இதழ் தீண்டா பதுமையே – 1

4.6
(14)

அத்தியாயம் – 01

பல அடுக்குமாடிகளைக் கொண்ட இடமானது மக்கள் கூட்டத்தில் நிரம்பிக் காணப்பட்டது.

அங்குள்ளவர்களின் தோற்றமே கூறியது அவர்களின் நிலமையை..

அது சாதாரண மக்கள் வந்து செல்லக் கூடிய இடம் இல்லை ஏனெனில் அங்கு ஒரு முறை வந்தாலே போதும் அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து இலட்சக் கணக்கில் பணம் காலியாகும்.

ஆம் அந்த நகரத்தின் உயர்தர வசதிகளைக் கொண்ட தனியார் மருத்துவமனையே அது.

அவ்வாறான இடத்தில் கையில் ஓர் பேப்பர் வெயிட்டை வைத்து அங்குமிங்குமாக உருட்டியப்படி ஒருவன் அமர்ந்திருக்க..,

“நீங்க உங்களோட கோபத்தை கட்டாயமா கன்ட்ரோல் பண்ணியே ஆகனும் இல்லைன்னா ரொம்ப டேன்ஞர்…” என்று அந்த மருத்துவர் கூற அவர் முன் அமர்ந்திருந்தவனோ தன் புருவத்தினை உயர்த்தி நிமிர்ந்து பார்த்தான்.

“நீங்க எதுக்காக இவ்வளவு ஸ்ட்ரெஸ் ஆகுறீங்க…?, கொஞ்சமாவது சிரிங்க அப்போதான் உங்க மனசும் ரிலாக்ஸ் ஆகும்..” என்று மருத்துவர் கூற அவரைப் பார்த்து மீண்டும் முறைத்தவனோ, தன் கையில் வைத்திருந்த பேப்பர் வெயிட்டை ஓங்கி மேஜையில் வைக்க அவன் முன்னே அமர்ந்திருந்த வைத்தியருக்கு உடல் படபடத்துப் போனது.

“யார் கூடயாவது மனசு விட்டுப் பேசுங்க.. முடிஞ்சா கல்யாணம் பண்ணிக்கோங்க ஒரு பொண்ணோட நெருக்கம் உங்கள நிச்சயமா மாத்தும்.” என அவர் கூறிக் கொண்டே போக,

“சரிதான் போடா..” எனக் கூறிய படி அங்கிருந்து எழுந்து சென்றான் அதிரன்…

****

கதிரவனோ தன் வெப்பத்தைத் தனித்துச் செல்லும் போது வானமும் செம்மஞ்சள் நிறத்தைக் கொண்ட மின் குமிழ்களால் அலங்கரித்தவாறு இருக்கும் மாலைப்பொழுது அது.
சாலையில் காதலர்கள் நண்பர்கள் கூட்டம் என அந்த இடமெங்கும் நிறைந்து காணப்பட்டது.

ஆம் அது கல்லூரி முடிந்து அனைவரும் வெளியே வரும் நேரம் ஆகும். அந்த நண்பர்களின் கலகலப்பான ஓர் அழகிய தருணத்தில் ஓர் பெண்ணின் அலறல் சத்தமோ அந்த இடத்தை நிசப்தமாக்கியது.

ஓர் நடுத்தரமான வயதை உடைய பெண்ணானவள் அந்தப் பாதையில் அலறியபடி ஓடி வருகையில் அவளின் பின்னே இரு ஆண்கள் கையில் நீண்ட அருவாள் ஒன்றை வைத்துக்கொண்டு சத்தம் போட்டவாறு அவளைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் ஓடி வருவதைப் பார்த்து அதில் நின்ற அனைவரும் அங்குமிங்குமாக சிதறி ஓட ஆரம்பித்தனர்.

அந்தப் பெண்ணும் ஓடியவாறே கல்லூரி வாசலின் முன்னே வரும் பொழுது அவளின் முன்னே ஓர் பனை மரம் போல உயரம் உடைய அகன்ற மார்பினையும் இரும்பு தேகத்தையும் உடைய ஓர் ஆண் முன்னே நிற்க அவன் மீது மோதி கீழே விழுந்தாள்.

கையில் அறிவாளுடன் வந்த இருவரும் அவனைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்து நிற்க அந்த ஆணின் மீது கீழே விழுந்த பெண்ணின் கழுத்தினை இறுகப் பிடித்து தூக்கியது ஒரு கரம்.

அது வேறு யாரும் கிடையாது அவள் முன் நின்றவன் தான். அவனே அந்தப் பெண்ணைத் துரத்திக் கொண்டு வந்த கும்பலின் தலைவன்.. அவனது பெயரோ அதிரன்.

அவனோ தன் வயதினை விட அதிக குற்றங்களுக்குச் சொந்தக்காரனாவான். ஆம் பல கொலைகளையும் மற்றும் போதைப் பொருள் தொடர்பான கடத்தல் மாஃபியாவின் முக்கிய சம்பவக்காரன் அவன்.

அவனைக் கண்டால் அருகே நிற்பவர்களுக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுவிடும்
அவனுடைய கரத்தில் சிக்கியிருந்த பெண்ணிற்கோ தொண்டை வறண்டு நாக்கு உலர்ந்துப் போனது.

விழிகள் பிதுங்கி வெளியே வந்துவிடும் போல இருக்க சிரமப்பட்டு தன்னுடைய வாயைத் திறந்து கெஞ்சத் தொடங்கினாள் அவள்.

“ப்ளீஸ் அதிரன் என்ன விட்டிடு என்ன எதுவும் பண்ணிடாத.. தயவு செய்து என்னை விட்டிடு..” என அச்சத்தில் மீண்டும் மீண்டும் கூறியதையேக் கூறி அவள் கெஞ்சத் தொடங்க சற்றும் பரிதாபம் காட்டாது அவனுடைய கரங்களோ அவளுடைய கழுத்தை மேலும் மேலும் இறுக்கத் தொடங்கியது.

“அதிரா மரியாதையா என்னைய விட்டுடு இல்லன்னா நீ பின்னாடி ரொம்ப பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.. என்ன ஒன்னும் பண்ணிடாத..” என்று அச்சத்தோடு கலந்து மிரட்டலாய் அந்தப் பெண் மீண்டும் கூற..,

“எனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதை நான் பார்த்துக்கிறேன் ஆனா உன்னை உயிரோட விடுற அளவுக்கு நான் நல்லவன் கிடையாது.” என்று ஒற்றைப் பதிலைக் கூறியவன் தன் இடுப்பில் சொருகியிருந்த சிறிய கத்தியினைக் கொண்டு அவளது மென்மையான கழுத்தின் மீது வைத்து வெண்டைக்காயை வெட்டுவதுப் போல எவ்வித பாவமும் பார்க்காமல் வெட்டினான் அந்த மனித மிருகம்.

அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்து உதிரம் சீறிப்பாயத் தொடங்க கண்கள் மேல் நோக்கி சொருகிக் கொண்டு செல்ல அலறிக் கொண்டு கீழே விழுந்து துடி துடித்தாள் அவள்.
அங்கு இருந்தவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடத் தொடங்க தான் வைத்திருந்த கத்தியின் மேல் படிந்த உதிரத்தை தன் கரத்தினால் வடித்து துடைத்து வீசுகையில் அதுவோ அவனின் அருகே நின்று நடந்து கொண்டிருந்த கொலை சம்பவத்தை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மங்கையின் மீது போய் விழுந்தது.

அதன் பின் தன் காலின் கீழ் துடித்துக் கொண்டிருந்தவளின் கழுத்தினை தன் பாதத்தினால் அழுத்தி உயிரை பறித்தான் அந்தக் காலன்.

அங்கிருந்த அனைவரும் நடந்த சம்பவத்தினைப் பார்த்து ஓடிய போது அந்த பெண் மாத்திரம் என்ன செய்வதென்று தெரியாமல் அச்சத்தில் சிலை போல உறைந்து நின்றாள்.

ஆனால் அதிரனோ அவளைப் பெரிதும் கவனத்தில் கொள்ளாமல் தன் கையினை பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருவனின் சர்ட்டின் மீது துடைத்துவிட்டு அங்கிருந்து செல்லத் தயாரானான்.

அப்போது “டேய் எங்க போற..” என்று ஒரு குரல் கேட்க திரும்பி பார்த்தான் அதிரன்.

அவள் தான் மாயா….
மாயா அந்த காலேஜ்ல் பயிலும் முதலாம் வருட மாணவி ஆவாள்.
ஆரம்பத்தில் இருந்து கிராமப் பகுதியில் கல்வி கற்று வந்த மாயாவோ அவளது மேல் படிப்பிற்காக இந்த நகரம் நோக்கி வந்திருந்தாள். அவளுக்கு இங்கு நடந்த சம்பவம் அனைத்தும் புதிதாகவே இருந்தது.

அவளை நடுங்கவும் செய்தது மாயாவோ சற்று பயந்த குணத்தினை உடைய பெண்ணாக இருந்தாலும் கூட எந்த ஒரு விடயத்தையும் நீதி நேர்மையைப் பார்த்து அதன் வழி நடந்து கொள்பவள்.

மாயாவின் குணத்தினை பற்றி ஒற்றை வார்த்தையில் கூறுவதாயின் அந்நியன் திரைப்படத்தில் வரும் அம்பிக்கு பெண் வேடம் அணிவித்தது போல் ஆகும்.

அவள் இவ்வளவு காலமும் பார்த்த அனைவரும் சாதாரண சிறு தவறுகளை செய்யக்கூடியவர்கள் ஆனால் இப்போது நடந்தது ஓர் கொலை அதுவும் ஓர் பெண்ணை எவ்வித பாவமும் பார்க்காமல் கொலை செய்த ஓர் அரக்கனே தன் முன் இருக்கின்றான் என்று சற்றும் சிந்திக்காமல் அவனை நோக்கி சரளமாக திட்டத் தொடங்கினாள் மாயா.

“டேய் உனக்கு மனசாட்சியே இல்லையா நடுரோட்டில் இப்படி ஒரு பொண்ண கொலை பண்றதுக்கு எப்படி உனக்கு தைரியம் வந்துச்சு..,உன்ன மாதிரி ஆட்களை சும்மாவே விடக் கூடாது உன்னை பார்த்து எல்லாரும் பயப்படலாம் பட் நான் அப்படி கிடையாது..” என்று அவள் கூறினாள்.

அவள் கூறியதைக் கேட்டுக் கொண்டு இருந்த அதிரனோ அவனது தடித்த மிடுக்கான குரலினால் “ஹே பொண்ணு இது உனக்கு தேவை இல்லாத வேலை…. வாயை மூடிக்கிட்டு இங்கே இருந்து போயிடு இல்லைன்னா ரொம்பவே கஷ்டப்படுவா..?” என்று கூறினான்.

அவனது மிரட்டலுக்கு சற்றும் பயப்படாதது போல இருந்த மாயா, “இந்த மிரட்டுறதை வேற யார்கிட்டையும் வைச்சுக்கோ நான் மத்தவங்களை மாதிரி கிடையாது இப்பவே போலிஸ்க்கு சொல்றேன் பார்” எனக் கூறி தன் கையில் இருந்த ஃபோனை எடுத்து டயல் செய்ய ஆரம்பித்தாள்.

மாயாவின் நடவடிக்கையை பார்த்த அதிரன் தன் பொறுமையை இழந்து பளார் என அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

 

அவன் அடித்த மறுகணம் அவளது கையில் இருந்த ஃபோனோ பறந்து செல்ல தன் பின்னால் உள்ள இருவரையும் பார்த்த அதிரன்,
“இவளை தூக்கி கார்ல ஏத்துங்கடா… அதுக்கு அப்புறம் பார்ப்போம் எந்த போலிஸ்ட போறாள்னு..” என்று அவன் கூறினான்.

மாயாவோ அடியின் தாக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்கு முன்னரே அவளின் பின்னே இருவர் வந்து இரு கைகளையும் பிடிக்க திகைத்துப் போனாள் அவள்.
“என்னை விடுங்கடா…. ப்ளீஸ் யாராவது என்னை காப்பத்துங்க..” என்று மாயா கூச்சலிட்டாள் இருந்த போதும் அவளின் சத்தத்தை கேட்டு வருவதற்கு எவருமே அருகில் இல்லை.

அவர்களின் பிடியிலிருந்து விலகி வெளியே வருவதற்கு வலையில் சிக்கிய மீன் போல துடித்தாள் ஆனால் எவ்வித பயனும் இல்லை.

அந்த அரக்கர்களோ மாயாவைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றார்கள். அவளும் அலறியபடியே சிறிது நேரத்தில் தன்னிலை மறந்து மயங்கிவிட அவளது வாழ்வும் கேள்விக்குறியாகிப் போனது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

1 thought on “இதழ் தீண்டா பதுமையே – 1”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!