உயிர் போல காப்பேன்-13

5
(16)

அத்தியாயம்-13
“ம்ம்ம்.. நானும் ஆதியோட காலேஜ்ல தான் படிச்சேன் அவருக்கு ஜூனியரா.”என்றாள் ஆஸ்வதி.
அதை கேட்ட விதுன் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு.“ஓஓ……அப்போ நீ அங்க படிக்க வரும்போது ஆதி லாஸ்ட் இயர் படிச்சிட்டு இருந்தான்…”என்றான்.
ஆஸ்வதி ஆம்.. என்று தலை ஆட்ட……”ஆனா நா ஒருத்தி இருக்கனே அவருக்கு தெரியாது.”என்றாள் விரக்தியாக
“ம்ம்ம். ஒகே இதப்பத்தி நாம பேசுறத விட ஆதி சரி ஆகட்டும் அப்புறம் நாம பேசிக்கலாம்..”என்றான் ஆஸ்வதிக்கும் தன்னவனிடம் தான் தன் காதலை முதலில் சொல்ல ஆசை. அதற்கு விதுனே வாய்ப்பு தரவும் ஆஸ்வதிக்கு நிம்மதியாக இருந்தது…சரி.. என்று ஆஸ்வதி தலை ஆட்ட…..
“ஹான் ஆதி அம்மா பத்தி…சாரி நா அத கேட்டுருக்க கூடாது.. அதும் ஆதி இந்த நிலையில இருக்கும் போது.”என்று ஆஸ்வதி குற்றவுணர்ச்சியில் தலைக்குனிந்தவாறு இழுக்க
“ம்ம்ம்.விடுமா அவன் அம்மா பத்தி அது ஆதியே சொன்னாதான் சரியா இருக்கும் “என்றான் விதுன் அதை சொல்லும் போது விதுனின் உடல் இறுகி இருந்தது போல இருந்தது ஆஸ்வதிக்கு.. சரி என்க…
“ம்ம் ஆதிக்கு இது இப்டி அடிக்கடி ஆகும்னு தாத்தாவுக்கு தெரியுமா.”என்றாள் ஆஸ்வதி
“ம்ம்ம்.. ஆமா. இதுவரை ஆதிக்கு இதுமாறி எப்போவாது நடக்கும்… இது பத்தி இந்த வீட்ல யாருக்கும் தெரியாது.எனக்கும் தாத்தாக்கும் மட்டும் தான் தெரியும்.. ஆதி இப்டி வைலன்ட்டா எப்போ பிகே பண்ணுவானு தெரியாததுனால நா அவன் கையில அவன் ஹார்ட்பீட் மானிட்டரோட சேர்த்து ஒரு சவுன்ட் சிப் ஒன்னு வச்சிருக்கேன் அது அவனோட பல்ஸ் ஹைய் ஆகுறப்போ எனக்கு மெசேஜ் அனுப்பிடும்.அத பார்த்து தான் இப்போ நான் இங்கே வந்தேன். ஆமா இது பத்தி தாத்தா உன்ட சொல்லலையா…”என்றான் விதுன்
அவள் இல்லை என்று தலை ஆட்ட….”ஓஓ…. மறந்துருப்பாங்கனு நினைக்கிறேன். “என்றவன் ஆதியை ஒரு பெருமூச்சை விட்டு பார்த்துக்கொண்டே”ஆதிக்கு ஏன் இப்படி நடக்குது.ஒன்னும் பயப்படுறமாறி இல்லையே…”என்றாள் ஆதியை கவலையாக பார்த்தவாறு.
“ம்ம்ம்ம்.. சொல்ல முடியாது. இது நல்லதுக்கா கூட இருக்கலாம் அவன் ரெக்கவர் ஆக கூட இப்டி நடக்கலாம்…ஆதிக்கு இப்டி ஆனதுல இருந்து ஒரு சில விசயங்கள பேசுனா.. உடனே அவன் மூர்க்கமா நடந்துப்பான். அந்த நேரத்துல அவன கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம்…அது மாறி தான் இப்பவும் அவன் நடந்துருக்கான்..ஆனா அவன் இப்படி நடந்துக்குறது எனக்கு தாத்தாவ தவிர வேற யாருக்கும் தெரியாது..”என்றான் விது வருத்தமாக…
ஆஸ்வதி முகம் வேதனையில் சுருங்குவதை பார்த்த விதுன்…”ஆஸ்வதி நா உன் அண்ணனு முறையில சொல்றேன்.. சீக்கரமா ஆதித்க்கு குணம் ஆகிடும்.. கண்டிப்பா அவன் உன் காதல புரிஞ்சிப்பான்…”என்றான் ஆஸ்வதியை பாசமாக வருடியவாறு..
அவனின் இந்த வார்த்தைகள் ஆஸ்வதியை கொஞ்சம் தெளிய வைக்க….. ஆஸ்வதி “தாங்க்ஸ் அண்ணா…”என்றாள் புன்னகையுடன்..
அதில் விதுன் புன்னகையுடன் தலை ஆட்டிவிட்டு.. ஆதியின் அருகில் சென்று அவன் தலை முடிகளை வருடிவிட்டவன்…”நிம்மதியா கொஞ்ச நேரம் தூங்கட்டும்.. எழுந்தானா அவனுக்கு எதும் நியாபகம் இருக்காது.. நீயும் கொஞ்சம் ரிலாக்ஸா இரு.. எல்லாம் சரி ஆகிடும்…”என்று ஒரு தலை அசைப்புடன் அங்கிருந்து சென்றான்.
அவன் சென்றதும் ஆஸ்வதி ஆதியின் அருகில் உட்கார்ந்து அவன் முகத்தையே ஆர்வமாக பார்க்க… அவள் கை எழுந்து அவன் தலை முடியை வருடிவிட்டாள்.. “ஏன் ஆதி இப்டி.. இப்டி இருக்கீங்க….. உங்கள நா முத தடவ பார்த்தபோ எப்டி இருந்தீங்க….. உங்களுக்கு யார் இப்டி பண்ணுனா உங்களுக்கு இப்டி ஆக காரணமானவங்கள நா மன்னிக்கவே மாட்டேன் ஆதி அவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும்…”என்று ஆஸ்வதி கண்கலங்க ஆதியை பார்க்க….. அவன் முகம் வெளிரி போய் குழந்தை போல் உறங்கிக்கொண்டிருந்தான்..
ஆஸ்வதி அவனை ஆழ்ந்து பார்த்தவள்.ஒரு பெரும்மூச்சை வெளிவிட்டு தன் அறையில் இருந்து கீழே இறங்கி வந்தாள்.. அங்கு அனைவரும் ஒரு ஒரு வேலை பார்த்துகொண்டிருக்க….. தாத்தா டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டுக்க்கொண்டு இருந்தார்.. ஆஸ்வதி அவரின் அருகில் செல்ல பெரியவர் அவளை அழுத்தமாக பார்த்து தலை அசைக்க…. அதிலே அவருக்கு விதுன் அனைத்தையும் சொல்லிவிட்டான் என்று தெரிந்து போனது.. ஆஸ்வதியும் அவரை பார்த்து தலை அசைக்க அவர் அருகில் சென்று அவருக்கு உணவு பரிமாற ஆரம்பித்தாள்
“என்னமா ஆதி இப்போ பரவாலையா…”என்றார் யாருக்கும் கேட்காத மெல்லிய குரலில்.
ஆஸ்வதியும் “நல்லா தூங்கிட்டு இருக்காரு தாத்தா..”என்றாள் அமைதியான குரலில்
“ம்ம்ம்..”என்று தலை அசைத்துவிட்டு..”நீயும் உட்காருமா சாப்டலாம்…”என்றார்
“இல்ல தாத்தா நா ஆதியோட சாப்டுறேன்…”என்று தலை அசைத்தாள்.. அதில் தாத்தா ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தார்.
பின் ஆஸ்வதி தோட்டத்திற்கு சென்று சிறிது நேரம் நடக்க….. அவளது யோசனை எல்லாம் தன் கணவன் மீது தான் இருந்தது..அவள் எதோ யோசித்தவாறே நடக்க… அப்படியே யோசித்தவாறு வீட்டின் பின் பக்கம் வந்துவிட்டாள்.. அப்போது எதோ பேச்சி சத்தம் கேட்க ஆஸ்வதி “யார் இந்த பக்கம்…பேசுறது..”என்று யோசித்தவாறே நடந்தாள். சத்தம் வந்த திசையை பார்த்தவாறே
அங்கு வினிஜா தான் தன் கையில் ஒரு அலைபேசியை வைத்துக்கொண்டு யாரிடமோ கோவமாக பேசிக்கொண்டு இருந்தாள்.. அதனை பார்த்த ஆஸ்வதி முகம் யோசனையில் சுருங்க…. தாத்தா சொன்னது அவளுக்கு நியாபகம் வந்தது…”வினிஜாக்குனு யாரும் இல்லமா அது மட்டும் இல்லாம அவ நமக்கு தூரத்து சொந்தம்…அவளுக்கு நாம மட்டும் தான்.. அதுனால அவள இங்க யாரும் எதும் சொல்லமாட்டாங்க….”என்று சொன்னார்.. அது இப்போது ஆஸ்வதிக்கு நியாபகம் வர….. வினிஜாவையே கூர்ந்து பார்த்தாள் ஆஸ்வதி
வினிஜா பேசுவதை பார்க்க ஆஸ்வதிக்கு பயம் தான் வந்தது..ஏனென்றால் அவள் கோவமாக பேசும்போது அவள் முகம் பயங்கரமாக இருந்தது. ஆஸ்வதிக்கு அவள் யாரையோ மிரட்டுகிறாள் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. பின் வினிஜா தன் போனை சேலைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு சுற்றிமுற்றி யாராவது இருக்கிறார்களா என்று காண….. அதை பார்த்த ஆஸ்வதி தனக்கு அருகில் இருந்த மரத்திற்கு பின்னால் ஒளிந்துக்கொண்டாள்.
பின் ஆஸ்வதி எட்டிப்பார்க்க…. வினிஜா அங்கு இல்லை.. இதை எல்லாம் பார்க்க ஆஸ்வதிக்கு பயமாக இருந்தது.. இங்கு எதோ சரி இல்லை என்பது மட்டும் இவளுக்கு புரிந்து போனது.. இதில் இருந்து எப்படி தன்னவனை காப்பாற்றுவது என்பது மட்டும் தான் அவள் மனதில் ஓடியது.. ஏனென்றால் ஆதிக்கு தான் எதோ ஆபத்து என்பது மட்டும் அவள் மனம் அடித்து சொன்னது
பின் சிறிது நேரம் இதை பற்றி யோசித்தவள் தன்னவன் அறையில் தனியாக இருப்பது புரிந்து தன் அறைக்கு சென்றாள். என்னமோ. ஆஸ்வதிக்கு ஆதியை தனியாக விட பயம்.
தன் அறைக்கு சென்று பார்க்க….. அப்போது தான் ஆதி கண் விழிக்க முயன்றுக்கொண்டிருந்தான்.. அதை பார்த்து கொஞ்சம் ஆஸ்வாசம் அடைந்தவள் அவன் அருகில் போய் உட்கார….. ஆதி அப்போது தான் தன் தலையை பிடித்துக்கொண்டு எழுந்தான். ஆஸ்வதி இந்த அறையை விட்டு கீழே இறங்கும்போதே ஆதி உடைத்த அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்துவிட்டு தான் சென்றாள். அதனால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
ஆதி கண் விழித்து முதலில் ஆஸ்வதி முகத்தை தான் பார்த்தான். அவள் ஆதியை பார்த்து புன்னகைக்க….. ஆதி அவளை விளங்கா பார்வை ஒன்றை பார்த்துவிட்டு பின் தன் பார்வையை மாற்றிவிட்டு..
“ஏஞ்சல். எனக்கு என்னாச்சி…”என்றான் தலையை பிடித்துக்கொண்டு.
ஆஸ்வதி அவனை பார்த்து சிரித்துக்கொண்டே..”என்னாச்சி.. எவ்ளோ நேரம் தூங்குவீங்க… உங்களுக்காக தான் நானும் சாப்டாம இருக்கேன். வாங்க போய் சாப்டலாம்.”என்றாள்
அதில் ஆதி அவளை புரியாமல் பார்த்தவாறே…”இல்ல ஏஞ்சல் எனக்கு தலை பயங்கரமா வலிக்கிது.”என்றான் தலையை பிடித்துக்கொண்டு.. அதை கேட்டு அவளும் அவன் தலையை பிடித்துவிட்டு..”ஒன்னும் இல்ல ஆதி. உங்க ஏஞ்சல் உங்க கூட தான் இருக்கேன்.. எப்போவும் இருப்பேன் ஓகே வா…”என்றாள் புன்னகையுடன்.
அதில் இவ்வளவு நேரம் இருந்த சுணங்கள் கொஞ்சம் மட்டுப்பட….. “ம்ம்ம். என்றுவிட்டு. அவளை ஆழ்ந்த பார்வை ஒன்றை பார்த்து…”எப்போவும் இருப்பியா. ஏஞ்சல்…”என்றான் அழுத்தமாக….. அதே நேரம் அவளை காதலுடன் பார்த்தவாறே.அதில் ஆஸ்வதி அவனை அதிர்ந்து பார்க்க…..

(வருவாள்.)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!