வாசலில் கார் சத்தம் கேட்கவும்; பக்கத்து வீட்டு சாந்தி அத்தை வந்தார்…
ஏண்டி மருமகளே லேட் ஆயிடுச்சு பாரு..
வந்து சாப்பிடுங்க ; அப்புறம் வீட்டுக்கு போகலாம் என்று கையோடு அவர் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்…
மாப்பிள்ளைக்கு வாஷ் பேசின் காட்டு பிரகதி என்று அவளை விரட்டிக் கொண்டு இருந்தார்…
இருவரும் சாப்பிட அமர்ந்தனர்…
வெஜிட்டேரியன் தான் சமைத்தேன்..
கறி விருந்து போடாம நான் வெஜ் விருந்து வைக்கக் கூடாது அதனால தான் என்று அரவிந்திடம் கூறினார்….
பரவாயில்லங்க ஆண்டி…
லன்ச் சூப்பரா இருக்கு என்றான்…
அவரிடம் நிறைய பேசினான்…
சாந்திக்கு சந்தோஷம்…
வீட்டுக்கு கிளம்பும் போது, என் மருமகள நல்லா பார்த்துக்கோங்க…
ஒரே புள்ளையா போயிட்டா..
என் பொண்ணு கல்யாணம் ஆகி போனதுக்கு அப்புறம் இவ தான் எங்க வீட்டில இருப்பா…
சரிங்க ஆண்டி உங்க மருமகள நான் குழந்தை மாதிரி பார்த்துக்கறேன் என்று கூற…
அரவிந்த்க்கு கையால் திருஷ்டி எடுத்தார்,….
அத்தை நாங்க அப்புறம் வரோம் என்று சொல்லி விட்டு கிளம்பினர்…
டோர் லாக் செய்து விட்டு மேல் அறைக்கு வந்தனர்..
டயர்டா இருக்குல்ல பிரகதி என்று கேட்டான்…
ஆமாம் என்று தலையாட்டினாள்…
எதாவது பேசு டி… நான் மட்டும் தனியா பேசிட்டே இருக்கனுமா என்று கேட்டான்…
இல்லைங்க நான் , வந்து எனக்கு டயர்டா இருக்கு என்று திக்கித் திணறி கூறினாள்…
சரி வா கொஞ்ச நேரம் தூங்கு என்றான்…
அவள் சிறிது தூங்கிடனாள்…
சிறிது நேரம் அவள் அருகில் படுத்து இருந்தவன்; அவள் உறங்கிய பின் அந்த வீட்டில் அவனுக்கு பிடித்த இடமான மொட்டை மாடிக்கு வந்து அங்கு இருந்த ஊஞ்சலில் அமர்ந்தான்….
அவன் மனதில் அவ்வளவு சந்தோஷம்…
சில வருடங்களாக மனதில் இருந்ததை இறக்கி வைத்த பின் வந்த பூரிப்பு…
அப்படியே கண்களை மூடி அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தவன் அவனை அறியாமலேயே உறங்கி விட்டான்…
மாமு என்று அவன் தோளில் தட்டவும் தான் எழுந்தான்..
ஏன் இங்கயே தூங்கிட்டிங்க..
உள்ள வந்து படுத்து இருக்கலாம் தானே என்றாள்..
எனக்கு இந்த ப்ளேஸ் ரொம்ப பிடிச்சிருக்கு டி…
நம்ம வீட்டலயும் இந்த மாதிரி செட் பண்ணி தரேன் என்றான்..
பாரு டா இன்ஜினியரா யோசிக்கிறீர்களா?
ஆமா டி வீடு மட்டும் அழகு இல்லை டி ;
இன்ஜினியர் கண்ணுக்கு நீ கூட அழகா தான் தெரியற என்றான்…
இன்னைக்கு நைட் என்று ஆரம்பிக்க;
ஏங்க காஃபி ஆறி போயிடும்.. முகம் கழுவிட்டு வாங்க என்று அவனை துரத்தி விட்டாள்..
இரு டி இன்னும் கொஞ்ச நேரம் தான்..
அப்புறம் பாரு என்று உள்ளே சென்றான்..
பிறகு இருவரும் ஊஞ்சலில் அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள்…
அவன் தோள் மீது பிரகதி சாய்ந்து இருந்தாள்…
அவள் விரலோடு இவன் விரல்களை இறுக்கமாக கோர்த்து இருந்தான்..
புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு இருக்கும் அந்த உணர்வு…
மாமு உங்கள மாதிரி ஒரு ஹஸ்பன்ட் கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கேன் என்றாள்…
ரதி உனக்கு ஒன்னு தெரியுமா?
காத்திருந்து கிடைக்கற பொருள் அதுக்கு வேல்யூ அதிகம் தெரியுமா?
அந்த மாதிரி தான் நீயும் எனக்கு என்றான்…
எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்குது மாமு…
ரதி என்றான் ஹஸ்கி குரலில்..
ம்ம் சொல்லுங்க என்றாள்; அவன் கண்களை பார்க்காமல்…
லவ் யூ என்றான்..
ம்ம் நானும் தான் என்றாள்…
அவள் முகத்தை பார்த்தவன்..
இதுக்கு நீ சொல்லாமயே இருக்கலாம் என்றான்…
மாமு ” என்னோட எதிர் பார்க்காத நேரத்தில எனக்கு கிடைத்த தீராத காதல் நீங்க தான்” என்றாள்..
ரொமேன்டிகா எல்லாம் பேசத் தெரியுமா என்றான்…
போங்க நான் எவ்ளோ ஃபீல் பண்ணி சொல்றேன் ; நீங்க கிண்டல் பண்றீங்களா என்று சிணுங்கினாள்…