மருவத்தூர் ஓம் சக்தி மகமாயி கருமாரி…
உறையூரு வெக்காளி உஜ்ஜயினி மாகாளி…
கொல்லூரு மூகாம்பா கேதாரம் ஸ்ரீகௌரி…
மாயவரம் அபயாம்பிகா… பின்புறத்தில் சித்ராவின் குரலில் பாடல் ஒலித்துகொண்டிருக்க பாலா அவன் நண்பர்களுடன் கோவில் அருகில் நின்றிருந்தான்.
“பாலா சமர் உண்மையாவே வருவானா.? இல்லையா..?” என தினேஷ் கேட்க…
“வருவான்டா… பக்கத்துல வந்துட்டு இருக்குறதாதான் சொன்னான்.”
“போன் பண்ணி பாருடா. மணியை பாரு எட்டு மணி ஆகிடுச்சி. காலையிலே கிளம்பிட்டான்னு சொன்னான். இன்னும் வராமல் இருக்கான்” என்றான் கோகுல்.
பாலா சமருக்கு அழைப்பு கொடுத்தான். இறுதி அழைப்பில் அழைப்பை ஏற்றான் சமர்.
“ஹலோ சமர். எங்கடா இருக்க? இவ்வளவு நேரம் என்னடா பண்ணுற…?”
“ வந்துடுறேன்டா…”
“பாதை மாறி போய்ட்டியாடா, ஊருக்கு வர்ற பாதை தெரியலையா, நான் வேணும்னா வரவாடா?”
“அதெல்லாம் வேணாம். நான் வீட்டுக்கு பக்கத்துல வந்துட்டேன். இன்னும் பத்து நிமிஷத்துல கோவில்ல இருப்பேன்.”
“சரி சீக்கிரம்” வா என பாலா அழைப்பை துண்டித்தான்.
அதே சமயம், சமர் பாலாவின் தோட்டத்து வீட்டின் முன் காரை நிறுத்தி இறங்கி உள்ளே செல்ல, வாசலில் அமர்ந்து அப்பத்தா வெத்தலையை இடித்து கொண்டிருந்தார்.
“அப்பாத்தா” எப்படி இருக்கிங்க?
“ யாருய்யா அது…?”
“அப்பத்தா நான்தான் சமர். என்னை மறந்துட்டிங்களா?”
“அடடே சமரு தம்பி. எப்படி இருக்க ராசா. இத்தனை வருஷம் கழிச்சுதான் இந்த அப்பத்தாவை பார்க்கனும்னு தோணுச்சா?. அடிக்கடி வாறேன் அப்பத்தான்னு சொல்லிட்டு போனவன் பத்து வருஷம் கழிச்சி வர்றியே தங்கம்.”
“சமர் சிரித்தபடியே… படிக்கனும்ல அப்பத்தா. அதான் வரமுடியலை, நீங்க கோவிலுக்கு போகலையா? “
“என்னால் ரொம்ப நேரம் இருக்க முடியாது தங்கம். அதான் நான் போகலை. பாலா போகும்போதே சொல்லிட்டு போனான். நீ வருவன்னு, அதான் தூங்காமல் வெத்தலையை இடிச்சிட்டு இருக்கேன். சீக்கிரம் குளிச்சிட்டு கோவிலுக்கு போய்யா. அவங்க எல்லாரும் உனக்காக காத்திருப்பாங்க..”
“சரி அப்பத்தா” என அவன் இதற்கு முன் தங்கிருந்த அறைக்கு வந்தான். பழைய நியாபகங்கள் எல்லாம் கண்களுக்குள் நிழற்படமாய் விரிய , இதயம் படபடவென துடித்தது. பெருமூச்சொன்று இழுத்துவிட்டவன் தயாராகி வெளியே வந்தான்.”
அப்பத்தா இன்னும் தூங்க போகாமல் அமர்ந்து இருந்தார்.
“அப்பத்தா வாறிங்களா, நம்ம கார்ல போய்ட்டு வந்துடலாம்”
“வேணாம் ராசா. இனிமே சாமி கும்பிட்டு எந்த கோட்டைய பிடிக்க போறேன். நான் வாழ்ந்து முடிச்சவ, நீங்கதான் வாழப்போறவங்க, போய் நல்லபடியா சாமிகும்பிட்டு வாங்க”
“சரி அப்பத்தா, என அங்கிருந்து கிளம்பி கோவிலுக்கு வந்தவன் காரை பார்க் செய்துவிட்டு கோவிலுக்குள் வர அங்கே நண்பர்கள் யாரையும் காணவில்லை. போனில் பாலாவிற்கு அழைத்தபடியே, எங்கேயாவது நிற்கிறார்களா? என கண்களை சுழலலவிட்டபடி நடந்து வந்தவன், எதிரில் வந்தவளை கவனிக்காமல் இடித்துவிட்டான்.
“ஹேய்… ஐ யம் சாரிங்க” என்றவன் அப்போதுதான் பெண்ணவளின் முகம் பார்த்தான். கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. ஆனால், அவளோ அப்படியே நின்றாள். முகம் எந்த வித உணர்வுகளையும் காட்டவில்லை. யாரென தெரியாததுபோல நின்றாள்.”
“ஹேய் நீ… ப… என சமர் பேசவருவதற்குள் “அறிவில்லை, இப்படிதான் வந்து பொண்ணுங்களை இடிப்பிங்களா, இதுக்குன்னுதான் கோவிலுக்கு வருவிங்களா, ஒழுங்கா முன்னாடி பார்த்து போங்க, கண்ணை பொடனியில வச்சிட்டு சுத்தவேண்டியது” என பட்டாசாய் பொரிந்துவிட்டு விறுவிறுவென அந்த இடத்தை காலிசெய்தாள்.
இவனோ அவள் பேசியதை எங்கே கவனித்தான், இத்தனை வருடம் கழித்து தன்னவள் முகம் பார்க்க அத்தனை ஆனந்தம் உள்ளுக்குள். ஆனால், அதைவிட அதிகமாய் வலித்தது. தன்னை யாரேன தெரியவில்லை என்பது போல திட்டி செல்கிறாளே! என்று.
“சமர்” என அவன் தோழர்கள் ஐவரும் அழைக்க, திரும்பினான்..
ஆத்வியோ சமரை பார்த்ததும் ஓடி வந்து அணைத்தாள். அவளை உடனே தள்ளி நிறுத்தினான். மற்றவர்கள் கவனித்தாலும் கண்டுகொள்ளவில்லை. சமருக்கு ஆத்வி மீது எந்த விருப்பமும் இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
“இங்கே என்னடா பண்ற? போன் அட்டென் பட்டதற்கு அப்புறமும் பேசாமல் அப்படியே நிற்கிற?” என பாலா கேட்க…
மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்…
சமர் காதலிக்கும் பெண் செம்பா தானா….
நிச்சியம் செம்பாவின் இந்த மன நிலைக்கு காரணம் பாலா அம்மாவின் நடவடிக்கை தான் காரணமாக இருக்கும்…