“ஏன் …இப்படி பண்ற நேஹா…? கால் இருக்குற நிலையில இது தேவையா…?”என கடிந்து கொண்டான் ஆதி.
“ ஒண்ணும் இல்லை டா…ஸ்டிக் வச்சி நடக்க ஆரம்பிச்சாச்சு…இப்படியே எவ்வளவு நாள் தான் இருக்குறது..சாப்பிடு…ரொம்ப சலிச்சிக்காத…”என்றபடி பரிமாறினாள்.
முதன்முறையாக நேஹா வின் வீட்டிற்கு வந்த மீனாட்சி அவளது வீட்டைக் கண்டு பிரம்மித்து தான் போனாள்.
அவளது செல்வநிலை சொல்லாமல் சொல்லியது அவளது உயரத்தை.
இருப்பினும் எளிமையாக கள்ளிக்குடியிலிருந்த நேஹாவை நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்க முடியவில்லை மீனாட்சியால்.
இவ்வளவு உயரத்தில் இருப்பவளால் அவ்வளவு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து விட முடியுமா…? என்ற குழப்பம் அவளுள்.
மூவரும் பேசிக்கொண்டே உணவருந்தி முடித்தனர்.
இருவரையும் தனது அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்றாள் நேஹா.
மீனாட்சியின் முன்பே ஒரு கோப்பினை கொடுத்தாள் நேஹா.
“என்ன இது…? “ என்றாள்.
“ பிரிச்சு பாரு…” என்றாள்.
அதனைப் பிரித்து பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
“ என்ன பைத்தியம் பிடிச்சிடுச்சா உனக்கு…? இப்ப எதுக்கு உன்னோட கம்பெனியை என் பேர்ல மாத்தி வச்சிருக்க…? இதெல்லாம் உங்க அப்பா அம்மா உனக்காக சேர்த்து வச்சது…அப்படியே அல்வா மாதிரி தூக்கி கொடுக்கிற…? அப்படி நான் உனக்கு என்ன பண்ணிட்டேன்…” என் படபடவென எண்ணெயிலிட்ட கடுகாய் பொரிந்தாள்.
நேஹாவோ பாவமாக ஆதியை பார்த்தாள்.
அவனோ நீயே பேசிக்கொள் என்பதை போல் பார்த்து வைத்தான்.
மீனாட்சியே பேசிக்கொண்டே போனாள்.
“ மீனாட்சி…ப்ளீஸ்…! நான் சொல்றதை கொஞ்சம் கேளு…” என்றாள் அழுத்தமாக.
அவளது குரலில் இருந்த அழுத்தத்தினால் சிறிது நிதானத்திற்கு வந்தாள் மீனாட்சி.
“ இங்க பாரு மீனாட்சி…இந்த கம்பெனி எங்க அப்பா அம்மா ஆரம்பிச்சது இல்லை ..நான் பிரத்தியேகமாக குழந்தைகளுக்கான சோப், ஷாம்பூ, வெட் டிஷ்யூஸ்,பேபி ஆயில், டிரெஸஸ்ன்னு ஆரம்பிச்சது. நல்லா தான் போயிட்டு இருக்கு. நான் உன்கிட்ட விட்டுட்டு போறதுக்கு காரணம்…சீக்கிரமா புரிஞ்சிக்குவ..ஆதி உன் கூடவே இருப்பான் எப்பவும்..நீ கொஞ்ச நாள்லயோ… இல்ல கொஞ்ச வருஷம் கழிச்சோ தனியவே ரன் பண்ண ஆரம்பி..இதுல வர்ற லாபத்தை வொர்க்கர்ஸ்க்கும் ஆதரவில்லாதவர்களுக்கும் பிரிச்சு கொடுத்துடுங்க. டிரெஸ்ட் , ஆசிரமம் , படிப்பு, மெடிக்கல் சப்போர்ட்…இதுக்கெல்லாம் எப்படி எங்க கொடுக்கனும்ங்கற டீடெயில்ஸ் வேற ஃபைல்ல இருக்கு…அதையும் ஆதிக்கிட்ட கொடுத்துருக்கேன்..செக் பண்ணிக்க…என்னோட ஹெட் ஆபிஸ்ஸ நான் மும்பைக்கு மாத்த போறேன்…இனி அங்கேயே செட்டில் ஆகலாம்ன்னு நினைக்கிறேன்..உனக்கு இதெல்லாம் பிடிபட கொஞ்ச நாள் இல்ல வருஷம் ஆகலாம்…எனக்கும் ஒரு சேன்ஜ் தேவைப்படுது…அதனால தான் இந்த முடிவு…உன்னால முடியும் மீனாட்சி…நிறைய கோர்ஸ் படி…ப்ராக்டிகல்லா ஆதி உனக்கு நிறைய சொல்லித் தருவான். ஹீ இஸ் குட் டியூட்டர், மென்ட்டார், மேனேஜர், குட் சீ.இ.ஓ…எக்சட்ரா…எக்சட்ரா…ப்ளீஸ் முடியாதுன்னு சொல்லிடாத…” என்றாள்.
மீனாட்சிக்கோ மிகவும் பயமாக இருந்தது.
கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வரைக்கும் சரி…ஆனால் எந்த ஒரு பின்புலமும் இன்றி ஒரு தொழிலை நடத்துவதென்றால் உதறல் எடுத்தது.
அவளருகே வந்தவள் , “ யூ கேன் மீனாட்சி…ஆல் தி பெஸ்ட்…” என்று அவளை அணைத்து விடுவித்தாள் .
பின்னர் மூவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தானர்.
ஆதியும் மீனாட்சியும் தங்களுடைய வீட்டிற்கு கிளம்பினார்கள்.
இரவு உணவை தயார் செய்து முடித்திருந்தாள் மீனாட்சி.
இருவரும் உண்டுவிட்டு தங்களுடைய அறைக்குள் நுழைந்தனர்.
ஆதியின் அறையை தாண்டி தான் அவளது அறைக்குச் செல்ல வேண்டும்.
ஆதியோ கட்டிலில் அமர்ந்திருக்க அவனைத் தாண்டிச் செல்வதற்குள் கால்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டது.
வழக்கமாக எவ்வித தயக்கமும் இன்றி நேரே தன்னறைக்குள் செய்பவள் இன்று தயங்கியபடி சென்றாள்.
அவள் செல்வதையே விழியகற்றாமல் பார்த்திருந்தவன் அவள் தனது அறையின் கதவினை மூடும் நேரத்தில் அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
மீனாட்சி சட்டென்று விலகிச் செல்ல அவளது கைப்பிடித்து தன்னருகே இழுத்தான்.
அவனது நெஞ்சில் வந்து
மோதிக் கொண்டாள் பெண்ணவள்.
“ மீனாட்சி…” என்றவனது குரல் கரகரத்து ஒலித்தது.
“ இனி தனித்தனியான ரூம் தேவைதானா…?”என்றான் கிறக்கமாக.
அவளோ தலையை குனிந்தபடி இருக்க.
மெல்ல நிமிர்த்தினான் அவளது முகத்தை.
மெல்லிய வெளிச்சம் அவளது முகத்தில் பட்டு கூடுதல் அழகை தந்தது.
அதனை ரசித்துக்கொண்டே அவளது காதில், “சொல்லு டி…தனி ரூம் தேவைதானா…?” என்றான் மெல்லிய குரலில்.
நாணத்தில் முகம் சிவந்து போய் “ ஆம்” என்று முதலில் தலையை ஆட்டி பிறகு இல்லையென்றாள்.
“ பேச வேண்டியதெல்லாம் நிறையவே பேசியாச்சு…உனக்கு சம்மதமா…? நாம அடுத்த கட்டத்துக்கு போகலாமா…?” என்றான்.
அவன் நேரடியாக இவ்வாறு கேட்டதால் அவளுக்கு வெட்கம் பிடிங்கித் தின்றது.
அவன் முகம் காண முடியாது சம்மதமாக தலையாட்டினாள்.
“ இந்த பெட் சின்னதா இருக்கு…நாம அந்த ரூமுக்கு போயிடலாம்…” என்றவாறே அவளை கையில் ஏந்தியபடி அவளது இதழ்களுக்கு வேலையை கொடுத்துக் கொண்டே அடுத்த அறையினுள் நுழைந்தான்.