Episode – 30
“குள்ள கத்தரிக்கா. வந்ததும் ஆரம்பிச்சிட்டா.” என முணு முணுத்தவன்,
அவளை ஒரு முறை முறைத்துப் பார்க்க,
அவளோ, கழுத்தில் அணிந்து இருந்த துப்பட்டாவை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு,
“என்ன முறைப்பு?, தப்பு செய்தது முழுக்க நீங்க?, எதுக்கு என்ன பார்த்து முறைக்கிறீங்க?, படிக்கிற பொண்ண ஏமாத்தி கலியாணம் பண்ணி இருக்கீங்க மிஸ்டர் ஆதி மூலன்.” என அவள் எகறினாள்.
அவளைப் பார்த்து பல்லைக் கடித்தவன்,
“வேணும்னா போய் போலீஸ்ல கம்பளைண்ட் கொடு பொண்டாட்டி. அவங்க வந்து என்னைப் பிடிச்சிட்டுப் போய் ஜெயில்ல போடட்டும். ஓகேவா?” என கேலியாக கேட்டவன், தனது டவலை எடுத்துக் கொண்டு, குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.
அவனது கேலியில், உள்ளுக்குள் கொதித்துப் போனவள்,
“வெளில வரட்டும் பேசிக்கிறன்.” என நகத்தைக் கடித்துக் கொண்டு, கட்டிலில் நின்று கொண்டே இருந்தாள்.
வெளியில் வந்த ஆதியோ,, கட்டிலில் அங்கும் இங்கும் நடப்பவளைக் கவனித்து விட்டு,
“மேடம் கொஞ்சம் இறங்கி நடந்து பழகினீங்கன்னா நான் படுக்க வசதியா இருக்கும். இல்லன்னா…. நான் சோபாவுல படுக்கட்டுமா?” என கேட்டான்.
“அப்போ, இப்ப கூட நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்ல மாட்டீங்க அப்படித்தானே. எங்க அக்காவ காப்பாத்துறேன்னு பொய் சொல்லித் தானே என்ன கலியாணம் பண்ணிக்கிட்டீங்க?” என அவள் குரல் தழு தழுக்க கேட்க,
“ம்ப்ச்…. அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்ல. போன வாரம் வரைக்கும் அவங்க கலியாணம் நடக்கல. சோ, நானும் நம்பி உன்ன கூட்டிட்டுப் போனேன். பட், எல்லாமே தலை கீழா மாறிப் போச்சு. இதுல என்னோட தப்பு என்ன இருக்கு அபி?”
“அப்போ, நீங்க உத்தமன்னு சொல்றீங்க அப்படித் தானே சார்?”
“ம்ப்ச்…. நான் அப்படி சொல்லவே மாட்டன். ஆனா இந்த விஷயத்தில நான் நல்லவன்னு சொல்றேன்.”
“ஓஹ்…. ஓகே. நான் இந்தக் கலியாணத்துக்கு சம்மதம் சொன்னதே, நீங்க என் அக்காவ என்கிட்ட சேர்த்து வைப்பீங்கன்னு நம்பிக்கையில தான். ஆனா இப்போ அதுவே இல்லன்னு ஆகிடிச்சு. அதனால நான் ஒரு முடிவுக்கு வந்து இருக்கேன்.”
“ஓஹ்…. என்னோட புத்திசாலிப் பொண்டாட்டி அப்படி என்ன முடிவுக்கு வந்து இருக்கீங்க?, சொல்லுங்க பார்ப்பம்.” என கூறியவன்,
அவளே எதிர்பாரா நேரம், அவளைக் கட்டிலில் இருந்து தூக்கி இறக்கி விட்டான்.
அவளோ, அவனிடம் இருந்து திமிறி விலகியவள்,
அவனது கை பட்ட தனது இடையைத் தேய்த்து விட்டபடி,
“உங்கள டிவோர்ஸ் பண்ணலாம்னு இருக்கேன். இல்ல நீங்க கட்டின தாலிய நீங்களே கழட்டுங்க.” என கூறினாள்.
அவளின் பேச்சில் உண்டான கோபத்தை கண்களை மூடிக் கட்டுப் படுத்திக் கொண்டவன்,
“இங்க பாரு அபி, உன்னோட விளையாட்டுத் தனத்துக்கும் ஒரு அளவு இருக்கு. என்கிட்ட பேசும் போது பார்த்துப் பேசு, எனக்கு கோபம் வர்ற மாதிரிப் பேசி வாங்கிக் கட்டிக்காம போய் ஒழுங்கா தூங்கு.” என கூறியவன், வெளியே செல்ல திரும்ப,
அவனின் முன்பாக வந்து நின்றவள்,
“இல்ல நான் சீரியஸ்சாவே தான் சொல்றேன். எனக்கு விவாகரத்து வேணும்.” என அதிரடியாக கூறியவளை நோக்கி அடிப்பதற்காக கையை ஓங்கியவன்,
அவள் பயந்து நோக்கவும், “சே….” என கையை இறக்கியவன்,
“ஒழுங்கா என் கண் முன்னாடி நிற்காம போயிடு அபி. இல்லன்னா உன்ன கண்டிப்பா காயப்படுத்திடுவன்.” என கூறினான்.
அவளோ, அவனின் கோபத்தில் ஒரு கணம் எச்சில் விழுங்கியவள்,
அடுத்த நொடியே, “இருங்க…. நாளைக்குப் பாருங்க. என்ன செய்றேன்.” என கூறியவள்,
அவன் திரும்பிப் பார்க்கவும், வெளியில் ஓடி மறைந்தாள்.
அதன் பின்பு, மறு நாள் அவளை பாடசாலைக்கு கொண்டு விடும் வரைக்கும், அபி ஆதியின் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்கவே இல்லை.
ஆதியும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
ஆனால் மனதிற்குள், “இவ என்ன இவ்வளவு அமைதியா வர்றா ?, ஏதும் புதுசா யோசிக்கிறாளோ?, இவள வைச்சுக் கிட்டு ஒண்ணும் பண்ண முடியாது. ஏதும் பேசப் போனா என்னையே கடுப்பேத்துவா. அப்புறம் எனக்கு தான் டென்ஷன் ஆகும். வீணா அவ கூட சண்டை பிடிக்க வேண்டி இருக்கும். அமைதியாவே இருப்பம். எப்படியும் அவளே சொல்லுவா.” என எண்ணியவன், அவளிடம் வாயே திறக்கவில்லை.
ஆனால், அவளின் கண்காணிப்புக்கு என மேலும் இருவரை பாடசாலைக்கு வெளியே நியமித்து விட்டான்.
ஆனால் அவனின் அருமை மனைவியோ, அவனுக்கும் மேலாக பிளான் போட்டு, பாடசாலை முடிந்ததும், அங்கிருக்கும் அனைவரையும் ஏய்த்து விட்டு, சுவர் தாண்டி ஏறிக் குதித்து ஒரு வக்கீலைப் பார்க்க கிளம்பி விட்டாள்.
அவரோ, பள்ளி சீரூடையில் தன்னிடம் வந்து நிற்கும், அபர்ணாவை ஒரு பார்வை பார்த்தவர்,
அடுத்த நொடி, “நீ மிஸ்டர் ஆதி மூலனோட வைப் தானே.” என கேட்டார்.
அவரின் கேள்வியில் ஒரு கணம் ஜெர்க் ஆனவள்,
“ஆமா…. உங்களுக்கு எப்படி தெரியும்?” என சற்று திக்கித் திணறிக் கேட்டாள்.
அவரோ, ஒரு கணம் அவளைக் கூர்ந்து பார்த்து விட்டு,
“அது இருக்கட்டும், நீ எதுக்கும்மா என்கிட்ட வந்து இருக்காய்?, அதுவும் இந்த ட்ரெஸ்சோட….” என கேட்டார்.
அவளோ, ஒரு முறை விழித்து விட்டு,
“இல்ல சார், எனக்கு டிவோர்ஸ் வேணும் அதுதான். இங்க வந்தன்.” என கூறி விட்டு கையைப் பிசைந்து கொண்டு நிற்க,
மீண்டும் ஒரு கணம் அவளைக் கூர்ந்து பார்த்தவர்,
“இது நீயா எடுத்த முடிவா?, இல்ல மிஸ்டர் ஆதி மூலன் கூட பேசி எடுத்த முடிவா?, நீ தனியா கிளம்பி இங்க வந்தீயா?, உங்க கலியாணம் பதிஞ்சு ஒரு கிழமை தான் ஆகுது. அதுக்குள்ள என்னம்மா டிவோர்ஸ்?, அத விட உங்க கலியாணத்தில எவ்வளவு குளறுபடி இருக்குன்னு தெரியுமா உனக்கு?, முதல்ல ஒரு நிமிஷம் இங்க உட்காரும்மா, நம்ம பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.” என கூறி அவளை உட்கார வைத்தவர்,
அவள் அருந்துவதற்காக, நீர் அடங்கிய கிளாசை கொடுத்து விட்டு,
அருகில் இருந்த அறைக்குள் புகுந்து கொண்டு,
உடனடியாக அழைத்தது என்னவோ ஆதி மூலனுக்குத்தான்.
அவன் போனை எடுத்த மறு கணம் நடந்தது அனைத்தையும் கூறியவர்,
உடனடியாக அவனை அங்கு வருமாறு அழைத்தார்.
அவனுக்கோ, அவர் கூறியவற்றைக் கேட்டு அப்படி ஒரு கோபம் வந்தது.
“என்னோட மானத்த வாங்கிட்டா…. சரி அத கூட மன்னிக்கலாம். ஆனா, மறுபடியும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம இப்படி தனியா கிளம்பிப் போய் இருக்கா…. எந்த விஷயத்த மன்னிச்சாலும், இத நான் மன்னிக்கவே மாட்டன்.” என கோபமாக ஓங்கி மேசையில் அடித்தவன்,
அடுத்த கணம் புயல் வேகத்தில் கிளம்பி, அந்த வக்கீலின் ஆபீஸ் இருக்கும் இடம் நோக்கி சென்றான்.
சென்றவன், கார்க் கதவை அடித்து சாற்றி விட்டு, கை முஷ்டிகள் இறுக, உள்ளே புகுந்து,
கதிரையில் அமர்ந்து சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்த, அபர்ணாவின் கையைப் பிடித்து இழுத்து எழுப்பினான்.
யாரோ பின்னிருந்து அவளது கையை திடுமென இழுக்கவும்,
பயந்து போனவள், கத்த எண்ணி வாயைத் திறந்து விட்டு, அங்கு தன் கணவன் நிற்பதை உணர்ந்து வாயை கப்பென மூடிக் கொண்டாள்.
அவனும், அவளை உறுத்து விழித்தவன், “வா கிளம்பலாம்.” என கூற,
அவனை அங்கு, அந்த நேரத்தில் எதிர்பாராதவள், முதலில் திகைத்து விழித்தாலும், அடுத்த நொடி தன்னை சமாளித்துக் கொண்டு,
அவனிடம் இருந்து தனது கையைப் பிரித்து எடுத்து விட்டு,
“உங்க கூட என்னால வர முடியாது. நான் உங்கள டிவோர்ஸ் பண்ணப் போறன். அத நடத்திக் காட்டாம இங்க இருந்து ஒரு அடி கூட நகர மாட்டன்.” என கூறினாள்.
அவளின் பேச்சில் பல்லைக் கடித்தவன்,
“ஏய்…. உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதாடி.” என அதட்டினான்.
அவளோ, அவன் பேசியதைக் கண்டு கொள்ளாது,
“வக்கீல் சார்…. வக்கீல் சார்…. கொஞ்சம் வெளில வாங்க.” என உள்ளே நின்று கொண்டு இருந்த வக்கீலை கத்தி அழைத்தாள்.
அவரும், ஆதி வந்ததை உணர்ந்து, வெளியே வந்தவர்,
“வாங்க ஆதி சார்” என கை குலுக்கி வரவேற்க,
அவனும் முயன்று அவரைப் பார்த்து புன்னகைத்தவன்,
“தங்கி யூ சார், இன்போர்ம் பண்ணினதுக்கு, அபி கொஞ்சம் சின்னப் புள்ளத் தனமா நடந்துக் கிட்டா. இனி மேல் இப்படி நடக்காம நான் பார்த்துக்கிறன்.” என கூறினான்.
இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருந்த அபர்ணாவோ,
“என்ன நடக்குது இங்க?, அப்போ நீங்க தான் சார் இவருக்கு போன் பண்ணீங்களா?, எதுக்கு சார் இப்படிப் பண்ணீங்க?, உங்கள நம்பித் தானே நான் இங்க வந்தன். என கண் கலங்கி, சற்று கோபமாக கேட்க ஆரம்பித்து விட்டாள் அபர்ணா.
அவளின் கோபம் முழுவதும் தான் பார்க்க வந்து இருக்கும் அந்த வக்கீலின் மீது திரும்பியது.
அவரோ, “இல்லம்மா…. அது வந்து….” என பொறுமையாக எடுத்துக் கூற ஆரம்பிக்க,
அதற்கு இடமளிக்காதவள், “நீங்களும் இவரோட பணத்துக்கு விலை போய்ட்டீங்க போல. ஓகே சார், பரவாயில்ல. நான் இன்னொரு பெரிய வக்கீலா பார்த்துக்கிறன்.” என ஏதோ நியாயவாதி போல சட்டம் பேசினாள் அவள்.
அந்த வக்கீலோ பாவமாக ஆதியைப் பார்த்து வைத்தார்.
அவனோ, தலையைக் கோதிக் கொண்டு, வக்கீலை அழுத்தமாக பார்க்க,
அவரும் புரிந்து கொண்டு, “சரிம்மா, நான் உனக்கு என்ன விட பெரிய வக்கீல் ஒருத்தர சிபாரிசு பண்றேன். நீயே அவர் கிட்ட பேசிப் பாரு. இதுவரைக்கும் அவர் எடுத்த எந்த சிவில் அண்ட் கிரிமினல் கேஸ்லயும் தோத்தது இல்லை. அவர் கிட்ட உனக்கு சரியான நியாயம் கிடைக்கும் போறீயாம்மா?” என கேட்டார்.
அவளும், ஆதியை மிதப்பாக ஒரு பார்வை பார்த்து விட்டு,
“சீக்கிரம் அந்த வக்கீல் பேரை சொல்லுங்க சார், நான் உடனே போய் அவர சந்திக்கிறேன்.” என கூறினாள் .
அவரோ, “நீ அவரத் தேடி எங்கயும், போக தேவலம்மா. அவரும் இங்க தான் இருக்கார்.” என மென் சிரிப்புடன் கூறினார்.
அவர் கூறியதில் முற்றிலும் குழம்பிப் போனவள்,
“இல்ல எனக்குப் புரியல.”என சற்று திகைப்புடன் கூறினாள்.
அவரும் குரலை செருமிக் கொண்டு,
“தி கிரேட் ஹை கோர்ட் வக்கீல் மிஸ்டர் ஆதி மூலன் தான் நான் சொன்ன ஆள்.” என கூறினார் அவர்.
அவளோ, “என்னது?” என வாயைப் பிளந்தவாறு ஆதியின் புறம் பார்வையைத் திருப்ப,
அவனோ, கையைக் கட்டியவாறு அவளைக் கூர்ந்து பார்த்தவன்,
அவள் திகைப்பு மாறாது அப்படியே நின்று பார்க்கவும்,
எட்டி தனது விரலால் அவளின் வாயை மூடியபடி,
“இப்போ சொல்லுங்க மிஸஸ் அபர்ணா ஆதி மூலன் உங்களுக்கு கண்டிப்பா டிவோர்ஸ் வேணுமா? அப்போ நான் கேட்குற கேள்விகளுக்கு எல்லாம் நீங்க பதில் சொல்ல ரெடியா இருக்கணும். என்ன ரெடியா மேடம்?” என புருவம் தூக்கி கேலியாக வினவினான்.
அவளோ, தொண்டையில் ஒரு முறை எச்சில் விழுங்கியவள்,
“இல்ல அது வந்து….” என திக்கித் திணற,
குறித்த வக்கீலுக்கு நன்றி கூறியவன் நொடியும் தாமதிக்காது,
அபர்ணாவை இழுத்துக் கொண்டு புறப்பட்டான்.
அவன் வண்டி ஓட்டிய வேகத்திலேயே, அபர்ணாவுக்கு அவனது கோபத்தின் அளவு புரிந்தது.
ஒரு கட்டத்தில் பயந்து போனவள்,
“கொஞ்சம் மெதுவாத் தான் போங்களேன் ப்ளீஸ்.” என கம்மிய குரலில் கூற,
அவனோ, ஒரு கணம் அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்து விட்டு, வாகனத்தின் வேகத்தைக் கூட்டினானே தவிர கொஞ்சம் கூட குறைக்கவில்லை.
அவனிடம் அதற்கு மேல் வாயைக் கொடுத்து மாட்ட அவளுக்குப் பைத்தியமா என்ன?,
வீட்டுக்கு சென்றதும் காரை நிறுத்தியவன், அதே வேகத்தில் அபர்ணாவை இழுத்துக் கொண்டு, அறைக்குள் நுழைந்தான்.
அவனின் செய்கையில் அபர்ணாவுக்கு உள்ளுக்குள் அப்படி ஒரு உதறல் எடுத்தது.
அவளை கட்டிலில் ஒரே தள்ளாக தள்ளி விட்டு,
கையைக் கட்டிக் கொண்டு அவளை உறுத்து விழித்தவன்,
“சொல்லுங்க மேடம், அப்புறம் மிஸ்டர் ஆதி மூலன டிவோர்ஸ் பண்ற கேஸ் நடத்த எனக்கு எவ்வளவு பணம் கொடுக்கப் போறீங்க?” என கேட்டான்.
அவனது கேள்வியில் “அது வந்து….” என தடுமாறியவள்,
“இல்ல….. நீங்க…. நான் அக்ரீமெண்ட் கலியாணம்.” என கோர்வையாக கூற முடியாது திக்க,
“அங்க வைச்சு அந்தப் பேச்சுப் பேசினாய்?, இப்போ திக்குறாய்?” என கேட்டவன்,
“சரி, டிவோர்ஸ் அப்ளை பண்ணா…. அவங்க உன் கிட்ட காரணம் கேட்பாங்க?, அப்போ என்ன காரணம் சொல்லுவாய்?, நான் உன்ன ஏமாத்தி கலியாணம் பண்ணி இருக்கேன்னா…. அப்படி சொன்னா…. அதுக்கு ஆதாரம் கொடுக்கணும். உன்கிட்ட என்னம்மா ஆதாரம் இருக்கு?, சரி அத விடுவம். அடுத்து, நீ இவர் என்ன கொடுமைப் படுத்துறார்னு சொன்னாய்னா…. அத எப்படி இல்லன்னு ஆக்கணும்னும் எனக்கு தெரியும்.”
“இத விடவும், நான் அப்பா ஆக முடியாது, அப்படி இப்படின்னு ஏதும் வந்தா…. அதுக்கு என்னோட பதில், வாயால இருக்காது, செய்கையில இருக்கும். அப்புறம் நீ புக்ஸ்ச தூக்கிக் கொண்டு ஸ்கூல் முடிச்சு காலேஜ் போக முடியாது. நம்ம பிள்ளைய தூக்கிக் கொண்டு, ஹாஸ்பிட்டலுக்கு தான் போகணும். வேணும்னா இப்போ ஒரு சின்ன டெமோ காட்டவா….” என கேட்டவன் அதோடு மாத்திரம் நிற்காது,
அவளை நோக்கி முன்னேற, “அவன் அடுத்து என்ன செய்வான்?” என அறிந்தவள் ,
பட்டென கட்டிலில் இருந்து எழும்பி,
“இல்ல வேணாம். நான் செய்தது எல்லாம் தப்புத் தான்.” என கூறியவள், ஆதியை மிரண்டு போய் பார்க்க,
அவளை இழுத்து தனது கை வளைவிற்குள் கொண்டு வந்தவன், அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி விட்டு,
அவளின் தாலியை உரிமையாக எடுத்து வெளியில் விட்டபடி,
“இது ஒண்ணும் விளையாட்டுப் பொருள் இல்ல. தமிழ் பண்பாடு பத்தி உனக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. இத நான் ஆத்மார்த்தமா தான் உன் கழுத்தில கட்டினது. அதுக்குரிய மதிப்ப, உனக்கு பிடிக்குதோ இல்லையோ நீ கொடுத்து தான் ஆகணும். புரிஞ்சுதா?” என அழுத்தமாக கேட்க,
அவளும், “புரிந்தது.” என்பது போல எல்லாப் பக்கமும் தலையாட்டி வைத்தாள்.
அதற்கு மேல் அவளை ஆதி எந்த விதத்திலும் தொல்லை படுத்தவில்லை.
இரு பெண்களின் வெறுப்புடன் தான், இரு ஆண்களின் நாட்களும் நகர்ந்தது.
தம்மை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார்களே என்கிற கோபம் இரு பெண்களுக்கும் அதிகமாகவே இருந்தது.
அதிலும் தமயந்தி அதற்கு பின்பு வந்த நாட்களில் முற்றிலும் தீரனை ஒதுக்க ஆரம்பித்தாள்.
தீரன், மீண்டும் தமயந்தியின் மனதில் இடம் பிடிப்பானா?
ஆதியை அபர்ணா ஏற்றுக் கொள்வாளா?
அடுத்த எபி நாளை வரும் மக்காஸ் 😍😍😍
எல்லாரும் கொஞ்சமே இல்ல நிறையவே கடுப்பில இருப்பீங்கன்னு தெரியும். இப்போ தான் கொஞ்சம் ஓகே ஆகி இருக்கேன் மக்காஸ்… 😍😍
கதையை மறக்காம இருப்பீங்கன்னு நினைக்கிறன்…. கண்டிப்பா தொடர்ந்து படிங்க 😍😍😍😍
Ipdi monthly once kathai kudutha yepdi marakkama irukirathu ma
இனி எபி ஒழுங்கா வரும்மா 🥰🥰🥰🥰படிங்க 🥰🥰🥰நன்றிம்மா
Hmmm ok
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நன்றிம்மா 💖💖💖