவாக, அவனின் கண் அசைவுக்கு ஏற்ப அவளும் தலை அசைத்தாள்.
அவனும், “குட் மதி.”என கூறியவன், அவளின் கைகளைப் பற்றியபடியே, அனைவரின் முன்பாகவும் அழைத்து வந்து,
நடந்த அனைத்து உண்மைகளையும், தமயந்தியின் வாய் மூலமே கூற வைத்தான்.
அனைவரும் அதனைக் கேட்டு அதிர்ந்து போக,
ரீசப்சனில் இருந்த குறித்த பெண்ணவளோ, தன் பிழை உணர்ந்து, தமயந்தியிடம் மன்னிப்புக் கேட்டாள்.
அந்த நொடி அந்தப் பெண்ணை நோக்கி ஒரு கெத்தான பார்வையை வீசினான் தீரன்.
அடுத்து, அவளை அங்கேயே அமர வைத்தவன், அவளுக்கு குடிக்க ஜூஸ் கொண்டு வந்து கொடுத்து விட்டு,
“எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. முடிச்சிட்டு வரேன்.” என கூறியவன்,
முழுக் கோபத்தையும் குத்தகைக்கு எடுத்தது போல, பார் இருக்கும் இடத்திற்கு சென்றவன்,
அங்கு குடித்துக் கொண்டு இருந்த நடந்தவற்றுக்கு காரணமானவனைப் பிடித்து அடித்து துவைத்தான்.
அவனைத் தடுக்கும் உரிமை அங்கு யாருக்கும் இல்லையே.
அதோடு அவனின் கோபம் பற்றி அறிந்த அவனின் ஆட்கள் யாருமே அவனுக்கு அருகில் செல்ல முன் வரவில்லை.
அவனின் அதீத கோபத்தைக் கண்டு அவர்களுக்கே பயம் வந்தது.
ஒரு கட்டத்தில் அடித்தே குறித்த நபரின் உயிரை அவன் எடுத்து விடுவான் போல என எண்ணியவர்கள்,
“பாஸ்…. அண்ணா…. ப்ளீஸ்.” என ஆளுக்கு ஒரு பக்கமாய் வந்து அவனைத் தடுக்க,
அவனும், அந்த நபரின் முடியைப் பிடித்து, அவனை நிமிர்த்தியவன், பாதி மயக்கத்திலும், வலியிலும் கண் சொருகிப் போய் பார்த்தவனை,
“உனக்கு என்ன தைரியம் இருந்தா…. என் வீட்டில இருந்து கொண்டு இப்படி ஒரு கேவலமான செயல செய்து இருப்பாய்?, அதுவும் மதி மேல கை வைச்சு இருக்காய்…. உன்ன….” என மீண்டும் அடிக்கப் போனவன்,
அந்த நபர், “வேண்டாம்…. வேண்டாம். ப்ளீஸ். இதுக்கு மேல அடி…. க்க…. வேணாம். நான் அவங்க கிட்ட மன்னிப்புக் கேட்கிறேன், தெரியாம பண்ணிட்டேன்.” என கை எடுத்துக் கும்பிட,
“நீ தெரியாம பண்ணீயாடா?” என மீண்டும் அடித்து விட்டு,
அவனை இழுத்துக் கொண்டு சென்று தமயந்தியின் முன்னால் மண்டியிட வைத்தவன்,
“ம்ம்ம்….”என உறும, அவனும் தான் மாத்திரம் தான் எல்லாவற்றுக்கும் காரணம் என கூறி,
மன்னிப்பு கேட்டு விட்டு, அப்படியே மயங்கி சுருண்டு விழ, அவனை ஹாஸ்பிட்டலில் சேர்க்க சொன்னவன்,
அவன் குணமானதும், போலீஸ்சில் ஒப்படைக்கும் படி சொன்னான்.
அதன் பின்பு, அங்கிருக்கும் அனைவரிடமும் இருந்து விடை பெற்றவன், அந்த ஹோட்டல் மேனேஜருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லி விட்டு,
உரிமையுடன் தமயந்தியின் கையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.
கார்க் கதவைத் திறந்து, தானே அவளைக் காரில் ஏற்றியவன், மறு புறம் வந்து ஏறி அமர்ந்து,
தமயந்தியைத் திரும்பிப் பார்க்க,
அவளோ, கண் மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இருந்தாள்.
அவனும் பெரு மூச்சுடன் அங்கிருந்து காரைக் கிளப்பி இருந்தான்.
கொஞ்ச தூரம் போனதும் வண்டியை வீதியின் ஓரமாக நிறுத்தியவன்,
சற்று நேரம், தமயந்தியையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவளோ, வண்டி நின்றது கூடப் புரியாது அப்படியே அமர்ந்து இருக்க,
“ம்ப்ச்….” என்ற சலிப்புடன், அவளின் தோளில் மெதுவாக கை வைத்தான் அவன்.
அவனது செய்கையில் பதறி எழுந்தவள், அவனைத் திகைப்புடன் பார்க்க,
“இன்னுமா நீ அந்த நிகழ்வில இருந்து வெளி வரல. உன் மேல தப்பு இல்லாம நடந்த விஷயத்த…. இப்படி தலைக்குள்ள போட்டு குழப்பிக்கிறீயே. நீ படிச்ச பொண்ணு தானே?”
என அவன் சற்று அதட்டும் குரலில் கேட்க,
அவனை கண்கள் கலங்க பார்த்தவள்,
“நீங்க ஈஸியா சொல்லிட்டீங்க?, ஆனா என்னால முடியல தீரன். என்ன தான் படிச்ச பொண்ணா இருந்தாலும், கற்பு, மானம்னு வந்தா. அது தான் முக்கியமா தோணுது. இந்த விஷயத்தில நானும் சராசரிப் பொண்ணு தான். என்னால சட்டுன்னு அதில இருந்து வெளிவர முடியல.”
“நீங்க மட்டும் சரியான நேரத்துக்கு வரலன்னா என் நிலைமைய பத்தி கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அத நினைச்சாலே எனக்கு நடுங்குது.” என கூறியவளின் நிலைமை அவனுக்கு நன்கு புரிந்தாலும்,
அவளை அப்படியே விட்டால் அவள் தனக்குள் ஒடுங்கிப் போய் விடுவாள் என எண்ணியவன்,
“அப்போ, இப்படியே அழுதுக் கிட்டே இருக்கப் போறீயா?, நடந்த நிகழ்வு கசப்பான சம்பவமாக இருந்தாலும், உனக்கு அதில இருந்து ஒரு அனுபவப் பாடம் கிடைச்சு இருக்கு. அத மட்டும் நினைச்சுப் பாரு. இனி மேல் இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தா…. அத எப்படி ஹாண்டில் பண்ணனும்னு உனக்கு நல்லாவே தெரியும். இத மட்டும் தான் நீ நினைக்கணுமே தவிர,வேற தேவை இல்லாதது எல்லாம் நினைக்கவே கூடாது. கொஞ்சம் யோசிச்சுப் பாரு மதி.” என அவன் எடுத்துக் கூறவும்,
அவளும் புரிந்து கொண்டு, “ஓகே தீரன். நானும் முயற்சி பண்றேன்.” என சற்று தெளிவான முகத்துடன் கூற,
ஒவ்வொரு முறையும், அவள் தீரன் என தனது பெயரை உச்சரிக்கும் போதும், உள்ளுக்குள் ஆயிரம் மத்தாப்பு பூப்பது போல உணர்ந்தவன், அவள் தானாக விரும்பி அழைக்கவில்லை என்பதையும் நன்கு அறிந்தே இருந்தான்.
அவள் ஓரளவுக்கு தன்னை சமன் செய்து கொண்டதும், வண்டியை எடுத்தவன்,
அவளை வீட்டுக்கு அழைத்து வந்தான்.
வீட்டுக்கு வந்தவளை முதலில் ஓடி வந்து அணைத்துக் கொண்டார் சிவகாமி அம்மா.
அவரின் பதட்டம் கண்டு மென் புன்னகை புரிந்தவள்,
“எனக்கு ஒண்ணும் ஆகல அம்மா. நான் நல்லாத் தான் இருக்கேன்.” என கூறியவள்,
அனைவருக்கும் அதையே கூறினாள்.
“தீரன் சார் தான், சரியான நேரத்துக்கு வந்து என்னைக் காப்பாத்தினார். அவருக்கு தான், நான் நன்றி சொல்லணும்.” என சேர்த்துக் கூறவும் அவள் மறக்கவில்லை.
அவள், “தீரன் சார்.” என கூறவும்,
தீரன் மனதிற்குள், “ஆஹ்…. மேடம், பழையபடி போர்முக்கு வந்துட்டாங்க போல.” என எண்ணிக் கொண்டான்.
அதன் பிறகு, அனைவருடன் சேர்ந்து உணவருந்தியவள், அவரவர் தங்கள் இடத்திற்கு செல்லவும்,
தீரனின் முன்பாக வந்து நின்று, “குட் நைட் சார்.நீங்க செய்த உதவிக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் போதாது. ஆனா இப்போ என்னால சொல்லக் கூடிய ஒரே வார்த்தை அது மட்டும் தான்.” என கூறியவள்,
அங்கிருந்து போக எத்தனிக்க, “ஒரு நிமிஷம்.” என குரலை செருமியவன்,
“இனி மேல் நீ தனியா தங்க வேண்டாம். நம்ம வீட்டில….” என ஆரம்பித்து விட்டு,
தலையைக் கோதியவன், “என் வீட்டில தங்கிக்கோ.”என திருத்திக் கூற,
அவன் கூறிய செய்தியில் சற்று நேரம் பேச்சு மறந்து நின்றாள் தமயந்தி.
அவன் கூறியதை அவள் ஏற்றுக் கொள்வாளா?
அவளின் மனதில் அவன் தன் தடத்தை பதிப்பானா?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
கண்டிப்பா உங்க லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ்..
கதையில் இனி வரும் எபிகளில் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ ஆரம்பிக்கும்.
அடுத்த எபி வந்தாச்சு மக்காஸ்.
ரொம்ப பெரிய எபி போட்டு இருக்கேன்.. லைக்ஸ் ப்ளீஸ் மக்காஸ்.😍😍😍 இரண்டாயிரம் வேர்ட்ஸ்..
நிறைய பேர் கதை படிக்கிறீங்க. ஆனா முப்பது லைக்ஸ் கேட்டா வர மாட்டேங்குது. இனி…. லைக்ஸ் வரலன்னா கதையை நேரடியா அமேசான்ல போட்டுடுவன் மக்காஸ்…
Super sis 💞
நன்றி நன்றிம்மா 🥰🥰🥰❤❤❤
சீக்கிரம் அடுத்த எபி கொடுடா.
வந்தாச்சு வந்தாச்சும்மா 😍😍😍😍😍