இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

4.6
(21)

Episode – 06

 

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும், அவளையே பார்த்து இருந்தவன்,

 

அவள் கண்ணீருடன் நிமிர்ந்து பார்க்கவும், 

 

“இனி மேல் என்னை நோக்கி நீ கையை நீட்ட முதல் நிறைய யோசிக்கணும். என்ன எதிர்த்துப் பேசறத பத்தி ஒரு நாளும் நீ யோசிக்கவே கூடாது புரிஞ்சுதா?, அப்படி யோசிக்கும் போது உனக்கு இந்த நிகழ்வு தான் கண்ணுல வரணும் ரைட்?, போய் முகத்த கழுவிட்டு கிளம்பி வர்ற வழியைப் பார்.” என அவன் உறும,

 

அவளும் அமைதியாக அவனின் பேச்சின் படியே  எழுந்து, அங்கிருந்த பாத்ரூமுக்குள் நுழைந்து கொண்டாள்.

 

முகம் கழுவி வெளியே வந்தவளின் முகம் விளக்கி வைச்ச குத்து விளக்கு போல அவ்வளவு தெளிவாக இருந்தது.

அவளை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவன்,

 

அடி மேல் அடி எடுத்து வைத்து அவளின் அருகே வர,

 

அவளோ, அவனின் செய்கையில் மருண்டு போய் பின் நோக்கி நகர்ந்தாள். 

 

அவனோ, அவளை மேலிருந்து கீழாக பார்த்துக் கொண்டு,

 

இன்னும் அருகே நெருங்கி வர,

அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றவள், விழிகள் பட படக்க, நா தந்தி அடிக்க, அவனையே பார்க்க,

 

அவளை நோக்கி விரலை நீட்டியவன், அவளின் தலையில் இருந்து நெற்றி மூக்கு, உதடு என ஒவ்வொரு அங்கமாக விரலை அவளின் மீது படாத வண்ணம் நகர்த்திக் கொண்டு வர,

 

திகைத்துப் போய் அவனைப் பார்த்தபடி, மேலும் சுவருடன் ஒன்றியவள், அவனின் விரல் கழுத்து தாண்டி கீழே போக எத்தனிக்க,

கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

 

சற்று நேரம் கழித்து அவளின் முன்பாக 

சொடக்கிடும் ஒலி கேட்டது.

 

அந்த ஒலியில் அவள் கண்களை பட்டென்று திறக்க,

 

கையைக் கட்டிக் கொண்டு நின்று,

அவளையே உறுத்து விழித்தவன், 

 

“என்ன மேடம் கற்பனை எங்க எல்லாமோ போகுதோ?”, என கேலியாக உதட்டை வளைத்து கேட்டு விட்டு,

“நீ நினைக்கிற சீன் இப்போதைக்கு இல்ல. சோ, நீ பயப்பிடத் தேவை இல்லை. நீ அணிஞ்சு இருக்கிற சாறி, இந்த ஜெவெல்ஸ் எல்லாம் உன் அப்பன் காசுல வாங்கினது தானே. முதல்ல எல்லாத்தையும் கழட்டு.” என அவன் ஆணையாக கூற,

 

அவளோ, “என்ன?, ஏன்?, எதுக்கு?” என அதிர்ந்து கேட்டாள்.

 

அவனோ, அவளைப் பார்த்து சலிப்பாக தலையை ஆட்டி விட்டு, அங்கிருந்த கப் பேர்டில் இருந்து ஒரு விலை குறைந்த சேலையை எடுத்து அவளின் முன்னாக போட்டான். 

 

அவளோ,  அப்போதும் தீரனைக் குழப்பமாக பார்க்க,

 

“ம்ம்ம்ம்…. சீக்கிரம் போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக் கொண்டு வா. உன் கழுத்துல, காதுல ஒரு நகை கூட இருக்க கூடாது. இந்த பையில எல்லாத்தையும் போட்டுக் கொண்டு வா.” என அவன் அதட்ட,

 

வேறு வழி இன்றி மீண்டும் பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டவள், 

 

“ஒரு வேள, இவர் நம்ம அப்பாவோட எதிரியா இருக்குமோ?, அதனால தான் அப்பாவ பழி வாங்கணும்னு இப்படி எல்லாம் செய்றாரோ?, நம்ம அப்பா தான் யாரோட வம்புக்கும் போகாத நல்ல மனுஷன் ஆச்சே, தொழில்ல கூட அப்பாக்கு போட்டி கிடையாது. இவர் சொல்றத பார்த்தா பணம் இவருக்கு ஒரு பொருட்டே இல்லை என்கிறது புரியுது. அப்புறம் என்னவா இருக்கும்?, ஏன் இவர் இப்படி நடந்துக்கிறார்?, இப்போ போய் பேசினா இருக்கிற கோபத்துக்கு என்னைத் தூக்கி கடல்ல போட்டாலும் போட்டுடுவார். எதுக்கும் கொஞ்சம் அமைதியா இருப்பம். இரண்டு நாள் போக மெதுவா பேசிப் பார்ப்பம். அவரும் புரிஞ்சு கொள்ளுவார். சீக்கிரம் இவர் கிட்ட பேசிப் புரிய வைச்சிட்டு, ஊருக்குப் போய் முதல்ல அபர்ணாவ காப்பாத்தணும். அவ பாவம் என்னால அவளும் பிரச்சனையில  மாட்டிக் கிட்டா.” என மனதிற்குள் எண்ணியபடியே, சேலையை மாற்றி உடுத்தி முடித்தாள் அவள்.

 

( அம்மாடி நீ அவன ரொம்ப குறைவா மதிப்பிட்டுட்டாய். அவன் கிட்ட பேசுறதும், முதலை வாய்க்குள் தலையை விடுறதும் ஒண்ணும்மா. அவன் உன்ன கடிச்சுத் குதறாத வரைக்கும் சந்தோஷம்.)

 

அவள் வெளியில் வரும் வரை பொறுமை இல்லாது,

 

கதவைத் தட்டியவன், “இப்போ நீ வெளில வர்றீயா?, இல்ல நான் உள்ள வரட்டுமா?, ஒரு புடைவை மாத்த உனக்கு இவ்வளவு நேரமா?” என கர்ஜித்தான்.

 

அவளோ, “இதோ வரேன் சார்.” என அவசரமாக வெளியே வந்தவள் காதில் தோடு, கழுத்தில் ஒரு செயின் தவிர ஏதும் இல்லை.

 

வெறும் பொட்டு மட்டும் வைத்து இருந்தவளின் முகத்தின் சோபை மட்டும் அந்த நிலையிலும் குறையவில்லை.

 

அவளை மேலிருந்து கீழாக பார்த்தவன், 

“இந்த செயின் அண்ட் தோடு இரண்டும் உன்னோட சொந்த உழைப்பா?” என கேட்டான்.

 

அவளோ, “இல்ல சார் செயின் அப்பா பர்த்டேக்கு கிப்ட்டா கொடுத்தார். தோடு என் சம்பளத்தில சேமிச்சு நானே வாங்கினன்.” என எந்த வித ஒளிவு மறைவும் இன்றி கூறியவளை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவன்,

 

“ஓஹ்…. ஓகே. அப்போ அந்த செயினையும் கழட்டு.” என அடுத்த ஆணை இட்டான்.

 

அவளோ, அவனைக் கெஞ்சலாக பார்த்த வண்ணம், “சார், அது அப்பா எனக்கு ஆசையா வாங்கிக் கொடுத்தது. எந்த சூழ்நிலையிலும் கழட்டக் கூடாதுன்னு சொல்லி இருக்கார்.” என கூற,

 

“ஓஹ்….” என தாடையைத் தடவியவன்,

அடுத்த நொடி அந்த செயினை அறுத்து இருந்தான்.

 

“என்ன சார் பண்றீங்க நீங்க?” என அவள் கத்தி தடுக்கும் முன்பாக அந்த சம்பவம் நிகழ்ந்து முடிந்து இருந்தது.

வலித்த கழுத்தை தடவிக் கொண்டவள், 

 

“ஏன் சார் இப்படி எல்லாம் கொடூரமா நடந்துக்குறீங்க?” என வலியில் முகம் சுருக்கியபடி கேட்க,

 

“நான் சொன்னத நீ ஒரு தடவையில கேட்டா ஓகே. இல்லன்னா இப்படி தான் நடக்கும் புரிஞ்சுதா?, உனக்கு கடுமையான வலிய நான் கொடுப்பன். என்ன கடுப்பு ஏத்தாம கொடு எல்லாத்தையும்.” என அவளின் கலியாண புடவை, நகை எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு,

அவளையும் இழுத்துக் கொண்டு ரூமிற்கு வெளியே சென்றவன்,

 

அவளின் கண் முன்னாடியே, மொத்தத்தையும் கடலில் “கோடீஸ்வரன் சொத்து ஸ்வாகா….” என கூறி சிரித்தபடியே கொட்டினான்.

 

அவனது செய்கையை கண்ணீர் வழிய வெறித்துப் பார்த்தபடியே நின்று கொண்டு இருந்தாள் தமயந்தி.

 

அவனோ, அவளைக் கூர்ந்து பார்த்தவன், “என்ன மேடம், 

நகையெல்லாம் இப்படிப் போகுதேன்னு கவலையா இருக்கா?” என கேட்டான்.

அவளும் தலையை “ஆம்.” என்பது போல ஆட்டினாள்.

 

“ஏன் உனக்கு வாய் இல்லையா?, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடி.” என உறுமினான் அவன்.

 

அவளும், “ஆமா சார் கவலையா தான் இருக்கு.”

 

“ம்ம்ம்ம்…. அது தான் தெரியுமே, நீ அந்த மனுஷன் கோடீஸ்வரன் வளர்ப்பாச்சே. அப்போ உன் புத்தியும் அப்படித் தானே இருக்கும்.”

 

“சார், என்னோட அப்பாவை பத்தி ரொம்ப தரக் குறைவா பேசுறீங்க?, அது நல்லது இல்லை. நான் வருத்தப் படுறன்னு சொன்னன் தான். ஆனா எதுக்குன்னு சொன்னனா?, என்னோட அப்பா ஆசையா வாங்கிக் கொடுத்த அந்த ஒத்த செயின் போய்டிச்சேன்னு தான் எனக்கு கவலையா இருக்கு. வேற ஒண்ணும் இல்ல சார். எனக்கு வேற எந்த நகையப் பத்தியும் கவலை இல்ல சார்.” என அழுத்திக் கூற,

 

“ஓஹ்…. அப்படியா?, சரி அதையும் பார்க்கலாம்.” என கூறி அவளை அழைத்துக் கொண்டு, இல்லை…. இல்லை…. இழுத்துக் கொண்டு கப்பலின் மேல் தளத்திற்கு சென்றவன், 

 

அங்கு ஏற்கனவே தயாராக நின்று கொண்டு இருந்த ஹெலிகாப்டரில் ஏறினான்.

 

அவனுடன் இழுபட்டுக் கொண்டே தமயந்தியும் அதில் ஏறி அமர,

 

கிளம்புமாறு கையைக் காட்ட ஹெலிகாப்டரும் கிளம்பியது.

 

சற்று நேரம் கழித்து, மெதுவாக தனக்கு அருகில் அமர்ந்து போன் பார்த்துக் கொண்டு இருப்பவனின் புறம் பார்வையைத் திருப்பிய தமயந்தியோ,

அவனையே ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டு இருக்க,

 

அவனோ, போனில் இருந்து கண்களை எடுக்காது, 

 

“சொல்லு, உனக்கு என்கிட்ட எதுவும் கேட்கணுமா?” என உறுமலுடன் கேட்டான் அவன்.

 

அவளோ, அவனின் உறுமலில் பயந்தாலும், குரலை செருமிக் கொண்டு, 

 

“உங்களுக்கு ஏன் எங்க அப்பா மேல இத்தனை வன்மம்?, அவர பழி வாங்கத் தானே, இதெல்லாம் பண்றீங்க?” என கேட்க,

 

ஒரு கணம் நிமிர்ந்து அவளைப் பார்த்தவன்,

 

மீண்டும் போனில் கவனம் செலுத்தினான்.

 

அவளோ, அவனின் செய்கையில் சற்று எரிச்சல் அடைந்தவள்,

 

 “உங்க கிட்ட தானே கேட்குறேன் சார்?, அவர பழி வாங்கத் தானே இப்படி எல்லாம் பிளான் பண்ணி அவர் முதுகுல குத்துறீங்க?” என கேட்டே விட்டாள்.

 

அவளின் கேள்வியில் மீண்டும் ஒரு முறை தாடையைத் தடவி யோசித்தவன்,

 

“என்கிட்ட குரல் உயர்த்திப் பேசுற அளவுக்கு வந்திட்டீங்க போல மிஸ் தமயந்தி?, யாரு நான் முதுகுல குத்துறனாஆஆ….” என கேட்டுக் கொண்டு அவளின் புறம் போனைத் திருப்பிக் காட்டினான்.

 

அப்போது தான், கோடீஸ்வரன் காரில் போவதும், அவரின் பின்னாக இன்னொரு காரில் தீரனின் ஆட்கள் பொல்லொவ் பண்ணிப் போவதும் தெளிவாக தெரிந்தது.

 

அவளோ, அந்தக் காட்சியைப் பார்த்து, அதிர்ந்து போய் வாயில் கை வைக்க,

 

“நான் என்ன டீவி கேம் 

விளையாடுறன்னு நினைச்சீயா நீ?, எனக்கு ரொம்ப பிடிச்ச கேமே உங்க பேமிலிய வைச்சு விளையாடுறது தான். லைவ் கேம் இப்போ ஆடலாமா?” என கேலி சிரிப்புடன் கேட்க,

 

“வேண்டாம்…. இனி மேல் நீங்க சொல்றத தவிர எதுவும் நான் கேட்க மாட்டன், செய்யவும் மாட்டன். வாயே திறக்க மாட்டன். அப்பா, தங்கச்சிய பத்தி பேசவும் மாட்டன். ப்ளீஸ் சார் அவங்கள எதுவும் பண்ணிடாதீங்க. அவங்க எங்க யாச்சும் ஒரு மூலையில உயிரோடவாவது இருக்கட்டும்.” என கூற,

 

அவளையே உற்றுப் பார்த்தவன், “நீ என்ன கெஞ்சினாலும், ம்ப்ச்…. இன்னும் மனசு ஆறலயே.” என தோளைக் குலுக்க,

 

“சார், ப்ளீஸ்…. நான் என்ன செய்தா உங்க மனசு ஆறும்னு சொல்லுங்க செய்றன்.”

 

“ஓஹ்…. அப்படி கேட்கிறீயா நீ?, சரி போனாப் போகுது. உன்னப் பார்த்தாலும் பாவமாத் தான் இருக்கு. அதனால கொஞ்சம் மனசு இறங்கி வரேன். இப்போ நீ என்ன செய்றாய்னா…. காலம் முழுக்க நீ என்கிட்ட வேலைக்காரியா, எந்த நிபந்தனையும் இல்லாம வேலை செய்றேன்னு சொல்லி, உன் கையால எழுதி சைன் போட்டுக் கொடுக்கணும்.”

 

“அப்படி செய்தாய்னா உன்னையும் உன் குடும்பத்தையும் இப்போ மன்னிக்கிறத பத்தி நான் கொஞ்சம் யோசிப்பன்.” என இரக்கம் இன்றிக் கூறினான் அவன்.

 

அவனது கட்டளைக்கு பணிவதைத் தவிர வேறு வழி இல்லை அவளுக்கு.

ஆகவே கண்ணீருடன், “நான் ரெடி சார்.” என கூற,

 

ஒரு பேப்பரையும், பேனாவையும் கொடுக்க,

 

வாங்கி கண்ணீர் வழிய வழிய அவன், கூறியதை எழுதி, தன்னைத் தானே வாழ் நாள் முழுவதும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தாள் அவள்.

 

அவளின் கண்ணீர்க் கறையுடன் இருந்த கடிதத்தை கேலியாக வாங்கிப் படித்தவன், 

 

‘வாக்கு கொடுத்து இருக்காய். எந்த நிலையிலும் என்னை மீறி நீ போகக்கூடாது. அப்படிப் போனா…. ஆபத்து உன் பாச அப்பாவுக்கும், தங்கச்சிக்கும் தான் புரிஞ்சுதா?” என கேட்க,

 

மனதில் பாரம், மற்றும் கண்களில் வலியுடன் “ஓகே சார் புரிஞ்சுது.” என மென் குரலில் கூறினாள் அவள்.

 

“தட்ஸ் குட்.” என கூறியவன், அந்த லெட்டரை பத்திரப் படுத்திக் கொண்டு, 

 

மீண்டும் போனில் கவனத்தை செலுத்த,

கண் மூடி சீட்டில் சாய்ந்து அமர்ந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.

 

அவள் மீண்டும் கண் விழிக்கும் போது, ஹெலிகாப்டரும் ஒரு பெரிய மாளிகையின் மேல் தளத்தில் தரை இறங்கியது.

 

உலங்கு வானூர்தி நின்றதும், அதில் இருந்து குதித்து இறங்கியவனைத் தொடர்ந்து, 

 

“இனி என் வாழ்க்கைப் பயணம் என்னவாகுமோ?, இறைவா எது வந்தாலும் தாங்கும் பலத்தை எனக்கு கொடு.” என வேண்டிக் கொண்டு இறங்கி அவனின் கால்த் தடம் வழியே தலை குனிந்து நடக்க ஆரம்பித்தாள் தமயந்தி.

 

அவளுக்கு அவனின் வெள்ளைப் பளிங்கு போன்ற மாளிகையோ, அங்கிருந்த காவலர்கள், மற்றும் வேலைக் காரர்களோ கருத்தில் பதியவில்லை.

 

அவர்களின் பார்வை அவளின் மீது ஒரு வித ஆர்வத்துடனும், யோசனையுடன் பதிந்ததும் அவளின் கண்களில் விழவில்லை.

 

அவள் ஒருத்தி தன் பின்னால் வருகிறாள் என்ற எண்ணம் சிறிதும் இன்றி லிப்ட்டில் ஏறிக் கொண்டவன்,

 

அவள் தலை குனிந்தபடி ஏற வரவும், 

“வேலைக்காரிக்கு எல்லாம் லிப்ட்ல இடம் தர முடியாது. படில இறங்கி வா. அது தான் உனக்கு இனி நிரந்தரம்.” என கூறி விட்டு கேலி சிரிப்புடன் பட்டனை அழுத்த, கதவு மூடும் வரைக்கும் அவனையே எந்த உணர்வுகளும் இன்றி பார்த்துக் கொண்டு இருந்தவள், 

 

பெரு மூச்சுடன், படிகள் வழியே இறங்கி, கீழ்த் தளத்திற்கு வந்து சேர்ந்தாள்.

 

அவள் வந்து சேரும் போது அங்குள்ள வேலை செய்யும் நபர்கள் அனைவரும் அங்கு கூடி இருந்தனர்.

 

தமயந்தி, யாரையும் பார்க்காது, தலை குனிந்த படி வந்து நிற்க, 

 

அங்கிருந்த சோபாவில் ராஜாவின் தோரணை உடன் அமர்ந்து இருந்தவன்,

அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, 

 

“இவ பேரு தமயந்தி, இவளும் இனி மேல் இங்க ஒரு வேலைக்காரி தான். இவளுக்கு….” என சற்று யோசித்தவன், 

 

ஒரு வித உதட்டு வளைவுடன்,  “கிறீன் கலர் சேலை கொடுங்க.” என கூற, 

 

அங்கு உள்ள அனைவரும் அவளை ஒரு முறை அதிர்ந்து பார்த்து விட்டு, 

 

தங்களுக்குள் கிசு கிசுக்க,

 

தமயந்திக்கு எதுவுமே புரியவில்லை. 

 

ஆனால் அவன் தன்னை ஏதோ 

கேவலமாக நடத்துகிறான் என மட்டும் புரிந்தது. 

 

கேட்டால் அதற்கும் சேர்த்து. ஏதும் சொல்லி காயப்படுத்துவான். அதற்கு அமைதியாகவே இருக்கலாம் என எண்ணி அமைதியாக நின்று இருந்தாள் அவள்.

 

அவனும் அவளையே கூர்மையாக பார்த்து இருந்தவன், கையை தட்ட, 

 

அவளுக்கான சேலையை ஒரு  பெண்மணி கொண்டு வர,

 

தானே எழுந்து அதனை வாங்கி ஒரு வித கோணல் சிரிப்புடன் அவளிடம் நீட்ட,

 

அந்த பச்சை நிற காட்டன் சேலையை அமைதியாக வாங்கிக் கொண்டாள் அவள்.

 

அவனின் காதுகளில் இன்னும், சுற்றி உள்ளவர்களின் கிசு கிசுப்பு விழ,

 

“யாரும் ஏதாச்சும் கேட்கணும்னா என்கிட்ட நேரடியா கேளுங்க. அத விட்டுட்டு உங்களுக்குள்ள பேச வேண்டாம்.” என அழுத்தமான குரலில் கூற,

 

அடுத்த நொடி அந்த இடத்தில் மயான அமைதி நிலவியது.

 

அவனின் அந்த ஒற்றை வார்த்தையில் வெளிப்பட்ட ஆளுமையைக் கண்டு, ஒரு நொடி தமயந்தியே அதிசயித்துத் தான் போனாள். 

 

என்ன தான் அமைதியாக இருந்தாலும் அவர்களின் முகத்தில் இருந்த குழப்பத்தைக் கண்டு கொண்டவன்,

 

“ம்ம்ம்…. ஓகே உங்க முகங்கள பார்த்தாலே தெரியுது. நானே இவள பத்தி சொல்றேன். பச்சை சேலை கொடுக்கும் போதே, உங்களுக்கு எல்லாம்  தெரிஞ்சு இருக்கும். இவ, இங்க வேலை செய்ற கடை நிலை ஊழியர்களில் கூட அடங்க மாட்டான்னு. பொதுவா இங்க கடுமையா தப்பு செய்றவங்களுக்கு தண்டனைக் காலம் வரைக்கும் கொடுக்கிற ட்ரெஸ் கலர் தான் இது. இவ, என்ன தப்பு செய்தான்னு இப்போதைக்கு நான் சொல்ல விரும்பல.”

 

“ஆனா இந்த அம்மணிக்காக சிறப்பா, நான் இன்னும் கொஞ்சம் ரூல்ஸ்ச மாத்தி இருக்கேன்.”

 

“வழமை போல, மூணு வேளை சாப்பாடு இவளுக்கு கிடையாது, காலை, இரவு மட்டும் தான் சாப்பாடு. இங்க இருக்கிற தோட்ட வேலை, பாத்ரூம் கிளீன் பண்ற வேலை இரண்டும் இவ தான் பார்த்துக்கணும். இவ கூட யாரும் ஒரு நிமிஷம் கூட நின்னு பேசக்கூடாது, சாப்பாடு கூட ஒரு செகண்ட்ல் கொடுத்திட்டு வரணும். இவளுக்குன்னு தனி அறை தோட்டத்துப் பக்கம் இருக்கு அங்க தான் இவ தங்கணும். இந்த வீட்டுக்குள்ள இவ எந்தக் காரணம் கொண்டும் வரக்கூடாது ரைட். உங்க எல்லாருக்கும் சேர்த்து தான் சொல்றேன். இவ பக்கம் யாரும் பாவம் பார்த்துப் பேசுறேன்னு என்னை மீறிப் போனா அவங்களுக்கான தண்டனை ரொம்ப கொடூரமா இருக்கும். புரிஞ்சுதா?”  என கேட்க, 

 

அனைவரும் “ஆமாம்.” என்பது போல தலை ஆட்டினர்.

 

அவனின் செய்கையில், உள்ளுக்குள் அதிர்ந்து கண்ணீர்  வந்தாலும், 

அதனை வெளியே வர விடாது உள்ளுக்குள் இழுத்துக் கொண்டவள், 

 

“இதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம்.” என்பது போல நின்று கொண்டிருந்தாள்.

 

அவளின் கண்களில் கலக்கத்தைக் காண எண்ணியவனுக்கு ஏமாற்றமே கிடைக்க,

 

“பார்க்கிறேன்டி, இன்னும் எத்தனை நாளைக்கு நீ இப்படி திமிராய் திரியுறாய்னு நானும் பார்க்கிறேன்.” என எண்ணிக் கொண்டவன், 

 

அனைவரையும் போக சொல்லி விட்டு, தமயந்தி அருகில் வந்து அவளின் காதருகே குனிந்து,

 

“இனி மேல் உனக்கு ஒவ்வொரு நாளும் நரகம் தான். வாழ்க்கை முழுக்க இப்படியே இங்கயே இருடி, அப்போ தான் உனக்கு எல்லாம் புத்தி வரும். இன்னும் உன்ன கலங்கடிக்க என்ன எல்லாம் செய்றேன்னு பாருடி.” என உறும, ஒரு கணம் அவளின் உடல் அதிர்ந்தாலும்,

 

இம்முறை தீர்க்கமாக நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், 

 

“ஓகே சார். நான் இப்போ என் இடத்துக்கு போறன். எப்பவும் நான் வேலை செய்ய பின்னுக்கு நிக்கிறவளும் இல்லை. ஓசி சாப்பாடு சாப்பிடுறவளும் இல்லை. நான் செய்ற வேலைக்கு எனக்கு நீங்க நியாயமா சம்பளமும், சாப்பாடும் கொடுத்தா போதும் சார், வரேன்.” என நிமிர்வுடன் கூறி விட்டு செல்பவளை நோக்கி பல்லைக் கடித்தவன்,

 

“இருடி, இங்க தானே இருக்கப் போறாய். அப்புறம் பார்த்துக்கிறன் உன்னை.” என கறுவிக் கொண்டான்.

 

இங்கு தமயந்தியின் வாழ்க்கை இப்படி ஆரம்பம் ஆக,

 

மறு புறம், அபர்ணாவோ,கோபக் காரன் ஆதி மூலனையே கொடுமை செய்யும் குறும்புக் காரி ஆகிப் போனாள். 

 

அவளிடம் அவன் தான் முழி பிதுங்கி நிற்கும் நிலையாகிப் போனது.

 

தமயந்தி எங்கணம் தீரனிடம் இருந்து தப்புவாள்?

 

தீரன் பழி வாங்க காரணம் என்ன?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்..

 

அடுத்த எபி திங்கள் வரும் மக்காஸ் ❤❤❤❤

 

உங்க லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் தான் பூஸ்ட் மக்காஸ்…. கண்டிப்பா லைக்ஸ் கொடுங்க மக்காஸ் ❤❤❤❤❤

 

பெரிய எபி மக்காஸ் 😍😍😍😍😍 லைக்ஸ் கொடுங்க.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!