அத்தியாயம்-2 அனைத்து சம்பிரதாயமும் முடிந்து தான் ஆஸ்வதி நிமிர்ந்து பார்த்தாள். அந்த மண்டபத்தில் எண்ணி 40 பேர் தான் இருந்தனர். அதனை பார்த்தே அவள் ஓரளவுக்கு யூகித்து விட்டாள். ஏனென்றால் அவளுக்கு தான் ஆதிக்கை பற்றி தெரியுமே அவன் குடும்பம் இந்த மும்பையிலே பெரியது. பாரம்பரியமானதும் கூட… ஆனால் ஆதித்தின் தாத்தா மட்டும் தான் அவன் பக்கமாக அங்கு நின்றது வேறு யாரும் ஆதித்தின் குடும்பத்தில் இருந்து வரவில்லை. அதிலே அவளுக்கு தெரிந்தது அவன் குடும்பத்தில் இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை என்று.. பிறகு ஏன் இவ்வளவு பெரிய குடும்பம் எதற்கு பொருத்தம் இல்லாத தன்னை எதற்கு திருமணம் செய்ய போறார்கள் என்று. ஆனால் அவளால் அதற்கு காரணம் தான் கண்டுப்பிடிக்க முடியவில்லை. அவளை நிகழ் காலத்திற்கு கொண்டு வருவது போல் ப்ரோகிதர் அவளையும், அவனையும் எழுந்து பெரியவர்களிடம் ஆசி வாங்க சொன்னார். அவன் எழ அவன் அருகில் நின்றவன் உதவி செய்ய இவள் அவனை பார்த்துக்கொண்டே மெதுவாக எழுந்து அவனுடன் மேடையை விட்டு இறங்க… அங்கு கீழே நின்று கண்ணில் ஆனந்த கண்ணீரோடு நின்றிருந்த ஆதிக்கின் தாத்தா வீரேக் சர்மா அருகில் அழைத்து சென்றான் அவன் அருகில் நின்றிருந்த அந்த வாலிபன்.. அவன் தாத்தா அருகில் அழைத்து சென்றதும் அவள் அவனின் கையை பிடித்துக்கொண்டாள். அவன் கையை பிடித்ததும் அவனும் கூட அவளை திரும்பி பார்த்து குழந்தையாக சிரித்தான். அதில் இன்னும் சிலிர்த்துப்போய் அவனுடன் சேர்ந்து தாத்தா காலில் விழுந்தாள். அவளை பார்த்து அவனும் தன் தாத்தா காலில் விழுந்தான். அதை பார்த்து இன்னும் கண்கள் கலங்கி அவனையும், அவளையும் தலையில் கைவைத்து ஆசிவதித்து தூக்கிவிட்டார். “நல்லா இருமா..அம்மா ஆஸ்வதி உனக்கு இந்த திருமணத்துல சம்மதமானு கேட்கலமா இவன் இருக்கானே ஆதிக் என் பேரன் இவன் சின்ன குழந்தை மாறி, இவன நீதாமா பாத்துக்கனும் என்ன தவற இவன வேற யாரும் பாத்துக்க மாட்டாங்க…. இந்த கிழவனால எவ்வளவு நாளுதா இவன பாத்துக்க முடியும்.. அதா நா உன் தாத்தாட்ட பேசி உன்ன இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க உன் தங்கச்சி படிப்ப காரணமா வச்சி முடிக்க பாத்தேன்.. இந்த தாத்தாவ மன்னிச்சிடுமா”என்றார்.. இவரா.. இந்த மும்பையில் பாதி சொத்து இவரது தான். ஏன் ஒரு ரோட்டிற்கே இவரது பெயர் வைத்ததாக கேள்விப்பட்டனே இவரா தன்னிடம் மன்னிப்பு கேட்பது. உடனே “ஐயோ தாத்தா என்னது நீங்க எவ்ளோ பெரிய ஆளு என்ட போய் மன்னிப்பு கேட்கிறீங்க…”என்றாள் ஆஸ்வதி “அது இல்லடாமா தப்புல பெரியவங்க சின்னவங்கனு இல்லையே. நா உன் குடும்பத்த மிரட்டி ஒத்துக்க வச்சிட்டேனு தானே கோவமா இருந்த….”என்றார் தாத்தா ஆம். அவர் சொல்வது உண்மை தானே தன்னவனின் முகத்தை பார்க்கும் வரை இவளும் இங்கு உள்ள அனைவரையும் அப்படி தானே நினைத்துக்கொண்டு இருந்தாள். அதனை நினைத்து பார்த்து “விடுங்க தாத்தா.. “என்றாள் அவளின் இந்த உரிமையான அழைப்பிலே மகிழ்ந்த சர்மா. “மா ஆஸ்வதி இவன இனி நீதாமா பாத்துக்கனும்.. இவனுக்கு எதும் ஆகாம நீதாமா பாத்துக்கனும்.. இவன் இன்னும் குழந்தை தான். அதனால இவன விட்டு எப்போதும் போய்டாத மா இவன் இப்படி ஆக காரணமானவங்களுக்கு இவன் நல்லா வாழ்றதுதா பாடமா இருக்கனும் மா”என்றார் தாத்தா கண்கள் கலங்க அவர் சொன்னதை கேட்ட ஆஸ்வதி சந்தோஷமாக ஒரு புன்னகையை சிந்திவிட்டு மனதில் இதற்கு தானே இவ்வளவு காலம் காத்திருந்தேன்…என்று நினைத்துக்கொண்டு அவரை பார்த்துக்கொண்டே தன் பக்கத்தில் எதோ கை நீட்டி பக்கத்தில் இருந்தவனிடம் சிரித்து கைதட்டி சிறு பிள்ளை போல பேசுவனின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு தாத்தாவை ஒரு பார்வை பார்த்தாள். அவளின் இந்த செயலிலே தாத்தாவிற்கு தெரிந்துவிட்டது. அதில் அவருக்கு இவ்வளவு நாள் இருந்த ஒரு பாரம் குறைந்ததை போல இருந்தது.. சந்தோசமாக… அவளை பார்த்து பூரித்து போய் ஆதரவாக தலை வருடினார்.. ஆனால் அவரது மனதில்.. இவள் சிறு பெண் இவளால் அந்த வீட்டில் இருக்க முடியுமா.. அதும் அவ்வளவு பேராசை கொண்டவர்களுடன்..அதும் கொலைகாரர்களுடன்.. பின் தன்னை நிதானித்து.. “ஆதித் கண்ணா”என்று அழைத்தார் அதை கேட்டு உடனே அவரை பார்த்து ஒரு குழந்தை தனமான சிரிப்பை சிந்திவிட்டு “தாத்தூ இங்க பாத்தியா..புது ட்ரேஸ்.. எனக்கு புடிச்ச க்ரீம் கலர்ல….. விதுன். தான் வாங்கிக்குடுத்தான்”என்றான் சிரித்த வண்ணம்,. “அப்படியா கண்ணா நல்லா இருக்கே. என்று அவரும் அவனை தன் பக்கம் இழுத்து அவன் நெற்றியில் முத்தம் வைத்தார். அதை கண்டு “அய்யோ தாத்தூ எச்சி..”என்று தன் நெற்றியை துடைத்துக்கொண்டான். அதில் சிரித்த தாத்தா அவனை பார்த்து பொய்யாக முறைத்தார்.. அதில் அவன் கையை தட்டி சிரித்து அவர் மீசையை பிடித்து இழுத்தான்.. “கண்ணா தாத்தா சொல்றத கொஞ்சம் கேளுடா”என்றார் தாத்தா அதில் அவன் கண்ணத்தில் கையை வைத்து.. அவர் சொல்வதை கேட்க சரி என்று தலையை வேகமாக மேலும் கீழும் ஆட்டினான். “ஹாஹாஹா.. என் பேரன் தா நல்ல பையன்.. சரி கேளு கண்ணா உனக்கு போன பிறந்தநாளுக்கு ஒரு வாக்கு தந்தனே கண்ணா நியாபகம் இருக்கா”என்றார் “வாக்குனா என்ன விது..”என்றான் தன் அருகில் நின்றிருந்தவனை யோசனையாக பார்க்க… அந்த முக பாவனையில் ஆஸ்வதி ஒரு நிமிடம் அசந்து தான் போனான்.. விதுன் எதோ சொல்ல வர….. “அப்டினா ப்ராமீஸ்ங்க….”என்றாள் ஆஸ்வதி அவனை காதலாக பார்த்தவாறு.. “ஹான். ஹான். ஆமா ஆமா ப்ராமிஸ்தானே.. தாத்தூ எங்கிட்ட சொல்லிருக்காங்க ப்ராமிஸ்னா என்னனு….”என்று சந்தோஷமாக ஆஸ்வதியை பார்த்தவனின் முகம் யோசனையில் சுருங்கியது… அவனின் சிறு குழந்தை போல கன்னத்தில் கை வைத்து யோசனை செய்துக்கொண்டு இருந்தவனின் பாவனையில்மறுபடி ஆஸ்வதி விழுந்துவிட்டாள்.அவனை எப்படி எல்லாம் கம்பீரமாக பார்த்தாள்.. அவனின் இந்த குழந்தை தனமான முகம் அதை பார்த்த ஆஸ்வதி அவனின் இந்த பரிமானத்தை பார்த்தும் இமைக்க மறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள் “ஆமா இவங்க யாரு தாத்தூ..”என்றான் ஆஸ்வதியை புரியாத பார்வை பார்த்தவாறு “ம்ம்ம். அதப்பத்தி தான் கண்ணா உங்கிட்ட கேட்கிறேன் நல்லா யோசிச்சி பாரு.”என்றார் அவன் வாயில் இருந்து பதிலை வாங்க….சிறிது நேரம் யோசித்தவன்…பின் நியாபகம் வந்தவனாக…… “ஹான்.. நியாபகம் வந்துட்டு தாத்தூ நீ எனக்கு நல்ல ப்ரண்டா, எங்கூட எப்போதும் விளையாட, அப்புறம். அப்புறம்.. ஹான் சாப்பாடு ஊட்டிவிட…. அப்புறம் எனக்கு கதை சொல்ல, அப்புறம் என்ன யாராவது அடிச்சா சண்ட போட ஒரு ஏஞ்சல் வாங்கிதறேனு சொன்னல” என்றான் சந்தோஷமாக கை தட்டியவாறு. அதை கேட்டு சிரித்த தாத்தா..”ஆமா கண்ணா கூட்டிட்டு வரேனுதா சொன்னேன் வாங்கி தரேனா சொன்னேன்”என்றார் கிண்டலாக அவன் கன்னத்தை தட்டியவாறு. அதில் வெட்கப்பட்டு “போ தாத்தா.. “என்று சினுங்கினான் அவனின் இந்த சிணுங்களை கேட்டு ஆஸ்வதி மயங்கிதான் போனாள். “சரி கண்ணா அது இவ தான் உனக்குனு நா கூட்டிட்டு வந்த ஏஞ்சல்..”என்றார் அதை கேட்டதும் கண்களை ஆச்சரியமாக விரித்து அவளை பார்த்து “அய்ய்ய். ஏஞ்சல் தாத்தூ ஏஞ்சல் ரொம்ப அழகா.. இருக்கு”என்றான் வெட்கப்பட்டவாறே அதை கேட்டு ஆஸ்வதி அவனை பார்க்க.. அவன் குழந்தை போல் அவளை பார்த்து புன்னகைத்தான் அவள் அவனை இந்த நிலையிலா பார்க்க வேண்டும் என்பது போல் விரக்தியாக அவனைபுன்னகையுடன் பார்த்தாள்.. அவளின் இந்த புன்னகையை பார்த்த ஆதி முகம் ஒரு நிமிடம் சுருங்கி பின் அவளின் புன்னகையை ரசித்தவாறே பார்த்து இன்னும் கண்களை அழகாக விரித்து “அய். உன் முகம் அழகா பிங்க்கா.. இருக்கு ஏஞ்சல்”என்றான் அவள் கன்னத்தை தொட்டவாறு.. அதில் இன்னும் முகம் சிவக்க நின்றுவிட்டாள்.என்ன தான் தன்னவனுடனான இந்த திருமணத்தை அவள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்ப்பார்க்கவில்லை என்றாலும்.. தன் உயிரானவனின். தன் கணவனின் முதல் தீண்டலை அதிர்ச்சியுடனும்.. ஆச்சரியத்துடனும்..இன்பமாகவும் அனுபவித்தாள். “ஹாஹா.. உன் ஏஞ்சல் தான் ஆதித் கண்ணா.. இனி அவ உங்கூட தான் இருப்பா..”என்றார் தாத்தா “ஹய் அப்டியா.. இனி என்னை விட்டுட்டு போ மாட்டில…..ஏஞ்சல்…”என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அதை கேட்ட ஆஸ்வதி இல்லை என்று அவசரமாக தலை ஆட்டினாள்.. பின் இவ்வளவு வருடம் கழித்து தன்னவனை அதும் தன் கணவனாக கிடைத்திருக்கிறான் அவனை விட்டு செல்ல அவளுக்கென்ன பைத்தியமா…. அவளின் அவசரமான தலை அசைப்பில் ஆதித் அவளை ஒரு நிமிடம் அசையாமல் பார்த்தான்..பின் சுயநினைவிற்கு வந்தவன்..தன் ஏஞ்சலை பார்த்து மழலையாக புன்னகைக்க…..ஆஸ்வதியும் அவனை பார்த்து சந்தோஷமாக புன்னகைத்தாள்…பின் தன் தாத்தா பக்கம் திரும்பிய ஆதி அதே புன்னகையை அவருக்கும் கொடுத்தான்… தாத்தா அவர்கள் இருவரின் புன்னகை முகத்தையும் பார்த்து இன்னும் அந்த வீட்டுக்கு போய் இந்த சந்தோசம் இருக்குமோ இல்லையோ என்ற கவலை தாத்தாவிற்கு வந்துவிட்டது. பின் அவர் தன்னை சமன்படுத்திக்கொண்டு “உன் தாத்தா காலுல போய் விழுமா”என்றார் அதற்கு ஒரு தலை அசைப்புடன்.. தன் கணவனின் கையை பிடித்துக்கொண்டு தன் தாத்தாவை நோக்கி சென்றாள். ஆதியின் பார்வை ஒரு நொடியில் ஆஸ்வதியின் கைகளில் இருக்கும் தன் கையை பார்த்துவிட்டு பின் மாறிவிட்டது..பின் அவனும் தன் ஏஞ்சலின் பின்னால் கையை தட்டிக்கொண்டு சந்தோசமாக சென்றான். தாத்தாவின் முன்னால் நின்று “எங்கள ஆசிர்வாதம் பன்னுங்க தாத்தா”என்று அவள் காலில் விழுந்தாள்.. அதை பார்த்து கண்கள் கலங்க “ நல்லா இருடாமா.”என்று அவள் தலையில் கைவைத்து இருவரையும் தூக்கிவிட்டார். “ம்ம்ம். நானும் நானும்..”என்று ஆதி அவர் காலில் திரும்ப விழ “ம்ம்ம். நீயும் தான் கண்ணா…”என்றார் புன்னகையுடன் அவனை தூக்கிவிட்டு. பின் ஆஸ்வதியின் தலையை வருடியவாறு…“மா தாத்தா மேல கோவமாடா”என்றார் அதில் நெகிழ்ந்தவள்..அவரை கட்டிக்கொண்டு “இல்ல தாத்தா”என்றாள். தன்னவனை பார்க்கும் வரை அவர் மீது கோவம் இருந்தது என்னவோ உண்மை தான்..ஆனால் தன்னை இவ்வளவு வருடம் வளர்த்தவரை எதும் சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை ஆனால் இப்போது அவர் மீது கொஞ்சம் கூட கோவம் அவளுக்கு இல்லவே இல்லை இதான் காதல் செய்த மாயமோ.. அவரும் அவளை கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டார் இதை பார்த்துக்கொண்டு இருந்த ஆதித்தும் தாத்தாவை கட்டிக்கொண்டான். “தாத்தூ டோன்ட் க்ரை நா ஏஞ்சல நல்லா பாத்துப்பேன்.”என்றான் பெரியவனாக…. அதில் புன்னகைத்தவர்..”சரிடா கண்ணா…”என்றார்.. “அய் நீங்களும் என் அந்த தாத்தூ மாறி கண்ணானு கூப்டுறீங்க……”என்றான் கண்கள் விரிய…… “ஹாஹா.. நானும் உன் தாத்தா தானே அதா உன்ன அப்டி கூப்டுறேன் கண்ணா..”என்று அவன் கன்னத்தை வருட….. அதில் செல்லமாக சினுங்கினான் ஆதித் பின் தாத்தா ஆஸ்வதியிடம் ஒரு சில வார்த்தை பேசிவிட்டு.திரும்பி தன் நண்பனை பார்க்க……அவரும் தலை அசைப்புடன் ஆஸ்வதியை பார்த்து.. “சரிமா டைம் ஆச்சி போலாமா”என்றார் சர்மா…ஆஸ்வதி தலை ஆட்டுவதற்கு முன்னாலே.. “அய் போலாமே ஏஞ்சல் கார்ல போலாம் டுர்டுர்னு போலாம் ஜாலியா.” என்றான் சந்தோசமாக “ம்ம்.. போலாமே”என்றாள் அவளும் அவனை போல கண்கள் விரிய…… அதை பார்த்த ஆதித் அவளின் இந்த பாவனையில் ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டான். பின் அவளை பார்த்து இன்னும் சந்தோசமாக கையை தட்டி துள்ளி குதித்தான்.. “விதுன்..”என்று யாரையோ கூப்பிட்டார் தாத்தா. இவ்வளவு நேரம் ஆதிக் கூடவே நின்றுக்கொண்டு இருந்தவன் தான் விதுன்.. தாத்தா கூப்பிட்டதும் பக்கத்தில் வந்து “தாத்தா”என்றான் பணிவாக “அம்மா ஆஸ்வதி இவன் விதுன் நம்ம ஆதித்தோட ப்ரண்ட் எனக்கு இன்னோரு பேரன் மாதிரி. இவன் இல்லனா என்னால தனியா இவன இவ்வளவு நாள் பாத்துறுந்துருக்க முடியாது இவனோட உயிர் நண்பன் இவனுக்கு சரியானாதா இவன் வாழ்க்கைய பாத்துட்டு போவேனு சொல்லிட்டான்.. உனக்கு நா இல்லாத நேரத்துல இவன் உதவியா இருப்பான்”என்றார் தாத்தா.. இவளும் அவனை பார்த்து “நன்றி அண்ணா இவ்ளோ நாள் தாத்தாவையும், இவரையும் பாத்துக்கிட்டதுக்கு”என்றாள் ஆஸ்வதியின் இந்த உரிமையான அழைப்பில் அவனுமே சந்தோசமாக தலை ஆட்டினான் “தாத்தா நா போய் கார் எடுத்துட்டு வந்துடுரென்”என்று சென்றுவிட்டான். அங்கு சென்று என்ன நடக்க போகிறதோ. இனி விதி இருவரின் வாழ்க்கையிலும் என்ன வைத்திருக்கிறதோ