இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!!

4.8
(20)

Episode – 04

 

அவனின் சிரிப்பில் அந்த இடம் அதிர ஒரு கணம் தமயந்தியின் உடலும் அதிர்ந்து அடங்கியது.

 

அவன் சிரித்து முடிக்கும் வரைக்கும் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளை, ஆழ்ந்து பார்த்தவன்,

 

“என்ன தமயந்தி அப்படிப் பார்க்கிறாய்?” என கேட்டான்.

 

 அவளோ, அவன் தனது பெயரை சொன்னதும் முற்றிலும் குழம்பிப் போனவள்,

 

“உங்களுக்கு என் பெயர் தெரிஞ்சு இருக்கு. ஆனா எனக்கு உங்கள பார்த்த மாதிரி நினைவே இல்லையே சார். நீங்க வேற யாரோ தமயந்தின்னு நினைச்சு என்ன மாறி கடத்திக் கொண்டு வந்துட்டீங்க சார்.”என அப்போதும் பொறுமையாகவே மென் குரலில் கூறினாள் தமயந்தி.

 

(யாரு அவன் மாறிக் கடத்தினானா.கொடுமை சரவணா. இந்தப் பொண்ணு இவ்வளவு நல்லவளா இருந்திருக்க வேண்டாம்.)

அவளின் கேள்வியில் கேலியாக சிரித்தவன்,

 

“ஓஹ்…. அப்படி சொல்றீங்களா தமயந்தி மேடம்?” என கிண்டலாக கேட்ட படி, காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்த பொசிஷனை மாற்றி, இரு கால்களிலும் கைகளை வைத்து கோர்த்துக் கொண்டு, சற்று முன் நோக்கி நகர்ந்து அவளைக் கூர்மையான பார்வை பார்த்தவாறு,

 

“என்னப் பார்த்தா ஆள் மாறித் தூக்கி வந்தவன் போலவா இருக்கு?” என உறுமலுடன் கேட்டான்.

 

அவனின் உறுமலில், பயத்துடன் அவனைப் பார்த்தவள்,

 

அப்போது, தான் அவனின் தோற்றத்தைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.

 

ஆணவன் அவன் ஆறடி உயரத்தில் ஆளை அசத்தும் தோற்றத்துடன் தான் இருந்தான்.

 

அதில் எந்த சந்தேகமும் இல்லை.

சிக்ஸ் பேக் உடலுடன், சிவந்த நிறத்துடன், அளவான மீசை தாடி உடன் பார்த்ததும் வசீகரிக்கும் தோற்றத்துடன், 

வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்து இருந்தவனின் கண்களில் இருக்கும் அந்தக் கொடூர பார்வை மட்டும் இல்லை என்றால் அவன் செம ஹீரோ என தமயந்தி அடித்துக் கூறி இருப்பாள்.

 

ஆனால் அந்த வார்த்தையை சொல்ல முடியாது அவனின் பார்வையும் இறுகிய தோற்றமும், கேலிச் சிரிப்பும் அவளைக் கட்டிப் போட்டு விட்டதே.

 

அவள் அவனைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே சொடக்கிட்டவன்,

 

“என்னை நீ எடை போட்டது போதும், உன்னைப் பத்தி நான் சொல்றேன் சரியான்னு செக் பண்ணிப் பார்த்துக்க.” என கூறியவன், 

 

அவளின் தந்தை பேர் தொடக்கம், அன்னை இறந்தது, அவள் படித்த பாடசாலை, வேலை செய்வது வரைக்கும் அனைத்தையும் கூறி முடித்தவன், அவளின் தங்கை அபர்ணா பற்றியும் அனைத்தும் கூறினான். 

 

அவளின் தந்தை தொழிலில் வீழ்ச்சி, அதனால் ஏற்பாடு செய்யப் பட்ட ஆதி மூலன் உடனான திருமணம் என அனைத்தையும் கூறி முடித்தவன்,

 

“இப்போ சொல்லு நான் ஆள் மாறி உன்னை தூக்கி கொண்டு வந்து இருக்கேனா?” என கேட்க,

 

அவளோ, விழி விரித்துப் பார்த்தபடி வார்த்தைகள் வராது தடுமாறியவள்,

எச்சில் விழுங்கியபடி “இல்லை.” என தலையாட்டினாள்.

 

அவனோ, அவளின் பாவனையில் கேலிப் புன்னகை ஒன்றை உதிர்க்க,

 

“அவன் தான் எண்ணியது போல சாதாரணமானவன் இல்லை.” 

 

என்பதைப் புரிந்து கொண்ட தமயந்திக்கு, மயக்க மருந்தின் தாக்கத்தினால் உண்டான தலைவலி இன்னும் அதிகமாக நெற்றியை இன்னும் அழுத்தி தேய்த்து விட்டுக் கொண்டவளுக்கு,

 

அப்போது தான், தான் எழுதி வைத்த கடிதம் பற்றி நினைவுக்கு வந்தது.

 

“அச்சோ, நான் வேற சாகப் போறேன்னு கடிதம் எழுதி வைச்சிட்டு வந்தன். இப்போ அங்க என்ன நடக்குதோ தெரியலயே. அப்பாவும், அபர்ணாவும் ரொம்ப பயந்து போய் இருப்பாங்களே. சார் ப்ளீஸ், கொஞ்சம் தயவு பண்ணுங்க சார்.” என கெஞ்ச,

 

“ஹா…. ஹா….” என சத்தமாக சிரித்தவன், 

 

“நீ இப்போ எதுக்கு இப்படி புலம்புறாய் தமயந்தி. நீ எழுதின லெட்டர நான் கிழிச்சுப் போட்டுட்டன். அதுக்கு பதிலா நான் எழுதுன லெட்டர வைச்சாச்சும்மா.” என கூற,

 

அவளோ, அவனை அதிர்ந்து பார்க்க,

தனது போனில் போட்டோ எடுத்து வைத்த குறித்த லெட்டரை அவளுக்கு காட்டும் வகையில் அவள் இருந்த கட்டில் பக்கத்தில் அமர்ந்து இருந்த வாக்கிலேயே தனது போனை எறிந்தான்.

 

அவளோ, கை நடுங்க அந்த போனை எடுத்து லெட்டரை படிக்க ஆரம்பித்தாள்.

 

அச்சு அசலாக அவளின் எழுத்தை போலவே, அந்தக் கடிதம் எழுதப் பட்டு இருந்தது. சைன் கூட அப்படியே அச்சுப் பதித்தது போல இடப்பட்டு இருந்தது. 

 

பேச வார்த்தைகள் வராது கண்களில் அச்சம் பொங்க அந்த லெட்டரை படிக்க ஆரம்பித்தவளின் கண்கள் இரண்டும் சினத்தில் சிவக்க, 

 

“என்ன பண்ணி வைச்சு இருக்கீங்க?, நான் உங்க கூட ஓடி வந்தேன்னு எழுதி இருக்கீங்க? நீங்க யாருன்னே எனக்கு தெரியாது. என்ன பித்தலாட்டம் இது?, இந்த லெட்டரை என்னோட அப்பா, தங்கச்சி படிச்சா என்ன ஆகும்?, அப்பா என்ன பத்தி என்ன நினைப்பார்?” என கண்ணீர் வடிய, சற்று கடின குரலில் அதட்ட,

 

“ம்ப்ச்…. எதுக்கு இப்போ கத்துறாய்?” என காதைக் குடைந்து கொண்டவன்,

 

“அதெல்லாம் உங்க அப்பா படிச்சு, அழுது அந்த ஆதி மூலனுக்கு உன்னோட தங்கச்சிய கலியாணம் செய்து கொடுக்கிற வரைக்கும் போயாச்சு தமயந்தி. நீ ரொம்ப லேட்மா.” என கூறி சிரித்தான்.

 

காதில் விழுந்த செய்தியில், “என்னது?” என அதிர்ந்து எழுந்தவள், மருந்தின் வீரியத்தால்  தடுமாறி மீண்டும் கட்டிலில் தொய்ந்து அமர்ந்தபடி, 

 

தனக்கு எதிரே இருந்தவனை வெறித்துப் பார்த்தாள்.

 

 அவளின் எந்த செய்கைகளும் அவனைப் பாதிக்கவில்லை என்பது போல,

 

அவளைக் கூர்ந்து பார்த்தவன், “உனக்கு கொடுத்து இருக்கிறது கொஞ்சம் கை டோஸ், நீ வேற மெல்லிய உடம்புக்காரி கொஞ்சம் பார்த்து நடம்மா. என்னால கொலை கேஸ்ல எல்லாம் உள்ள போக முடியாது. அப்புறம் எதுக்கு இப்போ நீ இப்படி குதிக்கிறாய்?, உங்க அப்பா இன்னும் சாகல திவ்வியமா உயிரோட தான் இருக்கார்.” என கூறித் தோளைக் குலுக்க,

 

விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

 

 “என்ன வார்த்தை பேசுறீங்க நீங்க?  அவர் எப்படிப் பட்ட மனுஷன் தெரியுமா?, அவர போய்…. சே….” என கூறியவள், 

 

“என்னால இங்க இருக்க முடியாது, அந்த அயோக்கியன் கிட்ட அபர்ணா மாட்டிக் கிட்டு இருக்கிறத என்னால பார்த்துக் கிட்டு  வாழவே முடியாது. என் வாழ்க்கை பாழாய்ப் போனாலும் பரவாயில்ல, அவ சின்னப் பொண்ணு, அவளுக்கு ஏன் இந்த நிலைமை?” என கதறி அழுதவள், தடுமாறி எழுந்து அங்கிருந்த வாஷ் பேசின் நோக்கி சென்று, தண்ணீரைத் திறந்து முகத்தில் அடித்துக் கழுவி விட்டு,

 

தீரனை தாண்டிப் போய் கதவைத் திறக்க ஆய்த்தம் ஆனாள்.

 

தீரனோ, அவளின் செய்கைகளையே பார்த்துக் கொண்டு இருந்தவன், 

 

அவளைத் தடுக்கவே இல்லை.

 

கதவுக் குமுழியில்  கையை வைத்தவள், 

ஒரு கணம் திரும்பி அவனைப் பார்க்க,

 

அவனோ, அவளைப் பார்த்து கண் சிமிட்டி விட்டு, போனில் பார்வையை செலுத்தினான்.

 

“என்ன இவரு இப்படி இருக்காரு?” என எண்ணியவள், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு  கதவைத் திறந்து பார்த்தாள்.

 

பார்த்தவளின் கண்கள் அப்படியே நிலை குத்தி நின்றது. 

 

அவளோ, பிரம்மை பிடித்தது போல நின்று இருக்க, 

 

“என்ன தமயந்தி, நீந்திப் போய் உங்க அப்பாகிட்ட பேச ரெடியா?, ஆழ்கடல் நீச்சல் தெரியுமா உனக்கு?” என கேலியாக கேட்டவனை அரண்டு போய் பார்த்தாள் அவள்.

 

ஆம் அவர்கள் இருவரும் இருப்பது ஒரு கப்பலில் தான்.

 

நான்கு பக்கமும் தண்ணீர் சூழ்ந்து இருக்க, எந்தக் கரையும் தெரியாத நடுக் கடலில் அவளைக் கொண்டு வந்து வைத்து இருந்தான் அவன்.

 

கடலில் மட்டும் அல்ல, வாழ்க்கையிலும் இனி அவள் கரை சேர அவனின் தயவு கண்டிப்பாக அவளுக்கு தேவை என்கிற நிலை தான்.

 

அவனின் கேள்வியில் அவனை மருட்சியாக பார்த்தவள்,

 

“ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க?” என அழுகையுடன் கேட்க,

 

அவளை மீண்டும் வந்து  தனக்கு நேரே இருந்த இருக்கையில் அமருமாறு கண்களால் சைகை செய்தவன், 

 

அவள் அங்கேயே அசையாது நிற்கவும், 

ஒரு சிரிப்புடன், “கொஞ்சம் பழைய டெக்னிக் தான். ஆனா உனக்கு கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும்.” என ஒரு வீடியோவை பிளே பண்ணிக் காட்ட,

 

அதில் கறுப்பு நிற உடை அணிந்து, முகத்தையும் கரு நிற துணியால் மறைத்து இருந்த பத்திற்கும் மேற்பட்ட ஆடவர்கள்,  அவளின் வீட்டின் முன் புறம், மற்றும் பின் புறம் நின்று கொண்டு இருந்தனர். 

 

வீடியோவை அவளுக்கு  காண்பித்தபடியே,

 

அவர்களுக்கு போனில் அழைத்தவன், 

“பாய்ஸ், டேக் பொசிஷன். நான் சொன்ன உடனே உள்ள போய் தமயந்தி அப்பா உட்பட அங்க உள்ளவங்க எல்லாரையும் சுட்டுத் தள்ளிடுங்க. கவுண் டவுன்.” என ஆரம்பிக்க,

 

அடுத்த நொடி அவன் சொன்ன இடத்தில் ஓடிப் போய் அமர்ந்தவள், 

 

“சார் ப்ளீஸ் அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க.” என கெஞ்ச ஆரம்பிக்க,

 

“ம்ப்ச்…. அப்போ இனி மேல் நான் சொல்றத மறுக்காம செய்வேன்னு சொல்லு.” என கேட்கவும்,

 

அவளோ, சற்றும் யோசிக்காது, 

“கண்டிப்பா சார், நீங்க என்ன சொன்னாலும் செய்றேன், அப்பாவ எதுவும் பண்ண வேணாம்னு சொல்லுங்க, அவர் பாவம்.”

 

“ம்ம்ம்ம்…. ஓகே. அப்பா மேல அந்தளவு பாசம் இல்ல….” என இழுத்தவன், 

 

“பாய்ஸ் அந்த ஆள இப்போ ஒண்ணும் பண்ண வேணாம். ஆனா தொடர்ந்து கண் காணிச்சுட்டே இருங்க.”

 

“அப்படியே அந்த பொடிப்பையன் ஆதி மூலனையும், அபர்ணாவையும் கண்காணிச்சுட்டு இருங்க. அங்க சின்ன துரும்பு அசைஞ்சாலும் எனக்கு உடனே தெரிய வரணும். எல்லாரும் என் கையில மாட்டின பொம்மைங்க. அவங்கள நான் தான் ஆட்டுவிக்கிறன்னு தெரியாம ஆட்டி வைப்பேன்.” என கூறி கர்ஜித்தான்.

 

அவனின் கண்களில் தெரிந்த பழி வெறியிலும், குரலில் தெரிந்த வன்மத்திலும் முற்றிலும் நொறுங்கிப் போய்அமர்ந்து இருந்தாள் தமயந்தி. 

 

ஆதி மூலனைக் கண்டே பயந்தவள் அவள்.

 

“இங்கோ, அரி தீரன் ஆதி மூலனை பொடிப் பையன் என்கிறானே. அப்போ இவன் எப்படிப் பட்ட பயங்கரமானவனாக இருப்பான்?” என எண்ணி நொந்து போனாள் அவள்.

 

அவனோ, “என்ன தமயந்தி, இதுக்கே இப்படி ஷாக் ஆன எப்படிம்மா? இன்னும் நீ பார்க்க வேண்டியது இன்னும் நிறையவே இருக்கு.” என சாவகாசமாக அமர்ந்து கொண்டு கூற,

 

“ஏன் சார் இப்படி?, நான் உங்கள இது வரைக்கும் பார்த்தது கூட இல்லை. உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?, ஒரு வேள உங்களுக்கு பணம் வேணும்னா நான் அப்பா கிட்ட சொல்லி வாங்கித் தரேன்.” என கூற,

 

“சம்பந்தம் இருக்கு தமயந்தி, 

நிறையஆஆ…. சம்பந்தம் இருக்கு. என்னன்னு ஒவ்வொன்னா சொல்லிக் கொடுக்கிறன். அப்புறம் என்ன கேட்டாய் பணமா?, ஹா…. ஹா…. உங்க அப்பா புடைவைக் கடையை வாங்க எனக்கு ஒரு செகண்ட் போதும், அந்த கடையை நான் வாங்கிற காசு எனக்கு தூசு மாதிரி. இப்போ சொல்லு நீ எனக்குப் பணம் தரப் போறீயா?” என கேட்க,

 

அவனை அதிர்ந்து பார்த்தவள், அடுத்து என்ன பேசுவது எனப் புரியாது தொய்ந்து போனாள். 

 

அவனோ, அப்போதும் விடாது, “இப்போ நாம இருக்கிற கப்பல் கூட எனக்கு சொந்தமானது தான். உன்னை தூக்கி கடல்ல போட்டாலும் என்ன யாரும் கேள்வி கேட்க முடியாது.” என சிம்பிளாக கூற,

 

அவள் அரண்டு போய் அவனைப் பார்த்தாள்.

 

அவளின் பார்வையை அலட்சியம் செய்தவன்,

 

“பட், உன்ன வைச்சு நான் முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. அதுக்கு அப்புறம் உன்ன கொல்றத பத்தி யோசிக்கிறன். இப்போ உன் உயிர் சேப் தான்.” என கூறினான்.

 

அவனின் பேச்சுக்களில் உடலில் உள்ள தனது மொத்த சத்தும் வடிந்ததைப் போல உணர்ந்தவள், சோர்வாக அவனைப் பார்க்க,

 

அவனோ, “இப்பவே கண்ண கட்டுதோ, சரி உனக்கு ஏதும் கேட்கணும்னா கேளு. நான் தெளிவா பதில் சொல்றேன்.” என அவன் கேலியாக கூற,

 

“இனி அவனிடம் வாய் திறக்க அவளுக்கு தைரியம் வருமா என்ன?, எதுவும் இல்லை.” என்பதைப் போல தலை அசைத்தவளை ஆழ்ந்து பார்த்து விட்டு,

 

“குட்.” என கூறியவன், 

 

“அப்போ நாம நம்ம இடத்துக்கு போகலாம்.” என கூறியவன்,

 

வெளியே செல்ல கதவு வரை சென்று விட்டு, திரும்பி அவளைப் பார்த்து,

“ரொம்ப வீக்கா இருக்காய், கொஞ்ச நேரம் தூங்கு.” என கூறி விட்டு செல்ல,

 

அவளோ, “எனக்கு இனி வாழ்க்கை முழுக்க தூக்கமே வராத அளவுக்கு ஷாக் கொடுத்திட்டு தூங்க சொல்றாரே இவர்.” என எண்ணிக் கொண்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள்,

 

மருந்தின் வீரியம் இன்னும் முற்றாக நீங்காததினால் அப்படியே தன்னை அறியாமல் உறங்கிப் போனாள்.

 

மறு புறம், அபர்ணாவை காரில் ஏற்றிக் கொண்டு சென்ற ஆதி மூலன், 

 

கலங்கிப் போய் இருந்தவளை  ஓரக்கண்ணால் பார்த்து விசில் அடித்தபடி காரை ஓட்டினான்.

 

அவனின் விசில் சத்தம் கேட்டாலும், எதுவும் பேச முடியாது, பேசவும் விரும்பாது சீட்டில் கண் மூடி சாய்ந்து அமர்ந்தாள் அவள்.

 

கொஞ்ச நேரத்திற்குள் அவளின் வாழ்க்கை தலை கீழாக மாறியதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

 

தன் அக்காவுக்கு அவன் கணவனாக வரக்கூடாது என எண்ணியவளுக்கு, 

 

தனக்கே அவன் கணவனாக வரப் போகிறான் என எண்ணும் போது உடல் நடுங்கி உள்ளம் குமுறியது.

அவளது எண்ணங்களின் நடுவே கார் நிற்க,

 

கண்களைத் திறந்து பார்த்தவள், கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு அதிர்ந்து கத்தி விட்டாள்.

 

அப்படி என்ன காட்சியை கண்டு அபர்ணா கத்தி இருப்பாள்?

 

தமயந்தியை அரிதீரன் கடத்த காரணம் என்ன?

 

இரு பெண்களும் இனி எங்கணம் வாழ்க்கையை எதிர் கொள்ளப் போகிறார்கள்?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்..

 

அடுத்த எபி நைட் வரும் மக்காஸ் ❤❤❤❤

 

உங்க லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ் ❤❤❤❤❤

 

இனி தொடர்ந்து எபிகள் வரும் 😍😍😍😍

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

1 thought on “இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!