Episode – 39
அவர்கள் கிளம்பும் போது தத்தமது வாகனங்களில் குடும்பம் குடும்பமாகத்தான் கிளம்பிச் சென்றார்கள்.
கோவிலுக்கு சென்று தாங்கள் எண்ணியபடியே தமயந்தி பாப்பாவுக்கு மொட்டையும் அடித்து,
ஏற்கனவே, பார்வதி அம்மா வேண்டிய வேண்டுதல்களையும் நிறைவேற்றி விட்டு, கோவிலுக்கு பெரிய தொகைப் பணத்தையும் காணிக்கையாக கொடுத்து விட்டு, சந்தோஷமாக பரிபூரணமாக தமது வேண்டுதலை நிறைவு செய்தனர் அந்த அன்பான தம்பதியினர்.
அவர்கள், அந்த வேண்டுதல்களை முழுமையாக முடிக்கும் வரைக்கும்,
முழுதும் உதவியாக, பக்க பலமாக நின்றது என்னவோ சிவகாமி அம்மாவும், தீரனும், ஆதியும் தான்.
கோடீஸ்வரன் அங்கு நின்று கொண்டு இருந்தாலும், தனது போனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அவர் தான், சதித் திட்டம், தீட்டிக் கொண்டு இருந்தாரே. எப்படி தனது குடும்பத்தையே அடியோடு வேர் அறுப்பது என்று.
அங்கிருந்தபடியே, தனது ஆட்களுக்கு போன் போட்டு, அங்கு நடக்கும் அனைத்தையும், கிளம்பும் நேரம் தொடக்கம், ஒவ்வொன்றாக அவர் அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்.
கூடவே இருந்து குழி பறிக்கும் குறுக்குப் புத்தி கொண்ட கேவலமான மனிதன் தானே அவர்.
ஆனால் நடக்கப் போவது எதுவும் அறியாமல், மொத்தக் குடும்பமும் குதூகலமாக இருந்தது.
“அவர்கள் ஒன்றாக இணைந்து குதூகலிக்கும் கடைசி நாள் இது தானே….” என கடவுளே மனதிற்குள் எண்ணி அந்த நிமிடம் கண்ணீர் வடித்தார்.
வாழ்க்கையில் சில தருணங்களை நாம் கடந்து தான் ஆக வேண்டும், சில நிகழ்வுகள் எம்மையும் மீறி நடந்து தான் ஆகும்.
கடவுளால் கூட எதுவுமே செய்ய முடியாது.
எழுதிய விதியை எவராலும் மாற்றவும் முடியாது.
கடவுளும் கூட தன் கண்களை அந்த நேரம் இறுக மூடித் தான் கொண்டார்.
தமயந்திக்கு மொட்டை போடும் போது சிறுகாயம் ஏற்படவே அவள் தொடர்ச்சியாக அழுது கொண்டு இருந்தாள்.
தீரனுக்கு அவள் அழுவது மனதைப் பிசைய,
அவளைத் தூக்கி வைத்திருந்தான் அவன்.
அழுது அடம் பண்ணும் போது தாயைத் தவிர வேறு யாரிடமும் செல்லாத குழந்தை, ஒரு கணம் தீரனைக் கூர்ந்து பார்த்து விட்டு, அவனிடம் தாவி விட்டது.
அவனுக்கும் தமயந்தி மீது ஒரு உரிமை உணர்வு இருக்கவே,
அவனும் அந்தக் குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
அதன் பிறகு தமயந்தி பாப்பா, யார் கேட்டும், அவர்களிடம் போகாது, தீரனின் கைகளுக்குள்ளேயே அமர்ந்து இருந்தாள்.
பரசுராம் தம்பதிக்கு அவளது இந்த நடவடிக்கை ஆச்சரியத்தையே கொடுத்தது.
சிவகாமி அம்மாவுக்கும் தீரனின் குறித்த மென்மையான பக்கம் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
எப்போதுமே தந்தையின் செயல்களினால் விறைப்புடன் திரிபவன் இப்படி குழந்தையுடன் அமர்ந்திருப்பது அவருக்கும் மகிழ்ச்சியையே கொடுத்தது.
இன்னொரு புறம் ஆதியும், அவனது அண்ணனின் கையைப் பிடித்துக் கொண்டு அவனின் பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தான்.
மூவரையும் கண்டு இரு குடும்பத்தினரும் மகிழ்ந்து போயினர்.
ஆனால், இரண்டு கண்களுக்கு சொந்தக்காரர் ஒருவர் மட்டும்,
குறித்த காட்சியை பொறாமையாகவும், கோபமாகவும் பார்த்துக் கொண்டு இருந்தார்.
அந்தக் கண்களுக்கு சொந்தக்காரர் யார் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.
அனைத்தும் முடிந்து கிளம்பும் போதும் தீரனை விட்டு தமயந்தி விலக மறுக்க,
“இதுதான் தனக்கு நல்ல வாய்ப்பு. இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.” என உள்ளுக்குள் எண்ணிக் கொண்ட கோடீஸ்வரன்,
தீரனையும், தமயந்தியையும், தான் அழைத்துக் கொண்டு முன்னாடி செல்வதாகவும், மற்றவர்களை அடுத்த காரில் வருமாறும் கூறினார்.
சிவகாமி அம்மாவோ, “அப்படின்னா நானும் உங்க கூடவே வர்றன். தமயந்தி பாப்பா இடையில எதுக்காச்சும் அழுதாலும் தீரனுக்கு என்ன செய்யணும்னு தெரியாது. அவன் சின்னப் பையன் வேற.” என கூற,
உடனே அவரின் கூற்றை மறுத்துக் கூறிய கோடீஸ்வரன்,
“அது தான் நான் இருக்கனே. நான் பாப்பாவையும் தீரனையும் பத்திரமா பார்த்துக்கிறன். குழந்தைக்கு தேவையான பொருள், டாய்ஸ், பீடிங் பாட்டில் எல்லாத்தையும் ஒரு பேக்ல போட்டு என்கிட்ட கொடுங்க. அவ இனி பால் குடிச்சிட்டு தூங்கினா, எழும்ப நாலு மணி நேரத்துக்கு மேல ஆகும் தானே…. அதுக்குள்ள வீட்டுக்கு போய்டலாம்.. ப்ரோப்லேம் சோல்வ்.” என கோர்வையாக கட கடவென கூறி முடித்தார்.
அப்போதும், அனைவரின் பார்வையும் தெளியாது இருப்பதைக் கண்டவர்,
“சரி, அதுக்கு மேலயும், ஏதும் பிரச்சனைன்னா நீங்க எங்களுக்கு பின்னால தானே வந்து கொண்டு இருப்பீங்க. நான் வண்டிய நிறுத்தி வச்சிருக்கேன். நீங்க வந்து பாருங்க ஓகேவா?, ரொம்ப சிம்பிள். எந்த பிரச்சனையும் இல்லை.” என சமாளிப்பாக கூற,
பரசுராம் மீண்டும் ஏதோ பேச வந்த சிவகாமி அம்மாவை தடுத்து,
“அதுதான் என்னோட நண்பர் அவ்வளவு தூரம் சொல்றாரே அப்புறம் என்ன விடுங்க. ஆசைக்கு தீரனே அவளை வச்சிருக்கட்டும். அவரே, இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வரட்டும்.” என வெள்ளந்தி சிரிப்புடன் கூறினார்.
அந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதனுக்கு கூடவே இருக்கும் கொடூர நண்பனின் எண்ணம் தெரியாமல் போனது தான் காலத்தின் கொடுமை.
பார்வதி அம்மாவும் தமயந்தி பாப்பாக்கு தேவையானவற்றை தீரனிடம் கொடுக்க,
தீரனும் அவற்றை பத்திரமாக வாங்கி காரில் வைத்து விட்டு, தமயந்தி பாப்பா உடன் காரில் ஏறி அமர்ந்தான்.
கோடீஸ்வரனும் கண்களில் ஒரு வித பள பளப்புடன் காரை எடுக்கப் போக,
“நானும் வர்றேன். அண்ணா, என்னையும் உங்க கூட கூட்டிக் கொண்டு போங்க.” என ஓடி வந்து தீரனுக்கு அருகில் ஏறிக்கொண்டான் ஆதி.
அவனது திடீர் செய்கையை எதிர்பார்க்காத கோடீஸ்வரனோ முடிந்த வரையிலும், தனது கோபத்தை வெளிக் காட்டாது,
“ஆதி, நீ அம்மா கூட வாப்பா அது தான் எல்லாருக்கும் நல்லது. அம்மா தனியாகத் தானே வர்றாங்க. அவங்க பாவம் இல்லையா?” என்று கேட்க,
சிவகாமி அம்மாவோ, அங்கிருந்தவாறே,
“இல்லை அவன் தீரன் கூட வர விருப்பப்படுறான் வரட்டுமே. இப்போ என்ன?” எனக் கேட்க,
கோடீஸ்வரனும், சற்று யோசித்து விட்டு,
“இப்போ மாத்திப் பேசினா மொத்தப் பிளானும் கெட்டுப் போய்டும். சரி அப்புறம் பார்த்துக்கலாம்.” என எண்ணியபடி,
பல்லைக் கடித்துக் கொண்டு காரை எடுத்தார்.
காரை எடுத்ததும் சற்று வேகத்துடனே ஓட்ட ஆரம்பித்தவர் பின்னால் வருபவர்கள் தம்மைக் கிட்ட நெருங்காதவாறு குறித்த தூர இடைவெளியில் காரை ஓட்டிக் கொண்டு,
ஏற்கனவே தான் பிளான் பண்ணி, மயக்க மருந்து கலந்து வைத்திருந்த ஜூஸினை ஆதிக்கும், தீரனுக்கும் கொடுத்தார்.
ஆதியோ, குதூகலத்துடன், கடகடவென அந்த ஜூஸை அருந்தியவன்,
சற்று நேரத்தில் கண்ணை இருட்டிக் கொண்டு வருவது போல இருக்கவே,
உறக்கம் வருகின்றது எனக் கூறி உறங்கியும் விட்டான்.
அந்த இளம் சிட்டுக்கு எதுவும் புரியிற வயசு இல்லையே.
ஆனால் நம்ம தீரன் அப்படி இல்லையே.
அவன் தான் கற்பூர புத்திக் காரன் ஆச்சே.
அந்த ஜூஸினை, வாங்கி ஒரு கணம் கூர்ந்து பார்த்தவன்,
அதிகமாக அருந்தாது ஒரு மிடறு மாத்திரம் குடித்து விட்டு அப்படியே வைத்து இருந்தான்.
கோடீஸ்வரன், அதனைக் கவனித்து விட்டு,
“சீக்கிரம் ஜூசைக் குடிச்சு முடி தீரா.” என்று மீண்டும் மீண்டும் கூற ஆரம்பித்தார்.
அவர் சொல்வதைக் கேட்டு சந்தேகம் கொண்ட தீரன்,
“குடிக்கிறன்…. குடிக்கிறன்….” என மட்டும் கூறி விட்டு, அவர் அறியாது, அந்த ஜூசினை சற்று முகர்ந்து பார்த்தான்.
அதில் ஏதோ வித்தியாசமான வாடை வருவது போல அவனுக்கு தோன்றவே,
அந்த ஜூசினை குடிக்காது கோடீஸ்வரனின் கண்களுக்கும் புலப்படாது வெளியில் ஊற்றியவன்,
“குடித்து விட்டேன்.” என பொய்யும் கூறிவிட்டான்.
அதனை அப்படியே நம்பிய கோடீஸ்வரன்,
அடிக்கடி கண்ணாடி வழியே தீரனைப் பார்த்துக் கொண்டே காரை ஓட்டினார்.
அவரது பார்வையில், “என்னவோ சரியில்லயே. ஏதோ தப்பா நடக்கப் போற மாதிரி எனக்கு உள்ளுணர்வு சொல்லுது. ஆனா என்னன்னு தெரியல. அந்த ஜூஸ் குடிச்ச உடனே ஆதியும் தூங்கிட்டான். அந்த ஆளை நம்ப வைக்க, இப்போ நாமளும் தூங்குற மாதிரி நடிச்சே ஆகணும்.” என மிகவும் புத்திசாலித்தனமாக யோசித்தவன்,
கண்களை மூடி உறங்குவது போல நடிக்க ஆரம்பித்தான்.
இருவரையும், திரும்பி ஒரு பார்வை பார்த்த கோடீஸ்வரன்,
கார் ஓட்டுவதை ஸ்லோ பண்ணிக் கொண்டு,
தனது ஃபோனை எடுத்து அதில் தனது ஆட்களுக்கு மெசேஜ் ஒன்றைத் தட்டி விட்டார்.
ஒரு வேளை அவர் போனில் பேசியிருந்தால் தீரன் காதில் அவரது பேச்சு விழுந்து ஏதாவது முன்னெச்சரிக்கையாக அவன் செய்திருக்கக் கூடும்.
அவரோ, மெசேஜில் தனது ஆட்களுக்கு குறித்த இடத்தில் வைத்து ஒரு கனரக வாகனம் மூலம் பரசுராம் வண்டியை அடித்து தூக்குமாறு சொல்லி இருந்ததனால் தீரனுக்கு கடைசி வரையும் அது புரியாது போனது.
தான் எண்ணியது நிறைவேறப் போகின்றது என்ற இறுமாப்பில் விசில் அடித்தவாறு வாகனத்தை ஓட்டியவர்,
மீண்டும் ஒரு கணம் தீரன் ஆதி மற்றும் தமயந்தியைப் பார்த்து விட்டு,
ஒரு எள்ளல்ப் புன்னகையுடன் குறித்த இடத்தில் தனது வாகனத்தை நிறுத்தி வைத்தார்.
அந்த இடம் நாலு சந்திகள் சந்திக்கும் ஒரு பிரதான வீதிக்கு சற்று தள்ளி இருந்தது.
கிட்டத்தட்ட அந்த இடமே ஒரு காட்டுப் பிரதேசம் போலத்தான்.
வார நாட்களிலேயே, அடிக்கடி அந்தப் பாதையால் எந்த வாகனங்களும் வராது.
அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆதலாலும், மாலை சற்று மழை பெய்ய ஆரம்பித்து இருந்ததாலும், வாகனங்கள் வரும் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே இருந்தது.
அது இன்னும் அவருக்கு வசதியாகிப் போக,
மீண்டும் தனது ஆட்களுக்கு போன் பண்ணியவர் தூரத்தில் பரசுராம் வண்டி வருவதாகக் கூற, அவர்களும் வாகனத்துடன் ரெடியாக நின்று கொண்டு இருந்தனர்.
அதே நேரம், கண்களை மெதுவாக விழித்துப் பார்த்த தீரன்,
“எதுக்காக இவர் இப்போ, இங்க, இப்படி இறங்கி நிற்கிறார்?” என எண்ணியவன்,
மடியில் இருந்த தமயந்தியை, சீட்டில் பத்திரமாக படுக்க வைத்து விட்டு,
நடப்பவற்றை சற்றுக் கூர்ந்து பார்க்க ஆரம்பித்தான்.
அப்போது தான் தூரத்தில் பரசுராமின் வண்டி வருவதைக் கண்டவன்,
“என்னவோ தப்பா இருக்கே.” என எண்ணியவாறு, வண்டியையும், கோடீஸ்வரனையும் மாறிப் மாறிப் பார்க்கும் நேரம்,
திடீரென ஒரு திருப்பத்திலிருந்து வந்த கனரக வாகனம் அவர்களின் வாகனத்தை அடித்து நொறுக்க,
மறு புறம் “யெஸ்…. சக்ஸஸ்….” என கத்தும் தந்தையின் சத்தத்தை கேட்ட தீரனுக்கோ ஒரு கணம் ஐம்பொறிகளும் நின்று சுழன்றது.
அவனின் கண் முன்னே தாயின் இறப்பை கண்டவனின் நிலை என்ன?
எப்படி கோடீஸ்வரனின் பிடியில் இருந்து தப்பினான் தீரன் ?
அடுத்த எபி நாளை வரும் மக்காஸ் 😍😍😍
அடுத்த எபியுடன் பிளாஷ் பேக் முடிஞ்சுடும் மக்காஸ்….
கதை சீக்கிரம் முடிஞ்சிடும்…. மக்காஸ்.
படிக்காதவங்க படிக்க ஆரம்பிங்க மக்காஸ் 😍😍
Adapavi payaley unakku nalla savey varudhudaa
Intresting epiiiii ❤️❤️❤️❤️❤️… Thamayendhi ku sister epdi vandhaaa……. Oreee dought ah irukeeee
inimelachum epi ku ivvalavu gap kodukkama kodunga pa. romba kashtama irukku. naduvula bayangara gap. naan etheychaya open panni partha 4 epi vanthu irukku. seekiram adutha epi podunga. damayanthi theera pathi therinjikanum