Episode – 44
அவனது மேடம் என்ற விழிப்பில் அவளுக்கு சிறு கோபம் முகிழ்த்தாலும்,
அவன் சொல்லப் போகும் பதிலுக்காக அமைதியாக காத்து இருந்தாள்.
அவனும், “உன்னைப் பத்தி ஆதி சொன்ன பிறகு, எனக்கு உன்ன பார்க்கணும் என்கிற ஆவல் ரொம்ப அதிகமாச்சு. அதனால உன்னைத் தேடி, நீ படிக்கிற இடத்துக்கே வந்தன்.”
“அங்க, முதல் தரம் உன்ன நான் பார்க்கும் போதே, நீ ஒரு சின்னப் பையன இழுத்துக் கொண்டு போய்க் கொண்டு இருந்தாய். சுத்தி நின்னவங்க எல்லாம் உன்ன பேசிக் கொண்டு இருந்தாங்க. ஒரு சின்னப் பிள்ளைய இப்படி இழுத்துக் கொண்டு போறா…. இந்தப் பொண்ணுக்கு ஈவு இரக்கம் இல்லையான்னு. எனக்கும் அந்த நிலையில உன்னப் பார்க்க, அவ்வளவு கோபம் வந்துது. விசாரிக்க நேரமும் கிடைக்கல. சோ, அங்க இருந்து கிளம்பிப் போய்ட்டன்.”
அதுக்கு பிறகு, உன்னப் பத்தி நினைவு வரும் போது எல்லாம், அந்த சின்னப் பிள்ளைய நீ இழுத்துக் கொண்டு போனதும் சேர்த்து தான் நினைவுக்கு வந்துது. அதனால முடிஞ்ச வரைக்கும் உன் நினைவுகள ஒதுக்கி வைச்சேன்.”
“இப்படி இருக்கும் போது தான் மறுபடியும் உன்ன சந்திச்சேன். அதே மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தில…. அப்பவும் நீ, ஒருத்தனோட கன்னத்தில அறைஞ்சு கொண்டு இருந்தாய். அந்தப் பையன் உன்னைப் பார்த்து கை எடுத்துக் கும்பிட்டு, கெஞ்சிக் கொண்டு இருந்தான். அப்பவும், நீ விடாம அந்தப் பையனை அடிச்சுக் கொண்டு இருந்தாய். உன் முகத்துல ஒரு கோபமும் இருந்துது.”
“உன்னைக் கண்ட அந்த நொடி, எனக்கு அப்படி ஒரு கோபம், எரிச்சல், ஆக்ரோஷம் எல்லாம் வந்துது. என்ன இவ எப்போ பாரு யாரையாச்சும் வம்பு இழுத்துக் கொண்டு இருக்கா. கொஞ்சமாச்சும் பொண்ணு மாதிரி இருக்காளா பாரு. என்ன பழக்கமோ இது?, அது சரி வளர்த்த விதம் அப்படின்னு நினைச்சு அந்த இடத்தில இருந்து கிளம்பிப் போய்ட்டன். மிஸ்டர் கோடீஸ்வரன் மேல இருந்த கோபமும் உன் மேல திரும்பிச்சு. அந்த இரண்டு நிகழ்வுகளும், எனக்குள்ள அப்படி ஒரு தாக்கத்தை உருவாக்கிச்சு.”
“நான் உன்ன உருவகப் படுத்தி இருந்த விதமே வேற, ஆனா உன்னைக் கண்ட அந்த செகண்ட்….எல்லாம் உடைஞ்ச உணர்வு. கோபத்தின் உச்சத்தில இருந்தன். ஒரு நல்ல எண்ணம் கூட உன் மேல வரல. என்னோட அப்பா சொன்னதுக்காக மட்டும் தான் உன்ன காப்பாத்தணும்னு நினைச்சேன். என மனசுல இருந்து முழுசா உன்ன தூக்கிப் போடணும் நினைச்சேன். அப்படியே பொல்லொவ் பண்ணேன்.”
“ஆனா அப்பவும், என் மனசுல உன் நினைப்பு உறுத்திக் கிட்டே இருந்துது. அந்த உறுத்தல வளர விடாம, முடிஞ்ச வரைக்கும், உள்ளுக்குள்ள வைச்சு இருந்தன்.”
“அதுக்கு அப்புறம் பல நாள் உன்ன பார்க்கல. நீண்ட நெடிய நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நாள் கோவில்ல வைச்சு தேவதை போல உன்னப் பார்த்தன். அதுவரைக்கும், நான் யோசிச்சு வைச்சு இருந்த எல்லாம், உன்ன கண்டதும் முற்றிலும் நொறுங்கித் தூள் தூளாப் போச்சு.”
“சரின்னு, மனச அதனோட போக்கில அலைய விட்டுட்டு, கோவில சுற்றி வந்து உன்ன தேடும் போது, அங்கயும் ஒரு பொண்ண திட்டிக் கொண்டு இருந்தாய்.”
“எனக்கே, சே…. அப்படின்னு ஆகிப் போச்சு. இனியும் உன்ன பத்தி நல்ல எண்ணம் எதுவும் வளர்க்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டு போய்ட்டன். அந்த முடிவுல தான், உன்ன ஆரம்பத்தில அப்படி எல்லாம் ட்ரீட் பண்ணேன். உன் மேல வெறுப்ப காமிச்சன். உன்ன காப்பாத்தினாலும், நீ அந்த ஆளோட வளர்ப்புத் தானே, உனக்குள்ள அந்த ஆளோட திமிர் இருக்கும் தானே அப்படின்னு யோசிச்சு…. உன் மேல ஒவ்வொரு நாளும் கோபத்தை காண்பிச்சேன். வன்மத்தை வளர்த்துக் கொண்டன்.”
“உன்னோட பாவமான முகத்த பார்க்கும் போது சில நேரம் எனக்கு மனசு உறுத்தும். ரொம்ப கஷ்டப் படுத்துறனோன்னு, ஆனா அப்புறமா…. நீ செய்த தப்புக்கு இது தான் சரின்னு தோணும். அதனால தான் அப்படி கோபமா உன்கிட்ட நடந்துக்கிட்டன்.”
“ஆனா…. ஒரு குழந்தைய நீ காப்பாத்த துடிக்கும் போது தான் உன்ன பத்தின என்னோட எண்ணம் தப்போன்னு முதல் தடவ ஸ்ட்ரோங்கா தோண ஆரம்பிச்சுது.”
“அதுக்கு அப்புறம் உன்னோட நடவடிக்கைகளை நான் கூர்ந்து கவனிக்க ஆரம்பிச்சேன். அப்போ தான் ஒவ்வொரு விஷயமா உன்னோட, நல்ல குணங்கள் எனக்கு புரிய ஆரம்பிச்சது. அடுத்து என்னோட கிளோஸ் பிரண்ட் கிட்ட சொல்லி உன்ன பத்தி விசாரிக்க சொன்னேன். அப்போ தான் உன்ன பத்தின உண்மைகள் எல்லாம் தெரிய வந்துது.” என அவன் கூறிக் கொண்டு இருக்கும் போதே….
“இல்ல…. இல்ல…. நீங்க நினைக்கிற போல இல்ல. நீங்க என்ன ஏதோ தப்பா புரிஞ்சு கொண்டு பேசுறீங்க. நீங்க பார்த்தத வைச்சு தப்பா முடிவு பண்ணிட்டீங்க போல. அங்க நடந்ததே வேற.” என அவசரமாக மறுத்துக் கூறினாள் தமயந்தி.
அவனும், “ஏன்…. ஏன்…. இவ்வளவு எமோஷனல் ஆகுறாய் ரிலாக்ஸ். ஆமா…. நீ சொல்றது சரி தான். நான் தான் உன்ன கொஞ்சம் தப்பா நினைச்சுட்டன்.”
“பார்கவ் சொல்லும் போது தான் புரிஞ்சுது. முதல் தடவை உன்னைப் பார்க்கும் போது நீ அந்தப் பிள்ளைய கூட்டிக் கொண்டு போனது, இல்லத்தில சேர்க்கன்னு. சும்மா அனாதையா ரோட்ல திரிஞ்சு கொண்டு இருந்த பிள்ளைக்கு பாதுகாப்பு கொடுக்க, ஏற்பாடு பண்ணி இருக்காய்னு புரிஞ்சுது.”
“அதே போல இரண்டாவது தடவை, நீ அடிச்சுக் கொண்டு இருந்ததுக்கு காரணம், அவன் ஒரு பொண்ணுக் கிட்ட தப்பா நடந்துக் கிட்டது தான். போலீஸ்ல அந்தப் பையன ஒப்படைச்சு இருக்காய். அந்த ரெக்கார்ட்ஸ் பிறகு தான் எனக்கு ஆதாரமா கிடைச்சுது. அந்தத் தடவையும் உன் மேல தப்பு இல்லைன்னு புரிஞ்சுது.”
“அதுக்கு அப்புறம், மூன்றாம் தடவ, அந்தப் பொண்ணு குழந்தைய பிச்ச எடுக்க வைச்சதுன்னு சொல்லித் தான் நீ அந்தப் பொண்ண திட்டி இருக்காய். அதோட அந்தப் பொண்ணுக்கு ஒரு தொழில் ஆரம்பிக்க உதவியும் செய்து இருக்காய். இன்னைக்கு வரைக்கும் பணம் வேற அந்தக் குழந்தையோட பேருக்கு அனுப்பிக் கொண்டு இருக்காய். அப்படித் தானே….” என கேள்வியாக தீரன் கேட்க,
ஆச்சரியத்துடன், “ஆம்.” என்பது போல தலையை ஆட்டினாள் தமயந்தி.
அவனும், பெரு மூச்சுடன், “இதெல்லாம் நீ வந்த பிறகு, நானா தேடிக் கண்டுபிடிச்சன். அதுக்கு அப்புறம் உன்ன நான் உயிரா நினைச்சு விரும்ப ஆரம்பிச்சேன்.”
“அதிரடியா கலியாணம், பண்ண காரணமும் உன்ன இழக்க மனம் இல்லாம தான். உங்க அப்பாவ பத்தி உனக்கு சொல்ல எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது. ஆனா அத நீ தாங்கிக் கொள்ள மாட்டாய் உடைஞ்சு போவாய்னு. நான் வில்லன் மாதிரி உனக்கு தெரிஞ்சாலும் பரவாயில்லன்னு உன்ன என் கைக்குள்ள வைச்சு பார்த்துக் கிட்டன்.”
“மொத்த அன்பையும் உன்கிட்ட காட்டினன். நீயும் மனசு மாறினாய். ஆனா கடைசியில எல்லாத்துக்கும் பெரிய முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி இப்படி ஒரு வேலை செய்து வைத்து இருக்காய்.” என அடிபட்ட இடத்தை சுட்டிக் காட்டிக் கேட்க,
“இதில இருந்து தெரியுது. நீ என்ன உண்மையா, முழுசா நம்பவே இல்லன்னு. இதுக்குப் பிறகு பேசி என்ன பலன்?, நம்பிக்கை இல்லாத இடத்தில எப்படி காதல் இருக்கும்?, ஏற்கனவே வலியோட வாழ்ந்த எனக்கு இது இன்னொரு வலி தான். ஆனா…. அந்த வலிய தாங்கின எனக்கு இந்த வலிய தாங்க முடியல. ரொம்ப ரொம்ப கொடுமையா இருக்கு.” என தீரன் சொல்லி முடிக்க,
கண்களில் கண்ணீர் பெருகி ஓட அமைதியாக, அவனையே பார்த்த வண்ணம் நின்று கொண்டு இருந்தாள் பெண்ணவள்.
அவளின் கண்ணீர் அவனது மனதை அசைத்துப் பார்த்தாலும், அவள் கொடுத்த வலியில் இருந்து இலகுவாக மீள முடியாது, கல்லுப் போல நின்று கொண்டு இருந்தான் அவன்.
அவனது, மன வேதனையை கண்களின் வழி கண்டு கொண்டவளுக்கு அவனது காதலின் ஆழம் நன்றாகவே புரிந்தது.
புரிந்து என்ன பயன் என அவளின் மனம் கேள்வி கேட்க,
“அவரோட மனசு மாறும், இல்லன்னா நான் மாற வைப்பேன்.” எனக் கூறி அலை பாய்ந்த மனதை அடக்கியவள், கண்களை துடைத்துக் கொண்டு மீண்டும் தீரன் புறம் திரும்ப,
ஒரு கூர்மையான பார்வை உடன் அவளிடம் இருந்து பார்வையை அகற்றிக் கொண்டு,
“இதில பிளான் பண்ணாம நிகழ்ந்த ஒரு விஷயம், ஆதி, அபர்ணா கலியாணம் தான். அவ சின்னப் பொண்ணு கலியாணம் வேணாம்னு எத்தனையோ தடவ சொல்லியும் கேட்காம, இவன் தான் எனக்கே சொல்லாம அடம் பண்ணிக் கலியாணம் பண்ணிக் கிட்டான்.” என தீரன் கூற,
அபர்ணா, ஆதியை அதிர்ந்து பார்க்க,
அவனோ, கொஞ்சமும் யோசிக்காது,
“என்ன செய்ய பாய், நானே வக்கீல், என்னையே ஒருத்தி பேச்சில ஜெயிக்கிறான்னா…. அவ மேல எனக்கு காதல் வராம இருக்குமா என்ன?, காதல் வந்திடிச்சு. அதான் சந்தர்ப்பம் பார்த்து கலியாணம் பண்ணிக் கொண்டன்.” என கூறித் தோளைக் குலுக்க,
“அடப்பாவி….” என்பது போல பார்த்து வைத்தாள் அபர்ணா.
அவளின் பார்வையில் ஆதி சிரிக்க, அங்கு ஒரு இயல்பான சூழ்நிலை உருவானது.
அந்த இயல்பு நிலையில் ஒன்ற முடியாது தவித்துப் போய் நின்றது என்னவோ…. தமயந்தி தான்.
அவளின் ஏக்கப் பார்வை தன்னவனை வருடி சென்றது.
செய்த தப்புக்கு தண்டனையாக அதனை ஏற்றுக் கொண்டு அமைதியாக நின்று கொண்டு இருந்தாள் அவள்.
**************************************************************அதே நேரம், “தனது திட்டங்களுக்கு குறுக்காக தடை போட்டது யார்?, திடீர் முட்டுக் கட்டை முளைக்க காரணம் என்ன?, தன்னுடைய இரு பெண்களையும் தன்னை நெருங்க விடாது செய்பவர் யார்?, அந்த சொத்துக்கள் தனக்கு கிடைக்காது போக காரணம் என்ன?, யார் தன்னுடைய திட்டங்களுக்கு தடையாக இருப்பது?, கடைசி நேரத்தில் தனது திட்டங்கள் பாழாய்ப் போக காரணம் என்ன?, அப்போ நடந்தவை எல்லாம் ஒருத்தரின் சதியா? இல்லை…. கூட்டு சதியா?….” என யோசித்தவர், தனது ஆட்களை உடனடியாக ஏவி விட்டு விசாரிக்க சொன்னார்.
அவர்கள் விசாரித்து சொன்னதின் படியும், சேகரித்த தகவல்களின் படியும், அனைத்தையும் தொகுத்துப் பார்த்தவருக்கு, அவரை எதிர்த்த இருவரும் தனது வாரிசுகளே…. என தெரிந்த அந்த நொடி, உலகமே தட்டாமாலை சுற்றியது.
ஒரு நொடி ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு எப்படி இது சாத்தியம்? என குழம்பிப் போய் நின்று கொண்டு இருந்தார் அவர்.
அவரின் கேள்விகளுக்கு சரியான விடைகள் முழுமையாக கிடைக்கும் போது அவரின் நிலைமை என்ன?
அனைத்தும் தெரிய வந்ததன் பிறகு அவர் எடுக்கப் போகும் முடிவு என்ன?
தீரன், கோடீஸ்வரனுக்கு வைத்து இருக்கும் தண்டனை என்ன?
அடுத்த எபி நாளை வரும் மக்காஸ் 😍😍😍
கதை சீக்கிரம் முடிஞ்சிடும்…. மக்காஸ். இன்னும் சில எபிகள் தான் இருக்கு..
படிக்காதவங்க படிக்க ஆரம்பிங்க மக்காஸ் 😍😍
மறக்காம படிச்சிட்டு கருத்து சொல்லுங்க மக்காஸ்.
Super and intresting sis
Wowwwww superb epiiiiii ❤️❤️❤️❤️