ஒரு வழியாக நிச்சயம் முடிந்து அனைவரும் வீடு திரும்பி இருக்க… இரண்டு நாட்களில் அவர்களின் வாழ்க்கை இயல்பாக மாறியது…
திருமணத்திற்கு இரண்டு மாதங்கள் என்ற நிலையில் பத்திரிக்கை, ஜவுளி மண்டபம் பார்ப்பது அனைத்து வேலைகளும் வேகமாக நடந்து கொண்டிருந்தன…
அருணாச்சலமும் ஜோதி அவர்கள் வீட்டை காலி செய்து வாடகைக்கு விட்டு அனைவரும் ஒன்றாக இருந்தனர்…
இதற்கிடையே பிரகதியும் அரவிந்தும் கொஞ்சம் கொஞ்சமா பேசத் தொடங்கி இருந்தனர்..
பிரகதி முதலில் தயங்கினாலும் பிறகு நன்றாகவே பேச ஆரம்பித்தாள்…
திவ்யாவும் நிச்சயம் முடிந்து வீட்டிற்கு சென்று ஒரு வாரம் தங்கி விட்டு வந்தாள்….
திருமணத்திற்கு இரண்டு வாரம் மட்டுமே இருந்தது…
இருவருமே ஆவலாக எதிர்பார்த்து காத்து இருந்தனர்…
அம்மா என் காலேஜ் பிரண்ட்ஸ் எல்லாம் வராங்க நான் போயிட்டு அவங்களுக்கு இன்விடேஷன் கொடுத்து வந்துடறேன் என்றாள்..
இன்னும் ரெண்டு வாரம் தாண்டி இருக்கு.. தனியா எல்லாம் போக வேண்டாம் என்று தடை போட்டார்…
இப்ப போனா ஒரே டைம்ல எல்லாருக்கும் கொடுத்துட்டு வந்துடுவேன் இல்லன்னா தனித்தனியா எல்லாரும் வீட்டுக்கு போகணும் என்று மறுத்து பேசினாள்..
சரி பார்த்து போயிட்டு வா என்றார்..
அவளுடைய வண்டியை ஸ்டார்ட் செய்யும் அது ஸ்டார்ட் ஆகவில்லை….
அம்மா நீ ஸ்டார்ட் ஆகவில்லை. நான் ஆட்டோல போய்ட்டு வரட்டுமா ..
போயிட்டு சீக்கிரம் வந்துரு என்று மகளை அனுப்பி வைத்தார்..
அவளும் தோழிகளுக்கு இன்விடேஷன் கொடுத்து விட்டு வருவதற்கு பலமுறை அவள் அம்மா கால் செய்துவிட்டாள்..
இதோ கிளம்பிட்டேன் வந்துடுவேன் சீக்கிரம் என்று கால் டாக்ஸி புக் செய்தாள்…
டாக்ஸி வந்துவிட அவள் கிளம்பி விட்டாள்..
வீட்டுக்கு வந்து விட்டாள்..
ஏண்டி பத்து நிமிஷத்துல வரேன்னு சொல்லிட்டு அரை மணி நேரம் ஆயிடுச்சு; ஏன் லேட்டு, ஏன் டி வேர்க்குது என்று கேட்க அவளோ
பதட்டத்துடன்
அம்.. அம்மா அஅஅஅது வந்து நம்ம பஸ் ஸ்டாப் கிட்ட கார் ஸ்டாப் ஆயிடுச்சு… நடந்து வந்தேனா.. இருட்டா இருந்துச்சு அதனால பயமா இருந்தது மா என்று சொல்லி முடிக்க..
அவளை அடித்து விட்டார் கௌசல்யா..
ஏம்மா கல்யாணம் ஆகப் போற பொண்ண அடிக்கற உனக்கு அறிவு இருக்கா என்ற ஜோதி மகளை சமாதானம் செய்து கொண்டிருந்தாள்..
அக்கா இந்த நேரத்துல நடந்து வரா.. வழியில ஒரு கடை வீடு கூட இல்லை… தனியா வந்திருக்கா.. ஃபோன் பண்ணி இருந்தா நாம போயிருக்கலாமே அக்கா என்று சொல்ல..
ஏன் கண்ணு அம்மா சொல்றது சரிதான..
இல்ல பெரியம்மா நான் வெயிட் பண்ணி பார்த்தேன் ஆட்டோ ஏதும் வரல; போன் ல சார்ஜ் இல்ல அதனால தான் நானே தனியா வந்துட்டேன் என்று அழத் தொடங்கினாள்…
ஏதாவது சொன்னா போதும் இப்படி ஆரம்பிச்சிடுவா..
அழுது வைக்காத டி..நல்ல நாளும் அதும் எப்படி அழுகற பாரு…
அக்கா நீங்களாவது சமாதானப்படுத்துங்க என்று கௌசல்யாவும் ஒரு பக்கம் அழுக ஆரம்பித்து விட்டார்…
கௌசி அவளுக்கு சாப்பிட ஏதாவது எடுத்து வா என்று அனுப்பி விட்டார்..
பிரகதி கண்ணு நீ போய் குளிச்சிட்டு வா டா..
அம்மா ஏதாவது கோவத்துல சொல்லி இருப்பா…
நீ டல்லா இருந்த அப்பா வந்து அம்மாவை தான் திட்டுவாங்க…
அவளும் குளிக்க சென்றாள்; அழுகை மட்டும் நிற்கவே இல்லை…
வெளியே நின்ற ஜோதியோ எவ்ளோ நேரம் குளிப்ப சீக்கிரம் வா என்று கதவு தட்டும் சத்தம் கேட்க.. சிறிது நேரத்தில் வெளியே வந்தாள்..
ஜோதி அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டார்…
டிவியில் நியூஸ் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்…
அவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் யாரோ மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்று லைவ் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது…
இதுக்கு தான் சொல்றது தனியா நடந்து வரக்கூடாதுன்னு..
பாருங்க நம்ம ஏரியா பக்கத்தில தான் நடந்திருக்கு என்று புலம்பிக் கொண்டே இருந்தார்…
அம்மா எனக்கு தூக்கம் வருது நான் போய் தூங்கறேன் என்று மேல் அறைக்கு சென்று படுத்து இருந்தாள்…
அருணாச்சலம் குடும்பம் வந்த பிறகு அவள் மேல் அறைக்கு சென்று விட்டாள்..
பாருங்க நம்ம பதட்டம் இவளுக்கு புரிய மாட்டேங்குது…
அவ சின்ன வயசு கல்யாணம் ஆனா பக்குவம் வந்திடும் கௌசி… இனிமேல் அவள தனியா அனுப்ப வேண்டாம் சரியா என்று கேட்டுக்கொண்டே துணி மடித்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்…
அரவிந்த் பிரகதிக்கு அழைக்க அவள் எடுக்கவே இல்லை..
இருவது தடவையாவது அழைத்து இருப்பான்..
சரி காலையில பேசிக்கலாம் என்று விட்டான்…
என்ன கொழுந்தனாரே ரொம்ப டல்லா இருக்கீங்க…
பிரகதி பேசல போல அதான் இப்படி இருக்கான் என்று தேவகி சொல்ல …
நீங்க எதுக்கு என்ன நோட் பண்ணிட்டு இருக்கீங்க.. உங்க பெரிய பையனும் பெரிய மருமகளும் தான் பேசிட்டு இருக்காங்க அவங்க ரொமேன்ஸயும் கொஞ்சம் பாருங்க என்று சொல்லி தன் அறைக்கு ஓடி விட்டான்..
திவ்யாவிற்கு வெட்கம் வந்து விட்டது…
அவள் தேவகியிடம் வேறு ஏதோ சொல்லி பேச்சை மாற்றினாள்…
அங்கே பிரகதியின் வீட்டில்:
எங்க பாப்பா வ காணலை என்று கண்ணன் கேட்க?
அவ டயர்டா இருக்குன்னு தூங்க போயிட்டா என்று சொல்ல..
சரி சரி என்று இரவு உணவை பெரியவர்கள் சாப்பிட..
இன்று அவர்கள் பகுதியில் நடந்த கொலையை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள்..
அப்பொழுது கௌசல்யா மாலை வீட்டில் நடந்த விஷயத்தை சொல்ல..
அவருக்கு கோபம் வந்து விட்டது..
அவள எதுக்கு அடிச்ச.. இன்னும் ரெண்டு வாரம் தான் நம்ம கூட இருக்கப் போறா..
உன்னை என்ன பண்ணறது என்று கணவன் மனைவி இருவருமே வாக்குவாதம் செய்தனர்..
யாரை சமாதானம் செய்வது என்று தெரியாமல் மற்ற இருவரும் முழித்துக் கொண்டிருந்தனர்…
வீட்ல விஷேசத்த வச்சுட்டு இப்படி சண்டை போடுறது நல்ல இல்லை என்று கூற, அமைதியாகி விட்டனர்..
பிறகு தூங்கச் சென்றனர்…
காலை மணி எட்டு ஆகியும் பிரகதி கீழே வரவில்லை…
கண்ணன் தான் சென்று பார்த்தார்..
அவளுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது..
உடனே அருகில் இருக்கும் மருத்துவமனை அழைத்துச் செல்ல…
அவர்கள் காய்ச்சல் அதிகமாக இருப்பதால் வேறு பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்…
இரண்டு நாட்கள் கண் விழிக்கவே இல்லை…
மூன்றாம் நாள் காய்ச்சல் குறைந்து விட்டது…
அந்த இரண்டு நாட்களுக்குள் கண்ணன் கௌசியை அடிக்காத குறை தான்..அவ்வளவு பேசி விட்டார்…
அரவிந்த் வீட்டிற்கும் பிரகதிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவித்தனர்…
அரவிந்திற்கு மிகவும் வருத்தமாக இருந்தது…
நான்கு நாட்களுக்குப்பின் டிஸ்சார்ஜ் செய்து விட்டனர்…
அவர்களுடன் அரவிந்த், தேவகி இருவரும் வந்தனர்…
அவள் சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்…
மருமகளே கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு; சீக்கிரம் ரெடியாகிடு.. இவனோட தொல்லை தாங்க முடியல..
அம்மா சும்மா இருங்க..
ஏதேதோ பேசி அவளை சிரிக்க வைத்தான் அரவிந்த்…
வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்க..
வெளியே போலிஸ் அதிகாரி இருவர் இருந்தனர்… அவர்கள் ஐடி காட்டினர்..
உள்ள போய் பேசலாம் சார் என்று அவர்கள் கேட்க .. கண்ணன் யோசனையாக சரி வாங்க என்று அழைத்தார்…
உள்ளே வந்தவர்கள் உங்க பொண்ணு பிரகதி தான் என்று கேட்டனர்..
சார் இதெல்லாம் எதுக்கு
விசாரிக்கரிங்க என்று அரவிந்த் கேட்க..
அஞ்சு நாள் முன்னாடி ஒரு கொலை நடந்தது தானே அதை பத்தி விசாரிக்க தான் என்று கூற வீட்டில் அனைவரும் அதிர்ச்சி ஆகினர்..
பிரகதி மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டாள்…