Episode – 29
அடுத்த பத்து நிமிடங்களில், தீரன் சொன்னது போலவே,
கோடீஸ்வரனுக்கு ஒரு போன் வந்தது.
அதிலே, அவரது புடவைக் கடை மீண்டும் தீப் பிடித்து விட்டதாகவும், உடனடியாக கிளம்பி வரும் படியும் கூறியதுடன், அவருக்கு கடை தீப் பற்றி எரியும் வீடியோ ஒன்றும் அனுப்பப் பட்டு இருந்தது.
அந்த வீடியோவைக் கண்டதும், நெஞ்சில் கை வைத்துக் கொண்டவர்,
“அச்சோ…. மறுபடியும் என்னோட கடை என்னை விட்டுப் போயிடிச்சே…. எனக்குன்னு இருந்த ஒரே ஒரு சொத்து அது தானே. இப்போ என்ன செய்றது?, என்னால இனி இந்த ஜென்மத்துல மீள முடியாது போலயே. இனி என்ன செய்வன் நான்.” என புலம்ப ஆரம்பித்து விட்டார்.
அவரின்அழுகை, மற்றும் புலம்பலில், ஒரு நொடி புருவம் சுருக்கி விரித்த ஆதி,
“என்னாச்சு, எதுக்கு இப்போ இத்தனை ஆர்ப்பாட்டம் பண்றீங்க மிஸ்டர் கோடீஸ்வரன்?” என அமர்த்தலாக கேட்டான்.
அவரும், “மாப்பிளை இந்த வீடியோவைக் கொஞ்சம் பாருங்க. உங்களுக்கே உண்மை புரியும்.” என அவனிடம் போனை நீட்ட அவனும் வாங்கிப் பார்த்தான்.
அதே நேரம், அபர்ணாவும் எழுந்து வந்து அவனுக்கு அருகே நின்று பார்க்க,
கிட்சனிற்குள் நின்ற தமயந்தியும் சத்தம் கேட்டு, வெளியே வந்தவள்,
ஆதியின் பின்னால் வந்து நின்று போனில் உள்ள வீடியோவைப் பார்த்தாள்.
ஆதிக்கோ, அந்த வீடியோவைக் கண்டு முதலில் அதிர்ச்சி ஏற்பட்டாலும், வெளியே காட்டிக் கொள்ளாது குரலை செருமியவன்,
“இதில ஏதோ ஒரு விஷயம் இருக்கு. அதெப்படி, நாங்க இங்க வந்து இருக்கும் போது சரியா அங்க உங்க கடை தீப்பிடிச்சு இருக்கு?, எங்கயோ இடிக்குதே.” என கூறி தாடையைத் தடவியவன்,
அங்கிருந்த சிசி டீவியை உற்றுப் பார்த்து விட்டு,
“நடக்கிறது எல்லாம் நல்லதா இல்லயே. யாரோ பிளான் பண்ணிப் பண்ணுற மாதிரி இருக்கு. நமக்கு வேணும்னே கட்டம் கட்டுறாங்க.” என கூறியவன்,
இடைவெளி விட்டு, “சரி நாம கிளம்பலாம். இன்னொரு நாள் வந்து தீரன் சாரை மீட் பண்ணலாம்.” எனவும் கூறினான்.
அவன் கூற முதலே அந்த முடிவுக்கு தான் வந்து இருந்தார் கோடீஸ்வரன்.
அவரும், “இப்போ தான் தமயந்தி இருக்கிற இடம் தெரிஞ்சு போச்சே. இனி அடிக்கடி வந்து பொண்ணப் பார்த்துக்கலாம். அவளுக்கும் திடீர் என கலியாணம் ஆகி இருக்கு. நாம ஆறுதலா வந்து எல்லாம் பேசித் தீர்த்துக்கலாம். முதல்ல இங்க இருந்து கிளம்புவம் சின்ன மாப்பிளை.” என கூற,
தமயந்தியோ, “அப்பா….” என நா தழு தழுக்க அழைத்தாள்.
அதே நேரம் அபர்ணாவும், “கடவுள் நம்மள ரொம்ப சோதிக்கிறார் அப்பா.” என கண் கலங்கிக் கூற,
இரு பெண்களையும் தன் அருகே வருமாறு அழைத்த கோடீஸ்வரனோ, அவர்களை இரு கைகளாலும் அணைத்தவாறு,
“எல்லாம் நம்ம காலம்டாம்மா. நீங்க இரண்டு பேரும் கொஞ்சம் பொறுமையா, கவனமா நடந்து கொள்ளுங்க. நான் உங்க இரண்டு பேரோடயும் முக்கியமான விஷயம் ஒண்ணு கதைக்கணும். ஆனா இப்போ என்னால அத சொல்ல முடியாது. அப்புறமா பேசுறன். அப்புறம் தமயந்திம்மா, ஒண்ணும் யோசிக்காம வாழ்க்கைய அதன் போக்கில வாழப் பாரும்மா.” என கூறியவர்,
அபர்ணா புறம் திரும்பி, “போகலாமா?” என கேட்க,
அவளோ, பதில் எதுவும் கூறாது, தனது தமக்கையையே கண் கலங்கப் பார்த்தாள்.
தமயந்தியோ, அழுகை கலந்த புன்னகை ஒன்றுடன் அபர்ணாவை அணைத்து விடுவித்து விட்டு,
“எல்லாம் நல்லதே நடக்கும்னு
நினைப்பம். போய்ட்டு வா.” என கூற,
அவர்கள் மூவரும் புறப்பட்டுச் சென்றனர்.
வாசலில் நின்று அவர்கள் மூவரும் செல்வதைக் கண்ணீர் வழிய பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு மனதில் மேலும் பாரம் ஏறிப் போனது.
அதே நேரம் நடக்கும் அனைத்தையும், சிசிடீவி வழியே பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தான் நம்ம ஹீரோ தீரன்.
உடனடியாக தனது பி. ஏற்கு போன் போட்டு,
“குட் ஜாப்.” என பாராட்டிப் பேசியவன்,
அவருக்கு, அடுத்து என்ன செய்ய வேண்டும் என கூறி விட்டு,
இறுதியாக கடை எரிப்புக்கு பின்னால் தான் இருக்கும் விடயம் வெளியே சிறிதளவு கூட கசியக் கூடாது எனவும் கட்டளையாக கூறி விட்டு வைத்தவன்,
“இருந்தாலும் இந்தப் பொடிப் பையன் தில்லான, புத்திசாலியான ஆள் தான். அவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும். பிளான் சக்ஸஸ் ஆகும் வரைக்கும், அந்த கோடீஸ்வரன் கண்கள்ல நான் மாட்டவே கூடாது. அப்போ தான் நான் நினைச்சது நடக்கும். நான் செய்ய நினைக்கிறதுக்கு யார் தடையா வந்தாலும் நான் அவங்கள சும்மா விடவே மாட்டன்.” என உறுமியவனின் பார்வை மீண்டும் சிசிடீவி நோக்கி திரும்பியது.
இன்னும் அவனின் அருமை மனைவி கண்ணீர் விட்டுக் கொண்டு இருப்பதைக் கண்டவன்,
“இவ ஒருத்தி எப்போ பாரு அழுதுக்கிட்டு….” என முணு முணுத்தபடி,
தலையை தட்டிக் கொண்டு, விசில் அடித்தவாறு கீழே சென்றவன்,
எதுவுமே தெரியாதவன் போல,
“என்ன பொண்டாட்டி, உன்னோட ஆருயிர் சொந்தக்காரங்க யாரையும் காணல. என்ன வர சொல்லிட்டு அவங்க எங்க போய்ட்டாங்க?, ஒரு வேள சாப்பிடுறாங்களோ?” என கேட்டு தாடையைத் தடவினான்.
அவனையே வெறித்துப் பார்த்தவள்,
“அவங்க கிளம்பிட்டாங்க. ஏன் உங்களுக்கு அத பத்தி ஒண்ணுமே தெரியாதா?” என சற்று காட்டமாகவே கேட்டாள் அவள்.
ஒரு கணம் அவளைக் கூர்ந்து நோக்கியவன்,
சைகையால் பேச வேண்டாம் என கூறிவிட்டு,
தன் பின்னே வருமாறு அவளுக்கு பணித்து விட்டு அருகில் இருந்த அறைக்குள் புகுந்து கொண்டான்.
அவனின் மீது ஏற்கனவே கோபத்தில் இருந்தவள்,
“இவரு ஒரு பார்வை பார்த்த உடனே நான் பின்னால போகணுமா?, இவரும், இவரோட விளக்கமும்….” என முணுமுணுத்தவள்,
அவனைக் கண்டு கொள்ளாது, தங்களது அறைக்குள் சென்று விட்டாள்.
தீரனுக்கோ, கலங்கிய அவளின் முகமும், பார்வையும் ஏதோ செய்ய,
அவள் வந்ததும் பேசி முடிஞ்ச வர சமாதானப் படுத்தணும் என எண்ணி இருக்க,
நேரம் கடந்து போனதே தவிர அவள் வருவது போல தெரியவில்லை.
“அப்படி என்ன தான் செய்யுறா?, நான் ஒருத்தன் இங்க அவளுக்காக வெயிட் பண்ணிக் கொண்டு இருக்கேன். இவ்வளவு நேரமா என்ன காக்க வைச்சுட்டு என்ன தான் முக்கியமான வேலை செய்றாளோ?” என வாய்க்குள் திட்டிக் கொண்டவன்,
பொறுமை இழந்து வெளியே வந்து பார்க்க, அவள் இருந்தால் தானே?, சுற்றி வர பார்வையை சுழல விட்டவன்,
இறுதியில் அங்கிருந்த வேலையாள் ஒருவனை அழைத்து தமயந்தி பற்றிக் கேட்க,
அவனோ, “ஐயா நீங்க அந்த ரூமுக்குள்ள போன கொஞ்ச நேரத்தில அம்மாவும் மாடியேறிப் போய்ட்டாங்க.” என கூற,
“ஓஹ்…. ஓகே, ஒரு முக்கியமான பைல் பத்திக் கேட்டன். அது தான் எடுக்கப் போய் இருப்பா. அப்படியே வேற வேலையா நின்னுட்டா போல. நானே போய் பார்த்துக்கிறன்.” என அப்போதும் தனது மனைவியை விட்டுக் கொடுக்காது கூறியவன்,
கட கடவென இவ்விரண்டு படிகளாக தாவி ஏறி ரூம் நோக்கி சென்றான்.
அங்கே அவனின் மனைவியோ, எந்த டென்ஷனும் இல்லாது துணிகளை மடித்துக் கொண்டு இருந்தாள்.
தீரனுக்கோ, இன்னும் அவளின் மீது இருந்த கோபம் அதிகரிக்க,
“நான் சொல்றத கேட்கக்கூடாது என்கிற முடிவோட தான், நீ இருப்பீயாடி?, உன்ன நான் பேச வரச் சொன்னேன் தானே. எதுக்குடி மூஞ்சய தூக்கி வைச்சுக் கிட்டு இங்க வந்து நின்னுட்டு இருக்காய்?” என கத்த,
தமயந்தியோ, அவனைத் திரும்பியும் பாராது, தன் பாட்டில் மடித்த உடைகளை அடுக்க ஆரம்பிக்க,
தீரனோ, “ஏய்….” என்றவாறு, அவளது கைகளைப் பிடித்து இழுத்தான்.
இழுத்த வேகத்தில் அவளது கைகளில் இருந்த ஆடைகள் அனைத்தும் நிலத்தில் விழுந்தது.
அப்போதும் அசராதவள், அதனை ஒவ்வொன்றாக எடுத்து அடுக்க ஆரம்பிக்க,
தீரனோ, அவளை ஒரே இழுவையாக இழுத்து அவளின் இரண்டு கைகளையும் ஒன்றாக பிடித்து,
தலைக்கு மேலே தூக்கிப் பிடித்தவாறு, அவளை அப்படியே கப்பேர்ட்டில் சாய்த்தவன்,
அவளின் உடலுடன் தன் உடலை அழுத்தி,
“உனக்கு இப்போ என்ன தாண்டி பிரச்சனை?, என் முகத்தைப் பார்த்துப் பேச உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கோ?, நான் உன்கிட்ட மனுஷனா நடந்துக்கணும்னு நினைக்கிறன். என்ன சும்மா சீண்டி விடாத.”என அவன் எகிற,
தமயந்தியோ, அப்போதும் அசராது,
“உண்மையான காரணத்த சொல்லாம என் குடும்பத்திட்ட இருந்து என்ன மொத்தமா பிரிக்க கிரிமினல் பிளான் போட்ட நீங்க எனக்கு இப்பவும் தான் மனுஷனா தெரியல. இவ்வளவு நாளா இல்லாம இப்போ தான் உங்க மேல கொஞ்சம்….” என ஆரம்பித்தவள்,
அடுத்த வார்த்தையைக் கூறாது, எச்சில் விழுங்கி விட்டு,
“ஆனா இப்போ மொத்தமா உங்க மேல வெறுப்பு மட்டும் தான் எஞ்சி இருக்கு. என்ன பேச வைக்காதீங்க. அப்புறம் தாங்க மாட்டீங்க.” என கூற,
“ஓஹ்…. அப்படியா மேடம். பார்றா என்னோட பொண்டாட்டிக்கு புதுசா கோபம் எல்லாம் வருது.” என அவளின் மூக்குடன் மூக்கை உரச,
பட்டென முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டாள் அவள்.
அவளின் பாரா முகம் உள்ளுக்குள் வதைத்தாலும்,
“இத இப்படியே விட்டா சரி வராது.” என எண்ணியவன்,
“என்ன பத்தி உனக்கு ரொம்ப நல்லாவே தெரிஞ்சும் இப்படிப் பண்ணா…. என்ன செய்ய?” என கேட்டவன்,
அடுத்த நொடி, அவளின் தாடையைத் தன்னை நோக்கிக் திருப்பி,
அவளது இதழ்களுக்குள் தனது இதழ்களை ஆழப் புதைத்துக் கொண்டான்.
அவளின் இரு கைகளும் அவனிடம் மாட்டுப் பட்டு இருக்க, அவனது உடலோ, அவளின் உடலை அழுத்திக் கொண்டு இருந்தது.
அவனைத் தள்ளி விட அவளால் முயற்சி செய்யக் கூட முடியாத நிலையில் அல்லவா அவளை நிறுத்தி இருந்தான் அவன்.
அவள் ஒவ்வொரு முறை அசைய முயலும் போதும், அவளின் உடல் மேலும் அவனுடன் எக்குத் தப்பாக உரச,
அவளோ, மூச்சு விட முடியாது தவித்துப் போனாள்.
தீரனோ, அவள் மீதான கோபம், வருத்தம் தீரும் மட்டும், அவளுக்கு மூச்சு முட்ட முத்தம் கொடுத்தவன்,
அவளிற்கு தானே இறுதியில் மூச்சுக் காற்றையும் வழங்கினான்.
நெடு நேரம் கழித்து, அவன் அவளை விடுவித்த போது, அவள் அப்படியே கப்பேர்ட்டில் சாய்ந்து நின்று விட்டாள்.
பெரிய மூச்சுகள் எடுத்து தன்னை சமன் செய்து கொண்டவள்,
நெஞ்சில் கை வைத்துக் கொண்டு தீரனை முறைக்க,
அவனோ, “ரொம்ப முறைக்காத பொண்டாட்டி. அப்புறம் திரும்பவும் நான் ஆரம்பிக்க வேண்டி இருக்கும்.” என சிம்பிளாக கூறினான்.
“சே…. எனக்கு உங்களப் பார்க்கவே பிடிக்கல தீரன்.” என அவள் கண்கள் கலங்க கூற,
“ஓகே சந்தோஷம், என்ன விரும்பவும் சரி, வெறுக்கவும் சரி எனக்கு இருக்கிற ஒரே ஒரு சொந்தம் நீ தாண்டி.” என குரல் கர கரக்க கூறியவன்,
அவள் அவனைக் கூர்ந்து பார்க்கவும்,
“எனக்கு பசிக்குது பொண்டாட்டி. வா சாப்பிட்டு வந்து சண்டை போடலாம்.” என அவளை மேலும் யோசிக்க விடாது இழுத்துக் கொண்டு போனான் தீரன்.
மறு பக்கம், மீண்டும் சென்னையை வந்து அடைந்ததும்,
அபர்ணாவை மாத்திரம் வீட்டில் இறக்கி விட்ட பின்பு, கடையை நோக்கி விரைந்து சென்றனர் ஆதியும், கோடீஸ்வரனும்.
அங்கு போய் அங்கிருக்கும் பிரச்சனைகளைப் பார்த்து விட்டு களைத்துப் போய் வந்த ஆதி,
ரூமைத் திறக்கும் போதே,
அங்கிருக்கும் கட்டிலில் ஏறி நின்று கொண்டு,
“என்ன ஏமாத்தி கலியாணம் பண்ணிக்கிட்டீங்க இல்ல?” என முறைத்தபடி அவனிடம் கேட்டுக் கொண்டு நின்று இருந்தாள் அவனின் அருமைப் பொண்டாட்டி அபர்ணா.
இரு ஆண்களின் பிளான் தான் என்ன?
எதிரெதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்குமா?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.. 🥰🥰
கொஞ்சம் பெரிய எபி தான் மக்காஸ்….
அடுத்த எபி நாளை வரும் மக்காஸ் 😍😍😍
ரொம்ப பெரிய லீவு எடுத்திட்டு வந்து இருககேன் மக்காஸ்.. கொஞ்சம் உடம்பு சரி இல்ல அது தான்.
இனி தொடர்ந்து எபிகள் வரும் மக்காஸ் 🥰🥰