Episode – 08
தன் கைகளில் விழுந்து கிடந்தவளை உற்றுப் பார்த்தவன்,
“ம்ப்ச்…. அதுக்குள்ள மயக்கம் போட்டு விழுந்திட்டா.” என முணு முணுத்து விட்டு,
அங்கு வேலை செய்து கொண்டு இருந்த பெண்களில் இருவரை அழைத்து,
அவளை அவள் தங்கி இருக்கும் வீட்டிற்கு கொண்டு சென்று படுக்க வைத்து விட்டு வர சொன்னவன்,
அவர்கள் அவளைத் தூக்கிக் கொண்டு போகவும், நெற்றியை நீவியபடி,
அவர்களை மீண்டும் அழைத்து,
“அவ, எழுந்ததும் ஏதாச்சும் அவளுக்கு சாப்பிட கொடுங்க. அண்ட் சாப்பிட்டு முடிய, என்னை வந்து பார்க்க சொல்லுங்க. அவளுக்கு வீட்டுக்குள்ள வர அனுமதி இல்ல. சோ, நைட் நான் வேலை முடிச்சு வரும் வரைக்கும், அவள வீட்டுக்கு வெளில வெயிட் பண்ண சொல்லுங்க. எத்தனை மணி நேரம் ஆனாலும் அவ என்னைப் பார்க்காம தூங்கப் போகக்கூடாது. இதையும் சொல்லிடுங்க.” என கூறியவன்,
ஒரு கணம் தமயந்தியை கூர்ந்து பார்த்து விட்டு விறு விறுவென தன் பாட்டிற்கு சென்று விட்டான்.
அவன் சொன்னபடியே அந்த இரு பெண்களும், தமயந்தியை கொண்டு சென்று அவளது அறைக்குள் படுக்க வைத்து விட்டு, அவள் எழும்பும் வரை காத்திருந்து அவள் எழும்பியதும்,
நடந்ததைக் கூறி விட்டு, அவளுக்கு உணவையும் கொடுத்து உண்ண வைத்து விட்டுச் சென்றார்கள்.
அவர்கள் போனதும், “காலை இடறி விட்டு விழ வைச்சதே அவர் தான். இப்போ எதுக்காக என்ன சந்திக்கணும்னு சொல்றார். இன்னும் என்ன கொடுமை எல்லாம் நான் தாங்கணுமோ?, வாழ்நாள் முழுவதும் இப்படி இருக்கவா, நான் படிச்சேன். என்னோட கனவு, இலட்சியம்…. எல்லாம் பாழாய்ப் போய்டும் போல இருக்கே.” என எண்ணிக் கலங்கிப் போனவள்,
அப்படியே, கட்டிலில் சாய்ந்து படுத்திருந்தாள்.
இரவு உணவும் அவளுக்கு கொடுத்து விடப் பட, உண்டு முடித்தவள்,
வெளியில் வந்து, தோட்டத்தில் தீரன் வரவுக்காக காத்து இருந்தாள்.
நேரம் எட்டு மணியைக் கடந்தும், அவன் வந்த பாடு இல்லை.
அங்கிருந்த வேலையாட்களின் சத்தமும் அடங்கி, அவர்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது.
அனைவரும், தத்தமது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றும் விட்டனர்.
அதே நேரம் அவனது பிரத்தியேக படையினரும், தமக்குரிய இடங்களில் சென்று உட்கார்ந்து விட்டனர்.
அவர்களின் வேலை இருபத்து நான்கு மணி நேர வேலை அல்லவா.
அனைவரின் செய்கைகளையும் , ஒரு பார்வை பார்த்தவளுக்கு, “தீரன் என்ன தொழில் செய்கிறான்?, அவனுக்கு உறவினர்கள் யாரும் இருக்கிறார்களா?, அவனை சுற்றி ஏன் இத்தனை பாதுகாப்பு ஆட்கள்?” என எண்ணம் தான் மீண்டும் மீண்டும் உருவானது.
அவளுக்கு அவனின் பெயரைத் தவிர எதுவுமே தெரியாது இல்லையா?
( அட, நீ வேற ஏன்மா? பின்னே கடத்திக் கொண்டு வந்தவன், பின்காட், பர்சனல் டீடெயில்ஸ் எல்லாமா கொடுப்பான்?, சும்மா காமெடி பண்ணிக் கிட்டு. அவன பத்தி முழுசா தெரிஞ்சா நீ இன்னொரு தரம் மயங்கி விழப் போறது உறுதிம்மா.)
அதே நேரம் அவளின் மனம, “அந்த ஆதி மூலனையே, இவன் பொடிப் பையன் என்கிறான், அப்போ இவன் கண்டிப்பா அவனுக்கு மேல வில்லாதி வில்லனாகத் தான் இருப்பான்.” என அடித்துக் கூறியது.
மன சாட்சி கூறிய செய்தியில், ஒரு கணம் கண்களை மூடித் திறந்தவள்,
“ஹ்ம்ம்…. போகப் போகப் பார்ப்பம். என்ன நடக்கணுமோ நடக்கட்டும்.” என எண்ணியவாறு அமர்ந்து இருக்க,
நேரம் பத்து மணியைக் கடந்தும் அவன் வரவில்லை.
“ம்ப்ச்…. என்ன இன்னும் நம்ம கொடுங்கோல் அரசனைக் காணல. எனக்கு வேற தூக்கம் கண்ணைக் கட்டுது.” என முணு முணுத்தவள்,
அப்படியே காலைக் குறுக்கிக் கொண்டு அமர்ந்து இரு முழங்கால்களிலும் தனது முகத்தை புதைத்துக் கொண்டாள்.
அந்த இதமான இரவுப் பொழுது, மெல்லிய சாரலாய் காற்று, என மனதிற்கு இதம் அளிக்கும் வண்ணம் சூழ்நிலை அமைய,
தன்னையும் மீறி கண் அயர்ந்து போனாள் பெண்ணவள்.
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாளோ…. திடீர் என காரின் ஹார்ன் சத்தம் ஒலித்தது.
அந்த ஒலியில் திடுக்கிட்டு எழுந்தவள், சத்தம் வந்த திசையில் பார்வையை செலுத்தினாள்.
அங்கு உள்ள வளைவு பாதையில் ஒரு திருப்பலுடன் வாசலில் வந்து நின்றது தீரனின் விலை உயர்ந்த கரு நிற லம்போகினி கார்.
அதனைக் கண்டதும், “ஓஹ்….மிஸ்டர் கொடுங்கோலன் வந்துட்டார் போல.” என முணு முணுத்துக் கொண்டு எழுந்து நின்றாள்
காரில் இருந்து இறங்கியவன்,
தோட்டத்தில் நிற்பவளை நோக்கி ஒரு பார்வையை வீசி விட்டு,
தோளைக் குலுக்கிக் கொண்டு தன் பாட்டிற்கு வீட்டிற்குள் சென்று விட்டான்.
அவனது செய்கை முகத்தில் அடித்தது போல இருந்தாலும், இதை விட அவனிடம் வேறு எதையும் எதிர் பார்க்க முடியாது என எண்ணிப் பெரு மூச்சு விட்டவள்,
சிறிது நேரம் கழித்து அமைதியாக, அவனின் வீட்டின் வாசலின் முன்பாக சென்று நிற்க,
உள்ளே சோபாவில் காலுக்கு மேல் கால் போட்டவாறு அமர்ந்து இருந்தவன்,
வாசலில் நிழல் ஆடவும், நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் அமைதியாக சாய்ந்து அமர,
வேறு வழி இல்லாது, தமயந்தியும், “சார்….” என மெதுவாக அழைக்க,
அவளை அங்கேயே நிற்கும் படி கை காட்டியவன்,
ஒரு எள்ளல் புன்னகை உடன், எழுந்து வந்து அவளின் முன்னாக நின்றான்.
“சார்…. என்ன….நீங்க….” என பேச ஆரம்பித்தவள்,
அப்போது தான், அவனின் ஷேர்ட்டில் தெறித்து இருந்த ரத்தக் கறைகளைக் கண்டாள்.
அதனைக் கண்டதும் பேச்சு மறந்து போனவள் போன்று, திக்க ஆரம்பிக்க,
“என்ன மேடமுக்கு நாக்கு குழறுது?”, என கேலியாக வினவியவன்,
அவளின் பார்வை போகும் இடம் அறிந்து,
“ஓஹ்….இத பார்த்து தான் திக்குறீயா?, அது ஒண்ணும் இல்ல…. ஒண்ணு…. இரண்டு…. மூணு…. நாலு…. இப்படியே எண்ணிக் கிட்டுப் போனா…. வருமே பத்து…. சுமாரா ஒரு பத்துப் பேர ஜஸ்ட் இப்போ தான் கொன்னுட்டு வரேன்.” என கூற,
போன மயக்கம் திரும்ப வரும் போல இருந்தது தமயந்திக்கு.
அவளின் உடல் வெளிப்படையாகவே நடுங்க, முகம் வெளிறி,
அங்கிருந்த தூணை தனக்கு பற்று கோலாக பிடித்துக் கொண்டவள்,
அவனைக் கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து பார்க்க,
அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தவன்,
“ம்ப்ச்…. அப்படி கொலை செய்யும் போது, ஒருத்தன் கழுத்தில கத்திய இறக்கும் போது தெறிச்ச இரத்தம் தான் இது.” என கூறி சுட்டிக்காட்ட,
அவன் சொன்ன செய்தியில் முற்றிலும் பதறிப் போனவள்,
“அப்போ…. நீங்களும் ஒரு கொலைகாரன் தானா…. உங்க கையால பத்து உயிர்கள காவு வாங்கிட்டு எப்படி உங்களால…. இ…. ப்ப…. டி நிற்க முடியுது?” என குரல் நடுங்க கேட்டே விட்டாள் அவள்.
“ம்ப்ச்…. உனக்கு தான் இது புதுசா இருக்கு. எனக்கு இது பழக்கம் தான். எனக்கு தப்புன்னு தோணிணா…. அவங்களுக்கு நான் கொடுக்கும் தண்டனை மரணம் தான். நோ சாய்ஸ். அந்த லிஸ்ட்ல தான் நீயும் இருக்காய். ஆனா பொண்ணாப் போனதால ஏதோ கொஞ்சம் பாவம் பார்த்து உன்ன விட்டு வைச்சு இருக்கேன். விளக்கம் போதுமா? இல்ல…. இன்னும் வேணுமா?”
“……………….”
“ரைட். இனியும் இதே மாதிரி அமைதியா இருந்தா உன் தலை தப்பிக்கும். அப்புறம் உனக்கு மூணு வேளை சாப்பாடு கொடுக்க சொல்லி இருக்கேன்.”
“ஏன்னா…. நீ பாட்டுக்கு தொப்பு…. தொப்புன்னு மயங்கி விழுறாய். ஒரு வேள மயக்கத்திலயே நீ நிம்மதியா போய் சேர்ந்துட்டா. அப்புறம் நான் எப்படி உன்ன கொடுமைப் படுத்துறது. நான் நினைச்சத எப்படி அடையுறது?” என கண்களில் ஒரு வித பள பளப்புடன் கேட்க,
“சே….” என ஆகி விட்டது அவளுக்கு. அவனின் கண்களில் தெரிந்த பழி வெறியில் இன்னும் பயந்து போனாள் அவள்.
“ஒருவரை கொடுமைப் படுத்தவென, அவர்கள் உயிருடன் இருக்க வேண்டும் என எண்ணும் அளவுக்கு, அவனுக்கு தான் என்ன செய்தோம்?, என்ன வன்மம் தன் மீது?” என எண்ணிக் குழம்பிப் போனவள்,
அதே குழப்பத்துடனும், கலக்கத்துடனும் அவனைப் பார்க்க,
அவனோ, உனக்கு வேண்டிய பதில், உனக்கு கண்டிப்பா தெரிய வரும். அது வரைக்கும் “ஏன்….?, ஏன்….?” என யோசிச்சுக் கொண்டே இரு.”
“அப்புறம், ஒரு முக்கியமான விஷயம். நாளையில இருந்து உனக்கு இன்னொரு அதி முக்கியமான வேலை இருக்கு. அது என்னன்னா…. காலையில தோட்டத்துல நான் ஜோக்கிங் போகும் போது, எனக்கு பின்னாலயே நீயும் வரணும். அந்த ஒரு மணித்தியாலமும் நான் என்ன செய்ய சொல்றனோ நீ செய்யணும். இது தான் எக்ஸ்ட்ரா ஒரு வேளை சாப்பாட்டுக்கு நீ செய்ய வேண்டிய எக்ஸ்ட்ரா வேலை. நான் பொதுவா ஆறு மணிக்கு தான் ஜோக்கிங் போவன். ஆனா நாளையில இருந்து ஐஞ்சு மணிக்கு போகலாம்னு இருக்கன். ஓகேவா?” என கேட்க,
அவள் வெறுமனே தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
அவளின் முக உணர்வுகளையே பார்த்துக் கொண்டு இருந்தவன்,
“முடியல தமயந்தி, இன்னும் இருக்கு. அடுத்த முக்கிய விஷயம், நைட் நான் எத்தன மணிக்கு வீட்டுக்கு வந்தாலும், எனக்கு குட் நைட் சொல்லாம நீ தூங்கவே கூடாது. அப்படித் தூங்குனா அடுத்த நாள் ஒரு வேளை சாப்பாடு தான் கிடைக்கும். சோ, இனி மேல் உன் தூக்கம் கூட என் சம்பந்தப்பட்ட விஷயம் ஆகிடிச்சு. ஐ மீன் என் கட்டுப் பாட்டுக்கு வந்தாச்சு. இனிமேல் உன் விடியல் ஆரம்பிக்கப் போறதும் என்னோடு தான், உன் இரவுகள் முடியப்போறதும் என்னோடு தான்.” என ஒரு உதட்டு வளைவுடன் கூற,
அவள் அமைதியாக அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டு நின்று இருந்தாளே தவிர, எந்த எதிர் வினையும் ஆற்ற வில்லை.
அவன் தன்னை வதைக்க முடிவு பண்ணி விட்டான் என்பது அவனின் பேச்சில் இருந்து நன்றாகவே புரிந்தது.
அவனது பேச்சில் மனதிற்குள் எரிமலை கூட வெடித்து சிதறியது. ஆனாலும் வெளியில் எந்த ஒரு உணர்வையும் வெளிக் காட்டாது நின்று கொண்டு இருந்தவளின் கண்களில் முன் போல கலக்கத்தை தேடி கடைசியில் தீரன் தான் களைத்துப் போனான்.
அவன் நினைத்த உணர்வு வராது கண்டு அதற்கும் அவளின் மீது கோபம் கொண்டவன்,
“இருக்கட்டும், உன்ன கலங்கித் துடிக்க வைக்க என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்.” என மனதிற்குள் எண்ணிக் கறுவிக் கொண்டவன், அவளைப் போகுமாறு கை காட்ட,
“ஓகே சார்.” என கூறியவள் திரும்பி நடக்க ஆரம்பிக்க,
“சொன்னது நினைவு இருக்கட்டும், நாளைக்கு மார்னிங் சரியா ஐந்து மணிக்கு நீ இங்க இருக்கணும் புரிஞ்சுதா?” என அழுத்தமாக வினவவும்,
அவனின் புறம் திரும்பாது, “ம்ம்ம்ம்….” என தலையை ஆட்டியவள், வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்.
போகும் அவளின் முதுகை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவன்,
“சரியான நடிப்புக்காரி, உன் நடிப்பெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குனு பார்க்கிறேன்.” என எண்ணி பல்லைக் கடித்துக் கொண்டான்.
****************************************************
மறு புறம், இரவுப் பொழுது ஆனதும், அபர்ணா தனக்கான உணவை உண்டு விட்டு, அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டு இருந்தாள்.
“எப்படியும், தனது உடைகள்,
புத்தகங்கள் அனைத்தும் எடுத்து வர வேண்டும். மீண்டும் பாடசாலைக்கு செல்ல ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அங்கு போனால் அவளை ஆளுக்கு ஆள் கேள்வி கேட்பார்களே.
அவர்களுக்கு என்ன பதில் சொல்வது?, எப்படிப் படித்து முடிப்பது?, ஆறு மாசம் வரைக்கும் தாக்குப் பிடித்தாலும் அதற்குப் பிறகு என்ன செய்வது?” என மனசுக்குள் குழம்பிப் போனவளுக்கு,
அடுத்த வேளை ஆடை மாற்றக் கூட வழி இல்லை என்பது தான் உண்மை.
தன் நினைவுகளில் மூழ்கி இருந்தவள்,
கார் வந்து நின்ற சத்தத்தையோ, அல்லது, அதிலிருந்து இறங்கி வந்த ஆதி அவளையே பின்னால் இருந்து பார்த்துக் கொண்டு இருந்ததையோ அறியவில்லை.
அவனுக்கோ, இன்னுமே அவள் போட்ட காரம் நாக்கில் இருப்பது போல உணர்வு.
அவள் தனது நினைவுகளில் மூழ்கிப் போய் இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டவன்,
ஒரு முடிவுடன் அப்படியே அவளின் பின்னாக வந்து நின்று, அவளை அணைத்துத் தூக்கிக் கொண்டான்.
திடுமென தன்னை யாரோ தூக்கவும் பயந்து கத்தியவள்,
அப்போது தான், தான் ஆதியின் கைகளில் சிக்கி இருப்பதை உணர்ந்து,
“விடுங்க…. இது என்ன பழக்கம்?, ஒருத்தங்க அனுமதி இல்லாமா அவங்கள தூக்குறது எவ்வளவு பெரிய தப்புத் தெரியுமா?” என திமிற,
“ஓஹ்…., அப்போ ஒருத்தங்க குடிக்கிற காபில காரத்தை அள்ளிப் போடுறது மட்டும் தப்பு இல்லையா மேடம்?” என அவன் கேட்க,
அப்போது தான் அவளுக்கு தான் நடந்து கொண்டவை அனைத்தும் நினைவுக்கு வந்தது.
“ஆத்தி, சிங்கத்திட்ட சிக்கிட்டமே, இப்போ என்ன செய்றது?” என எண்ணிக் கொண்டு, விழி விரித்து அவனைப் பார்க்க,
“என்ன செய்த தப்புக்கு தண்டனை கொடுத்திடலாமா?” என கேட்டபடி அவளை அள்ளி அணைத்துத் தூக்கி கொண்டு தனது அறைக்குள் நுழைந்தவன், அவளை கட்டிலில் போட்டு விட்டு,
அணிந்து இருந்த டீ ஷேர்ட் டை கழட்டி விட்டு அவளின் மேல் பாய்ந்தான்.
அபர்ணா, ஆதி வாழ்க்கை என்னவாகும்?
அபர்ணா ஆதியிடம் இருந்து தப்பிப்பாளா?
தமயந்த, தீரன் கோபத்திற்கான காரணத்தை கண்டு பிடிப்பாளா?
அடுத்த பதிவில் பார்க்கலாம்.
கதையைப் பற்றி இரண்டு வார்த்தைகளாவது சொல்லிட்டு போங்க மக்காஸ்.
அடுத்த எபி நாளைக்கு வரும்.
உங்க லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுங்க மக்காஸ் 🥰🥰🥰
இது பெரிய எபி தான் மக்காஸ் 💖💖