உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

4.9
(14)

அப்பா அரவிந்த் ஏன் கோபமா போறான் என்று கேட்க?

அங்கு நடந்ததை எல்லாம் கூறி முடிக்க..

அம்மா ஏன் மா இப்படி பேச உங்களுக்கு எப்படி மனசு வந்திச்சு..

உங்களுக்கு ஒன்னு தெரியுமா?

திவ்யா கன்சீவா இருக்க விஷயம் அவளுக்கே தெரியாது?

அப்படி இருக்கும் போது பிரகதிய தப்பு சொல்றது சரிதானா?

அப்படி பார்த்தா குழந்தை அபார்ட் ஆக நீங்க தான் காரணம்?

டேய் என்னடா இப்படி எல்லாம் பேசற.. அவ ஒருத்திக்காக என்னை எதிர்த்து பேசறீங்க..

அம்மா நீங்க அவளுக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சும் கல்யாணத்தில ஒரு வேலை கூட நீங்க செய்யல..

திவ்யா தான் இழுத்துப் போட்டு செய்தா..

உங்க முன்னாடி எவ்ளோ டைம் அவ ஹெல்த் பத்தி விசாரிச்சிருப்பேன்..

அமைதியா தான இருந்தீங்க..

வேலை டென்ஷன்ல அவளுக்கு எப்படி  இதெல்லாம் யோசிக்க தோணுமா?

தப்பு உங்க மேல வெச்சிட்டு இப்படி எல்லாம் பேசாதீங்க?

அப்போ என்னால தான் இப்படி ஆச்சு என்று அழுக ஆரம்பித்து விட்டார்…

அம்மா உங்கள தப்பா சொல்லவே இல்லை..

உங்கள வலிக்கற மாதிரி தான் அவங்க ஃபேமிலிக்கும் இருக்கும்..

என்ன பேசறோம்ன்னு யோசிச்சு பேசணும்..

அதுவரை கத்தி பேசிக் கொண்டிருந்த தேவகி மனதளவில் உடைந்து போய் ஓரமாக அமர்ந்து கொண்டார்.. அவருக்கு அவர் மேலேயே கோபமாக வந்தது…

திவ்யா உறங்கிக் கொண்டிருந்தாள்..

பேத்தியை எடுத்துக் கொண்டு கடைக்கு சென்று விட்டார் சுகுமார்..

தேவகியை‌ யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது கஷ்டமாக இருந்தது…

சிறிது நேரத்தில் கண் விழித்தாள்..

எழுந்து அமர முயன்றால்..

ஹேய் வேண்டாம் படு..

அபி எனக்கு என்ன ஆச்சு?

அது வந்து நான் சொல்றேன் நீ தைரியமா இருக்கனும்..

ம்ம் சொல்லுங்க..

நீ இந்த ஜூஸ் குடி..

இப்ப குடிச்சிட்டேன் தானே சொல்லுங்க..

ஏன் எனக்கு வயிறு ரொம்ப பெயினா இருக்கு..

அது வந்து உனக்கு அபார்ட் ஆயிடுச்சு திவ்யா என்று அவளை அணைத்து கொண்டு அவனே அழுது விட்டான்..

அபி நீங்க சொல்றது உண்மையா?..

நான்.. எனக்கு எப்படி தெரியாம போச்சு…

நான் தப்பு பண்ணிட்டானா அபி..

ஒரு உயிர் எனக்குள்ள இருந்துச்சு.. நான் சரியாக பார்த்துக்களையா?

அது நான் எப்படி கவனிக்காம இருந்தேன் என்று தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்…

சத்தம் கேட்டு உள்ளே வந்த தேவகி அவள் அழுவதை பார்த்து இன்னும் குற்ற உணர்ச்சியாக இருந்தது..

ஐயோ சொன்னா கேளு டி தெரியாம நடந்ததுக்கு நாம என்ன டி பண்ண முடியும்..

தெரிஞ்சும் யாராவது இப்படி செய்வார்களா…

மீண்டும் மீண்டும் அவளை அடித்துக் கொண்டு அழ..

அவளை சமாதானம் செய்வதற்குள் ஒரு  மாதிரி ஆகிவிட்டது…

சமாதானம் ஆனாலும் அழுகை நிற்கவில்லை….

திவ்யா இப்படி அழுகாத மா; ஜுரம் வந்திடும்…

அவள் யார் சொல்வதும் கேட்கவில்லை…

அம்மா நான் டாக்டர கூட்டிட்டு வரேன் என்று சென்று விட்டான்..

திவ்யா வருத்தப் படாத மா…

கஷ்டமா இருக்கும் தான்..ஆனா தைரியமா இருக்கனும் புரியுதா..

என்னை மன்னிச்சிடு மா..

இப்படி ஆனதுக்கு நானும் ஒரு காரணம் என்று சொல்லி புடவை முந்தானையால் வாயை மூடி அழுதார்..

தேவகி பேசுவதை அவள் கேட்ட மாதிரி தெரியவில்லை.. அழுது கொண்டே இருந்தாள்..

டாக்டர் வர அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டாள்..

எப்படி ஃபீல் பண்றீங்க திவ்யா..

பெயின் இருக்கா என்று

டாக்டர் பரிசோதனை செய்து விட்டு பேச ஆரம்பித்தார்

” அபிஷேக் உங்க மனைவிக்குத் திடீரென்று ஏற்பட்ட இரத்த அழுத்த குறைவு, வொர்க் ஸ்ட்ரெஸ் காரணமாகத்தான்  அபார்ட் ஆகி போச்சு.”

அவர் ஒரு கணம் நின்று மெதுவாகச் சொன்னார்

“இது உங்க தவறல்ல. உடல்நிலைதான் காரணம். திவ்யா இப்போ மிகவும் பலவீனமா இருக்காங்க. சில மாதங்களுக்கு அவங்க உடம்புக்கு முழு ஓய்வு கொடுக்கணும்.”

அப்ப தான் சரியாகும்..

அபிஷேக் கண்களில் கண்ணீர் வழிந்தது.

தேவகி நடுங்கிய குரலில் கேட்டார்:

“டாக்டர்… இனிமேல் எந்த பிரச்சினையும் இல்லை தானே”.. இல்லங்க பிரச்சினை எதுவும் இல்லை..

ஆனா அவங்க உடம்பு முழுசா சரியாகிக் கொள்ள சில மாதங்கள் காத்திருக்கணும். மன அழுத்தம் இல்லாம பார்த்துக்கோங்க. இப்போதைக்கு மனதளவிலான அமைதியும் அன்பும் அவங்களுக்கு மிகவும் தேவை.”

ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்..

டேக் கேர் திவ்யா..

நெக்ஸ்ட் விசிட் எப்போன்னு நர்ஸ் சொல்லுவாங்க..

ஹெல்தியா சாப்பிட வைங்க என்று வெளியே சென்று விட்டார்..

அம்மா என்று அழைத்த அபிஷேக் “அத்தை மாமா வந்துட்டு இருக்காங்க..

திவ்யாவும் பாப்பாவும் அவங்க கூட கிளம்பிடுவாங்க”…

நானும் அங்க டூ டேய்ஸ் ஸ்டே பண்ணிட்டு பெங்களூர் போறேன் மா..

நெக்ஸ்ட் வீக் வரேன்..

நான் நல்லா பாத்துக்குவேன் டா..

இல்ல மா; நீங்க  உங்களுக்கு எதுக்கு சிரமம் தரணும் என்று தயக்கத்துடன் எப்படியோ கூறினான்…

ஏற்கனவே யாரும் பேசவில்லை..

இவனும் இப்படி பேசுகிறான்..

எல்லாரும் தன்னை ஒதுக்கி விட்டார்கள் என்ற உணர்வு…

அரவிந்த்க்கு ஃபோன் பண்ணா எடுக்கல பா?

நானும் ட்ரை பண்ணி பார்த்தேன் ஆனா எடுக்கல..

தேவகி ஏதோ பேச முயற்சிக்க  .

அம்மா!  பிறகு பேசிக்கலாம் என்று வெளியே சென்று விட்டான்..

திவ்யாவின் பெற்றோர் இருவரும் வந்து விட்டனர்…

மகள் சோர்வாக இருப்பதை பார்த்து அவர்களுக்கு மனம் வருந்தியது..

நேத்து இந்நேரம் ஓடியாடி வேளை செய்து இருந்தவள்.. இன்னைக்கு இப்படி படுத்து இருக்கா.

இருவரும் கொஞ்சம் தைரியமானவர்கள் தான்..

அதனால் வருத்தம் இருந்தாலும் நிதானமாகவே இருந்தார்கள்…

இங்கு நடந்தது அவர்களுக்கும் தெரியும் ஆனால் காட்டிக்கொள்ளவில்லை…

டிஸ்சார்ஜ்  செய்து திவ்யாவை அழைத்துக்கொண்டு வர” சுகுமார் குழந்தையை கூட்டிக்கொண்டு வந்தார்”..

குழந்தைக்கு சேராது மா அதனால் தான் இப்ப கூட்டிட்டு வந்தேன்…

ஊருக்கு போயிட்டு நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க..

சரி மாமா! என்று அவள் தலையாட்டினாள்..

அம்மா நீங்க அப்பா கூட வீட்டுக்கு போங்க..

நாங்க கரூர் போறோம்..

நெக்ஸ்ட் வீக் வரேன்… வீட்டுக்கு வரலையா?

இல்லை மா அலைச்சல் இருக்கும் அதனால தான்…

திவ்யா விற்கு நடந்த பிரச்சினை தெரியாததால் ஏன் பிரகதி வரல, அரவிந்த் கூட காணோம்…

நான் தான் வீட்டுக்கு போக சொல்லிட்டேன் என அபிஷேக் கூறி

அவளை அழைத்துக்கொண்டு சென்று விட்டான்…

திவ்யா வின் தந்தை பொதுவாக தேவகியிடமும், சுகுமாரிடமும்..

நம்ம பசங்கல தாண்டி நமக்கு எதுவும் இல்லை…

ஆயிரம் கோபம் இருந்தாலும் நம்ம வீட்டுக்கு வந்த பொண்ண இப்படி பேச கூடாது…

வார்த்தையை விட்டா அள்ள முடியாது…

நான் என் திவ்யாவை தைரியமா வளர்த்து இருக்கேன்.. இந்த விஷயத்தை அவ கடந்து போயிடுவா… அந்த தைரியம் இருக்கு அவ கிட்ட…

பிரகதியும் என் பொண்ணு மாதிரி தான்…

பேசி பிரச்சினைய முடிங்க..

நாங்க கிளம்பறோம் என்று சென்று விட்டார்கள்..

யாரும் வீட்டுக்கு கூட வரவில்லை.

மிகப்பெரிய தவறு செய்து விட்டது போல இருந்தது தேவகிக்கு…

சுகுமாருடன் காரில் வீட்டுக்கு கிளம்பி விட்டார்..

ஆனால் பேசவே  இல்லை..

வீட்டில் இறக்கி விட்டு நான் வர லேட் ஆகும் என்று பதிலுக்கு கூட காத்திருக்காமல் கிளப்பி விட்டார்…

கொஞ்சம் நிதானமாக இருந்திருக்க வேண்டுமோ? என்று காலம் கடந்து யோசனை வந்தது…

அரவிந்த் அவனுடைய ஆபிஸ் ரூமில் யோசனையாக  கண்களை மூடி அமர்ந்து இருந்தான்..அவள் சென்றுவிட்ட பின் அவள் நியாபகம் தான்..

கண்களை மூடியவாரே பிரகதி  அவனை முதல் முறையாக “அரவிந்த்…” என்று கூப்பிட்ட தருணம் நினைவுக்கு வந்தது.

அந்த மென்மையான குரல்‌..

ஏண்டி! என்னை விட்டு போன என்று மனம் கதறிக் கொண்டு இருந்தது..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!