உயிர் போல காப்பேன்-6

4.9
(18)

அத்தியாயம்-6
அங்கே..இளம் மஞ்சள் நிற அனார்கலி உடை அணிந்து வந்தாள் 20வயது இளம் பெண்.. பார்க்க ஆதித் போல் நல்ல நிறம்..
“ஹாய் அண்ணி நா அனிஷா உங்க நாத்தனார்..”என்றாள் ஆஸ்வதி கையை பிடித்து குலுக்கியவாறே அப்படியே அவளை அணைத்துக்கொண்டாள்.. அவளின் இந்த செயலில் ஆஸ்வதி மனம் இளகியது.
“யு ஆர் சோ ஸ்வீட் அண்ணி…”என்றாள் அனிஷா
அதில் சிரித்த ஆஸ்வதி.”ஹாய். அனி”என்றாள். அதில் இன்னும் குதுகலித்து..
“ஹே அண்ணி சூப்பர்…எங்க அப்பாகூட என்னை அப்டிதான் கூப்டுவாங்க அண்ணி…”என்றாள். புன்னகையுடன் பின் முகத்தை வருத்தமாக வைத்துக்கொண்டு.. இதனை ஆதி உணர்வற்ற முகத்துடன் காண….. வேறு ஒருவனோ முகத்தில் சோகத்தை அப்பிக்கொண்டு அனிஷாவை பார்த்தான்..
அதை கேட்டு சிரித்து “ம்ம். நானும் கூப்டலாம்ல…”என்றாள்…கேலியாக அவளை மாற்றும் பொருட்டு…
அதில் சிரித்தவள்..”என் ஆதித் அண்ணா வைப்க்கு இல்லாத உரிமையா…”என்றாள் அனிஷா ஆஸ்வதியும் புன்னகைக்க…
“இங்க ஒருத்தர் உங்களுக்காக வைட் பண்றாங்கப்பா.. அத மறந்துட்டு ஆளாளுக்கு கட்டிப்பிடிச்சிட்டு நிக்கிறீங்க….”என்றான் விஷால் கேலியாக
அதை கேட்ட அனிஷா..விஷாலை செல்லமாக முறைத்தவாறே..”இப்போ தானே பேச ஆரம்பிச்சோம் அதுக்குள்ளே நந்தி மாறி வந்திட்டியா குறுக்க…..”என்று அவன் காலை வாரிவிட்டவள்.அவன் முறைப்பதை கண்டுக்கொள்ளாமல் “ஓகே அண்ணி தாத்தா வைட் பண்றாங்க நாம அப்புறம் பேசலாம்…”என்றாள்.. ஆஸ்வதியும் தலை அசைக்க….. தாத்தா கடைசியாக நின்ற ஒரு ஜோடியை நோக்கி அழைத்துக்கொண்டே.
“அப்புறம் இவ என் லாஸ்ட் பொண்ணு அபூர்வா சர்மா.. இது அவ கணவர் மித்ரன்..”என்று அறிமுகப்படுத்த ஆஸ்வதி அவரது காலிலும் விழ போக…. ஆனால் ஆதி மட்டும் அப்படியே அசையாமல் நின்றான் அவன் அசையாமல் நிற்பதை பார்த்த ஆஸ்வதி ஆதியை திரும்பி பார்க்க… அவன் முகம் பயத்தை அப்பட்டமாக காட்டியது,.. அதை பார்த்து யோசனையாக அவன் பார்வை சென்ற இடத்தை பார்க்க….. அங்கு அபூர்வாவும்.. அவள் கணவன் மித்ரனும் இவனை முறைத்துக்கொண்டு நின்றனர்..
அதை பார்த்த ஆஸ்வதி மனதில்.”ஆதி ஏன் இவங்கள பார்த்து இப்டி மிரளுறாரு.”என்று நினைத்துக்கொண்டே…”வாங்க ஆதி.”என்றாள். கையை அவன் புறம் நீட்டி. அதில் ஆதி கொஞ்சம் தெளிந்து அவள் கையை இறுக்க பற்றிக்கொண்டான்.
பின் இருவரும் அவர்கள் காலில் விழ போக….”போதும் உன் நாடகம் எல்லாம்.”என்றாள் அபூர்வா ஆஸ்வதியை பார்த்து
அதில் அதிர்ந்த ஆஸ்வதி அவரை புரியாமல் புருவத்தை சுருக்கிப்பார்க்க….”என்ன நா சொல்றது புரிலையா.. பைத்தியமா இருந்தாலும் பரவால…. ஆனா பணக்கார வீட்டுக்கு போனா போதும்னு தானே இவன கல்யாணம் பண்ணுன….”என்றாள் அபூர்வா..
அதில் அங்கு இருந்த அனைவரும் அவரை அதிர்ச்சியாக பார்க்க…..ஆஸ்வதியோ அவரை திமிராக ஒரு பார்வை பார்த்தாள்..அந்த பார்வை அபூர்வாவை இன்னும் கோவம் கொள்ள செய்ய…..
“என்ன உண்மை தானே நா சொல்றது.. உன் ப்ளான் அதானே.. இல்லனா நீயும் பாக்க அழகா தான் இருக்க….. பாத்தா கொஞ்சம் படிச்சவ மாறியும் இருக்கு. அப்புறம் ஏன் மனநிலை சரி இல்லாதவன போய் கல்யாணம் பண்ணிக்கனும்..”என்றார் அவளை எகத்தாளமாக பார்த்தவாறே.
அதை கண்ட பெரியவர்.. ஆஸ்வதியை இதனை நீதான் சமாளிக்க வேண்டும் என்பது போல் நிற்க….. அப்போது தான் ஆஸ்வதிக்கு காரில் தாத்தா பேசியது அனைத்தும் நினைவில் வந்தது.
“ஆஸ்வதிமா நீ பூவ போல மென்மையானவளா இருக்கலாம் ஆனா இந்த உலகத்துல எல்லாரும் உன்னை மாறி இருப்பாங்கனு நினைக்கிறது தான் நம்ம செய்ற பெரிய முட்டால் தனம். இந்த உலகத்துல எப்டி தெய்வம்னு ஒன்னு இருக்கோ. அது மாறி அதுக்கு எதிர்மறையான சாத்தாங்களும் இருக்கும்.. எதா இருந்தாலும் நாம தான் அத தாண்டி வரனும்.. அதுக்கு முக்கியமானது தைரியம். இன்னிக்கி நானும் விதுனும் உன் பக்கத்துல இருந்து உனக்கு உதவலாம். ஆனா காலம் ஃபுல்லா நாங்க உன் கூடவே இருக்க முடியாதே. அதுக்கு தான் சொல்றேன்,.. ஆரம்பத்துல இருந்தே உன் பிரச்சனைய நீயே சமாளிச்சிக்கோ..அது மட்டும் இல்லாம உன் முகத்துல…. உன் கண்ணுல ஒரு சொட்டு பயம் கூட நா இனி பாக்க கூடாது. அதான் உன் புருஷனுக்கும் நல்லது.”என்று நீண்ட நேரம் பேசியது அனைத்தும் அவளுக்கு இப்போது புரிந்தது.
அபூர்வா பேசுவதை கேட்டு அங்கு அனைவரும் அப்படியே அபூர்வா போல திமிராக நிற்க…. பெரியவர் மட்டும். “அபூர்வா..”என்றார் அழுத்தமாக…..
அதை கேட்ட அபூர்வா “ம்ம். சொல்லுங்கப்பா…இவள நா எதும் சொல்லக்கூடாது அதானே. நா உங்க மக….எனக்கு இந்த வீட்ல எல்லா உரிமையும் இருக்கு…அது மாறி தராதரம் இல்லாதவங்கள இந்த வீட்ல சேர்க்க நா ஒத்துக்கமாட்டேன்”என்று தராதரம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லும் போது ஆஸ்வதியையும் விதுனையும் ஒன்றாக அபூர்வா பார்க்க……ஆஸ்வதி அதனை கேட்டு முறைக்க….ஆனால் விதுனின் உடலோ இறுகிப்போனது
அதனை ஒரு ஜோடிக் கண்கள் வேதனையுடன் கண்டது..
“தாத்தா…”என்றாள் ஆஸ்வதி நிமிர்வாக நின்றவாறே…கம்பீரமாக
அவளின் இந்த கம்பீரத்தில் அனைவரும் கவரப்பட…
“என்னமா…”என்றார்
“ஆதி உங்க பேரன் தானே..”என்றாள் இன்னும் அபூர்வாவை முறைத்தவாறே.. அதில் அபூர்வா ஆஸ்வதியை புரியாமல் பார்க்க…..
“ஆமா டா இதுல என்ன சந்தேகம்.”என்றார் தாத்தா ஆஸ்வதி எதோ கேட்கப்போகிறாள் என்பது மட்டும் புரிந்தவாறே
“அப்போ உங்க சொத்துல ஆதிக்கும் சேர் இருக்குல…..”என்றாள் திமிராக
அதை கேட்டு அங்கு நின்ற அனைவரும் அவளை அதிர்வாக காண… தாத்தா.. விதுன் முகம் மட்டும் புன்னகையில் விரிந்தது..
“இதுல என்னடா டவுட். அவன் என் செல்ல பேரன். அவனுக்கு சேர் இல்லாம இருக்குமா…”என்றார் தாத்தா ப்ரேமை பார்த்து எகத்தாளமாக…
அதில் ப்ரேமின் முகம் கோவத்தில் கொடூரமாக மாறியது..
“அப்போ ஆதிக்கு நா யாரு தாத்தா.”என்றாள் நிதானமாக…
“என் செல்ல பேரனோட மனைவி மா நீ…”என்றார் அவள் சொல்ல வருவது புரிந்தது போல…
அவர் சொன்னதில் உள்ள அர்த்தத்தில் ஆஸ்வதியின் முகம் அங்கு நிற்கும் அனைவரையும் கர்வமாக பார்த்தவாறே..”அப்போ ஆதியோட சொத்துல எனக்கும் பங்கு இருக்குல……”என்றாள் அபூர்வாவை பார்த்து.. இதுதான் நீ சொன்ன தராதரம் என்பது போல…..
“கண்டிப்பாடா ஆதி மட்டும் சரி ஆகிட்டானா அவனே உனக்கு சொத்த சேர்த்து வச்சிடுவான்.”என்றார் தாத்தா
இப்போதும் ஆஸ்வதி முகம் கர்வமாகவும் திமிராகவும் அபூர்வாவை பார்க்க…. அபூர்வாவோ. முகத்தில் மிளகாயை பூசியவாறே முகம் கோவத்தில் சிவந்து போய் நின்றிருந்தார்..
“நீங்க கேட்டீங்களே என் தராதரம்.. இதான் என் தராதரம் ,மரியாதை, கர்வம் எல்லாமே ஆதிக்கு பொண்டாட்டி…”என்றாள் அழுத்தமாக அபூர்வாவை பார்த்து..
அவள் பேசியதை பார்த்து அனைவரும் அவளை அதிசயம் போல பார்க்க…. பரத்…ரியா.பூனம்..அஜய்.அபூர்வா அனைவரும் ஆஸ்வதியை முறைத்துக்கொண்டே நிற்க…..
அதை தாத்தா கண்டுக்கொள்ளாதவர் போல…. அபூர்வா பக்கத்தில் நின்றவர்களை காட்டி “இவ என் பேத்தி அபூர்வா பொண்ணு அதிதி. என்று ஏற்கனவே அவளிடம் வீம்பாக பேசிய அதிதியை காட்ட…. அவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.. ஆஸ்வதியும் அவளை பார்த்து கோணலாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு. அவளுக்கு அருகில் அமைதியின் சிகரமாக நிற்கும் இன்னொரு பெண்ணை காட்ட….”இவ இன்னொறு பேத்தி… ராக்ஷி சர்மா..”என்றார்
ராக்ஷியோ அத்தியை போல் இல்லாமல் முகம் முழுதும் புன்னகையுடன் அவளை பார்த்து தலை அசைக்க… அவளது இந்த பாவனை ஆஸ்வதிக்கு பிடித்து போனது. அவளை புன்னகையுடன் “ஹாய் ராக்ஷி…நீ ரொம்ப க்யூட்டா இருக்க”என்று கூற……அதை கண்ட அதிதி ராக்ஷியை முறைக்க…..ஆனால் ராக்ஷி ஆஸ்வதியை பார்த்து ஆச்சரியமாக முகத்தை வைத்துக்கொண்டு”ஹாய் நா க்யூட்டா…உங்க முகம் எப்டி இவ்ளோ. பளிச்சினு இருக்கு” என்றாள் அவளை பார்த்து நட்பாக சிரித்துக்கொண்டு.. தன்னை க்யூட் என்று சொன்ன அழகான ஆஸ்வதியை ராக்ஷிக்கு மிகவும் பிடித்துவிட்டது… ராக்ஷி சிரிப்பதையே இரு கண்கள் ரசித்துக்கொண்டிருந்தது..
அதிதி அவள் அம்மா போல அவளுக்கும் ஸ்டேடஸ்.. அது இதுவென்று பார்ப்பாள்.. ஆனால் ராக்ஷி அப்படி இல்லை.. அவள் மிகவும் அமைதி யாரையும் புண்படுத்துவது போல பேசமாட்டாள்.. அதனாலே தாத்தாவிற்கு ராக்ஷி மேல் அதிக பாசம்…
ராக்ஷியின் பேச்சில் மெலிதாக சிரித்த ஆஸ்வதி. ”தெரிலயே” என்றாள் வெள்ளந்தியாக முகத்தை வைத்துக்கொண்டு அதில் ஒருவன் விழுந்துதான் போனான்..
“அது அவங்க டைலி குளிப்பாங்க…..உன்ன மாறி வாரத்துக்கு ஒரு நாள் குளிக்கிற டைப் இல்ல…”என்றான் விஷால் ராக்ஷியை ரசித்தவாறு அந்த ரசனையான பார்வை இவனுடையது தான்…
அதில் ராக்ஷி அவனை பார்த்து முறைத்துக்கொண்டே.”போடா எரும உன்டயா கேட்டேன்..பாருங்க தாத்தா.. இவன….”என்றாள் ராக்ஷி சினுங்கிக்கொண்டே
அவள் சினுங்களில் விஷால் மனதில் பனி சாரல் வீசியது எப்போதும் தன்னிடம் சண்டை போட்டு தன்னிடம் உள்ளதை பறித்து செல்லும் அதிதியை விஷாலுக்கு பிடிக்காது.. அதுவே அவள் பறித்து செல்வதை பார்க்கும் ராக்ஷி தன்னிடம் உள்ளதை விஷாலிடம் நீட்டி.”இத வச்சிக்கோ..”என்று கள்ளம் இல்லா குணம் கொண்ட ராக்ஷி விஷாலுக்கு என்றும் ஸ்பெஷல் தான் அதுவே இப்போது காதலில் வந்து நிற்கிறது.
ராக்ஷியின் இந்த குணம் அவள் அன்னையிற்கு பிடிக்கவே பிடிக்காது.. இதனாலே அவளை எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். ஆனால் அதை எல்லாம் அவள் கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டாள்.
இப்போது“ச்சு சும்மா இருங்க……அம்மா ஆஸ்வதி இவங்க வினிஜா”என்று அவர்கள் வந்ததும் ஆரத்தி காட்டியவறை காட்ட….. ஆஸ்வதி அவரை பார்த்து புன்னகைத்தாள்.. அதில் வினிஜாவும் அவளை பார்த்து புன்னகைக்க… ஆஸ்வதி ஒரு நிமிடம் அதிர்ந்து போனாள்.. ஏனென்றால் வினிஜாவின் சிரிப்பு அவளுக்கு எதோ விஷமாக இருந்தது போல தான் இருந்தது..ஆஸ்வதி வினிஜாவின் இந்த சிரிப்பை கண்டு அவரையே கூர்மையாக காண….
”இவ இந்த வீட்டுல ரொம்ப வருசமா வேலை செய்யிறா கிட்ட தட்ட இவ இந்த வீட்ல ஒரு ஆள் மாறிதான்… மத்தவங்களலா போக போக தெரிஞ்சிக்கலாம் இப்போ உன் அறைக்கு போமா”என்றார்..
அவளும் சரி என்று தலை ஆட்டிவிட்டு பின்னால் திரும்பி திரும்பி வினிஜாவை பார்த்தவாறு தான் நின்றாள்…. ஆதி அங்கையே நிற்க…..“கண்ணா. உன் ஏஞ்சல்க்கு உன் ரூம சுத்திக் காட்டு கண்ணா”என்றார் தாத்தா..
“ஹான் ஹான் எனக்கு இந்த வீடு நல்லா தெரியும் வா ஏஞ்சல் நா சுத்திக்காட்டுறேன்.”என்று அவள் கையை பிடித்து அழைத்து சென்றான்
அதை பார்த்த இரண்டு கண்ணில் கோவம்.. வெறி

(உயிர் காப்பாளா)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!