அவரோ “ இல்ல…நீ இந்த அப்பா..வ மன்னிச்சிட்டேன்னு சொல்..லு…” என்றார் விடாப்பிடியாக .
ஒரு பெருமூச்சுடன் அவரருகில் குனிந்தவள் அவரை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, “மன்னிச்சிடுவேன்னு நினைக்கேன்….வெசனப்படாதீக..நல்லா தூங்குங்க..நான் இங்கனதேன் இருக்கேன்… மனசை போட்டு உழப்பிக்காதீக..” என்று பொத்தாம் பொதுவாக சொல்லி வைத்தாள்.
ஆதியை ஏற்றுக்கொள்ள அவள் எடுத்துக் கொண்ட நேரமே அதிகம்.
சட்டென்று அவளால் மன்னித்து விட்டேன் என்று தந்தையிடம் கூற முடியவில்லை. நாளைடைவில் மாறும் என்று நம்பினாள்.
சங்கர பாண்டியனுக்கு இந்த அளவிற்காகவது மகள் இறங்கி வந்து பேசினாளே..என்றிருந்தது.
ஆதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கண்களை ஆயாசமாக மூடிக் கொண்டார்.
சற்றே அமைதியடைந்தது அவரது மனம் .
காலத்தினால் நிச்சயமாக எதனையும் மாற்றக் கூடிய சக்தி உள்ளது என்பது உண்மையே…
அவளது பலவந்தமாக பெற்றுக் கொண்ட ஆதி…வலுக்கட்டாயமாக அவளது உடலையும் எடுத்துக் கொண்டிருந்தால் நிச்சயமாக மீனாட்சி உதறி தள்ளியிருப்பாள்.
அவளுக்கான நேரத்தையு
ம் அவளுக்கான அடையாளத்தையும் கொடுத்தான்.
மெல்ல மெல்ல தான் அவளால் ஆதியை கணவனாக ஏற்றுக் கொள்ள முடிந்தது .
சில நேரங்களில் சில விஷயங்களை கிளறாமல் இருப்பதே அமைதியான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.
வடிவாம்பாளும் மயில் வாகனமும் வந்து சங்கர பாண்டியனை பார்த்து விட்டு சென்றார்கள்.
வடிவாம்பாள் வழக்கம் போல மீனாட்சியிடமும் கோமதியிடமும் பேசவில்லை.
ஏற்கனவே மீனாட்சி ஆதியிடம் நடந்துகொண்ட முறையை பார்த்தவருக்கு அவள் மீது கோபம் இருந்தது.
ஆதி அதற்கான காரணத்தை அவரிடம் எடுத்துக் கூறினான்.
ஆனாலும் அவர் சமாதானம் ஆகவில்லை.
சங்கர பாண்டியன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு பத்து நாட்கள் ஆகியிருந்தது.
மீனாட்சியும் ஆதியும் லண்டனுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம்.
எனவே இருவரும் அவரிடம் விடைப்பெற்றுச் செல்ல வந்திருந்தனர்.