Episode – 23
அவளோ, அவனின் கூலான போசைக் கண்டு மேலும் டென்சனாகி,
“சார், நான் உங்க கிட்ட தான் சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன். நீங்க கொஞ்சம் பதில் சொன்னா நல்லா இருக்கும்.”
“ம்ம்ம்ம்…. அப்படியா தமயந்தி மேடம். ஓகே. உங்களுக்கு ஏன் இந்த போஸ்ட் வேணாம்ணு சொல்றீங்கன்னு நான் தெரிஞ்சு கொள்ளலாமா?” என ஒரு வித கேலிக் குரலில் கேட்டான் அவன்.
“ஏன்னா?, எனக்கு இத பத்தி எதுவுமே தெரியாது சார்.
அட்மினிஸ்ட்ரேஷன்ல அ கூட தெரியாத எனக்கு எதுக்கு இந்த போஸ்ட் சார்?, ப்ளீஸ் என்ன வீட்டில கொண்டு போய் விட சொல்லுங்க.” என பட படவென பேசி முடிக்க,
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன்,
“பேசி முடிச்சிட்டீயா?, இல்ல இன்னும் ஏதும் மீதி இருக்கா?” என கேட்டபடி எழுந்து வந்து, அவளின் முன்பாக, மேசையில் சாய்ந்து நின்றான் தீரன்.
அவன் எதிரில் வந்து நிற்கவும், திணறிப் போனவள், இரண்டு அடிகள் பின்னே தள்ளி நிற்க,
அதனைக் கவனித்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாது,
“நீ தான் என் பி. ஏன்னு நேற்று நைட்டே நான் முடிவு பண்ணிட்டேன். நீயே நினைச்சாலும் அத மாத்த முடியாது. என்னோட பழைய பி. ஏ மிஸ்டர் முரளி எல்லாத்தையும் பார்த்துப்பார். நீ அவர் சொல்றத சிலத மட்டும் செய்தா போதும், நீ பி. ஏவா என் பக்கத்தில, ஐ மீன் இங்க இருந்தா மட்டும் போதும். ஓகேவா?”
“பட் சார்….” என அவள் ஆரம்பிக்க,
“இருங்க மிஸ் தமயந்தி, நான் இன்னும் பேசி முடிக்கல. இந்த போஸ்ட்ற்கு உங்களுக்கு உரிய சம்பளம் ஒரு லட்சம். உங்க ரூம் வாடகை, இதர செலவுகள், எல்லாம் இந்தக் காசில பார்த்துக் கொள்ள முடியும் தானே?, அதையும் யோசிச்சு முடிவு எடுங்க மிஸ் தன்மான சிங்கம்.” என கூறவும்,
அதற்கு மேலும் மறுக்க முடியாது, அமைதியாக நின்று இருந்தாள் அவள்.
“எங்கே அடித்தால் அவள் அமைதியாக இருப்பாள் என்பது அவனுக்கு நன்கு தெரியும் தானே.” அனைத்தையும் கூறி விட்டு,
அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் அவன்.
அவளோ, சற்று நேரம் அப்படியே நின்று இருந்தவள்,
ஒரு பெரு மூச்சுடன், “ஓகே நான் இங்கயே வேலை செய்றேன்.” என கூறவும்,
அவனும் மனதிற்குள்,
“அப்படி சொல்லுடி என் தங்க குட்டி, இப்போ தான் நீ என்னோட ரூட்க்கு வந்து இருக்காய்.” என எண்ணி உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டவன்,
வெளியில், “தென் ஓகே. உங்களுக்கு என்னோட கேபின்லயே ஒரு டேபிள் போட சொல்லி இருக்கேன். உட்கார்ந்து வேலையைப் பாருங்க.” என கூறவும்,
“உங்க கூடவா…. நான் வெளில.” என ஆரம்பித்தவள்,
அவன் பார்த்த ஒற்றைப் பார்வையில் “ஓகே சார்.” என கூறி முடித்துக் கொண்டாள்.
அவளுக்கான டேபிள் வரும் வரைக்கும் அவளைத் தன் எதிரில் அமர வைத்தவன், தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.
அவளும் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
தீரனோ, அவளைப் பார்ப்பதும், பைலைப் பார்ப்பதும் என பொழுதைக் கழித்துக் கொண்டிருக்க,
அந்த நேரம் பார்த்து, தீரனுக்கு ஒரு போன் வந்தது. புருவம் சுருக்கிப் பார்த்தவன்,
தமயந்தியை ஒரு பார்வை பார்த்து விட்டு, “மிஸ் தமயந்தி, எனக்கு ஒரு காபி கிடைக்குமா?” என கேட்டான்.
அவளுக்கு முதல் அவன் கேட்டது சரியாக புரியவில்லை.
அவனும், அதனைப் புரிந்து கொண்டவன்,
“எனக்கு தலை வலிக்குது, காபி போட்டு தர முடியுமா மதி?” என ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்தமாக கூற,
புரிந்து கொண்டவள், “ஓகே சார் கண்டிப்பா போட்டுத் தரேன். ஆனா இங்க எப்படி?” என சந்தேகமாக கேட்க,
அவனும் மென் புன்னகை உடன், “ஃகம்.”என எழ,
“உங்க போன் அடிச்சுக் கிட்டே இருக்கு சார், நீங்க அத முதல்ல பாருங்க. இடத்த மட்டும் சொல்லுங்க. பத்தே நிமிஷத்தில உங்களுக்கு காபி கொண்டு வரேன்.”
“ஓகே, நேர போய் லெப்ட்ல் திரும்பு. கிட்சன் இருக்கும். போய் ஆறுதலா காபி போட்டுக் கொண்டு வா. ஒண்ணும் அவசரம் இல்ல.”
“ஓகே சார்.” என்றவள், அவன் சொன்ன படியே செல்ல,
அவள் போனதும், போனை எடுத்தவன்,
“யெஸ்…. சொல்லுங்க. எனி இம்போர்ட்டண்ட் மேட்டர்?” என கேட்டான்.
மறுபுறம், சொல்லப் பட்ட செய்தியில்,
கை முஷ்டிகள் இறுகி, முகம் சிவந்து போனவன், பல்லைக் கடித்துக் கொண்டு,
“ஓஹ்…. அந்த அளவுக்கு பிளான் பண்றாங்களா?, அந்த இரண்டு பேரும். தாராளமா வரட்டும்.
இன்னும் கிளோஸ்சா வாட்ச் பண்ணுங்க. மீதிய நான் பார்த்துக்கிறன். இன்னும் இரண்டு கிழமை இருக்கு தானே,
பார்த்துக்கலாம். அவங்களுக்கு என்ன பத்தி இன்னும் முழுசா தெரியல. இங்க வந்து தெரிஞ்சுக்க ஆசைப்படுறாங்க, சிறப்பா பண்ணிடலாம் ஓகேவா?” என கூறி விட்டு போனை வைத்தவன்,
நாற்காலியில் சுழன்ற படியே, “நான் தமயந்தி மேல கோபமா இருக்கும் போதே, அவள விட்டுக் கொடுத்து இருக்க மாட்டன். இப்போ மனசு முழுக்க காதலோட இருக்கன் இப்பவா அவள விட்டுக் கொடுத்திடப் போறன்?, அவ எனக்கு மட்டும் தான் சொந்தம். அவங்க இங்க வரும் போது அவ என்னோட மனைவியாகி இருப்பா. இல்ல இல்ல…. இருக்கணும். இருந்தே ஆகணும்.” என முணு முணுத்துக் கொண்டே மேசையில் ஓங்கி அடித்தான்.
அப்போதும் அவனின் மனம் சமாதானம் அடையாது போக,
கண்களை மூடி கதிரையில் சாய்ந்து அமர்ந்தான் அவன்.
அதே நேரம், அவனுக்கான காபியுடன் வந்தவள், அவன் இருந்த நிலையைக் கண்டு சற்று கவலை கொண்டு, அவனின் அருகே சென்றவள்,
“என்ன ஆச்சு தீரன்?” என உண்மையான அக்கறையுடன் கேட்டாள்.
அவளின் குரலிலும், அழைப்பிலும், மெதுவாக கண்களைத் திறந்தவன்,
அவளையே ஆழ்ந்து பார்த்தான்.
அவளோ, “என்னாச்சு உங்களுக்கு?, இன்னும் தலைவலி அதிகமாயிடிச்சா உங்களுக்கு?, என்ன பண்ணுது?” என கேட்கவும்,
ஒரு பெரு மூச்சுடன், “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும், அந்த ட்ராயர்ல ஒரு மெடிக்கல் ஹிட் இருக்கு. அதில தலைவலி தைலம் இருக்கு. கொஞ்சம் எடுத்து தர முடியுமா?” என கேட்டான் தீரன்.
அவளும், “இதோ உடனே எடுத்துத் தரேன் சார்.” என கூறியவள், அவன் சொன்னபடியே எடுத்துக் கொடுத்தாள்.
அவனோ, அதனை வாங்காது வேண்டும் என்றே, பட்டென தலையைப் பிடித்துக் கொண்டவன்,
“ஸ்ஸ்ஸ்…. இந்த வலிய தாங்க முடியலேயே.”என கூறவும்,
உண்மையில் பயந்து போன தமயந்தி, “என்னாச்சு தீரன்?” என்றவாறு, அவனின் நெற்றியில் தானே தைலத்தை தடவி விட்டாள்.
அவனும், யாரும் உள்ளே வரக்கூடாது என எண்ணி, அவள் அறியாது கதவை லாக் பண்ணி விட,
அது எதுவுமே அறியாத பெண்ணவள், கருமமே கண்ணாக அவனின் நெற்றியில் தைலம் இட,
அவனோ கண்களை மூடிக் கொண்டு, அந்தத் தருணத்தை ரசித்தவன்,
அதோடு சேர்த்து அடுத்தடுத்த பிளான்களையும் போட்டு முடித்தான்.
தமயந்தியும் அவன் தூங்கி விட்டான் என எண்ணி, ஆறிப் போன காபியை எடுத்துக் கொண்டு செல்ல,
போகும் அவளின் முதுகையே விழி விரித்து வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவன்,
“உனக்கு பிடிக்காத ஒண்ண, நான் செய்யப் போறன். நீ எனக்கு காலம் முழுக்க வேணும். அதுக்காக நான் எந்த எல்லைக்கும் போகத் தயார்.” எனவும் மனதோடு கூறிக் கொண்டான்.
கப்பை வைத்து விட்டு வந்தவள்,
அவன் விழித்து இருப்பதை உணர்ந்து, “தூங்கலயா சார் நீங்க, இப்போ ஓகேவா உங்களுக்கு?” என கேட்டாள்.
அவனும், “யெஸ், ஐ ஆம் ஓகே.” என்றவன், கதவை அன்லாக் பண்ணி விட்டு,
மீண்டும் தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.
சற்று நேரம் கழித்து அவளுக்கான டேபிள் வரவும், அவளை அதிலே உட்கார சொன்னவன்,
அவளுக்கான சிறு சிறு வேலைகளை சொல்லிக் கொடுத்து அதனை செய்யச் சொல்லி விட்டு,
அவளைப் பார்க்காது தனது வேலைகளில் மூழ்கி விட்டான்.
அந்த ஒரு நாள் அவனுக்கு அருகில் இருந்து வேலை பார்த்ததிலேயே அவனின் உயரம், அவனின் நேர்மை, திறமை அனைத்தையும் கண்டு கொண்டாள் பெண்ணவள்.
அதன் மூலம் அவனின் மீது பெரும் மதிப்பு ஒன்று உருவானது அவளுக்கு.
அந்த நாள் அப்படியே கடந்து போக,
மாலை மீண்டும் வீடு திரும்பும் போதும், தீரன், தமயந்தியின் புறம் திரும்பாது ஒரு வித யோசனையுடனேயே அமர்ந்து இருந்தான்.
தமயந்தியும், அவனை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை.
இப்படியே அவர்களின் ஒரு கிழமையும் பெரிதாக மாற்றங்கள் இன்றி ஓடிப் போனது.
தமயந்திக்குத் தான், சில நேரம் தன்னை யாரோ ஒருவர் உற்றுப் பார்ப்பது போல அடிக்கடி தோன்றும்.
பட்டென நிமிர்ந்து பார்த்தால், தீரன் தன் பாட்டில் வேலை செய்து கொண்டு இருப்பான்.
இறுதியில் அவள் தான் முற்றிலும் குழம்பிப் போவாள்.
“தனக்கு தான் ஏதோ பிரமை.” என எண்ணி, தலையை உலுக்கிக் கொண்டு மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்து விடுவாள் அவள்.
அந்த வார முடிவில் ஒரு நாள், கம்பெனி வேலை முடித்து வீட்டுக்கு வந்ததும்,
இரவு உணவை உண்டு முடித்த பின்பு, தன் அலுவலக அறையில் தன்னைக் காண வருமாறு தமயந்திக்கு கட்டளை இட்டு இருந்தான் தீரன்.
அவளும், “என்ன விஷயம்?, ஏன் இப்போ இந்த அவசர மீட்டிங் சார்?….” என பல கேள்விகள் கேட்டும் அவன் பதில் கூற வில்லை.
அவளும், “அதானே, நான் கேட்டு அவர் பதில் சொல்லிட்டாலும். சரி அவர் சொல்லும் போது சொல்லட்டும்.” என முணு முணுத்தவள்,
அவன் சொன்னபடியே, உண்ட பாத்திரங்களை ஒதுக்கி வைத்து விட்டு செல்ல,
அங்கு ஏற்கனவே, அவளுக்காக காத்து இருந்தவன்,
அவள் கதவைத் தட்டவும், உள்ளே வருமாறு அழைத்தான்.
அவளும், “சொல்லுங்க தீரன்?, என்ன அவசர வேலை?” என இயல்பாக கேட்டாள்.
அவளது வாயில் இப்போது எல்லாம் அவனின் பெயர் சரளமாக வர ஆரம்பித்து இருந்தது.
அவனும் கைகளைக் கட்டியபடி அவளை ஒரு பார்வை பார்த்தவன்,
“நாம கலியாணம் பண்ணிக்கலாமா?” என எந்த முன் அறிவிப்பும் இன்றி பட்டென கேட்டான்.
அவன் கேட்டதில், அவளுக்கு சிரிப்பு வர,
“என்ன தீரன் சார், ஏதோ குல்பி ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?, என்கிற மாதிரி கூப்பிடுறீங்க?, இரவு என்னைக் கூப்பிட்டு வைச்சு காமெடி பண்றீங்களே. உண்மையா எதுக்கு கூப்பிட்டீங்கன்னு சொல்லுங்க. இல்லன்னா….நான் கிளம்புறேன் எனக்கு தூக்கம் வருது.” என கூறியவள்,
கதவு நோக்கி செல்ல, வேகமாக அவளின் முன்னாக வந்து நின்றவன்,
பழைய தீரனாக மாறி, இரும்பை ஒத்த எ ஃகு குரலில்,
“தமயந்தி நான் விளையாட்டுக்காக எதையும் பேசுறவன் இல்ல. அது உனக்கு நல்லாவே தெரியும். நான் சீரியசாவே கேட்குறன். உன்னால என்னக் கலியாணம் பண்ணிக்க முடியமா? முடியாதா?” என ஒவ்வொரு வார்த்தையாக கேட்டான்.
தமயந்தியோ, அவனின் பேச்சில் அரண்டு போய் நின்றவள்,
“இ…. ல்…. ல, நான் எப்படி உங்கள…. நான் இங்க வந்த முறை உங்களுக்கு வேணும்னா மறந்து இருக்கலாம் எனக்கு மறக்கல. என்னால உங்கள கலியாணம் பண்ணிக்கவே முடியாது.” என கூறி விட்டு நிற்க,
“ஓஹ்…. அப்படியா பொண்டாட்டி அப்போ கொஞ்சம் இங்க பாருங்க.” என கூறி,
அவளின் முன்னாக ஒரு பேப்பரை நீட்டினான். கை நடுங்க அதனை வாங்கிப் படித்துப் பார்த்தவள்,
“என்னது இது?, இது எப்படி
சாத்தியம்?” என அதிர்ந்து அவனைப் பார்க்க,
கண் சிமிட்டி சத்தமாக சிரித்தான் தீரன்.
அதே நேரம், ஆதி முன்பாக நின்றிருந்த அபர்ணாவிடம் அவளின் முடிவைக் கேட்டுக் கொண்டு இருந்தான் அவன்.
இரு பெண்களின் முடிவும் என்னவாக இருக்கும்?
ஆண்கள் இருவரின் மனதில் உள்ளது தான் என்ன?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
கண்டிப்பா உங்க லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ்..
கதையில் இனி வரும் எபிகளில் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ ஆரம்பிக்கும்.
அடுத்த எபி வந்தாச்சு மக்காஸ்.
லைக்ஸ் போட்டு வைங்க.. நைட் அடுத்த எபி வரும் டீல் மக்காஸ் 😍😍😍
Super and intresting sis 💞