இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 22

4.7
(18)

Episode – 22

 

கோடீஸ்வரனோ, “எதுக்கு இப்போ என்னைக் கூப்பிடுறார்னே தெரியலயே. ஒரு வேள, நம்ம அபர்ணா பொண்ணு ஏதும் தப்பு பண்ணிடிச்சா, இல்ல, இன்னும் ஏதும் பணம் பாக்கி இருக்குன்னு சொல்லப் போறாரா …. அப்படி சொன்னா திரும்ப கொடுக்க என்கிட்ட காசு இல்லையே.” என எண்ணிக் குழம்பிப் போனவர்,

 

ஆதியைத் தேடிச் செல்ல, அவனோ, மேலிருந்து கீழாக அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு,

 

அவரின் முன்னால் ஒரு பைலை தூக்கிப் போட்டவன்,

 

“உங்க பொண்ணு, யார் கூடவும் ஓடிப் போகல, அண்ட் அவங்களுக்கு இன்னும் கலியாணமும் ஆகல.” என சிம்பிளாக கூறினான்.

 

அவரோ, “என்ன சொல்றீங்க தம்பி நீங்க?” என அதிர்ந்து பார்த்தவர்,

 

அவசரமாக அந்த பைலை எடுத்து

படிக்க ஆரம்பித்தார்.

 

படித்து முடிக்கும் போது அவரின் இரு கண்களும் கலங்கிப் போனது.

 

அவரையே விழி அகலாது பார்த்துக் கொண்டு இருந்த ஆதி,

 

“சொல்லுங்க மிஸ்டர் கோடீ ஸ்வரன் அடுத்து என்ன பண்ணலாம்?, இந்த தீரன் யாரு?, உங்களுக்கு இந்தப் பேரில யாரையும் தெரியுமா?” என கேட்க,

 

அவரோ, “இல்லையே தம்பி, முழுப் பெயர் கூட இதில போடல. அவனப் பத்தி புல் டீடெயில்ஸ்சும் இல்ல. அவன் போட்டோ கூட இல்லையே. அப்புறம் எப்படி நான் கண்டு பிடிக்கிறது?, எனக்கு இப்படி ஒரு பேர கேள்விப்பட்ட நினைவு இல்ல தம்பி. யாரு இவன்?, எதுக்காக என் பொண்ண கடத்தி வைச்சு இருக்கான்?, அப்போ அந்த லெட்டர் எழுதினது யாரு?, இப்படி எல்லாம் குழப்பமாவே இருக்கு.” என தலையைப் பிடித்துக் கொண்டு கூற,

 

அவரின் முகத்தையே கூர்ந்து

பார்த்த ஆதி,

 

“ஒரு வேள உங்க விரோதிங்க, தொழில் எதிரிங்க அப்படின்னு யாரும்….” என இழுவையாக கேட்க,

 

“இல்ல தம்பி அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல. நானோ, என் பொண்ணுங்களோ, யாரோட வம்புக்கும் போக விரும்பாதவங்க, யார் வாழ்க்கையையும் அழிக்க விரும்பாதவங்க, அப்படி இருக்கும் போது, பழைய பகை…. அப்படி, இப்படின்னு வர சான்ஸ்சே இல்ல.” என கூறியவர்,

 

“அப்போ தம்பி, நான் உடனடியா கிளம்பிப் போய் என் பொண்ண மீட்டுக் கொண்டு வரேன்.” என கூறியவரை,

 

ஒரு வித அழுத்தத்துடன் பார்த்தவன்,

 

“தீரன பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?, அவன் என்ன சாதாரண ஆளா?, அந்த இடத்தையே தன் ஆளுகைக்குள் வைத்திருக்கும் மிகப் பெரிய டான் அவன். அவன ஈஸியா நெருங்கவே முடியாது.

கொஞ்சம் பொறுங்க. நானே சரியான நேரம் பார்த்து சொல்றேன். அப்போ போய் உங்க பொண்ணைக் கூட்டிக் கொண்டு வரலாம்.” என கூறினான்.

 

அவரும், “வேற வழி இல்லையே தம்பி. நீங்க சொல்றபடியே செய்வம்.” என பெரு மூச்சு ஒன்றுடன் கூறி விட்டு அங்கிருந்து செல்ல ஆரம்பித்தார்.

 

அப்போது தான், பாடசாலை சென்று விட்டு வந்த அபர்ணா, தந்தை வந்து விட்டுப் போவதை உணர்ந்து அவரை நோக்கி ஓட,

 

அதற்குள், அவர் தனது காரில் ஏறி கிளம்பி இருந்தார்.

 

அபர்ணாவோ, “அப்பா எதுக்கு இப்போ வந்திட்டு அவசரமா கிளம்பிப் போறார்?, என்னாச்சு அவருக்கு?, ஏன் என்ன பார்க்காம போறார்?, ஒரு வேள…. நம்ம சிடு மூஞ்சி ஏதும் சொல்லி இருப்பாரோ?, இப்போ தான் கொஞ்சம் நல்லவரா மாறி இருக்கார்னு நினைச்சன். ஆனா அதுக்குள்ள தன் குணத்தை காட்டிட்டார். இத இப்படியே விடக் கூடாது. கண்டிப்பா கேட்டே ஆகணும்.” என முணு முணுத்தவள் திரும்ப,

 

அவளின் மீது இடித்து விடும் தூரத்தில் நின்று இருந்தான் ஆதி.

 

அவனை அத்துணை அருகில் பார்த்தவள்,

 

பயந்து போய், “ஆத்தாடி….” என இரண்டு அடிகள் பின்னால் வைத்து, நெஞ்சில் கை வைத்தபடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

 

அவனோ, “என்னடி என்ன திட்டி முடிச்சிட்டீயா?, இல்ல இன்னும் ஏதாச்சும் மீதி இருக்கா?, எனக்கு முன்னால அமைதியா இருக்கிறது.

 

நான் இல்லன்னதும் திட்டித் தீர்க்கிறது அப்படித்தானே.” என அவன் தலை சரித்து வினவ,

 

“அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்ல. அப்பா வந்திட்டுப் போறார்…. அது தான்….” என அவள் இழுக்க,

 

அவனும், “ஆமா. இப்போ தான் கிளம்பிப் போனார். அதில என்ன பிரச்சனை உனக்கு?” என தோளை குலுக்க,

 

“என்கிட்ட பேசாமலயே போறார். அத விட எதுக்காக அவர் இங்க வந்தார்?, நீங்க கூப்பிட்டீங்களா?, ஏன்?, என்ன பிரச்சனை?….” என கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றாள் அபர்ணா.

 

அவனோ, “ஏய் சரவெடி கொஞ்சம் நிறுத்து. நான் தான் அவர கூப்பிட்டேன். ஆனா அது என்ன விஷயம்னா…. ம்ப்ச்…. அத சொன்னா நீ தாங்க மாட்டாய். சோ, வேணாம் விடு அபர்ணா.” என அவன் கூறி முடிக்கவும்,

 

“எந்த நியூசா இருந்தாலும் பரவாயில்ல. அத கேட்டு எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தாலும் பரவாயில்ல. சொல்லுங்க. எனக்கு தெரிஞ்சே ஆகணும்.” என அவள் அடம் பிடிக்கவும்,

 

“ஓகே…. அப்புறம் உன் இஷ்டம்.” என்றவாறு, அவளிடம் பைலை தூக்கி நீட்டினான்.

 

“என்ன பில்ட் அப் எல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு. அப்படி என்ன தான் இருக்கு இதில?” என அலட்சியமாக கேட்டபடி வாங்கிப் படிக்க ஆரம்பித்தவளின் கண்கள் இரண்டும் கொஞ்ச நேரம் சென்றதும் சாசர் போல விரிந்து கொண்டது.

 

ஒரு கட்டத்தில் படிக்க முடியாது கண்ணீர் வழிய, பைலை மூடி வைத்தவள், அங்கிருந்த இருக்கையில் தொப்பென அமர்ந்து கொண்டாள்.

 

அதே நேரம், அவளின் முன்னாக நீர் அடங்கிய கிளாஸ் ஒன்றை நீட்டினான் ஆதி.

 

மறுக்காது வாங்கி குடித்தவள், “அப்போ…. என்னோட அக்கா…. தெரியாத ஒருத்தன் கிட்ட மாட்டி, கஷ்டப்படுறாங்களா?, அவங்களாவது சந்தோஷமா இருக்காங்க என்கிறது தான் என்னோட பெரிய ஆறுதலா இருந்துது. இப்போ அதுவும் இல்லன்னு ஆகிடிச்சு. இப்போ என்ன செய்றது?, அக்கா பாவம், அப்பாவி, யாருக்கும் தீங்கு நினைக்காத ஒரு நல்ல உள்ளம் அவ. அவள போய் கடத்தி இருக்கானே….யாரு இந்த தீரன்?, எதுக்கு இப்படி எல்லாம் பண்ணனும்?” என புலம்பியவள்,

 

தன்னையே கை கட்டியபடி வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த ஆதியைப் பார்த்து,

 

“என்ன அப்படியே என்னைப் பார்த்துக் கொண்டே இருக்கீங்க?, ஏதாச்சும் சொல்லுங்க. இல்லன்னா ஐடியாவாவது கொடுங்க. என்னோட அக்காவை காப்பாத்தியே ஆகணும். ப்ளீஸ்….” என டென்சனாகி கத்த,

 

அப்போதும் தனது பார்வையை மாற்றிக் கொள்ளாதவன்,

 

“உன்ன பொறுத்தவரைக்கும் இந்த உலகத்தில நான் தானே பெரிய பொறுக்கி, வில்லன். என்கிட்ட இருந்து உங்க அக்காவை காப்பாத்த தானே அவ்வளவு தூரம் கஷ்டப் பட்டாய். இப்போ அது தானா நடந்து இருக்கு. அப்புறம் என்ன?, இந்த வில்லன் கிட்ட எதுக்காக உதவி கேட்டு வந்து இருக்காய்?” என கேட்டான்.

 

அவனது ஒவ்வொரு கேள்விகளும் சாட்டையடியாக அவளை சுழன்றடிக்க பதில் கூற முடியாது தலை குனிந்து அமர்ந்திருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் சொரிந்தது.

 

அவன் கூறுவது நூற்றுக்கு நூறு விகிதம் உண்மை தானே.

 

அவனை வில்லன் என எண்ணித் தானே அக்காவை அவள் காப்பாற்ற எண்ணியது.

 

இப்போது, தமயந்தி யாரோ ஒரு வில்லாதி வில்லனிடம் அல்லவா மாட்டிக் கொண்டு இருக்கிறாள்.

 

இவற்றை எண்ணிப் பார்த்தவளுக்கு தீரனுடன் ஒப்பிடும் போது ஆதி எவ்வளவோ நல்லவன் எனும் எண்ணம் தான் முதலில் தோன்றியது.

 

அந்த எண்ணம் தோன்றிய உடனே அதுவரையும் அழுது கொண்டு இருந்தவள்,

 

விலுக்கென அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

எனது மனதில் ஆதி எப்போதில் இருந்து நல்லவன் ஆனான் என எண்ணி மொத்தமும் குழம்பிப் போனாள் பெண்ணவள்.

 

அவளது ஒவ்வொரு பார்வை மாற்றங்களையும் கவனித்துக் கொண்டு இருந்த ஆதிக்கு அவள் என்ன நினைக்கிறாள் என்பது புரியாது போனது.

 

ஆனால், அவள் அழுவதை தாங்க முடியாதவன் அவளின் அருகே மண்டியிட்டு அமர்ந்து அவளின் கைகளை மென்மையாக பற்றி,

 

“ஒண்ணும் கவலைப்படாத அபர்ணா. உங்க அக்காவ சீக்கிரமா காப்பாத்திடலாம். அதுக்கு முதல்ல கொஞ்சம் வேலை இருக்கு. முதல்ல அழுகிறத நிப்பாட்டு.” என கூறியவன்,

 

சற்று இடைவெளி விட்டு,

குரல செருமிக் கொண்டு, “உங்க அக்காவை நான் காப்பாத்தித் தரேன். அதுக்கு பதிலா உன்னால எனக்கு என்ன தர முடியும் அபி?” என விழிகளில் ஒரு ஆவலுடன் கேட்டான்.

 

அவனது கடைசி விழிப்பை அவள் கவனிக்கவில்லை.

 

அவனது கேள்வியில் கலக்கத்துடன் நிமிர்ந்து அவனை பார்த்தவள்,

 

“என்கிட்ட கொடுக்கிறதுக்கு பணம் எதுவும் இல்லையே. அத விட உங்களுக்கு என்னால என்ன தர முடியும்?” என கேட்டதும்,

அவன் முகம் கறுத்துப் போனான்.

 

அவன் அவளிடம் காதலை வேண்டி நிற்க,

 

அவள் பணம் அல்லவா தருவதாக கேட்டு இருந்தாள்.

 

ஆதியோ, மீண்டும் கண்களில் ஒரு வித எதிர்பார்ப்புடன்,

 

“எனக்கு பணம் எல்லாம் வேண்டாம். அது தாராளமாவே என்கிட்ட கொட்டிக் கிடக்கு. எனக்கு நீதான் வேண்டும். ஐ மீன் நீ என்ன கல்யாணம் பண்ணிக்கணும். உனக்கு பதினெட்டு வயசாக இன்னும் நாலு மாசம் தானே இருக்கு. உன் அக்காவ, பார்க்கப் போகும் போது நீ எனக்கு மனைவியா இருக்கணும். நம்ம கல்யாணத்த எப்படி ரெஜிஸ்டர் பண்ணனும்னு எனக்கு நல்லாவே தெரியும். உன்னோட அக்காவ காப்பாத்திக் கூட்டிக் கொண்டு வந்ததுக்கு அப்புறம் நீ என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னா…. நான் என்ன பண்றது மிஸ் அபர்ணா?, அதனால தான் இந்த முன்னேற்பாடு.” என ஒவ்வொரு வார்த்தைகளையும் அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டு கேட்டவனைக் கண்டு அதிர்ந்து எழுந்து நின்று நின்றவள்,

 

“இல்ல…. அது வந்து…. என பதில் கூற முடியாது தடுமாற,

 

அவனோ, “இந்த வந்த…. போயி…. என்கிற இழுவை எல்லாம் எனக்கு வேணாம். உங்க அக்காவை நான் காப்பாத்தணும்னா நீ எனக்கு மனைவியாகணும் அவ்வளவு தான். உனக்கு ஒரு கிழமை டைம் தரேன். ஆறுதலா யோசிச்சு ஒரு முடிவ சொல்லு. அடுத்த கிழமை நம்ம கல்யாணத்த முடிச்சுக் கொண்டு உன்னுடைய அக்காவை பார்க்க கிளம்பலாம். அதுக்கு முதல்ல அந்த தீரன பத்தி முழு டீடெயில்ஸ், நான் கலெக்ட் பண்ணி ஆகணும். இருக்கும் இடத்தையே ஆட்டிப் படைக்கிறவன சமாளிக்கணும்னா…. நானும் அதே அளவு பலத்தோட தான், நாம களம் இறங்கணும்.” என தீர்க்கமாக கூறியவன்,

 

அவளின் கன்னத்தை மென்மையாக தட்டி விட்டு “நல்ல முடிவாக சொல்லு.” என கூறி விட்டு செல்ல,

போகும் அவனின் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அவள்.

 

************************************************

 

மறு புறம், தமயந்தியின் புது வாழ்க்கை தீரனின் மாளிகைக்குள் ஆரம்பித்து இருந்தது.

 

காலையில் வழக்கம் போல சீக்கிரமாக எழுந்தவள் குளித்து ரெடியாகி வெளியில் வரும் நேரம்

தீரனும் கிளம்பி வெளியே வந்தான்.

 

அவளுடன் இணைந்து நடந்தவன், ஜாக்கிங் முடித்து வந்ததும் அவளை மீண்டும் ரெடியாகி வரச் சொன்னான்.

 

அவளோ, “எனக்கு இங்க தானே வேலை சார்?, அப்புறம் எங்க கிளம்பி வர்றது?” என கேள்வியாக கேட்க,

 

ஒரு கணம் நின்று அவளைத் திரும்பிப் பார்த்தவன்,

 

“என்ன கேள்வி கேட்கிற உரிமையை நான் உனக்கு இன்னும் முழுசா தரலயே. போய் ரெடி ஆகி வா.” என்றவன்,

 

ஒரு கணம் நின்று, “அங்க கபோர்ட்ல நிறைய புடவைகள் இருக்கும். போர்மலா ரெடியாகி வா. எனக்கு எல்லாம் பர்ஃபெக்ட்டா இருக்கணும்.” என அழுத்தமாக கூறிவிட்டு தனது அறைக்குள் புகுந்து கொண்டான்.

 

தமயந்த, “இவர் என்ன ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா சட்டம் போடுறார்?, இப்போ எதுக்காக கிளம்பி வர சொல்றாருன்னு தெரியலயே.”என எண்ணிக் கொண்டு,

 

அவன் கூறியது போலவே அழகான நீல நிற புடவையில் கிளம்பி வந்தாள்.

 

ரெடியாகி வந்தவள், தீரனுக்காக காத்து இருக்க, ரூமில் இருந்து வெளியே வந்தவன், அவளின் பின்னே வந்து நின்று குரலை செருமினான்.

 

அவளோ, அவனின் சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள்.

 

பார்த்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து பின்பு நார்மல் நிலைக்கு வந்தது.

 

அவனும், ஒரு கணம் புருவம் உயர்த்திப் பார்த்தவன்,

 

“ஒரே கலர்ல ட்ரெஸ் பண்ணி இருக்கம். குட். நல்ல ஆரம்பம்.” தான் என கூற,

 

அவளோ, “எதுக்கான நல்ல ஆரம்பம் சார்?, எனக்கு ஒண்ணுமே புரியலயே.” என அவள் குழப்பமாக கேட்க,

 

“இன்னும் கொஞ்ச நேரத்தில புரியும். என் கூட வா.” என அவளை அழைத்துக் கொண்டு கீழ் தளத்திற்கு சென்றவன்,

 

அவளையும் அமர சொல்லி விட்டு, டைனிங் மேசையில் அமர,

 

திகைத்துப் போனவள், “எத?” என தன்னையும் மீறி கேட்டு விட,

 

தனக்கு தானே பரிமாறிக் கொண்டு இருந்தவன் நிமிர்ந்து பார்க்கவும்,

 

“இல்ல சார், உங்களுக்கு சமமா….” என தயங்கியபடி சுற்றி வர பார்த்துக் கொண்டு கூறவும்,

 

“ம்ம்ம்….” என யோசிப்பது போல பாவனை செய்தவன்,

 

இரு விரல்களால் தமயந்தியை தன் அருகில் வர சொன்னான்.

 

அவளும், வந்து குனிந்து “என்ன?” என கேட்கவும்,

 

அவளின் அருகில் எங்கோ கற்பனை வானில் பறக்க ஆரம்பித்த மனதைக் கட்டுப் படுத்திய படி,

 

“யாரும் எதுவும் நினைக்கவும் மாட்டாங்க, உன்ன கேள்வி கேட்கவும் மாட்டாங்க, ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிடு, டைம் ஆகுது.” என அடிக் குரலில் கூற,

 

அதற்கு மேல், அவளும் எதுவும் பேசாது, அவனுக்கு இரு கதிரைகள் தள்ளி அமர செல்ல,

 

தனக்கு அருகில் இருக்கும் கதிரையை, உணவு உண்டபடியே, ஒரு கையால் இழுத்தவன்,

 

கண்களால் அதில் அமரும்படி காட்ட, அவளும் அமர்ந்து கொண்டாள்.

 

அவளுக்கு உணவு இறங்கினால் தானே. ஏதோ பேருக்கு சாப்பிட்டவள், பல யோசனைகளுடன் அவனுடன் கிளம்பினாள்.

 

காரிலும் அவளை தனக்கு அருகிலேயே அமர வைத்து இருந்தான் அவன்.

 

அவன், அவளுடன் பயணிக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசித்துக் கொண்டு இருக்க,

 

அவனின் அருகில் நெஞ்சம் பட படக்க அமர்ந்து கொண்டு இருந்தவள் என்னவோ தமயந்தி தான்.

 

அவளால், அவனின் அருகே இயல்பாக இருக்க முடியவில்லை.

 

அவளின் நிலை தீரனுக்கு நன்றாக புரிந்தாலும், அவன் பெரிதாக அலட்டிக் கொள்ளாது காரை தனது நிறுவனம் நோக்கி செலுத்தினான்.

 

காரை நிறுத்தியவன் கம்பீர நடையுடன், முன்னே செல்ல,

 

அவனது கம்பெனியின் பிரமாண்டத்தையும்,

ஒழுங்கமைப்பையும் ரசித்தவாறே அவனின் பின்னே சென்றாள் தமயந்தி.

 

வேக நடையுடன் நேராக, மீட்டிங் ஹால்ற்கு சென்றவன்,

 

அங்கு கூடியிருந்தவர்களுக்கு வணக்கம் சொல்லி விட்டு,

 

தமயந்தியை, சுட்டிக் காட்டி அறிமுகப் படுத்தி விட்டு, இன்றிலிருந்து அவள் தான் தனக்கு பி. ஏ எனவும் கூறினான்.

 

அவன் கூறிய விடயத்தில் சுற்றி இருந்த கூட்டம் மொத்தமும் சந்தோஷமாக கை தட்டல் கொடுக்க,

 

அந்தக் கை தட்டுதலுக்கு உரியவளோ, நடப்பது எதுவும் புரியாது விழி விரித்தபடி, விதிர் விதிர்த்துப் போய் நின்று இருந்தாள்.

 

அவளின் நிலையைக் கண்டு, தீரனின் உதட்டில் சிறு புன்னகை ஒன்று உருவாகி மறைந்தது.

அதனை வெளிக் காட்டாது மறைத்தவன்,

 

தமயந்தியின் பக்கம் மெல்ல சரிந்து,

“இப்படி பிரீஸ் மோடிலயே நின்னா எப்படி மதி?, கொஞ்சம் சிரிச்ச மாதிரி எல்லாருக்கும் நன்றி சொல்லு.” என மென் குரலில் கூற,

 

அப்போது தான், தான் அப்படியே நிற்பதை உணர்ந்து கொண்டவள்,

 

ஒரு வாறு தன்னை சமாளித்துக் கொண்டு, அனைவருக்கும் நன்றி சொன்னாள்.

 

அதன் பின்பு அனைவரும் தத்தமது வேலைகளுக்கு சென்றதும்,

தனது வழக்கமான பி. ஏவுடன் உரையாடியபடியே தீரனும் தன் அறைக்குள் சென்று இருக்கையில் அமர,

 

அவனின் பின்னாகவே வந்தவள்,

குறித்த பி. ஏ வெளியில் செல்லும் வரையும் காத்திருந்து விட்டு,

 

“என்ன சார் இதெல்லாம்?, எனக்கு ஒண்ணும் புரியல. நான் உங்க பி. ஏ வா?, ஏன் சார் இப்படி அதிரடியா எல்லாம் செய்றீங்க?, எனக்கு இந்த போஸ்ட் எல்லாம் வேணாம்.” என கிட்டத் தட்ட அழும் குரலில் கூறினாள்.

 

தீரனோ, அவள் பேசுவதையே, கதிரையில் அமர்ந்து கால்களில் தாளம் போட்டவாறு பார்த்துக் கொண்டு இருந்தான்.

 

தீரனை ஆதி நெருங்குவானா?

ஆதி, அபர்ணா திருமணம் நடக்குமா?

 

தமயந்தியை தீரன் கை பிடிக்கும் நாள் வருமா?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

 

கண்டிப்பா உங்க லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ்..

 

கதையில் இனி வரும் எபிகளில் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ ஆரம்பிக்கும்.

 

அடுத்த எபி வந்தாச்சு மக்காஸ்.

 

ரொம்ப பெரிய எபி போட்டு இருக்கேன்.. லைக்ஸ் ப்ளீஸ் மக்காஸ்.😍😍😍

 

எனக்கு கொஞ்சம் வேலைப் பளு மக்காஸ்.. எனக்குமே தொடர் எபிகள் போட ஆசை தான் ஆனா முடியல. பார்ப்பம் 😍😍😍😍

 

இனி மேல் என்னோட எபிகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் ஓகேவா?, இந்தக் கதை இனி வேகமாக நகரும் 😍😍

 

இந்த எபில சின்ன சின்ன துணுக்கு இருக்கு கண்டு பிடிங்க…😍😍

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 22”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!