பயமா இருக்கு ஜோதி மா; நாம வீட்டுக்கு போயிடலாம் வாங்க என்று கூற மேக்கப் போடும் பெண்ணோ அவர்களை ஒரு மாதிரி பார்த்து வைத்தாள்…
ஏய் என்ன சொல்ற; அப்படி எல்லாம் சொல்லக்கூடாது டா… கௌசிய வர சொல்லட்டுமா என்று கேட்க ?
கொஞ்சம் அழுகை குறைந்தது…
எனக்கு அப்பாவ பார்க்கனும் என்று கூறினாள்..
ஜோதியும் ஃபோன் செய்து அவர்களை அழைத்தார்…
அவர்களும் வந்து பார்க்க அழுதுகொண்டே தந்தையின் தோளில் சாய்ந்து அழுதாள்..
ஜோதி அவள் பேசியதை கூற கண்ணனுக்கு சங்கடம் ஆகிப்போனது…
பாப்பா இங்க பாரு சந்தோஷமான நேரத்தில இப்படி அழுகக் கூடாது டா..
அப்பா எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா..
நீ தேவதை மாதிரி அழகா இருக்க..
நீ என் அம்மா டா; டென்ஷன் ஆகாத.. மாப்பிள்ளை ரெடி ஆகி ஸ்டேஜ் க்கு வரப் போறாங்க டா.. இப்படியே வந்தா அவங்க ஏதாவது தப்பா நினைக்க போறாங்க டா…
மேக்கப் செய்ய வந்த பெண்ணை பார்த்து கொஞ்சம் சரி பண்ணி விடுங்க என்றார்..
அந்த பெண்ணும் செய்து விட்டார்..
என் ராசாத்தி என்று தன் பெண்ணுக்கு திருஷ்டி கழித்தார்.. அவள் சிரித்து விட்டாள்…
இப்போது அவளுக்கு ரிலாக்ஸாக இருந்தது..
அப்பாக்கு வேலை இருக்கு டா.. அண்ணி நீங்க கூட்டிட்டு வாங்க என்று கூறி சென்று விட்டார்…
இத மட்டும் கௌசி பார்த்தா அவ்ளோ தான்..
கொஞ்ச நேரத்தில என்னை டென்ஷன் பண்ணிட்ட பாப்பா.. சாரி மா என்றாள்…
நீ வெயிட் பண்ணு நான் வெளியே போயிட்டு வரேன் என்று சென்று விட்டார்…
அரவிந்த் பிரகதி வாங்கி கொடுத்த ஷர்ட் ஒன்றை அணிந்து இருந்தான்..
அவ்வளவு அழகாக இருந்தது… அவனுக்கும் பதட்டமாக இருந்தது…
அப்போது அபிஷேக் அவனுக்கு குடிப்பதற்கு காஃபி கொடுத்தான்..
பாத்து குடி டா.. ஷர்ட்ல கரை பட்டிட போகுது என்றான்…
பிறகு டேய் ஹேப்பி ஃபார் யூ..
நீ எப்போமே சந்தோஷமா இருக்கணும்…ஐ அம் ஷோ ஸோ ஹேப்பி டா என்று தம்பியை அணைத்து விடுவித்தான்…
பிரகதி ரெடி ஆகிட்டாளா என்று கேட்க?
ம்ம் ரெடி தான்… இன்னும் கொஞ்ச நேரத்தில பார்க்க தானே போற பிறகு என்ன டா..
சும்மா தான் … வந்ததுல இருந்து பார்க்கல டா என்றான் சலிப்பாக..
கொஞ்ச நேரம் டா என்று சொல்லி விட்டு அம்மா கொடுத்த ப்ரேஸலெட்டை அணிவித்து விட்டான்…
அவனை ஒரு முறை பார்த்து விட்டு பெர்ஃபக்ட என்றான்…
உறவினர் ஒருவர் மாப்பிள்ளைய கூட்டிட்டு வாங்க என்று கூற..
டேய் வா போலாம் என்று மேடைக்கு அழைத்துச் சென்றான்..
எல்லாருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அவன் இருக்கையில் அமர்ந்தான்..
பொண்ண அழைச்சிட்டு வாங்க என்று கூற;
ஜோதி பிரகதியின் கையை பிடித்துக் கொண்டு வந்தார்..
அரவிந்த் பக்கத்தில் அமர வைத்தார்..
அவள் அவனை பார்க்கவே இல்லை ..
ஆனால் அவனோ அவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான்….
அவளுக்கு கூச்சமாக இருந்தது..
மேடம் இங்க பாருங்க என்று ஃபோட்டோகிராஃபர் கூறினார்..
இருவரையும் அழகாக புகைப்படங்கள் எடுத்தார்..
பிரகதிக்கு அரவிந்த் வீட்டில் இருந்து நிச்சய புடவை கொடுக்க அவள் அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டு சென்று விட்டாள்…அதே போல் அரவிந்த்திற்கும் கொடுக்க அவனும் உடை மாற்ற சென்று விட்டான்…
அவள் அறைக்குள் சென்று நிச்சய புடவை உடுத்தி அலங்காரம் செய்து தயாராக இருந்தாள்..
புதுவித உணர்வாக இருந்தது.. மேம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க இந்த சாரி அழகா இருக்கு என்று மேக்கப் செய்து விட்ட பெண் கூறினாள்.. அவளும் தேங்க்யூ என்று கூறினாள்..
அங்கே அரவிந்த் ரெடி ஆகிக் கொண்டு இருந்தான்...
திவ்யா கேட்டதற்க்காக மேக்கப் போடும் பெண் வந்து அரவிந்துக்கு டச்சப் செய்து விட்டுச் சென்றார்…
கொழுந்தனரே செம ஸ்மார்ட்டா இருக்கீங்க…
ரெண்டு பேரும் அவ்ளோ அழகா இருக்கீங்க…
ஆல் தி பெஸ்ட் கொழுந்தனாரே என்று வாழ்த்தினாள் திவ்யா..
தேங்க்ஸ் அண்ணி என்று அரவிந்த் கூற..
அரவிந்த் மற்றும் பிரகதி இருவரும் மேடைக்கு ஒரே நேரத்தில் வந்து இருக்கையில் அமர்ந்தனர்…
யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ் பிரகதி என்று அரவிந்த் கூறினான்…
தேங்க்ஸ்..நீங்களும் அழகா இருக்கீங்க என்று கூறினாள்..
பிறகு உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து அவர்களுக்கு சந்தனம் குங்குமம் வைத்து வாழ்த்தினர்…
முதலில் அரவிந்திடம் மோதிரம் கொடுக்கப்பட்டது ..
அவன் பிரகதியின் கையை பிடித்து மோதிரம் போட்டான்… அவளுக்கு கை நடுக்கத்தில் இருந்தது…
பிறகு பிரகதியின் கையில் மோதிரம் கொடுத்தனர்…
அவள் மோதிரம் போடுவதற்கு முன்பாகவே அரவிந்தாகவே அவளிடம் கையை நீட்டினான்…
அவள் புன்னகையோடு அவனுக்கு மோதிரம் அணிவித்தாள்.. அரவிந்தின் பிரண்ட்ஸ் பாப்பர்ஸை வெடிக்க செய்தார்கள்… மோதிரம் மாற்றிய பிறகு இரு வீட்டு பெற்றோர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர்… பிறகு லக்கணப் பத்திரிகை வாசித்தனர்.. தாம்பூலம் மாற்றிக் கொண்டார்கள்..இரு வீட்டாருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி…
அனைத்தும் அழகாக புகைப்படம் பெற்றுக் கொண்டிருந்தது…
உறவினர்கள் ஒவ்வொருவராக சாப்பிட சென்றனர்.. இருவருமே மேடையில் இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள்..இப்பொழுது தான் இருவருக்கும் தனிமை கிடைத்தது…
அரவிந்த் திவ்யாவிடம் ஏதோ தனியாக பேசிக் கொண்டிருந்தான்… இவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை….
திவ்யா எங்கோ சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து பிரகதியிடம்” போட்டோகிராபர் கூப்பிடுறாங்க கொஞ்சம் போட்டோஸ் எடுக்கலாம் வா என்று கூறினாள்”…
அக்கா போட்டோஸ் எல்லாம் வேண்டாம் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு என்று கூறினாள் பிரகதி”..
அம்மா கிட்ட சொல்லிட்டேன்டா போட்டோகிராபர் தான் எடுப்பாங்க அன்னைக்கு மாதிரி அரவிந்த் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டான் என்று சொல்ல…
ஓகே அக்கா என்று சொல்லி கூடவே சென்றாள் பிரகதி..
போட்டோகிராபரோ ” மேம் நீங்க நெர்வஸா இருக்காதீங்க நார்மலா இருங்க அப்பதான் போட்டோஸ் நல்லா வரும் இதெல்லாம் ஒரு ஸ்வீட் மெமரிஸ் என்று கூற”..
அரவிந்த் பிரதியிடம் ரிலாக்ஸ் டி; கொஞ்ச நேரம் கழிச்சு போட்டோ எடுத்துக்கலாமா என்று கேட்டான்…
இல்ல வேணாம் இப்பவே எடுத்துக்கலாம் என்று கூறினாள்…
சிறிது நேரம் போட்டோக்களை எடுத்துக் கொண்டனர்…
அவர்களின் பக்கத்தில் யாரும் இல்லை…. இருவரும் தனியாக அமர்ந்து கொண்டிருந்தார்கள்…
இருவரிடையே மௌனம் தான் பேசிக் கொண்டிருந்தது..
அரவிந்த் குரலை செருமிக்கொண்டு
அவனே பேச ஆரம்பித்தான்…
கொஞ்சம் ரிலாக்ஸா இரு, பார்க்க நெர்வஸா இருக்க..
இப்பொழுது பிரகதி நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்..
உன்கிட்ட நிறைய பேசணும் போல இருக்கு.. ஆனா என்ன பேசறதுன்னு தெரியல?
நீ அவ்ளோ அழகா இருக்க… நீ மட்டும் சரின்னு சொன்னா இப்பவே என் கூட கூட்டிட்டு போய்டுவேன் டி..
அவளுக்கு அழகான அவஸ்தை ஆக இருந்தது..
அவன் இன்னும் பேச பேச அவளுக்கு கன்னங்கள் சிவந்தது…
நானே பேசிட்டு இருக்கேன்..
உனக்கு என்கிட்ட எதுவும் கேட்கணும்னு தோணலையா என்று கேட்டான்?
உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா என்று கேட்டாள்?.
அவ்வளவுதானா இதுதான் கேட்கணும்னு நினைச்சியா என்றான்…
இல்லைங்க இப்போதைக்கு இவ்வளவுதான்.. நான் வேணுமா நான் மேரேஜ்க்கு அப்புறம் நிறைய கேட்கிறேன் என்று சொன்னாள்…
இப்ப மட்டும் இங்கே யாரும் இல்லனா நான் உனக்கு ஒரு கிஸ் கொடுத்து இருப்பேன் என்றான்…
அவள் திருத்திருவென முழித்துக் கொண்டிருந்தாள்..
இப்படி எல்லாம் பேசாதீங்க எனக்கு பயமா இருக்கு நான் ரூமுக்கு போறேன் என்று எழுந்து செல்ல பார்த்தாள்…
ஹேய் சும்மா சொன்னேன் டி, இங்கேயோ உட்காரு என்று சொன்ன பிறகு தான் அவன் அருகில் அமர்ந்தாள்…
பிறகு திவ்யாவும் அபிஷேக்கும் வந்து அவர்களை சாப்பிட அழைத்துச் சென்றனர்… நால்வரும் ஏதேதோ பேசியபடி சாப்பிட்டு முடித்தனர்…