நானே எடுத்து வந்துட்டேன்; நீ எதுவும் செய்ய வேண்டாம்.. மதியம் நம்ம வீட்டுக்கு வந்திடுங்க; சரியா..
மாமாக்கு ஆபிஸ் டைம் ஆச்சு.. நீங்க சாப்பிடுங்க என்று இருவரிடமும் சொல்லி கிளம்பி விட்டார்…
அவங்க சாந்தி அத்தை. சின்ன வயசுல இருந்தே அவங்களுக்கு என்னை பிடிக்கும்…
அவளை நிறைய பேச விட்டான்..
இவ புது ஆளுங்க கிட்ட மட்டும் தான் சைலண்ட் போல என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்..
சிறிது நேரத்தில் இருவரும் சாப்பிட்டு விட்டு மருதமலை கோவிலுக்கு சென்றார்கள்…
இருவருக்குமே மறக்க முடியாத கோவில் அது..
படியில நடந்து போலாமா என்று அரவிந்த் கேட்க?
ம்ம்ம்ம் சரிங்க என்றாள்..
புடவை அணிந்து இருந்ததாள் அவளுக்கு மலை ஏற சற்று சிரமமாக இருந்தது..
ஆனாலும் அரவிந்த் அவளுக்கு ஏற்ற வகையில் நடந்து வந்தான்…
இருவரும் பூஜை முடித்து வெளியே அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்…
இடையிடையே அவர்கள் பெற்றோருக்கும் பேசினர்…
மாமு “சாரி . நான் இனி மேல் எந்த தப்பான முடிவும் எடுக்க மாட்டேன் என்றாள்”..
இங்க பாரு பிரகதி எனக்கு கோவம் இருக்கு தான்..
நான் இல்லைன்னு சொல்ல மாட்டேன்…
என் அம்மா மேல தப்பு.. ஆனா அதுக்கு ஈக்வலா உன் அம்மா பண்ணதும் தப்பு தான்…
இதுக்கு இடையில நான் நம்ம லைஃப், நம்ம சந்தோசத்தை இழக்க விரும்பல டி..
ஏன்னா எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்..
உன்ன வேண்டாம் ன்னு சொல்லி விட்டுட்டு போயிருக்கலாம்..
ஆனா நான் அதை செய்யல டி..
நீ போலீஸ் ஸ்டேஷன்ல இருந்தப்ப கூட உன் கூட தானே இருந்தேன்…
இனிமேல் இதை பேச வேண்டாம்..
ஏதோ நடந்து முடிஞ்சிடுச்சு…
எனக்கு நல்ல மெமரீஸ் வச்சிகணும் அதான் என் ஆசை..
இப்ப கூட நான் தான் உன்னை தேடி வந்தேன்.. நீ பேசல நான் பேசல அப்படி எனக்கு ஈகோ பார்க்காம வந்தேன்.. என் பிரகதிக்காக வந்தேன் டி என்றான்..
அவன் பேச பேச அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது..
நான் ஏன் இவ்வளோ மெச்யூர்டா நினைக்கல என்று தன்னையே கேட்டுக்கொண்டாள்..
அவனுடைய கர்சீப் எடுத்து கண்களை துடைத்து விட்டவன்..
இந்த அரவிந்தோட பிரகதி எப்போதும் அழ கூடாது சரியா?
ம்ம் என்று அவன் கையோடு அவள் கையை கோர்த்துக் கொண்டாள்…
அரவிந்த் நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் ..
சொல்லு டி..
தப்பா நினைக்க மாட்டிங்க தானே..
நான் ஏன் தப்பா நினைக்க போறேன்..
அது வந்து நான் காலேஜ் படிக்கும் போது எனக்கு ஒரு தடவை மாப்பிள்ளை பார்த்தாங்க.. எல்லாம் பேசி முடிச்ச அப்புறம் அந்த மாப்பிள்ளைக்கும் அவன் அக்காவுக்கும் என்ன பிடிக்கவில்லைன்னு சொல்லி கொஞ்சம் ஹார்ஸா பேசி கல்யாணத்த நிறுத்திட்டாங்க..
அப்புறம் மறுபடியும் அவன் வந்து டார்ச்சர் பண்ணிட்டே இருந்தான்..
இந்த கோவில்ல வெச்சு கூட தொல்லை பண்ணிட்டு இருந்தான்..
அதனால தான் நான் மேல படிக்கல என்று கூறினாள்..
ஓ இதனால் தான் பொண்ணு பார்க்க வரும் போது சோகமா இருந்தியா?
ஆமாம் மறுபடியும் அந்த மாதிரி நடந்துடும்மோன்னு பயமா இருக்கும்..
பெரியப்பா தான் ரொம்ப ஃபோர்ஸ் பண்ணாரு அவங்க வீட்ல மாதிரி எல்லாரும் இருக்க மாட்டாங்கன்னு பேசி பேசி சம்மதிக்க வைத்தார் என்று கூறினாள்…
இவ்வளோ பெரிய ஃப்ளாஷ்பேக் இருக்கும்ன்னு நான் எதிர் பார்க்கவே இல்லை டி என்றான்..