இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 40

4.8
(17)

Episode – 40

“அம்மாஆஆ….” என அலறியவன்,

ஆதியைப் பற்றிக் கூட யோசிக்காது,

இறங்கி காரை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

அவனின் அந்த திடீர் செய்கையை எதிர்பாராத கோடீஸ்வரன்,

ஒரு கணம் செய்வது அறியாது மலைத்துப் போய் நின்றார்.

ஆனால் அடுத்த கணம், “தீராஆஆ….” என கத்தி அழைத்தபடி,

அவனைப் பிடிக்க ஓட ஆரம்பித்தார்.

அதற்குள் அவரது ஆட்கள் அவருக்கு அருகே வண்டியை நிறுத்தி விட்டு,

“சார், நீங்க சொன்ன படியே எல்லாம் பக்காவா செய்து முடிச்சிட்டம். சக்ஸஸ் தானே…. நீங்க ஹாப்பி தானே சார்?” என்று கேட்க,

“டேய், இப்போ அத பத்திப் பேசுறதுக்கு நேரமில்லை. கட கடன்னு அந்த வாகனத்தை கொளுத்தி விடுங்கடா. நேரம் போகுது. யாரும் வந்தா நமக்கு தான் சிக்கல்.” என சொல்ல,

அவர்களும் கோடீஸ்வரனின் வார்த்தைக்கு இணங்க அந்த வாகனத்தை நோக்கி நெருப்பு பந்தத்தை வீசினர்.

கனரக வாகனம் மோத வரும் கடைசிக் கணத்தில்,

வாகனத்தைக் கண்ட பார்வதி அம்மா, சிவகாமி அம்மாவை வேகமாக வெளியே தள்ளி விட்டு இருந்தார்.

அதனால் சிவகாமியம்மா காயங்களுடன் உயிர் தப்பி இருந்தார்.

வலியை பொறுத்துக் கொண்டு அவர் எழுந்து வருவதற்குள்ளாகவே அந்த வாகனம் தீக்கிரையாகிக் கொண்டிருந்தது.

அதற்குள் தீரன் தனது அன்னையும் சேர்ந்து தீக்குள் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என எண்ணியவாறு வாகனத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டு இருந்தான்.

தீரன் ஓடி வருவதை மங்கலான தனது கண்களுக்குள் சிவகாமி அம்மாவும் கண்டு கொண்டார்.

அவனைத் தடுப்பதற்காக அவனை நோக்கி காலை இழுத்து இழுத்து நகர ஆரம்பிக்கும் நேரம் தான்,

அடுத்த கொடூரம் நடப்பதை அவர் கவனித்தார்.

ஆம், தூரத்தில் கோடீஸ்வரன் ஆதியை, ஒருவித கோபத்துடன் காரில் இருந்து தூக்கிக் கொண்டு எரிந்து கொண்டிருந்த காரை நோக்கி வரும் காட்சி தான் அது.

அந்தக் காட்சி அங்கு இருந்த புகை மண்டலத்திலும் அவருக்கு நன்றாகவே தெரிந்தது.

“அடப்பாவி…. என்னோட பிள்ளைய கொல்ல தூக்கிக் கொண்டு வர்றானே அந்தப் படுபாவி. இல்ல…. இல்ல…. என் பிள்ளய நான் காப்பாத்தியே ஆகணும்.” என ஒரு வித வெறியுடன் நிமிர்ந்து நின்றார் அவர்.

அதீத புகைமண்டலமாக அந்த இடம் இருந்ததால்,

நெருப்புக்கு சற்று தூரத்திலிருந்து ஆதியை தூக்கி எறிந்த கோடீஸ்வரனுக்கு, அங்கு சிவகாமி அம்மா இருப்பது கண்ணுக்கு புலப்படவே இல்லை.

தன் பாட்டுக்கு மயங்கி இருந்த அந்தப் பிஞ்சுப் பாலகனை தூக்கி எறிந்தவர் திரும்பி செல்ல ஆரம்பித்தார்.

அதே நேரம் சத்தமின்றி தன்னால் முடிந்த வரையிலும் வேகமாக ஆதியை நோக்கி ஓடி வந்த அந்தத் தாய்,

ஆதியை பிடிப்பதற்குள் அவனது வலது பக்க கன்னத்தை நெருப்புத் தணலொன்று பொசுக்கி இருந்தது.

அந்த வலியில் மயக்கம் தெளிந்தவன் வீறிட்டு கத்த ஆரம்பித்தான்.

கடைசி நேரத்தில் ஒருவாறு அவனைத் தாங்கிப் பிடித்தவர்,

அருகே இருந்த புற் தரையில் அவனைத் தூக்கி எறியும் நேரம்,

கால் தடுக்கி நெருப்புக்குள் விழுந்திருந்தார்.

நெருப்பு ஜுவாலைகள் அவரின் உடலை பொசுக்க ஆரம்பித்து இருந்தது.

தம்பியின் குரலில், அந்தப் பக்கம் பார்வையைத் திருப்பியவன்,

நடக்கும் அவலத்தை தாங்க முடியாது,

“அம்மாஆஆ….” என தாயின் பக்கம் கதறிக் கொண்டு ஓட,

தன்னை நோக்கி ஓடி வரும் தீரனைப் பார்த்தவர்,

ஒற்றைக் கையைத் தூக்கி, தீரனை வர வேண்டாம் என எரியும் நிலையிலும் காட்டி,

அதே கையால் ஆதியையும் சுட்டிக் காட்டி விட்டு அப்படியே எரிந்து கரிக்கட்டையாகிப் போனார்.

தன் கண் முன்னால் தனது அன்னை எரிந்து கொண்டிருப்பது கண்டு கதறி அழுது துடித்தவன், அங்கும் இங்கும் ஓடியோடி அழுதான்.

அந்த சிறுவனின் கண்ணீரைக் காண முடியாது வானமும் மெதுவாக மழையைப் பொழிய ஆரம்பித்து இருந்தது.

குறித்த நேரத்திற்குள்ளேயே, அனைத்தும் நடந்து முடிந்திருக்க, நிலத்தில் விழுந்து அழுது முடித்தவன்,

பார்வதி அம்மாவையும், பரசுராமையும் நினைத்தும் ஒரு மூச்சு அழுது முடித்தான்.

சற்று நேரம் கழித்து ஒருவாறு தன்னை சமன் செய்து கொண்டவனுக்கு,

அப்போது தான் தனது தாய், தம்பி பற்றி கடைசியாக கூறியது மூளைக்கு எட்டியது.

அந்த நொடி ஆதி பற்றி யோசித்தவன்,

குறித்த புற்தரை நோக்கி பார்வையை செலுத்தினான்.

அங்கே, அவனது உயிரான தம்பி ஆதியோ,

ஒரு பக்க கன்னம் முழுவதும் பொசுங்கி இருக்க,

வலியில் அழுது கதறித் துடித்துக் கொண்டிருந்தான்.

அவனின் அழுகை அந்த இடத்தையே முழுவதும் நிறைத்திருக்க,

கோடீஸ்வரனோ, சத்தத்தைக் கேட்டு தீரனும் ஆதியும் சேர்ந்து அந்த நெருப்புக்குள் எரிந்து சாம்பல் ஆகி விட்டதாக எண்ணிக் கொண்டவர்,

“சரி போனா போகட்டும் நமக்குத்தான் காசுக்கு இப்போ இந்த சின்ன குட்டி இருக்காளே. இவள என்னோட பொண்ணுன்னு சொல்லி வளர்த்து அவ வளர்ந்ததும் சொத்து முழுவதையும் ஆட்டைய போட்டுட வேண்டியது தான். இப்ப தான் என்ன பிடிச்ச எல்லா பீடையும் ஒழிஞ்சு இருக்கு. இனி எனக்கு நல்ல காலம் தான். குரு உச்சத்தில தான்.” என கூறி கொக்கரித்துக் கொண்டவரை மனித குலத்தில் சேர்க்கவே முடியாது.

அடுத்து வந்த கொஞ்ச நேரத்தில், தமயந்தி உடனும், தனது ஆட்களுடனும் அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டார்.

போகும் அவரையே தனது கோபம் கொப்பளிக்கும் சிவந்த கண்களால் உறுத்து விழித்தவனது உதடுகள்,

“உங்கள, நான் சும்மா விடவே மாட்டன் மிஸ்டர் கோடீஸ்வரன்.” என முணு முணுத்துக் கொண்டது.

ஆனால், அடுத்த கணமே தனது தம்பியை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனப் புரியாது தவித்தவன்,

ஆதியைத் தூக்கிக் கொண்டு அந்த வழியால் எந்தப் பக்கம் போவது என தெரியாது அங்குமிங்கும் ஓடிக் கொண்டு இருந்தான்.

இறுதியில் ஒரு முடிவுடன் அங்கிருந்த ஒரு பாதை வழியே, ஆதியை தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தான்.

அவனைப் படுத்திய பாடு போதும் என நினைத்த கடவுள் அவனுக்காகவே ஒரு வாகனத்தை அனுப்பி வைத்தார்.

அந்த வாகனத்தில் கெஞ்சிக் கேட்டு, தனது தம்பியுடன் ஏறிக் கொண்டவன்,

தங்களை ஹாஸ்பிட்டலில் விடும் படி கேட்டுக் கொண்டான்.

அவன் கேட்டுக் கொண்டதின் படியே,

சற்றுத் தொலைவில் இருக்கும் ஹாஸ்பிட்டலில் அவர்களை இறக்கி விட்ட அந்தக் காரில் வந்த பெரிய மனிதர், அவர்களை தனியாக விட மனம் இன்றி அவர்களுடன் தானும் சென்றார்.

தீரனோ, தம்பியை அட்மிட் பண்ணி விட்டு, அங்கிருந்த கதிரையில் ஓய்ந்து போய் அமர்ந்தான்.

அவர்களுடன் காரில் வரும் போதே,

தீரன் தம்பிக்காக துடிக்கும் துடிப்பைக் கண்டு கொண்ட அந்தப் பெரிய மனிதருக்கு, ஏனோ தீரனை சாதாரணமாக கடந்து போக முடியவில்லை.

அவனுக்காக ஆதியின் மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொண்டார் அவர்.

கேரளாவில் இருந்து சென்னையை சுற்றிப் பார்க்க வந்த கோடீஸ்வரன் சதாசிவம் தான் அவர்.( முதலே தீரனின் காட் பாதர், அண்ட் சிவம் கம்பெனி பத்தி சொல்லி இருப்பேன் மக்காஸ்.)

கடவுள் எப்போதும் ஒருவருக்கு தொடர்ச்சியாக கவலையை, பிரச்சனைகளை மாத்திரம் கொடுப்பது இல்லையல்லவா?

ஒரு பக்க கதவை மூடினால் கண்டிப்பாக அதை விட சிறந்த கதவு ஒன்று திறக்கும் என்பதற்கு சரியான உதாரணமாக அமைந்தது தீரனின் வாழ்க்கைப் பாதையும்.

அந்தப் பெரிய மனிதர் தீரன் எனும் சிறுவனின் துடிப்பை கொஞ்ச நேரத்திலேயே உணர்ந்து கொண்டார்.

அந்த நொடி ஏனோ அவனை தனியாக விட மனமில்லாது, ஐசியூ வாசலே கதி என கண்கலங்க அமர்ந்து கொண்டிருந்தவனின் கைகளை மென்மையாக பற்றி,

“யாருப்பா நீ?, எதுக்காக இப்படி தம்பிய தூக்கிக் கொண்டு ஓடி வந்தாய்?, உன் தம்பிக்கு எப்படி இவ்வளவு பெரிய காயம் வந்திச்சு?….அப்படி என்னதான் ஆச்சுப்பா?” என கேட்க,

அந்த நேரத்தில் மனதை அழுத்தும் அழுத்தங்களுக்கு வடிகாலாக அவரை எண்ணியவனோ தனது கதை முழுவதையும் அந்தப் பெரிய மனிதனிடம் சொல்லி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.

அவனின் கதையைக் கேட்ட அவருக்கே, சற்று நேரம் என்ன கூறி அவனை ஆசுவாசப்படுத்த என புரியாது போனது.

அந்தக் கதையில் தானும் கண் கலங்கிப் போனவர், அடுத்த கணம் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டு,

“அழாத தீரா இது நீ அழ வேண்டிய நேரமில்ல. தைரியமாக இருக்க வேண்டிய நேரம். இனி உனக்காக நான் எப்போதும் நான் இருப்பன்பா.” என கூறியவர்,

அதோடு மாத்திரம் நிற்காது தான் சொன்ன வார்த்தைகளை அப்படியே பின்பற்றவும் ஆரம்பித்தார்.

இரண்டு பேருக்கும் தந்தையாக மாறிப் போனார் அவர்.

தீரனிடம், கேரளாவில் தான் பெரிய பிசினஸ் நடத்துவதாக கூறியவர், சிகிக்சைகள் முடிந்த பின்பு,

தீரனையும், அவனது தம்பியையும் அங்கே தன்னுடன் வந்து இருக்குமாறு கூறினார்.

மேலும், தானும் தனிக்கட்டை தான் எனவும், தனக்கு என சொந்தங்கள் யாரும் இல்லை. சொத்துக்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறினார்.

அவரின் பேச்சைக் கேட்ட தீரன், அவரைப் பார்த்து மென்மையாக புன்னகைத்து விட்டு,

“இல்லை ஐயா எனக்கு ஒரு குறிப்பிட்ட வயசு வரும் வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் ஒரு இல்லத்தில இருக்கத்தான் விரும்புறம். எங்களோட அனுபவங்கள் எங்கள செதுக்கும். எங்களுக்கு படிப்பு முக்கியம். எங்களோட படிப்பு செலவ மட்டும் நீங்க பார்த்துக் கொள்ளுங்க. நாங்க இரண்டு பேரும் இல்லத்தில இருந்து எங்களை நாங்களே வளர்த்துக் கொண்டு தேவையான நேரத்தில உங்ககிட்ட வருவம். இனி மேல் உங்களுக்கு நாங்க இருக்கம். எங்களுக்கு நீங்க இருக்கீங்க. சரியான நேரத்தில அந்தக் கோடீஸ்வரனுக்கு நான் யாருன்னு காட்டுவன். வலிகள் இருக்கணும். அப்போ தான், இன்னும் வேகமாக நாங்க இரண்டு பேரும் முன்னேறுவம். உங்க கூட இருந்தா எங்க வேகம் குறைஞ்சிடும் சார்…. இல்ல…. இல்ல…. அப்பா.” என தெளிவாக கூறினான் அவன்.

அந்த நிலையிலும் அவனின் பணத்துக்கு ஆசைப்படாத தன்மையும், நேர்மையான குணமும் அவருக்கு மிகவும் பிடித்துப் போகவே அவனின் முடிவுக்கு சரி என கூறினார் அவர்.

அதே நேரம், ஆதிக்கு காயம் ஆறவே ஒரு மாதம் ஆகியது.

அந்த ஒரு மாதமும் தீரனுடன் அங்கேயே தங்கி இருந்து, போன் மூலம் தனது வேலைகளை கவனித்துக் கொண்டு,

இருவரையும் கவனித்துக் கொண்டார் அந்த அன்பான மனிதர்.

கடைசியில், ஆதியின் முக காயத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என நிலை வரும் போது, அதற்கு முடியவே முடியாது என மறுத்து விட்டான் ஆதி.

ஆதி மறுக்க காரணம் என்ன?

தமயந்திக்கு எப்படி அபர்ணா தங்கையாக மாறினாள்?

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

6 thoughts on “இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 40”

    1. ஓகேம்மா.. கண்டிப்பா…. நன்றி நன்றிம்மா 🥰🥰🥰🥰🥰

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!