உயிர் போல காப்பேன்-4

4.9
(18)

அத்தியாயம்-4
ஆஸ்வதிக்கு கண்கள் கலங்கியது.முதலில் அதிர்ச்சியாக தான் இருந்தது பின் தன் கணவனை எப்படி எல்லாம் அழைக்கிறார்கள் என்று கோவமாகவும், அழுகையாகவும் வந்தது.. தன்னவனை இப்படி பேசியவர்களை காணவே அவளுக்கு பிடிக்கவில்லை. ஆனால் இவளுக்கு யாரையும் பிரிக்கவும் தெரியாது யாரையும் வதைக்கவும் தெரியாது..
“சரிடா கண்ணா.. இன்னுமே ஆஸ்வதி உன்ன ஆதினே கூப்டுவா என்னமா ஆஸ்வதி அப்டிதானே. ”என்றார் தாத்தா ஆஸ்வதியை சமாதனப்படுத்தும் பார்வை பார்த்தவாறே.
அதில் ஆதி உடனே ஆர்வமாக ஆஸ்வதி முகம் காண…..
அதை கண்ட ஆஸ்வதி கலங்கிய கண்களை மறைத்தவாறு சிறு புன்னகை சிந்தியவாறு..ஆம் என்று தலை ஆட்டினாள்
அவளது கலங்கிய முகத்தை கண்டவன். ஆஸ்வதியை அதிசயம் போல பார்த்தான்.. பின் நொடியில் தன் முகத்தை மாற்றிக்கொன்டு..
“அய்ய்ய்ய்.. சூப்பர் சூப்பர். ஏய் விது எனக்கு என் ஏஞ்சல் புது பேரு வச்சிருக்கா. பாத்தியா..ஆதி.. ம்ம். ஆதி..ஹிஹிஹி…நல்லா இருக்கா…”என்றான் விதுனின் முதுகில் தாவிக்கொண்டு சந்தோஷமாக சிரித்தவாறு.
அதில் விதுன் ஒரு நிமிடம் தள்ளாடியவன்…”வாவ் ஆதி.. உன் புது நேம் சூப்பரா இருக்கு ஆதி.”என்றான் அவனும் சந்தோஷமாக….
அதை கேட்ட ஆதி சடார் என்று விதுன் முதுகில் இருந்து குதித்தவன்.
“என்ன அப்டி கூப்டாத….”என்று கத்தினான்.
அவனின் இந்த திடீர் செயலில் அதிர்ந்த ஆஸ்வதி ஆதியை அதிர்ந்து நோக்க…..விதுன் ஆதியை கூர்மையாக பார்த்தவாறு.
“ஏன் ஆதி.”என்றான் திரும்பவும்.
“என்னை அப்டி கூப்டாதனு சொன்னேன்ல….”என்று அவனை அடிக்க போவது போல் போக….. இதை அதிர்ச்சியாக ஆஸ்வதி பார்த்து பயந்தே போனாள்.. ஆனால் விதுன் அதனை எதிர்ப்பார்த்தவன் போல அதனை லாபவமாக தடுத்து..
“சரி அப்டி கூப்டல…. இப்போ சொல்லு ஏன் உன்ன நா ஆதினு கூப்ட கூடாது…”என்றான்..
“ம்ம் ம் ஏனா ஏனா என் ஏஞ்சல் மட்டும் தான் என்னை அப்டி கூப்டனும்.. வேற யாரும் அப்டி கூப்ட கூடாது.”என்றான் முகத்தை சுருக்கிக்கொண்டு
அதில் ஆஸ்வதி முகம் மகிழ்ச்சியில் பளீரென்று ஆனது.. அவளுக்கும் இப்படி தான் தோன்றியது.. தன்னவனை யாரும் அழைக்காததை போல தான் தானும் அவனை அழைக்க வேண்டும் என்று தான் ஆதி என்று அவனை அழைத்தாள்.. ஆனால் விதுன் ஆதியை அப்படி அழைத்ததும் ஆஸ்வதிக்கு கொஞ்சம் கோவம் வந்தது என்னவோ உண்மைதான் ஆனால் அதற்குள் தன்னவனே அதனை மாற்ற சொன்னதும் ஆஸ்வதிக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை
“ஓஓ…. அப்டி வேற இருக்கா சரி…அப்போ நா உன்ன எப்டி கூப்டுறது ஆதித் ஏனா நா உன் க்ளோஸ் ப்ரண்டு தானே.”என்றான் விதுன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு..
“ம்ம்ம்.. எப்டி கூப்டுறது.”என்று ஆதி கன்னத்தில் கை வைத்து யோசிக்க…
“ஆதித் கண்ணா.. நாம இதப்பத்தி அப்புறமா யோசிக்கலாம்.. இப்போ நாம வீட்டுக்குள்ள போவோமா.”என்றார் தாத்தா
“ஹான் ஏஞ்சல் நம்ம உள்ள போலாமா…”என்று தனக்கு புதிதாக கிடைத்த தோழியிடம் கேட்க…..
அதை கேட்டு தாத்தா சத்தமாக சிரிக்க….. விதுனும் புன்னகையுடன்
“அடப்பாவி இவ்ளோ நாள் தாத்தா சொன்னத தானே செஞ்ச…. இப்போ என்ன புதுசா உன் ஏஞ்சல் கிட்ட கேட்குற….”என்றான்
அதற்கு அசட்டு சிரிப்பு ஒன்றை சிந்திய ஆதித்…”ம்ம். அது அது. ஏஞ்சல் என் ப்ரண்டுல….. அது மட்டும் இல்லாம அப்புறம் அப்புறம் அவ இனி என் கூடவே இருக்க தானே தாத்தூ எனக்கு அவள வாங்கிக்கொடுத்து இருக்காரு.. அதா இனி ஏஞ்சல் சொன்னாதான் எதும் செய்வேன்…”என்றான் கடைசி வரிகளை மட்டும் கொஞ்சம் அழுத்தமாக…
அதனை யார் கவனித்தாலும் விதுன் மட்டும் அதனை நெற்றி சுருக்கத்துடன் குறித்துக்கொண்டான்..
“ஏஞ்சல் உள்ள போலாமா ஏஞ்சல்.”என்றான் ஆஸ்வதி கையை ஆதரவாக பற்றிக்கொண்டு..
அதற்கு ஆஸ்வதி வேகமாக தலை ஆட்ட…..
அதனை பார்த்த அவனும் ஆஸ்வதியை போல வேகமா தலையை ஆட்டினான்.. திரும்பி தன் தாத்தாவை பார்த்தான்.. இருவரையும் போல அவரும் தலையை வேகமாக ஆட்டினார் சிரித்தபடியே இவர்களை பார்த்து விதுனும் கூட சிரித்துக்கொண்டே தலை ஆட்டினான்
அப்போது வீட்டின் உள்ளே இவர்களின் சிரிப்பு சத்தம் கேட்டு யாரோ ஒருவர் எட்டிப்பாத்தார். அதனை பார்த்த தாத்தாவின் சிரிப்பு அடியோடு நின்றுப்போனது.
உடனே உள்ளே இருந்து திபுதிபுவென ஒரு 15 பேர் கொண்ட கும்பல் வெளியே வந்தது. அதில் இல்லாமல் தனியாக சிறுபிள்ளைகள் என்று தனியாக 5பேர் வந்தனர். அதனை பார்த்து ஆஸ்வதி கண்கள் ஒரு நிமிடம் மிரண்டது அவள் கேள்விப்பட்டதை விட இவர்களின் குடும்பம் பெரிதாக இருந்தது..
ஆஸ்வதியின் கண்களில் வந்த மிரட்சியை கண்ட பெரியவர்..
“மா ஆஸ்வதி.. உன் கண்ல பயத்த பார்த்தா தான் இவங்க எல்லாருக்கும் சந்தோஷமா இருக்கும்.. உன் பயம்.. இவங்க எல்லாம் உன்னை ஆட்டிவைக்க இவங்களுக்கு வழி உண்டு பண்ணி தந்துடும். அது மட்டும் இல்லாம உன் திமிர் தான் உன்னையும் உன் புருஷனையும் ஆபத்துல இருந்து காப்பாத்த வழி…அதுனால உன் கண்கள் எப்போதும் இவங்களுக்கு உன் திமிர தான் காட்டனும்..”என்றார் ஆஸ்வதி அருகில் நெருங்கி அவளுக்கு மட்டும் கேட்குமாறு.
தாத்தா சொன்னதை கேட்ட ஆஸ்வதி முகம் மிரட்சியை அடியோடு கலைத்துவிட்டு திமிரை பூசிக்கொண்டது அதனை ரகசியமாக கண்ட ஆதியின் முகத்தில் யாரும் கவனிக்காத வகையில் புன்னகையை சிந்தியது.
வீட்டின் உள் இருந்து வந்தவர்கள் அனைவரது முகமும் ஒவ்வொரு உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது.அதில் கோவம்.. சந்தோஷம்..பொறாமை.. இயலாமை.. பகைமை.. அனைத்தும் இருந்தது.
அதை அனைத்தையும் கண்ட ஆஸ்வதியின் மனம் தன்னவனை ஆதரவாக வருடினாள்.. ஆனால் இதனை உணராத ஆதியோ தன் கையில் வைத்திருந்த சிறிய கார் பொம்மையை ட்ரூ. என்று வாயில் சத்தமிட்டவாறு ஓட்டுக்கொண்டு இருந்தான். இதனை கண்ட ஆஸ்வதி முகம் மெல்ல புன்னகையை தத்தெடுத்தது.
அப்போது வந்தவர்களை கவனித்த தாத்தா “வினிஜா.”என்று யாரையோ அழைத்தார்.. உடனே அங்கு நின்றவர்களில் தனியாக நின்ற ஒரு 40வயது பெண்மணி “சாஃப்..”என்றார் பணியுடன். அதிலே அவர் இந்த வீட்டின் வேலையாளில் ஒருவர் என்று புரிந்து போனது
“ஆரத்தி ரெடியா”என்றார் அங்கு சுற்றி நின்றவர்களை பார்த்தவாறு. அவர்கள் அனைவரும் அவரையும், புதிதாக மணபெண் அலங்காரத்தில் வந்தவளையும் முறைத்துக்கொண்டு இருந்தனர் அதில் இரு கண்கள் மட்டும் ஆஸ்வதியை ரசனையாக பார்த்தது அந்த பார்வை தந்த குறுகுறுப்பில் நெளிந்த ஆஸ்வதி நிமிர்ந்து பார்த்தாள்.. அங்கு தன் கணவனின் வயதை ஒத்த ஒருவன் நின்று இவளை பார்வையால் கபளிகரம் செய்துக்கொண்டு இருந்தான். அதனை கண்ட ஆஸ்வதி முகம் கோவத்தில் சிவந்தது ஆஸ்வதி அவனை முறைக்க….. ஆனால் அவனோ அவளது முறைப்பை கணக்கில் கூட எடுத்துக்கொள்ளாமல் அவளை கண்களை இமைக்காமல் ரசித்துக்கொண்டு இருந்தான்…இதில் இன்னும் கோவமாக ஆஸ்வதி முகத்தை குனிந்துக்கொண்டாள். இதனை இன்னும் ஒரு ஜோடி கண்கள் உள்ளம் கொதிக்க…. கண்கள் சிவக்க பார்த்துக்கொண்டு இருந்தது.
அது போக இரண்டு ஜோடி கண்கள் இவளை பாசமாகவும், அதே நேரம் பரிதாபமாகவும் பார்த்தது,. இன்னும் இரண்டு ஜோடி கண்கள் இவளை நட்புடன் பார்த்தது.. மீதம் இருந்த அனைவரும் இவளை எதோ குற்றம் செய்தவள் போல பார்த்து முறைத்துக்கொண்டு இருந்தது
சிலர் மனதில் வஞ்சமுடனும், கனல் பார்வையுடனும் பார்த்தவர்களை பார்த்து ஒரு நிமிடம் அவளுக்கும் பயம் வந்தது என்னவோ உண்மை தான் ஏனென்றால் இயல்பாகவே ஆஸ்வதி மிகவும் மென்மையானவள் அவளிடம் கொஞ்ச நாள் இதை தான் நம்மாள் எதிர்ப்பார்க்க முடியும்.கொஞ்சம் தன் பயத்தை மறைத்தவள் தன் கணவனை காண….
அவனோ.. இவ்வளவு நேரம் கையில் காரை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தவன்.. திடீர் என்று இவளுக்கு பின்னால் ஒளிந்துக்கொண்டு அவர்களை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டு இருந்தான்.. அதிலே இவளுக்கு என்னமோ உள்ளது என்று புரிந்துக்கொண்டாள். தன்னவனின் பயத்தை பார்த்த ஆஸ்வதியின் முகம் கலங்கியது..எப்படி இருந்தவன். இப்படி தன் குடும்பத்தை பார்த்தே பயந்து நடுங்குகிற அளவிற்கு வந்துவிட்டதே..என்று அவனுக்காக கலங்கினாள்..
அவனது இந்த பயத்தை பார்த்த ஆஸ்வதி.. ஆதியின் கைகளை அழுத்தமாக பற்றிக்கொண்டு தனக்கு பின்னால் இருந்து அவனை தன் பக்கம் இழுத்தாள் ஆதி அதனை கண்டு கண்களில் பயத்துடன் ஆஸ்வதியை காண…
அதற்கு அவளோ…”உங்க பக்கத்துலையே நா இருப்பேன். ஆதி உங்க ஏஞ்சல் இருந்தாலும் நீங்க பயப்படுவீங்களா.”என்றாள் மெல்லிய குரலில்.
அதை கேட்ட ஆதி ஆஸ்வதியின் முகத்தை பாவமாக பார்த்தவாறு..”இல்லை என்று பாவமாக தலையை ஆட்ட…
அதில் புன்னகைத்தவள் ஆதியை காதலாக பார்த்துவிட்டு தனக்கு எதிரில் நிற்கும் அனைவரையும் திமிர் பார்வையுடன் பார்த்தாள்..
அவளது இந்த திமிரான… கம்பீரமான பார்வையில் அவளுக்கு எதிரில் நிற்கும் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனார்கள் அதை கண்ட தாத்தாவின் முகம் முழுதும் பளீர் என்று பளபளத்தது விதுன் கூட ஆஸ்வதியின் இந்த பரிமாணத்தில் மகிழ்ந்து போனான்..
அந்த பெண்மணி ஆரத்தி எடுத்து வந்து ஆஸ்வதியை அழுத்தமாக பார்த்தவாறே இருவரையும் சேர்த்து ஆரத்தி சுற்றிவிட்டு வீட்டு வாசலில் அதனை ஊற்றிவிட்டு வந்தவர்.வீட்டின் வாயில் நிலையில் ஒரு சொம்பு நிறைய அரிசி வைத்துவிட்டு இவர்களை நோக்கி வந்தார்.
“சாஃப்.”என்று பெரியவரை அழைக்க……
தாத்தா வினிஷாவை பார்த்து தலை ஆட்டியவாறு..ஆஸ்வதியை பார்த்து “மா ஆஸ்வதி.. நிலையில இருக்குற…. அரிசி நிறைஞ்ச சொம்ப தள்ளிவிட்டு உள்ள போடா..” என்றார் கம்பீரமாக……
அதற்கு ஆஸ்வதியும் சரி என்று தலை ஆட்டிவிட்டு அங்கு நிற்கும் அனைவரையும் தாண்டி தன் கணவனின் கையை அழுத்தமாக பிடித்துக்கொண்டு நிலைப்படி அருகில் சென்றாள்.
ஆஸ்வதியை வந்ததில் இருந்து துயில் உரிக்கும் பார்வை பார்க்கும் அந்த இளைஞன்.. ஆஸ்வதியின் கையில் இருக்கும் ஆதியின் பிடியை அறவே வெறுத்தான்..
அவர்கள் அனைவரும் ஆஸ்வதியை முறைத்துக்கொண்டு இருந்தனர். அவர்களால் இப்போது அதை தான் செய்ய முடியும்
பின் ஆஸ்வதி நிலையின் அருகில் சென்று கண் மூடி ஒரு நிமிடம் கடவுளிடம் வேண்டியவள் பின் சொம்பை தட்டிவிட்டு ஜோடியாக உள்ளே சென்றார்கள் இருவரும் ஆஸ்வதி திரும்பி தன் கணவனை காண அவன் இவளை பார்த்து கைதட்டி சிரித்தான்.
“அய். தாத்தூ இந்த விளையாட்டு நல்லா இருக்கே ஆனா போ தாத்தூ எனக்கு மட்டும் அந்த சொம்ப வக்காம… ஏஞ்சலுக்கு மட்டும் வச்சிருக்க……”என்றான் கோவமாக முகத்தை திருப்பியவாறு.
“ஹாஹா ஆதித் கண்ணா இத உன் ஏஞ்சல் மட்டும் தான் பண்ணனும் கண்ணா நீ பண்ண கூடாது.”என்றார் தாத்தா..
“ம்ம் ம்ம். அதா எனக்கு மட்டும் ஏன் தரமாட்டீக்க நீ…”என்றான் தலை முடியை இழுத்தவாறு..
“அது நா மட்டும் தான் ஆதி பண்ணனும் உங்களுக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு பண்ணனும் இல்ல….. சோ. அத நா தான் பண்ணனும்.”என்றாள் ஆஸ்வதி..
“ஓஓஓ…. அப்டியா நீ சொன்னா கரக்ட்டா தான் இருக்கும் ஏஞ்சல்..”என்றான் ஆதி ஆஸ்வதியின் கையை வருடிக்கொண்டே.
அதில் புன்னகைத்த ஆஸ்வதி. ஆதியின் கை வருடலில் சிலிர்த்து போனாள்.
“அடேயப்பா.. இப்போவே ஆதித் ஏஞ்சல் பேச்ச கேட்க ஆரம்பிச்சிட்டானே,…”என்றார் தாத்தா புன்னகையுடன்..
“ஹீஹீ.. ஆமா தாத்தூ நீ தானே சொன்ன…. உனக்காக தாத்தா கஷ்டப்பட்டு இந்த ஏஞ்சல் பொம்மைய வாங்கி தரேன்.. அத பத்திரமா பாத்துக்கனும்னு.”என்றான் ஆதி.
ஆம்.. ஆஸ்வதியுடனான திருமணத்திற்கு முதல் நாள் ஆதியை அழைத்து…”ஆதித் கண்ணா.. உனக்காக ஒரு ஏஞ்சல் பொம்மை வாங்கி நாளைக்கு அத உன் கையில ஒப்படைக்க போறேன்.. அத நீ தான் இனி பத்திரமா பாத்துக்கனும்.. யாரும் உன் பொம்மைய டைச் பண்ணாம…. திட்டாம….. இந்த வீட்டவிட்டு அனுப்பாம பாத்துக்கனும்.அப்புறம் இனி நீ ஏஞ்சல் சொல்றத மட்டும் தான் கேட்கனும்…சரியா.”என்றார்.
“ஓஓஓ….. பத்திரமா பாத்துப்பேன் தாத்தூ..”என்று அவருக்கு சத்தியம் செய்துக்கொடுத்தான்..
அதை தான் இப்போது ஆதி சொல்கிறான்..
“ஆ…. ஆமா ஆமா.. நா தான் சொன்னேன்…என் ஆதித் கண்ணா. ரொம்ப இன்டலிஜன்ட்.”என்றார் ஆதியின் கன்னத்தை வருடியவாறு
அதில் வெட்கப்பட்டு..”தாத்தூ.. டோன்ட் டச்.. ஐ ம் பிக் பாய் நவ்…”என்றான் தன்னுடைய உயரத்தை கூட்டியவாறு..
“ஓஓஓ….. ஆமா ஆமா ஆதித் பிக் பாய்..”என்றார் தாத்தா ஹஸ்கி வாய்சில்.அதில் ஆதித் புன்னகைக்க….இதனை கண்ட ஆஸ்வதிக்கு மனம் லேசானது போல் உணர்ந்தாள்..மேலும் அதில் தன் பயத்தை மறந்து இவனை பார்த்து சிரித்தவாறு தாத்தாவின் காலில் இருவரும் விழுந்தனர்
“நல்லா இருமா.”என்று இருவரையும் தூக்கிவிட்டு “இது தான் மா இனி உன் வீடு.. நல்லா பாத்துக்கோ. இனி நீ இங்க தான் வாழ போற……”என்றார் ஆஸ்வதியை பார்த்தவாறு…அப்போது தான் ஆஸ்வதியும் வீட்டினை நன்றாக பார்த்தாள்.. வீட்டின் பிரம்மாண்டம் அவளுக்கு பிடிக்கவில்லை. ஆனால் அது கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டதை பார்த்து ரசித்தாள்
தாத்தா இருவரையும் வீட்டின் ஹாலுக்கு அழைத்து வந்தார் அவர்களை தொடர்ந்து மற்றவர்கள் அனைவரும் வந்தார்கள் வீட்டின் ஹாலில் ஒரு பெரிய புகைப்படம் மாட்டப்பட்டு இருந்தது. ஆதித்தின் அப்பாவின் போட்டோக்கு மட்டும் மாலை போட்டு இருந்தனர்..
அதனை கண்ட ஆஸ்வதி அப்படியே அதிர்ச்சியாகி நின்றுவிட்டாள்

(வருவாள்…)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!