திருவிழா முடிந்தது. பாலா மெடிக்கல் கேம்ப் விஷயமாக வெளியே கிளம்பிவிட, சமருக்கு கையில் காயம் இருப்பதால் வெளியே செல்லவில்லை. ஆத்வி, வித்யா, கோகுல், தினேஷ் நால்வருக்கும் வீட்டிற்குள்ளேயே இருக்க சோம்பலாக இருக்க தோட்டத்து பக்கம் வந்தனர்.
“ஆத்வி அங்கே பாறேன் எவ்வளவு அழகா இருக்கு” என வித்யா சொல்ல…
“அழகுலதான் ஆபத்து இருக்கும் நம்ம ஆத்வி மாதிரி” என்றான் கோகுல்.
ஆத்வி கோகுலை பல்லை கடித்தபடி முறைக்க,
கோகுலோ “என்ன உன் கண்ணுல அனல் தெரிக்கிது. கொஞ்சுன்டு தண்ணீர் குடி ஆத்வி, சூடு குறைந்துவிடும்” என்க…
“ நீ ஏன்டா அவளையே வெறுப்பேற்றுற”…
“நிஜத்தை சொன்னேன்.”
“நீ ஒரு வெங்காயமும் சொல்ல வேணாம்.”
“சரி நாங்க அந்த பக்கமா போறோம். நீங்க ரெண்டு பேரும் தொலைந்துவிடாதிங்க” என தினேஷ் கோகுல் இருவரும் வேறு பக்கம் செல்ல…. வித்யா, ஆத்வி இருவரும் கிணற்று பக்கம் வந்தனர்.
“ஆத்வி”
“சொல்லு வித்யா”
“சமர் கையில் அடிபட்டு இருக்கு, அவனுக்கு உதவிக்கு இருப்பன்னு நினைத்தேன். ஆனால் எங்க கூட வெளியே வர்றேன்னு வந்துட்ட? என்ன காரணம்”
“நான் என்னடி பண்றது… சமருக்கு உதவி பண்ணலாம்னு நினைத்தால் பாலா எல்லாத்தையும் பாத்துக்கறான். சமரும் என்கிட்ட எதுவும் கேட்குறது இல்லை. வீட்ல இருந்தால் பைத்தியம் பிடிக்குது. எவ்வளவு நேரம்தான் போனையே பாக்குறது. அதான் உங்க கூட வெளியே வரலாம்னு வந்துட்டேன்”.
“திருவிழா நேற்றோடு முடிந்தது. இன்னைக்கு நம்ம மெடிக்கல் கேம்ப்க்கு தேவையான உபகரணங்கள் எல்லாம் வந்துடும் சொன்னாங்க… இன்னும் வரலையே ஆத்வி.”
“ஈவ்னிங் ஆகிடும்னு சொன்னாங்க வித்யா. நேத்ரன் அங்கிள் எல்லாமே ரெடி பண்ணி அனுப்பிட்டு கால் பண்றதா சொன்னார். நான் வரவும் தான் சமருக்கு போன் வந்தது. இன்னைக்கு ஈவ்னிங் இங்கே வந்துடும். நாளைக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல தான் கேம்ப் நடத்துறதா பாலா சொன்னான். கடைசிநாள் அவங்க ஊர்ல கேம்ப் வைத்தால் போதும்னு சொல்லிட்டான்.”
“ம்ம்ம்… இன்னும் கொஞ்ச நாள்தான் அதுக்கப்புறம் நம்ம ஊரை தேடி அந்த இரைச்சல்ல வாழனும். இந்த அழகான அமைதியான வாழ்க்கையை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.”
ஆத்வி எதுவும் பேசவில்லை. அந்த இடத்தை சுற்றி கண்களை சுழல விட்டாள். அவள் விழிகள் தேடியவனை கண்டதும் இதழில் சிறு புன்னகை தவழ்ந்தது.
“வா ஆத்வி, நம்ம அந்த கரும்பு தோட்டத்து பக்கம் போகலாம்.”
“போகலாமே” என்றவள் வித்யா முன்னே செல்ல பின்னே நின்றபடி கிணற்றை எட்டி பார்த்தாள். அங்கே நின்றவனையும் ஒரு பார்வை பார்த்தவள் சட்டென கிணற்றுக்குள் குதித்தாள்.
சத்தம் கேட்டு திரும்பிய வித்யா ஆத்வி கிணற்றில் விழுது தத்தளிப்பதை கண்டவள் “ஹேய் ஆத்வி” என சத்தமிட ஆத்வியோ மூச்சிற்கு திணறினாள்.
வித்யாவோ “காப்பாத்துங்க காப்பாத்துங்க!” பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என சத்தம் போட்டபடியே ஓடி வர குகன் வித்யாவின் குரல் கேட்டு அங்கே ஓடி வந்தான்.
“என்னம்மா… என்னாச்சி” என பதட்டத்துடன் கேட்க..
“அண்ணா என் ஃப்ரெண்ட் கிணற்றுல தவறி விழந்துட்டாள். எங்களுக்கு நீச்சல் தெரியாது. ப்ளிஸ் அவளை காப்பாற்றுங்க” என்றதும் ஓடி கிணற்று பக்கம் வந்தவன், ஆத்வி தண்ணிரில் மூச்சிவிட திணறுவதை பார்த்த நொடி உள்ளே குதித்தான்.
அதற்குள் தினேஷ், கோகுல் இருவரும் வித்யா சத்தம் கேட்டு வந்துவிட்டனர்.
குகன் ஆத்வியை மெதுவாக தூக்கியபடி வெளியே கொண்டு வந்தான். மயங்கி இருந்தாள் ஆத்வி.
“வித்யாவிடம் அந்த பொண்ணு வயித்துல கையை வைத்து நல்லா அழுத்தும்மா” என்றான்.
அவள் அழுத்தியதில் தண்ணிர் எதுவும் வெளியே வரவில்லை.
அவளை நகர சொல்லிவிட்டு குகனே அவள் வயிற்றில் கை வைத்து அழுத்த வாயில் இருந்து தண்ணிர் வெளியே வந்தது. சில நிமிடங்களில் இருமியபடி மெதுவாக கண்களை திறக்க அவள் முன் குகன் நின்றிருந்தான். அவனை தவிர அவள் பார்வை எங்கும் விலகவில்லை.
வித்யாவிடம் வீட்டுக்கு கூப்பிட்டு போய் துணியை மாற்ற சொல்லு ஜூரம் வந்துட போகுது. என்றவன் விறுவிறுவென கிளம்பினான்.
போகும் அவனையே பார்த்தவளுக்கு அவன் தீண்டிய இடமெல்லாம் தித்திப்பை கூட்டியது. அவனின் எண்ணம் முழுவதும் அவளை காப்பாற்ற வேண்டும் என்பதில் இருந்ததே தவிர வேறு எந்த எண்ணமும் இல்லை. ஆனால் அவள் மனதில்?
“ஆத்வி உனக்கு அறிவில்லை. நீச்சல் தெரியாமல் ஏன் தண்ணியில் குதிச்ச பைத்தியம். உனக்கு ஏதாவது ஆகியிருந்தால் உங்க வீட்ல நாங்க என்னத்தை சொல்றது. வாய் மட்டும் வண்டலூர் வரைக்கும் போகுது ஒழுங்கா பார்த்து நடக்க தெரியாதா என கோகுல் கோபத்தில் திட்ட…”
“கால் இடறிடுச்சிடா. யாராவது வேணும்னு குதிப்பாங்களா… என பாவமாக முகத்தை வைத்தாள்”
அவளின் முகமே அவர்களுக்கு சந்தேகத்தை கொடுத்தது. என்ன செய்தாலும் திமிராக பதில் சொல்பவள். இன்று இப்படி பாவமாக முகத்தை வைத்திருப்பது அவள் சொல்வது உண்மை என நம்ம தோன்றவில்லை.
“என்னம்மோ அந்த அண்ணா இருந்தாங்க உன்னை காப்பாற்ற முடிந்தது. இல்லன்னா உன் கதி என்ன? எங்களுக்கும் நீச்சல் தெரியாது. இனிமே இந்த பக்கம் வரவே வேண்டாம் வாங்க போகலாம் என நால்வரும் அங்கிருந்து கிளம்பினர்.
குகன் நிற்பதை பார்த்தவள் வித்யாவை அழைத்தாள்
என்ன என கேட்க…
“அவர் என்னை காப்பாற்றினார். பதிலுக்கு நான் ஒரு நன்றி கூட சொல்லல… போய் சொல்லிட்டு வரவா.”
“சரி வா”
“இல்லை நா..நான் மட்டும் போய் சொல்லிட்டு வர்றேன்.”
“ஏன் நான் வந்தால் என்ன?”
“நன்றி தானே சொல்லனும். அதுக்கு ஏன் இரண்டு பேர். நான் போய் சொல்லிட்டு வர்றேன். நீ வெயிட் பண்றதா இருந்தால் இங்கே நில்லு. இல்லை அவங்க கூட போ” என்க…
“நாங்க மூனு பேரும் இங்கேயே நிற்கிறோம். நீ போய் சொல்லிட்டு வா” என்றான் தினேஷ்.
ஆத்வி குகன் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.
அவன் யாரையும் கவனிக்கவில்லை. மண்வெட்டியை வைத்து செடி நட பாத்தி போட்டு கொண்டிருந்தான்.
தன் பக்கத்தில் யாரே நிற்பது போல் உணர்ந்தவன் திரும்ப ஆத்விதான் அவனை பார்த்தபடி நின்றாள்.
“என்ன வேணும்.?”
“உ..உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்”.
“என்ன?”
“ரொ.ரொம்ப நன்றி. என்னை காப்பாற்றியதூக்கு”
“அதுக்கு ஏன் நன்றி. இனிமே எங்கே போனாலும் பார்த்து கவனமா இருங்க.”
“சரி” என தலையசைக்க அவன் பேசியதும் தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.
ஆத்வியே வியர்வை முத்து முத்தாய் பூத்திருந்த ஆணவனின் தேகத்தை கண்டாள். அந்த வியர்வையை எல்லாம் ஒன்றாய் கோர்த்து மணி செய்யலாமா என மூளை கிறுக்கதனமாய் யோசித்தது. அவனை பார்வையால் வருடியவள் வித்யாவின் குரல் கேட்க, அங்கிருந்து கிளம்ப, அவள் போனதும் திரும்பியவன் பார்வை தீர்க்கமாக அவள் மீது படித்தது. ஒரு பெண்ணின் பார்வை எந்த நேரத்தில் எப்படி இருக்கும் என்பதை ஓரளவுக்கு அறிந்தவன் தான். அவளின் பார்வை வித்யாசம் தெரியத்தான் திரும்பினான் குகன்.
செம்பா மருத்துவமனைலக்குள் வர அங்கே அமர்ந்திருந்தான் சமர். அவனை பார்த்து லேசாக அதிர்ந்தாலும் “கையில் உள்ள காயத்திற்கு மருந்து வைக்க வந்திருப்பார்” என நினைத்தபடி அந்த அறைக்குள் நுழைந்தாள். வெளியே நிறைய பேர் இருக்க ஒவ்வொருவருக்கும் மருந்து வைக்க அடுத்து வந்தான் சமர்.
அவன் காயங்களை துடைத்து மருந்து வைக்கும் வரை பார்வையை அவள் முகத்தை விட்டு அசைக்கவில்லை.
கட்டு போட்டதும் “கிளம்புங்க அடுத்த பேஷன்ட் வரனும்” என்றாள்.
அவனும் எதுவும்பேசாமல் எழ போக அப்போதுதான் அவனிடம் தனியா பேசவேண்டும் என நினைத்தது நியாபகத்தில் வந்தது.
அவன் கதவின் அருகே செல்லவும் “ஒரு நிமிஷம் இங்கே வாங்க, உங்ககிட்ட பேசணும்” என்றாள்.
அவனும் வந்தான் என்ன என பார்வையால் கேட்க…
நீங்க சீக்கிரம் இந்த ஊரைவிட்டு கிளம்ப பாரூங்கள்.
“ஏன்? நான் ஏன் கிளம்பனும்” என்றான் கூர்மையாய் அவளை பார்த்தபடி
“என்னால் தான் உங்களுக்கு இந்த காயம். அது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் எனக்கு தெரியும். என்னால் எதுக்கு சம்பந்தமே இல்லாமல் நீங்க காயப்படனும். நமக்குள்ள தவறான உறவு இரூக்குறதா நினைச்சிட்டு உங்களை காயப்படுத்த காத்திருக்காங்க அதனால் தயவுசெய்து இங்கே இருந்து கிளம்புங்க” என்றாள்…
“முடியாது நான் இங்கேதான் இருப்பேன்.”
“சொன்னால் கேளுங்க, ஏன் விதாண்டாவாதம் பண்றிங்க”
“எனக்கு என்ன ஆனால் உங்களுக்கு என்ன மேடம்.? நான் உங்களுக்கு யாரு? உங்க வேலையை மட்டும் பாருங்கள். எங்களை பற்றி நீங்கள் கவலைபட வேண்டாம்.”
“ஏன் இப்படி பேசுறிங்க?” என்றவளின் குரல் தழுதழுத்தது.
“நான் சரியாத்தான் பேசுறேன். நான் மெடிக்கல் கேம்ப்க்காக உங்க ஊருக்கு வந்திருக்கோம். அதை முடிச்சிட்டுதான் கிளம்புவோம். அதுக்கு முன்னாடி நான் இந்த ஊரை காலி பண்றதா இல்லை. எங்களை பாதுகாக்க எங்களுக்கு தெரியும். உங்க மேல கோபம் இருந்தால் அதை ஏன் எங்ககிட்ட காட்டனும். அப்படி என்னை காயபடுத்தனும்னு நினைச்சால் அவனோட சாம்பல் தான் மிஞ்சும். என்றவன் வெளியேறினான்.
தன்னை யாரென கேட்டதிலேயே உடைந்து போய்விட்டால் செம்பா. அவன் வெளியே சென்று நேரம் கடந்தும் எந்த பேஷன்டையும் செம்பா உள்ளே அழைக்காமல் இருப்பதை கவனித்த கோகி அந்த அறைக்குள் வந்தாள். அழுதபடியே நின்றிரூந்த செம்பாவை கண்டவள் எதுவும் சொல்லாமல் அவளின் கையை பிடித்து வேறு இடத்தில் அமரவைத்து மற்றவர்களை பார்த்து அனுப்பிவிட்டு செம்பாவிடம் வந்தாள்.
அவளை அழைத்தும் சத்தம் கொடுக்காமல் போக “செம்பா” என அவளின் தோளை உலுக்கினாள். அப்போதுகூட அமைதியாய் நிமிர்ந்து கோகியை பார்த்தாலே தவிர எதுவும் பேசவில்லை.
“வேலையை பாரு. இப்படி இருந்தால் எப்படி” என்றதும் சரியென தலையை அசைத்தாள் செம்பா.
அவர்களுக்கான வேலை நேரம் முடிந்ததும் இருவரும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தனர்.
செம்பா ஸ்கூட்டியை எடுக்க போக “கொஞ்சம் நில்லு செம்பா உன்கிட்ட நான் பேசனும்.” என்றாள் கோகி.
என்ன?
“வா அப்படி போய் பேசலாம்” என மரத்தின் அடியில் இருந்த கல்பெஞ்சில் அமர்ந்தனர் இருவரும்.
செம்பா அமைதியாக இருக்க…
“உனக்கு என்ன ஆச்சி செம்பா. அந்த அண்ணாவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம். அவங்களை பார்த்தாலே நீ ஒருமாதிரி ஆகுற அவங்க யாரு? இவ்வளவுநாள் நீ என்கிட்ட அதை பற்றி பேசலை. நானும் கேட்கலை. இப்போ எனக்கு அவங்க யாருன்னு தெரிந்து ஆகனும். சொல்ல போறியா இல்லை வீட்ல அத்தை கிட்ட சொல்லவா” என்றதும்
“என் ஜித்து” என்றாள்.
“என்” என்ற வார்த்தையில் நன்றாக புரிந்தது அவள் மனதில் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பது.
“உன் ஜித்துன்
னா?” எனக்கு புரியலை… தெளிவா சொல்லு…
அவள் இதழ்கள் வலியோடு புன்னகைத்தன. அவள் விழிகளுக்குள் அரும்பு மீசை முளைக்கும் பருவத்தில் இருந்த சமரின் முகம் வந்தது.
Very very nice 👌👌👌👌