உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Leave a Comment / E2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்), உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் / By Competition writers 4.9 (14) அர்விந்த் அவர்களுக்கு வாங்கி வந்திருந்த கிஃப்டை கொடுத்தான்… டேய் எதுக்கு இதெல்லாம் எதுக்கு என்றாலும் அவன் வற்புறுத்தியதால் வாங்கிக்கொண்டார்கள்.. இது உங்களுக்கு என்று அவர்கள் வாங்கி வந்த கிஃப்டை கொடுத்தார்கள்… ஹேப்பி பேரிடர் லைஃப் என்று இருவருக்கும் வாழ்கின்றனர்… இரவு உணவிற்கு பின் ஆண்கள் இருவரும் பெண்களுக்கு தனிமை கொடுத்து விட்டு தனியாக சென்றனர்… ஏண்டி கல்யாணம் பண்ண போறாங்கன்னு பிஜி படிக்கல.. ஆனா உனக்கு முன்னாடியே எனக்கு கல்யாணம் ஆகி குழந்தைய இருக்கு என்றாள் மஹி.. ஆமா மஹி இவ்வளோ வருஷம் வெயிட் பண்ணதால தான் அரவிந்த் எனக்கு கிடைச்சார் என்றாள் வெட்கத்துடன்… பிரகதி ரொம்ப ப்ளஷ் ஆகற.. ரொம்பவே பிடிக்குமா ? ஆமா மஹி என்றாள்.. சரி உனக்கு எப்போ மேரேஜ் ஆச்சு.. நான் பிஜி ஃபர்ஸ்ட் இயர் படிக்கும் போது ஆயிடுச்சு… கல்யாணம் ஆகி அஞ்சு வருசம் ஆச்சு என்றாள்.. பெண்கள் இருவரும் பேசி சிரித்துக்கொண்டு இருந்தனர்… ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.. இந்த கேஸ் ல அவள ஃபுல்லா ரிலீஸ் பண்ணிட்டிங்க… இது வேற நெட்வொர்க் அரவிந்த்… அதனால் தான் பிரகதி ய இதுல சேர்க்கல. அந்த வீடியோ மட்டும் கிடைக்கலன்னா பிரகதி லைஃப் கொஞ்சம் ரிஸ்க் தான்.. அதனால் தான் இப்படி பண்ணிட்டேன் என்றான்… இனிமேல் ஏதும் ப்ராப்ளம் வருமா? நோ அரவிந்த்..இனி எதுவும் ஆகாது.. அப்புறம் டா சண்டை எல்லாம் முடிஞ்சுதா? அதெல்லாம் முடிஞ்சுது சார்.. ஊரே என்ன பார்த்து பயப்படும்.. ஆனா என் வீட்டில் மஹி மேடம் சொல்றது தான் ரூல்ஸ்.. என்ன வெச்சு செஞ்சிடுவா தெரியுமா என்றான் ரகு… அரவிந்த் சத்தமாக சிரிக்க.. டேய் என்ன மாட்டி விட்றாத.. மெதுவா சிரி என்றான்.. அண்ணா என்ன இப்படி பயப்படுறீங்க .. சும்மா சொல்றீங்கன்னு நினைச்சேன் என்றான்.. ஆமா டா எல்லாம் எங்க வீட்ல கொடுக்கற செல்லம் தான் என்றான் ரகு… எங்க மேடம் கிட்ட பிரகதி ட்ரெட்னிங் வந்தா அவங்களும் மாறிடுவாங்க… பிரகதிய நல்லா பார்த்துக்கோங்க அரவிந்த்; கொஞ்சம் பயந்த மாதிரி இருக்காங்க என்றான்… அதெல்லாம் நான் பாத்துப்பேன் என்றான் அர்விந்த்.. சரி அரவிந்த் பாத்து கிளம்புங்க என்று இரு குடும்பமும் அவரவர் வீடுகளுக்கு சென்றனர்… இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்… முதலில் இருந்ததை விட இப்போது இன்னும் இன்னும் காதல் கூடியது இருவருக்கும்… நாளைக்கு கரூர் செல்லலாம் என்று முடிவு செய்து அன்று இரவு பேச்சும் கலகலப்புமாக இருந்தது.. அடுத்த நாள் நேரத்திலேயே கிளம்பி விட்டார்கள்.. சிறப்பான வரவேற்பு அவர்களுக்கு… அவர்களின் கவனிப்பில் திக்குமுக்காடி போனாள்… யாருமே எந்த பழைய விஷயத்தையும் பேசவில்லை.. நக்ஷத்திரா அரவிந்தை விடவே இல்லை.. சித்தா என்று அவனோடு இருந்தாள்… அவன் பயன்படுத்த பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள்… இரண்டு ஜோடிகளும் சேர்ந்து நிறைய பேசினார்கள்… அவளுக்கு அனைவரையும் மிகவும் பிடித்தது… மாமா நீங்களும் லவ் மேரேஜ் தானே; உங்க ஸ்டோரி சொல்லுங்க என்று பிரகதி கேட்டாள்.. எல்லாமே சொல்லிட்டியா என்று அரவிந்தை பார்த்தான் அபிஷேக்.. லவ் மேரேஜ் என்று தெரியும் ஆனால் ஸ்டோரி தெரியாது என்றான்.. நாங்க ரெண்டு பேரும் ஒரே காலேஜ்;. ஒரே கிளாஸ்… சும்மா அடிக்கடி பேசுவோம்.. அப்புறம் திவ்யா தான் ஃபர்ஸ்ட் ப்ரபோஸ் பண்ணா.. அப்புறம் என்ன ஆச்சு என்றாள் பிரகதி.. அபிஷேக் ஓகே சொல்லவே இல்ல.. அப்புறம் பைனல் இயர்ல தான் ஓகே சொன்னாங்க… அப்புறம் சென்னையில் ஒரே ஆஃபீஸ்ல தான் வேலை கிடைச்சது… அப்புறமா நிறைய பேசணும் நிறைய புரிஞ்சுகிட்டோம்… என்னோட அக்காக்கு மேரேஜ் முடிஞ்ச பிறகு என்னோட லவ் வீட்ல சொன்னேன்.. எங்க வீட்ல ஒத்துக்கிட்டாங்க… அபிஷேக் வீட்ல ஒத்துக்கல போல.. அப்புறம் நான் தான் எங்க அப்பாவ அபிஷேக் வீட்டுக்கு கூட்டிட்டு போயி அவங்கள சம்மதிக்க வெச்சேன் என்றாள்.. பிரகதி அடக்க முடியாமல் சிரித்தாள்.. அக்கா நிஜமாவே நீங்க தான் மாமா வீட்டில ஓகே சொல்ல வெச்சிங்களா? அபிஷேக்கை பார்த்தாள் திவ்யா.. இவன் பேசி இருந்தா ஓகே சொல்லி இருப்பாங்க தான்.ஆனா அவனுக்கு அத்தைய பார்த்தா பயம் என்றாள்.. பிறகு நானும் அப்பாவும் தான் ஓகே சொல்ல வெச்சோம்.. ஸ்டார்டிங்ல அத்தைக்கு என்ன பிடிக்கல.. போகப் போக பிடிச்சிருச்சு ரொம்ப என்றாள். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு என்றாள் பிரகதி… உங்க லவ் பத்தியும் அரவிந்த் சொன்னாங்க என்றாள்… உங்களுக்கு தெரியுமா என்றாள்? ம்ம் நேத்து தான் தெரியும்.. எனக்கு ஸ்டார்டிங்லயே டவுட்.. என்னடா நம்ம கொழுந்தனார் ரொம்ப பர்பாமென்ஸ் பண்றாரு யோசிச்சேன்.. இப்பதானே தெரியுது என்றாள் திவ்யா கிண்டல் செய்தாள்.. அக்கா எனக்கும் இப்படி ஒரு ஸ்டோரி இருக்கேன்னு தெரியாது.. ஐம் சோ ஹேப்பி ஃபார் யூ என்று திவ்யா அணைத்து விடுவித்தாள்… அக்கா சாரி.. எனக்கு ரொம்ப கில்ட்டா இருக்கு… நான் தெரிந்து எதுவும் செய்யல.. ஓகே டா.. நாங்க எதுவும் நினைக்கல.. அந்த டைம் ஏதோ தப்பா நடந்து போயிட்டுச்சு.. விடு உங்க லைஃப் நல்ல படியா ஆரம்பிக்க .. அது போதும்.. எவ்வளவு பிரச்சினை வந்தாலும் சால்வ் பண்ணுங்க ஆனா பிரிஞ்சு போறத பத்தி யோசிக்கக் கூடாது… புரியுது அக்கா.. சரி நீங்க எப்ப ஊருக்கு வரிங்க? ரெண்டு வாரம் அப்புறம் வரோம்.. ஆனா இனி பெங்களூர்ல தான் ஸ்டே என்றாள்.. ஏன் அக்கா அங்க.. நாம எல்லாம் ஒரே வீட்டில இருக்கலாம்.. இல்லை டா பாப்பா அபிஷேக ரொம்ப மிஸ் பண்ணுறா.. எனக்கும் அபிஷேக் பக்கத்தில இல்லாம கஷ்டமா இருக்கு..அப்படியே ஜாப் கண்டின்யூ பண்ணலாம் ன்னு இருக்கேன் என்றாள்… ம்ம் சரி அக்கா.. சிறிது நேரம் கழித்து கிளம்பி விட்டார்கள்… வரும் வழியில் பேச்சு, சிரிப்பு, அவளின் வெக்கம், அவனின் காதல் பேச்சுகள்.. வீடு வந்து சேர்ந்தனர்… மறுபடியும் அவனது அனைப்பில் அவள்… இப்படியே இரண்டு நாட்கள் ஓடியது.. வெளியூர் சென்றவர்கள் வந்து சேர்ந்தனர்.. எல்லா நல விசாரிப்புகளுக்கு பிறகு , சிறிதாக விருந்து ஏற்பாடு செய்து.. இடையில் கௌசல்யா மருமகனிடம் மன்னிப்பு கேட்க? ஐயோ பெரியவங்க எதுக்கு இப்படி எல்லாம் மன்னிப்பு கேக்கறீங்க.. இப்ப என் மேல உங்களுக்கு நம்பிக்கை வந்திருக்கு தனே அது போதும் என்றான்.. பிறகு மகளை புகுந்த வீடு அனுப்பி வைத்தனர்… போகும் போது அப்படி ஒரு அழுகை.. அவள் தந்தைக்கும் சேர்ந்து கண்கள் கலங்கியது.. எப்படியோ எல்லாரையும் சமாளித்து வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான்… பிரகதி எனக்கு ஆபிஸ் ல வொர்க் இருக்கு.. நான் வர லேட் ஆகும் என்று சென்று விட்டான்… இப்பொழுது தனியாக தேவகியும்,பிரகதியும் மட்டும் தான். அவளே பேச்சை ஆரம்பித்தாள்.. அத்தை நான் தப்பு பண்ணிட்டேனா? அதனால தான் உங்களுக்கு பிடிக்கலையா? அவரும் என்ன தான் சொல்வார்.. ரொம்பவே அனைவரையும் சங்கடப் படுத்தி விட்டார் தானே.. அப்படி எல்லாம் இல்லை மா.. என் பையனுக்கு பிடிச்சா அதுக்கு நான் யோசிக்கவே மாட்டேன்.. ஏதோ ஆதங்கத்தில பேசிட்டேன்.. இனி மேல் இப்படி நடக்காது என்று இருவரும் மனசு விட்டு பேசினார்கள்.. இரவும் ஆகிவிட்டது.. நீ போய் தூங்கு மா அவன் வர லேட் ஆகும்.. நான் பார்த்துக்கறேன் என்று சுகுமார் அவளை போகச் சொன்னார்.. இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்தான்.. சாப்பிட்டயா அரவிந்த் என்று சுகுமார் கேட்க.. ஆமா ப்பா ஆபிஸில் அரேஞ்ச் பண்ணாங்க என்றான்.. சரி ப்பா என்று அவன் அறைக்கு ஓடி வந்து கதவை சாற்றினான்.. கண் மூடி படுத்திருந்த பிரகதி சத்தம் கேட்டு எழுந்து அமர்ந்தாள்.. உடை மாற்றி விட்டு வந்தவன்.. பிரகதி யின் கையை பிடித்து அவன் மடியில் அமர வைத்தான்.. உனக்கு தலை வலிக்குதா? இல்லை என்றாள்.. எல்லாம் ஓகே ஆயிடுச்சா என்று கேட்டான்… ம்ம் ஓகே தான் மாமு என்றாள்.. அவள் சொல்லி முடித்தது தான் தாமதம்.. அவள் கழுத்தை பற்றி இதழில் ஆழமாக முத்தம் கொடுத்தான்… அவனை தள்ளி விட்டு எழுந்தாள்… அவளை பிடித்து சுவற்றில் சாய்த்து அவள் நெற்றியில் முத்தம் இட்டான்.. அவன் முகத்தை அவள் பார்கவே இல்லை… மூச்சு வாங்கியது .. இதயம் தாறுமாறாக துடித்தது.. அவள் உதட்டை பிடித்து இழுத்து முத்தமிட்டான்… என்னை பாரு டி என்றான் மோகமாக.. அவளை பார்த்து ஓகே வா என்று கேட்க அவளும் சம்மதம் சொல்ல.. அவளை கட்டிலில் படுக்க வைத்த பிறகு அங்கே ஒரு அழகான கூடல் ஒன்று நடந்தது.. பூவை விட மென்னமயாக அவளை கையாண்டான்… கூடலுக்கு பிறகு அவள் உச்சம் தலையில் முத்தம் இட்டான்.. ரதி ஆர் யூ ஓகே? ம்ம் என்று அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.. ரதி ஐ லவ் யூ என்றான்.. நானும் ஐ லவ் யூ என்றாள்.. உனக்கு ஒரு கிஃப்ட் இருக்கு டி என்றான்.. என்ன கிஃப்ட்? என்று அவள் உடலை போர்வையில் மறைத்துக் கொண்டு அமர்ந்தாள்.. அங்கிருந்த டேபிளில் இருந்த பார்சலை பிரித்தவன்.. அவள் கால்களை அவன் மடியில் வைத்து பழைய கொலுசுகளை அகற்றி; அவன் வாங்கி வந்த முத்து நிறைய வைத்த கொலுசுகளை போட்டு விட்டான்.. அழகாக இருந்தது.. அன்னைக்கு கொடுக்கனும்ன்னு நினைச்சேன்.. ஆனா ஸ்பெஷல் முமென்ட்ல கொடுத்தா தானே நல்லா இருக்கும். அதான் இப்ப கொடுத்தேன் என்று அவள் பாதத்தில் முத்தம் கொடுக்க அவளுக்கு கூச்சம்… பிறகு மறுபடியும் அவளை கொண்டாடித் தீர்த்தான்.. இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்? Click on a star to rate it! Submit Rating Average rating 4.9 / 5. Vote count: 14 No votes so far! Be the first to rate this post. Post Views: 376