இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

4.9
(19)

Episode – 03

 

கடிதத்தை படித்து முடித்த அபர்ணாவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

 

“ஓஹ்….யே…. அப்போ இந்த வில்லன் கிட்ட இருந்து அக்கா தப்பிச் சிட்டா. அவன் முகத்தில கரியை பூசிட்டா…. இப்போ போய் இத சொன்னா அவன் முகம் எப்படி மாறும்?, செம பல்பு அவனுக்கு.” என எண்ணி சிரித்துக் கொண்டவளுக்கு அப்போது தான், ஒரு விஷயம் மனசைக் குழப்பியது.

 

(அட போம்மா…. அவ ஒரு  வில்லன்கிட்ட இருந்து தப்பிச்சு வசமா இன்னொரு அரக்கன் கிட்ட மாட்டிக் கிட்டா. அது புரியாம நீ வேற ஏன்மா….)

 

“அக்கா, என்கிட்ட எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணுவாங்களே. அப்போ இந்த லவ் விஷயம் பத்தியும் சொல்லி இருக்கணுமே. ஏன் சொல்லல. என்னாச்சு அக்காக்கு?” என குழம்பிய சமயம், அவளின் சிந்தனையை தடுக்கும் நோக்கில்,

 

“அம்மாடி அபர்ணா அக்காவை சீக்கிரம் கூட்டிக் கொண்டு வாம்மா.” என்ற தந்தையின் குரல் கேட்டது.

 

தந்தையின் குரலில் தனது யோசனைகளை ஒதுக்கி வைத்து விட்டு,

 

“இதோ வரேன் அப்பா.” எனக் கூறி விட்டு, ஒரு துள்ளல் நடையுடன், இதுவரையும் இல்லாத புன்னகையை முகத்தில் சுமந்து கொண்டு விரல்களிற்கு இடையில் லெட்டரை வைத்து ஆட்டிக் கொண்டு, கூலாக நடந்து வந்தவள், 

 

மண மேடையில் அமர்ந்து இருந்த, ஆதி மூலனை நோக்கி இளப்பமான பார்வை ஒன்றை சிந்தினாள்.

 

அவனோ, அவளின் செய்கைகளில் ஒரு கணம் புருவம் தூக்கி அவளைப் பார்த்தான்.

 

அவனின் பார்வையை அசட்டை செய்தவள்,

 

தந்தையை நோக்கி, “அக்காக்கு இந்த கலியாணத்தில விருப்பம் இல்லையாம் அப்பா. அது தான் லெட்டர் எழுதி வைச்சிட்டுப் போய்ட்டாங்க. அத விட முக்கியமான விஷயம். நீங்க பார்த்த மாப்பிளையை அவங்களுக்கு சுத்தமா பிடிக்கலயாம். அவங்க  வேறு யாரையோ ஒரு நல்லவர விரும்புறாங்களாம்.” என  நல்லவர் என்ற வார்த்தையில் ஒருவித அழுத்தம் கொடுத்து கேலியாக ஆதி மூலனைப் பார்த்தபடி சொல்லி முடித்தவள் லெட்டரையும் தூக்கி காட்டினாள்.

 

கோடீஸ்வரனோ, மகள் சொன்ன விடயத்தை நம்பவும் முடியாது, ஜீரணிக்கவும் முடியாது லெட்டரை வாங்கி அவசரமாக பிரித்துப் படிக்க ஆரம்பித்தார்.

 

அவர் கடிதத்தை படிக்கும் போதே, அவரின் கண்கள் கலக்கத்தை காட்டியது.

 

அதிலேயே அபர்ணா விளையாடவில்லை என்பதை உணர்ந்து கொண்ட ஆதிமூலனின் கைமுஷ்டிகள் இரண்டும் கோபத்தில் இறுகிப் போக,

 

உண்மையாகவே கண்கள் சிவந்து அய்யனாரைப் போல உடல் இறுக அமர்ந்திருந்தவன் எழுந்து தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி தூக்கி எறிந்து விட்டு,

 

“இது எல்லாம் என்ன மிஸ்டர் கோடீஸ்வரன்?, என்ன இப்படி அவமானப்படுத்தணும்னு எத்தனை நாளா காத்துக் கொண்டு இருந்தீங்க?, இத்தனை பேர் முன்னாடியும் என்ன மணமேடையில உட்கார வைச்சு அசிங்கப்படுத்திட்டீங்க இல்ல. உங்களோட பண கஷ்டத்துக்கு உதவி செய்த என்ன இப்படித்தான் எல்லார் முன்னாடி கேவலப் படுத்துவீங்களா?” என உறுமியபடி கேட்க,

 

அவரோ, அவனின் அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது, 

 

“இல்ல தம்பி…. அது வந்து…. எனக்கே இந்த விஷயம் எதுவும் தெரியாது தம்பி. என்ன மன்னிச்சிடுங்க.” என கையெடுத்துக் கும்பிட்டபடி  தலை குனிந்து நின்றார்.

 

அவருக்கும் வேறு வழி இல்லை அல்லவா.

 

தன்னுடைய மகளை நம்பி காரியத்தில் இறங்கி, கடைசி நேரத்தில் என்ன செய்வது எனப் புரியாது வாழ்க்கையில் முதல் முறை பெரிய அடி வாங்கி முற்றிலும் நொறுங்கிப் போய் நின்றிருந்தார் அவர்.

 

அவரின் நிலையைக் கண்டு அபர்ணாவுக்கு உள்ளுக்குள் வலித்தாலும்,

 

ஆதி எனும் கயவனிடமிருந்து அக்கா தப்பி விட்டாலே என்கிற எண்ணம் சற்று அபர்ணாவை நிம்மதி அடைய செய்தது.

 

தந்தை கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்பதை பொறுக்க முடியாதவள்,

 

நேரடியாக ஆதிமூலனின் பக்கம் திரும்பி, “இங்க பாருங்க உங்கள பிடிக்கலன்னு அக்கா சொல்லிட்டு போயிட்டாங்க. கடைசி நிமிஷம் வரைக்கும் எனக்கும், அப்பாவுக்கும் அக்கா இன்னொருத்தர விரும்புறது தெரியாது. தெரிஞ்சிருந்தா அப்பவே கல்யாணத்தை நிறுத்தி இருப்பம். உங்க மானம் மட்டும் தான் போன மாதிரி பேச வேண்டாம். அப்புறம் சும்மா என்னோட அப்பாவையே குறை சொல்லாதீங்க. உங்கள மாதிரி ஒருத்தர கல்யாணம் பண்ண எந்தப் பொண்ணுதான் விரும்புவா.” என வார்த்தைகளை அவசரமாக வாயிலிருந்து உதிர்த்து முடித்து இருந்தாள் அபர்ணா.

 

அவள் எப்போதுமே குறும்புக்கார பெண் அல்லவா.

 

இப்போதும் அதே வாய் துடுக்குத்தனத்தை அவனிடம் காட்டி இருந்தாள் பெண்ணவள்.

 

ஏற்கனவே தான் துடுக்குத்தனமாக கூறிய வார்த்தைகள் தான் அவனை இவ்வளவு தூரம் உசுப்பி விட்டு இருக்கிறது என்பதை ஏனோ அந்தக் கணம் பெண்ணவள் மறந்து போனாள்.

 

அவள் பேசிய வார்த்தைகளின் 

தீவிரத்தை அவளைத் தவிர சுற்றி நின்ற அனைவருமே உணர்ந்து திகைப்பாக அவளைப் பார்த்தனர்.

 

அதே நேரம் அடுத்து ஆதி மூலன் என்ன செய்யப் போகிறானோ என்ற அச்சத்தில் மகளின் கையை பட்டென்று பிடித்தவர்,

 

“அபர்ணா வாயை மூடு. என்ன பேசுறாய்ன்னு புரிஞ்சு தான் பேசுறீயா நீ?, கொஞ்சம் கூட நாவடக்கம் கிடையாதா உனக்கு?” என அபர்ணாவை கடிந்து கொண்டவர்,

 

மீண்டும் ஆதிமூலனை நோக்கி கையெடுத்து கும்பிட்டு,

 

“மன்னிச்சுடுங்க தம்பி. அவ சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பேசிட்டா. உங்களுக்கு நடந்த அவமானத்துக்கு நான் தல குனிஞ்சு மன்னிப்பு கேட்கிறேன்.” என தலை குனிந்தவர் முற்றிலுமாக நொறுங்கி அழுது விட்டார்.

 

ஆனால் ஆதிமூலனோ, சற்றும் மனம் இறங்காமல் அபர்ணாவையும், அவரையும் மாறி மாறிப் பார்த்தவன்,

 

“நீங்க என் காலுல விழுந்து மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்கிற நிலைமையில நான் இல்ல. உங்க இஷ்டத்துக்கு எல்லாம் என்னால ஆடிக்கொண்டு இருக்க முடியாது. கல்யாணத்துக்கு நான் செலவழித்த பணம் எத்தனை கோடி தெரியுமா?, பொண்ணுக்கு நகை புடைவைன்னு சொல்லி எவ்வளவு வாங்கி இருக்கீங்க?, இதுல உங்க புடைவைத் தொழிலுக்கும் நான் பல கோடி கொடுத்து இருக்கேன்.”

 

“அந்த நன்றிக் கடன் கொஞ்சமும் இல்லாம உங்க சின்னப் பொண்ணு பேசிக்கிட்டு இருக்கா. முதல்ல அவளுக்கு கொஞ்சம் புத்தி சொல்லி கொடுங்க.  அவளை விட நான் எத்தனை வயசு பெரியவன் இப்படித்தான் பெரியவங்க கிட்ட மரியாதையில்லாம

 பேசுவாளா?” என எகிறிக்  கொண்டு கேட்க,

 

அவனது கேள்விக்கு கோடீஸ்வரன் பதில் சொல்ல முன்னமே,

 

“மரியாதை என்கிறது வயச வைச்சு வர்றதில்ல. அவங்கவங்க குணத்தைப் பார்த்து வரணும்.” என பதிலுக்கு எகிறிக் கொண்டு கூறி இருந்தாள் அபர்ணா.

 

அவளின் பேச்சில் மேலும் சினம் பொங்க அங்கிருந்த அலங்கார கதிரையை தூக்கி ஓம குண்டத்தின் மேல்,  ஓங்கி அடித்து, ஒரே அடியில் அதனை உடைத்து எரிய விட்டு இருந்தான் ஆதி.

 

அவனது மனம் போல கொழுந்து விட்டு எரிந்தது அந்த ஓம குண்டம்.

 

“இதுக்கு மேல உங்க பொண்ணு ஒரு வார்த்தை பேசினாலும் நான் கொலைகாரனா மாறிடுவன்.” என  உறுமியவனைக் கண்டு இரு அடிகள் பின்னோக்கி சென்று தந்தையின் பின்னே ஒளிந்தபடி, உடல் நடுங்க நின்று கொண்டிருந்தாள் அபர்ணா.

 

அவனின் இப்படியான கோபத்தைக் கண்டிராதவள் பயந்து போய் கண் கலங்க தலை குனிந்து நிற்க,

 

அவளையே ஆழ்ந்து பார்த்தவனின் பார்வை கோடீஸ்வரனை “அடுத்தது என்ன?” என்பது போல கேள்வியாக நோக்கியது.

 

அவரோ, அவனின் குத்தீட்டிப் பார்வையில்,

 

குரல் கம்ம, “தம்பி தப்பு எல்லாம் என் மேல தான். என்ன மன்னிச்சிடுங்க.” என கூற,

 

அவனும் வன்மப் புன்னகை உடன் அபர்ணாவையே கூர்ந்து பார்த்தவாறு,

 “நீங்க மன்னிப்பு கேட்டா மட்டும் போன என்னோட மானம் மரியாதை திரும்பி வந்திடுமா?, பணம் எனக்கு எப்போதுமே ஒரு பொருட்டு கிடையாது. ஆனா எனக்கு என் மானம், மரியாதை, ஸ்டேட்டஸ் ரொம்ப முக்கியம்.” என பல்லைக் கடித்தவாறு கூறினான்.

 

கோடீஸ்வரன் சற்று யோசனையாக அவனைப் பார்த்தவாறு,

 

“தம்பி இந்த விஷயத்துல இதுக்கு மேல என்னால என்ன பண்ண முடியும்?” என கேட்க,

 

அப்போதும் விடாது அவரையே ஆழ்ந்து பார்த்தவன்,

 

“நான் கேட்கிற இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.” என கூறி தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றான்.

 

அவன் நின்ற தோரணையே சொல்லியது அவன் ஒரு திடமான முடிவை எடுத்து விட்டான் என்று.

 

அவரோ மீண்டும் கம்மிய குரலில், “சொல்லுங்க தம்பி.” என்று கூறவும்,

 

“உங்களால ஒரு மாசத்துக்குள்ள என்னோட மொத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்க முடியுமா?” என தனது முதலாவது கேள்வியை அவரை நோக்கி எழுப்ப,

 

அவரோ அவனின் கேள்வியில் அதிர்ந்து போனவர்,

 

அடுத்த கணம் தலையைக் குனிந்தபடியே,

 

 “இல்லை.” என்பது போல தலையாட்டினார்.

 

தன்னுடைய தந்தையை அனைவர் முன்பாகவும் சபையில் குற்றவாளி போல் நிற்க வைத்து கேள்வி கேட்கும் ஆதிமூலனைக் கண்டு அபர்ணாவிற்கு கோபம் பெருகினாலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் தந்தையின் கையை இறுகப் பற்றியவாறு அவருக்கு ஆதரவாக நின்று கொண்டு இருந்தாள்.

 

அவனோ அவர் கூறிய பதிலில் அபர்ணாவை நோக்கி ஒரு கேலிப் புன்னகையை வீசியவன்,

 

 “இந்த நிமிஷம் நான் அனுபவிக்கிற அவமானத்துக்கு உங்களால பதில் சொல்ல முடியுமா?, அல்லது போன என் கெளரவத்த மீட்டுத் தர முடியுமா?” அடுத்த கேள்வியை சாட்டையடியாக சுழற்றி வீச,

 

அவனின் அடுத்த கேள்விக்கும் அவரது பதில் இல்லை என்பது தான்.

 

தெரிந்து கொண்டுதானே அவன் கேள்வியே கேட்க ஆரம்பித்தான்.

 

அங்கு அடுத்த சில நிமிடங்கள் மௌனமே நிலவ,

 

பெரு மூச்சுடன், “ஆனா நீங்க நினைச்சா இந்த இடத்துல வைச்சே இப்போ நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதோட சேர்த்து எனக்கு நீங்க எந்தப் பணமும் திருப்பித் தர வேண்டியதும் இல்லை.” என பூடகமாக பேசினான் ஆதி.

 

அவரோ, அவனின் பேச்சில் முழுதாக குழம்பிப் போனவர், அதே குழப்பத்துடன் அவனை நோக்க,

 

அவனோ, மென் சிரிப்பு ஒன்றுடன், “எனக்கு உங்க இரண்டாவது பொண்ண கல்யாணம் பண்ணி கொடுங்க. எல்லா பிரச்சனையும் இந்த இடத்திலேயே முடிந்து போகும்.” என சிம்பிளாக ஒரு குண்டை தூக்கி அவரின் தலை மீது போட்டான்.

 

அவன் கூறிய செய்தியை கேட்டு அதிர்ந்து போய் கோடீஸ்வரனோ அசையாது நிற்க, அவரை விடவும் மொத்தமாக உடைந்து போய் அவனையே வெறித்துப் பார்த்தாள் அபர்ணா.

 

அவன் இப்படி ஒரு விஷயத்தை கேட்கக் கூடும் என அவள் எதிர்பார்க்கவில்லை அல்லவா.

 

அவனும் அவளையே இமைக்காது பார்த்தபடி,

 

இரு புருவத்தையும் தூக்கி “சம்மதமா?” என்பது போல கேட்க,

 

பயந்து போய் தந்தையின் கையை இறுக்கிப் பிடித்தவள்,

 

“அப்பா வேணாம்பா…. வேணாம். இது மட்டும் வேணாம்.” என சிறு பிள்ளை போல சொன்னதையே திருப்பித் திருப்பிக் கூறி அழ ஆரம்பித்தாள்.

 

கோடீஸ்வரன் என்ன செய்வது என புரியாது, அழும் மகளையும் சமாதானப்படுத்த முடியாது இறைஞ்சுதலாக தனக்கு எதிரே ருத்ரமூர்த்தியாக நின்ற ஆதிமூலனைப் பார்க்க,

 

அவனோ, “நான் சொன்னபடி நடக்கலன்னா எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் நான் போக வேண்டி வரும். ஓடிப் போன உங்க பொண்ண பத்தி தேவையில்லாத வதந்திகள் வரலாம், உங்க பொண்ணும் அவ கூட ஓடிப் போனவனும் பிணமா கடலில மிதக்க வேண்டி வரலாம், நீங்க இனி தொழிலே செய்ய முடியாத நிலை வரலாம், நீங்களும், உங்க பொண்ணும் நாளைக்கே நடு ரோட்ல நிற்க வேண்டி வரலாம்…. இன்னும் எத்தனையோ விடயங்கள் இப்படி வரலாம்…. நடக்கலாம்னு நான் அடுக்கிக் கொண்டே போவன். யாருக்கு தெரியும் நான் வரலாம்னு சொல்றதெல்லாம் நாளைக்கு கூட நடந்து முடியக் கூடிய வாய்ப்பு இருக்கு. அப்புறம் என்ன நீங்க குறை சொல்லக்கூடாது சார்.” என அபர்ணாவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு கூற,

 

அவனின் மிரட்டலை சரியாக புரிந்து கொண்டவள்,

 

“தனது அக்காவுக்கு எதுவும் நடந்து விடுமோ?” என எண்ணிக் கலங்கிப் போய் அவனைப் பார்க்க,

 

அவனும், “தான் சொன்னதை செய்து முடித்தே ஆவேன்.” என்கிற ரீதியில் பதில் பார்வை பார்த்து வைத்தான்.

கோடீஸ்வரனோ, பெருமூச்சுடன் அவனின் புறம் திரும்பியவர்,

 

“தம்பி அபர்ணா இன்னும் மைனர் தான். 

பதினெட்டு வயசு  ஆக, இன்னும் ஆறு மாசம் இருக்குது. அவ சின்ன பொண்ணு. அவள உங்களுக்கு எப்படி கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும்?” என தனக்குத் தெரிந்த சட்டத்தை வைத்து மெதுவாக பேசிப் பார்த்தார்.

 

அவர் பேசிய விஷயத்தில் அதுவரையும் கலங்கிப் போய் நின்ற அபர்ணாவின் கண்களில் கூட ஒரு சிறு ஒளி வந்து போனது.

 

ஆதிமூலனின் கண்களுக்கும் அவளின் கண்கள் சொன்ன செய்தி தப்பாமல் விழுந்தது.

 

அவன் அப்போதும், ஒரு புன்னகையை சிந்தி விட்டு,

 

பார்வையை கோடீஸ்வரனை நோக்கி செலுத்தியவன்,

 

 “ஓஹ்…. அப்படி ஒரு சட்ட விஷயம் இருக்குல்ல. எனக்கு தெரியலயே சார்ஈஈஈ….” என கேலியாக இழுத்தபடி தாடையைத் தடவியவன்,

 

“ஓகே சார், நோ ப்ராப்ளம் ஆறு மாசம் கழியவே கல்யாணம் பண்ணிக்கிறன். ஆனா உங்க பொண்ணுக்கு என்னைக்கா இருந்தாலும் நான் தான் புருஷன். அத மாத்த யாராலும் முடியாது. அதை விட முக்கியம் உங்க இரண்டாவது பொண்ணும் உங்க மூத்த பொண்ணு மாதிரி கடைசி நேரத்துல யார் கூடவும் ஓடிப்போய் கழுத்தறுக்க மாட்டான்னு உங்களால நிச்சயமா சொல்ல முடியாது இல்லையா?” என நேரடியாகவே கேட்டு அபர்ணா மற்றும் கோடீஸ்வரனை கூனிக் குறுகி நிற்க வைத்தான் ஆதி.

 

அவர்கள் இருவரது தலைகுனிவையும் திருப்தியாக பார்த்துக் கொண்டு நின்றவன்,

 

“அதனால….” என இழுக்க,

அவன் அடுத்து சொல்லப் போகும் விடயம் கண்டிப்பாக தனக்கு உவப்பானதாக இருக்காது என உணர்ந்து கொண்ட அபர்ணாவோ,

 

வேகமாக துடிக்கும் தனது நெஞ்சினை நீவிக்கொண்டு அவனைப் பயப்பார்வை பார்த்து வைக்க,

 

“இத…. இதத்தான் நான் எதிர்பார்த்தேன்.” என மனதுக்குள் எண்ணிக் கொண்டவன்,

 

“இனிமேல் உங்க பொண்ணு என் கஸ்டடியில, ஐ மீன் என் வீட்டுல, என் கூடத் தான் இருக்கணும். அவளோட வருங்கால புருஷன் நான் தானே. அப்போ அவ என் கூடவே இருக்கட்டும். அங்க இருந்தே ஸ்கூலுக்கும் போய் வரட்டும், அண்ட் கல்யாணத்துக்கு பிறகு அவ என்ன படிக்க நினைச்சாலும் நான் படிக்க வைப்பேன். ஆனா இந்த நிமிஷத்துல இருந்து அவ என் பொறுப்புக்கு வந்தே ஆகணும். நீங்க உங்க வீட்டுல தாராளமா இருந்து கொள்ளலாம் மிஸ்டர் மாமா.” என கூறி முடிக்க,

 

அபர்ணாவோ, “நோஓஓஓஓ….” என கத்தி விட்டாள்.

 

அவள் கத்திய சத்தத்தில் காதைக் குடைந்து கொண்டவன்,

 

 “உங்களுக்கு முடிவு எடுக்கிறதுக்கு நான் எந்த சான்சும் கொடுக்கல. இது தான் என் முடிவுன்னு உங்களுக்கு சொல்றேன் அவ்வளவு தான். நீங்க ரெண்டு பேரும் என்னோட முடிவுக்கு ஒத்துக்கிட்டே ஆகணும்.” என பல்லைக் கடித்தபடி கூறியவன்,

 

கோடீஸ்வரனை ஆழ்ந்து பார்க்க,

அவரும் தனது கையைப் பிடித்திருந்த மகளின் கையை எடுத்து விட்டு,

 

அவளை நோக்கி “அம்மாடி எனக்கு வேற வழி தெரியல. கண்டிப்பா உனக்கு எந்த பாதிப்பும் வர அப்பா விடமாட்டேன். உங்க அக்கா தான் என்ன ஏமாத்திட்டு போயிட்டா. நீயும் இந்த அப்பாவ ஏமாத்திடாத. என்னால அத தாங்கவே முடியாது. நீ மட்டும் இதுக்கு சம்மதிக்கலன்னா…. இந்த இடத்திலேயே உன்னோட அப்பா உயிர விட்டுடுவன்.” என அவளின் முன்பாக கையை நீட்டிக்  கொண்டு யாசகம் கேட்பது போல கேட்க,

 

 “அப்பாஆஆஆ….” என அலறியவள்,

கண்ணீர் வழிய, அவரைப் பார்த்து “இல்லை.” என்பது போல தலையசைத்தாள்.

 

வெறுமனே , கையைக் கட்டிக் கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஆதிமூலன்.

 

ஒருவாறு அழுது முடித்தவள், கண்களைத் துடைத்துக் கொண்டு இறுதி முடிவுடன்,

 

ஆதியை ஒரு முறை வெறித்துப் பார்த்து விட்டு தந்தையின் புறம் திரும்பி, 

 

“நீங்க என்ன சொன்னாலும் அதுக்கு நான் சம்மதிக்கிறன் அப்பா.” என சொல்லிவிட்டு தலை குனிந்து நின்றாள்.

 

கோடீஸ்வரன், வழமை போல அப்பா சென்டிமென்ட் மூலம் மகளைத் தாக்கி இருக்க,

 

அவளும் வழமையான பாச மகள் போலவே தந்தைக்காக தனது வாழ்க்கையை பணயம் வைக்க துணிந்து,

 

தனது சம்மதத்தை கூறி முடிக்கவும்,

“அம்மாடி….” என அவளின் கையைப் பற்றி கண்களில் வைத்துக் கொண்டு கலங்கிப் போய் நின்றிருந்தார் கோடீஸ்வரன்.

 

அவளும் அமைதியாக கண்ணீர் வடிக்க,

“ஸ்சப்பா…. ஒரே செண்டிமெண்ட் படமா ஓடுது தாங்க முடியல.” என சலித்துக் கொண்டு இருவருக்கும் இடையில் வந்து நின்றவன்,

 

கோடீஸ்வரன் கையில் இருந்த அபர்ணாவின் கையை இழுத்துப் பிரித்து எடுத்து,

 

தன் கைகளுடன் வலுக்கட்டாயமாக கோர்த்துக் கொண்டு,

 

“இப்பவே இவள நான் என் கூட கூட்டிக்கொண்டு போறன்.” என கூறியபடி அவளை தன்னுடன் இழுத்து சென்றான்.

 

அபர்ணாவோ, போகும் போது திரும்பித் தனது அப்பாவை கண்ணீர் மல்க பார்த்தபடியே அவனுடன் இழுபட்டு சென்றாள்.

 

காரில் அவளை ஏற்றியவன், மறு பக்கம் வந்து ஏறி அமர்ந்து கொண்டு, “வெல்கம் டூ மை ஹோம் பேபி .” என கேலியாக கூறியபடி காரை கிளப்பினான்.

 

மறு புறம், மயக்கம் சற்று தெளிய கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்த தமயந்திக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை.

 

“என்னாச்சு எனக்கு?” என எண்ணியவள், மீண்டும் தலையை உலுக்கி யோசிக்கும் போது தான் நடந்தவை அனைத்தும் நினைவுக்கு வந்தது.

 

அந்த நினைவுகளின் தாக்கத்தில், பதறிப் போய் எழுந்தவள், 

 

தனக்கு முன்னே, காலுக்கு மேல் கால் போட்டவாறு அமர்ந்து கொண்டு தன்னையே உறுத்து விழித்துக் கொண்டு இருக்கும் ஆடவனைக் கண்டு பயந்து போய்,

 

 “நீங்க யாரு?” எனத் தடுமாறிக் கேட்க,

 

“உன் லைப்வோட கேம் சேன்ஜர். 

மிஸ்டர் அரி தீரன்.” என கூறி சத்தமாக சிரித்தான் அவன்.

 

இரு பெண்களின் வாழ்வும் இனி என்ன ஆகும்?

 

அரி தீரன், தமயந்தி உறவு என்ன?

 

அபர்ணா எப்படி ஆதியை சமாளிக்கப் போகிறாள்?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்..

 

அடுத்த எபி நாளைக்கு வரும் மக்காஸ் ❤❤❤❤

 

உங்க லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ் ❤❤❤❤❤

 

இனி தொடர்ந்து எபிகள் வரும் 😍😍😍😍

 

பெரிய எபி மக்காஸ்…கண்டிப்பா லைக்ஸ் கொடுங்க 😍😍😍

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!