லண்டன் சென்றதிலிருந்து தினமும் காலையிலும், இரவு உறங்கச் செல்லும் முன்பும் ஏதாவது ஒரு குறுஞ்செய்தி அவனது அலைப்பேசிக்கு அனுப்ப ஆரம்பித்தாள்.
முதல் குறுஞ்செய்தி வந்தவுடன் கோபத்தில் அவளுக்கு அழைத்துத் திட்டி விட்டான்.
அதற்கு அவளோ, “ இங்க பாருங்க…இப்பவும் நான் உங்களை கம்பெல் பண்ணல.. நீங்க எனக்கு எந்த ரிப்ளையும் பண்ண வேண்டாம். அதை நான் எதிர்பாக்கல…எனக்குன்னு ஒரு உறவா தான் உங்களை பாக்கேறேன். ப்ளீஸ்…வேண்டாம்ன்னு சொல்லாதீங்க…மனசுக்கு நெருக்கமானவங்க கிட்ட தான் நம்ம நாமளா இருப்போம். எனக்கு நீங்க தான் மனசுக்கு நெருக்கமானவரு…இந்த திருப்தியை மட்டும் நான் ஃபீல் பண்ணிக்குறேனே…இது எமோஷனல் ப்ளாக் மெயில் இல்லை…மறைமுகமாக என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னும் சொல்லல..ஒரு நல்ல ப்ரண்ட்லியான ரிலேஷன்ஷிப்புன்னு நினைச்சுக்கோங்க…” என்றாள்.
ஈஸ்வரனால் மறுத்து பதில் கூற முடியாமல் போனது.
உறவுக்காக ஏங்கும் ஒரு குழந்தையாக தான் அவளைப் பார்த்தான்.
அன்றிலிருந்து இன்றுவரை தினமும் ஏதாவது ஒரு குறுஞ்செய்தி காலையிலும் மாலையிலும் அனுப்பிக் கொண்டே இருப்பாள்.
நேஹாவிற்கு ஒருபழக்கம் இருந்தது. என்றாவது மிகவும் தனிமையாகவோ இல்லை பெற்றோரின் நினைவு வந்தாலோ பாருக்கு சென்று விடுவாள்.
தனிமையை மறக்கும் அளவிற்கு குடிப்பவள் டாக்சி புக் செய்து வீட்டிற்கு வந்துவிடுவாள்.
இதையும் மறக்காமல் ஈஸ்வரனிடம் பகிர்ந்திருந்தாள்.
முதன்முறையாக ஈஸ்வரனுக்கு ஏனோ அவளது செயல் கோபத்தை வரவழைத்தது.
உடனே அவளுக்கு அழைத்தவன், “இந்த கண்றாவியெல்லாம் எதுக்கு எனக்கு அனுப்பிட்டு இருக்க நீயு….?கெட்டு குட்டிச்சுவராகனும்ன்னு முடிவு பண்ணிட்ட…அதை எதுக்கு ஏன்ட்ட சொல்றவ…? நீ குடி… நல்லா குடிச்சிட்டு மட்டையாகு….எனக்கென்ன வந்துச்சு…பணம் ரொம்ப கொட்டி கிடக்குல்ல…அதேன் என்ன பண்றதுன்னு தெரியாம…. குடிச்சு கும்மாளம் போட்டுட்டு இருக்க…? பணம் உன் கிட்ட இருக்கு நீ குடிக்க..பணம் இல்லாதவக நிம்மதிக்காக எங்கன போவாவ..? இதெல்லாம் குடிக்க உனக்கொரு சாக்கு…” எனப் படபடவென பொரிந்து விட்டு வைத்து விட்டான்.
அவனது வசவுகள் அவளுக்கு கோபத்தை தரவில்லை. மாறாக மெல்லிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
அரைகுறை போதையில் இருந்தவள் மறுபடியும் அவனுக்கு அழைத்தாள். அவனோ எடுக்கவில்லை.
அவன் அழைத்து திட்டியதே உலக மகா அதிசயம் இதில் மறுபடியும் எப்படி தனது அழைப்பு ஏற்பார் என நினைத்தவள் , தனது அலைப்பேசியில் தனது குரலை குழறியபடி பதிவு செய்து அனுப்பியிருந்தாள்.
..கடுகடுன்னு இருந்தாலும் குழந்தை போல மனசு…இதெல்லாம்… பாத்து தான் நான் தொபுகடீர்ன்னு உங்ககிட்ட விழுந்துட்டேன்… ஆரம்பத்துலல உங்க மேல லவ்வெல்லாம் இல்லை உங்க மேல….பட்…போக போக…ரொம்பவே உங்களை பிடிச்சிருச்சு…எஸ்…இப்ப இந்த நேரத்துல…உங்களை ம்ம்மட்டுந்தான்…நினைச்சிட்டு இருக்கேன்…ஐ யம்….இன் …லவ் வித்…யூ…இங்க இருக்குற பொண்ணுங்கயெல்லாம்…ஜோடி….ஜோடியா என்ஜாய் பண்ணிட்டு இருக்காங்க…எனக்கு மட்டும் தான் அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை…. நீங்களும் இல்லை….வேலை…முடிஞ்சி…க்க்க…க்க்…சாரி…விக்கல்…எதுல விட்டேன்…ஆஹான்…வேலை…முடிஞ்சி வந்தா…ஒரு நாள் போல் …ஒரு நாள் இருக்க மாட்டேங்குது…பைத்தியம் பிடிக்குது…உங்க கிட்ட என்னவோ பெர்ரிய இவளாட்டம் எவ்வளவு வருஷமானாலும வெயிட் பண்ணுறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்…ஆனா…இந்த ஒன்பது மாசத்தையே என்னால தள்ள முடியல….ஒஒ..சாரி…நான் இந்தியாவை விட்டு வந்த கணக்கை சொன்னேன். ஹி…ஹி… உங்க சம்மதத்தை சொன்னீங்கன்னா…நான்…நானும்..ஒரு நல்லது கெட்டதை என் லைஃப்ல பார்ப்பேன். எனக்கும் இருபத்தெட்டு வயசாச்சி…வாழ்க்கையை தனியா வாழ்றத விட்டுட்டு உங்க கூட மிங்கிளாக விரும்புறேன்….ஐ மீன் உங்க பேமிலியோட…அது..அதை தான் சொன்னேன்… என்னடா இந்த குடி..காரிய கட்டனுமான்னு யோசிக்கிறீங்களா…? நா..நா…மொடாக் குடிகாரில்லாம் இல்லை….க்க்…எப்பவாவது லோன்லியா …இல்லை அப்பா அம்மா நியாபகம் வந்தா தான்…மத்தபடி நான் ரொம்பவே நல்ல…. பொண்ணு…மீனாட்சி…மேல எவ்வளவு பாசம் வச்சி…வச்சிருக்கீங்கன்னு தெரியும்….அது அப்படியே இருக்கட்டும்….அது அழகானது…ஆனா…எவ்வளவு நாள் நீங்க இப்படியே இருப்பீங்க…உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை கண்டிப்பா வேணும்….உங்களோட வாழ்க்கை முழுசும் வர நாளுக்கு நாள் ஆசை அதிகமாகிட்டே…ஏ..ஏ…. போகுது…என்னை உங்க….மனைவியா…உங்க குடும்பத்துல தத்தெடுத்துக்கோங்க…இல்ல..சாரி…தாலி கட்டிக்கோங்க…அடச்சை…வாய் இன்னிக்கு ரொம்பபவே….ஏ…குழலுது…அய்யோ..! என்ன சொன்னேன்…தாலி கட்டி உங்க பொண்டாட்டியா…. தத்தெடுத்துக்கோங்க…ஹி…ஹி..ஐ வாண்ட்…ஃபேமிலி….ஐ வார்ட் யுவர் லவ்…உம்மா…..பை…”என நீண்ட ஒலிப்பதிவை ஈஸ்வரனுக்கு இரு மாதங்களுக்கு முன்பு அனுப்பியிருந்தாள்.
அதை படித்தவனுக்கு சிரிப்பு வந்தாலும் எந்த உணர்வையும் காட்டாமல் நாட்களை கடத்தினான்.
அதன் பிறகு அவளாக அவனுக்கு அழைத்துப் பேசவில்லையென்றாலும் நாள் தவறாமல் காலையிலும் மாலையிலும் அவளது குறுஞ்செய்தி ஈஸ்வரனது அலைப்பேசிக்கு வந்துவிடும்.
அவனும் அதை திறந்து மட்டும் பார்த்து விட்டு வைத்து விடுவான்.
புகழினியின் மருத்துவமனை கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது.
பாண்டியனை வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சந்தித்தாள் புகழினி.
“ இன்னும் ரெண்டு மாசத்துல எல்லா வேலையும் முடிஞ்சிடும் பாண்டியன். திறப்பு விழாக்கு நம்ம சோமு தாத்தாவை கூப்பிடனும்…அவரைத் தவிர இங்க வேற யாரும் பெரிய மனுஷங்க இல்லை…” என்றாள்.
“ நல்ல விஷயந்தான் புகழு..அவரோட அப்பா பாலு தாத்தா சுதந்திர போராட்டத்தில கலந்து கிட்டவர் தானே.. அவரையே வச்சு திறப்பு விழா பண்ணிடு…அப்பறம் ஃஸ்டாப்ஸ் ரெக்ரூட்மெண்ட் பண்ணனும்…நல்ல சம்பளம் தரணும்.. எக்யூப்மெண்ட்ஸ்யெல்லாம் வாங்கனும்…பணம் இருக்கா புகழு..? நான் வேணா தரவா…?கடனாத்தான்…உன்னால எப்ப முடியுமா அப்ப தந்துடு …டி…ரொம்ப உழப்பிக்காத புகழு…ஸ்டாப்ஸ் ரிக்கொயர்மெண்ட்ஸ்க்கு விளம்பரம் கொடுத்தியா…?”எனப் படபடத்தான்.
“ கவலைப்படாதீங்க பாண்டியன் எல்லாத்துக்கும் அரேன்ஜ் பண்ணிட்டேன். ஃப்ரெண்ட் தான் எக்யூப்மெண்ட்ஸ் வாங்க ஹெல்ப் பண்றா…தெரிஞ்ச கம்பெனிக்கு இருந்து வாங்கிட்டு நம்ம மெதுவா பணம் கொடுத்துக்கலாம். ஸ்டாப்ஸையும் அவ தெரிஞ்ச ஏஜென்சி மூலமா சீக்கிரம் ரெக்ரூட் பண்ண சொல்லிருக்கா..எல்லாமே பக்கவா ரெடி பண்ணிட்டேன் பாண்டியன்…திறப்பு விழா மட்டும் தான் பாக்கி…”என்றவள் அவனது தோள் சாய்ந்தாள்.
“ அப்ப என் கிட்ட உனக்கு எதுவுமே கேக்க தோணலையா… புகழு…? உன் ப்ரெண்டுக்கு கொடுக்குற முக்கியத்துவம் எனக்கு தரமாட்டிக்கல்ல…அப்ப நான் யாரோ தானே உனக்கு…” என்றவனின் குரலில் இருந்த பேதத்தை உணர்ந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தான் பாண்டியன்.
அவனது தாடையை பிடித்தே தன் புறமாக திரும்பியவள்,
“ வேணாம் பாண்டியன்…இந்த பணம் நம்ம ரெண்டு பேத்துக்கு நடுவுல எந்த ஒரு மனக்கசப்பையும் கொண்டு வந்துடக்கூடாது….பணம் இல்லன்னா என்ன இப்ப…அதேன் நீங்க எங்கூடவே இருக்கீகளே…அது போதும் எனக்கு…வேற என்ன வேணும்…” என்று கூறி அவனது தோளில் சாய்ந்தாள்.
“ ம்ம்ச்…நீ எதுவுமே எங்கிட்ட கேக்க மாட்டிக்க புகழு….உரிமையா கேளு டி…எதுன்னாலும் தாரேன்…நீ இப்படி கேக்காம இருக்கறது தான் கஷ்டமா இருக்கு…” என்றான் உண்மையான வருத்தத்துடன்.
தன்னிடம் உரிமையாக எதுவும் கோராமல் தள்ளி நிறுத்துகிறாளே என்ற ஆதங்கம் அவனிடம்.
அவனது முகத்தை தனது கரங்களால் தாங்கி, “இப்ப என்ன இம்புட்டு கோவம் வருது உங்களுக்கு…? நான் உரிமையா ஏதாவது உங்கட்ட கேக்கணும் அம்புட்டு தானே…”என்றாள்.
“ ஆமா..” என்றான் எங்கோ பார்த்தபடி.
“அட அங்கனஎன்ன தெரியுது…இங்க பார்த்தா தானே எனக்கு வேணுங்கறத நான் கேக்க முடியும்…” என்றாள்.
அவள் புறம் திரும்பியவன், “ என்ன வேணும் கேளு புகழு…” என்றான் கெஞ்சும் குரலில்.
அவனருகே வந்தவள் சுற்றும்முற்றும் பார்த்தவள் அவனது மடியில் ஏறி அமர்ந்து கொண்டு அவனது நாசியோடு தனது நாசியை உரசியபடி , “ நல்லா இங்கிலீஷ் படத்துல வர்ற கிஸ் மாதிரி டீப்பா ஒண்ணு வேணும்…கிடைக்குமா..?” என்றாள் கிறக்கமாக.
அத்தனை நெருக்கம் ஆணவனுக்கு புது மயக்கத்தை தந்தது.
இருப்பினும் முகத்தை கோபமாக வைத்தபடி அவளது கன்னத்தில் லேசாக உதடுகளை வைத்துவிட்டு எடுத்தான்.
அவளோ கடுப்பாக, “இப்படி தான் உப்பு சப்பு இல்லாம இங்கிலீஷ் படத்துல முத்தம் கொடுப்பாகளோ…? “ எனமுகத்தை திருப்பினாள்.
“ வேற எப்படி டி கொடுக்கனும்… “ என்றான்.
“ ம்ம்…எல்லாத்தையும் என்கிட்டே கேளுங்க…நீங்களா ஒண்ணும் பண்ணிடாதீங்க…ம்ம்க்கும்..” என சிலிர்த்துக் கொண்டாள்.
“ என்ன டிஒரேடியா சலிச்சுக்குற…” என்றவன் அவளது முகத்தை கைகளால் தாங்கி அழகிய இதழ்களை சிறைப்பிடித்தான்.
இருவரது மேலுதடுகளும் கீழுதடுகளும் வஞ்சனை இல்லாமல் சேவைகள் செய்தன.
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக அவளது இதழ் தரும் அமிழ்தம்.
அவளோடு சேர்ந்து மணலில் சரிந்தான். அது மறைவான இடம் என்பதால் இருவரது நெருக்கம் யாருக்கும் தெரியவில்லை .
அவனது கைகள் அவளது இளமை அழகினை ரசிக்க பரபரத்தது.
எல்லை மீறிய கைகளை தன் முதுகோடு சேர்த்தணைத்துக் கொண்டாள்.
இல்லயெனில் அவனது வன்மை அடுத்த கட்டத்திற்கு முன்னேறி விடும் என்பதை அறிவாள்.
ஒரு வழியாக முத்த யுத்தம் முடிவுக்கு வந்தது. மூச்சு வாங்க அவனை தன்னில் இருந்து பிரித்தவள் , தனது உடையை சரி செய்து கொண்டாள்.
அவனோ மணலில் இருகைகளையும் தலையில் கோர்த்துக் கொண்டு, முத்தத்தின் இனிமையில் கண்மூடி படுத்திருந்தான்.
அவனது தோளைத் தட்டியவள், “ ஹலோ…மிஸ்டர் பாண்டியன் ஒத்த முத்தத்துக்கு என்னவோ ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடுன ஃபீல்ல படுத்து கிடக்கீக..இதுக்கே இப்படியா..?கிளம்புங்க நேரமாச்சு …”என கூறி விட்டு எழுந்தாள்.
அவனோ சலிப்புடன், “அதேன் ரெண்டு கையையும் பிடிச்சிகிட்டியே…! அப்பறம் எங்கிருந்து ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடுறது…ம்ம்..உண்மையான ஃபர்ஸ்ட் நைட்ல இந்த மாதிரி செஞ்சிறாத ஆத்தா…ரொம்ப காய்ஞ்சி போய் கிடக்கேன்…ரொம்ப நாள் சோதிக்காத….உடம்பு தாங்காது.” என்றபடி மணலை தட்டி விட்டபடியே எழுந்தான்.