இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 25

4.5
(22)

Episode – 25

 

தீரன் மனதில், “எனக்குன்னு வாழ்க்கையில வந்த தேவதடி நீ. உன்ன என் நெஞ்சுக் குழிக்குள்ள பொத்தி வைச்சுப் பார்த்துப்பன். என் காதல் கடைசி வரைக்கும் உன்னோடு தான்டி.” என எண்ணியபடி, அவளுக்கு தாலி கட்டி முடித்தவன்,

 

அவளின் கலங்கிய விழிகளுடன் தனது விழிகளை கலக்க விட்டபடி, அவளின் நெற்றியில் குங்குமமும் இட்டான்.

 

தமயந்தியோ, “இனி என் வாழ்க்கை எதனை நோக்கிப் பயணிக்கப் போகிறது என தெரியவில்லை தாயே. என்னை சுற்றி என்ன நடக்கிறது?, என்ன மர்மங்கள் இருக்கு?, எதுவுமே புரியலயே. எல்லாம், என்னையும் மீறி நடந்து கொண்டு இருக்கு. என்னால தடுக்கவும் முடியல. எதையும் ஏத்துக்கவும் முடியல. வாழ்க்கை போகிற போக்கில வாழ வேண்டியது தான்.” என எண்ணி கண்களை ஒரு முறை மூடித் திறந்தவள்,

 

அவன் குங்குமம் வைத்து விட்டு நிமிரவும், அவனை ஒரு அர்த்தப் பார்வை பார்த்தாள்.

 

அந்தப் பார்வையில், “நீங்க நினைச்சத செய்து முடிச்சிட்டீங்க இல்ல.” என்ற பொருள் பொதிந்து இருந்தது.

 

அவளின் உணர்வுகளை கண்கள் வழியே, சரியாக புரிந்து கொண்டவன்,

 

ஒரு பெரு மூச்சை மட்டும் பதிலாக கொடுத்து விட்டு,

 

அவளது கைகளுடன், கைகளை கோர்த்துக் கொண்டவன்,

 

“புருஷன மனசுக்குள்ள திட்டினது போதும், வா கிளம்பலாம் பொண்டாட்டி.” என கூறி அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றான் அவன்.

 

வீட்டு வாசலில், அவர்களுக்காக மொத்த வேலையாட்களும் அணி வகுத்து நின்றனர்.

 

அனைவரது முகங்களிலும், அப்படி ஒரு புன்னகை.

 

அனைவருக்கும் தமயந்தியைப் பற்றியும், அவளின் குணங்கள் பற்றியும் நன்கு தெரியும் அல்லவா.

 

அவள் தங்களது பாஸ்ற்கு மிகவும் பொருத்தமான ஜோடி என்பது தான் அவர்கள் அனைவரின் கருத்தாகும்.

 

சிவகாமி அம்மாவை கேட்கவே வேணாம். அவருக்கு இருக்கும் மகிழ்ச்சியில் அவர் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்தார்.

 

கையில் ஆரத்தி தட்டுடன், அவர் வாசலில் நின்று இருக்க,

 

முகம் முழுக்க புன்னகை உடன் அனைவரும் அவரை சுற்றி நின்றனர்.

 

மணமக்கள் இருவரும் வந்ததும், அனைவரும் கத்தி சந்தோச ஆரவாரம் போட,

 

அவர்களின் மகிழ்ச்சியில், அதுவரைக்கும் இறுகிப் போய் நின்று இருந்த தமயந்தியின் உதடுகளில் கூட மென் புன்னகை உருவானது.

 

அவள் எப்போதும் அன்புக்கு அடிமையான பெண் அல்லவா.

 

அவளின் புன்னகை தீரனின் முகத்திலும் திருப்தியை வரவழைத்தது.

 

இருவருக்கும் ஆராத்தி எடுத்து முடித்ததும், உள்ளே அழைத்து சென்று பால், பழம் கொடுக்க,

 

தமயந்திக்கு, “அச்சோ இந்த சடங்கா….” என்கிற எண்ணம் இருந்தாலும், கையில் தீரன் திணித்த கப்பை வாங்காது இருக்க முடியாது, மெல்ல வாங்கியவள்,

 

அவனை நிமிர்ந்து பார்க்க, அவனும் கண்களால் குடிக்குமாறு சைகை செய்தான்.

 

அவளும், வேறு வழியின்றி குடித்து முடிக்க,

 

இருவரையும் ரூமுக்கு சென்று ரெஸ்ட் எடுக்கும் வண்ணம் கூறினார் சிவகாமி அம்மா.

 

தமயந்தியும், களைப்பாக உணர்ந்ததால், தலையை ஆட்டியவள், எழுந்து செல்ல ஆரம்பிக்க,

 

அவளின் பின்னாக சென்றவன், அவள் தனது அறைக்குள் நுழையும் போது,

 

சொடக்கிட்டு அவளை அழைத்து தன்னைப் பார்க்க வைத்தான்.

 

அவளும், “இன்னும் என்ன?” என்பது போல பார்த்து வைக்க,

 

“இனி எதுக்கு இந்த தனி ரூம் உனக்கு?, என்னோட ரூமுக்கு உன்னோட திங்ஸ் எல்லாத்தையும் ஷிப்ட் பண்ணிக்கலாம் ஓகேவா பொண்டாட்டி. இப்போ ரெஸ்ட் எடுக்க மட்டும் இந்த ரூமை யூஸ் பண்ணிக்கோ.” என கூறியவன்,

 

அவள் பேயறைந்தது போல அப்படியே நிற்கவும்,

 

“இப்போ எதுக்கு இவ்வளவு ஷாக் ரியாக்ஷன். எதுக்கு எடுத்தாலும் முட்டக் கண்ணை முழிக்கிறதையே வேலையா வைச்சு இருக்காய்டி.” என முணு முணுப்புடன் சலித்துக் கொள்ள,

 

அவளோ, அவனது முணு முணுப்பில் ஒரு கணம் அவனை முறைத்துப் பார்த்து விட்டு,

தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

அவளின் மனமோ, “எப்படி இவர் கூட ஒரே ரூமுல நான் தங்க முடியும்?, முடியவே முடியாது.” என எண்ணிக் கொண்டவள்,

 

“சற்று நேரம் உறங்கி எழுந்து பின்பு யோசிக்கலாம்.” என எண்ணி கட்டிலில் படுத்துக் கொண்டாள் அவள்.

 

தீரனோ, “தமயந்தி தனக்கு கிடைத்து விட்டாள்.” எனும் மகிழ்ச்சியில், மென் புன்னகை உடன் உறங்கிப் போனான்.

 

************************************************************************************************

வாங்க மக்காஸ். கலியாண பந்தத்தில் இணைந்த அடுத்த அதிரடி ஜோடியையும் ஒரு எட்டுப் போய் எட்டிப் பார்த்திட்டு வரலாம்.

 

நாம எட்டிப் பார்க்கிறது தெரிஞ்சா…. அந்த ஆதிப் பையன் கட்டையால அடிச்சுத் துரத்துவான்.

 

எதுக்கும் மறைஞ்சு நின்னு பார்த்துட்டுவருவம்.

 

ஆதியோ, தாலி கட்டி முடித்த உடனேயே, திருமணத்தை பதிவும் செய்து கொண்டான்.

 

அபர்ணாவோ, பொம்மை போல அவனுடன் இழுபட்டுக் கொண்டு சென்றவளுக்கு அடுத்து என்ன என யோசிக்க முடியாத அளவுக்கு மூளை வேலை நிறுத்தம் செய்து இருந்தது.

 

இது வரையும், அவள் விருப்பப் படியே தான் அவளது வாழ்க்கைப் பக்கங்கள் எல்லாம் அமைந்து இருந்தது.

 

அவளின் எண்ணங்கள் வழியே தான் வாழ்க்கை பயணித்தது.

 

எப்போது ஆதி அவளின் வாழ்க்கையில் நுழைந்தானோ…. அந்த நாளில் இருந்து, அவளின் மொத்த வாழக்கையும் அவன் ஒருவனுக்குள் அடங்கிப் போனது.

 

அவனது விருப்பப் படி தான் அவளது வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அசைந்து கொண்டு இருக்கிறது.

 

அவனின் இசைவில் தான் அவள் இசைவும் இருக்கிறது, அசைவும் இருக்கிறது. இதோ இப்போதும் அவன் நினைத்ததை நினைத்தபடியே முடித்துக் காட்டி விட்டான் அவன்.

 

அதுவும், அபர்ணாவின் சம்மதத்துடன்.

 

ஆனால் அவள் மனம் விரும்பி சம்மதம் சொன்னாளா? என கேட்டால் அதற்கான பதில் இல்லை என்பது தான்.

 

இப்போதும் அதனை எல்லாம் எண்ணிப் பார்த்தவள்,

 

பதிவுத் திருமணம் செய்யும் பத்திரத்தில் கை எழுத்துப் போட முடியாது, கையில் பேனையை வைத்துக் கொண்டு தடுமாறி நிற்க,

 

ஆதியோ, அவளின் காதருகே, குனிந்து,

 

“ரொம்ப யோசிக்காத பொண்டாட்டி, உன்னோட வாழ்க்கையில இனி வர்ற எல்லாப் பக்கங்களிலும் நான் இருப்பன். நான் இல்லாம உனக்கு தனிப் பக்கம் கிடையாதுடி.” என கூற,

 

தன் மனதிற்குள் ஊடுருவிப் பார்த்தது போல, தான் எண்ணியவை அனைத்தையும் உடைத்துப் பேசுபவனைக் கண்டு அவள் அதிர்ந்து விழிக்க,

 

அவளின் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தவன்,

 

“உன்னைப் பத்தி உனக்கு தெரிஞ்சத விட எனக்கு அதிகமா தெரியும்டி, ரொம்ப விழிக்காத கண்ணு முழி வெளில வந்திடப் போகுதுடி.” என கூறி கண் சிமிட்டினான்.

 

அவனின் பேச்சில் உதட்டைக் கடித்து தனது கோபத்தை அடக்கிக் கொண்டவள், எதுவும் பேசாது கையெழுத்து போட்டாள்.

 

கோடீஸ்வரனும், தன் மகளை அணைத்து வாழ்த்து தெரிவிக்க,

 

அவளோ, “அப்பா….” என தொண்டை அடைக்க அழைத்தவள், தன் கட்டுப் பாடுகளையும் மீறி ஒரு கணம் கதறி விட்டாள்.

 

அவளின் கதறலைக் கண்டு, தானும் கண் கலங்கிய கோடீஸ்வரன்,

 

“ஸ்ஸ்ஸ்…. நல்ல நாள் அதுவுமா அழக் கூடாதும்மா. ஏன் இந்த அழுகை?, ஒண்ணும் இல்லடா. மாப்பிள்ளை உன்ன நல்லாத் தான் பார்த்துப்பார்.” எனக் கூறி அபர்ணாவை சமன் செய்ய,

 

அவளோ, மனதிற்குள், “மிரட்டி கலியாணம் பண்ண சம்மதம் வாங்கின இவரா என்ன நல்லபடியா பார்த்துக்கப் போறார்?” என எண்ணியபடி ஆதியைப் பார்க்க,

 

அவளை முறைத்துப் பார்த்தவன்,

அடுத்த நொடி, அவளை இழுத்து தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு,

 

“கரெக்ட்டா சொன்னீங்க என் அருமை மாமனாரே. உங்க பொண்ணு இனி என்னோட பொறுப்பு.” என அழுத்தமாக கூறி விட்டு, அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றான்.

 

வீடு வந்ததும் காரில் இருந்து இறங்கியவன், அபர்ணா இறங்க உதவிக்காக கையை நீட்ட,

 

அவளோ, அவனது கையை தட்டி விட்டு தன் இஷ்டப் படி இறங்கினாள்.

 

ஒரு கணம் அவளைக் கூர்ந்து பார்த்தவன், மறு நொடி அவளை அணைத்துத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

 

அவனிடம் இருந்து திமிறி விலக முயன்றவள்,

 

“விடுங்க ஆதி. எல்லாரும் பார்க்கிறாங்க.” என அவனுக்கு மட்டும் கேட்கும் படி அடிக்குரலில் கூற,

 

“இத நீ என்னோட கையை தட்டி விடும் போது யோசிச்சு இருக்கணும் பொண்டாட்டி. நீ என்ன விலகிப் போக முயற்சி செய்தாலோ, இல்ல என்ன கண்டு கொள்ளாம இருந்தாலோ… நான் இரண்டு மடங்கு உன்னை நெருங்கி வருவன். அதுக்கப்புறம் நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பு இல்ல. புரிஞ்சுதா?” என அவன் உறும,

 

அதற்கு மேல் வாய் திறக்க நம்ம அபர்ணாவுக்கு தைரியம் வருமா என்ன?, அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து தலையை மட்டும் ஆம் என்பது போல ஆட்டிக் கொண்டாள்.

 

அவனும் உள்ளே நுழைந்து அவளை இறக்கி விட்டவன், அவளது கைகளை இறுகப் பற்றியவாறு, அவளுடன் இணைந்து அனைத்து சடங்குகளையும் செய்து முடித்தான்.

 

அதன் பிறகு ரெஸ்ட் எடுக்க, தனது அறைக்குள், அவளுடன் நுழைந்து கொண்டவன்,

 

அவளது முகத்தில் உள்ள களைப்பை உணர்ந்து, அவளை உறங்க சொன்னான்.

 

அவளும் அமைதியாக படுத்துக் கொள்ள, அவளை ஒரு கணம் கூர்ந்து பார்த்து விட்டு, அங்கிருந்த சோபாவில் தலை சாய்த்து அமர்ந்தவனுக்கு மனதில் அப்படி ஒரு நிம்மதி உருவானது.

 

“என்னோட செல்ல சரவெடி.” என மனதிற்குள் எண்ணிக் கொண்டவன், மென் புன்னகை உடன் தானும் கண் அயர்ந்து போனான்.

 

இரு பெண்களும், இரு ஆண்கள் மீதும் கடும் வெறுப்பில் இருக்க,

 

அவர்களின் கோபத்திற்கு மேலும் தூபம் இடுவது போல வந்து சேர்ந்தது,

 

இரு ஜோடிகளுக்குமான முதல் இரவு சடங்கு.

 

தமயந்தியோ, “இருக்கிற பிரச்சனைக்குள்ள இந்த சடங்கு தேவை தானா?” என எண்ணிப் பார்த்தவள்,

 

சிவகாமி அம்மாவிடம், “அம்மா…. இப்போ…. இந்த ச….ட….ங்….கு எல்லாம் வேணாமே. முதல்ல அவரும், நானும் பேசிப் பழகுறமே. அப்புறம் இதெல்லாம் பார்த்துக்கலாம்.” என மெதுவாக கூறிப் பார்க்க,

 

அவரோ, அவளைப் புன்னகை உடன் பார்த்து விட்டு,

 

“நீங்க எப்போ வேணும் எண்டாலும் பேசிப் பழகலாம். ஆனா, காலா காலத்துல நடக்க வேண்டியது எல்லாம் நடந்து முடியணும். அப்போ தான் எங்க ஐயாக்கு குட்டி வாரிசு வரும்.” என கூறினார்.

 

தமயந்தியோ, “எத வாரிசா?” என கண்ணை விரித்துப் பார்த்தவள், அடுத்துப் பேசும் முன்பாக,

 

“ம்க்கும்….” என குரலை செருமியபடி,

அவளின் அருகே வந்து நின்றான் அவளின் அருமைக் கணவன்,

 

அவனைக் கண்டு அவள் சற்று திகைத்துப் போய் நிற்க,

 

அவளின் தோளோடு தன் கையைப் போட்டு அணைத்துக் கொண்டவன்,

 

“என்ன சொல்றாஅம்மா என்னோட பொண்டாட்டி?” என கேட்டான்.

 

அவனின் கேள்வியில் தமயந்தி, சிவகாமி அம்மாவைப் பார்த்து,

 

கண்களால் சொல்ல வேண்டாம் என கெஞ்சி, தலையை இரு புறமும் ஆட்ட,

 

அவரும் புரிந்து கொண்டு, “அது இரண்டு பெண்களுக்கு இடையில இருக்கிற விஷயம் தம்பி, உங்க கிட்ட சொல்ல முடியாது.” என கூறினார்.

 

“ஓஹ்…. அப்படியா அம்மா. ஆனா என் அருமைப் பொண்டாட்டி என்ன சொல்லி இருப்பான்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்.” என பதிலுக்கு கூறி சிரித்தான் அவன்.

 

அதோடு மாத்திரம் நிறுத்தாது “வேற என்ன…. இன்னைக்கு எங்க இரண்டு பேருக்கும் பெர்ஸ்ட் நைட் வேணாம். நாங்க இன்னும் பேசிப் பழகணும்னு சொல்லி இருப்பா அதானே….”என கேட்க,

 

சிவகாமி அம்மா வாயில் கை வைத்தார் என்றால்…. தமயந்தியோ, ஆவென வாயைப் பிளந்தாள்.

 

அவனோ, “உங்க இரண்டு பேரோட ரியாக்ஷன் பார்க்கும் போதே தெரியுது. நான் சொன்னது தான் விஷயம்னு.” என கேலியாக கூறியவன்,

 

பிளந்து இருந்த தமயந்தியின் வாயை இரு விரல்களால் மூடினான்.

 

அவளோ, “நான்…. அது வந்து….” என தடுமாற,

 

அவளைக் கூர்ந்து ஒரு பார்வை பார்த்தவன், “உன் கூட கொஞ்சம் பேசணும் வா.” என கூறியவன்,

 

சிவகாமி அம்மாவைப் பார்த்து, “அம்மா நீங்க எல்லா ஏற்பாடையும் முறையா செய்ங்க.” என கூறி விட்டு,

 

தமயந்தியை கை பிடித்து, இழுத்துக் கொண்டு அங்கிருந்த தனது அலுவலக அறைக்குள் நுழைந்து அவளை ஒரு முறை சுழற்றி விட்டவன், கதவை சாற்றி விட்டு,

 

அதிலே சாய்ந்து நின்று அவளை உறுத்து விழித்தான்.

 

அவளோ, கையைப் பிசைந்து கொண்டு அவனைப் பார்க்க,

 

“இப்போ எதுக்குடி சிவகாமி அம்மாகிட்ட போய், எதுவும் வேணாம்னு சொன்னாய்?, அப்படி நான் உன்ன என்ன செய்துடுவன்னு உனக்கு பயம்?” என கேட்டுக் கொண்டு, அவளை நெருங்கி வந்தவன்,

 

அவள் பின்னோக்கி போகவும், அவளின் பாதங்களை பார்த்த படியே,

அவளை நெருங்கிச் சென்றான்.

 

அவளும் அவனைப் பார்த்து எச்சில் கூட்டி விழுங்கியவாறு தொடர்ந்து பின்னோக்கி நகர்ந்தவள்,

 

ஒரு கட்டத்தில், மேலும் முன்னேற முடியாது சுவரில் மோதி நிற்க,

அவனோ, ஒரு கேலிப் புன்னகையுடன்,

 

“என்ன மேடம் இதுக்கு மேல போக முடியலயா?” என கேட்டவாறு,

 

அவளின் இரு புறமும் கைகளை ஊன்றி அவளை நோக்கி குனிந்தான்.

 

அவளோ, அவனைப் பார்த்தவாறு சுவரோடு மேலும் ஒன்ற,

அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்தவன்,

 

“என்ன பொண்டாட்டி பயம் உனக்கு?, இப்படி உன்ன தொடுவன்னா….” என அவளின் நெற்றியில் ஒற்றை விரலால் கோலம் போட்டவனின் கை அவளின் முகம் முழுவதும் பயணிக்க ஆரம்பித்தது.

 

தமயந்தியோ, அவனின் செய்கையில் விக்கித்துப் போய் நின்றாள்.

 

தீரனோ, தனது பெரு விரலால் அவளின் உதடுகளை அழுத்தி வருடியவன்,

 

“அடுத்து என்ன பயம்?, இப்படி அணைப்பன்னா….” என அவளின் இடையோடு கை விட்டு தன்னுடன் சேர்த்து நெருக்கி அணைத்துக் கொள்ள,

 

அவனை அதிர்ந்து பார்த்த தமயந்தியின் இரு கண்களிலும் மாறி மாறி முத்தம் பதித்தவன்,

 

“இல்ல இப்படி முத்தம் கொடுத்துடுவன்னு பயமா?” என கேட்க,

 

அவனது அதிரடியில் மலைத்துப் போய் நின்றவள்,

 

அவனைப் பிடித்து தன்னில் இருந்து விலக்கித் தள்ள,

 

அவனோ, அசைவேனா என்பது போல நின்று இருந்தான்.

 

அதற்கு மேல் தன்னையே கட்டுப் படுத்த முடியாதவன், அவளின் இரு கன்னங்களிலும் அழுந்த முத்தம் பதித்தான்.

 

அதோடு நிறுத்தாது, அவளின் திமிறலையும் பொருட் படுத்தாது, அவளின் இதழ்களிலும், அவனது இதழ்கள் குடி புகுந்து தேன் அருந்த ஆரம்பித்தது.

 

அவளோ, தனது பலம் மொத்தமும் பிரயோகித்துப் பார்த்தும்,

 

எதுவித பலனும் இல்லாது போக, சோர்வுடன் தொய்ந்து கைகள் விழ, அவனின் அணைப்புக்குள் கட்டுப் பட்டு நின்றாள்.

 

அவனோ, வெகு ஆறுதலாக அவளை முத்தம் இட்டு முடித்து விட்டு நிமிர்ந்தவன்,

 

அவளது கண்களுடன் கண்களை கலக்க விட்டு, “எனக்கும் உனக்கும் இடையில இருக்கிற விஷயங்கள் வெளில யாருக்கும் தெரியுறது எனக்கு பிடிக்காது, பார்த்து நடந்துக்கோ பொண்டாட்டி. இல்லன்னா…. இந்த மாதிரித் தான் நிறைய அனுபவிக்க வேண்டி இருக்கும். என்கிட்ட இருந்து உனக்கான தண்டனை, இப்படித் தான் இனி மேல் கிடைக்கும், அத நீ விரும்பினா…. தப்புப் பண்ணு.” என கூறி, அவளின் கன்னத்தில் தட்டி விட்டு சென்றான் அவன்.

 

அவனது செய்கைகளில், பித்தம் மொத்தமும் தலைக்கு போய், தலை கிறு கிறுத்துப் போய் நின்று கொண்டு இருந்தாள் அவள்.

 

சற்று நேரம் கழித்து அப்படியே மடிந்து அமர்ந்தவள், சுய நினைவுக்கு வந்தது, கடிகார முள்ளின் ஓசையில் தான்.

 

ஒரு பெரு மூச்சுடன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவள்,

 

நேரடியாக சென்றது என்னவோ, வாஷ் ரூமுக்குள் தான்.

 

அவளின் கால்கள் ஒவ்வொரு அடிக்கும் நடுங்க ஆரம்பித்தது.

 

ஆனாலும், சமாளித்துக் கொண்டு முகத்தை நீரினால் அடித்துக் கழுவியவள்,

உதடுகளையும் அழுந்த தேய்த்துக் கழுவினாள்.

 

அவன் முத்தம் இட்ட இடம், தொட்ட இடம் அனைத்தும் அவளைக் குறு குறுவென ஏதோ பண்ண,

 

அங்கிருந்த சுவரில் சற்று நேரம் சாய்ந்து நின்றாள்.

 

எவ்வளவு நேரம் அப்படியே நிற்க முடியும்?

 

ஒருவாறு தன்னை சமன் செய்து கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தவள்,

 

ஹாலில் சோபாவில் அமர்ந்து போன் பார்த்துக் கொண்டு இருந்தவனை நிமிர்ந்தும் பாராது விறு விறுவென மாடியேறிச் சென்றாள்.

 

அவள் போகும் வரைக்கும் ஓரக் கண்ணால் அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தவன்,

 

அவள் ஓடிப் போகவும், அவளைப் பார்த்து உதட்டுக்குள் சிரித்துக் கொண்டபடி, தனது உதடுகளை நாவால் ஈரம் பண்ணிக் கொண்டான்.

 

அவளை முத்தம் இட வேண்டும் என அவன் பிளான் பண்ணி எதையும் செய்யவில்லை.

 

அவளை மிரட்ட ஆரம்பித்த முத்தம் எப்போது மோக முத்தமாக மாறிப் போனது என அவனுக்கே தெரியவில்லை.

 

அவனின் மனமோ, “என்ன பண்ணி வைச்சு இருக்கேன். என்னோட மனசு ஒரு கண்ட்ரோல்லயே இருக்க மாட்டேங்குது. பொண்டாட்டி என்கிற உரிமை வந்ததும், மனசு தறி கெட்டு ஓடுது. ஏற்கனவே, அவ வெறுப்பில இருக்கா. இப்போ கேட்கவே வேணாம். ஆனாலும் அவளோட அந்த மென்மையான சருமம்….” என எண்ணியவன் தலையை உலுக்கிக் கொண்டான்.

 

அவனின் நினைவுகள் மொத்தமும் அவளை சுற்றியே சென்றது.

 

ஆனால் அதன் பிறகு, அவளும் அவன் இருக்கும் இடம் நோக்கி செல்லவும் இல்லை.

 

அவனும் அவளின் மனம் அறிந்து அவளை சீண்டவில்லை.

 

நேரம் தன் பாட்டுக்கு கடந்தோட, அழகாக இரவுப் பொழுதும் வந்து சேர்ந்தது.

 

இரவின் காதலி நிலா மகளும் தன் காதலனைத் தேடி ஓடி வர,

 

அவர்களின் காதல் நாடகம் அரங்கேற வசதியாய் இருட்டு எனும் போர்வை அனைத்து இடங்களையும் ஆக்கிரமிக்க, அந்த ஜோடிகளின் காதல் மேல் பொறாமை கொண்ட நட்சத்திரங்கள், ஒன்று சேர்ந்து கண் சிமிட்டி மென் ஒளி பரப்பி அவர்களை கலைக்க முயன்று கொண்டு இருந்தன.

 

இயற்கையும் காதல் வயப்பட்டு இருக்கும் அந்த அழகான நேரத்தில்,

 

சிவகாமி அம்மா வற்புறுத்தி கொடுத்து விட்ட பால் செம்புடன், தீரனின் அறைக்குள் புகுந்தாள் தமயந்தி.

 

தீரனோ, மென் மஞ்சள் புடைவையில் தேவதை போல வந்தவளை, மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவன், எழுந்து அவளை நோக்கி வர,

 

அவனைப் பயப் பார்வை பார்த்தவள், அசையாது அப்படியே நிற்க,

 

அவளை நெருங்கி வந்து, அவளது கையில் இருந்த பால் செம்பை வாங்கி அருகில் இருந்த மேசையில் வைத்தவன், அவளின் கைகளைப் பற்ற அதுவோ, குளிர்ந்து போய் இருந்தது.

 

அந்தக் கையை மென்மையாக வருடி விட்டவன்,

 

அவளை அணைத்துத் தூக்கிக் கொள்ள,

 

தமயந்தியோ, திகைத்துப் போய் அவனைப் பார்த்து இல்லை என்பது போல தலையாட்ட,

 

தீரனோ, கண் சிமிட்டி சிரித்து விட்டு,

கட்டில் நோக்கி போக, திமிறியவள்,

 

“ப்ளீஸ் தீரா…. வேணாம். இது மட்டும் வேணாம்.” என பதறியபடி கூற,

 

அவளை மென்மையாக கட்டிலில் படுத்தியவன்,

 

அவளின் வாயில் விரலை வைத்து,

“ஸ்ஸ்ஸ்…. உன்ன எதுவும் பண்ண மாட்டேன்டி. பேசாம தூங்கு.” என கூறி விட்டு அவளின் மறு பக்கம் வந்து படுத்துக் கொள்ள,

 

 

ஒரு நிம்மதிப் பெரு மூச்சுடன், போர்வையை தலை வரை இழுத்து மூடிக் கொண்டு படுத்தாள் அவள்.

 

அவனும், ஒரு மென் புன்னகை உடன் உறங்கிப் போனான்.

 

************************************************************************************************

மறு புறம், தூங்கி எழுந்த அபர்ணா அறையை சுற்றிப் பார்க்க,

 

அங்கு ஆதியைக் காணாது போகவே,

 

“ஸ்சப்பா….நல்ல வேளை அந்த ஹிட்லர காணல.” என முணு முணுத்தவள், எழுந்து சாப்பிட சென்றாள்.

 

அதன் பிறகு, அன்றைய நாள் இரவு வரும் வரையும், அவள் அவனைக் காணவே இல்லை.

 

அவன் வீட்டில் இல்லை என்பது மட்டும் அவளுக்கு நன்கு புரிந்தது.

 

அடுத்து அவளை முதலிரவுக்காக தயார் படுத்தினார்கள் அங்கு உள்ளோர்.

 

அவளும் அதற்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லை.

 

முதலில் முதலிரவு பற்றி நினைத்து உள்ளுக்குள் பயந்து உதறல் எடுத்தாலும், அதுவரையும் ஆதி வீட்டுப் பக்கம் வராததினால் அவளும் பெரிதாக அலட்டிக் கொள்ளாது அமைதியாக ரெடியானாள்.

 

அவள் ரெடியாகவும், அவளின் கையில் பால் செம்பை கொடுக்கும் அதே நேரம், வீட்டுக்கு வந்து சேர்ந்தான் ஆதி.

 

அவனின் வருகையை எதிர் பாராதவள், திகைத்து நிற்க,

 

அவளைப் புருவம் தூக்கி ஒரு பார்வை பார்த்து விட்டு, “எனக்கு ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுங்க. ரெடியாகுறேன்.” என கூறி விட்டு சென்றவன்,

 

சரியாக பத்து நிமிடங்கள் கழித்து, ஹாலில் உள்ள போனுக்கு கால் பண்ணி அபர்ணாவை அனுப்ப சொன்னான்.

 

அபர்ணாவுக்கோ, அதுவரையும் இருந்த தைரியம் மொத்தமும் காணாது ஓடிப் போக,

 

ஒரு வித பதட்டத்துடன் , அவனின் அறைக்குள் புகுந்து கொண்டவள்,

 

அவன் இருந்த நிலையைக் கண்டு திகைத்துப் போய் அப்படியே நின்றாள்.

 

அப்படி அபர்ணா அதிர்ச்சி அடைந்து நிற்க காரணம் என்ன?

 

இரு ஆண் மகன்களும் அவரவர் ஜோடிகளின் மனதில் இடம் பிடிப்பார்களா?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்.. 🥰🥰

 

லேட் எபிக்கு மன்னிச்சு 🥰🥰🥰🥰

இது ரொம்ப பெரிய எபி மக்காஸ் படிச்சிட்டு சொல்லுங்க🥰🥰

 

இன்று நைட் அடுத்தடுத்த எபிகள் வரும்.

 

நம்பி படிக்கலாம் மக்காஸ்.

 

லைக்ஸ் முப்பது போட்டு வைங்க … எபியோட வரேன்.

 

அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள் 🥰🥰🥰

 

எண்ணிய காரியங்கள் யாவும் ஈடேறி சுபீட்சமாக வாழ வாழ்த்துக்கள் மக்காஸ் ❤❤

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 25”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!