அதே நாள் பிரகதியின் வீட்டில என்ன நடந்துச்சுன்னு பார்க்கலாம்..
அடுத்த நாள் அழகாக விடிந்தது அனைவருக்கும்..
பெரியவர்கள் ஒவ்வொருவராக காலில் அமர்ந்து பேப்பர் படுத்துக் கொண்டிருந்தனர்…
கௌசல்யாவிற்கும் காபி தயாரித்துக் கொண்டிருந்தார்.. பிரகதி அறையில் தூங்கிக் கொண்டிருந்தாள்..
அனைவருக்கும் காபி கொடுத்துவிட்டு தானும் ஒரு காபி எடுத்து நடந்து கொண்டே பேச்சை ஆரம்பித்தார் கௌசல்யா..
ஏங்க நம்ம பொண்ணுக்கு இந்த இடம் சரி வந்து கல்யாணம் ஆகிடுச்சுன்னா பழனிக்கு நடந்து வரதா வேண்டி இருக்கேன் என்று கணவரை பார்த்து கூற..
இவ்ளோ பெரிய வேண்டுதலெல்லாம் தேவையா? அதெல்லாம் கண்டிப்பா நல்லபடியா நடக்கும் என்று கண்ணன் கூற..
நேத்து இதைச் சொன்னதுக்கு தான் பிரகதி அழுக ஆரம்பிச்சிட்டா என்ன எதுக்கு இந்த வீட்டில் இருந்து கல்யாணம் பண்ணி அனுப்பி விடுறதுலயே குறியா இருக்கீங்க்னு கேட்கிறா என்று ஜோதி சொல்ல..
என்னம்மா நீ அவகிட்ட போய் இதெல்லாம் சொல்லிட்டு இருக்க.. இப்படி சொன்னா அவ வருத்தப்பட மாட்டாளா? என்று அருணாச்சலம் கேட்டார்..
அது இல்லைங்க மாமா போன தடவை மாதிரி எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்று ஒரு பயம் அதனால தான் என்று தயக்கத்துடன் கூறினார் கௌசல்யா…
போன தடவை நடந்ததுக்கு நம்ம யாரும் காரணம் இல்ல.. நடந்து முடிஞ்சது பத்தி பேசாதீங்க..
அப்புறம் பிரகதி மறுபடியும் கஷ்டப்படுவா;
இந்த கல்யாணம் கண்டிப்பா நல்லபடியா நடக்கும் மாப்பிள்ளை நல்ல பையனா இருக்காரு அவங்க வீட்ல எல்லாருமே நல்லவிதமா இருக்காங்க…
அந்த திவ்யா பொண்ணு கூட நல்ல மாதிரி தான் இருக்கா அதனால எந்த பிரச்சினையும் வராது என்று ஜோதி கௌசல்யாவிடம் ஆறுதலாக கூறினார்.
அதனாலதான் அக்கா ஆசையா இருக்கு; இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும்ன்னு என்று கூறி கிச்சனுக்குள் எழுந்து சென்று விட்டார் கௌசல்யா…
அண்ணி நம்ம சொந்தத்தில இருந்து யார கூப்பிடனும்; என்ன முறை செய்யணும் எல்லாமே நீங்க தான் முன்னாடி நின்னு செய்யணும் என்று கண்ணன் கூற…
ஜோதிக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை? நான் முன்னாடி நின்னு செய்றதா என்று அவருக்கு ஒரு மாதிரி சங்கடமாகிவிட்டது…
அவ எங்க பொண்ணு அப்படின்னு சொல்றது விட அவ உங்க பொண்ணு.. நீங்க வளத்த பொண்ணு நீங்கதான் முன்னாடி நிக்கணும் என்று கௌசல்யாவும் கூற…
ஜோதிக்கும் அருணாச்சலத்திற்கும் வெளிப்படையாகவே கண்களில் கண்ணீர் வந்தது…
கண்டிப்பா நான் செய்யாம என் பொண்ணுக்கு வேற யாறு செய்வா என்று அருணாச்சலம் சொல்ல அனைவருக்கும் சந்தோஷம்…
சரி சரி காபி குடிச்சிட்டீங்க இல்ல எந்த மண்டபம்னு பிக்ஸ் பண்ணுங்க.
மாப்பிள்ளை வீட்டு சைட்ல இருந்து ஈசியா வந்துட்டு போற மாதிரி கொஞ்சம் மெயின்ல இருக்கிற மாதிரி மண்டபமா பாருங்க…
எப்படியோ நம்ம சைடுல ஒரு 50 பேரு..
அவங்க சைட்ல எவ்வளவு பேர் என்ன அவங்க கிட்ட கேட்டுக்கோங்க .. இங்க பக்கத்துல இருக்குறவங்களுக்கு நானும் கௌசல்யாவும் அழைச்சிட்டு வந்துறோம்…
அப்புறமா நாலு பேரும் போயி முக்கியமா சொந்தக்காரங்களுக்கு எல்லாம் சொல்லிட்டு வந்துடலாம் என்று ஜோதி கூற அனைவரும் சரி என்று கூறினர்..
கண்ணன் உடனே சுகுமாரனுக்கு அழைத்து அவர்கள் பக்கம் எவ்வளவு பேர் வருவார்கள் என்று விசாரித்து கொண்டார்…
ஆண்கள் இருவரும் வெளியே கிளம்பி விட்டனர்.
அக்கா பிரகதி வந்ததுக்கப்புறம் டெய்லர் கடைக்கு போயிட்டு பார்லர் எல்லாம் புக் பண்ணிட்டு வந்துடலாம்..
அவங்க எடுத்து கொடுத்த புடவைக்கு கிராண்டா பிளவுஸ் ஸ்டிச் பண்ணிக்கலாம்… அப்புறம் நம்ம எடுத்த புடவையும் ஒன்னு ஸ்டிச் பண்ணிக்கலாம்…
ஃபர்ஸ்ட் நம்ம புடவை தான் கட்டுவா அதுக்கு அப்புறம் தானே அவங்க வச்சு கொடுப்பாங்க..
ஆமா அக்கா நான் அதே தான் நினைச்சேன்.. அப்படியே நமக்கு ஸ்டிச் பண்ண கொடுத்திடலாம்.
அப்புறமா நாளைக்கு போய்
பிரைடல் செட் சொல்லிக்கலாம்..
அப்புறம் மண்டபம் ஃபிக்ஸ் பண்ணதும் கேட்டரிங் ஆட்களுக்கு எல்லாம் சொல்லனும்..
நிறைய வேலை இருக்கு எந்த தப்பும் இல்லாமல் நல்லபடியா செஞ்சு முடிக்கனும் என்று என்னென்ன செய்வது என்று திட்டமிட்டு கொண்டனர் பெண்கள் இருவரும்…
பிரகதியும் அம்மா எனக்கு ஒரு காபி என்று கௌசல்யாவின் தோளில் சாய்ந்து கொண்டு கூறினாள்..
இப்போ இப்படி என்கிட்ட கேக்குற கல்யாணத்துக்கு அப்புறம் என்ன பண்ணுவ நீ தான் எல்லாத்துக்கும் காபி போட்டு கொடுக்கணும் என்று அவள் தலையை தடவிக் கொண்டு கூற..
அவ்ளோ ஆச்சரியமாக தாயின் முகத்தை பார்த்தாள்..
அம்மா நீயா இது இன்னைக்கு அர்ச்சனை ஸ்டார்ட் பண்ணல இவ்ளோ பாசமா பேசுற என்ன செய்து கொண்டு கூறினாள் பிரகதி…
ஏண்டி சொல்ல மாட்ட போன போகுதுன்னு கொஞ்சுனா இதுவும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ என்று சலிப்பாக சொல்லிக்கொண்டே காபி போட கிச்சனுக்குள் சென்றார் கௌசி…
அவ சும்மா இருந்தாலும் உன் வாய் சும்மா இருக்காது ரெண்டு பேரும் ஏட்டிக்கு போட்டியா இருக்கீங்க என்று ஜோதி சொல்ல..
சும்மா கௌசிய கிண்டல் பண்ணலனா பொழுது போகாது என்று சொல்லிக்கொண்டு ஜோதியை அணைத்துக் கொண்டாள்..
அப்பாவும் பெரியப்பாவும் எங்க காணோம்?
அவங்க மண்டபம் பார்க்க போயிருக்காங்க..
சரி நீ உன் பிரண்ட் யாருக்காவது இன்வைட் பண்றது நான் பண்ணிக்கோ.. இப்போ ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் பண்ணி இருக்கோ அப்புறம் மேரேஜ்க்கு நீ யாரை கூப்பிடுகிறாயோ கூப்பிட்டுக்கோ என்று ஜோதி சொல்ல ம்ம் ஆமா பெரியம்மா நீங்க சொன்ன மாதிரியே பண்ணிக்கலாம் என்றாள்..
நானும் உன் அம்மாவும் இங்க பக்கத்துல அழைச்சிட்டு வரோம்.. நீ தனியா இருந்துக்குவியா இல்ல பக்கத்து வீட்ல சொல்லிட்டு போகவா என்று கேட்டார்?
அவள தனியா எல்லாம் விட வேணாம்; பக்கத்துல சாந்தி கிட்ட சொல்லிட்டு போயிடலாம் என்று காஃபியை பிரகதியிடம் கொடுத்தார் கௌசல்யா..
சரி சொல்லிட்டு போங்க என்றாள் ..
அவர்களும் சென்றுவிட பக்கத்து வீட்டில் இருந்து சாந்தி வந்தார்..
என்னடி மருமகளே கல்யாண கலை வந்திருச்சா என்று சொல்லிக்கிட்டு வீட்டுக்குள் நுழைந்தார்..
வாங்க அத்தை, காபி போடவா இல்ல ஜூஸ் குடிக்கிறீர்களா என்று கேட்க.. இப்பதான் சாப்பிட்டேன் காஃபியே போடு குடிக்கலாம்.. இருவரும் காபி குடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள்..
நல்ல வேலை சென்னை பெங்களூர் என்று கட்டி கொடுக்காம பக்கத்திலேயே மாப்ள வந்து இருக்கு சந்தோஷம்தான்; போற வீட்ல அம்மா அப்பாக்கு நல்ல பெயரா வாங்கி தரணும்.. அதேசமயம் ஏதாவது எப்படி நடந்து கொள்வது என்று தெரியவில்லை என்றால் அம்மாட்ட இல்லை ஜோதி கிட்ட போன் பண்ணி கேளு..
எல்லா விஷயத்துலயும் விட்டுக் கொடுத்துப் போகணும் இல்ல ஆரம்பத்திலேயே உனக்கு இது பிடிக்கும் பிடிக்காதுன்னு அவங்களுக்கு புரிய வச்சிடு.. இப்ப அவங்களுக்காக அட்ஜஸ்ட் பண்ணி போயிட்டு அப்புறம் வந்து உனக்கு பிடிச்சது நீ செஞ்சா அது தப்பா தெரியும் சரியா..
சரி சரி என்று தலையடி கொண்டாள்….
மேலும் சில பல அட்வைஸ்களை அள்ளித் தெளித்தார் அவர்..
அப்படியே அன்றைய பொழுது போனது… நிச்சயத்திற்கு ஏற்பாடு வேகமாக அனைத்தும் நடந்து கொண்டிருந்தது…
இன்றும் இரண்டு அம்மாக்களுக்கும் நடுவில் படுத்துக்கொண்டு ஏதேதோ பேசி சிரித்துக்கொண்டே தூங்கி போனார்கள்…
பிரகதிக்கு யாராவது ஒருவர் கூட இருந்து கொண்டிருந்ததால் அரவிந்த் பற்றிய ஞாபகம் பெரிதாக வரவில்லை… ஆனால் அரவிந்தோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசித்துக்கொண்டே இருந்தான்…
ஒரு வழியாக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தது… மின்னல் வேகத்தில் நாட்கள் நகர்ந்து நாளைக்கு நிச்சயதார்த்தம் என்று வந்தது..
ஒரு வழியாக மெஹந்தி, ஃபேசியல், சாரி ட்ரேப்பிங் என்று செய்து பிரகதி தயாரானாள்..
அடுத்த நாள் காலை 10 மணிக்கு மண்டபத்துக்கு செல்வது என முடிவானது.. ஒரு சில உறவினர் இன்றே வந்து விட்டனர் வீடு கலகலவென இருந்தது..
இடையிடையில் அப்பாக்கள் இருவரும் மகளுடன் கொஞ்சுவதை நிறுத்தவில்லை…
அங்கே அரவிந்த் வீட்டிலும் உறவினர்களின் வருகை இருந்தது…
அடுத்து
எபில அரவிந்த் பிரகதி எங்கேஜ்மென்ட்… ஒரு சில அழகான தருணங்களுடன்…