நெடு நாட்களுக்கு பிறகான முத்தம். உயிரின் ஆழம் வரை தொட்டவனின் வன்மையான முத்தம்.
நினைத்து பார்த்து போது பெண்வளின் தேகம் சிலிர்த்து தான் போனது .
உரிமை பட்டவனிடம் உரிமையாக எடுத்துக் கொண்டவளுக்கு நாணம் இருந்தாலும் அதனை பெரிதாக காட்டி அலட்டிக் கொள்ளவில்லை.
நாட்கள் மாதங்களாகின.
லண்டன் மாநகரம் ஓரளவிற்கு மீனாட்சி பழகிவிட்டது.
பெரிதாக ஆதியிடம் வெறுப்பினைக் காட்டாமல் இருந்தாலும் உறவில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அன்று காலை ஆதி தனது கையில் சில காகிதங்தளுடன் அறைக்கு வந்தான்.
ஏதோ நியாபகத்தில் மீனாட்சியின் அறையை தட்டாமல் உள்ளே சென்று விட்டான்.
அப்போது தான் குளித்து விட்டு வந்தவள் , பூந்துவாலையை கட்டியபடி கண்ணாடி முன்பு நின்று தலையை துவட்டிக் கொண்டிருந்தாள்.
மேல் தாழ்ப்பாள் போடாததால் ஆதி திறக்கும் குமிழியில் கை வைத்தவுடன் கதவு திறந்து கொண்டது.
சட்டென்று திரும்பிய மீனாட்சி ஆதியை கண்டு அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள்.
ஆதியுமே மீனாட்சி இப்படியொரு கோலத்தில் நின்றிருப்பாள் என் நினைக்கவில்லை.
செதுக்கிய சிற்பம் போன்று நின்றிருந்தாள்.
நீண்ட தலைமுடி தோளில் வழிந்து அவளது பாதி தேகத்தை மறைத்திருந்தது.
முத்து முத்தாக நீர் நாசியில் இறங்கி உதடுகளைத் தொட்டது.
அழகிய உதடுகளை அள்ளிப் பருகி விட ஆசை பிறந்தது அவனிடம்.
ஒரு கணத்தில் அவளை உச்சி முதல் உள்ளங்கால் ஆராய்ந்து விட்டான். தேசமெங்கும் சூடேறத் துவங்கியது.
“ பொறுக்கி மாதிரி பாக்காதீங்க…வெளிய போங்க…மொத…அறிவில்ல கதவை தட்டிட்டு வரணும்ன்னு…எப்ப டா சமயம் கிடைக்கும்ன்னு அலைய வேண்டியது. ச்சை…மனுசனா நீங்க…? எப்படி தான் உங்களால எல்லா தப்பையும் பண்ணிட்டு இப்படி பாக்க முடியுது…?என்னை தொடுறதுக்கு உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை…” என்று முடிக்கும் முனபே அவளது கழுத்தை பிடித்தான் ஆதி..
“என்ன டி….விட்டா ஓவரா…பேசிட்டு போற…எனக்கு தான் உன்னைத் தொட எல்லா வித உரிமையும் இருக்கு..நான் நினைச்சா இந்த நிமிஷம் உன்னை முழுசா எடுத்துக் முடியும்…ஆனா…அதை நான் செய்யமாட்டேன். ஏற்கனவே செஞ்ச தப்பை இனி ஒரு போதும் பண்ணக்கூடாதுன்னு இருக்கேன். என்னைய பார்த்தா பொறுக்கி மாதிரியா இருக்கு…? பொறுக்கி இவ்வளவு நாள் உன்னை விட்டு வச்சிருக்க மாட்டான். இன்னைக்கு நம்ம முதல் வருஷ கல்யாண நாள். அது உனக்கு பிடிக்காதுன்னு தெரியும்… எனக்கான தண்டனை இன்னும் எத்தனை காலம் மீனாட்சி…? உன்னை தொடறதுக்கு எனக்கு அருகதை இல்லையா…? உன் மனசு மாறி வர்ற வரைக்கும் நான் காத்திருக்கேன்…ஆனா நானும் சராசரி மனுஷன் தானே…? உள்ள நீ இப்படி ஒரு நிலையில இருப்பன்னு சத்தியமா எனக்குத் தெரியாது. உன்னை பாத்தவுடனே நான் அவுட் ஆஃப் கன்ட்ரோலுக்கு போயிட்டேன் தான்…இல்லைன்னு சொல்லலை…அதுக்காக நீ இவ்வளவு என்னை அசிங்கப்படுத்த தேவையில்லை. கவலைப்படாதே உன் அனுமதி இல்லாம என்னோட விரல் நுனி கூட உன் மேல படாது….நான் எதுக்கு இங்க வந்தேன்னா…இது அப்ளிகேஷன் ஃபார்ம் . எவ்வளவு நாள்தான் வீட்லயே இருப்ப…பேசிக் இங்கிலீஷ் அண்ட் மேனேஜ்மென்ட் கோர்ஸ்…இதை உனக்கு விருப்பம் இருந்தா படி…இது பிடிக்கலன்னா நிறைய கோர்ஸ் இருக்கு…உனக்கு எது விருப்பமா இருக்கோ சொல்லு…அதை படிக்கலாம்…வீட்டை விட்டு வெளியே போய் வந்தா உனக்கும் ஒரு சேன்ஜா இருக்கும். எல்லாமே உன்னோட விருப்பம் தான். “ என்றான்.
அவளோ மற்றொரு பூந்துவாலையை தோழியை சுற்றிக்கொண்டு அவனருகே வந்து, “ஹான் என்ன சொன்னீக..? எல்லாமே என் விருப்பமா…? ரொம்ப சீக்கிரம் என்னைய புரிஞ்சிகிட்டீகளே சந்தோசம்…” என்றாள்.
அவளை அடிப்பட்ட பார்வை பார்த்தான் ஆதி.
மீனாட்சியின் விழியில் எள்ளல் நிறைந்திருந்தது.
அழுத்தமாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ கொஞ்சம் வெளிய போறீகளா…? துணிய மாத்தனும்…” என்றாள்.
விருட்டென்று வெளியே வந்துவிட்டான்.
ஜன்னலருகே
நின்றவனின் மனம் சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாளில் நடந்த திருமணத்தை நினைத்தது.