ரஞ்சி அக்கா. வீட்டுக்குள்ள தான் இருக்கும் வெளியே வராது. நம்ம கொஞ்ச துரம் தள்ளி போய் பட்டாசு வெடிக்கலாம் வா செம்பா.
“நான் வரலைன்னு சொல்றேன்ல அம்மா பார்த்தால் திட்டும்.”
“அதுலாம் அம்மா திட்டமாட்டாங்க வா செம்பா” என கோகி அவளை கெஞ்சிய படி நிற்க… கோகியை பார்த்தும் பாவமாக இருக்க வாறேன் என தலையை ஆட்டினாள் செம்பா.
இரண்டு அறுந்த வாலுகளும் பட்டாசுடன் அவர்கள் வீட்டை விட்டு கொஞ்சம் தள்ளி காலியாக இருந்த இடத்தில் பட்டாசு வைத்து வெடித்து கொண்டு இருந்தனர்.
அப்போது கோகி ரோட்டு பக்கம் பட்டாசை கொழுத்தி போட போக “ஏய் அங்கே போடாதே, யாராவது வந்தால் பிரச்சனையாகிடும்” என எச்சரித்தாள் செம்பா.
ஆனால் கோகி கேட்காமல் வெடியை போட அந்த வழியாக ஒரு பைக் வர எதிர்பாராது வெடி வெடிக்கும் சத்தத்தில் பைக்கில் வந்தவன் தடுமாறி கீழே விழுந்தான். அவன் கால் கையெல்லாம் சிராய்ப்பு ஆனது. பைக்கில் இருந்து ஒருவர் விழுந்துவிட்டார் என தெரிந்ததும் சிட்டாய் பறந்து விட்டாள் கோகி. செம்பாவும் அவளுடன் ஓடதான் நினைத்தாள். ஆனால் மனது கேட்காமல் அந்த இளைஞனின் முன்னால் சென்று நின்றாள். அவன் கை சிராய்ப்பில் வலியில் வாயால் ஊதிகொண்டிருந்தான்.
பக்கத்தில் நின்றவளை கண்டதும் அவள் திருட்டு முழியில் அவள்தான் வெடி வைத்திருக்கிறாள் என நினைத்து “நீதான் பட்டாசு வச்சியா” என கேட்க கோகியை மாட்டிவிட விரும்பாமல் “ஆமா நான்தான் தெரியாமல் வச்சிட்டேன் மன்னிசிடுங்க” என பாவமாக முகத்தை வைத்தபடி சொல்ல “தூக்கிவிடு” என அவன் கையை நீட்டினான். அவனை கஷ்டபட்டு செம்பா தூக்கிவிட, அவனுடைய பைக்கையும் தூக்கி நிறுத்தினான்.
“உன்னால் என் கை காலெல்லாம் பாரு. நல்லவேளை நான் இந்த பக்கம் வந்தேன். சின்ன அடியா போய்டுச்சி, வேற யாராவது வயசானவங்க வந்திருந்தால் அவங்க நிலமையை யோசிச்சி பார்த்தியா, நீ விவரம் தெரியாத சின்ன பிள்ளை இல்லை. எப்படியும் உனக்கு பதினைந்து வயசு இருக்கும்ல” என கேட்க “ஆமா” என்றாள்.
“இனிமே இப்படில்லாம் வைக்கக்கூடாது சரியா” என்க
“சரி” என்றாள். அவன் கிளம்ப போக “ஒருநிமிஷம்” என்றவள் பக்கத்தில் செடிகொடியாய் நிறைந்திருந்த இடத்தின் அருகே சென்று சில செடி இலைகளை பறித்து அதை கசக்கி அந்த சாற்றை காயத்தின் மீது தடவி விட்டாள். அவள் செய்வதை பார்த்தவன் “இதை யார் உனக்கு சொல்லி தந்தாங்க” என கேட்க…
எங்க அம்மா. அவங்கதான் நான் எங்கேயாவது கீழே விழுந்தாள் இந்த செடி இலையை பறிச்சி இப்படி பண்ணுவாங்க.
“ஓஹ் நைஸ்.”
“தேங்க்ஸ்” என இதழ்கள் விரிய சிரித்தாள்.
“சரி ரொம்ப நன்றி” என கிளம்பினான் சமரஜித்ரன்.
செம்பா கோகியை தேடி வீட்டிற்கு வந்தாள். எங்கே தேடியும் கிடைக்கவில்லை கோகி. கோபமாக வீட்டிற்குள் வர எங்கேடி போன என கையில் கம்புடன் நின்றாள் ரஞ்சி.
அக்கா நானும் கோகியும் விளையாட போனோம்.
கோகியா. அவ வீட்ல தானே இருந்தாள். நான் இப்போதானே பார்த்ததுட்டு வந்தேன்.
என்ன சொல்ற…? வீட்லயா நான் பார்த்தேன் இல்லையே.
வீட்ல தான் இருந்தாள். உன்னை சாப்பிட தேடினேன். நீ இல்லை. அதான் கோகி வீட்டுக் போனேன். அவ குளிச்சிட்டு இருந்தாள்.
குளிச்சிட்டு இருந்தாளா… என சந்தேகத்துடன் “அக்கா அவ என்கூட தான் விளையாட வந்தாள். என நடந்ததை சொன்னாள்” செம்பா.
“அப்படியா வா” என இருவரும் கோகியை தேடி அவள் வீட்டிற்குள் வந்தனர்.
அங்கிருந்த தொட்டியில் நீராடி கொண்டிருந்தாள் கோகி.
செம்பா அவளை தேடி வீட்டிற்குள் வர முதலில் உள்ளே போனாள் ரஞ்சி.
“அக்கா இன்னும் செம்பா வரலையா. அவ யார்கூட விளையாட போனான்னு தெரியலையே” என யோசனையாக முகத்தை வைக்க “உனக்கு தெரியாதுல்ல” என முன்னே வந்தாள் செம்பா. அவளை பார்த்ததும் திருதிருவென முழிக்க “நானாடி உன்னை விளையாட கூப்பிட்டேன். நீதானே என்னை கூப்பிட” என்றதும் மாட்டிகிட்டோம் என்ற பயத்தில் நின்றாள்.
‘செம்பா சொல்றது உண்மையா கோகி” என ரஞ்சி கேட்க.
அக்கா அது நான்…
“பொய் சொன்ன தோளை உறிச்சிடுவேன் உண்மையை சொல்லு. என்றதும் ஆமாக்கா நான்தான் கூப்பிட்டு போனேன்” என உண்மையை சொல்ல,
அப்புறம் ஏன் பொய் சொன்ன..?
“அந்த பையன் கீழே விழுந்தூட்டாங்க அது தெரிந்தால் நீங்க திட்டுவிங்க அதான் பயந்து பொய் சொன்னேன்.”
“இனிமை இப்படி பொய்சொல்லாதே. அப்புறம் எப்படி செம்பா உன்கூட விளையாட வரூவாள்.”
“சாரி” செம்பா.
“போடி இனிமே விளையாடவான்னு கூப்பிடுவல்ல அப்போ இருக்கு உனக்கு” என வெளியே வந்துவிட்டாள. அவர்கள் சண்டை ஐந்து நிமிடம் தான். அடுத்த நொடியே இரண்டும் ஒட்டிதிரிந்த இரட்டையர்கள் போல ஒன்றாகத்தான் திரிவார்கள்.
அந்த நாளுக்கு பின் சமரை சில நாட்கள் கழித்து பார்த்தாள்.
கோகி, செம்பா இருவரும் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருக்க, அவர்கள் முன் வந்தான் சமர். ஆனால் அவனை செம்பா கவனிக்கவில்லை.
ஏனோ அவளை பார்த்ததும் கூப்பிட்டு பேச வேண்டும் போல தோன்றியது சமருக்கு. அவள் பெயரும் தெரியாது அல்லவா… சட்டென “ஓய் பட்டாசு” என அழைத்தான்.
திரும்பி பார்த்தவள் அங்கே நின்றிருந்த சமரை கண்டதும் முகத்தை திருப்பி கொண்டாள்.
“ஏய் அந்த அண்ணா யாரை கூப்பிடுறாங்க” என்றதும்
“தெரியலை உன் பேரா பட்டாசு”
“இல்லையே”
“இல்லல அப்போ வா” என அவள் கையை பிடித்தபடி வேகமாக பள்ளிக்குள் நுழைந்தாள்.
அவள் தன்னை கண்டு பயந்து செல்வதை கவனித்த சமர் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
தினமும் பள்ளிக்கு போகும்போதும் வரும்போதும் சமர் நிற்கிறானா? என அவளை அறியாமலே தேடி பார்த்தாள் செம்பா. ஆனால் அவள் கண்களுக்கு தென்பட மாட்டான் சமர். மறைந்திருந்து பார்த்துவிட்டு செல்வான்.
ராசாத்தி பாலாவின் தோட்ட வீட்டில்தான் வேலை செய்தார். ராசாத்தியின் கணவர் குடும்பம் காலம்காலமாக அவர்கள் வீட்டில்தான் வேலை செய்தனர். நல்லசிவம் சந்திராவை திருமணம் செய்தபின் ராசாத்தி அந்த வீட்டிற்கு வேலைக்கு செல்லாமல் இருக்க, பாலாவின் அப்பத்தா “நீங்க எப்பவும் போல இங்கேயே வேலை செய்யலாம், அவங்க கல்யாணம் பண்ணியதுக்கு நீங்க என்ன பண்ணுவிங்க, தாராளமா நீ இங்கேயே வேலை செய்யலாம். உன்னை யாராவது ஏதுவாது சொன்னால் என்கிட்ட சொல்லு” என்றதில் இருந்து ராசாத்தி அங்கேதான் வேலை செய்கிறார்.
அன்று அவர் தோட்டத்து வீட்டின் பக்கம் இருந்த வயலில் வேலை செய்ய… கோகியுடன் செம்பாவும் அவள் அத்தைக்கு தெரியாமல் அங்கே விளையாடி கொண்டிருந்தாள். பாலாவின் அன்னை கண்களில் படாமல் விளையாடிவிட்டு செல்வார்கள். இருவரும் கண்ணாமூச்சி விளையாட செம்பா அந்த தோட்ட வீட்டிற்குள் நுழைந்தாள். கோகியும் அந்த வீட்டிற்குள் வர அவள் வருவதை கண்ட செம்பா அங்கே ஒரு அறை திறந்திருக்க அந்த அறைக்குள் நுழைந்தாள். உள்ளே வந்தவள் கட்டிலின் கீழ் கோகி கண்டுபிடிக்காத மாதிரி ஒளிந்து கொள்ள, அவள் ஒளிந்த சில நிமிடங்களிலேயே அந்த அறையின் கதவு பூட்டப்பட்டது.
யார் கதவை பூட்டுறாங்க, என மெதுவாக வெளியே எட்டி பார்க்க அங்கே நிற்பவரின் பின் பக்கம் மட்டுமே தெரிந்தது. யாரோ ஒரு ஆண் கதவை பூட்டுவது தெரிய “ஐயோ கதவை பூட்டாதிங்க நான் உள்ளே இருக்கேன்” என கத்தியபடி எழுந்து வெளியே வர ஒரு பெண்ணிண் குரல் அவன் அறையில் கேட்டதும் அவனும் சட்டென திரும்பினான்.
“இவரா?” என செம்பா அதிர்ந்து முழிக்க…
“ஓய் பட்டாசு நீ இங்கே என்ன பண்ணுற” என்றான் சமர்.
“அது நாங்க ஓடி பிடிச்சி விளையாடினோம். நான் இங்கே வந்து ஒழிந்தேன். நீங்க எங்க மாமா வீட்ல என்ன பண்றிங்க.”
“மாமா வீடா?”
“ஆமா இது எங்க பாலா மாமா வீடு. நீங்க ஏன் இங்கே இருக்கிங்க.?”
“பாலா உனக்கு மாமா வா?”
“ஆமா என் மாமா பையன். எனக்கு எங்க பாலா மாமாவை ரொம்ப பிடிக்கும். ஆனால் அவங்க அம்மாவை பிடிக்காது. அவங்களுக்கு என்னை கண்டால் சுத்தமா பிடிக்காது. அவங்களுக்கு தெரியாமல் இங்கே வந்து விளையாடிட்டு போய்டுவேன்.”
“நீ சொல்றது சுத்தமா புரியலை”
“இப்படி உட்காருங்க சொல்றேன்” என கட்டிலை காட்ட சமரும் அமர்ந்தான்.
“பாலா மாமா அப்பா எங்க அம்மாவோட சொந்த அண்ணண். எங்க அம்மாவை பாலா அம்மாவோட தம்பிக்கு கல்யாணம் பண்ணிகொடுக்குறதா இருந்தது. ஆனால், அம்மா எங்க அப்பாவை விரும்பியதால் வீட்டை விட்டு ஓடி கல்யாணம் பண்ணிட்டாங்க. அதனால் எங்க அத்தைக்கு எங்க யாரையும் பார்த்தாலே பிடிக்காது. அவங்களை அசிங்க படுத்திட்டு அவங்ககிட்ட வேலை செய்ற குடும்பத்தை சேர்ந்த, எங்க அப்பாவை கல்யாணம் செய்ததால் எங்களையும் சேர்த்து தப்பு தப்பா பேசுவாங்க. அதனால் அவங்க இல்லாத நேரத்துல இங்கே எங்க அத்தை, எங்க அப்பாவோட தங்கச்சி வேலை செய்றாங்க. அவங்க பொண்ணுகூட சேர்ந்து விளையாட வருவேன். இப்போ நாங்க கண்ணாமூச்சி விளையாடுறோம். தெரியாமல் உங்க ரூம்க்கு வந்து மாட்டிட்டேன்” என சோகமாக கண்ணத்தில் கையை வைத்தாள்.
“ஓஹ் ஓகே.”
*சரி நான் கிளம்புறேன்” என்றவள் அவனை பார்த்து உங்க பெயர் என்ன?” என்றாள்.
“ சமரஜித்ரன்”
அவள் வாய்க்குள் சொல்லியபடி இருக்க..
“என்ன சொல்ற?”
“அதுவா உங்க பெயரைதான் சொல்லி பார்த்தேன். ரொம்ப நீளமா இருக்குல்ல அதான் சின்னதா பெயர் யோசித்தேன்.”
“யோசிச்சிட்டியா?”
“ம்ம்ம் ‘ஜித்து’ நல்லா இருக்குல்ல”
“சூப்பரா இருக்கு”. யாரும் அவனை அப்படி அழைத்தது இல்லை எல்லா இடத்திலும் அவன் பெயர் “சமர்” தான். செம்பாவின் வித்யாசமான அழைப்பு அவனுக்கு பிடித்திருந்தது.
“நீங்க ஏன் இங்கே வந்திங்கன்னு சொல்லலையே”
“நானும் பாலாவும் ஒன்றாக மெடிக்கல் காலேஜ்ல படிக்கிறோம். முதல் வருஷம் முடிந்து இரண்டாவது வருஷம் போகனும் லீவுக்கு வந்திருக்கேன்”.
“ஓஹ் நீங்க டாக்டர்க்கு படிக்கிறிங்களா”
“ஆமா”
“சூப்பர்.”
“ நீ என்ன படிக்கிற?”
“நான் பத்து முடிச்சிட்டு பதினொன்று போகனும்.”
“ம்ம்ம் நல்லா படி.”
“சரி நான் கிளம்புறேன்”.
“ இரு.. என் பெயர் கேட்ட, உன் பெயர் சொல்லலையே?”
நான் செம்பா “செம்பருத்தி”.
நல்ல அழகான பெயர்.
“நன்றி. கோகி என்னை தேடிட்டு இருப்பாள்” என கிளம்ப போக கதவை திறந்து உள்ளே வந்தான் பாலா. அங்கே சமருடன் நின்றிருந்த செம்பாவை கண்டு அதிர்ந்தான்.
“ஹேய் பாப்பா நீ இங்கே என்ன பண்ற?”
“டேய் நீ ரொம்ப ஷாக் ஆகாதே. அந்த பொண்ணு கண்ணாமூச்சி விளையாடுது. ஒளியிறதுக்கு இடம் தேடி இங்கே வந்து ஒளிந்திருக்காள்.”
“அப்படியா பாப்பா”
“ஆமா மாமா” என்றாள் செம்பா
“சரி பாப்பா. கோகி உன்னை கீழே தேடிட்டு இருக்காள். என்கிட்டயும் கேட்டால் உன்னை பார்த்திங்களான்னு, நான் இல்லன்னு சொல்லிட்டு இங்கே வந்தேன். நீ என்னனா இங்கே
ஒளிஞ்சிருக்க, இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மா வந்துடுவாங்க. நீ கிளம்பு செம்பா” என்றதும்
“சரி மாமா” என துள்ளி குதித்து ஓடினாள் செம்பருத்தி.
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 5 / 5. Vote count: 4
No votes so far! Be the first to rate this post.
Post Views:562
1 thought on “இதயமே இளகுமா அத்தியாயம் 14”
DEEPA V
Very nice sister 👌👌👌..
பட்ட பெயர்கள் பட்டாசு,,, ஜித்து செம்ம 😄😄😄
Very nice sister 👌👌👌..
பட்ட பெயர்கள் பட்டாசு,,, ஜித்து செம்ம 😄😄😄