Episode – 07
ஆம், ஆதி மூலனையே தலையால் தண்ணீர் குடிக்க வைத்தாள் அபர்ணா.
சோபாவில் சோர்ந்து அமர்ந்து இருந்தவள், “அடுத்து என்ன செய்வது?” என சற்று நேரம் யோசித்து விட்டு,
“இறுதியாக என்ன நடந்தாலும். இந்த வில்லனை சும்மா விடக் கூடாது. இவன் முன்னாடி பயந்து போனால், இன்னும் ஏறி மிதிச்சிட்டுத் தான் போவான். இனி மேல் பயப்பிடாம இவனை எதிர் கொள்ளணும். நிம்மதியா இருக்க விடாம செய்யணும்.” என பலதும் எண்ணிக் கொண்டவாறு அப்படியே உறங்கியும் போனாள்.
சரியாக ஒரு மணி நேரம் கழித்து உள்ளே வந்தவன்,
அவள் வாயைப் பிளந்து, தலையை சரித்து சிறு பிள்ளை போல உறங்குவதை ஒரு கணம் கூர்ந்து பார்த்து விட்டு,
“என் நிம்மதிய கெடுத்திட்டு நீ மட்டும் நிம்மதியா உறங்குறீயா?, உன்னை….” என பல்லைக் கடித்துக் கொண்டு,
மறு நொடி, அவளின் காதருகே,
அங்கிருந்த பாக் செட்டை கொண்டு சென்று வைத்தவன், அது அதிரும் வண்ணம் பாட்டை ஒலிக்க விட,
திடீர் என கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு துடித்து பதைத்து எழுந்தவளின் இதய ஓசை மத்தளம் கொட்டியது.
அவளோ, நெஞ்சினை நீவியபடி, “கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு?” என சீறினாள்.
அவளின் மரியாதை இல்லாத அழைப்பில், பல்லைக் கடித்தவன்,
“என்னடி மரியாதை எல்லாம் தேயுது. எனக்கு மரியாதை கொடுக்கலன்னா…. நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.”
“ஹ்ம்க்கும்…. அப்போ மரியாதை கொடுக்கிற மாதிரி நீங்களும் நடந்துக்கணும். பாக்ஸ் செட்ட இப்படியா காதுக்கு பக்கத்தில கொண்டு வந்து அதிருற மாதிரி வைப்பீங்க. கொஞ்ச நேரம் போய் இருந்தா…. ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்து இருப்பன்.”
“ஹா…. ஹா…. யாரு நீயா? உன்னால சுத்தி உள்ளவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வராமல் இருக்கும் வரைக்கும் சந்தோஷம்.” என கூறி அவன் சிரிக்க,
அவனை முறைத்துப் பார்த்தவள்,
“என்னப் பார்த்தா கேலியா இருக்கா உங்களுக்கு?” என சீற,
“ம்ப்ச்…. எதுக்கு இப்போ இப்படிக் கத்துறாய்? முதல்ல அமைதியா பேசிப் பழகு, இங்க நானும் நீயும் தானே இருக்கிறம். அப்புறம் எதுக்கு இத்தனை சவுண்ட் எல்லாம்?, வெளில இருக்கிற யாருக்கும் நாங்க பேசுறது கேட்கக் கூடாது புரிஞ்சுதா?” என அவன் கர்ஜிக்க,
அவள் அவனது கர்ஜிக்கும் குரலில் ஜெர்க் ஆனாலும்,
“என்னோட நேச்சரே இப்படித் தான். உங்களுக்காக எல்லாம் மாத்திக்க முடியாது. உங்களுக்கு அது புரிஞ்சுதா?”
“ஓஹ்…. சரியாத் தான் பேசுறாய். இதயே மாத்தி நான் சொன்னா….”
“இல்ல புரியல.”
“என்னடி புரியல. உன்ன மாதிரித் தான் நானும். என்னாலயும் என் இயல்புகள விட்டுக் கொடுத்து வாழ முடியாது. எனக்கு தப்புனு தெரிஞ்சா நான் என்ன வேணும் எண்டாலும் பண்ணுவன்.”
“என்ன பேசுறீங்க நீங்க?, நான் பேசினதும் நீங்க பேசுறதும் ஒண்ணா?, எத எதோட ஒப்பி டுறீங்க?, செய்ற தப்புக்கு நியாயம் வேற சொல்றீங்களா?” என எகிற,
அவனோ, அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு,
“ஹ்ம்ம்…. உன் கூட பேச முடியாதுடி வாயாடி. நம்ம சண்டையை அப்புறம் வைச்சுக்கலாம். இப்போ நீ என்ன பண்றாய்னா வேகமா ஓடிப் போய் எனக்கு காபி போட்டு எடுத்துக் கொண்டு வர்றாய் ஓகேவா?”
“எத?”
“ஏன் உனக்கு நான் சொன்னது புரியலயா?, போய் காபி போட்டு எடுத்திட்டு வாடி.”
“…………..”
“நீ சைலன்டா நிக்கிறதப் பார்த்தா…. உனக்கு கிச்சன் பக்கம் போன அனுபவமே இல்லைப் போல.” என அவன் கிண்டலாக கேட்க,
அபர்ணாவோ, ரோஷமாக, “யார் சொன்னது? எனக்கு காபி போடத் தெரியாதுன்னு. நான் நல்லாவே சமைப்பன். ஆனா எனக்கு பிடிச்சவங்களுக்காக மட்டும் தான் வேலை செய்வன். கண்ட கண்ட ஆட்களுக்கு எல்லாம் என்னால சேவகம் செய்ய முடியாது.”
“என்னடி வாய் நீளுது உனக்கு?, வெளில இருக்கிறவங்களுக்கு நம்ம மேல சந்தேகம் வரக்கூடாது. இது நான் கஷ்டப் பட்டு உருவாக்கின சாம்ராஜ்ஜியம். இங்க என்னைப் பத்தி தப்பான விதை ஒண்ணு விழ நான் அனுமதிக்கவே மாட்டன். புரியுதா உனக்கு?, அவங்க பார்வைக்கு நீயும், நானும் நெருக்கமா இருக்கிற மாதிரியும், அன்பா இருக்கிற மாதிரியும் காட்டியே ஆகணும். அதுக்கு நீயும் ஒத்துழைப்பு கொடுத்தே ஆகணும்.”
“முடியாது, எனக்கு உங்கள சுத்தமா பிடிக்காது. அப்படி இருக்கும் போது உங்க மேல அன்பு இருக்கிற மாதிரி என்னால நடிக்கவே முடியாது. சே…. நினைச்சுப் பார்க்கவே அருவெறுப்பா இருக்கு.” என அவள் முகத்தை சுளிக்க,
அவளை தன்னை நோக்கி இழுத்தவன், அவளின் தாடையைப் பற்றி,
“இந்த வாய்க்கு தாண்டி, இந்த நிலைமையில இருக்காய். அப்படி இருந்தும் அடங்குறீயா நீ?, உனக்கு எல்லாம் பாவம் பார்க்கவே கூடாது. இப்போ நான் கேட்ட மாதிரி காபி வரலன்னா…. கொஞ்ச நாள் கழிச்சு நடக்க இருக்கிற திருமணத்த இப்பவே நடத்திக் காட்டுவன். மனைவியான பிறகு, நீ புக்ஸ்ச தூக்கிக் கொண்டு காலேஜ்ற்கு போக மாட்டாய்,
பிள்ளையை தூக்கிக் கொண்டு கிண்டர் கார்டன் தான் போவாய் எப்படி வசதி?” என கேட்க,
அவனை அதிர்ந்து போய் பார்த்தாள் அவள்.
அவனின் கண்களில், “நான் சொன்னதை செய்தே ஆவேன்.” என்பது போல ஒரு தோரணை இருக்க,
எச்சில் கூட்டி விழுங்கியவளின் பார்வை அவளை அறியாது அவனின் தழும்பின் மீது பதிந்தது.
அந்த தழும்பைக் காணும் போது எல்லாம் அவளுக்குள் ஒரு பூகம்பம் எழுவதை அவளால் தவிர்க்கவே முடியவில்லை.
அவளின் பார்வை போகும் போக்கை உணர்ந்தவன்,
“என்ன காபி வருமா?…. இல்ல….” என அவன் இழுக்க,
“இதோ…. இப்போ…. கொண்டு வரேன்.” என திக்கித் திணறிக் கூறியவள்,
அவனிடம் இருந்து விலக எத்தனிக்க,
அவளின் தாடையை விடாது, கண்களுக்குள் உற்று நோக்கியவன்,
“என்ன சீண்டினா…. அதற்கான விளைவுகள் மோசமா இருக்கும்.” என அவளின் உதட்டைப் ஆழ்ந்து பார்த்துக் கொண்டு கூற,
அவளோ, “விடுங்கஆஆ…. வலிக்குது.” என கூற,
ஒரு வித உதட்டு வளைவுடன் அவளை விட்டவன்,
“இன்னும் பத்து நிமிஷத்தில எனக்கு காபி வந்தாகணும்.” என கூறி விட்டு, அங்கேயே, கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொள்ள,
“ஓகே….” என கூறி விட்டு சென்றவள்,
போகும் போது, “காபி தானே வேணும். இனி மேல் வாழ்க்கையில என்னை காபி போட சொல்லிக் கேட்கவே கூடாது. அப்படி ஒரு ஸ்பெஷல் காபி போட்டுக் கொண்டு வரேன்.” என எண்ணிக் கொண்டவள்,
நல்ல பிள்ளையாக, கிச்சனிற்கு சென்று, அங்கு இருந்தவர்களை கேட்டு பொருட்களை எடுத்தவள்,
அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு, தனக்கும் அவனுக்கும் சேர்த்து காபி போட்டு முடித்து விட்டு,
இரண்டு காபி கப்புகளுடனும் மீண்டும் அறைக்குள் நுழைந்தாள்.
அவனோ, அவளையே பார்த்துக் கொண்டு இருக்க,
ஒரு கப்பை எடுத்து அவனிடம் நீட்டியவள்,
இன்னொரு கப்பை எடுத்து வாயில் வைக்கப் போக,
“ஏய், இரு. அந்தக் கப்பைத் தாடி, உன்ன நம்ப முடியாது.” என்றவன், அவள் கையில் இருந்த கப்பை பறிக்க,
அவளும், அவன் மேசையில் வைத்த கப்பை எடுத்து ஒரு வாய் அருந்தி விட்டு,
“சூப்பரா இருக்கு.” என கூற,
அவனும் அவள் குடித்த நம்பிக்கையில், தன் கையில் இருந்த காபி கப்பில் இருந்து ஒரு வாய் குடித்தவன்,
அடுத்த நொடி, பாத்ரூம் நோக்கி ஓடினான்.
அங்கே சென்று வாஷ் பேசனிற்குள் துப்பி விட்டு மீண்டும் மூன்று முறை வாயிற்குள் தண்ணீர் விட்டு துப்பினான்.
ஆனாலும் காரம் மட்டுப் பட மறுத்தது.
அதே நேரம் பாத்ரூம் வாசலில் வந்து நின்ற அபர்ணாவோ,
“இது அபர்ணா ஸ்பெஷல், மிளகுத் தூள் அண்ட் சில்லி பிளாக்ஸ் காபி எப்படி இருக்கு?, எப்படியும் நீங்க என் கப்பை வாங்குவீங்கன்னு தெரிஞ்சு எப்படி பிளான் பண்ணேன் பார்த்தீங்களா?, யாருக்கிட்ட….” என அவள் எகத்தாளமாய் கேட்டு சிரிக்க,
“ஏய்…. “ என கண்கள் சிவக்க திரும்பியவன், அவளை நோக்கி வர முதல், சிட்டாக பறந்து அறையில் இருந்து ஓடி விட்டாள் அவள்.
“இன்னைக்கு நைட் இருக்குடி உனக்கு. இந்த ரூமுக்கு தானே வந்தாகணும். அப்போ பார்த்துக்கிறன் உன்னை.” என பல்லைக் கடித்தவனுக்கு, இன்னும் ஏறிய காரம் இறங்கிய பாடு இல்லை.
“ராட்சசி வந்து ஒரு நாள் ஆகல அதுக்குள்ள என்னை என்ன பாடு படுத்துறா. சரியான கேடி.” என எண்ணியவன், ஒருவாறு தன்னை சமன் செய்து கொண்டு வெளியில் வர,
அவனுக்கு முக்கியமான நபரிடம் இருந்து அவசர அழைப்பு வந்தது.
அவனும், “ஓகே இதோ பார்க்கிறேன் ஜி.” என கூறி விட்டு ஆடை மாற்றி வெளியே வந்தவன்,
அபர்ணாவை தேட, அவளோ அவனைக் கண்டு விட்டு விறு விறுவென கிச்சனிற்குள் நுழைந்து கொள்ள,
அவளை நோக்கி தீப் பார்வை ஒன்றை வீசியவன், அவள் மெதுவாக எட்டிப் பார்க்கவும்,
“கையில மாட்டுடி அப்புறம் உனக்கு இருக்குடி….” என வாய் அசைத்தவன், அவளை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைக்கப் போக,
அவள் மீண்டும் உள்ளுக்குள் மறைந்து கொண்டாள்.
அவனும் தன் கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டு, அங்கிருந்து வெளியேறினான்.
அவன் கிச்சன், கார்டன் பக்கம் எல்லாம் போகவே மாட்டான். அவனுக்கு அதற்கு நேரமும் இருந்தது இல்லை. திடீர் என அவன் போய் நின்றால் அங்கு இருப்பவர்களும் தப்பாக எண்ணக் கூடும்.
வித்தியாசமாக பார்க்கக் கூடும்.
அதனாலேயே அவன் அந்த
இடங்களுக்கு செல்வது இல்லை.
அது இன்று அபர்ணாவிற்கு சாதகமாகிப் போனது.
ஆனாலும் தொடர்ந்து சாதகமாக இருக்குமா என முடிவு செய்வது ஆதியிடத்தில் தான் இருக்கிறது.
அவன் வண்டி வெளியே கிளம்பிப் போனதும்,
வெளியே வந்தவள், “இப்போ தப்பிட்டேன். அவர் கிட்ட தனியா மாட்டி இருந்தம், அவ்வளவு தான் என்னை ஒரு வழி பண்ணி இருப்பார்.” என எண்ணிக் கொண்டவள், தோட்டத்தை சுற்றிப் பார்க்க கிளம்பி விட்டாள்.
மறு புறம், தமயந்திக்கு ஓயாத வேலைகள் அடுக்கடுக்காக காத்து இருந்தது.
வேலைகளை நேர்த்தியாகவும், எந்த மன சுணக்கமும் இன்றி செய்தவளுக்கு, மனம் முழுவதும் வீட்டினரின் எண்ணம் தான்.
அவளுக்கு பேச்சு துணைக்கு ஆள் இருந்தால் கூட பரவாயில்லை. அந்தப் பரந்த இடத்தில் அவளை நிமிர்ந்து பார்க்க கூட யாரும் ரெடி இல்லையே.
அப்படி இருக்கும் போது, அவள் மனம் சோர்வது இயல்பு தானே.
பெரு மூச்சுடன், சற்று நேரம் ஆசுவாசம் அடையலாம் என எண்ணியவளுக்கு வயிறு தன் இருப்பைக் காட்டியது.
ஆனால் மதிய நேரம் அவளுக்கு உணவு கொடுக்கக் கூடாது என்று தீரன் கட்டாயமாக சொல்லி இருக்கிறானே. என்ன செய்ய?
வயிற்றை வலியில் அழுத்தியவளுக்கு வயிறார, குடும்பமாக உணவு அருந்திய நினைவுகள் அலைக் கழிக்க,
பெரு மூச்சுடன், தோட்டத்தில் இருந்த தண்ணீர்ப் பானையில் இருந்த நீரைப் பருகினாள்.
ஆனாலும் பசித் தீ அடங்க மறுக்க, வயிற்றில் கையை வைத்து அழுத்தியபடி நிமிர,
அவளையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தான் தீரன்.
அவனைக் கண்டதும், இயன்ற வரை தனது வலியைக் காட்டாது மறைத்தவள்,
அங்கிருந்து விலகிச் செல்ல எத்தனிக்க,
அவனோ, அவளின் வழியை மறித்து நின்றவன்,
“ரொம்ப பசிக்குதா தமயந்தி?” என உதட்டு வளைவுடன் கேட்க,
உதடு துடிக்க, அவனைப் பார்த்தவளின் பார்வையில் கலக்கம் இருந்தாலும், உடல் இறுக, நிமிர்ந்து நின்று இருந்தாள் அவள்.
அந்த நேரத்திலும் அவளின் தைரியத்தை புருவம் தூக்கிப் பார்த்தவன்,
அங்கிருந்தவாறே, தன் வளர்ப்பு நாய்களுக்கு விலை உயர்ந்த சிக்கன் துண்டுகளை போட்ட படி,
ஓரக்கண்ணால் மீண்டும் தமயந்தியைப் பார்க்க,
அவளுக்கு அவனின் எண்ணம் நன்றாகவே புரிந்தது.
அந்த வீட்டில் நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட தனக்கு இல்லை என்பதைப் புரிந்து கொண்டவள், ஒரு விரக்தி சிரிப்புடன் மீண்டும் அவனைக் கடந்து போக முயல,
அவளே எதிர் பாராத விதமாக, உலகம் திடீர் என தட்டாமாலை சுற்றுவது போல இருக்க,
தடுமாறிப் போனவள், தன்னை நிலைப்படுத்த, அருகில் நின்று இருந்தவனின் கைகளைப் பற்றப் போனவள்,
கடைசி நிமிடத்தில் பிடிவாதமாக, கையை இழுத்துக் கொண்டாள்.
அவளின் செய்கைகளைக் கவனித்துக் கொண்டு இருந்தவன்,
அவள் தனது கையை பிடிக்க வந்து பின்பு, பிடிக்காது தடுமாறவும்,
“ம்ப்ச்…. பார்றா…. அவ்வளவு சுய மரியாதை.” என முணு முணுத்தவன்,
கையில் இருந்த மிகுதி இறைச்சித் துண்டுகளை நாய்க் கூண்டை நோக்கி எறிந்து விட்டு,
கையை துடைத்துக் கொண்டவன்,
நின்ற நிலையில் தடுமாறிக் கொண்டு இருக்கும் தமயந்தியின் கால்களை வேண்டும் என்றே இடறி விட்டான்.
அவளோ, அவனது செய்கையில் சுழன்று விழ, அவளைத் தாங்கிப் பிடித்து தூக்கியவனின் கைகளில் உணர்வுகள் இன்றி மயங்கி விழுந்து இருந்தாள் பெண்ணவள்.
தீரனின் கோபத்தின் விளைவுகளை எங்கணம் பெண்ணவள் தாங்கிக் கொள்ளப் போகிறாள்?
அபர்ணா, ஆதியின் நிலை என்னவாக இருக்கும்?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
கதையைப் பற்றி இரண்டு வார்த்தைகளாவது சொல்லிட்டு போங்க மக்காஸ்.
அடுத்த எபி நாளைக்கு வரும்.
உங்க லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ் 🥰🥰🥰
Dhamayandhi pavam sis