உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

4.9
(16)

அடுத்த நாள் கோர்ட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள்…

அதற்குள் ரகுவிடம் ஃபோனில் பேசி விட்டான் அரவிந்த்…

எல்லாம் ஓகேயா டா?

ம்ம் ஓகே தான் சார்..

இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவோம் சார்…

எனக்கு இன்னொரு எவிடென்ஸ் இருக்கு .. ஆனா கண்ணால பார்த்த  சாட்சி பிரகதி தான்…

அதனால கோர்ட்டுக்கு வரும் போது கேர் ஃபுல்லா வரனும் என்றான்..

ஓகே சார் நாங்க வரோம் என்றான்…

இருவரும் காரில் கிளம்பி இருந்தார்கள்…

பிரகதி கையை பிசைந்தவாரு பதட்டத்துடன் அமர்ந்து இருந்தாள்…

பிரகதி ரிலாக்ஸ் டி..

ஏன் இப்படி வேர்க்குது என்றான்…

எனக்கு பயமா இருக்கு மாமு என்றாள்…

அவள் கை நடுங்கியது..

காரை ஓரமாக நிறுத்தியவன் அவள் தோளை சுற்றி  பிடித்து, நான் இருக்கேன் டி..

உனக்கு ஒன்னும் ஆகாது என்றான்…

நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்…

என்ன சொல்லு…

ஒரு பென்டிரைவ் எடுத்துக் கொடுத்தாள்…

என்ன இது ?

அது வந்து அன்னைக்கு கொலை நடந்த அப்ப நான் ஒரு வீடு பக்கத்தில மறைஞ்சு இருந்தேன்.. அப்ப ஒருத்தன் துரத்திட்டு வந்தான்.. அவன் ஃபோன் எடுத்து இன்னொருத்தன கிட்ட பேசும் போது.. இது கீழே விழுந்துச்சு.. அவன் போனதுக்கு அப்புறம் நான் எடுத்தேன் என்றாள்…

இத ஏண்டி அன்னைக்கே சொல்லி இருக்கலாம் இல்ல..

நான் டென்ஷன்ல மறந்துட்டேன்..

இன்னைக்கு அந்த பேக் செக் பண்ணும் போது தான் பார்த்தேன் என்றாள்..

உடனே ரகுவுக்கு அழைத்தான் ..

சொல்லு டா?

எங்க இருக்கீங்க சார்..

ஸ்டேஷன் கிளம்பிட்டேன் டா?

சார் பிரகதி கிட்ட ஒரு பென்டிரைவ் இருக்கு..

அன்னைக்கு ஒருத்தன் துரத்திட்டு வரும் போது அவன் கிட்ட இருந்து விழுந்திடுச்சுன்னு சொன்னா என்றான்..‌

வாட் ? என்று அதிர்ந்தான்..

இப்ப சொன்னா எப்படி? 

நான் அன்னைக்கே கேட்டேன் . எதாச்சும் மறைக்கறீங்களான்னு?

ஆமா சார்.. அவ டென்ஷன்ல மறந்திடுச்சுன்னு சொன்னா என்றான்…

ஓகே!இப்ப நீங்க எங்க இருக்கீங்க?உங்க லொக்கேஷன் ஷேர் பண்ணு .. நான் லேப்டாப் எடுத்து வரேன் என்றான்…

ரகுவின் காக காத்துக் கொண்டு இருந்தார்கள்..

சற்று நேரத்தில் அவன் வந்தான்…

இங்க என் ஃப்ரெண்ட் வீடு இருக்கு வாங்க என்று அங்கே அழைத்துச் சென்றான்…

சுற்றி பார்த்து விட்டு அவர்களை இறங்கச் சொல்லி உள்ளே அழைத்துச் சென்றான்…

கண்களால் சமாதானம் ஆயிடுச்சா என்று ரகு கேட்க?

அவனும் கண் சிமிட்டி ஆமாம் என்றான்…

அர்விந்த் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்…

ஏம்மா நான் தான் அன்னைக்கு கேட்டேன்ல…

இப்ப வந்து இப்படி சொல்றீங்க என்று சற்று குரல் உயர்த்தி பேசினான்..

சார் அது வந்து நான், அன்னைக்கு எனக்கு , அது வந்து நான் டென்ஷன்ல மறந்துட்டேன் என்றாள்…

சரி அத கொடு என்றான்..

அரவிந்த் அவன் சட்டை பையிலிருந்து கொடுத்தான்…

அவன் லேப்டாப்பில் அதை போட்டு பார்த்தவன்.

ஓ மை காட்! இதுல எல்லா ப்ரூஃபும் டீட்டெய்ல்டா இருக்கே..

நல்ல வேளை, அந்த பென்டிரைவ் பிரகதி கிட்ட இருக்குன்னு அவனுகளுக்கு எதுவும் தெரியாது..

இந்த கொலைகாரங்க முக்கியமான ஆள் இல்லை..

ஆனா இதுல ஃபுல் டீடடெய்ல்ஸ் இருக்கு என்று அவனுக்கு ஒரு சந்தோஷம்..

ஓகே லிசன் பிரகதி, நீ சாட்சி சொல்லும் போது நீ பார்த்தது மட்டும் சொல்லு..

இந்த பென்டிரைவ் பத்தி மூச்சு விடக்கூடாது…

இதுல சாட்சி சொல்லிட்டா உனக்கு  இந்த கேஸ்  முடிஞ்சது…

இனி உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை சரியா..

இந்த பென் டிரைவ் விஷயம் நாங்க பாத்துக்கறோம்…

இல்லைன்னா உனக்கு டிஸ்டர்ப் பண்ணுவாங்க சரியா?

என்றான்…

ம்ம் புரியுது சார் என்றாள்…

என் கூட இருக்க போலீஸ் கிட்ட கூட சொல்ல வேண்டாம்..

அரவிந்த் நீங்க கிளம்புங்க ..

நான் கொஞ்ச நேரத்தில வரேன் என்று அவர்களை அனுப்பி வைத்தான்…

கோர்ட்டுக்கு வந்து சேர்ந்தனர்…

அந்த கொலை செய்தவர்களை பார்த்ததும் அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது…

அரவிந்த் கையை இருக்கமாக பிடித்தாள்…

ரதி நான் இருக்கேன் டி; பதட்டம் ஆகாத என்று அவளை அமைதி படுத்தினான்..

குற்றவாளிகளை விசாரணை செய்தனர்..

அடுத்து பிரகதியை  விசாரித்தனர்…

எதிர்கட்சி வக்கில் அவளை மாற்றி மாற்றி கேள்வி கேட்டார்…

அவளுக்கு தெரிந்தது அது மட்டும் தானே..

பொய் என்றாள் மாற்றி மாற்றி சொல்லலாம்..

ஆனால் உண்மையை எப்படி கேட்டாலும் ஒரே மாதிரி தானே சொல்ல முடியும்..

அப்பொழுது தான் ரகு வந்தான்..

அரசு தரப்பு வக்கீலிடம் ஒரு பென்டிரைவ் கொடுத்தான்…

அதில் அந்த நபரை கொலை செய்த வீடியோ காட்சி இருந்தது..

ரகுவை விசாரிக்க..

அந்த இடத்தில் ஃபோட்டோ ஷூட் நடத்துவதற்காக ட்ரோன் ஒன்று பறக்க விட்டதாகவும்.. அப்பொழுது மரத்தில் சிக்கி ஏதேச்சையாக படம் பிடிக்கப்பட்டதாகவும் கூறினான்… வீடியோ ஆதாரம் இருப்பதால் பிரகதிக்கு இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்று நீதிபதி உத்தரவு கொடுத்தார்..

மேலும்  இந்த வழக்கு அடுத்த மாதம் தள்ளி வைப்பதாகவும்; குற்றவாளிகளுக்கு ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என அறிவித்தார்…

இப்போது தான் பிரகதிக்கும் அரவிந்திற்கும் நிம்மதியாக இருந்தது…

 கோர்ட்டுக்கு வெளியே நின்று இருந்தார்கள்..

ரகு அவர்களை நோக்கி வந்தான்…

ரொம்ப தேங்க்ஸ் சார் என்று அவனை அணைத்து விடுவித்தான் அரவிந்த்…

இதெல்லாம் எதுக்கு அரவிந்த்.. 

சார் லாம் சொல்ல வேண்டாம். பேர் சொல்லிக் கூப்பிடு இல்லன்னா அண்ணா ன்னு கூப்பிட்டு என்றான்..

ஓகே அண்ணா என்றான்..

பிரகதி இனிமேல் நீ ரிலாக்ஸா இருக்கலாம் மா என்று கூறினான்..

ஓகே சார் என்றாள்..

ஃபார்மாலிட்டிஸ் வேண்டாம்…

கால் மீ அண்ணா என்றான்..

ஓகே அண்ணா‌ என்றாள்..

ஆனாலும் அவனை பார்த்து சிறிது பயம் தான்.. சரி பிரகதி நீ கார்ல இரு‌‌.. பார்க்க டயர்டா இருக்க என்று அனுப்பி வைத்தான்..

அர்விந்த் நைட் 7 மணிக்கு என்று ஒரு ரூஃப் டாப் ரெஸ்டாரன்ட் பெயரை சொல்லி வரச்சொன்னான்..

ஓகே ப்ரோ நைட் மீட் பண்ணலாம் என்று கிளம்பி விட்டார்கள்..

வீட்டுக்கு வந்ததும் கதவடைத்தது தான் தாமதம் அரவிந்தை இறுக்கமாக கட்டிக் கொண்டு அழுதாள்..

என்னால எவ்ளோ ப்ராப்ளம்..

இருந்தாலும் நீங்க எனக்கு இப்படி சப்போர்ட் பண்ணும் போது உங்க லவ்க்கு நான் தகுதியான்னு யோசிக்க தோனுது என்று கூறி அழுதாள்…

அம்மாடி இன்னோயோட அழுது முடிச்சிடு….

இப்படி அழுதா எனக்கு கஷ்டமா இருக்கு மா என்றான்…

எனக்கு அன்னைக்கு நடந்தது நியபகம் வந்து பயமா இருந்துச்சி என்றாள்..

இனிமேல் அந்த விஷயத்துல உனக்கு ப்ராப்ளம் வராது ..

சரி அத விடு.. இன்னைக்கு ஈவினிங் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு..இப்ப ரெஸ்ட் எடு.. அப்புறம் வெளிய போகலாம் என்றான்..‌

வீட்டு பெற்றவர்களுக்கும் அழைத்து விஷயத்தை சொல்ல, அவர்களுக்கும் நிம்மதியாக இருந்தது…

அபிஷேக் மற்றும் திவ்யாவிற்கும் இடையிடையே பேசினார்கள்…

ஆறு மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பினார்கள்…

வழியில் கடையில் குழந்தைகளுக்கான உடை மற்றும் பொம்மை ஒன்றை வாங்கினான்..

யாருக்கு என்று கேட்க சர்ப்ரைஸ் என்றான்…

பிறகு ஒரு கப்பில் வாட்ச் ஒன்றை வாங்கினான் …

இதுவும் சர்ப்ரைஸ் தானே என்றாள்..

ஆமா டி என்று கண் சிமிட்டினான்…

அந்த ரூஃப் டாப் ரெஸ்டாரன்டை அடைந்தனர்…

இவர்களுக்கு முன்னரே ரகு மற்றும் மஹதி குழந்தையுடன் வந்து விட்டார்கள்…

இங்க வரது தான் சர்ப்ரைஸா என்று கேட்டாள்..

ஆமா டி என்றான்..

அப்போ இது எல்லாம் யாருக்கு என்று கேட்டாள்?

கொஞ்ச நேரத்தில தெரியும் டி என்று மேலே அழைத்துச் சென்றான்..

வழியில் ரகு வந்து வரவேற்றான்..

ஹாய்! வாங்க என்று அவர்களுடன் பேசிக் கொண்டு வந்தான்…

 இவங்க மஹி என் வைஃப் என்று அறிமுகம் செய்தான்..

பிரகதிக்கும் சரி, மஹதிக்கும் சரி ஆச்சரியமாக இருந்தது…

ஏய் பிரகதி எப்படி இருக்க என்று இருவரும் அவர்கள் பேச்சை ஆரம்பித்தார்கள்..

இது தான் சர்ப்ரைஸா என்று பிரகதி கேட்க?

எப்படி இருக்கு சர்ப்ரைஸ் என்றான்…

உன் கல்யாணத்துக்கு அரவிந்த் இன்வைட் பண்னாரு.. ஆனா என்ன கூட்டி போலன்னு இப்ப சர்ப்ரைஸ் ப்ளான் போட்டிருக்காங்க என்றாள் மஹி…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!