அடுத்த நாள் அரவிந்த் வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து டிபன் சாப்பிட, சுகுமார் கடைக்கு நேரத்துக்கே சென்று விட்டார்…
அப்புறம் புது மாப்பிள்ளைக்கு ஒரே வெக்கமா? ரொம்ப சைலண்ட் ஆக இருக்கிற மாதிரி இருக்கே?
கிஃப்ட் எல்லாம் கிடைச்சிருக்கு யாரும் எத பத்தியும் சொல்லவே இல்லையே? என்று கிண்டல் செய்ய..
அம்மா என்று கோபமாக ஆரம்பித்து மென் புன்னகையோடு அம்மாவை பார்க்க…
டேய் அரவிந்த் நீயா இது? புதுசா இருக்கே டா உன் பிஹேவியர்…
ஐ கான்ட் பிலீவ் இட்? என்று அபிஷேக்கும் கிண்டல் செய்ய ..
அடடா கொஞ்சம் என்னை சாப்பிட விடுங்க எனக்கு டைம் ஆச்சு…
அப்பா வேற கடைக்கு வர சொல்லி இருக்கார்…
அப்புறம் அந்த கிஃப்ட் கிடைக்க நீங்களும் ஒரு காரணம்..அதனால உங்க மேல இருக்க கோபத்தை காட்ட எனக்கு விருப்பம் இல்லை… அப்புறம் உங்க கிட்ட கோபிச்சுகிட்டு என் டைம் வேஸ்ட் பண்ண மாட்டேன்; என் பொண்டாட்டி தான் மைண்ட்ல இருக்கா என்று கூற..
அனைவரும் அவனை ஆஆஆவென பார்த்தனர்…
ஓகே பாய் டைம் ஆச்சு என்று சொல்லிக்கொண்டே மகளுக்கு முத்தமிட்டு குழந்தைக்கு டைரி மில்க் ஒன்றை கொடுத்தான்…
ஹையா சாக்கி சாக்கி என்று அவனுக்கு முத்தம் கொடுத்தது குழந்தை…அவன் வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டு சென்று விட்டான்…
மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது கொஞ்ச நேரத்திற்கு..
இப்ப தான் டா நல்லா இருக்கு அவன பாக்குறதுக்கு என்று தேவகி சொல்ல..
ஆமா நானும் இதைத்தான் நெனைச்சேன் என்றான்…
சரி மா இன்னைக்கு எனக்கு வொர்க் இருக்கு; நான் டிரைவர் அரேஞ்ச் பண்ணித் தரேன் நீங்களும் திவ்யாவும் கடைக்கு, இன்வைட் பண்றதுக்கு போயிட்டு வந்திடுங்க என்றான்.
சரிப்பா என்று அவர்களும் சிறிது நேரத்தில் கிளம்பி விட்டார்கள்….
அப்பாவின் கடைக்கு சென்ற அரவிந்துக்கு ஒரு வித பயம்..
அப்பா என்ன சொல்வார் என்று நினைத்து…
அவனை ஆபிஸ் ரூமில் அமரச் சொல்லிவிட்டு அவர்கள் இருவருக்கும் ஜூஸை எடுத்துக் கொண்டே வந்தார்…
அப்பா நானே வாங்கி இருப்பேன் , நீங்க எதுக்கு எடுத்து வந்தீங்க என்றான்…
பரவாயில்ல டா.. என்று சொல்லி அவனிடம் ஒன்றைக் கொடுத்தார்…
சாரி ப்பா; அப்பா உன்னை ஹர்ட் பண்ற மாதிரி பேசியிருந்தா என்று சொல்ல..
அப்பா என்ன பேசறீங்க என்று தடுமாறினான் அரவிந்த்…
நான் இன்னும் பேசி முடிக்கல என்று சொல்ல..
ம்ம் சொல்லுங்க அப்பா என்றான் மெதுவான குரலில்…
கல்யாணம் அப்டிங்கறது ஒரு ஃபங்ஷன் மட்டும் கிடையாது; நீ ஒரு பொண்ண வாழ்க்கை முழுக்க கை பிடிச்சு நிம்மதியா வாழப் போற வாழ்க்கை…
பொண்ணுங்க பூ மாதிரி ரொம்ப அழுத்தம் கொடுத்தா அவங்க மனசு கசங்கிடும்..
அவங்கள நீ புரிஞ்சு உன்னை புரிய வைக்கனும்…இது ஒன்னும் சினிமா இல்லை பார்த்த உடனே காதல் வரதுக்கு..
நீ செய்யற சின்ன சின்ன விஷயம் கூட உங்க ரெண்டு பேருக்கும் புரிதல்
இருக்கனும்..
அதுக்கு நீ பொறுமையா ஹேண்டில் பண்ணணும் புரிஞ்சுதா?
உன் அண்ணண பாரு அவன் கண் அசைவில அவன் என்ன சொல்றான்னு திவ்யா புரிஞ்சி செய்வா…அதுல அவங்க புரிதல் தெரியுது.. நீயும் அபிஷேக் மாதிரி நடந்துக்கன்னு சொல்ல மாட்டேன்… ஆனா பொறுமையாக ஹேண்டில் பண்ணு…
இது வரைக்கும் நீ எங்க பையன்..இனிமேல் நீ ஃபேமிலி மேன் ஆகப்போற வாழ்த்துக்கள் என்றார் சுகுமார்..
அரவிந்த் உடனே அவன் தந்தையை கட்டிப்பிடித்து கொண்டான்..
சாரி ப்பா , நான் தான் கொஞ்சம் தப்பு பண்ணிட்டேன்… புரிஞ்சு நடந்துக்கறேன் அப்பா என்றான்…
மனது விட்டு பேசிய பிறகு இருவருக்கும் ஆறுதலாக இருந்தது…ஓகே அப்பா டைம் ஆச்சு நான் கிளம்புறேன் என்று கிளம்பி விட்டான்…இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்..
ஆபீஸ் சென்றவுடன் தன் அம்மாவுக்கு அழைத்து தன் அப்பா கூறியதை சொல்ல;
நெஜமாவே அட்வைஸ் தான் செய்தாரா இல்லை ரெண்டு அடி கொடுத்தாரா என்று கேட்க ?. உன் கிட்ட சொன்னேன் பாத்தீங்களா? என்று போன் கட் செய்து விட்டான்..
அவருக்கு சந்தோசம் தான் ஆனாலும் அவனிடம் வம்பு வளர்ந்தார்…
அப்படியே நாட்கள் ஓடி விட ..
நாளை நிச்சயத்திற்கு ஆவளோடு தயாராகினர் இரு குடும்பமும்…
திவ்யாவின் பெற்றோர், அவளுடைய அக்கா ரம்யாவும் கணவன் குழந்தையோடு வந்து விட்டனர்..
தேவகியின் உறவினர்கள், சுகுமாரின் உறவினர்கள் என அவர்கள் வீடு ஒரே அமர்க்களமாக இருந்தது…
திவ்யாவக்கும் தேவகிக்கும் கொஞ்சம் கூடுதல் வேலை தான்.. ஆனாலும் எப்போதாவது தானே இப்படி உறவுகள் எல்லாம் சந்திக்க நேரம் கிடைக்கும் என்று அத்தனை வேலையிலும் சந்தோஷமாகவே செய்தனர்..
அடுத்த நாளும் விடிந்தது
அரவிந்த்க்கு சந்தோஷம்.. எப்போது அவளை பார்க்க போகிறோம் என்று ஆவல்..
முரட்டு சிங்கிள் இப்ப ரெடி டு மிங்கிள் என்று அவனை கிண்டல் அடித்து ஒரு வழியாக்கி விட்டனர்..
தேவகிக்கும் திவ்யா விற்கும் மண்டத்திற்கு தேவையான உடைகள், மோதிரம் எல்லாம் எடுத்து வைத்து; ஒருமுறைக்கு பல முறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டனர்.. குழந்தையை அவளுடைய அக்காவிடம் கொடுத்து விட்டதால் கொஞ்சம் ரிலாக்ஸாக வேலை செய்து கொண்டிருந்தாள்…
ஒரு பஸ் ஏற்பாடு செய்து இருந்தனர்..
ஒரு வழியாக அனைவரும் கிளம்பி மண்டபத்திற்கு சென்று கொண்டிருந்தனர்…
பிரகதியின் வீட்டில்
அனைவரும் தயாராகி கொண்டு; மண்டபத்திற்கு தேவையான பொருட்களை உறவினர்கள் துணையோடு எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள்…
பிரகதி அவளுடைய உடைகள் , மற்றும் சில பல மேக் அப் திங்ஸ் எல்லாம் ரெடியாக வைத்து இருந்தாள்..
கையில் மெஹந்தி நன்றாக சிவந்து இருந்தது…
இங்கும் அவளை கிண்டல் செய்து அவளை ஒரு வழியாக்கி விட்டனர்..
போதும் சாமி ஆள விடுங்க என்று கூறிய பிறகே அவளை விட்டனர்..
இங்கு அனைவருக்கும் பஸ் ஏற்பாடு செய்து இருந்தார்கள்…
ஆண்கள் இருவரும் உறவினர்கள் சிலருடன் மண்டபத்திற்கு முன்பே சென்று விட்டார்கள்…
மதிய உணவு, ஸ்டேஜ் டெக்கரேசன், இரவு உணவுக்கான முன் ஏற்பாடுகளை பார்க்க சென்று விட்டார்கள்…
பெண் வீட்டார் அனைவரும் வந்து விட; அவர்களை சாப்பிட வைத்து மேலே அவர்கள் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்….
பிரகதியும் அவள் அறைக்கு சென்று படுத்து இருந்தாள்… இன்னும் சிறிது நேரத்தில் மேக்ஓவர் ஆர்டிஸ்ட் வந்து விடுவார்கள்…
கீழே மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டனர் என ஒரு சிலர் அவர்களைப் பார்க்க சென்று விட்டார்கள்..
அரவிந்த் வந்ததில் இருந்து பிரதியை தேடினான்..
அவ ரூம்ல இருக்கா என்று திவ்யா சொல்ல; அவளை பார்த்து சிரித்து வைத்தான்..
மதிய உணவு அனைவரும் சாப்பிட்டு அவர்கள் பகுதிக்கு சென்று விட்டார்கள்… இன்னும் சிறிது நேரத்தில் நிச்சயம் வைப்பதாக அனைவரும் தயாராகினர்..
பிரகதிக்கு மிகவும் அழகாக மேக் அப் செய்து இருந்தனர்… திவ்யாவை அழைத்து அவளுக்கும் , ரம்யாவும், குழந்தையும் சேர்ந்தே மேக் அப் போட்டுக் கொண்டார்கள்…
பெரியவர்கள் அறிமுகப்படலம் நடத்திக்கொண்டு இருந்தார்கள்.. குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தார்கள்..
அரவிந்த்க்கு நிலை கொள்ளவே முடியவில்லை…அவளை எப்போது பார்போம் என்று இருந்தது…
பிரகதிக்கு மூச்சு எடுக்க முடியவில்லை…
ஒவ்வொருவராக வந்து பார்த்தபோது அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது…
பதட்டம் ஒருபுறம் இருந்தாலும் எப்படி அவனை சந்திக்க போகிறோம் என்று ஆவல் வேறு…
மேக்கப் பிடிச்சிருக்குமா.
இப்ப பக்கதில் தான் இருக்க போறோம் ..அது வேற அவளுக்கு மனதிற்குள் பட்டாம்பூச்சி பறந்தது…