இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 43

4.9
(18)

Episode – 43

இரு பெண்களின் உணர்வுகளும், இரு ஆண்களுக்கும் நன்றாகவே புரிந்தது.

அபர்ணாவின் பார்வைக்கு பதில் பார்வை கொடுக்க ஆதி தயார் தான் என்றாலும்,

தமயந்தியின் பார்வைக்கு பதில் கொடுக்க தீரன் தயாராக இல்லையே.

ஆதி பதிலுக்கு மென் பார்வை வீச, அவனின் மனையாள் அபர்ணா புன்னகை பூத்தாள்.

மறு புறம், கண்களில் கெஞ்சும் பார்வை பார்த்தும், தீரன் கண்டு கொள்ளாது, விறைப் பாகவே தமயந்தியை ஒரு பார்வை பார்த்து வைத்தான்.

அவனின் ஒற்றைப் பார்வையில் துடித்துப் போனாலும், அமைதியாக அவன் கொடுத்த ஜூசை வாங்கி அருந்தினாள் அவள்.

அவளுக்கும் நா வறட்சிக்கு அந் நேரம், அந்தப் பானம் தேவைப் பட்டது.

அடுத்த சில நொடிகள் அனைவருக்கும் மௌனத்தில் கழிய,

குரலை செருமிய அபர்ணா, “நடந்தது எல்லாம் உங்களுக்கு எப்படி தெரிய வந்துது?” என கம்மிய குரலில் கேட்டாள்.

அவளின் கேள்விக்கு, பெரு மூச்சு ஒன்றை பதிலாக கொடுத்த தீரன்,

“எல்லாம் அந்த யோசியர் தான் சொன்னான். அவனை அடி வெளுத்ததுல தான் இந்த உண்மை எல்லாம் வெளி வந்துது. இல்லன்னா அந்த மனுஷன் பத்தி யார் கிட்ட போய் கேட்குறது?, யார் தான் சொல்லுவாங்க?, அதான் யார பிடிக்கணுமோ, அவன பிடிச்சு உண்மை எல்லாம் வாங்கியாச்சு.” என கண்களில் அனல் பறக்க கூறினான் அவன்.

அவனின் கோபம் கண்டு ஆதி தான்,

“விடுங்க அண்ணா. டென்ஷன் ஆகாதீங்க. முடிஞ்சது எல்லாத்தையும் விட்டுடுவம். அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்.” என கூற,

“ம்ம்ம்ம்…. அவனுக்கு இப்போ நம்மள பத்தி எல்லாம் தெரிய வந்து இருக்கும். கண்டிப்பா, அவனோட இரண்டு பசங்க உயிரோட தான் இருக்காங்க, அழிக்க நினைச்சவனுக்கு முன்னாடி வாழ வேண்டும் என்கிற முனைப் போட, போராடி வளர்ந்து, சிங்கங்கள் மாதிரி கர்ஜித்துக் கொண்டு இரண்டு இடத்தை ராஜா மாதிரி ஆளுறாங்கன்னு கண்டிப்பா புரிஞ்சு இருக்கும். நானாவது பரவாயில்லடா. நீ உயிரோட தான் இருக்காய். நீ தான் அந்த மனுஷனோட நிழலா இருந்து இவ்வளவையும் நடத்தி இருக்கிறாய்ன்னு தெரிஞ்சா அந்த மனுஷனுக்கு எப்படி இருக்கும் ஆதி?” என ஒரு வித அழுத்தமான குரலில் கேட்டான் தீரன்.

அவனது குரலில் உள்ள அழுத்தத்தை புரிந்து கொண்ட ஆதியும்,

“அவர் விரல வைச்சே அவரோட கண்ணை குத்த வைச்சேன். என்ன ஏதுன்னு தெரியாம குழம்பி, மண்டை காய வைச்சு, அவர தோற்கடிச்சேன் அண்ணா. எல்லாம் உங்க ஐடியா தானே. இந்தக் கலியாணம் வரை நீங்க போட்டுக் கொடுத்த ஐடியாவை நான் பொல்லொ பண்ணேன் அண்ணா. லாஸ்ட்ல, அண்ணிய தூக்குற வரைக்கும் பிளான் போட்டது நீங்க தானே.”

“நாம இரண்டு பேரும் அவர பந்தாட ஆரம்பிச்ச பிறகு அந்த மனுஷன் பட்ட பாடு இருக்கே அது போதும் அண்ணா. எனக்கு பரம திருப்தி.” என கூறியவன்,

தனது தழும்பை வருடினான்.

அவனையே இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்த அபர்ணாக்கு இப்போது அந்த தழும்பின் அர்த்தம் புரிந்தது.

என்றோ அசிங்கமாக தெரிந்த தழும்பு இன்று அர்த்தம் பொதிந்ததாக தெரிந்தது.

எந்த தழும்பைக் கண்டு, முகத்தை திருப்பினாலோ, இன்று அந்த தழும்பின் பின்னால் இருந்த கதையைக் கேட்டு, அந்த தழும்பையும் சேர்த்து மனசார விரும்ப ஆரம்பித்தாள்.

அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளை நோக்கி என்ன என்பது போல புருவம் உயர்த்திக் கேட்டான் அவன்.

அவனின் கேள்விக்கு அழகாக முகம் சிவந்து போனவள் கண் சிமிட்ட, அவளின் புதுப் புது செய்கைகளில் சொக்கிப் போய் நின்றது என்னவோ ஆதி தான்.

இருவரின் செய்கைகளையும், ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு புன்னகை உடன் நின்று கொண்டு இருந்தான் தீரன்.

மறு புறம் அவனையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அவனின் அருமை மனையாள்.

அவனுக்கு அது புரிந்தாலும், அவளின் புறம் திரும்ப வில்லை.

அபர்ணா, அதோடு நிறுத்தாது,

“ஓஹ்…. சரி. மீதிக் கதையையும் சொல்லுங்க. எங்களுக்கு முழுக் கதையும் தெரியணும்.” என மறுபடியும் கூற,

“அதுக்கு அப்புறம் என்னம்மா…. நான் படிச்சு முடிச்சேன், அவனும் சென்னையில படிச்சு முடிச்சான். இடையில, என்னோட சதாசிவம் அப்பாக்கு உடம்புக்கு முடியாம போச்சுது. அவர் தன்னோட இறுதி நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கும் போது, அவரோட மொத்த சொத்துக்களையும், என் பேருக்கும், ஆதி பேருக்கும் நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காம மாத்தி எழுதி வைச்சார். அவர மாதிரி ஒரு நல்ல மனுஷன நான் சந்திச்சதே இல்லை. அவர் இறக்குறதுக்கு இரண்டு நாள் முன்னாடியும் என்னைக் கூப்பிட்டு, ஒரு நாளும் பணத்துக்கு அடிமை ஆகிடாத. பணம் வெறும் காகிதம் தான். ஆனா அன்பு, அறிவு என்கிறது எல்லாம் தான் உண்மையான சொத்து. அந்த சொத்தை கவனமா உன் கூடவே வைச்சுக்கோ, எந்தக் காரணம் கொண்டும் பணத்த வைச்சு மனுஷன்கள எடை போட்டுடாத. கவனமா இரு. பணத்தை நியாயமான முறைல உழை. அதே நேரம் அந்தப் பணத்தை சரியான வழியில செலவு செய். இல்லாதவங்களுக்கு உதவி செய், முக்கியமா நல்ல மனசோட கொடு, பல மடங்கு அது பெருகும். நீயும், என்னோட செல்லப் பையன் ஆதியும், எல்லா நலன்களும் கிடைச்சு சந்தோசமா வாழணும். என்னோட பரி பூரண ஆசிகள் உங்கள் இரண்டு பேருக்கும் எப்போதும் இருக்கும். முன்னேறிப் போ. பழி வெறியோட நின்னுடாத. அந்த இரண்டு பொண்ணுங்களையும் எப்படியாவது காப்பாத்து. அவங்களுக்கு உண்மைய சொல்லு. அத விட முக்கியமான விஷயம் நீ தமயந்திய விரும்பிறாய் என்கிறது தான்.”

“எனக்கு எப்படித் தெரியும்ணு கேட்காத. நான் உன்னோட அப்பாடா.உன்னோட கண்ணில அந்தப் பெயரைக் கேட்டதும் வர்ற ஒரு ஒளியை நான் கண்டு இருக்கேன். அதனால…. ரொம்ப யோசிக்காம…. உனக்கு பிடிச்சத பண்ணு. அப்படின்னு சொல்லிட்டுத் தான் அவர் தன்னோட உயிர விட்டார்.” என மறைக்காது அனைத்தையும் கூறியவன், ஒரு பார்வை தமயந்தியைப் பார்க்க,

அவளோ, “அவன் தன்னை விரும்பி இருக்கிறானா?” என எண்ணிக் குழம்பிப் போய் அவனையே இமைக்காது பார்க்க,

குரலை செருமியவன், பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டு,

“அதுக்கு அப்புறம் தான், அவரோட சொத்துக்கள நான் நிர்வகிக்க ஆரம்பிச்சேன். எனக்கு தெரிஞ்சு தப்பு நடந்தா, தைரியமா தட்டிக் கேட்கவும் ஆரம்பிச்சேன். முதல்ல எனக்கு எல்லாத்தையும் மேனேஜ் பண்ண கஷ்டமா தான் இருந்துது. அப்புறம் ஓகே ஆகிடிச்சு. என்ன நம்பி ஒரு கூட்டமும் சேர்ந்துச்சு. அவங்களுக்காக என்னால முடிஞ்ச நல்லது அத்தனையும் செய்தன். அதே தான் ஆதியும் தன்னோட இடத்தில செய்தான். இரண்டு பேரும் போட்டி போட்டு எங்களால முடிஞ்ச நல்லதுகள செய்தம். அதில தான் எங்களுக்கு நிம்மதி கிடைச்சுது.”

“அதோட அப்பா வீட்டில வேலை செய்த அத்தனை வேலையாட்களும் எனக்கு விசுவாசமா மாறிப் போனாங்க. அவங்களுக்கு என்னோட கதை தெரியாது. ஆனா அப்பாவோட வாரிசு நான் மட்டும் தான்னு தெரியும். அதிலயும் எனக்கு ரொம்ப கிளோஸ்…. சிவகாமி அம்மா தான். என்னோட அம்மாவோட பேரை வைச்சு இருக்காங்களே. அதுக்காகவே நான் அவங்கள அம்மான்னு கூப்பிடுவன். இவ்வளவும் தான் எங்க கதம்மா.” என கூறியவன், அபர்ணாவைப் பார்க்க,

அவளோ, ஆதியையும், தீரனையும் மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்து விட்டு,

“அப்போ இவரு உண்மையாவே வக்கீலா?” என ஆதியை நோக்கி, கையைக் காட்டிக் கேட்க,

தீரனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

ஆதியோ, “மானத்த வாங்குறா பாய். இவள….” என தலையில் அடிக்க,

தமயந்தி, தீரனின் சிரிப்பை ஆசையாக பார்த்து வைத்தாள்.

அவனோ, சிரித்து முடித்து விட்டு,

“டேய், உனக்கு இவ தான்டா சரியான ஆளு. அபர்ணாம்மா, உன்னோட புருஷன், ஒண்ணும் சாதாரண வக்கீல் இல்லம்மா, ஹை கோர்ட்ல ஜட்ஜ்ஜே பயப்படுற அளவுக்கு வாதாடுற பேமஸ் வக்கீல்ம்மா. இவன் ஒரு கேஸ் வாதாடப் போனா அந்த கேஸ்ற்கு எதிரா வாதாட வேற யாரும் வர மாட்டாங்கன்னா பார்த்துக்கோ. அவ்வளவு பேமஸ்மா என்னோட தம்பி.” என கூற,

அபர்ணா வாயப் பிளந்தாள். அவளின் செய்கையில் அனைவருக்கும் சிரிப்பு வந்தது.

சிரித்து முடித்து விட்டு, அபர்ணாவைப் பார்க்க,

அவளோ, “இன்னும் டவுட்ஸ் இருக்கு.” என ஆரம்பிக்க,

தமயந்தியே பொறுமை இழந்து, “ஏண்டிஇப்படிப் படுத்துறாய் போதும். இதுக்கு மேல கேட்க எனக்கு தெம்பு இல்லை.” என கூறினாள்.

ஆனால் அவளோ, “ஒரே நாளுல எல்லாத்தையம் கேட்டு முடிச்சிடுவம். அது தான் நமக்கு நல்லது அக்கா. இல்லன்னா ஒவ்வொரு நாளும் நமக்கு பி பி ஏறி இறங்கும்.” என கூற,

தமயந்தி பெரு மூச்சு விட,

தீரனோ, “சரிம்மா, நீ கேளு நான் பதில் சொல்றேன். இன்னும் என்ன தெரியணும்?” என மென்மையாக கேட்டான்.

“இல்ல மாமா, இத எல்லாம் நீங்க கஷ்டப் பட்டு செய்து முடிக்கிறதுக்கு பதில் எங்க இரண்டு பேர் கிட்டயும், உண்மைய சொல்லி இருக்கலாமே?” என கேட்டாள் அபர்ணா.

“ம்க்கும்…. என் கூட இவ்வளவு நாள் இருந்துமே, உங்க அருமை அக்காக்கு நான் சொல்றதுல நம்பிக்கை இல்லை. இதில அப்பவே சொல்லி இருந்தா…. நம்பி இருப்பீங்களாக்கும். உலகத்தில உங்க அப்பா மட்டும் தான் உத்தமர்னு நினைச்சு, அவருக்கு பாத பூஜை செய்ய ரெடியா இருக்கிறவங்க தானே நீங்க.”

“உங்க கிட்ட வந்து அவர் உங்க அப்பாவே இல்லன்னு சொல்லி இருந்தா. எங்க இரண்டு பேரையும் பைத்தியம்னு சொல்லி இருப்பீங்கம்மா நீங்க.” என கேலியாக கேட்க,

அவன் கூறுவதில் இருக்கும் உண்மை புரிந்து இரு பெண்களும் அமைதியாகிப் போயினர்.

இருவரும் தலை குனிந்து அமர்ந்து இருக்க,

தீரன் தான் அவர்களை இயல்பாக்கும் வகையில்,

“சரி இப்போ சொல்லும்மா இன்னும் என்ன தெரியணும் உனக்கு?” என கேட்க,

அபர்ணா, “எதுவும் இல்லை.” என்பது போல, தலையை ஆட்ட,

தமயந்தி, சிறு குழந்தை போல கையைத் தூக்கினாள்.

அவளின் செய்கையில், தீரனுக்கு சிரிப்பு வந்தாலும்,

காட்டிக் கொள்ளாது, விறைப்பாகவே, புருவத்தை தூக்கி “என்ன?” என கேட்க,

“இல்ல…. நீங்க என்ன காப்பாத்தத் தானே போராடுனீங்க?, அப்புறம் ஏன் என்ன பிடிக்காத போலவே எல்லாம் செய்தீங்க?” என மெல்லிய குரலில் கேட்டாள் அவள்.

அவளது கேள்வியில், அவளைக் கூர்ந்து பார்த்தவன்,

“ஏன்னா நான் உன்ன சந்திச்ச சந்தர்ப்பங்கள் அப்படியானது.”

“இல்ல…. எனக்குப் புரியல…. கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்க ப்ளீஸ்.”

“ஹ்ம்ம்.. உனக்கு எது தான் புரிஞ்சு இருக்கு?, இது புரிய…. சொல்றேன் கேளுங்க மேடம்….” என்றவன், தமயந்தியை தான் கண்ட சந்தர்ப்பங்களைக் கூற ஆரம்பித்தான்.

முழு உண்மைகளும் வெளி வந்த நிலையில், இனி தமயந்தி, அபர்ணா எடுக்கப் போகும் முடிவுகள் என்ன?

கோடீஸ்வரனுக்கு மகன்கள் பற்றி தெரிய வந்தால் அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

அடுத்த எபி நாளை வரும் மக்காஸ் 😍😍😍

கதை சீக்கிரம் முடிஞ்சிடும்…. மக்காஸ். இன்னும் சில எபிகள் தான் இருக்கு..

படிக்காதவங்க படிக்க ஆரம்பிங்க மக்காஸ் 😍😍

மறக்காம படிச்சிட்டு கருத்து சொல்லுங்க மக்காஸ்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 43”

  1. Episodes ellam super
    Neenga romba naalu wait panna vaikarathu thaan kaduppa irukku

    Climax pakkathil vantha apparam story upload romba late pannathinga.

    Suspense thaanga mudiyala

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!