பிரகதி வீட்டுக்கு வந்த பிறகு, தனியாக அறையில் அமர்ந்தாள்.
அவளின் மனதில் அரவிந்த் மட்டும் தான் இருந்தான்..பிரகதி ஜன்னல் அருகே பார்த்து இருந்தாள்..
ஜன்னல் வழியே வரும் நிலவொளி அவள் முகத்தில் விழுந்தது.
அவள் கையில் அரவிந்த் கட்டிய தாலியை எடுத்து தடவிடப் பார்த்துக் கொண்டாள்.
அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது.
அரவிந்த் கால் செய்து பேசுவான் என்று நினைத்திருக்க அவன் அழைக்கவில்லை…
அவளுக்கு கால் எடுத்து பேசவும் பயமாக இருந்தது…
அவள் போகும் போது அவன் போகதேன்னு சொல்லும்போது அவனுக்கு எப்படி வலித்து இருக்கும்…
நான் சரியான முட்டாள்..
அம்மா சொன்னதும் இங்க வந்திருக்க கூடாது…
காலையில் நடந்ததை யோசித்து இருந்தாள்…
ஒழுங்கா என் கூடவே வந்திடு என்று மகளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார் கௌசல்யா…
அம்மா என்ன பண்றீங்க நான் வரல மா ப்ளீஸ் என்று கெஞ்ச..
இங்க இருந்தா அந்த அம்மா பேசியே உன்னை ஏதாவது செஞ்சிடுவாங்க டி…
அம்மா அரவிந்த் கூப்பிடறாங்க; இதெல்லாம் வேண்டாம்…
திவ்யா அக்கா எப்படி இருக்காங்க தெரியுமா?
இப்ப தான் நான் கூட இருக்கனும் என்றாள் திவ்யா..
அப்படியா! அப்ப உன் புருஷன் ஏன் அந்த அம்மா கிட்ட பேசாதீங்க ன்னு சொல்லவே இல்லையே..
உனக்காக ஒரு வார்த்தை கூட பேசாம தான் இருந்தாரு என்று கௌசல்யா கூற..
ஏம்மா , அப்படி எல்லாம் இல்லை என்று அழுது கொண்டே இழுபட்டு சென்றாள்…
பின்னாடியே மற்றவர்களும் வந்தனர்…
ஏண்டி உனக்கு புத்தி இருக்கா?
கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆச்சு.. அதுக்குள்ள இப்படி பிரிச்சு கூட்டிட்டு வர..
வா இப்பவே கொண்டு போய் விட்டுட்டு வரலாம் என்று கண்ணன் அழைக்க..
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.
அந்த அம்மா பேசற பேச்சுக்கு இவ ஒன்னும் அங்க போய் இருக்க தேவை இல்லை..
இப்ப வண்டி எடுங்க.. இல்லைன்னா நான் போய் ஏதாவது பண்ணிக்குவேன் மிரட்டினார்..
சுற்றி இருந்தவர்கள் அனைவரும் பார்க்க; வேறு வழி இல்லாமல் கிளம்பினர்..
வீட்டுக்குள் நுழைந்தது தான் தாமதம் கண்ணன் கௌசல்யாவை பளார் என்று அறை விட்டார்..
என்ன டி உனக்கு அவசரம் அதுக்குள்ள..
எத்தனை பிரச்சினை கடந்து கல்யாணம் நடந்து இருக்கு..
அதுக்குள்ள இப்படி பிரிச்சு கூட்டிட்டு வந்துட்ட..
அன்னைக்கு உன் பொண்ணு போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தப் போ மாப்பிள்ளை தான் அவளுக்கு தைரியமா கூட இருந்தாங்க..
ஒரு சொல் தாங்க மாட்டியோ…
அன்னைக்கு உதவி செய்த அப்போ நல்லா இருந்துச்சா என்று கோபம் தீர மீண்டும் இரண்டு மூன்று அடி அடித்து விட்டார்..
கௌசல்யா ஒரு மூலையில் அமர்ந்து அழுக ஆரம்பித்து விட்டார்..
டேய் என்னடா இது? கொஞ்சம் பொறுமையா இருங்க..
இப்படி அடிச்சா சரியா போய்விடுமா..
அண்ணா இவளால என் பொண்ணு வாழ்க்கைக்கு ஏதாவது ஆச்சு மனுஷனா இருக்க மாட்டேன் என்று கூறி அறைக்கு சென்று விட்டார்..
அவருக்கு கோபத்தில் மூச்சு வாங்கியது… உடனே படுத்து விட்டார்..
ஏய் கௌசல்யா உன்னோட அவசர புத்தி எங்க கொண்டு வந்து விட்டிருக்கு பாரு ..
புள்ள விஷயத்தில இப்படி தான் முடிவு எடுப்பாங்களா?
அப்புறம் நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்..
தம்பிக்கு கோபப்பட்டா உடம்பு சரியில்லாம போகும்ன்னு தெரியாதா என்று ஜோதி சமாதானம் செய்வதற்கு பேசிக் கொண்டிருந்தார்…
உனக்கு என்ன தான் மா பிரச்சினை..
கல்யாணம் ஆகலன்னு வருத்தப்பட்ட..
இப்ப என் அரவிந்த் கிட்ட இருந்து என்ன பிரிச்சிட்ட! என் கூட பேசாத என்று மேலே இருக்கும் அவள் அறைக்கு சென்று அழுக ஆரம்பித்து விட்டாள்…
யார் வந்து அழைத்தும் கதவை திறக்கவில்லை..
இப்படியே காலையில் நடந்ததை யோசித்து இருந்தாள்…
இப்ப அரவிந்த் என்ன பண்ணிக்கிட்டு இருப்பாங்க என்று யோசித்தாள்..
ஆனாலும் பேசுவதற்கு பயம்…
அவன் ஏதாவது கேட்டால் என்ன பதில் சொல்வது என்று தயக்கம்…
இவள் அரவிந்த் தானே இவள் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் இவளை விட மாட்டானே.. இவளுடைய இந்த தயக்கமே இருவருக்கும் விரிசலை ஏற்படுத்தியது.. கட்டிலில் படுத்து ஏதேதோ யோசித்துக் கொண்டே அவளை அறியாமல் தூங்கி விட்டாள்..
இரவு பத்து மணிக்கு மேல் தான் சுகுமார் அரவிந்திடம் எப்படியோ பேசி வீட்டுக்கு வர வைத்தார்..
சாப்பிட சொல்ல ” எனக்கு பசிக்கல என்று சென்று விட்டான்”..
அரவிந்த் மேலே வந்து, அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டான்.
அவன் தலையை கைகளால் பிடித்து கட்டிலில் பொத்தென்று விழுந்தான்..
இரவு முழுக்க தூக்கம் வரவில்லை.
காலியாய் இருக்கும் படுக்கையைப் பார்த்தவுடனே,
பிரகதியுகடன் திருமணத்திற்கு முன் பேசிய நாட்கள் எல்லாம் நினைவுக்கு வந்து மனம் வருந்தியது.
நேற்று இந்நேரம் இருந்த நிலை என்ன..
இப்பொழுது இருக்கும் நிலை என்ன..
கோபத்தில் தலை முடியை பிடித்து இருக்கினான்..
அவனுக்கே வலித்து விட்டது போல..
ச்சே என்ன பைத்தியக்காரன் மாதிரி இப்படி பண்றேன் என்று தனக்குத்தானே திட்டிக் கொண்டான்..
ஏண்டி என்னை விட்டுப் போன..
நீ எனக்கு வேண்டாம்னு நெனச்சு இருந்தா எப்பவோ விட்டு போயிருப்பேனே ..
ஒரு ஃபோன் பண்ணி கூட பேச முடியல உன்னால..
உனக்காக நான் என்ன வேணும்னாலும் நான் செய்வேன் டி.. ஆனா எனக்காக நீ ஏதும் செய்ய மாட்டியா என்று புலம்பித் தீர்த்தான்..
அவளுடைய நியாபகம் தான் அவனுக்கு..
முதல் முறையாக அவளை பார்த்த நாளை நினைத்துப் பார்த்தான்..
“அந்த நாள் தான் அவன் வாழ்க்கை மாறிவிட்டது…
அவளை அறியாமலே அவன் மனசு அவளுக்காக துடிக்கத் தொடங்கியது.
ஒரு வருடத்திற்கு முன்பு:
அரவிந்த் புது பிராஜக்ட் ஆரம்பிக்கும்போது வழக்கமாக மருதமலை கோவிலுக்கு சென்று வருவான்..
அந்த முறையும் அவன் கோவிலுக்கு சென்றான்..
அப்போது சிரித்து பேசியபடி காலேஜ் படிக்கும் பெண்கள் சிலர் சிரித்து பேசிக்கொண்டு இருந்தார்கள்..
இவனும் அவர்களை பார்த்தும் பார்க்காத போல சாமி கும்பிட்டு சிறிது நேரம் அமர்ந்து ஃபோன் பார்த்துக்கொண்டு இருந்தான்..
அப்போது அந்த கூட்டத்தில் ஒரு பெண்ணுடன் ஒருவன் கத்தி பேசிக்கொண்டு இருந்தான்..
அவனும் சற்று அருகில் சென்று என்ன நடக்கிறது என்று பார்க்க..
அந்த பெண்ணோ ” அது தான் அன்னைக்கு பிடிக்கல ன்னு அவமான படுத்திட்டு போயிட்டீங்களே இப்ப எதுக்கு இப்படி வந்து மிரட்டிட்டு இருக்கீங்க”…
அன்னைக்கு பார்த்தது விட இன்னைக்கு அழகா தான் இருக்க..
எங்க வசதி அளவுக்கு இல்லாட்டியும் என்ன ?
அழகா இருக்க அதான் கல்யாணம் பண்ணிக்கவ என்று ஒரு மாதிரி குரலில் கேட்டான்..