இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 21

4.9
(11)

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ, காதல் காதல் பிறந்ததோ

கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ

மாலை வானம் வேலை காட்டுதோ

என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ

                என பாடலை வாய்க்குள் முனுமுனுத்தபடி புடவையில் அழகோவியமாக தயாராகி கொண்டிருந்தாள் ஆத்வி.

அவளை கவனித்தபடியே தயாராகினாள் வித்யா. சில நாட்களாக ஆத்வியின் நடவடிக்கையை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். முன்பை போல் எதற்கெடுத்தாலும் கோபப்டுவதில்லை. வாக்குவாதம் செய்வதில்லை. சிறு புன்னகையுடன் கடந்து செல்வாள், இல்லையென்றால் அதை கவனிக்காமல் இருந்துவிடுவாள். எதற்காக இந்த மாற்றம் என்றுதான் தெரியவில்லை.

“ஆத்வி” என வித்யா அழைக்க…

“சொல்லு வித்யா” என்றாள்.

“உங்கிட்ட திடிர்னு நல்ல மாற்றம் தெரியிதே என்ன விஷயம்?”

“என்ன? மாற்றம் எப்போவும் போலத்தானே இருக்கேன்.”

“அப்படியா எப்பவும் போல இருக்கியா? நல்லா பேசுற. சின்ன வயசுல இருந்து உன்னை பாக்குறேன். எனக்கு உன்னை பற்றி தெரியாதா என்ன?”

வித்யாவை பார்த்து சிரித்தவள் “நீ கேம்ப்க்கு கிள்மபலையா?” என்க

“கிளம்பிட்டேன். நான்  கேக்குற கேள்விக்கு மட்டும் உன்கிட்ட இருந்து பதில் வராதே. அப்புறம், இன்னைக்குதான் லாஸ்ட் மெடிக்கல் கேம்ப். இரண்டு, மூன்று  நாள்ல நம்ம இங்கே இருந்து கிளம்புறோம்” என்றதும் ஒருவித தவிப்பு ஆத்வியின் முகத்தில் தெரிந்தது.

‘எதையோ மறைக்கிறாள்’ என்பதை உறுதி செய்தாள் வித்யா. ஆனால், அவளிடம் அதற்குமேல் அதை பற்றி பேசவில்லை. “வா போகலாம் எல்லாரும் வெளியே வெயிட் பண்றாங்க.”

“நீ..நீ போ நான் கொஞ்சம் கழித்து வாறேன்.”

“எல்லாரும் கார்லதானே போறோம். நீ நேரம் கழிச்சி வறேன்னு சொன்னாள் எப்படி.”

“இன்னைக்கு ஊருக்குள்ள தானே கேம்ப் நான் வந்துடுறேன்.”

“என்னமோ ஆகிடுச்சி உனக்கு, சீக்கிரம் வா” என்றவள் வெளியே வந்தாள்.

“ஆத்வி எங்கே?” என பாலா கேட்க…

“அவ கொஞ்சநேரம் கழித்து வராளாம் பாலா.”

பாலா சமரை பார்க்க “போலாம்” என தலையைசைத்தான். கார் கிளம்பியது அதன் பின் வெளியே வந்தவள் குகனின் தோட்டத்தினை நோக்கி நடந்தாள்.

கையில் மண்வெட்டியுடன் தண்ணிர் பாய்த்து கொண்டிருந்தான் குகன்.

இவள் வருவதை தூரத்தில் இருந்தே கவனித்தவன் “இந்த பொண்ணு ஏன் இங்கே வருது” என நினைத்தபடி அவன் வேலையை கவனித்தான்.

அவன் நினைத்தது போலவே அவன் அருகில் வந்து நிற்க…

அவளை பார்த்து “என்ன” என்றான்.

“நா..நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசனூம்”

“இங்கே நம்ம ரெண்டு பேரும்தானே இருக்கோம் சொல்லுங்க என்ன விஷயம்?”.

“அ..அது..அது” என புடவையின் முந்தானையை திருகியபடி திணற…

“என்னனு சொல்லுங்க எனக்கு வேலை இருக்கு”

“நா.. நான் உ..உங்களை… நான்..உங்கள் வி..விரு”

 அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை உணர்ந்தவன் “நீங்க மனசுல நினைக்கிறது நடக்காது கிளம்புங்க” என்றான் பட்டென்று

அவன் சட்டென்று சொன்னதும் கலங்கியவள் “ஏன்..?” என்றாள்

“ஏன்னா எனக்கு உங்களுக்கும் செட் ஆகாது. நீங்க வேற நான் வேற”

“ரெண்டுபேரும் மனுஷங்கதானே”

“ம்ப்ச் இந்த அறிவாளியா பேசுறேன்னு சொல்லிட்டு என்கிட்ட பேசாதே”

“எனக்கு பதில் தெரியும்”.

“உன்னோட வாழ்க்கைமுறை என்னோட வாழ்க்கை வேற. அதைவிட முக்கியம் என் மனசுல உன் மேல எந்த விருப்பமும் இல்லை”.

“ஏன் நான் அழகா இல்லையா”

“அழகா… அது எனக்கு தேவையும் இல்லை. என் மனசுக்கு பிடித்தால் யாரா இருந்தாலும் கட்டிப்பேன்‌”.

“என்னால் உங்களை தவிர யாருயும் கல்யாணம் பண்ண முடியாது.”

“அப்படியொன்னும் நம்ம ரெண்டுபேரும் பழகலையே. நீ என்கூட ஒரு ரெண்டு தடவை பேசிருப்பியா. அதுவும் நாலு வார்த்தை அதுலயே காதலா.? இதுலாம் நம்புற மாதிரியா இருக்கு?”

“உங்ககிட்ட பழகினால்தான் உங்களை விரும்பனும்னு இல்லை. உங்களை பார்த்ததுமே என் மனசுக்கு பிடிச்சிடுச்சி. எனக்கே என்னை நினைத்து ஆச்சரியமாகத்தான் இருக்கு. காதல்னா என்னனு எனக்கு புரிய வைத்தது நீங்கதான். என் மனசுல எப்படி உங்க மேல விருப்பம் வந்ததுன்னு எனக்கு தெரியலை‌. நீங்க சொன்ன மாதிரிதான் கல்யாணம் பண்ண என் மனசுக்கு பிடித்தால் போதும்.”

“இரண்டு பேர் மனசுக்கும் பிடித்தால்தான் கல்யாணம். இல்லனா அது வேற”

“என்னை உங்களுக்கு பிடிக்க நான் என்ன பண்ணணும்ங்க.”

“இதோப்பாரு. நான் சொல்றதை நல்லா புரிஞ்சிக்கோ. என்னை உனக்கு பிடிச்சிருக்குன்னே வச்சிக்குவோம். ஆனால் என்கூட உன்னால் வாழ முடியாது. உன்னை பார்த்தாலே தெரிகிறது நல்ல வசதியான வீட்டு பொண்ணுணு. என் வீட்ல உன்னால் வாழமுடியாது. எனக்கு என் அம்மாதான் எல்லாம். அவங்களை என்னை கல்யாணம் பண்ணுறவ, நல்லா பார்த்துக்கணும். உன்னால் அது முடியாது. உன்னையே பார்க்க ஒரு ஆள் தேவைப்படும் புரியிதா.?”

“நா..நான் பாத்துக்கறேன்.”

‘எதை…’

“உங்களை, உங்க அம்மாவை”

“இது விளையாட்டு இல்லம்மா வாழ்க்கை. உன் வீட்ல, என் விடு ஒரு அறை அளவுக்குதான் இருக்கும்”.

“அதை நான் பார்த்துக்கறேன்.”

“இது சரி வாராது. நான் சமர் கிட்ட பேசுறேன்‌.”

“நான் பேசிட்டேன்.”

“என்ன பேசிட்டியா” என்றான் அதிர்ச்சியாய்

“நான் சமர் கிட்ட பேசிட்டேன். என்னை காப்பாற்றுனிங்க இல்லையா அன்னைக்குதான் பேசினேன்”.

“என்ன சொன்னான்?”

ஆத்வி குகனை பற்றி நினைத்தபடி வீட்டின் வெளியே நடமாடி கொண்டிருந்தாள். அப்போது சமர் வெளியை சென்று வீட்டிற்க்குள் வந்தான்.

“ஆத்வி சாப்டியா”

“ஆமா” சமர்.

‘ஏன் வெளியே நிற்கிற உள்ளே வா”

“சமர்”

“ம்ம்ம் சொல்லு”

“உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.”

“குகன் அண்ணாவை பற்றியா”

“அவனை ஆச்சரியமாய் பார்க்க…”

“உன்னோட பார்வையே சொல்லிடுச்சி, உன் மனசுல என்ன இருக்குன்னு…”

“இல்லை சமர். நீ என்னை பற்றி தவறா நினைக்கலையா”

‘தவறா நினைக்க என்ன இருக்கு ஆத்வி?.”

“நான் உன்னை விரும்புறேன்னு நான் உன்கிட்ட சொல்லல நாளும் உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும்…”

“அது காதல் இல்லை ஆத்வி. அது வேற… நீ ரொம்ப அடம்பிடிக்கிற டைப். அப்படிதான் நீ என்னை விரும்புறேன்னு சொன்னதும்… உன்கிட்ட நான் ஃப்ரெண்ட்டா காட்டின பாசம், நம்ம ரெண்டு பேரும் சமமான வசதியும் இருந்ததால் என்னை கல்யாணம் பண்ணலாம்னு உன் மனதில் ஒரு எண்ணம் வந்ததே தவிர என் மேல் காதல் வரலை. அதனால் நீ அதை பற்றி யோசிக்க வேணாம். உன் மனதில் இருக்குறதை குகன் அண்ணாகிட்ட சொல்லு, அதுக்கு முன்னாடி குகன் அண்ணாவை பற்றி சொல்றேன் கேட்டுக்கோ… அண்ணா உன் குடும்பம் அளவுக்கு வசதியானவர் இல்லை. நல்ல படிச்சி நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தும் அது லாம் வேணாம்னு விவசாயம் பண்றார். அவர் சம்பாத்தியத்தில் நிம்மதியா வாழ்பவர். நீ அப்படி இல்லை. உண்மையை சொல்லனும்னா உன் செலவுதுதான் அவரோட வருமானம். அவருக்கு உலகமே அவங்க அம்மாவும், விவசாயம்தான். நீ அவரை உன்கூட கூப்பிட்டு போய்டலாம்னு நினைச்சிடாதே, அதுக்கு வாய்ப்பே இல்லை. அவரை விரும்புற நீ அவரோட விருப்பத்தையும் ஏற்றுக்கனும். அதுக்கெல்லாம் சம்மதம்னா மட்டும் உன்னோட காதலை சொல்லு. கண்டிப்பா குகன் அண்ணா உன்னை ஏற்றுக்க மாட்டாங்க. நீ உன்னோட காதலை புரிய வைத்தால்தான் அவரை மாற்ற முடியும்”.

“எனக்கு குகன் வேணும் சமர். அதுக்கு எதை வேணாலும் பண்ணுவேன்.”

“தீடிர்னு என்ன உன்கிட்ட இவ்வளவு மாற்றம்”.

“இன்னைக்கு கிணத்துல நானேதான் குதித்தேன்.”

“என்ன பைத்தியமா நீ? குகன் அண்ணா மட்டும் இல்லன்னா உன் நிலமை என்ன?’

“அவர் இருக்குறதை பார்த்துதான் குதித்தேன்.”

 “ஏன்?”

“தெரியலை நான் கிணற்றில் குதித்தாள், என்னை காப்பாற்ற வருவாறான்னு ஒரு சந்தேகம் அதனாலதான்”

“நீ இல்லை. யாராக இருந்துதாலும் குகன் அண்ணா காப்பாற்றதான் செய்வாங்க ஆத்வி.”

“தெரியும் ஆனாலும் மனதில் சின்ன ஆசை.”

‘சரி ஆனால் இனிமே இப்படி பைத்தியகாரதனமா பண்ணாதே ஆத்வி.”

“சரி சமர். நான் அவர்கிட்ட என் காதலை சொல்ல போறேன்”.

‘நல்லா இரண்டு நாள் யோசிச்சிட்டு அவர்கிட்ட சொல்லு. குகன் அண்ணா ரொம்ப நல்லவர். அவர் மனதில் ஆசையை வளத்துட்டு கடைசியில் உன்னால் கல்யாணம் பண்ண முடியலைன்னா? அவரோட நிலமை”

“நான் முதல்ல எங்க அப்பாகிட்ட பேசிட்டு குகன்கிட்ட பேசுறேன் சமர்.”

“நல்ல முடிவு ஆத்வி. உன்னோட காதல் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்” என்றான் சமர்

“சமர் எனக்கு வாழ்த்து சொன்னான்” என்ற ஆத்வியை குகன் பார்க்க “இப்பவும் சொல்றேன், உங்களை தவிர யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன். அப்படியொரு சூழ்நிலை வந்தால் சாகலாம் மாட்டேன். யாருக்கும் தெரியாமல் கண்காணாத இடத்துக்கு போய்டுவேன்”.

“என்ன ப்ளாக்மெயிலா?”

“இல்லை. உண்மையை சொன்னேன். என்னை பிடிச்சா கல்யாணம் பண்ணுங்க, இல்லை உங்களுக்கு வேற பொண்ணை பிடித்தாலும் கல்யாணம் பண்ணுங்க, ஆனால் நான் உங்களை மனசுல வச்சிட்டு வாழ்ந்துடுவேன். இவ இப்படிதான் பேசுவாள், சிட்டி பொண்ணு அவங்க ஊருக்கு போனதும் மறந்துடுவான்னு நினைக்காதிங்க. உங்க நினைப்பு உயிருக்குள்ள கலந்துடுச்சி. இனிமே அதை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. அப்புறம் என் வீட்ல சம்மதிப்பாங்களான்னு கேட்காதிங்க. நான் எங்க வீட்ல பேசிட்டேன். என் குடும்பம் சம்மதிச்சிட்டாங்க.” என அடுத்த அதிர்ச்சியை கொடுத்தாள்.

“நீ என்ன சொல்ற?”

“எங்க வீட்ல பேசிட்டேன் சம்மதிச்சிட்டாங்க, உங்களுக்கு காது கேட்காதா. முதல்ல உங்களுக்குதான் ட்ரிட்மெண்ட் பாக்கனும் போல…” என உதட்டை சுழிக்க

“ஏய்…நான் ஒரு விவசாயி உங்க அப்பா பிஸ்னெஸ் பண்றவர். எப்படி சம்மதிப்பாங்க.?”

“எங்க அப்பாவும் விவசாய குடும்பத்துல இருந்து வந்தவர்தானாம். அவருக்கு விவசாயம்னா ரொம்ப பிடிக்குமாம். சொத்து நம்மகிட்ட நிறைய இருக்கு. நல்ல மனுஷங்களல சம்பாதிக்கிறதுதான் கஷ்டம். என் மருமகன் விவசாயியா இருக்குறது எனக்கு ரொம்ப சந்தோஷம்னு சொன்னார்.”

குகன் குழப்பத்தில் நின்றான்.

ஆத்வி அப்பாவின் முடிவுக்கு பின்னால் சமர் இருக்கிறான் என தெரியாதே. ஆத்வி குகனை விரும்புகிறாள் என அவன் கண்டுபிடித்ததுமே அவள் அப்பாவிடம் குகனை பற்றி பேச அவருக்கு குகனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது படித்த படிப்பு, லட்சத்தில் சம்பளம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு விவசாயம் செய்கிறான் என்றதுமே குகனை பிடித்துவிட்டது. சமரின் அப்பா போலவே ஆத்வியின் அப்பாவும் நல்ல குணமுடையவர். அதனால் குகனை புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டார்.

குகனிடம் “சரி நான் கிளம்ப இன்னும் ரெண்டு நாள் இருக்கு, அதுக்குள்ள “ஆத்வி ஐ லவ் யூ” ன்னு சொல்றிங்க. எனக்கு இப்போ கேம்ப்க்கு நேரம் ஆகிடுச்சு, வர்றேன் மை புருஷா” என்க… குகனின் முகத்திலோ எந்தவித உணர்வும் இல்லை.

நேராக மெடிக்கல் கேம்ப் வந்தவள் சமர் இருக்கும் இடத்திற்கு வந்தாள்‌. அவன் நோயாளிகளை பாய்த்துகொண்டிருந்தவன் சைகையால் ஐந்து நிமிடம் என்றான்.

நோயாளி சென்றதும் அவன் மூன் அமர்ந்தாள்.

‘நீங்க போன விஷயம் என்னாச்சி அண்ணியாரே”

“அண்ணியா?”

“குகன் அண்ணாவை கல்யாணம் பண்ண போறிங்கல்ல அதான். என சிரித்தான்.”

“ அட போ சமர். என்ன சொன்னாலும் கல்லு மாறி நிற்கிறார்.”

“கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு ஆத்வி”

“ம்ம்ம்…. நான் சொல்லவேண்டியதை சொல்லிட்டேன்‌ சமர். அடுத்து என்ன பண்ணணுங்குறது உங்க அண்ணா எடுக்குற முடிவுதான்”.

“சிரித்தான் சமர்.”

“ஏன் சிரிக்குற?”

“இல்லை குகன் அண்ணா, ரொம்ப பாவம்.”

“ஏன்…?”

“உன்னை கல்யாணம் பண்ணிட்டு‌ என்ன பாடுபட போறாரோ…”

சமரை முறைத்த ஆத்வி. “நான் அவரை நல்லா பார்த்துக்குவேன் சமர். நீ தானே சொன்ன அவர் ரொம்ப கஷ்டபட்டதா? இனிமே அவரையும் அவங்க அம்மாவையும் பார்த்து கொள்ளவெண்டியது‌ என் பொறுப்பு. நான் நல்ல மகளாக இருந்து அவங்களை பார்த்துக்கறேன்.”

“நீயா பேசுற ஆத்வி. ஆச்சரியமா இருக்கு”.

“நான் ரொம்ப ஓவராதான் பண்ணிட்டு இருந்திருக்கேன். காதல் இவ்வளவு தூரம் மாற்றுமா? ஆச்சரியமா இருக்கு சமர். எனக்கு குகன் வேணும். அவர்‌கூட வாழனும்னா அவரோட எல்லாத்தையும் நான்‌ ஏற்றுக்கனும்னு சொன்னல்ல, அப்போதான் அவர் வேணுமா பணக்கார வாழ்க்கை வேணுமான்னு யோசிச்சேன். எனக்கு அவர்தான் வேணும்னு மனசு சொல்லுது சமர். அவரைவிட பணம் முக்கியமில்லை. அவர் சம்பாதிக்கிறார். நானும் வேலைக்கு போறேன். எங்க குடும்பத்தை பார்க்க அதுவே போதும். நிம்மதியா வாழலாம்னு தோணுது சமர்.”

“அவளை தோளோடு அணைத்தான். கண்டிப்பா நீ ஆசைப்பட்ட மாதிரி அமையும் ஆத்வி. அண்ணா சீக்கிரம் சம்மதம் சொல்வாங்க”

“தேங்க்ஸ் சமர் நான் போய் வேலையை பார்க்கிறேன்” என அவளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தாள். ஒவ்வொருவராக வர எல்லாரையும் பரிசோதித்தவள். இறுதியாக ஒரு வயதான பெண்மணி வந்தார். அவரை நாற்காலியில் அமர சொன்னவள் அவரை சோதித்தாள். அவரிடம் சில கேள்வியை கேட்டவள், உடனே வயிற்று பகுதியை மட்டும் ஸ்கேன் எடுக்க எழுதி கொடுத்து அங்கே எப்படி செல்ல வேண்டும் என வழியையும் காண்பித்தாள். அவர் தட்டுத்தடுமாறி செல்ல “அம்மா ஒரு நிமிஷம்” என்றவள் அவரின் கையை பிடித்து அழைத்து செல்ல, அதை பார்த்த பாலாவிற்குதான் பேரதிர்ச்சி. கண்களை இரண்டு முறை நன்றாக துடைத்து பார்த்தவன் ஆத்விதான் என உறுதி செய்தான்.

“என்ன அதிசயம் மேடம் பேஷன்ட் கையை பிடிச்சி கூப்பிட்டு போறாங்க, நல்ல மாற்றமா இருந்தால் சரிதான்” என அவன் வேலையை பார்த்தான்.

ஸ்கேன் எடுக்கும் இடத்தில் விட்டுவிட்டு அங்கே வேலை செய்பவரிடம் “ஸ்கேன் எடுத்ததும்‌ இவங்களை என்னோட ரூம்க்கு கூப்பிட்டு வந்திருங்க” என்றவள் அவள் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து அந்த பெண்மணி வர அவரின் ரிப்போர்ட்டை பார்த்தவளுக்கு சந்தேகம் சரியானது. கர்ப்பபையில் கட்டி இருப்பது ஊர்ஜிதமாக அவரிடம் “உங்ககூட யாரும் வரலையா” என கேட்டாள்.

“என் பையன்தான் கொண்டு விட்டுட்டு போனான். இப்போ வந்துடுவான்”

“இதுக்கு முன்னாடி ஸ்கேன் ஏதாவது எடுத்துருக்கிங்களா?”

“இல்லம்மா. என் பையன் கூப்பிடுவான் நான் போனதில்லை. பக்கத்துல உள்ள ஹாஸ்பிடல் போய் வயிறு வலிக்கும்போது ஊசி போட்டுட்டு வருவேன்.”

“அவங்க உங்களை ஸ்கேன்‌ எடுக்க சொல்லலையாம்மா.”

“சொன்னாங்கம்மா. அடிக்கடி வயிறு வலி வருது ஒரு‌ ஸ்கேன் எடுங்கன்னு, என் பையனும் சொன்னான். நான்தான் போகமாட்டேன்னு இருந்துட்டேன்”

“இப்போ உங்க பையன் எங்கேம்மா.?”

“அவன் வேலையா போய்ருக்கான். என்னை டாக்டரை பார்த்ததுட்டு இங்கேயே இருக்க சொன்னான்.”

“சரிம்மா நீங்க வெளியே உள்ள நாற்காலியில் உட்காருங்க. உங்க பையன் வந்ததும் அவரை மட்டும் என்னை பார்க்க உள்ளே வர சொல்லுங்க”

“என்னம்மா எனக்கு பெரிய பிரச்சனை இருக்கா?” என அந்த பெண்மணி கேட்க…

“இல்லம்மா, நீங்க ரொம்ப பலகீனமா இருக்கிங்க, அதுக்கான சத்து மாத்திரை ஆகாரங்கள் என்ன சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது எல்லாம் அவங்ககிட்ட தான் சொல்லனும்”

“சரிம்மா என் பையனை வரசொல்றேன்” என்றவரை வெளியே அமர வைத்தவள், மற்ற நோயாளிகளை பார்க்க ஆரம்பித்தாள்.

இருபது நிமிடம் கழித்து “உள்ளே வரலாமா டாக்டர்” என கேட்ட சத்தத்தில் சர்வமும் ஆடியது. “என்ன நம்ம ஆள் குரல் மாறியே இருக்கே” என நினைத்தவள் “உள்ளே வாங்க” என்க… உள்ளே வந்தான் குகன்.

அவளை பார்த்து அதிரவில்லை. அமைதியாக “எங்க அம்மாகிட்ட என்னை பார்க்க வர சொன்னிங்களாம்” என்றான்

“ஆமா உட்காருங்க” என்றாள்.

“இல்லை பரவாயில்லை, விஷயத்தை சொல்லுங்க டாக்டர்” என்றான் அழுத்தமாய்.

“சார், உங்க அம்மாவோட கர்ப்பபையில் கட்டி இருக்கு. அதனால்தான் அவங்களுக்கு வயிற்றுவலி.”

“கட்டியா..?”

“இதுக்கு முன்னாடி ஸ்கேன் எடுங்கன்னு டாக்டர் சொன்னதா சொல்றாங்க. நீங்க படிச்சவர்தானே இதை எப்படி சாதாரணமாய் எடுத்திங்க.?” என்றாள் கோபத்தில்

“இல்லை அம்மாவை கூப்பிட்டாலும் வரமாட்டேன்னு அடம்புடிப்பாங்க.

என்றவனின் குரலில் முதலில் இருந்த கம்பிரம் இப்போது இல்லை. வார்த்தைகளில் லேசான நடுக்கம்.

அவனின் பயத்தை அறிந்தவள், “நீங்க பயப்படாதிங்க, இது சாதாரண கட்டிதான். அதை ஆப்ரேஷன் பண்ணி எடுத்துடலாம். ஆப்ரேஷன் பண்ண அவங்க உடம்புல தெம்பு வேணும். ரொம்ப பலகீனமான இருக்காங்க. நான் கொடுக்குற மருந்தோட, பழங்கள் சத்தான ஆகாரங்கள் வாங்கி கொடுங்க. நான் சமர் கிட்ட பேசிட்டு ஆப்ரேஷன் எப்போ பண்ணலாம்னு சொல்றேன். அப்பூறம் அம்மாகிட்ட இப்போதைக்கு சொல்லவேணாம். உடம்பு பலகீனமா இருக்குறதாதான் நான் சொன்னேன், நீங்களும் அப்படியே சொல்லிடுங்க. அவங்களுக்கு ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடி சில சோதனைகள் செய்வாங்க. அப்போ அவங்களுக்கு புரியிறமாதிரி நான் பேசிடுறேன்” என்றாள் ஆத்வி.

“சரி டாக்டர்” என்றவன் வெளியேற…

“மிஸ்டர் குகன்”

“என்ன?” என்றான்.

“என் மாமியாரை சீக்கிரம் குணமாக்கனும். உங்க பதிலை சீக்கிரமா சொல்லுங்க. அவங்க பேரன் பேத்தியெல்லாம் பாக்கனும்ல” என்றதும் அவளை‌ முறைத்தபடி வெளியேறினான் குகன்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!