உயிர் போல காப்பேன்-3

4.7
(14)

அத்தியாயம்- 3
விதுன் காரினை தாத்தாவின் பக்கம் எடுத்து வர….. ஆஸ்வதி முதலில் தாத்தா ஏருவதற்கு உதவி செய்தவள்.. பின் ஆதித்தை பின் பக்க கதவை திறந்து உட்கார வைத்தாள்…
அனைவரும் காரில் ஏறி உட்கார்ந்த பின்பு தான் நியாபகம் வந்தவளாக அவள் சித்தியை பார்த்து..
“சித்தி இது வர என்ன வளர்த்ததுக்கு ரொம்ப நன்றி சித்தி. இனி நா உங்களுக்கு சுமையா இருக்க மாட்டேன் அதே மாறி நீங்களும் இனி என்ன பாக்க வர வேணாம்.விசாலிய கேட்டதா சொல்லுங்க…..”என்று அதற்கு மேல் பேச பிடிக்காமல்… தன் தாத்தாவை மட்டும் பார்த்து தலையை மட்டும் ஆட்டியவாறு.. காரில் ஏறிவிட்டாள்…பின் தன் சித்தி தனக்கு இவ்வளவு நாள் செய்தது அனைத்தும் கொடுமை என்று சொல்லமுடியாது என்றாலும். கிட்டதட்ட அது போல தானே இன்று அதற்கும் மேல் சென்று தன் வாழ்க்கையையே கொடுமையாக அல்லவா மாற்ற இருந்தார்.. எதோ தன்னவன் என்பதால் தப்பித்தாள். இதுவே வேறு யாரேனுமாக இருந்தால்.. அவ்வளவே தன் வாழ்க்கை அதை நினைத்து ஆஸ்வதி உள்ளம் கொதித்தது
ஆஸ்வதி பேசி செல்வதை கேட்ட அவளின் சித்தியின் முகத்தில் எள்ளும் கடுகும் வெடித்தது போல சுருங்கியது.
“ம்ச். பெரிய பணக்கார வீட்ல கல்யாணம் ஆகி போறதா நினைச்சிட்டு போறா… அங்க இவளுக்கு என்ன என்ன கொடுமைலா காத்துட்டு இருக்கோ.. இல்லனா இந்த மாறி ஒருத்திய கல்யாணம் செஞ்சி வைக்க பார்ப்பாங்களா. அந்த பெரியவரு..”என்றார் ஆஸ்வதியின் தாத்தா காதில் விழுமாறு..
அதில் அவர் முகம் ஒரு நிமிடம் வெறுப்பில் சுருங்கியது.பின் தன் நண்பனை நினைத்து தன்னை சமாளித்துக்கொண்டவர். அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.
காரில் ஏறிய ஆஸ்வதி உள்ளம் இந்நேரத்திலும் தன் தங்கையை தான் நினைத்தது. எந்நேரத்திலும் தனக்கு துணையாக இருந்தவள் தான் அதனாலே ஆஸ்வதி மனம் விஷாலியை தேடியது..
“மா ஆஸ்வதி போலாமா டா…”என்றார் தாத்தா ஆஸ்வதி பக்கம் திரும்பியவாறு..
ஆஸ்வதி அப்போது தான் நினைவிற்கு வந்தவளாக……
“ஹான்.சாரி தாத்தா நா எதோ நியாபகத்துல அப்படியே உட்காந்துட்டேன்.”என்றாள் குற்றவுணர்ச்சியுடன்..
“இதுல என்னடா இருக்கு கல்யாணம் ஆன பொண்ணுங்க எல்லாருக்கும் இப்டி ஒரு சூழ்நிலை வரதானே செய்யும்.. அது எனக்கும் புரியும் டா நீ உன் தாத்தாவ ரொம்ப மிஸ் பண்ற அப்டிதானே..”என்றார் அவளை கூர்மையாக பார்த்தவாறு
ஆஸ்வதி ஒன்றும் மற்ற பெண்கள் போல கல்யாண கனவுகள் கொண்டு வாழும் பெண் இல்லையே.. அவளுக்கு அடிக்கடி தோன்றுவது…நமக்கு எல்லாம் கல்யாணம் என்று ஒன்று நடந்தால் தானே.. நடக்கும் போது பார்த்துக்கொள்வோம்.என்று தான் நினைப்பாள்.. ஆனால் தன்னவனுடனான வாழ்க்கையை மட்டும் எப்போதும் மனதில் நினைத்து ரசிப்பாள்.
“ஹான்.. ஆமா தாத்தா.. தாத்தாவ மிஸ் பண்ணுவேன்.. அதும் இல்லாம என் தங்கை விஷாலிய இன்னும் மிஸ் பண்றேன்..”என்றாள் சோகமாக…..
அவளது சோகமான முகம் ஆதித்தை என்னவோ செய்தது.. ஆனால் அவனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாதே.. அதனால் அமைதியாக தன்னவளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்..
“மா.. உன் தங்கை லீவ்க்கு இங்கதானே வருவா. அப்போ நம்ம வீட்டுக்கு வர சொல்லியே பாரு.என்ன…..”என்றார் அவளை சமாதானப்படுத்துவது போல….
ஏனென்றால் தாத்தாவிற்கும் தெரியுமே ஆஸ்வதி அவள் வீட்டில் எப்படி எல்லாம் கொடுமைகளை அனுபவித்தாள் என்று மறுபடி அவளை அந்த வீட்டிற்கு அனுப்ப அவருக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை.. அதனாலே அவர் இப்படி கூறினார்.
இதனை புரிந்துக்கொண்ட ஆஸ்வதியும்.. “சரி தாத்தா..”என்றாள் மெல்லிய புன்னகையுடன்.
“விதுன் போலாம்ப்பா.”என்றார் தன் அருகில் உள்ளவன் தோள்களில் மெல்ல தட்டியவாறு.. அவனும் அதற்கு தலை ஆட்டியவாறு காரினை ஓட்ட ஆரம்பித்தான்..
பின் காரில் பயணம் செய்ய ஆரம்பிக்கும் பொழுதில் இருந்தே ஆஸ்வதி ஆதித்தை தான் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவன் இவளை பார்த்து “ஏஞ்சல் இங்க பாரு. ஏஞ்சல் அங்க பாரு. அந்த லாரி வாங்கிக்கொடுப்பியா ஏஞ்சல் இதுவும்.”என்று ஒன்று ஒன்றாக காட்டி அவளிடம் சீக்கரம் ஒட்டிக்கொண்டான் அவளுக்கு தன்னவனுடன் வாழ்வதே வாழ்க்கை என்றாகிவிட்டது இனி அதனை சந்தோஷமாக வாழ நினைத்தாள்.. இந்த மாதிரி நேரத்தில் ஆதித்தின் நிலை எதுவும் அவள் மனதில் நினைக்கவில்லை ஆனால் ஆதித்திற்கு நினைவு வந்த பின் இவளை ஏற்றுக்கொள்வானா.?
ஆஸ்வதி ஆதி காட்டும் திசையில் எல்லாம் அவனை போல ஆர்வமாக பார்க்க….. அதனை முன்னால் உட்கார்ந்திருந்த இரு ஜீவன்களும் தங்களுக்குள் பார்வை பரிமாற்றத்துடன் பார்த்துக்கொண்டு வந்தனர்.பின் ஆதித் சிறிது நேரத்தில் அமைதி ஆகிவிட… ஆஸ்வதி தன்னவனை முதலில் கண்டது அனைத்தையும் நினைத்துக்கொண்டே வந்தாள்..
சிறிது நேரத்தில் தன் தோளில் எதோ பாரமாக இருப்பதை உணர்ந்து திரும்பி பார்த்தாள். அங்கு ஆதித் தன் மனைவியின் தோளிலே தலை சாய்த்து படுத்து உறங்கிக்கொண்டு இருந்தான்.. அதை பார்த்த ஆஸ்வதிக்கு வாழ்க்கையில் எதோ முதல் முறையாக எதோ ஒரு சொல்ல முடியாத உணர்வு சந்தோசம்
தன்னவன். யார் அருகிலே தன்னால் நெருங்கவே முடியாது என்று நினைத்தாளோ.. அவன். தன் ஆதி.. அவன் தன் தோளில்.. அதும் தன் கணவனாக… ஆஸ்வதிக்கு இது அத்தனையும் கனவு போலவே இருந்தது ஆனால் இந்த கனவு எங்கே கலைந்து விடுமோ என்ற பயமும் அவளுள் அதிகமாக இருந்தது
பின்னாளில் நடப்பதை நினைத்து ஏன் வருந்த வேண்டும்.. இப்போது. இந்த நாள்.. இந்த நேரம் தன்னவன் அருகில்.. இது மட்டுமே இப்போது நமக்கு போதும்.மற்றதை பற்றி நினைக்காதே மண்டு.என்றே அவள் மனம் அவளை சாடியது..
மெல்ல ஆஸ்வதி ஆதியின் தலையில் கை வைத்து தன் தோளில் நன்றாக படுக்க வைக்க….. அவளின் ஸ்பரிஷத்தில் மெல்ல சிணுங்கியவன். பின் நன்றாக சீட்டில் காலை நீட்டி அவள் மடியில் படுத்துவிட்டான் அதில் இன்னும் அவள் மனம் ரெக்கை கட்டி பறந்தது அவள் முகம் ஆயிரம் ஆயிரம் நட்சத்திரத்தை குவித்தது போல மின்னியது.
இதனை அனைத்தையும் முன் கண்ணாடி வழியாக பார்த்த தாத்தாவும், விதுனும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு பூரித்து போனார்கள்..
தாத்தா மனதில் தன் பேரனின் வாழ்க்கை கண்டிப்பாக சரியாகும் என்ற நம்பிக்கை இன்று முழுமையானது போல உணர்ந்தார்..விதுனும் அப்படிதான்.. தன் உயிர் தோழன்.. அவனின் இந்த நிலையை நினைத்து வருந்தாத நாள் இல்லை. ஆனால் இன்று ஆதித்தின் வாழ்க்கை துனைவியாக கிடைத்த ஆஸ்வதியை முதல் முறை பார்க்கும் போதே அனைத்தும் சரி ஆகிவிடும்.. தன் நண்பன் விரைவில் சரி ஆகிவிடுவான். என்று அவன் மனம் ஆழமாக நம்பியது.
ஆஸ்வதி தன் மடியில் உறங்கும் தன்னவனை பார்த்துக்கொண்டே வந்தவள். அவன் சிறு பிள்ளை போல கையையும், காலையும் குருக்கிக்கொண்டு குழந்தை போல் தூங்கும் தன்னவனை பார்க்கும் போது எதோ ஒரு உணர்வு.. அவள் இது வரை எந்த ஆண்களையும் நிமிர்ந்து கூட பார்த்ததில்லை…தன் ஆதியை தவிர…. அதனால் அவளுக்கு இது புதிதாக இருந்தது..
ஆஸ்வதி.. தன் ஆதியின் ஆண்மைக்கு இலக்கணமாக தோன்றும் அவனது தேகத்தை மயிலிறகால் வருடுவது போல மெல்ல வருடினாள். அவனது இந்த கேஷம் கூட அவளை சிலிர்ப்பூட்டியது ஒவ்வொரு முறை ஆஸ்வதி ஆதித்தை பார்க்கும் போதும்.. அவனது விரல்கள் அவனது கேஷத்தை அழகாக ஒதுக்குவதை அவள் கண்டிருக்கிறாள் அதனை பார்க்கும் போது எல்லாம் ஆஸ்வதிக்கு காலம் முழுவதும் ஆதியின் கேஷத்தை உரிமையாக தொட வேண்டும் என்று ஏங்கி இருக்கிறாள். ஆனால் அது நடக்காது அதும் நம் வாழ்க்கையில் அதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் அவள் மனம் நினைத்து வருந்தும். ஆனால் இன்று…இதனை நினைக்கும் போது.. ஆஸ்வதிக்கு மனம் பூரித்து போனது..
அவளது லயிப்பிற்கு முற்றுபுள்ளி வைத்தது போல அவர்கள் சென்றுக்கொண்டு இருக்கும் கார் மும்பையின் பிரபலமான ஒரு தெருக்குள் நுழைந்தது அதுவே சொன்னது நாம் ஆதியின் வீட்டின் அருகில் வந்துவிட்டோம் என்று. இவ்வளவு நேரம் இருந்த அந்த ஏகாந்தம் எங்கோ பறந்து போனது…ஆஸ்வதியின் மனதில் பயம் வந்து ஒட்டிக்கொண்டது
சிறிது நேரத்திற்கு பிறகு அந்த கார் ஒரு பெரிய கேட்டின் முன்னால் போய் நின்று ஹாரனை அடித்தது. அந்த வீட்டின் வெளியில் சர்மா இல்லம் என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது.. அந்த வீட்டின் நுழை வாயிலே அவ்வளவு பிரமாண்டமாக இருந்தது.
அந்த பெரிய கேட்டின் உயரமே எப்படியும் இருபது அடிக்கு மேல் இருக்கும்.. அவ்வளவு பெரிய கேட்டினை ஆஸ்வதி எங்கும் பார்த்தது இல்லை அதனையே ஆஸ்வதி மிரட்சியுடன் பார்க்க……
அப்போது அந்த வீட்டின் வாட்ஸ்மேன் ஓடி வந்து கதவை திறந்துவிட்டு பெரியவருக்கு ஒரு பெரிய சலாம் அடித்தான்.. அதை கண்ட பெரியவர்.
“கரன்…நம்ம வீட்டுக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல ப்ரஸ்காரங்களா வருவாங்க….. நம்ம செக்யூரிட்டி ஹெட் கிட்ட சொல்லி அவங்கள நல்ல செக் பண்ணி உள்ள அனுப்ப சொல்லு.அப்புறம் அவங்கள தோட்டத்துல போட்டுருக்க டென்ட்ல உட்கார வை சமையல் காரங்கள அனுப்புறேன்.. வந்தவங்களுக்கு இனிப்பும் காபியும் பரிமாற உதவி செய்..என்ன சரியா” என்றார் கம்பீரமாக அதை பார்த்த ஆஸ்வதிக்கு இவ்வளவு நேரம் இல்லாத ஒரு படபடப்பு கூடிய ஒரு பதட்டம் வந்தது
“ஒகே சாப்…”என்றான் முட்டி வரை குனிந்தவாறு
“ம்ம்.. என்று தலை ஆட்டிவிட்டு. விதுன் போலாம்.”என்றார் அதே கம்பீரமாக……
கார் உள்ளே சென்றது ஆஸ்வதி சுற்றி முற்றி பார்த்தாள். அங்கு இரு பக்கமும் செடி நன்றாக வளர்க்கப்பட்டு அழகாக வெட்டப்பட்டு இருந்தது. சுற்றி எங்கும் வண்ண வண்ண பூக்கள் வளர்ந்து அழகாக இருந்தது அதனை ரசித்துக்கொண்டே பார்த்தாள்.. எங்கும் மரங்கள் சுற்றி வளர்க்கப்பட்டு பச்சல் பசேல் என்று இருந்தது

அவள் சுற்றி முற்றி பார்ப்பதை பார்த்த தாத்தா.. “என்னமா அப்படி பாக்குற”என்றார் தாத்தா ஒரு ஆராய்ச்சி பார்வையுடன்
“இல்ல தாத்தா நிறைய செடி வளர்த்து அழகா பாத்துக்கிறீங்க…. இங்க நிறைய கலர்ல பூ இருக்கும் போலவே எனக்கு பூ, செடினா ரொம்ப பிடிக்கும்.அதான் பார்க்க ஆசையா இருக்கு…”என்றாள் ஆர்வமாக……சுற்றி முற்றி பார்த்தவாறு.
அவள் ஆசையாக ரசித்து பார்ப்பதை பார்த்த தாத்தா அவளை வாஞ்சயுடன் பார்த்தார். பின் மெல்ல புன்னகைத்தவர்.
“அதுக்கு என்னடா. இனி இது உன் வீடு.. அப்போ இந்த தோட்டமும் உன்னோடது தானே.. சோ. எப்போ வேணா நீ தோட்டத்த சுத்தி பாக்கலாம்.. உனக்கு பிடிச்ச செடி என்னனு தோட்டக்காரன்ட சொன்னினா உடனே வாங்கிட்டு வந்துடுவான். அத நீ உன் கையால நடு..”என்றார் புன்னகையுடன்..
அதில் ஆஸ்வதி முகமும் மலர சரி என்று உடனே ஆட்டிவிட்டாள்.
கார் வெகு நேரம் சென்றுக்கொண்டே இருந்தது…கிட்ட தட்ட வாசலை தாண்டி உள்ளே அந்த தோட்டத்தை தாண்டி செல்ல 10நிமிசம் கழித்து அரண்மனை போல் இருந்த வீட்டின் வாசலில் காரை நிறுத்தினான் விதுன்
ஆஸ்வதி காரின் உள் உட்கார்ந்தவாறே வீட்டின் முகப்பினை பார்க்க… மனம் படப்படத்தது
ஆதி பெரிய பணக்காரன் என்று தெரியும்.. சொல்ல போனால் அதனால் தான் ஆஸ்வதி ஆதி அருகில் நெருங்கவே பயந்தாள்.. தன் காதலை சொல்லவும் கூட இல்லை ஆனால் இன்று ஆதியின் வசதி அவளை மிரட்டியது..
“அம்மா. ஆஸ்வதி வீடு வந்துட்டு மா இறங்கு”என்றார்.. தாத்தா
அதை கேட்டு சரி என்று தலை ஆட்டியவள்..மீண்டும் இந்த பக்கம் பார்த்தாள் அதை பார்த்து யாரும் வீடு என்று சொல்லமாட்டார்கள்.. அரண்மனை என்று தான் சொல்வார்கள் ஆயிரம் ஜன்னல் கொண்டு இளம் பச்சை நிறத்தில் பெய்ன்ட் அடித்து கண்களை கவரும் வகையில் அழகாக இருந்தது. ஆனால் ஆஸ்வதிக்கு அந்த ஆடம்பரமே பயத்தை தந்தது அவள் கண்களில் அப்பட்டமாக பயம் தெரிந்தது.. அதனை பார்த்த தாத்தா அவளை வாஞ்சையாக பார்த்தார்…இருந்தும் தன்னை வெகுவாக சமாளித்துக்கொண்டு.
“ம்ம். சரி தாத்தா”திரும்பி தன் கணவனை பார்த்தாள்..
அவன் ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்தான் அவனை எப்படி எழுப்புவது என்று யோசித்துவிட்டு பின் அவன் நெஞ்சில் கை வைத்து “ஏங்க… “என்று எழுப்பினாள்.
ஆனால் அவன் முகத்தை சுளித்துக்கொண்டு நன்றாக ஆஸ்வதியின் மேல் சாய்ந்துக்கொண்டான். அதனை பார்த்த ஆஸ்வதி தாத்தாவை சங்கடமாக பார்த்துக்கொண்டு.. மீண்டும் அவனை எழுப்பினாள் அதில் அவன்
“ம்ம். என்ன ஏஞ்சல் தூக்கம் வருது ஏன் எழுப்புன”என்றான் கண்ணை தேய்த்துக்கொண்டே..உதட்டை பிதுக்கியவாறு. சிறுபிள்ளை போல சிணுங்கிக்கொண்டு..
அவனின் அந்த பாவனையில் சிரித்த ஆஸ்வதி..”வீடு வந்துட்டு. ஆதி இறங்களாமா.”என்றாள்
அவளின் ஆதி என்ற விழிம்பில் ஒரு நிமிடம் அவளை காதலுடன் பார்த்தவன்.. நெடியில் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும், கண்களை விரித்து “அய்.. அய். தாத்தூ ஏஞ்சல் என்ன எப்டி கூப்டா பாத்தியா ஆதினு”என்று கையை தட்டினான். அதில் சிரித்த தாத்தாவும்,விதுனும் சிரித்தனர்
ஆஸ்வதி சிரிக்கும் தன்னவனை இமைக்காமல் பார்த்தாள்.. தன்னவன் தான் எவ்வளவு அழகு.. என்று தான் அந்த நிமிடமும் அவளுக்கு தோன்றியது.
“ஏஞ்சல் என்ன யாருமே இப்டி கூப்டது இல்ல தெரியுமா.. இங்க உள்ள அந்த ஆக்ஸி அப்புறம்.. பப்ளுவும் என்ன பைத்தியம்னு தான் கூப்டுவாங்க அது மட்டும் இல்ல சித்தி,மாமா, எல்லாரும் என்னை பைத்தியம்.. உங்க அப்பா கூட நீயும் போய் இருக்க வேன்டியது தானே.. இப்போ எங்க கூட இருந்து உயிர வாங்குறனு. நீ சரியான சைத்தான்.. அப்டினு தான் கூப்டுவாங்க”என்றான் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு
அதை கேட்டு ஆஸ்வதிக்கு பூமியே சுழல்வது போல் அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது.. அப்போது தன்னவன் அவன் வீட்டில் எந்த மாதிரியான நிலையில் இருக்கிறான். என்று நினைக்க கண்கள் கலங்கியது.
அதனை இரு கண்கள் இமைக்கவும் மறந்து பார்த்தது..

(வருவாள்…) படிச்சிட்டு எப்டிஇருக்குன்னு சொல்லுங்க மக்காஸ்

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!