இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 27

4.6
(26)

Episode – 27

 

முதல் நாள் இரவு வழக்கம் போல வேலை முடித்து வீட்டுக்கு வரும் போது, நல்ல மழை பொழிய ஆரம்பித்து இருந்தது.

 

தீரனுக்கு மழை என்றால் கொள்ளைப் பிரியம்.

 

நிலத்தில் விழும் ஒவ்வொரு துளிகளையும் அத்துணை காதலோடு ரசிப்பான் அவன்.

 

மழையோடு சேர்ந்து வீசும் மண் மணத்தை சுவாசித்து நாசிக்குள் சேர்த்து வைப்பதில் அலாதிப் பிரியம் கொண்டவன் அவன்.

 

இவை அனைத்தையும் அவனது இருண்ட வாழ்க்கைக்கு பிறகு ஒதுக்கி வைத்து இருந்தான்.

 

ஆனால், தமயந்தி அவனது வாழ்க்கையில் வந்ததற்குப் பிறகு, அவளுடன் தான் இழந்த சிறு சிறு சந்தோசங்களையும் ரசிக்கும் அளவு கடந்த ஆசையை தனக்குள் பொத்தி வைத்து இருக்கிறான் அவன்.

 

இப்போதும், அந்த ஆசை முகிழ்க்க,

தனக்கு அருகில் அமர்ந்து இருந்த தனது தேவதையை திரும்பிப் பார்த்தான்.

 

அவளோ, சிறு குழந்தை போல, வாய் பிளந்து உறங்கிக் கொண்டு இருந்தாள்.

 

இரவில் அவனின் அருகில், அவனது அணைப்பில் உறங்குவதாலோ என்னவோ…. அவள் ஆழ்ந்து உறங்குவது இல்லை.

 

அது தீரனுக்கும் நன்றாகவே தெரியும்.

 

ஆனாலும் அவளது அணைப்பை அவன் இழக்க விரும்பவில்லை.

 

அவனுக்கு அவள் அருகில் வேண்டும். ஆகவே அந்த ஏற்பாட்டை அவன் மாற்றவே இல்லை.

 

அதற்குப் பதிலாக, அவளுக்கு ஆபீஸ்சில் ஒரு மணித்தியாலம் லீவு கொடுத்து இருந்தான்.

 

அதே போல, போகும் போதும், வரும் போதும் அவள் உறங்குவதை அவன் தடுப்பதும் இல்லை. அவள் உறங்க வேண்டும் என்பதற்காகவே காரை மெதுவாக ஓட்ட வேண்டும் என ஆர்டர் போட்டு இருந்தவன்,

 

இறுதியில் தானே காரை ஓட்ட ஆரம்பித்தும் இருந்தான்.

 

அவனுக்கு அவள் அருகில் இருந்தால் மட்டும் போதும். என்கிற மனநிலை தான்.

 

இப்போதும், அவளை வாஞ்சையாக பார்த்து விட்டு, அவளது தூக்கம் கலையாதவாறு அவளின் தலையை வருடி விட்டான்.

 

வீட்டுக்கு வந்து காரை நிறுத்தியவன், ஒரு ஐடியாவுடன்

மறு புறம் வந்து, தமயந்தியை அவளது தூக்கம் கலையாதவாறு தூக்கி கொண்டு அங்கிருந்த கார்டன் நோக்கி விரைந்தான்.

 

ஒவ்வொரு துளிகளும் அவளின் மீது விழ தூக்கம் கலைந்தவள்,

 

அப்போது தான் தனது கணவனின் கைகளில் தான் இருப்பதையும், மழையில் நனைவதையும் உணர்ந்து கொண்டு,

 

“அச்சோ…. தீரா என்னது இது?, எதுக்கு இப்போ மழைக்குள்ள என்னைத் தூக்கி வந்தீங்க?, முதல்ல என்னை இறக்கி விடுங்க. கடவுளே…. இது என்ன மழை இப்படி கொட்டுது?” என புலம்பியபடி திமிற,

 

தீரனோ, அசராது நின்றவன்,

“ஸ்ஸ்ஸ்ஸ்…. தமயந்தி எதுக்கு இப்போ இவ்வளவு பதட்டம்?” என கேட்டவாறு அவளை மெதுவாக இறக்கி விட்டவன்,

 

அவள் மழைக்கு பயந்து ஓட ஆரம்பிக்கவும்,

 

அவளை இழுத்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டு, அவளின் இரு கன்னங்களையும் தாங்கிப் பிடித்தபடி,

 

மிக மிக மென்மையான குரலில்,

“உன் ஆடை பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது.

 

உன் ஓரப் புன்னகையாய் பெரும் தூரல் வருகிறது.

 

உன் முகத்தில் அசையும் முடி, எனைத் துளியாய் நனைக்கிறது.

 

உன் கைகள் தீண்டுவதால் அடை மழையே பொழிகிறது.

 

போதும் போ…. நீ போ…. என் கண்கள் வலிக்கிறது.

 

ஓ…. நீ போ…. நீ போ….என் உள்ளம் உருகிறது.

 

விழியே விழியே பேசும் விழியே….

ஒரு பார்வைப் பார்த்தாய்.

 

மழையே…. மழையே…. நெஞ்சில் மழையே

தனியே தனியே வாழ்ந்தேன்.

 

தனியே…. நான் மண்ணின் மேலே

இனிமே…. இனிமே…. நீதான் துணையே.

 

மழையே மழையே தூவும் மழையே…. இது காதல் தானா.” என பாட,

 

அவனது உயிர் உருக வைக்கும் குரலில் அப்படியே மெய் மறந்து அவனையே இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள்.

 

அவனது கடைசி வரியில்,

“இது காதல் தானா….” என முடித்து இருந்தவன், இரு புருவங்களையும் உயர்த்தி “ஆமாவா?” என கேட்க,

 

அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளின் தலையும் அவளின் சம்மதம் இன்றியே ஆமாம் என்பது போல அசைந்தது.

 

தீரனோ, அவளின் ஒற்றைத் தலையசைப்பில் மொத்தமும் கிறங்கிப் போனவன்,

 

அவளின் முகத்தை ஏந்தி முத்த மழை பொழிய ஆரம்பித்து இருந்தான்.

 

இம்முறை, தமயந்திக்கும் அவனை மறுக்க மனம் வரவில்லை.

 

அவனுக்கு இயைந்து கொடுக்காது போனாலும், அவனின் விருப்பப் படி அமைதியாக நின்று கொண்டு இருந்தாள் பெண்ணவள்.

 

மழை சற்று வலுத்துப் பெய்ய ஆரம்பிக்க,

 

அவனின் முத்த வேகமும் அதற்கு ஏற்றாற் போல கூடியதே தவிர கொஞ்சமும் குறையவில்லை.

 

அவனின் முத்த தாக்குதலில் மொத்தமும் துவண்டு போனாள் அவள்.

 

அவளின் நிலை உணர்ந்து தன்னை ஒரு நிலைப்படுத்தியவன்,

 

அவளை விட்டு விலகி, அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டு,

அந்த மழையில் சுழன்று ஆட ஆரம்பித்தான்.

 

அவனது செய்கையில், தமயந்திக்கு பயம் வந்தாலும், அவன் இழுத்த இழுப்புக்கு அவனுடன் ஒன்றிப் போனாள்.

 

அதற்கு காரணம் சிறு குழந்தை போல அவனது முகத்தில் இருந்த கள்ளமில்லா சிரிப்பும், பொலிவும் தான்.

 

அந்த சந்தோஷம் தன்னால் கெட்டு விடக் கூடாது, அந்தப் புன்னகை தன்னால் வாடிப் போய் விடக் கூடாது என அவள் திடமாக எண்ணினாள்.

 

அது வழக்கம் போல மஞ்சள் கயிறால் வந்த மாயமா?, இல்லை கடந்த சில நாட்களில் அவன் அவளிடம் காட்டிய அன்யோன்யத்தினால் வந்ததா? என அவளே அறியாள்.

 

அவனுடன் சேர்ந்து மழையில் நனையும் போது, அவளின் மூளை,

 

“போதும் நிறுத்து தமயந்தி…. உனக்கும் மழைக்கும் ஆகாது…. நாளைக்கு உனக்கு காய்ச்சல் வரப் போறது உறுதி.” என எச்சரிக்கை விடுக்க,

 

அதனை ஒதுக்கி வைத்தவள், தீரனுடன் ஒன்றிப் போனாள்.

 

அவனுடன் சேர்ந்து மழையில் போதும் போதும் என்கிற மட்டும் நனைந்தவள், உடை மாற்றும் போதே காய்ச்சல் வருவதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிய ஆரம்பித்து இருந்தது.

 

ஆனால் அதனைப் பற்றி ஒரு வார்த்தை கூட தீரனுக்கு சொல்லாது, அவனுக்கு அருகில் படுத்து, வழக்கம் போல போர்வையை இழுத்து மூடிக் கொண்டு உறங்கி விட்டாள்.

 

அதன் பிரதிபலிப்புத் தான் காலையில் ஏற்பட்ட கடும் ஜுரம்.

 

தீரனோ, அனைத்தையும் எண்ணிப் பார்த்து விட்டு,

 

“நைட்டே வாயைத் திறந்து சொல்லி இருந்தா…. நான் இப்படி ஆக விட்டு இருக்கவே மாட்டன். சே…. இப்போ அவ தான் கஷ்டப் படுறா. எனக்கு மழையில நனையுறது பிடிக்கும்னு அவளையும் சேர்த்து ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்.” என தலையில் தட்டிக் கொண்டவன்,

 

வைத்தியர் வரவும், அவரிடம் இருவரும் மழையில் நனைந்த விடயத்தை மேலோட்டமாக கூறியவன், அவரை உடனடியாக தமயந்தியை செக் பண்ண சொன்னான்.

 

அவரும் பார்த்து விட்டு, “கொஞ்சம் ஹை பிவேர் மாதிரித் தான் இருக்கு, அவங்களுக்கு மழையில நனைஞ்சது ஒத்து வரலப் போல. அத விட இவங்க கொஞ்சம் வீக்காவும் இருக்காங்க. ஒழுங்கா சாப்பிட சொல்லுங்க. இப்போ நான் ஒரு இன்ஜெக்ஷன் போட்டுட்டுப் போறன். இன்னும் ஒரு மணி நேரத்துல அவங்க கண் முழிச்சுடுவாங்க. அப்படி இல்லன்னா தான் கொஞ்சம் ப்ரோப்லேம். அப்படி இருந்தா உடனே உங்க ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக் கொண்டு வாங்க ஓகேவா சார்?” என கேட்க,

 

தீரனும், “ஓகே டாக்டர்.” என கூறிக் கொண்டவன், அவரிடம் அவளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் பற்றியும் கேட்டு வைத்துக் கொண்டான்.

 

அவரும், பொறுமையாக அவனது கேள்விகளுக்கு பதில் கூறியவர்,

இன்ஜெக்ஷனைப் போட்டு விட்டு, மருந்துகள் சிலவற்றையும் எழுதிக் கொடுத்து விட்டு செல்ல,

 

தமயந்தியின் அருகிலேயே உட்கார்ந்து இருந்தான் தீரன்.

 

சிவகாமி அம்மா, தான் பார்த்துக் கொள்வதாக சொல்லிக் கேட்டும் மறுப்புத் தெரிவித்தவன்,

 

அவள் கண் விழிக்கும் வரைக்கும் அவளையே பார்த்தபடி அமர்ந்து இருந்தான்.

 

தமயந்தியும், சரியாக ஒரு மணித்தியாலத்தில் கண் விழிக்க,

 

அந்த நொடிக்காக காத்து இருந்தவன் போல, வேகமாக சென்று அவளின் நெற்றியை தொட்டுப் பார்த்தவன், காய்ச்சல் மட்டுப் பட்டு இருப்பதைக் கண்டு ஒரு பெரு மூச்சுடன்,

 

தமயந்தியை மெதுவாக தூக்கி அமர வைத்து விட்டு,

 

“இப்போ உடம்பு எப்படி இருக்குடி?, வேறு ஏதும் பண்ணுதா?, தலை சுற்றல், வாந்தி அப்படி ஏதும் இருக்கா?” என கேள்விகளை அடுக்க ஆரம்பித்தான்.

 

அவனின் பதட்டமான முகத்தையே இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தவள்,

 

“நான்…. ஓகே…. தான்…. தீரா.” என மெதுவாக கூறினாள்.

 

தீரனும், உடனே, சிவகாமி அம்மாவுக்கு அழைத்து அவளுக்காக கஞ்சி கொண்டுவர சொன்னவன்,

 

அவளை முகம் கழுவ அழைக்கும் நேரம், அவனின் போனுக்கும் ஒரு அழைப்பு வந்தது.

 

அந்த அழைப்பை ஏற்றவன், “நோ… இன்னைக்கு என்னால வர முடியாது. எத்தனை கோடி டீல் என்றாலும் போஸ்ட் போன் பண்ணுங்க. இல்லன்னா கான்செல் பண்ணுங்க. ஐ டோன்ட்கேர்.” என கூறி விட்டு வைக்க,

 

அவனின் பேச்சைக் கேட்ட தமயந்தி முயன்று,

 

“ஏன் தீரன்…. ப்ளீஸ்…. எனக்கு ஒண்ணும் இல்ல…. சாதாரண பீவர் தான். இதுக்காக நீங்க ப்ராஜெக்ட் எல்லாம் கான்செல் பண்ண வேணாம் ப்ளீஸ்.” என கூற,

 

அவளையே ஆழ்ந்து பார்த்தவன்,

 

“எனக்கு என் பொண்டாட்டியோட ஹெல்த்த விட எதுவுமே முக்கியம் இல்ல.” என கூறி விட்டு,

 

அவளை வாஷ் ரூமுக்குள் தூக்கிக் கொண்டு சென்று விட்டவன் வெளியில் வந்து நின்றான்.

 

அவள் தனது தேவைகளை முடித்து விட்டு வரவும், மீண்டும் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து உட்கார வைத்தவன்,

 

அவளுக்கு, சிவகாமி அம்மா கொண்டு வந்த கஞ்சியை ஊட்ட,

 

அவரோ புன்னகை உடன் இருவரையும் பார்த்து விட்டு வெளியேறி சென்றார்.

 

தமயந்தியோ, “நானே….” என ஆரம்பித்தவள், அவனது முறைப்பில் அமைதியாக அவன் ஊட்டுவதைக் குடிக்க ஆரம்பித்தாள்.

 

அவளுக்கு ஊட்டியபடியே “உனக்கு மழையில நனையுறது பிடிக்காதுன்னா ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே.” என ஆதங்கமாக கேட்க,

 

அவளோ, சற்றும் யோசிக்காது,

“உங்களுக்கு பிடிச்சு இருந்துதே. உங்க முகத்தில இருக்கிற புன்னகை மாறக் கூடாதுன்னு நினைச்சேன். அப்போ அது மட்டும் தான் முக்கியமா தோணிச்சு.” என கூறினாள்.

 

அந்த வார்த்தைகளில் முகம் மலர்ந்து போனவனுக்கு,

 

உள்ளுக்குள் ஜில்லென்ற ஒரு உணர்வு உண்டானது.

 

அவள் மனம் தன் பக்கம் சாய ஆரம்பித்து விட்டது என உணர்ந்து கொண்டவனுக்கு அத்துணை மகிழ்ச்சி.

 

அவன் ஒரு புன்னகை உடன் ஊட்ட ஆரம்பிக்க, அவளும் அவனைப் பார்த்த படியே கஞ்சியை குடிக்க ஆரம்பித்தாள்.

 

அன்றைய நாள் முழுவதும், அவளின் அருகில் இருந்து அவளை ஒரு குழந்தை போல பார்த்துக் கொண்டான் அவன்.

 

அவள் மருந்து போட முகம் சுளித்த போது, கொஞ்சிக் கெஞ்சி மருந்து போட வைக்கும் போதும் சரி, உணவு ஊட்டும் போதும் சரி, அவளை அடிக்கடி செக் பண்ணும் போதும் சரி…. அவனது செய்கைகளில் ஒரு வித தாய்மை உணர்வு தான் நிறைந்து இருந்தது.

 

“இவனா…. வெளியில் கொடூரனாய் மாறி கொலை செய்கிறான்?”

“இவனா தொழிலில் எதிரிகளைக் கண்டு கர்ஜிக்கிறான்?” என தமயந்திக்கே சந்தேகம் வரும் அளவுக்கு இருந்தது அவனது செயல்கள்.

 

அவளுக்கு உடம்பு குணம் ஆனாலும் கூட,

 

மறு நாளும், அவளை வேலைக்கு வர வேண்டாம் என கூறியவன்,

 

வேலை நடுவிலும் அவளுக்கு போன் பண்ணி அவளின் நலனை விசாரிக்க தவறவில்லை.

 

ஆக மொத்தம் ஐடியல் ஹஸ்பண்ட்டாக நடந்து கொண்டான் அவன்.

 

மறு புறம், ஆதியோ, அபர்ணாவை ஓரக்கண்ணால் சைட் அடிப்பதும், அவள் பார்க்கும் போது உதடுகள் குவித்து முத்தம் இடுவது போல சைகை செய்து அவளை வெட்கப்பட வைப்பதும்,

 

ஆட்கள் அருகில் இல்லாத போது, அவளை அணைத்து முத்தம் இடுவதும், அவள் முறைக்கும் போது, இன்னும் சில சேட்டைகள் செய்து அவளை மேலும் கடுப்பு ஏற்றுவதும் என தனக்கு என தனி லவ் ட்ராக்கில் போய்க் கொண்டு இருந்தான்.

 

தீரனின் அக்கறையோடும், தமயந்தியின் புரிந்துணர்வோடும், ஆதியின் அடாவடிக் காதலோடும், அபர்ணாவின் துடுக்குத் தனத்தோடும் அடுத்தடுத்த நாட்கள் ஓடிப் போக,

 

ஒரு கிழமை முடிந்ததும், ஆதி தான் சொன்ன படியே அபர்ணா மற்றும் கோடீஸ்வரனை அழைத்துக் கொண்டு தீரனின் மாளிகை முன்னால் தனி ஒருவனாக வந்து இறங்கினான்.

 

ஆனால் அவனது பாதுகாப்புப் படைகள் யாவும், எந்நேரமும் தமது பாஸ்ற்கு துணையாக களம் இறங்கவென அடுத்த தெருவில் முழு வேகத்துடன் காத்துக் கொண்டு இருந்தனர்.

 

அதே போல, அந்த நாள் விடியல்ப் பொழுதில் காலண்டரில் உள்ள டேட்டைப் பார்த்த தீரன்,

 

“இன்னைக்கு நமக்கு ஒரு செம என்டர்டைமென்ட் இருக்கு. எப்படியும் அந்தப் பொடிப் பையன் தன்னோட மாமனாரோட, என் தமயந்தியை கூப்பிட வருவான். அவனுக்கு நான் சூப்பர் மரியாதை கொடுத்து அனுப்பணும்.” என எண்ணியபடி விசில் அடித்துக் கொண்டு ரெடியாகி, கீழே வராது பால்கனிக்கு சென்றவன், தமயந்தியையும் அங்கு பேசவென வரவழைத்தான்.

 

இரு சிங்கங்களும் ஒன்றுக்கொன்று முட்டிக் கொள்ளுமா?

 

தமயந்தி எடுக்கப் போகும் முடிவு என்ன?

 

அக்கா, தங்கை இருவரும் இணையும் வாய்ப்பு வருமா?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்.. 🥰🥰

 

கொஞ்சம் பெரிய எபி தான் மக்காஸ்….

 

எல்லாரும் டபுள் எபி கேட்குறீங்க.

 

ஓகே டீல்…. நீங்க நான் கேட்குற 30 லைக்ஸ் கொடுங்க.. ரேட்டிங்ஸ் 30 கொடுங்க. நான் டபுள் எபி தரேன். டீல்.

 

அப்புறம் இந்த கதையில பிளாஷ் பேக் தான் ஹை லைட் அது வந்தா கதை முடியும் தருவாய்னு அர்த்தம் ஓகேவா? 🥰🥰🥰

 

நம்பி படிக்கலாம் மக்காஸ்.

 

லைக்ஸ் முப்பது போட்டு வைங்க … நாளைக்கு எபியோட வரேன்.

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 27”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!