Episode – 31
தீரன், எத்துணை தூரம் பொறுமையாக பேச முயன்றாலும், தமயந்தியின் பதில் வெற்றுப் பார்வையும், இறுக மூடிய உதடுகளும் தான்.
அவன் எப்படி இறங்கிப் போய் பேசினாலும், அவளிடம் இருக்கும் ஒரே ஆயுதம் மௌனம் தான்.
ஒரு கட்டத்தில் தீரனுக்கு அப்படி ஒரு வெறுப்பு வந்து விட்டது.
அன்றும் அப்படித் தான், அவன் ஒரு நிகழ்வுக்கு போக வேண்டும் என கூறி அவளுக்காகப் பார்த்துப் பார்த்து ஆடைகள் எடுத்துக் கொடுத்து இருந்தான்.
தமயந்தியோ, அவன் வெளியில் செல்ல வேண்டும் எனக் கூறியதையே முற்றிலும் மறந்து போய் இருந்தாள்.
மறந்து போய் இருந்தாள் என்பதை விட,
அவன் சொன்னதைக் கவனிக்கவில்லை என்பது தான் பொருத்தமாக இருக்கும்.
மாலையில் வந்தவன், அவள் ரெடியாகாது இருப்பது கண்டு, புருவம் சுருக்கி யோசித்து விட்டு,
“மேடமுக்கு நான் காலையில சொன்னது விளங்கல போல.” என ஒரு மாதிரிக் குரலில் கேட்டான்.
அவன் கேட்டதும், அவனை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தவள், குழப்பமான பார்வை ஒன்றை அவனை நோக்கி வீசினாள்.
அவளின் பார்வையை வைத்தே, அவளுக்கு எதுவும் தெரியாது, என உணர்ந்து கொண்டவன்,
பல்லைக் கடித்துக் கொண்டு, மீண்டும் பார்ட்டி பற்றி கூறி விட்டு, கிளம்பி வர சொன்னான்.
அப்போதும், “எதுக்கு நான்?” என எங்கோ பார்த்துக் கொண்டு ஆரம்பித்தவள்,
“ஏய்….” என்ற தீரனின் கர்ஜனைக் குரலில் திரும்பி பயத்துடன் அவனைப் பார்த்தாள்.
பல நாட்கள் கழித்து கேட்ட அவனின் கோபக் குரலில் அவள் அவனை எச்சில் விழுங்கிப் பார்க்க,
“எல்லா விஷயத்திலயும் விட்டுக் கொடுப்பன்னு நினைக்காத மதி, ஒழுங்கா போய் கிளம்பி வர்ற வழியப் பாரு, உனக்கு சரியா பத்து நிமிஷம் டைம் தரேன். அதுக்குள்ள நீ இங்க இருக்கணும்.” என உறுமலாக கூறினான்.
அவளும், அவனை வெறித்துப் பார்த்து விட்டு, தயாராக சென்றாள்.
அவள் போனதும், அதுவரையும் இருந்த கடினம் மாறிப் போக,
“அவளுக்கு நான் வாங்கிக் கொடுத்த ட்ரெஸ் எப்படி இருக்கும்?, பொருத்தமா இருக்குமா?, சும்மா தேவதை மாதிரி ஜொலிப்பா என்னோட பொண்டாட்டி. நானும் அதே கலர்ல ட்ரெஸ் போட்டுட்டு வருவம். அப்போ தான் மேட்ச்சிங்கா இருக்கும்.” என எண்ணிக் கொண்டவன்,
ஒரு மென் சிரிப்புடன் ரெடியாகி வந்து, அவனின் மதிக்காக காத்து இருக்க,
அவளோ, தன்னிடம் இருந்த பழைய சேலைகளில் ஒன்றை சிம்பிளாக உடுத்துக் கொண்டு வந்து, “கிளம்பலாமா?” என கேட்க,
அவளின் செய்கையில் அவனுக்கு இரு காதுகளில் இருந்தும் புகை கிளம்பியது.
அவளோ, அவனது முக மாற்றத்தை சிறிதும் கவனிக்காது,
“கிளம்பலாமா?” என மீண்டும் கேட்டாள்.
அவனோ, “நான் சொல்றது எதுவும் கேட்க கூடாதுன்னு முடிவோட இருக்கீயாடி நீ?” என கத்தினான்.
அப்போதும், அவனின் கோபம் எதனால் எனப் புரியாதவள், அவனைக் கண்டு விழிக்க,
“என்ன ஒண்ணுமே தெரியாதவ மாதிரி கண்ணை உருட்டுறாய்?” என அதற்கும் எகிறினான் அவன்.
இம்முறை, அவனை நேராகப் பார்த்தவள்,
“இந்த அதட்டுறது, மிரட்டுறது, ஏமாத்துறது எல்லாம் உங்க வேலை எனக்கு அதெல்லாம் தெரியாது. உண்மையாவே, எனக்கு புரியல.” என அவள் சற்று குத்தலாக கூற,
தீரனோ, அவளை முறைத்துப் பார்த்து விட்டு,
“போய் ஒழுங்கா, நான் உனக்காக வாங்கிக் கொடுத்த ட்ரெஸ்ஸ போட்டுக் கொண்டு வா. உனக்காக நானே போய் ஜெவெல்ஸ், ட்ரெஸ் எல்லாம் வாங்கி வைச்சு இருக்கேன். ஒழுங்கா பாரு மதி.” என அவளை இழுத்துக் கொண்டு சென்று வாங்கி வைத்து இருந்த ஆடைகளை அவனுக்கு காண்பித்தான்.
அவளோ, அவற்றை ஒரு முறை அலட்சியமாக பார்த்து விட்டு,
“இப்போ என்ன இந்த ட்ரெஸ்ஸ நான் மாத்தணும், ஜெவெல்ஸ்ச போடணும் அவ்வளவு தானே.” என சற்று குத்தலாக கேட்டாள்.
அவள் கேட்ட தோரணையில், அவனுக்கு கோபம் வந்தாலும்,
பல்லைக் கடித்துக் கொண்டு ஆமாம் என்பது போல தலையாட்ட,
“ஹ்ம்ம்…. அது சரி நீங்க சொன்னா நான் தலை கீழான்னாலும் குதிக்கத் தானே வேணும்.கிளிப் பிள்ளைக்கு தங்க கூண்டுக்கு உள்ள வைச்சு, தங்கத்தில தட்டு வைச்சு சாப்பாடு வைச்சாலும், அந்தக் கிளிக்கு அது கொடுமை தான். அந்த நிலைமை தான் எனக்கும். கொடுங்க கிளம்பி வரேன்.” என அவள் கூறி விட்டு ஆடைகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் அச்சுப் பிசகாது, நேராக சென்று, அவனின் மனதை அம்பாக மாறி குத்திக் கிழித்தது.
அவளின் பேச்சில் உடல் இறுகிப் போய் நின்றவனுக்கு, அவளை ரசிக்கும் எண்ணம் முற்றிலும் இல்லாது போயிருந்தது என்பதே உண்மை.
அவளோ, அவன் சொன்னது போல ரெடியாகி வந்த பிறகும் அவளைப் பார்க்கும் எண்ணம் இன்றி இருந்தவன்,
“கிளம்பலாம் வா.” என அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.
போகும் போது இயல்பாக தீரன் அவளின் கைகளைப் பற்ற, உடனே அவனது கைகளை உதறி விட்டாள் அவள்.
அதில் அவளின் மீது இருந்த கோபம் மேலும் பல மடங்கு கூடிப் போக அவளின் மணிக்கட்டை இறுகப் பற்றி நிறுத்தியவன், அவளது மணிக் கட்டை மேலும் அழுத்த,
அவனது கைப்பிடியில் வலியை உணர்ந்தவள்,
“ஸ்ஸ்ஸ்….” என்ற ஒரு சத்தத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
தீரனோ, அவளை உறுத்து விழித்தபடி,
“என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. ரொம்ப சீண்டாத.” என மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை குரலில் கூறி விட்டு,
அவளது மணிக்கட்டை வருடி விட்டு,
அவளை அழைத்துக் கொண்டு நிகழ்வு நடக்கும் இடத்துக்கு சென்றான்.
அங்கும் அவளை அவன் தனது கை அணைவிலேயே வைத்துக் கொண்டு அனைவருடனும் பேசிக் கொண்டிருந்தான்.
அவர்கள் அனைவரும் பேசும் போது தான் தீரன் என்ற ஒரு தனி மனிதன் எவ்வளவு தூரம் சாதனைகள் புரிந்திருக்கிறான் எனவும் அவன் கெட்டவர்களுக்கு மட்டும் தான் கொடுமைக்காரன் எனவும் நல்லவர்களுக்கு எப்போதுமே இரட்சகன் எனவும் தெளிவாக புரிந்து கொண்டாள் தமயந்தி.
அப்போதும் அவளது மனதில் “எதுக்காக எனக்கு மட்டும் இப்படி கெட்டதை மட்டும் தேடித் தேடி பண்றார்?” எனவும் ஒரு கேள்வி எழாது இல்லை.
ஒரு வழியாக பார்ட்டி முடித்து வீடு திரும்பும் போது வழக்கம் போல அவன் ரேடியோவை ஒலிக்க விட,
அதில் காதல்ப் பாடல்கள் வரிசையாக ஒலி பரப்பாகிக் கொண்டு இருந்தது.
சரியாக, குறித்த நேரம், “என்ன சொல்லப் போகிறாய்….” பாடலின்,
“இல்லை இல்லை…. சொல்ல ஒரு கணம் போதும். இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்?” என்ற வரிகள் ஒலிக்க ஆரம்பித்தது.
அந்த வரிகள் ஒலிக்கும் போதே தீரனின் கண்கள் அவனையும் மீறி தனக்கு அருகில் இருந்தவளின் புறம் திரும்பியது.
அவ்வளவு நேரமும், அவளை ரசிக்க மறந்த அவனின் கண்கள் இமைக்காது இப்போது தன்னவளை ரசித்துக் கொண்டிருந்தது.
அவன் தன்னைப் பார்க்கிறான் என தெரிந்த பிறகும்,
அவனின் புறம் திரும்பாது, வெளியே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் மதி.
அவனும், அவளைத் தொந்தரவு செய்யாது பாட்டை ஹம் பண்ணிக் கொண்டு மனைவியை சைட் அடித்துக் கொண்டு இருந்தான்.
வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் இறங்கப் போனவளின், கையைப் பற்றி இழுத்தவன், அவளின் இதழோடு இதழ் பொருத்தி ஆழ்ந்து முத்தம் இட்டு விலக,
மதியோ, அவனை முறைத்துப் பார்த்தாள்.
அவனோ, அதனைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், அவளின் நெற்றிக் கூந்தலை மெதுவாக ஒதுக்கி விட்டு,
“ரொம்ப முறைக்காத, நீ எவ்வளவு தான் என்னை வெறுத்தாலும், நான் உன்னை இரண்டு மடங்கா விரும்பிக் கிட்டுத் தான் இருப்பன். இதோ இப்படி தோணும் போதெல்லாம் கிஸ் பண்ணிக் கிட்டுத் தான் இருப்பன். உன்னால முடிஞ்சா நான் கொடுத்தத திருப்பிக் கொடு பார்ப்பம்.” என உதட்டைக் குவித்துக் காட்ட,
“சே…. சே…. விவஸ்தை கெட்ட மனுஷன். உங்கள மாதிரி என்ன நினைக்காதீங்க.” என கூறியவள், உதட்டை சுளிக்க,
சுளித்த உதட்டில் மீண்டும் மென் முத்தம் வைத்தவன், “எனக்கு முன்னால இப்படி பண்ணினா, பதிலுக்கு நான் இப்படித்தான் பண்ணுவன்.” என கூற,
தலையில் அடித்துக் கொண்டு, விறு விறுவென இறங்கி அங்கிருந்து விலகிச் சென்றாள் அவள்.
போகும் அவளைப் பார்த்து, விசில் அடித்துக் கொண்டு அவளின் பின்னால் இறங்கி சென்றான் தீரன்.
இப்படியே இருவரின் நாட்களும் நகர்ந்து கொண்டே இருந்தது.
தமயந்தி கோபப் பட்டால் அவன் முத்தம் இட்டு விட்டு செல்வான்.
அதையும் மீறி அவள் சற்று அதிகமாக கோபம் கொண்டாலோ, இல்லை முறைத்தாலோ,
அவன் முன்னிலும் அதிகமாக முத்த மழை பொழிவான்.
கோபப்பட்டு சண்டை போடும் போது, பதிலுக்கு சண்டை போட்டால் அது சரி.
ஆனால் அவன் எதிராக முத்தம் கொடுத்தால் அவளும் என்ன தான் செய்வது?
ஆகவே, அவள் முடிந்த வரையில், அவனைத் தவிர்க்க நினைத்தாள்.
ஆனால் அதற்கும் தீரன் ஒத்துக் கொண்டால் தானே.
தானாகவே சென்று, அவளிடம் வம்பு வளர்த்து, அவளை சீண்டி, வாயைத் திறக்க வைத்து, முத்தம் இட்டு விட்டு செல்வான் அந்த அடாவடிக் காரன்.
தமயந்திக்கு நாட்கள் போகப் போக, தீரனின் மீதான கோபம் குறைந்து, அவனின் மீது அன்பு மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது.
இதே நேரம், அடுத்தடுத்த மாதங்கள் கண் இமைக்கும் நொடியில் ஓடிப் போக,
அபர்ணாவின் பதினெட்டாவது வயதும் வந்து சேர்ந்தது.
அந்த நாளை , அவளின் மனதில் இருந்து அழிக்க முடியாத ஒரு நாளாய் மாற்றி அமைத்து இருந்தான் அவளின் கணவன்.
அந்த நாளின் நிகழ்வுகள் அபர்ணாவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து இருக்குமா?
அடுத்து இரு ஜோடிகளின் வாழ்விலும் நடக்க இருக்கும் திருப்பம் என்ன?
அடுத்த எபி நாளை வரும் மக்காஸ் 😍😍😍
கதையை மறக்காம இருப்பீங்கன்னு நினைக்கிறன்…. கண்டிப்பா தொடர்ந்து படிங்க 😍😍😍😍
கதை சீக்கிரம் முடிஞ்சிடும்…. மக்காஸ். ஜாலியா படிங்க 💖💖💖.
Super and intresting sis
நன்றி நன்றிடாம்மா 🥰🥰🥰🥰🥰💖💖💖💖💖💖