என்றும் என்னுள் எரியும் கனலே!

5
(20)

என்றும் என்னுள் எரியும் கனலே!

“அப்பா அப்பா இன்னைக்கு எங்களுக்கு ரேங்க் கார்டு கொடுக்குறாங்க”, என்று துள்ளி குதித்து அவளின் தாய் தந்தையின் கையை பிடித்து கொண்டு பள்ளியினுள் நுழைந்தாள் அந்த பத்து வயது பூஞ்செண்டு!

அத்தனை மகிழ்ச்சி அவளுக்கு! இல்லமால் இருக்காதா? முதல் மதிப்பெண் மட்டும் இல்லமால் அவளுக்கு தான் பள்ளியிலேயே சிறந்த மாணவி என்கிற பட்டமும் அவளின் வகுப்பின் பிரிவில் கொடுக்க இருக்கிறார்கள் அல்லவா!

“அதான் தெரியுமே! நேத்தே உன் டீச்சர் நீ தான் பர்ஸ்ட் ரங்கனு சொல்லிட்டாங்க! நீ தான் ஸ்கூல்லயே சிறந்த மாணவினு பரிசு தர போறாங்க, உங்க ஸ்கூல் அனுவல் டேல? சரியா? இதையே நேத்துல இருந்து ஒரு நூறு வாட்டி சொல்லிட்டு இருப்ப”, என்று அவளின் தந்தை சலித்து கொள்ள, அவளது தாயோ, “நீங்களாவது நூறு வாட்டி தான், எனக்கு ஆயிரம் வாட்டி சொல்லியிருப்பா உங்க அருமை பொண்ணு!”, என்று அவளின் தாய் சொல்லவும் அப்படியே அவளின் வகுப்புரைக்குள் நுழைந்தனர்!

அவர்கள் உள்ளே வந்ததும், அவளின் வகுப்பு ஆசிரியரும் புன்முறுவலுடன் அவர்களை வரவேற்றார்!

“உங்க பொண்ணு ரொம்ப ரொம்ப ஸ்மார்ட்! வெறும் படிப்புனு மட்டும் இல்லமா ட்ராமா, பேச்சுப்போட்டி, எழுதர்துன்னு எல்லாத்துலயும் பிச்சு ஓதருறா! மோஸ்ட்லி சயின்ஸ் நல்லா படிக்கிறவங்க தமிழ், இங்கிலீஷுக்குலாம் அதிகம் இம்போர்ட்டன்ஸ் கொடுக்கவே மாட்டாங்க! ஆனா அவ எல்லாத்துக்கும் இக்குவள் இம்போர்ட்டன்ஸ் கொடுத்து படிக்கிறா! அது மட்டும் இல்ல மேக்ஸ்ல நான் போர்டுல போடுறதுக்கு முன்னாடியே அவ ஆன்சர் சொல்றா! அவ டெலெண்ட வேஸ்ட் பண்ணிடாதீங்க”, என்று அவளின் ஆசிரியர் கூற, அவளின் பெற்றோருக்கோ அத்தனை பூரிப்பு!

சாதாரண ஆட்டோ ஓட்டுநர் தான் அவளின் தந்தை! படித்தவர் தான்! படித்ததற்கேற்ற வேலை தான் கிடைக்கவில்லை!

ஆகையால் அரசு வேலைக்கு இன்றும் முயற்சித்து கொண்டே ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறார்!

தாய் இல்லத்தரசி தான்! அவரும் சேர்ந்து தான் வேலைக்கு முயற்சித்து கொண்டு இருக்கிறார்!

வறுமையிலும் கல்வி முக்கியம் என்று பிள்ளையை நல்ல பள்ளியில் சேர்த்து இருந்தனர்!

அவளும் நன்றாக படிக்கும் குழந்தை என்பதால், பள்ளியில் சிறிது பீஸில் குறைத்தும் கொண்டனர்!

ஆனாலும் கடன் வாங்கி பீஸ் கட்டும் நிலை தான்!

கடவுள் பணத்தை தான் கொடுக்கவில்லை! அந்த குழந்தைக்கு அறிவை அள்ளி தான் கொடுத்து இருந்தார்!

படிப்பு என்றால் அத்தனை பிரியம்!

ஆசிரியர் பேசி முடிக்க, அடுத்து வேறு ஒரு பெற்றோர் உள்ளே நுழைந்தனர்!

அவளுடன் பயிலும் மாணவியின் பெற்றோர் தான்!

இருவருமே கல்லூரியில் பேராசிரியர்கள்!

ஆனால் அவர்களின் பிள்ளைகள் தான் ஆசிரியர் பிள்ளை மக்கு என்று சொல்வது போல், மூன்று படங்களில் பெயில்!

அவர்களை பார்த்ததும், சிரித்து கொண்டிருந்த ஆசிரியரின் புன்னகையும் மறைந்தது!

“வாங்க மேம், சார்”, என்று சொன்னவர், “ரொம்ப சேட்டை, கொஞ்சம் கூட படிக்கறது இல்ல! நான் சொல்லணும்னு இல்ல, ஆனாலும் உங்க பசங்க ஹோமேஒர்க் கூட பண்றது இல்ல! நீங்க ட்யூஷன் போட்டு இருந்தும் இந்த நிலைனா எப்படி சார்! பேப்பர்ல கூட உங்க கிட்ட சைன் வாங்கல! பேப்பர் பாருங்க”, என்று ஆசிரியர் பேச, இருவருக்கும் முகம் கறுத்தது!

அதற்கு காரணமும் இருந்ததே!

அவர்கள் பிள்ளைகள் அந்த ஆட்டோ ஓட்டுனரின் வண்டியில் தான் பள்ளிக்கு வருகிறார்கள்!

வரும் வழியிலேயே, அவரின் பிள்ளை முதல் மதிப்பெண் என்பது கூறி இருக்க, இப்போது ஒரு ஆட்டோ ஓட்டுனரின் பிள்ளை முன் இப்படி ஒரு இழுக்க என்று அவ்வளவு ஆத்திரம் அவர்களுக்கு!

கோவம் வன்மமாக மாறியது!

அதுவும் வரும் பெற்றோர் அனைவரின் முன்னாலும், அந்த ஓட்டுனரின் பிள்ளையின் பேப்பரை பாருங்கள் என்று எடுத்து எடுத்து காட்டுவதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை!

இருக்கவே இருக்கிறதே ஸ்டேட்டஸ் என்கிற ஆயுதம்!

 வெறும் பத்து வயது குழந்தையின் மேல்  அந்த ஆயுதத்தை, பயன் படுத்த துவங்கினார்கள்!

அவர்கள் பிள்ளைகளின் பேப்பரை பார்த்து கொண்டே, அடுத்து அவர்கள் தொடுத்த வார்த்தைகள் அனைத்தும் விஷமே!

“எல்லாத்துக்கும் நீ தான் காரணம்! ஓழுங்க நீ படிச்சி இருந்தா ஒரு ஆட்டோ காரன் முன்னாடி எங்களுக்கு அவமானம் வந்து இருக்குமா?”, என்று முதல் அடி!

ஆசியரின் காதுகளையும் அடைந்தது தான்!

ஆனால் அவரால் ஏதும் பேச முடியாதே!

“ஆப்டர் ஆல் ஒரு ஆட்டோ காரன் பொண்ணு பாரஸ்ட் ரேங்க் வாங்கிருக்கா? உங்களுக்கு வீட்ல அவளோ வசதி இருக்கு உங்களால பாஸ் கூட ஆக முடியல!”, என்று இரண்டாவது தாக்குதல்!

அடுத்து தான் அவர் தாக்கிய பிரம்மாஸ்திரம் என்று கூட சொல்லலாம், “இதுங்கலாம் படிச்சி வந்தா நாடு உருப்படுமா?”, என்று கேட்டவுடன், ஆசிரயருக்கே பொறுமை போய் விட்டது!

“மேம் ஒரு ப்ரோபஸ்ஸோர் மாறி பேசுங்க! இப்படியா ஸ்கூல்ல பேசுவீங்க”, என்று அவர் பேச, “நீங்க வெறும் டீச்சர் தான்! நான் ஒரு ப்ரோபஸ்ஸோர், எனக்கு கிளாஸ் எடுக்காதிங்க”, என்று அவரும் சொல்ல, அங்கிருந்த பெற்றோர் அனைவருக்குமே அவர் பேசியது அதிகப்படியாக தான் தோன்றியது!

அந்த பத்து வயது பிஞ்சு மழலை தான், அவளின் தந்தையை கட்டி கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்!

பேராசிரியர் என்கிற உத்யோகத்திற்கே களங்கம் அவர்கள்!

அவளினுள் தான் எத்தனை கேள்விகள், “ஏன் ஏன் இந்த ஏற்ற தாழ்வு? ஏன் ஒரு ஆட்டோ காரனின் மகள் படிக்க கூடாதா? அப்படி என்ன தவறு உள்ளது? நான் ஏன் முதல் மதிப்பெண் வாங்க கூடாது? சாதிகள் இல்லையடி பாப்பா; – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; என்று வகுப்பறையில் சொல்லி கொடுப்பதும் தான் பொய்யா? ஒரு ப்ரொபசரின் மகன் அல்லது மகள் தான் படிக்க வேண்டுமா? ஒரு டாக்டரின் மகன் தான் டாக்டராக வேண்டுமா? இன்னுமா இந்த மட்டமான செயல் நடைபெறும்! இல்லை இல்லவே இல்லை, இந்த சுழற்சியை நான் முறியடித்தே தீருவேன்”, என்று கருவிக்கொண்டது அவளின் மனம்!

பத்து வயது குழந்தைனுள் அன்று பற்ற வைத்த கனல் அது!

அவளினுள் தான் எத்தனை கேள்விகள்!

அன்றிலிருந்து தான் அவள் சமூகத்தை பார்க்கும் பார்வையே வேறானது!

சமூகத்தில் ஒன்று பதவி அல்லது பணம் இது இரண்டும் இருந்தால் தான் மதிப்பு என்பதை பத்து வயதில் அந்த பாலக்கிக்கு புரிய வைத்து விட்டனர் அந்த பெற்றோர்!

அதே பணம் மற்றும் பதவியை என் படிப்பை வைத்து என்னால் வாங்க முடியும் என்று நினைத்து கொண்டது அவளின் மனம்!

என்னிடம் பணம் இல்லாமல் இருக்கலாம், திறமை இருக்கிறது, என்னிடம் பதவி இல்லாமல் இருக்கலாம் படிப்பு இருக்கறது, என் பெற்றோர் பெரிய உத்யோகத்தில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் என்னுள் எதையும் சாதிக்கும் உத்வேகம் இருக்கிறது!

படித்தால், படித்தால், படித்து கொண்டே இருந்தாள்! எத்தனை புத்தகங்கள் என்று தெரியாது! வெறும் பாட புத்தங்களுடன் அவள் நிறுத்த வில்லை! எல்லா வகையான புத்தங்களை தேடி தேடி படித்தாள்!

அடுத்து என்ன? அடுத்து என்ன? என்கிற தேடல் எப்போதும் அவளிடம் இருந்தது!

அறிவே தேடல் தானே!

எனக்கு எல்லாம் தெரியும் என்பவன் முட்டாள்!

எனக்கு ஒன்றுமே தெரியாது என்பவன் தான் ஞானி!

எனக்கு எது தெரியும் தெரியாது என்று தெரிந்து வைத்து செயல் படுபவன் தான் புத்திசாலி!

இவை அனைத்தையும் கற்றுக்கொண்டாள்!

சுயம்புவாக தோன்றினாள்!

எத்தனை நாட்கள் தூங்காமல் உழைத்து இருப்பாள் என்று அவளுக்கே தெரியாது!

பத்தாம் வகுப்பு மட்டும் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றாள்!

பள்ளியில் முதல் மாணவி எல்லாம் அல்ல, ஆனாலும் அனைத்திலும் சிறந்து விளங்கும் மாணவி அவள்!

இளங்கலை படித்து முடித்து இரண்டு வருடம் வேலை செய்து, அடுத்து முதுகலை பட்டமும் பெறப்போகிறாள்!

அந்த நிகழ்வு நடந்து முடிந்து சரியாக பதினைந்து வருடங்கள் கடந்து இருந்தது!

ஏதோ இன்று இந்தியாவிலேயே நம்பர் ஒன் என்ஐஆர்ப் ரேங்கிங் கல்லுரியில்  படித்து பட்டம் பெற்றாகிவிட்டது!

அங்கேயும் சிறந்த ஆராய்ச்சியாளர் என்கிற பட்டத்தையும் தட்டி சென்று விட்டாள்!

அவள்ளுலும் தான் எத்தனை மாற்றங்கள்! அவளையே செதுக்கிக்கொண்ட சிற்பி அவள்!

எத்தனை தடைகள் அவளின் வழியில், சில நேரம் மனிதர்கள் என்றால் சில நேரம் இயந்திரங்கள்!

பல பேர் அவளை பார்த்து கூறி இருக்கின்றனர், “உனக்கென்ன இந்தியாலேயே டாப் காலேஜ்ல படிக்கிற!”, என்ற போதெல்லாம் நினைத்து கொள்வாள், அதற்காக நான் செய்த தியாகங்கள் எத்தனை என்று என் தூங்கா விழிகளை கேட்டு பார், எத்தனை மணி நேரம் வேலை செய்தேன் என்று வலிக்கும் என் கால்களை கேட்டு பார், இவ்வளவு ஏன், பெண்ணை ஒரு ஆண்கள் ஆதிக்கம் செய்யும் படிப்பை எடுத்து அவர்களுக்கு இணையாக வேலை செய்யும் என் மனவலிமையை கேட்டு பார், அது நீ அறியா என் கதைகளை சொல்லும்!

அடுத்த மாதம் அவளது டாக்டரேட் பட்டம் பெறுவதற்கான படிப்பை தொடர வெளிநாட்டிற்கு பறக்கவிருக்கிறாள்!

அவர்கள் குடும்பத்திலேயே வெளிநாட்டிற்கு செல்லும் முதல் நபர்!

நினைத்தே பார்க்கவில்லை! யாருமே நினைத்து பார்க்கவில்லை!

பத்து வயதில் அவளுள் எரிய துவங்கிய கனல் அது!

இன்றும் அவளுள் எரிந்து கொண்டே தான் இருக்கிறது!

அது என்றும் அணையப்போவதும் இல்லை!

இந்த ஏற்ற தாழ்வு என்று முடிகிறதோ அன்று வேண்டுமானால் அணையலாம்!

ஆனால் அவளின் பயணம் என்றும் ஓயாது!

என்றுமே அவளுள் எரியும் கனல் எரிந்து கொண்டு தான் இருக்கும்!

அவளின் பெயரை நான் சொல்லவில்லையே!

வெற்றியின் சீலனின் புத்திரியாம் அவள்!

முடிந்தால் கண்டு பிடித்து கொள்ளுங்கள்!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

1 thought on “என்றும் என்னுள் எரியும் கனலே!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!