அத்தியாயம்-10 ஆஸ்வதி ஆதியை தேடிக்கொண்டு வர……அப்போது அவள் அறையை விட்டு வெளியில் வர அங்கு எந்த லைட்டும் எறிய வில்லை.. பக்கத்தில் ஆள் இருப்பது கூட அவளுக்கு தெரியாத அளவிற்கு இருட்டாக இருந்தது.. இந்த நேரத்தில் எங்க லைட் ஸ்விட்ச் இருக்கிறது என்று கையாலயே தேடினாள். ஸ்விட்ச் கிடைத்ததும் அதை போட கையை வைக்க போக ஒரு வலிய கரம் அதை போடாதது போல தடுத்து அவளை தன்னை நோக்கி இழுத்தது. ஆஸ்வதி அந்த வலிய கை இழுத்த வேகத்தில் எதோ கல்லின் மீது மோதியது போல் கடினமாக இருந்தது.. ஆஸ்வதி தன் கைக்கொண்டு வருட…. அங்கு அந்த இரவின் அமைதியிலும் நிசப்தத்திலும் அந்த சத்தம் அவளுக்கு வேகமாக கேட்டது அது…டப்டப்..எங்கிற இதயத்தின் ஓசை.அப்போது தான் அவள் யார் மீதோ மோதிவுள்ளோம் என்பதே அவளுக்கு தெரிந்தது.அதில் ஆஸ்வதி பயந்து கத்த பார்க்க அவள் வாயை ஒரு கை மூடிக்கொண்டு அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டது.. அதில் அவள் தன் எதிரில் நிற்கும் அந்த உருவத்தை பார்க்க அவள் முயற்சி செய்ய ஆனால் அந்த உருவம் முகத்தை நன்றாக மூடி இருந்தது. அவள் திமிற அவன் விடாமல் அவளை இன்னும் இறுக்கிக்கொண்டு “ஸ்ஸ்ஸ் கத்துன உன்ன கொன்றுவென்..”என்று ஆளை அதிர வைக்கும் ஒரு கம்பீர குரலில் மிரட்டிக்கொண்டே.ஒரு கத்தியை அவள் கழுத்தில் வைத்தான் அவன் குரலே அவளை மிரட்ட… அதிலும் அந்த இருட்டிலும் அவன் கையில் இருந்த கத்தி பளபளவென தெரிந்தது.. அதில் மூச்சிவிட கூட மறந்து அதிர்ச்சியாக பார்த்தாள்.. அவளின் இந்த மிரட்சி பார்வையில் “யார் நீங்க… இங்க என்ன பண்றீங்க…..”என்றாள் மெல்லிய நடுங்கிய குரலில்.அவன் அப்போதும் அவள் மீது தன் மூச்சிக்காற்று உரச இன்னும் நெருங்கி நின்றுக்கொண்டு…”இங்க பாரு நா இங்க வந்ததையோ.. இல்ல உன்ன மிரட்டுனதையோ. இங்க யாருகிட்டயாச்சும் சொன்ன……”என்று கூறியவன் மேலும் அவன் அவளிடம்.. “நா இங்க இருந்து போகிற வர உன் வாயில இருந்து சத்தம் வரக்கூடாது.. வந்துது உன் புருசன் கீழ தா அவன் அந்த பெருசு ரூம்ல தான் இருக்கான். அவன தா கொல்லுவேன்.”என்றான் அதில் அவள் ஒரு நிமிடம் மிரண்டு போனாள்.. அதனை அவள் கண்கள் அப்பட்டமாக காட்ட… அந்த மிரட்சியான பார்வையை அந்த உருவமும் குறித்துக்கொண்டது மேலும் அந்த உருவத்தின் கண்கள் அவளை பார்வையால் வருடியது. அந்த இருட்டிலும் அவளது மிரட்சியிலும் அவள் அதனை கவனிக்கவில்லை.. அவள் கத்தமாட்டேன் என்று தலையை ஆட்ட…. “ம்ம் குட் என்ன இங்க பார்த்ததா யார்ட்டயாச்சும் மூச்சிவிட்ட உன்ன ஒன்னும் பன்னமாட்டேன். நா சொல்றது புரிஞ்சிதுல”என்றான் அவளும் அவனை அப்போது தான் பார்க்க முயன்றுக்கொண்டு இருந்தாள் அவன் சொன்னது கேட்டதும்.வேகமாக தலை ஆட்ட…..ம்ம்.. என்று அவனும் அப்போது தான் பார்த்தான் அவன் கை அவளது வெற்றிடையில் அழுத்தமாக பதிந்து இருந்தது.. அதனை உணர்ந்த அவன் கைகள் இன்னும் அழுத்தமாக அவள் இடையில் பதிய….. அதனை உணர்ந்த அவள் அவனிடம் இருந்து விலக நெளிந்துக்கொண்டே இருந்தாள்.அது மட்டும் இல்லாமல் அவளது முகம் வெகு அருகில் இருந்தது.. அதை பார்த்த அவன் அவளை இன்னும் நெருங்கினான். அவனின் பார்வை மாற்றத்தை அறிந்த அவள் அவனை விட்டு விலக முயல… ஆம்.. அவளால் முயலமட்டும் தான் முடிந்தது பின் அவன் தன்னை நெருங்கி வருவதை பார்த்து பயத்தில் அவளின் விரித்த விழிகள் ஒருதரம் அழுத்தி மூடி திறந்தாள் கண்ணை திறந்து பார்த்தாள் அங்கு அவள் மட்டும்தான் அங்கு நின்றுக்கொண்டு இருந்தாள் எதிரில் யாருமே இல்லை எப்படி இது இங்கு தானே அவனை பார்த்தேன். இப்போது எங்கே.. என்று நினைத்துக்கொண்டே நின்றிருந்தாள்.. அவளது நெற்றியில் மட்டும் எதோ ஈரமாக குறுகுறுத்துக்கொண்டே இருந்தது.. அவள் கை விரல்களால் அதனை தொட்டுப்பார்க்க அவல் உடல் ஒரு நிமிடம் சிலிர்த்தது ஆனால் அது எதனால் என்பது அவளுக்கு புரியவே இல்லை பின் வீடு முழுதும் அவனை தேடி ஆஸ்வதி அலைந்துக்கொண்டு இருந்தாள்.. படியில் இறங்கி ஹாலுக்கு வந்து பார்க்க அவளுக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை.பின் கிட்சன் சென்று பார்க்க…. அங்கும் எதும் தெரியவில்லை. பின் வெளிக்கதவை சோதிக்க அது மூடிதான் இருந்தது… இறுதியில் அவன் வந்ததற்கான தடயமே அவளுக்கு இல்லாமல் போனதில் அவள் தான் குழம்பி போனாள் அதற்கு பின் தான் ஆதியை காணுமே என்று தேடிக்கொண்டு வந்தது அவளுக்கு நியாபகம் வந்தது…. அங்கு தாத்தாவின் அறை வாசலில் நின்று தயங்க….. எதற்கும் திறந்து பார்ப்போம் என்று கதவினை மெதுவாக திறந்து பார்த்தாள் அறை முழுதும் இரவு ஒளியில் இருக்க….. அந்த இரவு வெலிச்சத்திலும் அங்கு ஆதி சிறு பிள்ளை போல தன் தாத்தாவின் கையை பிடித்துக்கொண்டு தூங்கிக்கொண்டு இருப்பது ஆஸ்வதிக்கு நன்றாக தெரிந்தது. அதன் பின் தான் அவளுக்கு மூச்சே வந்தது.. பின் அவள் அவனை ஒரு அழுத்தமான பார்வை பார்த்துவிட்டு தொந்தரவு செய்யாமல் கதவை மூடிவிட்டு படியில் ஏறி மேலே வந்தாள்.. தன் அறைக்கு வந்த பின்பு தான் கொஞ்ச நேரத்திற்கு முன் நடந்தது நியாபகம் வந்தது. “அது உண்மையா இல்ல கனவா,. அப்புறம் ஏன் நா அங்கயே நின்னுட்டு இருந்தேன்..”என்று பல வாறு யோசித்துக்கொன்டே இருந்தவள் குனிந்து தன் இடையை பார்க்க… அங்கு அழுத்தி யாரோ பிடித்ததற்கான அடையாளம் இருந்தது அதனை கைகளால் வருடிவிட்டவள் கண்ணாடி அருகில் சென்று தன் முகத்தை ஆராய… அவல் நெற்றியை ஒரு பார்வை பார்க்க முகம் குங்குமமாக சிவந்து போனது.. அதை பார்த்து அதிர்ந்தவள். “சம்திங் ராங். இங்க என்னவோ நடக்குது.. அது என்னனு தெரில….. கூடிய சீக்கரம் கண்டுப்பிடிக்கனும்…”என்று தன் நெற்றியை வருடிக்கொண்டே… கட்டிலில் உட்கார்ந்து ஒன்று ஒன்றாக யோசிக்க ஆரம்பித்தாள். இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து நடக்கும் அனைத்தையும் யோசித்தவாறே நகத்தை கடித்துக்கொண்டே அப்படியே உட்கார்ந்தவள்… பின் விடியல் காலையில் தான் உறங்கினாள். காலையில் தூங்கிக்கொண்டு இருந்த ஆஸ்வதியை இரு கண்கள் ரசனையாக பார்த்துக்கொண்டு இருந்தது அந்த கண்கள் தன் கைகளை ஒரு முறை பார்த்துவிட்டு பின் திரும்பி ஆஸ்வதியை பார்க்க… அங்கு அந்த அறையின் ஏசியின் மகிமையால் அவளது இடை அப்பட்டமாக அந்த கண்களுக்கு காட்சி அளித்தது.. பின் அவளது நெற்றியை வருடியவாறு அதனை ரசித்துக்கொண்டு இருந்த அந்த கண்கள் ஜன்னலில் இருந்து பட்ட வெளிச்சத்தில் மெதுவாக கண்ணை திறந்த ஆஸ்வதியை பார்த்துவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றது. ஆஸ்வதி எழுந்து பின் திரும்பி கடிகாரத்தை திரும்பி பார்க்க அது 7 என்று காட்டியது உடனே அவசரமாக எழுந்து குளிக்க சென்றுவிட்டாள். குளித்து முடித்து வந்து கண்ணாடி முன் நின்றாள் தலை சீவி பின்னிவிட்டு.நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டு கீழே சென்றாள் இன்னும் யாரும் எழுந்ததற்கான அடையாளம் தெரியவில்லை. பின் சமையல் அறைக்கு சென்று பாலை காய்த்து அதில் தனக்கு காபி கலந்து எடுத்துக்கொண்டு வெளியில் சென்றாள்.. தோட்டத்தில் போடப்பட்டு இருந்த நாற்காலியில் உட்கார்ந்து தோட்டத்தை ரசித்தவாறே காபிக் குடித்தாள் பின் அங்கு உள்ள செடிகளை, பூக்களை எல்லாம் தொட்டு,நுகர்ந்து பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள். பின் தன்னை யாரோ நெடுநேரம் பார்ப்பதாக தோன்றியது. திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தாள் யாரும் இருந்ததற்கான அறிகுறி இல்லாமல் இருந்தது பின் திரும்பி பார்த்துக்கொண்டே நகர்ந்தவள். எதிரில் நின்றிருந்தவன் மேலே மோதிவிட்டு ஆஆஆஆஆ, என்று கத்தி அதிர்ச்சியாக திரும்பி பார்த்தாள்..அங்கு. அங்கு. அவளுக்கு முன்.. பே.என்ற சத்தத்துடன் வந்து நின்றான் ஆதி.. அவன் செய்த சத்தத்தில் ஆஸ்வதி தான் பயந்து போய் அவனை கீழே தள்ளிவிட்டுவிட்டாள் அதில் கீழ விழுந்த ஆதி “ஆஆ…. ஏஞ்சல்.. ஏன் என்ன கீழ தள்ளிவிட்ட”என்று அவன் அவன் கையை தேய்த்துக்கொண்டு உதட்டை பிதிக்கிக்கொண்டு நின்றிருந்தான்.. “அய்யோ.. ஆதி அடிப்பட்டுட்டா..”என்று பதறியவாறு அவன் பக்கத்தில் உட்கார்ந்து கையை திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டு இருந்தாள். அதில் ஆதி ஒரு நிமிடம் அவலை ரசனையாக பார்க்க…. பின்.. “என்ன ஏஞ்சல் தள்ளிவிட்டுட்ட…. போ. உங்கூட பேசமாட்டென்..”என்று எழுந்து போய் அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து முகத்தை திருப்பிக்கொண்டான். அவனின் இந்த செய்கையை பார்த்து சிரிப்பு வந்தாலும் அவன் அருகில் சென்று தன் காதை பிடித்துக்கொண்டு”சாரி ஆதி தெரியாம பண்ணிட்டென்”என்று சொல்லியவாரு தோப்புக்காரனம் போட்டாள் அதை பார்த்த ஆதி அவளை பார்த்து “அய் உனக்கு இது தெரியுமா.. நானும் நிறைய போட்டுருக்கேன் அந்த ப்ரேம் தா என்ன இப்டி 1000 டைம் போட சொல்லுவான்…நானும் ஸ்டார்ட்டிங்ல ரொம்ப நல்லா இருக்கே இந்த கேம்னு விளையாடுவேனா.. அப்புறம் கால் ரொம்ப வலிக்கும். நானும் ப்ரேம்ட போய் காலு வலிக்கிது ப்ரேம். நா கொஞ்சம் உட்காரவானு கேட்பேனா.. அவன் அதுக்கு நோ. சொல்லிடுவான்,…அப்புறம் அவன்ட திரும்ப திரும்ப கேட்டா அடிப்பான்.. தெரியுமா”என்றான் ஆதி உதட்டை பிதுக்கியவாறு… அவன் சொன்னதை கேட்டுவள் புருவத்தை சுருக்கி யோசித்தவாறே.“ஏன் போட சொல்லுவாங்க….”என்றாள் ஆஸ்வதி முகம் இறுகி. அவள் முகம் இறுகுவதை பார்த்தவாறே..“அது. நா தாத்தூ கூடவே இருக்கேனு என்ன அப்டிதா பண்ணுவான் அவனுக்கு என்னை பிடிக்கவே பிடிக்காது.. எதாவது சொல்லி என்னை அபூர்வா அத்தைகிட்ட அடி வாங்கி குடுத்துட்டே இருப்பான். பரத் பெரியப்பா.. அப்புறம் அஜய் பெரியப்பாவுக்கும் என்னை பிடிக்காது.. திட்டிடே இருப்பாங்க….. பெரியம்மா கூட அப்டிதான். ஆனா ரூபா அத்த மட்டும் ரொம்ப நல்லவங்க…. எனக்கு டைலி அவங்க தான் பால் கலக்கி தருவாங்க….. அஞ்சலி கூட என்ன நல்லா பாத்துப்பா.. அப்புறம் இஷானா இல்ல அவ என்னை எப்போதும் முறைச்சிட்டே இருப்பா ப்ப்ளு போய் இஷானாட்ட என்னமோ சொல்லிட்டே இருப்பான். அதுக்கும் இஷானா என்னை அடிப்பா.. ராம் இல்ல அவரு என் கையில என்ன சாப்ட வச்சிருந்தாலும் புடிங்கி சாப்டுருவாங்க…… ”என்றான் ஆதி கையில் வைத்திருந்த காரை ஓட்டுவதை போல செய்கை செய்து. அதை கேட்டு ஆஸ்வதி முகம் கோவத்தில் சிவந்தது… இருந்தாலும் தன்னை சமாளித்துக்கொண்டு ஆதியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். அங்கு தாத்தா எழுந்து வந்து அப்போதுதான் சோபாவில் உட்கார்ந்தார் அவரை பார்த்துவிட்டு கிட்சனுக்குள் சென்று அனைவருக்கும் காபி போட ஆரம்பித்தாள். அதை பார்த்து அங்கு வந்த வினுஜா…ஆஸ்வதியை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டே”அய்யோ என்னமா நீங்க இதலா செஞ்சிட்டு நா செய்றேன் குடுங்க…”என்றார். அவள் கையில் இருந்ததை பிடுங்கியவாறு… அதில் அதிர்ந்த ஆஸ்வதி தன்னை சாளித்துக்கொண்டு“அம்மா அதலா ஒன்னும் இல்ல… இன்னுமே நானே எல்லாருக்கும் ஃபுட் ப்ரிப்பர் பண்ணுறேன்.. நீங்க போய் வேற வேலை இருந்தா பாருங்க… அப்புறம் என்ன அம்மானு கூப்டாதிங்க….. ஆஸ்வதினு கூப்டுங்க”என்றாள் அதற்கு முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு வினுஜா “அய்யோ என்னமா உங்கள போய்..”என்று இழுத்தார் “அய்யோ அம்மா எனக்கு சின்ன வயசுதா.. அப்டியே கூப்டுங்க….. யாராவது கேட்டா நா பதில் சொல்லிக்கிறேன்”என்றாள் அவர் முகத்தை கூர்மையாக பார்த்தவாறு அங்கிருந்து சென்றாள்.. ஆஸ்வதிக்கு இங்கு வந்ததில் இருந்து வினிஜாவின் முகம் எதோ.. சூனியக்காரி முகம் போல தெரிந்தது. அதில் இன்னும் கடுப்பான வினிஜா “எப்படியும் இங்க இருக்குறவங்க முகத்துல அடிச்சி அனுப்பதான் போறாங்க…. போ. போ. போய் அசிங்கப்பட்டு வா.வந்துட்டா முதல் நாளே நா செய்றேனு.. ம்ம்ம்.. வருதுங்க பாரு சாகவே.”என்று மனதில் நினைத்துக்கொண்டு கோணலாக ஒரு சிரிப்பை சிரித்தார். பின் காபி கொண்டு வெளியில் சென்றாள். அங்கு தாத்தாவிற்கு சென்று “குட்மார்னிங் தாத்தா காபி”என்றாள்.. தாத்தா அந்த காலையிலே குளித்து மங்களகரமாக இருந்த ஆஸ்வதியை பார்த்து “குட்மார்னிங் மா” என்றார். அவளும் புன்னகையுடன் அவருக்கு அருகில் நிற்க…. “இங்க உட்காருடா…”என்றார் தனக்கு அருகில் உள்ள சோபாவை காட்டி.. ஆஸ்வதியும் புன்னகையுடன் அவர் காட்டிய சோபாவில் உட்கார… தாத்தாவும் அவளை பார்த்து புன்னகைத்தவாறு.. “என்னமா உன் வீட்டுகாரன் நைட் எங்கூட வந்து படுத்துட்டானு கோவம்லா இல்லையே.”என்றார் அவள் முகத்தை ஆராய்ந்தவாறு… அதில் அவரை செல்லமாக முறைத்துவிட்டு “இதுல என்ன தாத்தா இருக்கு.. அவருக்கு எங்க நல்லா இருக்கோ அங்க தூங்கட்டும். கொஞ்ச நாள் ஆகும் என்ட பழக….அதுக்குள்ள அவர எதுக்கும் நாம வற்புறுத்த வேண்டாமே”என்று தாத்தாவிற்கும், தனக்கிற்கும் சேர்த்து சொல்லிக்கொண்டாள்.. “சரிமா.. ஆமா. நீயென் இந்த வேலையலா பார்த்துட்டு இருக்க….”என்றார் “தாத்தா எனக்கு இதுலா செய்து பழகிட்டு..”என்றாள் சிரித்தவாறு. அந்த சிரிப்பிலே எதோ வலி இருந்தது போல தாத்தாவிற்கு தோன்றியது. “மா. ஆஸ்வதி இதுவர நீ உங்க வீட்ல அனுபவிச்சதுலா போதும் டா. இங்க நீ ராணி மாறி இருக்கனும்டா.. “என்றார் அவள் தலையை பாசமாக வருடிவிட்டவாரு… அதில் புன்னகைத்தவள்… “சரி தாத்தா காலைல என்ன டிபன் செய்யலாம்..”என்றாள் “இங்க உள்ளவங்களா ஒன்னு ஒன்னு தனி தனியா கேட்பாங்க மா அதுலா வினுஜாவுக்கு தெரியும்.. அவள்ட்ட கேட்டுக்கோமா”என்றார்.. “சரி தாத்தா..”என்று அங்கிருந்து நேராக கிட்சன் சென்று.. அடுத்து ஆதிக்கு பூஸ்ட் கலந்து அவன் கையில் கொடுத்து குடிக்க வைத்துவிட்டு அங்கிருந்து சாமி அறை சென்று சுத்தப்படுத்தி. தலையில் முக்காடிட்டு சாமியை கும்பிட்டாள் ஜெய் கணேசா.. ஜெய் ஜெய் கணேசா என்று உருகி பாடிக்கொண்டு இருந்தாள். அவள் குரலில் அந்த பாடல் அவ்வளவு இனிமையாய் இருந்தது தாத்தா அவள் குரலில் மயங்கி கண்களை மூடி உட்கார்ந்திருந்தார்.. ஆதி அவள் உடன் சாமி அறைக்கு சென்று அவளுடன் உட்கார்ந்து அவனும் பூக்களை அவளை போல சாமி படத்திற்கு சூட்டிக்கொண்டு இருந்தான். அவள் குரல் வீடு முழுதும் ஒலித்து அதில் நிம்மதியாக தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் அனைவரும் எழுந்துவிட்டனர்.. அனைவரும் ரூமில் இருந்து வெளியில் இருந்து வந்தனர்.. அவள் சாமி அறையில் உட்கார்ந்து பாடுவதை பார்த்த அங்கு இருந்த அனைவருக்கும் கடுப்பாக இருந்தது. அவள் வெளியில் வந்து தாத்தாவிற்கு ஆரத்தியை காட்ட அவர் அதை எழுந்து பயபக்தியுடன் கண்ணில் ஒற்றிக்கொண்டார். பின் சாமி அறைக்கு சென்று தன் கணவன் கண்ணில் ஆரத்தியை ஒற்றி எடுத்தாள் அதை பார்த்த ஆதி அவனும் அதை போல அவளுக்கு எடுத்து கண்ணில் ஒற்றினான்,.. அதில் சிரித்த ஆஸ்வதி அவனை அழைத்து வெளியில் வந்தாள் ஆஸ்வதி ஆரத்தியை எடுத்துக்கொண்டு ரூபாவதி அருகில் வந்தாள். அவரிடம் ஆரத்தியை காட்ட… அவர் அவளை பார்த்து சிரித்துக்கொண்டே ஆரத்தியை கண்ணில் ஒற்றிக்கொண்டார். அவருக்கு அருகில் நின்றிருந்த அஞ்சலிக்கு தட்டை நீட்ட அவளும் அதை கண்ணில் ஒற்றிக்கொண்டாள்.. பின் அங்கு இருந்த விஷாலுக்கு நீட்ட “சாரி அண்ணி நான் இன்னும் குளிக்கல….”என்றான் அசடு வழிந்துக்கொண்டு அதை கேட்டு ஆஸ்வதியும் சிரிக்க…..பின் திரும்ப போக… “ஹெய் நில்லு உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க காலங்காத்தால வந்து இப்டி பாடி தூக்கத்த கெடுத்துட்டு இருக்க…”என்றார் அபூர்வா. “இல்ல அம்மா.. அது..”என்று எதோ சொல்ல வந்தவளை “என்னது அம்மாவா.. கால் மீ மேம் ஒகே.. என்ன அம்மானு கூப்ட கூட ஒரு தகுதி வேணும்… இதுக்கு தான் தகுதி தராதரம் தெரியாதவங்களலா இங்க உள்ள விட்டா இதா நடக்கும்”என்றாள் அமிர்தா “அதானே இது எங்க வீடு.. நீ பாட்டுக்கு வர… நேரா சாமி அறைக்குள்ள போற.. உன் வீடு மாறி நடந்துக்குற… ம்ம்… என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல….”என்றார் ரியா சர்மா. “ஆமா. அண்ணி நல்லா கேளுங்க… கேட்க ஆளு இல்லாம தான் இங்க எல்லாம் அவங்க அவங்க இஷ்டப்படி நடக்குது.”என்றாள் அபூர்வா “ஆமா மா. நா கூட இந்த வீட்ல உரிமை இல்லாத மாறி தான் ஒதுங்கி போறேன். இவ என்னனா.. வீட்டு நடு ஹாலுல தாத்தா பக்கத்துல உட்காந்து சிரிச்சி சிரிச்சி பேசுறா…”என்றாள் இஷானா. ராம். இஷானா பேசுவதை கூட கவனிக்காதவன் போல் ஆஸ்வதி கையில் இருந்த ஆரத்தி தட்டில் இருந்த லட்டுவை எடுத்து வாயின் உள்ளே அனுப்பி வைத்தான்… அதை கண்ட இஷானா. அவன் தோளில் ஒரு இடியை இடித்தாள். அதில் ராம் வாயில் வைத்திருந்த லட்டுவுடன் அனைவரையும் பாவமாக பார்த்தான்… அவர்கள் பேசுவதை கேட்ட ஆஸ்வதி அனைவரையும் கண்கலங்க பார்த்தாள்…திரும்பி தன் கணவனை பார்க்க… அவன் கண்கள் ஆஸ்வதியை தான் பார்த்துக்கொண்டு இருந்தது…தன் விதியை நொந்த ஆஸ்வதி தலையை குனிந்துக்கொண்டு நின்றிருந்தாள் ஆதி அவள் தலை குனிந்த நிற்பதை பார்த்து அவள் பக்கம் வந்து.”அத்த அவ….. அவ…. என்ன பன்னுனா ஏஞ்சல ஏன் திட்டுறீங்க…”என்றான் சுற்றி முற்றி பார்த்து பயந்தவாறு அதில் அனைவரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.. இதுவரை ஆதித் யாரையும் இப்படி எதற்காகவும் எதிர்த்து பேசியதில்லை… அதனாலே கூட ஆதியை யாரும் கண்டுக்கொள்ளாமல் இருந்தனர்.. ஆனால் முதல் முறை ஆதி அனைவரையும் எதிர்த்து கேள்வி கேட்கிறான் என்றால் அனைவருக்கும் கோவம் வரத்தானே செய்யும்.. அனைவரும் அவனை கோவமாக முறைக்க…. அவன் பயத்துடனே ஆஸ்வதி பின்னால் ஒழிய…… “ஓ…. இங்க பாத்திங்களா அப்பா.. இவ இந்த வீட்டுக்குள்ள வந்து 2 நாளு கூட இன்னும் ஆகல… ஆனா வந்ததும் இவனையே நமக்கு எதிரா திருப்பிவிட்டுடா. இதுக்கு தான ஆசப்பட்டிங்க…. கூடிய சீக்கரம் இந்த வீட்டையும் உங்க சொத்தையும் உங்க கிட்ட இருந்து வாங்கிட்டு உங்கள வெளில தொறத்த போறா”என்றார்…அஜய் அவளை கோவமாக முறைத்துக்கொண்டு.. அதனை கேட்டு ஆஸ்வதி தலையை மறுப்பாக ஆட்டிக்கொண்டே “இல்ல மாமா”என்று எதோ சொல்ல வந்தவளை “ம்ச் நீ கொஞ்சம் நிறுத்துறீயா.. நா அங்க பேசிட்டு இருக்கேன்..பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது குறுக்க பேச கூடாதுனு ஒரு இங்கிதம் தெரிதா உனக்கு.”என்றார் அஜய் அவளை கேலியாக பார்த்துக்கொண்டு… அதில் அவமானத்தில் தலையை கீழே குனிந்துக்கொண்டாள்.. அதை பார்த்த ரூபாவதி அவளை பார்த்துக்கொண்டே அஜயை பார்த்து “அஜய் இப்போ அவ என்ன பண்ணுனானு இப்டி அவள பேசுற……என்னடா இது அவ சாமி தான கும்பிட்டா அவள ஏன் இப்டி திட்டுற…”என்றார் ரூபாவதி.. “பாத்தீங்களா அஜு. இவ்வளவு நாள் உங்கள எதிர்த்து பேசாத உங்க அக்கா நேத்து வந்தவளுக்காக உங்ககிட்ட சண்ட போடுறாங்க….”என்றாள் ரியா அஜயின் மனைவி.. அதை கேட்ட ரூபாவதி ரியாவை பார்த்து ”ரியா. நா அவன்ட்ட பேசதான் வந்தேன். நீதான் இப்போ இத சண்ட ஆக்குற…..”என்றார் “அப்போ நா உங்க ரெண்டு பேருக்கும் சண்ட மூட்டுறேனு சொல்றீங்கலா.. என்ன எனக்கு இதுதான் வேலையா அஜூ. உங்க அக்கா என்னை சண்டக்காரினு சொல்றாங்க…..”என்றாள் முகத்தை கோவமாக வைத்துக்கொண்டு. அதில் பதறிய ரூபாவதி…”அய்யோ. என்ன ரியா இது…”என்று அவர் மேலே எதோ பேச வர…. உடனே அஜய்.. “அக்கா நீ கொஞ்சம் சும்மா இருக்கியா.. அவ யாரு நமக்குள்ள… நீ ஏன் அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வர…..இங்க நடக்குறது உனக்கு ஒன்னும் தெரியாது.கொஞ்சம் பேசாம இரு.”என்ற அஜய். ஆஸ்வதியின் புறம் திரும்பி அவளை முறைக்க…. “என்னமா இன்னிக்கி காலையிலயே உன் வேலைய சிறப்பா ஆரம்பிச்சிட்ட போல இப்டிலா.. சாமி கும்பிட்டு எங்கள ஏமாத்தி எங்க சொத்த பறிக்க தான வந்துருக்க….”என்றார் பரத் அதை கேட்ட ஆஸ்வதி அவரை பார்த்து கண்ணில் கண்ணீர் வழிந்தவாறு.இல்லை என்று தலையை ஆட்டினாள்.. அவளை பார்க்க பாவமாக இருந்தது ரூபாவதிக்கு.. ஆனாலும் அவர் தன் தம்பிகளின் பேச்சிக்கு பயந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டு நின்றார்… ஆஸ்வதி அழுவதை கண்ட ஆதி “ஏஞ்சல் நீ அழாத… பெரியப்பா.. அவள ஏன் இப்டி அழ வைக்கிறீங்க…”என்றான் ஆதி “இங்க பாருடா.. ம்ம்.. ஏன் டா ஆதி இவ்வளவு நாள் நீ இருக்குற இடமே தெரியாம இருந்துச்சி. இப்போ என்ன திடிர்னு தைரியம் வந்துச்சி. .என்ன எங்கிட்ட வாங்குனத மறந்துட்டியா..”என்று ப்ரேம் கிண்டல் செய்தவாறு…அவன் அருகில் நின்ற ஆஸ்வதியை கேலியாக பார்த்தான் அதுவரை அமைதியாக தன்னை திட்டுபவர்களை அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்த ஆஸ்வதி ப்ரேம் தன்னவனை அடித்தான் என்பதை தெரிந்து ருத்ரகாளியாக மாறிவிட்டாள்.. இருந்தாலும் தன்னை அமைதிப்படுத்திக்கொண்டு ஆதியை காண….. அவனை பார்த்த ஆதி பயந்து கை கால் எல்லாம் நடுங்க நின்றிருந்தான்.. அதனை பார்த்த ஆஸ்வதி ஆதியை பார்த்தாள். அவன் அவனுக்கு பயந்து போய் அவளின் பின்னால் போய் ஒளிந்துக்கொண்டான் அங்கு ஆதி முன்னால் நின்றுக்கொண்டு இருந்த ஆஸ்வதி ப்ரேமை முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தாள். அப்போது.. அதனை பார்த்த ப்ரேம் அவளது முறைப்பில் மிரண்டு தான் போனான்.