அத்தியாயம்-12
விதுன் சொன்னதை கேட்டவள் அதிர்ந்தாள்..
ஆஸ்வதியின் அதிர்வை பார்த்தவன் மெலிதான ஒரு புன்னகையை சிந்திவிட்டு.. “எஸ் பூனேல எம்ஜிஎம் ஹாஸ்பிட்டல ஸ்பேஷலிஸ்ட்டா இருக்கேன்…”
அதை கேட்ட ஆஸ்வதி அவனை இன்னும் அதிர்வுடன் பார்க்க…..ஏனென்றால் பூனேயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனையில் அதுவும் ஒன்று. ஆஸ்வதியின் தங்கை விஷாலி அந்த ஹாஸ்பிட்டலை பற்றி பெருமையாக சொல்வாள்..”அக்கா நா மட்டும் படிச்சிட்டு அந்த ஹாஸ்பிட்டல போய் டாக்டரா ஜாய்ன் பண்ணுனேனு வச்சிக்கோ…நா பெரிய டாக்டர் ஆகிடுவேன்.. அப்புறம்…என் அக்காவுக்கு தேவையான எல்லாமே என்னால வாங்கித்தர முடியும்.” என்பாள் ஆஸ்வதியை கட்டிக்கொண்டு..
அவளின் அதிர்வை பார்த்தவன்.”ம்ம்ம். எஸ்.”என்றான் அழுத்தமாக…..
“அப்றம் ஏன் நீங்க…..”என்று ஆஸ்வதி ஆரம்பிக்க…
“அப்றம் ஏன் இங்க இருக்கீங்கனு தானே கேட்குற…..”என்றான் அவளை இடைமறுத்து.
அவளும் ஆம் என்று தலை அசைக்க…..”நானும் ஆதித்தும் சின்ன வயசுல இருந்து ஒன்னா தான் படிச்சோம்.. நா படிக்கவே கஷ்டப்பட்டேன் ஏனா என் அப்பா இங்க தான் ஆதித்தோட அப்பாகிட்ட ட்ரைவரா இருந்தாரு.. எங்க அப்பாவால என்ன ஆதித் படிக்கிற ஸ்கூல சேர்க்க முடில….. ஆனா ஆதித்தும் நானும் ரொம்ப க்ளோஸ்.. எங்க பேமிலி இங்க தான் பின்னாடி சர்வன்ட் காலனில தான் இருந்தோம்.. அப்போ நானும் ஆதித்தும் தான் ஒன்னா விளையாடுவோம்..
“அப்போல இருந்து நானும் ஆதித்தும் க்ளோஸ்.. என்னை அவன் படிக்கிற ஸ்கூலுலையே சேர்க்க சொல்லி அவன் அவங்க அப்பாகிட்ட ஒரே அழுக….. ஆதித்தோட அப்பா விஷ்ணு அங்கிள்க்கும் அவங்க பையன் மேல தனி பாசம்.. ஆதித் என்ன கேட்டாலும் செய்ய தயாரா இருப்பாரு.அப்டி இருக்குற பையன் அழுகுறத தாங்க முடியாம அவங்களும் என்னை ஆதித்தோட ஸ்கூலையே சேர்த்துட்டாங்க… அதுக்கு முழுதும் ஆதித்தோட அப்பா தான் பணம் கட்டுனாரு.எங்க அப்பா வேணாம்னு எவ்வளவோ சொல்லி பார்த்தாரு.. ஆனா விஷ்ணு அங்கிள் அத கேட்டுக்கவே இல்லை.”இத நா என் பையனுக்காக மட்டும் செய்ல….. விதுனும் என் பையன் மாறிதான்.. இனி நானே அவன படிக்க வைக்கிறேன்.. நீ உன் குடும்பத்த பார்த்தா போதும்னு அங்கிள் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு..
“அப்புறம் என்ன ஒரே ஸ்கூல்.. ஒரே க்ளாஸ் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே இருப்போம்.. அது இங்க நிறைய பேர்க்கு பிடிக்காது” என்றவன் முகம் இறுகிப்போக….. அவனின் மனத்திரையில் ஒருத்தியின் முகம் மிளிர்ந்தது…
“அப்புறம் நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ் சேர நாளும் வந்துச்சி.. எனக்கு சின்ன பிள்ளையில இருந்து டாக்டர் ஆகனும்.. அதும் சைக்யட்ரீஸ்ட் ஆகனும்னு ஆசை.. ஆனா நா ஆதித்த விட்டு பிரிய விரும்பல… அவன் கூடவே இருக்கனும்னு அவன் எடுக்க ஆசைப்பட்ட இஞ்சினியரிங்கே சேர நினைச்சேன்.. ” என்றவனது பார்வை அங்கு அமைதியாக உறங்கும் ஆதித்தை தான் பார்த்தது.
“ஆனா அப்போதான் எனக்கு ஒரு லேட்டர் வந்துச்சி. எனக்கு மெடிக்கல் காலேஜ்ல மெரிட்ல சீட் கிடைச்சிருக்குனு.. நா இத அப்ளே பண்லையேனு நினைச்சிட்டு இருக்கும் போது தான் என் ஆதித் நா தான் உனக்கு பதிலா இத அனுப்புனேனு சொன்னான்…”என்று திரும்பி ஆதித்தை பார்க்க விதுன் கண்கள் கலங்கி போனது..
“ஏன்டா இப்டி பண்ணுன….. நா உன்னவிட்டு போமாட்டேனு சொன்னேன்.. ஆனா அவன்.. உனக்கு அறிவே இல்லடா.. நம்ம நட்பு வேற….. நம்ம கனவு வேற… எனக்கு இஞ்சினியரிங் பிடிக்கும்.. அத விட்டுடு எனக்காக டாக்டர் ஜாய்ன் பண்ணுடானு நீ சொன்னா சத்தியமா நா பண்ணமாட்டேன் அது மாதிரி தான்டா நீயும் இருக்கனும். அதவிட்டுட்டு இப்டி லூசுதனம் பண்ணாத… அப்டினு சொல்லிட்டு…எப்போ என்னை விட உனக்கு படிப்பு முக்கியம் இல்லனு நினைச்சிட்டியோ இனி நீ இங்க இருக்க கூடாது உனக்கு பூனேல தான் அட்மிஷன்.. கிளம்பி ஓடு.. இனி படிப்ப முடிக்காம என்னை பார்க்க வரக்கூடாதுனு சொல்லிட்டான்..”என்றவனது கண்களில் அப்பட்டமாக பாசம் வழிந்தது…
“நா அவன எவ்வளவோ கன்வின்ஸ் பண்ண பார்த்தேன்.. ஆனா அவன் என்னை பேசவே விடல…..அதுக்கு அப்புறமும் அவன் பேச்ச என்னால மீற முடில….. நா இங்க இருந்து கிளம்பற ஒவ்வொரு நேரமும் எனக்கு அவன பிரிய தயங்கினேன்…நா தயங்கின நேரம் எல்லாம் நானும் நாலு வருஷம் முடிச்சிட்டு பாரின் போய்டுவேன்.நீயும் மேலே உனக்கு பிடிச்ச ஃபீல்ட்ல பெரிய ஆளா வரனும் அதான் என் ஆசைனு சொன்னான்
“சரினு நானும் மனசே இல்லாம போனேன்.. நானும் படிச்சி.. அங்கையே என்னோட மெடிக்கல படிச்சிட்டு அதுக்கு மேல மனோதத்துவ டாக்டருக்கு படிச்சி முடிச்சிதான் ஆதித்தை பாக்க வரனும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆதித்தும் எங்கிட்ட அப்டி தான் சொன்னான் நா இங்க இருக்க மாட்டேன்.. நீயும் நா இல்லாதப்போ இங்க வராத… இங்க இருக்கவங்க யாராவது உன்ன எதாவது பேசி மனச கஷ்டப்படுத்துவாங்க….. அத என்னால தாங்க முடியாது.. அப்டினு சொன்னான். அதுக்கு அப்புறம் நா படிச்சி முடிச்சி கையில வேலையோட வந்தப்போ அப்போ நா ஆதித்த பார்த்தது இந்த நிலையில தான்…”என்றான் கண்ணீர் வழிய… அவனின் வேதனை ஆஸ்வதிக்கும் தெரிய தான் செய்தது..
“அவன் பாரீன் போனது வர என்கிட்ட பேசினான்….. அங்க போனதும் கூட எங்கூட கான்டேக்ட்ல தான் இருந்தான்..அவனுக்கு ஸ்டடிஸ் முடிஞ்சதும் கூட இங்க வரப்போறதாவும் சொன்னான் அப்புறம் இங்க வந்ததும் இவனுக்கு எப்டி இப்டி…”என்று குரல் நடுங்க பேசியவன்..
”நா படிச்ச படிப்பு இவனுக்கு யூஸ் ஆகும்னு நா நினைக்கவே இல்லை…”என்றான் கலங்கிய குரலில். அதில் ஆஸ்வதியும் சேர்ந்து கலங்க…
“ஆதிக்கு எப்டி இப்டி..”என்று ஆஸ்வதி தயங்க…
“ஆதித் பாரீன் போய்ட்டு இந்தியா வந்த அன்னிக்கி தான் என்னமோ ஆயிருக்கு ஹான் அன்னிக்கு தான் ஆதித்தோட மொத்த சந்தொஷமும். அதாவது விஷ்ணு அங்கிள் ஆக்ஸிடன்ட்ல இறந்துட்டாங்க….. அதும் இவன் வந்த கார்ல தான்.. அது மட்டும் தான் எனக்கு தெரியும்..நானும் இவன இப்டி விட்டுட்டு போக முடில….. அதான் இவன சரிப்பண்ணிட்டு தான் இங்க இருந்து போகனும்னு இங்கவே இருந்து ஆதித்க்கு என்னால முடிஞ்ச ட்ரீட்மென்ட் குடுத்துட்டு இருக்கேன். அது இந்த வீட்ல தாத்தாவ தவிர வேற யாருக்கும் தெரியாது ஏனா எனக்கு இங்க இருக்குற யார் மேலையும் நம்பிக்கை இல்ல….”என்றான் விதுன்..முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு..
அதை கேட்ட ஆஸ்வதிக்கு தன்னவனை பார்க்க பார்க்க ஆதரவற்ற குழந்தை ஒன்று தூங்குவது போல் இருந்தது…அவளுக்கும் இங்கு வந்ததில் இருந்து எதோ சரி இல்லாததை போல தான் இருந்தது.
“உன்ன பார்த்ததுல இருந்து ஆதித்தோட ஆக்டிவிடிஸ்ல சில சேஞ்சஸ் தெரிது.. அதான் உன்ட கேட்டேன். அவன முன்னாடியே உனக்கு தெரியுமானு” என்றான்.
அவளும் சிறிது நேரம் யோசித்துவிட்டு.”தெரியும்…”என்றாள் ஆஸ்வதி.
அதை கேட்ட விதுன் சிறிதாக புன்னகைத்துக்கொண்டே.”ம்ம்ம்.. நினைச்சேன்..”என்றான்
ஆஸ்வதி தலையை குனிந்தவாறே.”நானும் ஆதி படிச்ச காலேஜ்ல தான் படிச்சேன்.. ஆனா அவருக்கு மூணு வருஷம் ஜூனியர்…”என்றாள் ஆஸ்வதி..
‘அதும் அவர முதல் பார்வையிலையே விரும்ப ஆரம்பிச்சிட்டேன்..அவர என் மனசுல 5வருஷமா சுமந்துகிட்டு.. இருக்கேன்.. கனவுனு நினைச்ச வாழ்க்கைய கடவுள் எனக்கு குடுத்து இருக்காரு.. இனி நா யாரையும் ஆதி பக்கம் நெருங்கவே விடமாட்டேன்.”என்று மனதில் நினைத்தவாறே ஆதியை பார்த்துக்கொண்டு இருந்தாள் ஆஸ்வதி